- புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்
இவருடைய முதன்மை கோபம் முஸ்லிம் லீக் மீதுதான். அதுகுறித்த விமர்சனத்துடன் வந்தவரிடம், ஐ.டி.எம்.கே வின் தேவை என்ன என்பது பற்றி கேட்டோம்.
“முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?”
இது குறிப்பிட்ட மதத்திற்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான கட்சி இது. அதே நேரத்தில் சிதறிக் கிடக்கும் முஸ்லிம்களை பெரும் அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதுதான்” எங்கள் லட்சியம்.”
“திடீரென் முஸ்லிம் லீக் மீது குற்றம் சுமத்த என்ன காரணம்?”
“தனியாக ஒரு நாட்டையே (பாக்கிஸ்தான்) பெற முடிந்த கட்சிதான் முஸ்லிம் லீக் ஆனால், இன்றைக்கு தோடதலுக்காக ஏதாவது ஒரு கட்சியில் சீட் வாங்கி அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டு அதற்கு பிரதிநிதியாகிவிடுகின்ற நிலைமைதான் உள்ளது. அதற்கு இப்ப எம்.பி யாக இருக்கிற காதர்மொய்தீன் முஸ்லிம்கள் நலன் பற்றியோ, தமிழ்நாட்டு நலன் பற்றியோ பார்லிமென்டில் பேசியிருக்கிறாரா? லீக் இன்றைக்கு எங்க சமுதாயத்திலிருந்து லீக்காகி, சீக்காகி,வீக்காகி விட்டது அதனால்தான் புதிதாக தோன்றிய த.மு.மு.க தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் வேகமாக வளர்ந்தன். ஆனால் அவர்களும் சரியில்லை, இவர்களை அடையாளம் காட்ட எங்கள் இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.
என்று சொன்ன குத்புதீன் ஐபக் “தமிழகத்தன் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஐ.டி.எம்.கே யின் கிளைகளை தொடங்கி வருகிறோம்” என்றார். இஸ்லாமியர்களுக்கான இந்த புதிய அமைப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வருவதால் ஐ.டி.எம்.கே யின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் மீது பதிந்துள்ளது.
- சேகுவேரா
நன்றி : நக்கீரன் 21.06.2008