தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 12, 2006

ஜனநாயகம் : நவீன கால இணைவைப்பு

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:59 முப

சொன்னது யாரோ ….? – தொடர் 1

இஸ்லாம் ஒன்றே மக்களுக்கு நேரிய வழிகாட்டி என்ற பிரச்சாரம் செய்து வந்த கொள்கைவாதிகள் இன்று குர்ஆன், ஹதீஸ் மூலம் மக்களை குழப்பத் தொடங்கிவிட்டனர். இஸ்லாம் தான் தீர்வு என்றவர்கள் இன்று ஜனநாயகமே தீர்வு என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அல்குர்ஆன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகளை அடைவதை விட்டுவிட்டு மாசுபட்ட மனித கரங்களால் எழுதப்பட்டுள்ள கொள்கைளையே தங்களது இலாஹ்-ஆக ஏற்றுக்கொள்ளச் சொல்லிவருகின்றனர். நாவிலே ஏகத்துவத்தையும் நெஞ்சிலே ஜனநாயகம் எனும் ஷிர்க்கையும் கொண்டவர்களாக மக்களை குழப்பி வருகின்றர். ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் செய்த கொள்கைகளுக்கு எதிராகத்தான் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள. மக்களின் அறியாமை மற்றும் மறதியே இவர்களுக்கு அற்புதமான டானிக். ஜனநாயகம் கூடாது என்றார்கள். இதற்காக பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாய் கட்டுரைகளை வரைந்தார்கள். வாய்கிழிய பேசினார்கள். கூடுகின்ற கூட்டத்தையும் போடுகின்ற கோசத்தையும் பார்த்துவிட்டு மூன்றாம் தரமான அரசியல் கட்சியாக இயக்கத்தை உருமாற்றினார்கள். தனக்கான உரிமைகளை எடுத்துக் கொள்ள மார்க்கம் அனுமதித்த எல்லா வழிகளும் இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளிடம் கைகட்டி நின்று சேவகம் செய்வதில் மகிழ்ச்சி கண்டார்கள். கேட்பவர்கள் கேணையனாக இருக்கும் பட்சத்தில் கேள்வரகில் நெய்வடிகிறது என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தயக்கம்? ஆனால், சமுதாயம் இன்று விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது என்பதை மறந்துவிட்டனர். கொள்கைவாதிகளாய் நடித்துவரும் குழப்பவாதிகளை இன்று மக்கள் அடையாளம் காண ஆரம்பித்துவிட்டனர். இவர்களது ஆரம்பகால பிரச்சாரம் என்ன? தற்போதைய ஆடம்பரகால பிரச்சாரங்கள் என்ன என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வண்ணமாக இந்த கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் இவர்களே தங்கள் கைப்பட எழுதிய ஜனநாயகம் – நவீன கால இணைவைப்பு எனும் கட்டுரையை இணைத்துள்ளோம். அருட்செல்வன் எனும் புனைப்பெயரில் எழுதிய இவர்தான் தற்போது முஸ்லிம்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்றுகூறி புறப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்து வருகின்றார். எதை ஷிர்க் (இணைவைப்பு) என்று கூறினாரோ அவரே இன்றைக்கு இந்த ஷிர்க்-க்கு கொடிபிடிப்பவராக இருக்கின்றார். ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படிவேண்டுமானாலும் சொல்வார்கள், செய்வார்கள் என்பதற்கு இது ஒன்றே மிகச்சிறந்த உதாரணம். இனிவரும் காலங்களில் இவர்கள் மக்களை எப்படியெல்லாம் குழப்பி வருகின்றனர் என்பதை இவர்களின் வார்த்தைகளின் மூலமே வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம். இன்ஷா அல்லாஹ். சத்தியம் அது வென்றே தீரும்.

ஜனநாயகம் : நவீன கால இணைவைப்பு

ஜனநாயகம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கொள்கையாகும். முஸ்லிம்கள் கூட ஜனநாயகத்தை வானளாவ புகழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் அமுலில் இருக்கும் மதசார்பற்ற ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு கோட்பாடாகும். இஸ்லாம், ஆட்சி அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுகின்றது. அல்லாஹ் தனது திருமறையில் ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. ‘ அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாது என்று கட்டளை இட்டுள்ளான். (அல்குர்அன்12:40) எனவே அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள். அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! ஆவர்கள் உம்மை குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களை துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர். அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்றால் பிறகு ஜாஹிலியத்தின் (அறியாமைக்காலத்தின்) தீர்ப்பினையா அவர்கள் விரும்புகின்றார்கள்? ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களை பொறுத்தவரை அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்குபவன் யார்? (அல்குர்ஆன் 5 : 49,50) எனவே இஸ்லாத்தை பொறுத்த மட்டில் ஆட்சிஅதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் அவனுக்கு இணை துணை யாருமே கிடையாது. ஆனால் இந்தியாவில் நடைமுறையிலுள்ள ஜனநாயகம் ஆட்சி அதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கே உரியது என்று கூறுகின்றது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பமே அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படும். இறைவனது வழிகாட்டுதல்களை குறித்து சிந்திக்க மத சார்பற்ற ஜனநாய முறையில் சிறிதளவும் வாய்ப்பில்லை. பூமியில் வசிப்பவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றினால் இறைவனின் பாதையிலிருந்து உம்மை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள். ஆதாரமற்ற வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். (அல்குர்ஆன் 6 : 116) எனவே இஸ்லாமும், ஜனநாயகமும் எதிரும் புதிருமான கொள்கைகளாகும். இறைவனுக்கு இணைவைக்கும் அரசியல் வடிவமே ஜனநாயகமாகும். அது மனிதனை கடவுள் ஆக்குகின்றது. தமது மனோ இச்சையை தெய்வமாக கொண்டோரை.. .. (25:43) (ஆ.P மற்றும் ஆ.டு.யு க்கள்) கண்ணியப்படுத்தி அவர்களது தவறுகளுக்கெல்லாம் நியாயம் கற்பிக்கும் நிறுவனங்களை (பாராளுமன்றம், சட்டமன்றம்) உற்பத்தி செய்கின்றது ஜனநாயகம். மதசார்பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வது இந்த அமைப்பை உருவாக்க தேர்தலில் போட்டியிடுவது, அல்லது போட்டியிடுவோரை ஆதரிப்பது இணைவைத்தல் மட்டுமின்றி, பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றின் வடிவில் இன்னொரு இலாஹ்வை உருவாக்குவதற்கு சமமாகும். எனவே லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்த எவரும் ஓட்டுப் போட்டு நவீனகால தாஃகூத்தான பாராளுமன்றத்தை உருவாக்க முன்வரக் கூடாது. இன்றைய இந்தியாவில் அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதும், அல்லாஹ் ஹலால் ஆக்கி இருப்பதை ஹராம் ஆக்குவதும் பாராளுமன்றம், சட்டமன்றங்களின் பணிகளாக இருந்து வருகின்றன. உதாரணமாக : எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் ஹலால் ஆக்கியுள்ளான். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான், நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;, அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும். (அல்குர்ஆன் 17 : 3) ஆனால் இன்றைய சட்டமியற்றும் பாராளுமன்றம், சட்டமன்ற அவைகள் தமது கரங்களில் சட்டத்தை எடுத்துக் கொண்டு மனித இன உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமுல் படுத்தி வருகின்றன. இதேபோல் சென்ற 1988ல் நாடாளுமன்றத்தில் மத ஆலயங்கள் துஷ்பிரயோக தடைசட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் மதத்தையும் அரசியலையும் பிரிப்பதுதான். தீனின் பிரிக்க முடியாத பாகமாக அரசியல் விளங்கும்போது, இறைவன் தனது அடிமைகளுக்கு கொடுத்திருக்கும் இந்த சுதந்திரத்தை பறிக்க சட்டமியற்றும் மன்றங்களுக்கு எங்கே உரிமை இருக்கின்றது? அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதிலும் சட்டம் இயற்றும் கூடாரங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. உதாரணமாக மதுக்கடைகள் வைக்க அனுமதிக்கும் சட்டம், விபச்சாரம் செய்வதற்கு கூட லைசென்ஸ், லாட்டரி எனும் சூதாட்டத் திட்டத்தை அமுல்படுத்த அனுமதி, ஆனால் அல்லாஹ் கூறுகின்றான். இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். ஆவற்றை தவிர்த்து கொள்ளுங்கள் அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 5 : 90,91 ) இப்படி அல்லாஹ் ஹராம் ஆக்கியிருப்பதை ஹாலாலாகவும், அல்லாஹ் ஹலால் ஆக்கியிருப்பதை ஹராமாக்கி வைக்கும் அவைகளே சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும். இப்படி அல்லாஹ் விதித்துள்ள விதி முறைகளுக்கு நேர் எதிரான சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாக்களிக்க முடியும்? நாம் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனங்களில் இறைவன் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருப்பினும் குஃப்ரை (இறை நிராகரிப்பை) அழித்து விட்டு அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க பாடுபட வேண்டிய முஸ்லிம்கள் இன்று மதசார்பற்ற ஜனநாயக தேர்தலில் பங்கு கொள்வதில் பெரும் விருப்பமுடையவர்களாக இருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் இன்னொரு இலாஹ்வை (இறைவனை) பாரளுமன்றத்தின் வடிவில் உருவாக்குகின்றோம் என்பதை உணர்வதில்லை. ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள், (யூதர்களும், கிருத்தவர்களும்) அல்லாஹ்வை விடுத்து மார்;க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் (கடவுள்) ஆக ஆக்கிக் கொண்டார்கள் (9:31) என்ற இறை வசனத்தை ஒரு கூட்டத்தார் முன்நிலையில் ஓதிக் காட்டினார்கள். அப்போது அந்த அவையிலிருந்த அதீ பின் ஹாத்திம் என்ற இஸ்லாத்தை தழுவிய கிருத்தவர், கிருத்தவர்கள் தங்கள் மதகுருமார்களை வணங்காதிருக்கும் போது அவர்கள் எப்படி கடவுளராக ஆக முடியும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) பதில் சொன்னார்கள். அந்த அறிஞர்களும் துறவிகளும் எதனை ஹராம் என்று கூறினார்களோ அதனை ஹராமாகவும் எதனை ஹலால் என்று கூறினார்களோ அதனை ஹலால் என்றும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். இதுதான் அவர்களை கடவுளராக ஆக்கிக் கொள்வதாகும் என்று கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி) ஓட்டுப் போட்டு சட்டமியற்ற பாராளுமன்றம் சட்டமன்றம் அமைப்பது மற்றொரு கடவுளை உருவாக்குவதுதான் என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பதிலுரையில் இருந்து நமக்கு தெளிவாக புலப்படுகின்றது. இருப்பினும் எல்லா வகையான சமாதானங்களையும் கூறி முஸ்லிம்கள் அவ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றனர். அல்லாஹ் இவ்வாறு செயல்படுவோரை இவ்வாறு எச்சரிக்கின்றான். மேலும் தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், யார் இறைத் தூதரிடத்தில் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறை நம்பிக்கையாளர்களின் போக்கிற்கு மாறான பாதையில் செல்கின்றானோ அவனை அவன் திருப்பி விட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம், பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம். அது மிக்க கெட்ட தங்குமிடமாகும். (அல்குர்ஆன் 5: 44,45,47) திண்;ணமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்து பாவங்களையும் தான் நாடுபவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள் திண்ணமாக பெரும் பொய்யை புனைந்தவராவர். மேலும் பாவத்தை புரிந்தவராவர். (அல்குர்ஆன் 4 : 48 ) முஸ்லிம்களுக்கு இறுதி வெற்றி மறுமையில்தான். அந்த இறுதி வெற்றிக்கு பங்கம் விளைவிக்கவல்லது மதசார்பற்ற ஜனநாயக முறையில் பங்கு கொள்வது. எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் இந்த அமைப்பினை புறக்கணிப்போம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.
அருட்ச் செல்வன் – ளுஐஆ செய்திமடல் – டிச.95

Advertisements

5 பின்னூட்டங்கள் »

 1. //இஸ்லாம் ஒன்றே மக்களுக்கு நேரிய வழிகாட்டி என்ற பிரச்சாரம் செய்து வந்த கொள்கைவாதிகள் இன்று குர்ஆன், ஹதீஸ் மூலம் மக்களை குழப்பத் தொடங்கிவிட்டனர். இஸ்லாம் தான் தீர்வு என்றவர்கள் இன்று ஜனநாயகமே தீர்வு என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அல்குர்ஆன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகளை அடைவதை விட்டுவிட்டு மாசுபட்ட மனித கரங்களால் எழுதப்பட்டுள்ள கொள்கைளையே தங்களது இலாஹ்-ஆக ஏற்றுக்கொள்ளச் சொல்லிவருகின்றனர்.//

  த.மு.மு.க. தலைவர் தவ்ஹீது பிரச்சாரம் செய்ததாக எனக்கு நினைவில்லை.

  அவர்கள் குழப்புவது ஒரு புறம் இருக்கட்டும்; நீங்கள் எதைத் தீர்வாகச் சொல்கிறீர்கள்? இஸ்லாமா? ஜனநாயகமா?

  //நாவிலே ஏகத்துவத்தையும் நெஞ்சிலே ஜனநாயகம் எனும் ஷிர்க்கையும் கொண்டவர்களாக மக்களை குழப்பி வருகின்றர்.//

  அவர்களுடைய நெஞ்சத்தைப் பிளந்து பார்த்தீரோ?

  //ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் செய்த கொள்கைகளுக்கு எதிராகத்தான் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள.//

  ஆரம்பத்தில் எடுத்த நிலைப்பாட்டிலேயே நிற்க வேண்டும் என்பது சரியான வாதமல்ல. இந்த வாதம் சரியெனில் முன்பு தர்கா வழிபாட்டில் திளைத்திருந்தவர்கள் இன்று தவ்ஹீதின் பக்கம் திரும்பியது தவறு என்று பெருள் வரும்.

  பின்னூட்டம் by விடியல் — ஏப்ரல் 12, 2006 @ 7:37 முப

 2. It was written by VIDIYAL few years back against Mr. Jawahirullah . Just I’m reproducing the article for the viewers comment since it is suitable for the present situation.

  பின்னூட்டம் by முகவைத்தமிழன் — ஏப்ரல் 12, 2006 @ 7:54 முப

 3. ‘சொன்னது யாரோ?’ என்ற தலைப்பில் உள்ளதற்குத்தான் உங்களிடம் விளக்கம் கேட்டிருந்தேன். ‘ஜனநாயகம் – நவீன கால இணைவைப்பு’ என்ற கட்டுரைக்கு அல்ல. அது குறித்து எனக்கு ஏற்கனவே தெரியும்.

  ‘சொன்னது யாரோ?’ என்ற தலைப்பில் உள்ளது விடியலில் வெளிவந்ததா? அப்படியனால் அது எந்த மாதம்? எந்த வருடம்? வந்தது என்று கூறமுடியுமா? ஏனெனில் விடியலை தொடர்ந்து இல்லாவிடினும் அடிக்கடி படிக்கும் வாய்ப்பு உள்ளவன் நான். இதுவரை முஸ்லிம் இயக்கங்களை விடியல் இந்த முறையில் தாக்கி எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. ஆனால் விடியலை இந்நாள் த.த.ஜ.வின் தலைவர் கடுமையான முறையில் தாக்கி எழுதியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவும்.

  அதுமட்டுமின்றி விடியலின் மனித நீதிப் பாசறை நேரடி அரசியலில் பங்குபெறாவிட்டாலும், அது தேர்தல் பாதைக்கு திரும்பிவிட்டதை நான் அறிவேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டது. அந்த இயக்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்காகவே அதன் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த தேர்தலிலும் அவர்கள் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரச்சாரத்தை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டனர்.

  பின்னூட்டம் by விடியல் — ஏப்ரல் 12, 2006 @ 10:24 முப

 4. மண்னிக்கவும், விடியலில் இடம்பெற்றது என்று தவறாக குறிப்பிட்டுவிட்டேன் . உண்மையில் இது விடியல் ஆதரவாளர்களாள் எழுதப்பட்டு 2000-2001 ம் ஆன்டுகளிள் இனையத்தில் இடம்’பெற்றிருந்த ”புதுஉதயம்” என்ற வலைமனையில் பிரசுரிக்கப்பட்டதாகும். இந்த வலை மனையின் உறிமையாளராக இருந்தவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெறியும் என்ற அடிப்படையில் அவர் விடியல் வெள்ளி ஆதரவாளராகவே இருந்தார் இன்னமும் இருக்கின்றார்.

  நன்றி
  முகவைத்தமிழன்

  பின்னூட்டம் by முகவைத்தமிழன் — ஏப்ரல் 12, 2006 @ 10:41 முப

 5. மற்றவர்களின் பதிவிலிருந்தோ அல்லது மற்றவர்கள் எழுதிய நூல்களிலிருந்தோ ஒரு விதயத்தை பதிவதாக இருந்தால் அதற்கான சுட்டி அல்லது எடுத்தெழுதப்படும் நூலின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள். இல்லையெனில் அது நீங்கள் எழுதியதாகவே வாசிப்பவர்கள் கருதுவர். அப்படியில்லாமல் எழுதப்படுபவை ஆதாரம் இல்லமால் எழுதப்படும் அவதூறுகளாகவே கருதப்படும்.

  ‘புது உதயம்’ வலைமனைக்கான தொடுப்பு கிடைக்குமா? அல்லது அதனைப் பதிந்த உங்கள் நண்பரின் மின் அஞ்சல் முகவரியைக் கொடுங்கள்.

  //நாவிலே ஏகத்துவத்தையும் நெஞ்சிலே ஜனநாயகம் எனும் ஷிர்க்கையும் கொண்டவர்களாக மக்களை குழப்பி வருகின்றர்.// என்ற அவரின் குற்றச் சாட்டுக்கு,

  “ஜவாஹிருல்லாஹ்வின் நெஞ்சத்தைப் பிளந்து பார்த்தீரோ?” என்று நான் கேட்க வேண்டும். அவரது முகவரி எதுவும் இல்லாத பட்சத்தில் ஆட்சேபகரமான இந்த குற்றச் சாட்டை உங்கள் பதிவிலிருந்து நீங்கள் நீக்க வேண்டும்.

  பின்னூட்டம் by விடியல் — ஏப்ரல் 12, 2006 @ 1:45 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: