தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 13, 2006

தேசப்பிரிவினைக்கு யார் காரணம்?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 1:10 பிப

தேசப்பிரிவினைக்கு யார் காரணம்?அதிர்ச்சி தகவல்கள்
இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கு்ம் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு என்ற திட்டத்தை முதன்முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள்தாம். இன்று இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கு்ம் 1940க்குமிடையே நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுகளையும் ஒருமுறை ஆராய்ந்து பார்க்கட்டும். இந்நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள் அல்லது இங்கு இரண்டாம்தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாக போடப்பட்டது. “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு என்ற சிந்தனை முதன்முதலில் லாலாலஜபத்ராயின் மூளையில்தான் உதித்தது” என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்க செயலாளராக இருந்தவரும், காந்தியின் நெருங்கிய சகாவுமான பண்டித் சுந்தர்லால் ரேடியன்ஸ் வார இதழி்ல் (13-6-1987) ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். இன்று ஆர்.எஸ்.எஸ். போற்றிப் புகழும் வி.டி.சாவர்க்கர் இந்துக்கள் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக ஆர்.என்.அகர்வால் The National Movement என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். குர்தகி மட சங்கராச்சாரியார்,” இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம்களை எச்சரித்தார். அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu-Muslim State is Sheer Nonsense”இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்”என்று உரத்து சொன்னார்.1923ல் வாரணாசியில் பண்டித் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்து மகாசபை புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சி தரல், அதன் முக்கிய குறிக்கோள்; இந்தியா இந்துக்களுக்கே…….. வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின. இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.லாஹூரில் ரங்கிலா ராஜா(கெட்ட நடத்தையுள்ள ராஜா) என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முஸ்லிம்கள் போற்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது. இவ்விதம் இந்து மத தலைவர்களி்ல் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களி்ன் நிலை என்னவாக இருந்தது? இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் இரு நாடு என்ற திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதுவரை இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவர் பாலமாகஇருந்தார்.”The Ambassadar of Hindu-Muslim Unity” என்று சரோஜினிநாயுடுவால் பாராட்டப்பட்டவர். 1933ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றி குறிப்பிட்ட பொழுது “An Impossible Dream”(நடைபெற இயலாத கனவு) என்றார் ஜின்னா. 1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டு வரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்த வில்லை. 1945,1946ல் தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.தனிநாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937க்கு பின் இடைக்காலஆட்சிப்பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால்சிடால்வாட். லிபரல் பார்ட்டியின் தலைவரும்,1930 ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட் Recollection and Reflection என்ற தனது நூலில் Congress Parentage of Partition தலைப்பின் கீழ் எழுதுகிறார். “பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935ம் ஆண்டுச்சட்டப்படி ஆட்சிக்கு வந்த பொழுது நடந்து கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை”என்கிறார். வட்டமேஜை மாநாட்டில் மாகான மந்திரிசபைகளில் சிறுபான்மை பிரிவுகளையும் சேர்த்துக்கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகானங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலே தவிர மந்திரிப்பதவி இல்லை என கூறிவிட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனை டாக்டர்.அம்பேத்கார் குறிப்பிடுகையில்” காங்கிரஸ் அனுசரித்த போக்கு விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதர கட்சிகளையெல்லாம் நிர்மூலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாக மாற்றுவதற்கே இம்முறை கையாளப்பட்டது. ஏகாதிபத்திய அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம்முயற்சியை இந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம்.ஆனால் இம்முயற்சி சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்”எனக் கண்டித்து கூறுகிறார்.காங்கிரஸ் ஆட்சியி்ல் இருந்த இரண்டு ஆண்டில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப்பற்றியோ கலிபாக்களையைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடதிட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம்ஒரேயடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.(Sir Regined Coupland. The Indian Problem) இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பி்ல் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப்பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்.என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல்ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவில் மாகானசுயாட்சி என்ற அடிப்படையில் மாகானங்களைப் பிரிக்கலாம் என 1946 ம் ஆண்டு மே மாதம் 16ம்தேதி வெளியிடப்பட்ட கேபினட்தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ம்தேதி கூடிய முஸ்லிம்லீக் கவுன்சில் ஜின்னாவின்ஆலோசனைப்படி ஏற்றுக்கொண்டது. 1940ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையை கைவிட தயாரானது. ஆனால், ஜூலை 10ம் தேதி நேரு கேபினட் தூதுக்குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. “அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்ப தயாராக இல்லை தனிநாடு தான் தீர்வு”என ஜின்னா முடிவாக கூறிவிட்டார்.”நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையேமாற்றிவிட்டது”எனமௌலானாஅபுல்கலாம்ஆசாத் India Wins Freedom என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னாவும், முஸ்லிம்லீக்கும், முஸ்லிம்களும் நிர்பந்த சூழ்நிலையில் தான் தனிநாடு கேட்டார்கள் என்பது தெளிவாகும்.பச்சை துரோகம் வரலாற்றுப் புகழ் பெற்றகாந்தி-ஜின்னா ஒப்பந்தத்தின் போது ஜின்னா தந்த உறுதிமொழிகளை ஏற்ற ஜின்னா தனிநாடு கோரிக்கையை கைவிடும்மனநிலைக்கு வந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தனர் காங்கிரஸில் சுயநலவாதிகள். ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு சரிசமமாக இருந்து விட்டால் தங்கள் சாதி மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்படுமோ எனஅஞ்சினர். பிரதமராக ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விடுமோ என பல காங்கிரஸ் தலைவர்கள் பதறினர். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஜின்னாவிடம் பாகிஸ்தான் கோரிக்கையில் உறுதியாக இருங்கள் என்று தூண்டிவிட்டனர். பின்னாளில் இதை அறிந்த காந்தியடிகள் திரை மறைவில் நடந்த சூழ்ச்சிகளை எண்ணி மனம் வெதும்பியிருக்கிறார்.

Advertisements

1 பின்னூட்டம் »

  1. சகோதரரே! பாகிஸ்தான் பிரிவினை சில சுயநலவாத முஸ்லிம் மற்றும் இந்து தலைவர்களுக்கு மட்டும்தான் நன்மையை தந்தது – ஒன்றுபட்ட இந்தியா இன்று இருந்தால் – நமது முஸ்லிம்களின் வலிமை மேலோங்கியிருக்கும் – பகல்பூர் – மீரட் – மாலியான – மும்பை – குஜராத் – கோயம்பத்தூர் – போன்ற இடங்களில் முஸ்லிம்களின் கொலை தடுக்கப்பட்டிருக்கும்.. பிரிவினையால் சிறுபான்மையினராய் சிதறுண்டது முஸ்லிம்களும் — அவர்களின் வாழ்வும்தான்..அதனால்தான் நமது வாழ்வு சங் பரிவாரத்தினரின் கையில் “கிள்ளுக்கீறையாக” போய்விட்டது..
    பிறைநதிபுரத்தான்

    பின்னூட்டம் by Anonymous — ஏப்ரல் 23, 2006 @ 5:56 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: