தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 10, 2006

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:14 முப

தமிழ் முஸ்லிம்களின் அரசியல் விவாத மேடை
முகவைத்தமிழன் த.மு.மு.க வா ? த.த.ஜ வா?? ஒரு சுய விளக்கம் .

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள இனைய சகோதரர்களே ,
இந்த வலை “TAMIL MUSLIM POLITICS”துவங்கபட்டதன் அவசியம் தமிழ் முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நிலை பற்றி விவாதிப்பதற்கே ஆகும்.
இங்கு யார் வேன்டுமானாலும் தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலை மற்றும் இந்திய அரசியலில் தமிழ் முஸ்லிம்களின் நிலை பற்றி அலசலாம்.
இங்கு அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். ஒருவர் மீது சுமத்தபடும் குற்றசாட்டுக்களுக்கு மற்றவர் பதில் அளிக்களாம்.
அனைத்து இயக்கங்களின் கருத்துக்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன !! இதன்மூலம் தமிழ் முஸ்லிம்கள் இன்று தங்களின் வாழ்வையும் , அரசியல் நிலைத்தன்மையையும் முன்னேற்றுகின்றேன் என்று கங்கனம் கட்டி கொன்டிருக்கும் கழகங்களை பற்றியும் ஜமாத்துகளை பற்றியும் தெளிவாக அறிய இயலும்.
இன்றுவரை துவங்கப்பட்டுள்ள அனைத்து வலைமனைகளும் இஸ்லாத்தை பற்றி விவாதிக்கின்றனவே தவிர தமிழ் முஸ்லிம்களின் மணநிலையையும் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் மறைவுகள் இன்றி விவாதிக்க தயாரில்லை.
இங்கு நான் அனைத்து இயக்கங்களின் ஆதரவாளர்களையும் , இயக்கங்களையும் தங்கள் சார்பு கருத்துக்களை பதிவு செய்யவும் அது குறித்து விவாதிக்கவும் அழைக்கின்றேன். அதுபோல் இது குறித்து விமர்சிப்பதற்கு அருளடியான் , குஞ்சாலி மறைக்காயர் போன்றவர்களையும் அழைக்கின்றேன்.
‘விடியல்வெள்ளி’ என்ற வலையில் சகோதரர்ஒருவர் இந்த வலை பற்றி பதிந்த கருத்துக்களுக்கும் இங்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். இந்த விடியல்வெள்ளி’ என்ற சகோதரரின் பதிவு இன்று சில இயக்கத்தினராலும் மற்றும் இயக்கம் சாராதவர்களாளலும் விமர்சிக்கபடுகின்றது.
இந்த
“TAMIL MUSLIM POLITICS”ல் பதியப்பட்டுள்ளவை எனது சுய வார்த்தைகளோ எழுத்துக்களோ அல்ல இவை எனக்கு மின்ஞ்சல் மூலம் கிடைக்கப்ப்டவை. அவற்றை சோதனைபதிவிற்காகா வேன்டி இங்கு பதிவு செய்தேன் . நன்பர் ‘விடியல்வெள்ளி’ பிரச்சாரம் செய்வது போல் நான் த.த.ஜவின் அடிமட்ட தொன்டனோ அல்லது ஆதரவாளனோ கிடையாது. த.த.ஜ வினரைபற்றிய கடுமையான எனது விமர்சன கட்டுறைகளை எத்தனையோ இனையகுழுமங்கள் பிரசுரம் செய்துள்ளன அப்போதெல்லாம் த.த.ஜ வினர் என்னை த.மு.மு.க வின் கண்மணி என்று குற்றம் கூறவில்லை.

விவாதிக்கபட்ட இனைய முகவரிகள் :

http://muthupettai.blogspot.com/2006/04/blog-post_06.html
http://tamil.net/

http://vidiyalvelli.blogspot.com/

இதை சகோதரர்கள் புறிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். அனைத்து தமிழ் முஸ்லிம் இயக்கங்களையும் இங்கு தங்களது கருத்துக்களையும் , விமர்சனங்களையும், எதிர்ப்புக்களையும் பதிவு செய்ய அழைக்கின்றேன்.
தலைப்புக்களின் அடிப்படையில் விவாதிப்பது ஆரோக்கியமானது என்பதால் தற்போதைய விவாத தலைப்பாக அடியில்கானும் தலைப்பை நான் இங்கு சிபாரிசு செய்து தங்களை விவாதிக்க அழைக்கின்றேன்.

தமிழக முஸ்லிம்களாள் மிகவும் வெறுக்கப்படுவது :

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமா ?

2. தமிழ்நாடு தவஹித் ஜமாத்தா ?

3. முஸ்லிம் லீக்குகளா ???

தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய அழைக்கின்றேன்.

நன்றியுடன்
முகவைத்தமிழன்

குறிப்பு : அப்துல் ரவூப் , உண்மையை உரத்து கூறும் உமர் , இளையவன் , விடியல்வெள்ளி , குஞ்சாளி மறை;காகயர் , அருளடியான் , தமிழ் முஸ்லிம் , கடல் கடந்த த.மு.மு.க , முத்துபெட்டை பிலாக் ஆகிய அனைவரையும் இங்கு தங்கள் கருத்துக்களை விவாதிக்க அழைக்கின்றேன். அவரவர் இனையங்கள் தங்கள் சுயகருத்துக்களை எழுதுவதைவிட ஓரே வலையில் இருவரும் தங்களின் கருத்துக்களை விவாதிப்பது எவ்வளவோ வழிகளிள் நல்லது . பலவேறுபட்ட இயக்கங்களின் கருத்துக்களையும் விவாதம் , எதிர்விவாதங்களையும் தமிழ் முஸ்லிம்கள் ஓரே இடத்தில் அறிந்து கொள்ள இயலும்.
http://tmpolitics.blogspot.com/

2 பின்னூட்டங்கள் »

 1. விவாத களமமைத்தமைக்கு நன்றி
  ததஜ துவங்கப்பட்டு – அல்லது ததஜ என்ற அரசியல் கட்சிக்கு அச்சாரமாக, தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கத்திலிருந்து பி.ஜெ விலகிச் சென்று – சரியாக இரண்டு வருடங்கள் முடிந்து இன்று இத்தலைப்பு மிகவும் தேவையானதே.
  நூற்றாண்டு பாரம்பரியமுள்ள கட்சி, சுதந்திரத்திற்கு முன்பே உருவான கட்சி, நாட்டு சுதந்திரத்தில் நியாயமான பங்களித்துள்ள கட்சி என்று பெருமை பாராட்டும் தகுதியுள்ள கட்சிகள் இந்தியாவிலேயே இரண்டே இரண்டு தான். முதலாவது இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாவது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இவை இரண்டுக்கும் எவ்வாறு கடந்த கால வரலாறு எவ்வாறு ஒன்றாயிருக்கிறதோ அதேபோல் நிகழ்கால வரலாறும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போயுள்ளதை நாம் காண்கிறோம்.
  அதாவது, நூற்றாண்டு பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சி இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி துண்டு துண்டாகிப் போயுள்ளதோ அதேபோல் முஸ்லிம் லீக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிளவுபட்டு நிற்பதை காணுகிறோம். தமிழகத்தைப் பொறுத்த அளவிலும் காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் ஒரே சம் அளவில்தான் நிற்கின்றன.

  ஒவ்வொரு தலைவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக சமுதாய ஒற்றமையை குலைப்பதும், பிறகு அவரால் ஆதாயம் பெற்றவர்கள் அதனை அப்படியே இழுத்துச் செல்வதும் பின்னணி விபரங்கள் புரியாத சராசரி ஆட்கள் கூட்டத்தோடு கும்மி அடிப்பதும் விபரம் புரிந்து விலக நேர்ந்தால் மவுனமாக அடக்கி வாசிப்பதும் தான் இத்தகைய நிலை ஏற்பட காரணங்கள்.
  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அளவில் இத்தகைய பிரச்சனைகளை சந்தித்தது. அதற்கும் முன்பு ஒரு காலத்தில் தமிழக சட்ட சபையில் எதிர் கட்சி அந்தஸ்தோடு அமர்ந்திருந்த அக்கட்சி, தலைவர்களின் சுயநலப்போக்கால் சிதறுண்டு ஒரு தலைவர் அவருக்கு ஒரு மில்லத் பட்டம் அவரவருக்கென சில பிரமுகர்கள் இந்த பந்தாக்களோடு தேர்தல் சமயங்களில் ஆளும் எதிர் பிரதான கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி என பொழுது போக்கியதால், இஸ்லாமிய இளைஞர்களுக்கு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தித் தந்தது.
  அதுவும் போதாமல், அவர்களுக்குள்ளே கூட்டணி குழப்பங்கள் ஏற்பட்டு ஆளும், எதிர் அணிகளில் எதிரெதிரே நின்றும் மோதிக் கொண்டனர். இன்று அதிலும் ஒரு பரிணாம வளர்ச்சியாக முஸ்லிம் லீக் ஸ்தாபனர்களில் ஒருவரான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பேரன் – இந்த ஒரு தகுதியை மட்டும் வைத்து ஒரு சீட்டும் வாங்கி இரண்டு லீக்கை மூன்று லீக்குகளாக வளர்த்து விட்டார்.
  இப்படியாக இவர்களின் செயல்பாடுகளால், வெறுத்துப் போயிருந்த இஸ்லாமிய இளைஞர் வட்டம், ஒவ்வொரு முறை கூட்டணி அமைத்த கட்சிகளுடனும் ஐக்கியமாகி தனது முகவரி இழந்தது. தவிர, மக்களின் பிரச்சனைகளில் – குறிப்பாக, இஸ்லாமிய சமுதாயம் சந்தித்த பிரச்சனைகளில் கூட – தனது பங்களிப்பை முறையாக பதிவு செய்ய முஸ்லிம் லீக் தவறியது. இதன் காரணமாக பொதுமக்களிடமிருந்து அன்னியப்பட்டுப்போனது.
  ரபியுள் அவ்வல் மாதத்தில் மீலாது விழாக்கள் நடத்துவதும், அதுவும் மீலாது மேடைகளில் நபி (ஸல்) அவர்களின் சாதனைகளை போதனைகளை சொல்வதை விடவும், தான் அழைத்திருக்கும் கட்சித் தலைவரின் சாதனைகளைப் பற்றி பேசுவதில் புளகாங்கிதம் அடைந்தனர்.

  தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் தலை காட்டும் முஸ்லிம் லீக்கை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இதனால் தான் வெறுக்கத் துவங்கினர்.

  ஆனால் முஸ்லிம் மக்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்துள்ள முஸ்லிம் இயக்கம் எதுவெனில், சந்தேகமில்லாமல் அது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தான் என எவரும் கூறிவிடுவர்.

  அதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக இருந்த போதிலும் சிலவற்றை மட்டும் வாசகர்களின் பார்வைக்காக இங்கே பட்டியலிடுகிறேன்.
  1) வெகு காலங்களுக்குப் பிறகு வாராது வந்த மாமணியாக, மக்களின் தேவைகளுக்கு செவி சாய்ப்பவர்களாக, பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர்களாக, துன்பங்களுக்கு தோள் கொடுப்பவர்களாக செயலாற்றி வரும் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்த எண்ணி சமுதாயத்தைப் பிளந்ததை – முஸ்லிம்கள் வெறுக்கின்றனர்.
  2) தமுமுகவிலிருந்து விலகியதிலிருந்து இன்று வரை ததஜ வெளியிட்டு வரும் அறிக்கைகள், இவற்றிலுள்ள முரண்பாடுகளை விவரிக்க தனி இணைப்பு தேவைப்படும். முரண்பட்ட இவர்களின் அறிக்கைகளைக் கண்டு முஸ்லிம்கள் முகம் சுளிக்கின்றனர். வெறுக்கின்றனர்.

  3) வேறு எந்த முஸ்லிம் அமைப்பிலும், இயக்கத்திலும், கட்சியிலும் இல்லாத அளவுக்கு ததஜ நிர்வாகிகள் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்.

  3.1) அமைப்பு துவக்கப்பட்ட பொழுது துணைத் தலைவராக இருந்து இன்று தலைவராகியுள்ளவர் தமுமுகவிலிருந்து மீடியாவையும், டிரஸ்ட் சொத்துக்களையும் சுருட்டிச் சென்றார் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டை இன்றுவரை சுமுதாய மக்களிடம் தெளிவுபடுத்தாமல் திமிராக நடந்து கொள்வது.

  3.2) அமைப்பு துவங்கப்பட்ட போது தலைவராக இருந்து, இன்று டம்மியாக ஆக்கப்பட்டுள்ளவர் மீது கூறப்படும் பாலியல் (ஓரின) குற்றச்சாட்டுகள்.
  3.3) அமைப்பு துவங்கப்பட்ட போது உலகத்திலேயே முதன்முறையாக இரு பொதுச் செயலாளர்களை கண்டது. அதில் ஒருவர் சுயமாகவோ அல்லது தலைவரின் பினாமி என்பதாலோ ஏகபோக பொதுச் செயலாளராக ஆகி மற்றவரை துணைப்பொதுச் செயலாளராக்கியது.
  இந்தப் பொதுச் செயலாளர் மண்ணடியில் ஒரு மான்சனில் கையும் மெய்யுமாக பிடிபட்டபோது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு.

  3.4) துணைப்பொதுச் செயலாளராக இருந்த பெருந்தனக்காரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டது.

  3.5) இவர்கனைத் தவிர இந்த அமைப்பின் உலமாக்களாக அறிப்பட்ட பல மவ்லவிகளின் ஒழுக்கம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள்.
  இதுபோன்ற இன்னும் பல பொருளாதார, பாலியல், ஒழுக்கவியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிர்வாகிகளைக் கொண்ட ததஜவை முஸ்லிம்கள் எப்படி நேசிக்க முடியும். ஆகவே தான் முஸ்லிம்களால் பெரிதும் வெறுக்கப்படக்கூடிய கட்சியாக ததஜ உள்ளது.
  4) சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் பெயரால் வசூலித்த பொதுமக்களின் நன்கொடையை, பாதிக்கப்பட்டோரின் செல்வத்தை சுயநலத்திற்காக செவிட்ட கயமைத்தனம்.

  4.1) பாதிக்கப்பட்டோரின் பணத்திலிருந்து 2 இலட்சம் ரூபாயை தனது பத்திரிக்கைக்காக ஒதுக்கிக் கொண்டது. (எல்லாப் பத்திரிக்கைகளும் தங்களது சுனாமி வரவு செலவை பிரசுரித்த போதும் எவரும் அதற்காக பாதிக்கப்பட்டோரின் பணத்திலிருந்து பங்கு ஒதுக்கிக் கொள்ள வில்லை.)

  4.2) பாதிக்கப்பட்டோரின் பணத்திலிருந்து தனது இயக்கத்தவருக்கு சீருடை வாங்கிக் கொண்டது. (இதுவும் வேறு எவரும் செய்திராத ஒன்றாகும்.)
  இவை இரண்டும் ஜஸ்ட் சாம்பிள்கள் தான். இவை போன்ற ஏராளமான தில்லுமுல்லுகளை பகிரங்கமாக செய்துவரும், பாதிக்கப்பட்டோரின் பொருளாதாரத்தை விழுங்கி வரும் ததஜவை தமிழக முஸ்லிம்கள் மிகவும் வெறுப்பதில் வியப்பேதுமில்லை.

  5) இஸ்லாமிய அடிப்படை கடமை எனும் தூணாகிய ஜகாத்தை மறுப்பது.

  6) தமிழக வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் ஸஹாபாக்களை கேவலமாக விமர்சித்தது.

  6.1) நபி (ஸல்) அவர்களால் சொர்க்கத்தை குறித்து நன்மாராயம் சொல்லப்பட்ட உத்தம ஸஹாபி அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களை கிரிமினல் என்றது.

  6.2) முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களை ரவுடி என்றது.

  6.3) அன்ஸாரி தோழர்களை (ரலி-அன்ஹும்) பணத்தாசை, பதவி ஆசை பிடித்தவர்கள் என்றது.

  6.4) நபியின் பேரன் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களை பதவி ஆசை பிடித்தவர் என்றது.
  6.5) இஸ்லாமிய குடியரசின் இரண்டாம் கலீஃபாவாகிய உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்தான் முதன் முதலில் ஃபித்னாவை ஆரம்பித்து வைத்தவர் என்றது.

  6.6) நான்காம் கலீஃபாவாகிய அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எடுப்பார் கைப்பிள்ளை என்றது.

  இப்படியாக, இதற்கும் மேலாக உத்தம சத்திய ஸஹாபாக்களை – எதிரிகளும் சொல்ல கூசும் வார்த்தைகளால் விமர்சனம் செய்வதை எந்த முஸ்லிம் பொறுத்துக் கொள்ள முடியும்.
  எனவே அனைத்து முஸ்லிம்களும் அதிகம் வெறுக்கும் இயக்கம் ததஜ மட்டுமேயாகும்.

  7) இதுபோன்ற எண்ணற்ற காரணங்களால் முஸ்லிம்களில் பெரும்பாலோனோர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தை வெறுத்த போதிலும், மிகச் சிலர் தவ்ஹீதுவாதிகள் என தங்களை நம்பிக் கொண்டுள்ள சிலர், ததஜவின் இன்றைய தலைவரை சின்னத்திரையில் மட்டுமே கண்டு வந்த அச்சிலர் ததஜ மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்த்த மற்றொரு காரணம் (லாஸ்ட பட் நாட் லீஸ்ட்)

  தற்சமயம் அ.இ.அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராகிப்போன ததஜ தலைவர் மற்றும் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக இருந்து தற்சமயம் அ.இ.அ.தி.மு.க வார இதழாக மாறிப்போன உணர்வு வார இதழின் சமீபத்திய நிலைபாடு.

  7.1) ஆதரிக்க ஒன்றுமேயில்லாத ஆணையத்தை தனது வாதத்திறமையினால் தூக்கி நிறுத்த பகீரத முயற்சி செய்வது.

  7.2) இதுவரை கெஸட்டில் வெளியிடப்படாத ஒன்றை ஆணையம் அமைந்துவிட்டது எனக்கூறுவது.

  7.3) ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆரும் செய்யாத அளவுக்கு ஜெயலலிதா புராணம் பாடுவது.

  7.4) கும்பகோணத்தின் இரண்டாவது வெற்றி என குலவையிட்டு விட்டு, இப்பொழுது திருமாவளவன் பேட்டி மூலமாக இந்த ஆணையம் தேர்தலுக்குப் பின் தான் அமுலுக்கு வரும் என்று கூறுவது.

  7.5) கெஸட்டில் வெளியிடப்படாத நிலையில் தேர்தலுக்கப்பின்பு கூட எப்படி அமுலாகும் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் உதாசீனப்படுத்துவது.

  7.6 ஜெயலலிதாவின் ஆணவம், திமிர் பேச்சு என்று முன்பு குறிப்பிட்ட அதே விஷயங்களை இன்று ஜெயலலிதாவின் மிடுக்கு என பெருமையோடு வர்ணிக்கும் கேடு கெட்ட செயல்.

  7.7) நவீன ஷைத்தான் என்று உருவகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா இன்று அவர்களால் நிம்மதியான சுவாசம் வழங்கியவர் என புகழாரம் சூட்டப்படும் விசுவாசம்.
  அத்தோடு, கடையநல்லூர் ஜும்ஆ பள்ளிவாசல் விஷயத்தில் ததஜ நடந்து கொண்ட முறை. போன்றவற்றால் அதிர்ச்சி அடைந்துள்ள முஸ்லிம்கள் அதிகம் வெறுப்பது ததஜவைத் தான்.

  மற்றும் இடஒதுக்கீடு பெயரைச் சொல்லி முஸ்லிம்களை வரவழைத்தவர் கோனிகா பஷீருக்கு அதிக சீட்டு ஒதுக்கீடு தான் உண்மை நோக்கம் என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறும் சமுதாயம் ததஜவை அதிகம் வெறுப்பது இயற்கை தானே.

  மேலும் கும்பகோணத்தில் கூடியவர்களின் எண்ணிக்கையை சமுதாய மக்களிடம் ஒருவிதமாகவும், உளவுத்துறையை கையில் வைத்துள்ள முதல்வரிடம் ஒருவிதமாகவும் கூறியதிலிருந்து ததஜ தலைவரின் பேச்சுக்களை எந்த அளவு நம்ப முடியும் என விரக்தியடைந்த முஸ்லிம்கள் இன்றைய தேதியில் அதிகம் வெறுப்பது ததஜவைத்தான் என்பது நிதர்சனமான உண்மை.
  திராவிட கட்சிகளின் துரோகத்தை விட, லீக்குகளின் செயலிழந்த தன்மையை விட, ததஜவின் நம்பிக்கை மோசடியே பிரதானமாக முஸ்லிம்களை கொதிப்படைய செய்திருப்பதால், இன்றைய தேதியில் தமிழக முஸ்லிம்கள் மிகவும் வெறுப்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் தான்.

  அபூஇஸ்மத் 14.04.2006

  http://muthupettai.blogspot.com/2006/04/blog-post_15.html

  பின்னூட்டம் by Anonymous — ஏப்ரல் 15, 2006 @ 7:49 முப

 2. Well done brother Abu Ismath! your arguement is 100% right.

  பின்னூட்டம் by kaja — ஜூன் 30, 2007 @ 9:15 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: