தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 11, 2006

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:07 முப
த.த.ஜ பொது செயலாளர் பாக்கரின் சவுதி பயனம்.

நன்றி இளையவன் (மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்டது) இது குறித்த த.த.ஜ வினரின் மறுப்பு கட்டுறை வரவேற்கப்படுகின்றது

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
ததஜ என்ற அரசியல் அமைப்பு நடத்திய திருட்டுத்தனமான நாடகம்!
மக்கள் செல்வாக்கை இழந்த த.த.ஜ!!
ஒரு நேரடி களத்தொகுப்பு…
ஒரு சில மாதங்களுக்கு முன்பே வரவிருந்த ததஜவின் பொதுச் செயலாளரின் வருகை திடீரென ரத்துச் செய்யப்பட்டது. காரணம் அந்த நேரத்தில்தான் விண் டீவியும், கோடிகளும் கைமாறும் படலம் நடந்தது. அந்த பெரும்தொகையை சரியான இடத்தில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் மும்முரமாக இருந்ததால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இப்போது சாவகாசமாக பிளேன் ஏறிய பாக்கரின் ஜித்தா நிகழ்ச்சி படுதோல்வியில் முடிந்தது. வெறும் 300 நபர்களே கலந்து கொண்ட அதிசயம் நடந்தது. 1000 முதல் 1500 நபர் வரை வருவார்கள் என்று வழக்கம்போல ஆருடம் சொன்ன ததஜ சகோதரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நபர்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். ததஜ பொது செயலாளருக்கே கூட்டம் இல்லை என்றால் நமது மூதறிஞரும், மூத்த அரசியல்வாதியுமான தலைவர் வந்;தால் இதுபோன்றே சிறு கூட்டம் வந்தால் அசிங்கமாகிவிடுமே என்று தக்லீது நண்பர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
வந்தவர்கள் யார்?
கூட்டத்தில் ஜித்தாவைச் சேர்ந்த ததஜவின் ரசிகர்கள் 30 நபர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள். யான்பு, மக்கா, தாயிஃப், ஜித்தாவில் உள்ள நடுநிலையாளர்களும் கனிசமாக வந்திருந்தார்கள். இதுபோக தமுமுக சகோதரர்கள் பல பேர் பாக்கர் பயானை(?) வேடிக்கைப் பார்க்க போய் இருந்தார்கள். இன்னும் விடியலில் இருந்து 10 பேர் கலந்து கொண்டதாகவும் அதிலுள்ள ஒரு நண்பர் கூறினார். இவையனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் பாக்கர் பயானை(?) கேட்க வந்த ததஜவினர் வெறும் 200 பேர்தான். அதில் பெண்கள் 40 பேர் வந்திருந்தார்கள். அந்த 40 பேரில் தமுமுக, நடுநிலையாளர்கள் மற்றும் விடியல் வெள்ளி சகோதரர்களின் மனைவிமார்களும் அடங்குவர்.
இனி பாக்கர் பயான்(?) பற்றி பார்ப்போம்:
பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல, அவரது கிண்டலைப் புரிந்துக் கொள்ளாமல் பாக்கர் உடனே என்னை சிங்கம், புலி என்று சொல்லாதீங்க என்று கூறி அதைவிட பயங்கரமாக தனது முழு கைச் சட்டையை சண்டைக்கு போவது போல நன்றாக முழங்கை வரை மடக்கி வைத்துக் கொண்டு அவர் பாணி(!)யில் சினிமா நடிகர் நடிகை மற்றும் நவீன அரசியல் வாதிகளை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் என்று கர்ஜிக்க ஆரம்பித்தார். (முன்பெல்லாம் நவீன சைத்தான்களாகிய அத்வானி, வாஜ்பேயி, ஜெயலலிதா இவர்களிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன் என்று பீடிகைப் போடுவார்) ‘நவீன அரசியல்வாதிகள்’ என்று யாரைச் சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் தான் தற்போது அரசியல் தஞ்சம் புகுந்துள்ள அதிமுக தலைவி ஜெயலலிதாவை நவீன அரசியல்வாதியில்லை என்று சொல்கிறார் போலும். அடுத்து, அவருக்கு கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டில் ‘தவ்ஹீத் வளர்ந்த வரலாறு’ என்ற தலைப்பில் பேசச் சொன்னால் அவர் சார்ந்து இருக்கும் ஜமாத் எதற்காக உருவாக்கப்பட்டது, இப்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறது? என்பதை சொல்வதை விட்டுவிட்டு.. 85ல் தவ்ஹீத் வளர்ச்சிப் பற்றியும் பி. ஜெய்னுலாபுதினின் தியாகத்தைப் பற்றியும் அவர் பாணியில் சத்தமாக கர்ஜித்துக் காண்பித்து தூய்மையான இஹ்லாஸோடு ஊண், உறக்கமின்றி, உதைப்பட்டும், மிதிப்பட்டும், உண்மையாக தவ்ஹீது வளர்க்க பாடுபட்ட அந்த உன்னத சகோதரர்களுடன் தானும் (பாக்கர்) அந்த ஆண்டுகளில் கூடவே இருந்தது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தினார்.
85ல் தவ்ஹீத் வளர்ச்சி பற்றி இவருக்கு என்ன தெரியும்? அந்த காலக்கட்டத்தில் இவர் சிமி அமைப்பில் இருந்தவர் பி. ஜெய்னுலாபுதின் பற்றிக்கூட அவருக்கு என்ன தெரியும்? தமுமுக ஆரம்பிக்கும் போது தான் வந்து இணைந்தவர். ஏன் ததஜ ஆரம்பிக்கும் வரை இவர் தவ்ஹீத் ஜமாத் (ஹாமித் பக்ரி தலைமையில் இருந்த அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு) தில் சாதாரண உறுப்பினர் கூட கிடையாது. தமுமுக நடத்திய இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியின் டைரக்டராக இருந்தவர். ஆரம்ப காலங்களில் இவர் தவ்ஹீத் நிகழ்ச்சிகள் எதுவொன்றிலும் கலந்து கொண்டது கூட கிடையாது. பீ.ஜே.யின் பழைய கேஸட்டுகளைப் பார்த்தால் இந்த உண்மைத் தெரியும். தமுமுக ஆரம்பித்து அமைப்பு நடந்து கொண்டு இருக்கும்போது பீ.ஜெ. தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு போகும் போது இவர் எங்கும் கூடவே சென்றது கிடையாது. அங்கே வீடியோவை பிடித்து நிகழ்ச்சியை படம் எடுத்ததும் கிடையாது. தவ்ஹீத் கூட்டங்களில் தமுமுக நிர்வாகிகள் மேடைகளில் ஏறி அமர்வதைக் கூட பொறுக்காதவர். இப்போது 20 வருட தவ்ஹீதைப் பற்றி பேசுகின்றார். 20 வருட தவ்ஹீத் வரலாற்றில் இவருடைய பங்கு என்ன? சமீபகாலமாக கமர்ஷpயலாக மீடியா வேர்ல்ட் துவங்கப்பட்ட பிறகுதான் இவர் மும்முரமாக தவ்ஹீதுக் கூட்டங்களில் கலந்துக்கொள்ளத் துவங்கினார். இது தவிர வேறு ஒன்றுமே இல்லை. பொய் பேசியே பழக்கப்பட்ட இவர்களுக்கு இது ஒன்றும் புதிய விசயமில்லை.
20 வருட தவ்ஹீத் வளர்ச்சியில் பி. ஜெய்னுலாப்தீன் மட்டும் தான் உழைத்தாரா? இவர் பிரச்சாரம் பண்ண வருகிறார் என்பதற்காக உற்றாரைப் பகைத்து, ஊரைப் பகைத்து, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய ரத்த வியர்வை சிந்தி உழைத்த சகோதரர்கள்; அதற்கு பொருளாதாரம் வழங்கிய சகோதரர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தினால் இது அநியாயமில்லையா? தவ்ஹீது என்ற மகத்தான கொள்கையும், அதன் வளர்ச்சியும் தான் குத்தகை எடுத்துக் கொண்ட சொத்து என்ற மனப்பான்மையில் பீ.ஜே. அகம்பாவத்துடன் உலா வருவதற்கு இதுபோன்ற பேச்சுக்கள்தான் காரணம். தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு முன்னோடிகளாக செயல்பட்ட அறிஞர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஏராளமான சகோதரர்கள் ஆவர். பீ.ஜே.யும் அவரது ரசிகர்களும் மட்டுமல்ல. இன்று 24 மணிநேரமும் டீவியில் முகம்காட்டும் பீ.ஜே. இந்தளவுக்கு வளர்வதற்கு உரமாக உழைத்தவர்களில் பெரும்பாலோனோர் இன்றைய சூழ்நிலையில் இவரை விட்டு தூரமாக இருந்தாலும் இன்றும் ஆரவாரமில்லாமல் இந்த அரும்பணியில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.

ஜித்தாவில் தவ்ஹீதுப் பணி
ஜித்தாவில் தமிழ் தாவா கமிட்டி 89ல் ஆரம்பித்தது முதல் தலைவராக இப்போதைய தமுமுக தலைவர் புதுமடம் இப்ராஹீம் இருந்த போதே தாவா பணிகள் முடிக்கி விடப்பட்டு இன்று வரை நல்ல விதமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பாக்கர் வரலாற்றை மாற்றி ஷpப்லி பழைய ஆள் இவர் தாவாவில் முக்கிய பங்கு வகித்தவர் என்ற புதிய புருடாவை விடுகிறார். ஜித்தாவில் ஷpப்லியை எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவர் எந்தக் காலத்தில் தாவா பணிகளில் பங்கெடுத்தார் என்று கூற முடியுமா? பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

ஷpப்லியைப் பொறுத்தவரை ஜித்தா தாவா பணி என்றால் ததஜ இயக்கத்தையும் அவருடைய தலைவரையும் புகழ்ந்து பேசுவதும் அவர்களது விருப்பங்களுக்காக பாடுபடுவதும் தான் தாவா என்று நினைத்து செயல்படுகிறார்! அதுபோல் நினைப்பதில் தப்பில்லை, தனது தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார். இந்த ஷpப்லி ததஜ என்ற அரசியல் கட்சியை வளர்க்க பெரும்பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.

இவர்கள் பாணியில் ததஜவை வளப்பதுதான் தாவா பணி என்பதற்கு தமிழ்நாட்டில் தவ்ஹீத் பணி என்றால் ததஜ சொன்னால் தான் சரியாக இருக்கும் என்று கூறி மக்களை மடையர்களாக மாற்றிக் கொண்டு இருப்பதையும் அவர்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தின் தலைவர் மீது தக்லீது செய்வதையும் வைத்தே நாம் எடை போட்டு விடலாம். இன்று ததஜ எதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ததஜ ஒரு முழுநேர அரசியல் கட்சியாக மாறி இருப்பதை அவருடைய தலைவரது பேச்சிலும், எழுத்திலும் இருந்து தெரிந்து கொள்ளலாம். ததஜ இப்போது அதிமுகவுடைய சிறுபான்மை அமைப்பாக மாறிவிட்டதை யாரும் மறுக்க முடியாது. இன்று இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான அரசியல்வாதி ததஜ தலைவர் பீ.ஜே. என்பதை யாராவது மறுக்க முடியுமா? எந்த பீ.ஜே. தெரியுமா? தமுமுகத் தலைவர்கள் அரசியல்வாதிகளாகி விட்டனர் என்று கூறி பிரிவினைக்கு காரணம் கூறிய சாட்சாத் அதே பீ.ஜே. தான்.

இவ்வளவு பிண்ணனிகள் உள்ள பாக்கரின் ஜித்தா விசிட்டைப் பற்றி, ததஜவின் பினாமி மெயில்வாலாக்களின் ஈமெயில்கள் வரத் துவங்கி விட்டன. கும்பகோண நாடகப் பாணியில் ஜித்தாவில் பாக்கர் நிகழ்ச்சியில் 1500 பேர் கலந்து கொண்டார்கள்; என்ற பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். அந்த இடத்தின் முழு கொள்ளளவே மக்கள் கூடினால் 450 பேருக்கு மேல் இருக்க முடியாது, ஆனால் ததஜ என்றால் பொய் சொல்லியாவது கூட்டம் சேர்க்க வேண்டும் அல்லது கூட்டம் சேர்ந்தது என்று பொய் சொல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்கு இந்தப் பொய் ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏற்கனவே, குடந்தையில் 10 லட்ச பூச்சாண்டி காட்டி முதல்வரிடம் 1 லட்சம் என்று அடங்கிப் போன அனுபவம்தான் உண்டே.

அடுத்தப் பொய்யைப் பாருங்கள். மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மேடையில் ஏறி இருந்துவிட்டுப் போனார் என்ற பொய்யை கொஞ்சமும் கூச்சமில்லாமல் சொல்கிறார்கள். நான் அந்தக் கூட்டத்திற்கு போகாமல் இருந்திருந்தால் நானும் நம்பி இருப்பேன். மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நின்றுவிட்டு போய் விட்டார் என்பதுதான் உண்மை.

பாக்கர் கூட்டத்தை(!?) நடத்தியவர்கள் கடைசி வரை எந்த இடம் என்று கூறாமல் மறைத்து வைத்தது ஒன்றே அது எந்த வித அனுமதியும் இல்லாமல் நடத்தப்பட்டக் கூட்டம் என்பதற்கு அழுத்தமான அத்தாட்சியாகும்.

பிற பேச்சாளர்களின் உரைகள்
முதலில் பேசிய பஷPர் மௌலவி என்ன சொல்கிறார் என்பதே புரியாமல் பல பேர் ஆச்சரியமாக பார்ப்பதை பார்க்க முடிந்தது. அடுத்துப் பேசிய அஹமது பாக்கவி அவருக்கே உரிய பாணியில் ‘கொள்கையில் உறுதி வேண்டும்’ என்று பேசியது நகைப்பாக இருந்தது. பாக்கவியை வெளியில் சந்தித்த பழைய நண்பர் ஒருவர் நீங்கள் எதில் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘நான் எதிலும் இல்லை’ என்றுக் கூறி அவரது கொள்கையின் உறுதியைக் காண்பித்தபோது சிரிப்பை அடக்க சிரமப்பட்டோம்.

அடுத்துப் பேசிய இப்ராஹீம் காஸிமி ‘கல்விப் பணி’ என்ற தனது தலைப்பை விட்டு எங்கெங்கோ சுற்றி ஒரு கதையை சொல்லிக் கொண்டு இருந்ததை அருகில் உள்ள நண்பர் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்டதில் இருந்து இவரது உரையின் வீரியத்தை தெரிந்து கொள்ளலாம். 50 நிமிடம் எல்லோரையும் அசர வைத்து விட்டார் அதாவது தூங்க வைத்து விட்டார். இன்னும் பலர் காஸிமி பேசிக் கொண்டு இருக்கும்போதுதான் தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பிஸ்கட் ஜூஸ்களை ருசி பார்ப்பதில் மும்முரமாக இருந்தது தெரிய வந்தது.

இன்னொரு பொய்யையும் பாருங்கள்: ஓர் இந்து சகோதரர் இஸ்லாத்தைத் தழுவினார் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவரை நேர்வழியில் நிலைத்திருக்க அருளட்டுமாக. அவர் கலிமா சொன்னதோடு அவர் பின்னே உள்ள இருக்கையில் இருந்து கொண்டார். ஆனால் மெயிலில் அவர் ஏன் இஸ்லாத்திற்கு வந்தேன் என்ற கதையைச் சொன்னதாக மற்றொரு பொய்யை சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் பாக்கர் நிகழ்ச்சி ஜித்தா ததஜ சகோதரர்களுக்கு படு தோல்வியை ஏற்படுத்தி இவர்களில் சிலரைச் சிந்திக்க வைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

மௌலவிகள் பஷPர் மற்றும் இப்றாஹீம் காஸிமி ஆகியோர்களிடம் நாம் கேட்பது:

திருக்குர்ஆனின் அரபி மூலத்திற்கு மாற்றமாக நிறைய தவறுகளுடன் கூடிய மொழிப்பெயர்ப்பு வெளியிட்ட

ஏராளமான ஸஹீஹான ஹதீஸ்களை புறக்கணிக்கச் சொல்கின்ற

கண்ணியத்திற்குரிய உத்தம நபித்தோழர்களை பழித்துப் பேசுகின்ற

அவர்கள் குர்ஆனைத் திரித்து விட்டதாக அபாண்ட பழி சுமத்துகின்ற

1400 வருட வழிகாட்டுதலும், தெளிவான ஆதாரங்களும் உள்ள வருடா வருடம் கடமையான ஐம்பெரும் அடிப்படைகளில் ஒன்றான ஜகாத் எனும் கடமையை ஒருமுறை நிறைவேற்றினால் போதுமென்று வாதிடுகின்ற

தனது சுயநலனுக்காக ஒற்றுமையாக இருந்த தவ்ஹீதுவாதிகளை பல கூறுகளாக்கிய

சக அறிஞர்களையும், சமுதாய சிந்தனையாளர்களையும் சகட்டுமேனிக்கு அவதூறு குற்றங்கள் சுமத்தி அசிங்கப்படுத்தி வருகின்ற

மார்க்கம் வெறுக்கின்ற தனிமனித வழிபாட்டை நோக்கி தனது ரசிகர்களை இழுத்துச் செல்கின்ற

தனது தவறுகளை யாராவது சுட்டிக்காட்டி விட்டால் அந்தத் தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து தன்னைத் திருத்திக் கொள்ளாமல் சுட்டிக்காட்டியவர்களை வரம்புமீறி தாக்கிப் பேசியும், எழுதியும் வருகிற

தனக்கு எதிராக யாராவது கருத்துச் சொல்லிவிட்டால் உடனே முபாஹலாவுக்கு வா, என்னோடு வாதம் புரிய வா என்று ஆணவமாக வம்புக்கிழுக்கின்ற

ஒருங்கிணைந்து அரசியல் களத்தில் சாதிக்கும் சரியாணத் தருணம் வந்தபோது அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாகி எப்படியோ விலையாகி சக்திமிக்க நம் சமுதாயப் பேரியக்கத்தை பிளந்த

ஒரு தனிமனிதருக்கும் அவரது ரசிகக் கூட்டத்திற்கும் –

ஸலஃபிக் கொள்கையை அடிப்படையாக் கொண்டு இயங்கக்கூடிய பிலாதுஸ் ஸலஃபியாவில் உள்ள இஸ்லாமிய நிலையங்களில் பணியாற்றி (பஷPர்; மவுலவி தவிற) சம்பளம் பெறக்கூடிய நீங்கள் எப்படி மேற்கண்ட பாராவில் உள்ள சீர்கேடுகளைக் கொண்ட ஓர் அமைப்பின் பொதுச்செயலாளருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இந்த நாட்டில் நிகழ்ச்சிகள் நடத்தவும் அவர்கள் பிரச்சாரங்களைச் செய்யவும் உதவி வருகின்றீர்கள்?

உங்களது செயல்பாடுகள் இரண்டு கேள்விகளை உங்களை நோக்கி கேட்க வைக்கின்றன:

1) நீங்கள் பணியாற்றும் நிலையங்களுக்கும் அவை உள்ள நாட்டின் விதிமுறைகளுக்கும் உட்பட்டு உழைத்து ஊதியம் பெறுவதாக இருந்தால் அவற்றின் கொள்கை, கோட்பாடுகளை மதித்து நடந்து அதில் எள்ளளவும் சருகாமல் இருக்க வேண்டும்.

அல்லது

2) மேற்படி தமிழ்நாடு தக்லீது ஜமாத்தின் பிரதிநிதிகளுக்கு துணைப் போவதின் மூலம் அதன் கொள்கைகள், பிரச்சாரங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை சரிகண்டு அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்றீர்கள் என்றால் அதற்கு நேர்எதிரான கொள்கைகளை உடைய இஸ்லாமிய பிரச்சார நிலையங்களில் பணியாற்றுவது நிச்சயம் பித்தலாட்டமான ஏமாற்று வேலையாகும்.

இதற்கு தெளிவான பதிலை மக்களுக்குத் தர நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

இந்த வெளியீட்டை வாசிக்கின்ற அன்புச் சகோதரர்களே! யாரும் எங்கும் வருவதிலோ, பேசுவதிலோ காழ்ப்புணர்வுக் கொண்டு இதை நாம் வெளியிடவில்லை. எமது மொத்த நோக்கமும் மேலே உள்ள சில பாராக்களில் நாம் சொல்லியுள்ள செய்திகளை நீங்கள் மீண்டும் வாசித்தால் தெளிவாகும்.

வஸ்ஸலாம்,

ஜித்தாவிலிருந்து எமது சிறப்புச் செய்தியாளர் – அப்துல்லாஹ்

http://www.pjvstmmk.com/bakkar_jeddah_meeting.htm

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: