தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 14, 2007

சுதந்திர தின சிந்தனை – இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)

முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்

அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?

கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் ‘முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் ‘பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?’ என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.

குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.

அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.

முதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு

ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். – – குருமூர்த்தி//

முதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்

என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.

மேலும் படிக்க…….

இஸ்லாமிய இணையப் பேரவை

ISLAMIYA INAYAP PERAVAI

ஓகஸ்ட் 13, 2007

முஸ்லிம் இந்தியா!! சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகம்!!

தியாகத்தின் நிறம் பச்சை!!
இந்திய சுதந்திரப்போரில் இஸ்லாமியரின் பங்களிப்பு


குறிப்பு : ஆகஸ்ட் 10,2007 தினமனி நாளிதழ் குருமூர்த்தி அய்யர் என்ற வந்தேறி பார்ப்பான் எழுதிய “முஸ்லிம் இந்தியன் – பெயர் மாறுகின்றது” என்ற தலைப்பில் ஒரு துவேஷக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. இந்த கட்டுரையை (தியாகத்தின் நிறம் பச்சை) டவுன்லோட் செய்து படித்தபின்பு சொல்லுங்கள் “முஸ்லிம் இந்தியன்” என்று மட்டுமில்லை “முஸ்லிம் இந்தியா” என்று பெயர் மாற்றக்கூடிய அளவிற்கு முஸ்லிம் இந்தியர்கள் இந்த இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்துள்ளார்கள்.

குருமூர்த்தி அய்யரின் ஜாதிக்காரர்களாகிய வாஜ்பாய், அத்வானி போன்று சுதந்திரப்போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்து சேவகம் செய்து வாழ்ந்தவர்களல்ல எம் முஸ்லிம்கள் மாறாக சுதந்திரத்திற்காக ஆங்கிலேய தோட்டாக்களையும், ஈட்டிகளையும் மாரில் தாங்கி தம் செங்குருதி சிந்தி இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த உண்மை செம்மள்கள் எம் முஸ்லிம்கள். தேசத்துரோகிகளான கோட்சேயின் கூட்டங்கள் தேச பக்தர்களாக வேஷம் போடும் இந்தியாவில் இன்று இந்த தேசத்தை பூர்வீகமாக கொண்ட எம்இனம் தேச துரோகிகளாக குருமூர்த்தி போன்ற வந்தேறி அந்நிய பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்படுவது வேடிக்கையானது. – முகவைத்தமிழன்.


நன்றி கொல்வதை வாழக்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் இஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள்.

தேசப் பிரிவினை;க்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள்.

இந்த பாசிஸ்டுகள் மேலே நாம் குறிப்பிட்ட பொய்யைப் பரப்புவதோடு நின்று விடவில்லை. வரலாற்றின் ஒரு முக்கியப்பகுதியைக் குழி தோண்டிப் புதைக்கவும் செய்தார்கள். அப்படி அவர்கள் புதைத்த வரலாறுதான் இந்திய விடுதலைப் பேரில் முஸ்லிம்களின் பங்கு.

இந்த பாசிஸ்டுகள் இன்னொரு பாதகத்தையும் எந்தத் தயக்கமுமின்றி செய்து வருகின்றார்கள். அது இந்தியாவுக்கு இரண்டகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்றொரு வடி கட்டின பொய்யையும் பரப்பி வருகிறார்கள்.

இந்தப் பொய்கள் அவர்கள் எதிபார்த்த பலனை அவர்களுக்குத் தராமல் போய்விடவில்லை இந்தப் பொய்கள் இன்றைய முஸ்லிம்களிiயே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தித் தலைதாழ்த்தச் செய்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

இந்த நூல் மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட உண்மைகளை அகழ்ந்து வெளியே கொண்டு வந்து ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தருகின்றது.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம்!! இந்த வiலாறு, அதாவது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடுத்த போர் ஒரு நீண்ட நெடியகாலம் வரை நீடித்தது. ஆகவே முஸ்லிம்களின் விடுதலை;ப் போர் வரலாறு மிகவும் நீண்டதொரு வரலாறு.

இந்த வரலாறு இல்லாத வரலாறு குறையுடையதொரு வரலாறே!!

ஆதலால் இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக மக்கள்முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.

இந்த வகையில் நூலாசிரியர் அப்துல் சமது அவர்கள் பக்கம் 11ல் குறிப்பிட்டுள்ளபடி ஆய்வுகள் தொடர வேண்டும்.

இதனாலெல்லாம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிரான இந்திய விடுதலைப் போர் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. ஒரு பெரும் இடைவெளி கொண்டதாகவே இருக்கின்றது. இந்தியாவில் ஒரு வரலாற்றுப் படுகொலை ஒரு பலாத்காரத்தோடு திணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் ர்ளைவழசல ழுக குசநநனழஅ ளுவசரபபடந in ஐனெயை ஓர் எடுத்துக்காட்டு.

இதேபோல்தான், யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரும் ஒரு டிபாய் வரலாறாக வரையப்பட்டு அரசு அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த நூல் இன்னும் இரடடிப்பு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

இந்தியாவின் விடுதலை வரலாற்றை வரைகின்றவர்கள் இந்த வரலாற்றை – இஸ்லாத்தின் சீரிய பங்கை மறந்து விடக்கூடாது! இதை இன்னும் குறிப்பாகச் சொன்னால் ‘தேசியம்’ என்பது பிற்றை நாட்களில் தோன்றிய ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்களின் விடுதலைப் போர் ‘தேசியம்’ என்ற கொள்கை அறிமுகப்படுத்;தப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது.

இந்தியாவில் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிராக போராடினார்கள். அதே காலகட்டத்தில் கவ்காஸ் பகுதியில் ஸார் மன்னர்களின் ஆதிக்கத்திற்கெதிராக இமாம் காசிமுல்லாஹ் ஷஹீத் இமாம் ஷாமில் ஆகியோர் போihடினார்கள்.

ஆங்கிலேயர்கள் தோல்வியை முதலில் முத்தமிட்டது ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் கைகளில்தான் (இந்த நூலின் பக்கம் 6). ஆங்கே முஸ்லிம்களை ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறுத்தியது இஸ்லாம்தான்.

இந்த நூலின் பக்கம் 16,17ல் குறிப்படப்படும் செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களை ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்தது இஸலாம்தான். ஷஹீத் செய்யத் அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் அல் மியான் என்ற அபுல் ஹஸன் அலி நத்வீ அவர்கள் இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள்

ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்தியாவில் முஸ்லிகள் போராடி தங்கள் உயிரைத் தந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் எகிப்தில் ஆங்கிலேயர்களுக்கெதிராக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து உற்சாம் தந்தது இஸ்லாம்தான்.

இந்த உண்மைகளின் ஒளியில் இஸ்லாத்தின் பங்கு உரிய அழுத்தத்தோடு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இந்த நூலை ‘இலக்கியச்சோலை’யின் வெளியீடாக வெளியிட முன்வந்து, இசைவும் தந்த பேரா. அப்துல் சமது அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

‘இலக்கிச்சோலை’யின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் வல்லோன் அல்லாஹ்வின் பெருங்கருணையினால் தொடருகின்றது. அல்ஹம்ந்துலில்லாஹ்.

வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தருவர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இவண்,

மு. குலாம் முஹம்மது

காப்பாளர், இலக்கியச்சோலை

கட்டுரையை முழுமையாக படிப்பதற்கு இங்கு சொடுக்கி டவுன்லோட் செய்யவும்.

தியாகத்தின் நிறம் பச்சை (WORD DOCUMENT)

தியாகத்தின் நிறம் பச்சை (AS PDF FILE)

Create a free website or blog at WordPress.com.