தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 29, 2006

முஸ்லீம் தீவிரவாதிகள்-பதில்"சன் டி.வி"

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:37 முப
தேர்தல் களத்தில் இன்று : முஸ்லீம் தீவிரவாதிகள் என்றால் என்ன ? பதில் சொல்வது தி.மு.க “சன் டி.வி” .

தேர்தல் களத்தில் இன்று : சிறுபான்மையினர் சமுதாயம் மொத்தமும் தங்களுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் சிலரின் தோலை உரித்து காட்டத்தான் இந்த பதிவு. முதலில் இப்படி ஒரு தலைப்பு கொடுத்ததற்க்காக சகோதரரிடம் மன்னிப்பு வேண்டுகிரறேன்..

அந்த சம்பவம் நிகழ்ந்து இன்றைக்கு சில ஆண்டுகள் உருண்டோடிவிட்டன..ஆனால் சில சம்பவங்களை யாராலும் மறக்க முடியாது..

அந்த சம்பவம், கோவை குண்டு வெடிப்பு..அதன் பின்னால் நிகழ்ந்த கலவரம்…போலீசாரின் அத்து மீறல்கள்…சங்கீதாவை தேடுகிறேன் பேர்வழி என்று முஸ்லீம் சகோதரிகளின் பர்தாக்களை கிழித்து எறிந்ததை தான் மறக்க முடியுமா ?

அன்று போடப்பட்ட பொய் வழக்குகளால் இன்றும் எத்தனை அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்கள் ? தெருவோர டீ கடைக்காரர், பீடா விற்ற சகோதரர், லாட்டரி விற்ற அன்பர்..இன்னும் எத்தனை பேர் தீவிரவாதிகள் என்ற முத்திரையோடு கோவை சிறையில் குடும்பத்தை பிரிந்து நிற்கதியாக நிற்க்கிறார்கள் ?

இந்த நிகழ்ச்சிகளை ஆதியோடு அந்தமாக ஒலிபரப்பிய சன் டி.வி, திரும்ப திரும்ப கிளி பிள்ளை போல் கூறிய வார்த்தைதான் “முஸ்லீம் தீவிரவாதிகள்”..இது முஸ்லீம் பெருமக்கள் இதயத்தை குத்தீட்டி கொண்டு கிழிக்கிற செயல் இல்லையா ? இந்த “நாவினால் சுட்ட வடு” எந்த மருந்தாலும் ஆற்ற முடியாத காயம் இல்லையா ?

இதை வசதியாக மறந்துவிட்ட த.மு.மு.க ஜவாஹருல்லாஹ் போன்றவர்கள் இன்றைக்கு முஸ்லீம் பெருமக்கள் தங்கள் பின்னால் அணிவகுக்கிறார்கள் என்றும், திரு.கலைஞருக்கு வாக்களிப்பர் என்றும் கூறுகின்ற பேச்சு மக்களை ஏமாற்றுகின்ற செயல் இல்லையா ?

இங்கே பிறிதொரு சம்பவத்தையும் சொல்லியாக வேண்டும். மேற்ச்சொன்ன பிரச்சினைகளோடு திரு.கலைஞர் அவர்களை முஸ்லீபெருமக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு ஒன்றோடு சந்தித்தபோது

” என்னய்யா, சும்மா பாக்க வந்து இருக்கீங்க..செண்டு பாட்டில், பிரியாணி எதாவது கொண்டு வரலாம் இல்ல..மனு குடுக்கறாங்களாம் மனு..” என்று அடித்த நக்கல் இன்று எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் ?

இதனை எனக்கு தெரிவித்த அன்பர், அப்போது முஸ்லீம் மக்கள் சிந்திய கண்ணீர் துளிகளில் ரத்த துளிகளும் இருந்தது உவமை என்றாலும் உண்மையாக இருக்குமோ என்று தோன்றியது..

வாக்களிக்குமுன் சிந்தியுங்கள்….தேர்தல் களத்தில் நாளை சந்திப்போம்…விடைபெறுகிறேன்..

நன்றி – ரவி

தனித்திரு விழித்திரு பசித்திரு…..

Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. என்னை அங்கீகரித்து இங்கு என் பதிவினை இட்ட நன்பருக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்…

  பின்னூட்டம் by செந்தழல் ரவி — ஏப்ரல் 29, 2006 @ 9:10 முப

 2. செந்தழல் ரவிக்கு,

  இவற்றையெல்லாம் தெரிந்து தான் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமுமுக, ததஜ என்று பிரியாத தமுமுக, திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போட்டு 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

  என்ன ரவியாரே! மறக்க முடியாத சம்பவத்தை முஸ்லிம்கள் அனைவரும் மறந்துவிட்டோம் ஓட்டும் போட்டோம். அதற்காகத் தான் இந்தியா முழுக்க பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

  இதைக் கண்டு உங்களுக்கு பொறாமையாக இருக்கிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

  இப்னு ஃபாத்திமா 30.04.2006

  பின்னூட்டம் by முத்துப்பேட்டை — ஏப்ரல் 30, 2006 @ 7:12 முப

 3. திரு ரவி அவர்களுக்கு,

  முஸ்லீம்களுக்கு இரு திரர்விடர் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு செய்த அனியாய அக்கிறமங்களை வசதியாக மறந்து விட்ட இரு முஸ்லீம் அமைப்பின் (TNTJ & TMMK) தலைவர்கள் இரு திரர்விடர்கட்சியினர் செய்த தவறுகளை சின்னத் தவறுகள் பெரியதவறுகள் என்று நியாயப்படுத்துவது தான் வேதனையிலும் பெரிய வேதனை.

  மாற்று மத சகோதரரான தங்களுக்கு தமிழக முஸ்லீம்களின் மீது இருக்கு அக்கறையும் ஆதங்கமும் இந்தப் பேர்வழிகளுக்கு இல்லையே!

  இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லீம்ளை விடுதலை செய்வத ற்க்காக AIADMK அரசும் ஏன் இந்த இரு முஸ்லீம் இயக்கங்களும் (TNTJ & TMMK) கூட எதுவும் செய்ய வில்லையே?

  கலைஞர் அவர்களை முஸ்லீம் பெருமக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு ஒன்றோடு சந்தித்தபோது அடித்த நக்கல்களை இந்த அளவுக்கு துல்லியமாக கனிக்க முடிந்த உங்களுக்கு சகோ. பாக்கர், சகோ. பி.ஜே மற்றும் AIADMK நிர்வாகிகளுக்கிடையே நிகழ்ந்த உரையாடல்களில் பெ….ட்…..டி………கோ…….டி, வாரியம், அரசு விளம்பரங்கள் பேர்ன்ற வார்த்தைகள் உங்கள் காதுகளில் விழாமலா போயிருக்கும்?

  வாழ்த்துக்கள்
  அ. சஜருதீன்

  பின்னூட்டம் by அ. சஜருதீன் — ஏப்ரல் 30, 2006 @ 7:18 முப

 4. அன்புள்ள ரவி,

  1996 முதல் 2001 வரை கருனாநிதி அவர் பங்குக்கு முஸ்லிம்களை அலைக்கழித்தார். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா என்ன தாங்கவா செய்தார்? அவர் செய்த அநியாயங்கள் உடனே மறந்து போகுமா?

  இந்த நிலைமையில் காங்கிரஸும் திமுகவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்பதற்காகத்தான் தற்சமயம் திமுக கூட்டணியை சட்ட மன்ற தேர்தலில் ஆதரிப்பது என்ற தெளிவான முடிவை முஸ்லிம்கள் எடுத்திருக்கிறார்கள்.

  இந்த வாய்ப்பை தவற விட்டு விடுவதற்கு தமிழக முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல.

  காயம் பட்டது உண்மைதான், அந்த காயத்தை மருந்து இட்டு ஆற்றுவதற்கு பதிலாக குத்தி கிளறி ரணமாக்கியது அதிமுக அரசு.

  ஆட்சியில் இருந்த போது முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு செவி கொடுக்காதவர் வீட்டுக்குப் போகும் வேளையில் முன்பே காலாவதியான ஆணையத்தை மறுசீரமைப்பு செய்திருப்பதாக வெறுமனே தம்மை சந்தித்த முஸ்லிம்களிடம் மாத்திரம் சொல்லியிருக்கிறார்.

  அவரது தேர்தல் அறிக்கையிலோ அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களிலோ இது வரை இது குறித்து வாய்திறக்க வில்லை. கெசட்டிலும் வெளியிடப்படவில்லை. இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களை என்ன முட்டாள்கள் என்று முதல்வர் எண்ணிக்கொண்டு இருக்கிறாரா?

  இவரை தோற்கடிப்பதன் மூலம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் முஸ்லிம்கள் தெளிவான எச்சரிக்கையை விடுக்க இருக்கிறார்கள்.

  முஸ்லிம்களை புறக்கணிப்பவர்கள் ஆட்சி பீடத்தை கனவு காணக்கூட இயலாது என்பது தான் அந்த எச்சரிக்கை.

  எனவே தான், அதிமுகவை முழுவதுமாக தோற்கடிக்க ஏதுவாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமது ஆதரவை தெரிவிதிருக்கிறார்கள்.

  இறையடியான் 30.04.2006

  பின்னூட்டம் by முத்துப்பேட்டை — ஏப்ரல் 30, 2006 @ 9:34 முப

 5. நன்றி செந்தழல் ரவி,

  இப்பதிவு சக சிறுபான்மை இன மக்களான முஸ்லிம்கள் மீதான தங்களுடைய உள்ளார்ந்த கவலையை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

  தமிழகத்தின் இரு திராவிட கட்சிகளும் தங்களுடைய ஆட்சி காலங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு துரோகம் இழைத்துள்ளனர். நீங்கள் மேற்கோள் காட்டியது போல் கருணாநிதியும், அவருடைய குடும்ப டி.வி.யும் அளவு கடந்து துரோகம் இழைத்துள்ளனர். அதை நாங்கள் மறந்திடவில்லை.

  அதே நேரம் ஜெயலலிதாவின் தவறுகளையும், அவர் முஸ்லிம் சமுதாயத்திற்கு செய்த துரோகங்களையும் கருணாநிதியுடைய துரோகத்தை முன்னிருத்தி மறப்பதற்கு முஸ்லிம் சமுதாயம் தயாராக இல்லை.

  ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டு திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.

  கருணாநிதி வழக்கம் போல தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார்.

  ஜெயலலிதாவோ வழக்கத்திற்கு மாற்றமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தரும் முதல் பனியாக ஒரு ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

  கருணாநிதியுடைய தேர்தல் அறிக்கையையும், ஜெயலலிதா அரசின் ஆணையத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஜெயலலிதாவே இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களைப் பெற தகுதியானவராக திகழ்கிறார்.

  அதனால் எதிர்வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள் என்பது நிஜமான ஒன்று. அந்த பெரும்பாலான முஸ்லிம்களின் தேர்தல் தேர்தல் நிலைப்பாடு என்பது தேர்தலோடு முடிந்தது. அவர்களை பின் தொடர்ந்து கூஜா தூக்கும் வேலையை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

  அதில் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

  விமர்சகன்.

  பின்னூட்டம் by விமர்சகன் — மே 2, 2006 @ 2:00 பிப

 6. //ஜெயலலிதாவோ வழக்கத்திற்கு மாற்றமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தரும் முதல் பனியாக ஒரு ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.//

  விமர்சகன் அவர்களே!
  த.த.ஜ.வில் சேர்ந்தால் மண்டையை கழுவி விடுவார்களா என்ன?

  ஆணையம் அமைக்க வில்லை. செத்துப்போன ஆணையத்தை ஜெ.ஜெ. ஆட்சி சாகும்போது புதுப்பித்துள்ளார்.

  தேர்லுக்குப் பின்,

  கருணாநிதி முஸ்லிம்களுக்கு மனதில் இடம் கொடுப்பார்.

  ஜெயலலிதா முஸ்லிம்களை காலில் போட்டு மிதிப்பார்.

  இவ்விருவருக்கும் இதுதான் வேறுபாடு.

  பின்னூட்டம் by இஸ்லாமிய வழிப்போக்கன் — மே 6, 2006 @ 12:09 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: