தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 14, 2006

புதிய அமைப்பு தேவை இல்லை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:23 முப
ஒவ்வொரு இயக்கமும் நல்ல நோக்கத்திற்காக தான் உருவாக்கப்பட்டன. இயக்கம் வளர்ந்தவுடன் இயக்கமா? நோக்கமா? என்னும்போது இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இது அனைத்துக்கட்சி, மத, இன அமைப்புகளுக்கும் பொருந்தும்.
ஆனால் முஸ்லிம் அமைப்புகள் தனிநபரா? இயக்கமா? என்னும்போது இயக்கத்திற்கும். இயக்கமா? சமுதாயமா? என்னும்போது சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
ஆனால் தமிழகத்தில் புதிய முஸ்லிம் அமைப்புக்கான தேவை அறவே இல்லை.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சமுதாய விழிப்புணர்வு அதிகம். அதற்குக்காரணம் தமுமுகவும், தவ்ஹீத் ஜமாத்தும் தான். தமுமுகவிற்கும், தவ்ஹீத் ஜமாத்திற்கும் மத்தியில் கடும் போட்டி நிலவினாலும், மற்ற முஸ்லிம் அமைப்புகளை விட இதன் தலைவர்கள் சமுதாய சிந்தனையும், தியாகமனப்பான்மையும் நிறைந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் காங்கிரஸ்பிரதமர் நரசிம்மராவ் “மீண்டும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் கட்டித்தரப்படும்” என உறுதிமொழி அளித்தார். அப்போது கேரளாவில் காங்கிரஸ்- முஸ்லிம்லீக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள் “காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் கொடுத்த உறுதிமொழியை உடனே நிறைவேற்ற கோரி கேரளாவில் முஸ்லிம்லீக் காங்கிரஸ்கூட்டணியிலிருந்து விலக வேண்டும் “என்றார். உடனே கேரளா முஸ்லிம்லீக்கினரின் பதவி சுகம் அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் பதவியிலிருந்து இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்களை நீக்கியது. அப்போது உதித்தது தான் இந்திய தேசிய லீக். இது போன்ற அவலநிலையைக்கண்டு மாற்றுவழி தேடி உருவானது தான்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
வெளிநாட்டில் இருந்துக்கொண்டு, வியர்வை சிந்தாமல், தமிழக முஸ்லிம் சமுதாய வரலாறு ஏதும் அறியாமல், உளவுத்துறை, காவல்துறை நடைமுறை ஏதும் அறியாமல், தமிழகத்தில் மக்கள்பலம் ஏதும் இல்லாமல், தினமும் நூறு மின்னஞ்சல் அனுப்புவதால், வலைதளத்தில் நான்கு அமைப்பினரை ஒரே தளத்தில் எழுத வைத்ததற்காக பந்தல்மேடைகாரர், மைக்செட்காரர்கள் கட்சி ஆரம்பிப்பதைப்போல் அமைப்பு ஆரம்பிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

தமுமுக-தவ்ஹீத் ஜமாத் தலைவர்களின் வளர்ச்சி நேற்று விதை தூவி இன்று அறுவடை செய்வது போல் அல்ல. எவ்வளவு இழப்புகள், எவ்வளவு மனஉளைச்சல்கள் அத்தனையும் தாண்டித்தான் சமுதாயத்தை அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இன்று அவர்களில் சிலரிடம் தான் என்ற அகந்தை மேலோங்கியிருக்கலாம். ஆனால் பத்தாண்டுகள் அவர்கள் ஆற்றிய பணி கள்ளம் கபடமில்லாத தூய்மையானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால்தான் இன்று இடஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்திற்கு இந்தியாவிலேயே இவர்கள் மட்டுமே களத்தில் உள்ளார்கள். மத்திய அரசே இவர்களின் குரலுக்குத்தான் செவி சாய்க்கிறது.

Advertisements

2 பின்னூட்டங்கள் »

  1. //ஒவ்வொரு இயக்கமும் நல்ல நோக்கத்திற்காக தான் உருவாக்கப்பட்டன. இயக்கம் வளர்ந்தவுடன் இயக்கமா? நோக்கமா? என்னும்போது இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இது அனைத்துக்கட்சி, மத, இன அமைப்புகளுக்கும் பொருந்தும்.

    ஆனால் முஸ்லிம் அமைப்புகள் தனிநபரா? இயக்கமா? என்னும்போது இயக்கத்திற்கும். இயக்கமா? சமுதாயமா? என்னும்போது சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்//

    இயக்கம் வளர்ந்தவுடன் தனது நோக்கத்தை மாற்றிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை புறக்கணிப்பதுதான் அறிவுடைமை. இயக்கங்கள் நோக்கங்களை மாற்றிக் கொண்டுவிட்ட பிறகும் அவர்களை பின் தொடர்வது சமுதாயத்திற்கு மிகப்பெரிய பின்னடைவையே அது ஏற்படுத்தும். தனிநபர்கள் சத்திய அழைப்புப் பணியையும், சமுதாயப்பணியையும் திறம்பட செய்பவர்களாக இருந்தால் அவர்களை கொண்டு அமைப்பை வலுப்படுத்திக் கொள்வதுதான் சிறந்த செயலாக இருக்கும்.

    //ஆனால் தமிழகத்தில் புதிய முஸ்லிம் அமைப்புக்கான தேவை அறவே இல்லை//

    1995க்கு முன்பும் தமிழகத்தில் இது போன்ற கருத்து பல முஸ்லிம் கட்சியினரால் சொல்லப்பட்டது என்பதை நாம் நினைவு கூர்ந்தால் நாம் இதில் முரண்படுவதை புரிந்து கொள்ளலாம்.

    //இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சமுதாய விழிப்புணர்வு அதிகம். அதற்குக்காரணம் தமுமுகவும், தவ்ஹீத் ஜமாத்தும் தான். தமுமுகவிற்கும், தவ்ஹீத் ஜமாத்திற்கும் மத்தியில் கடும் போட்டி நிலவினாலும், மற்ற முஸ்லிம் அமைப்புகளை விட இதன் தலைவர்கள் சமுதாய சிந்தனையும், தியாகமனப்பான்மையும் நிறைந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது//

    நிறைய பேர் இதை மறுக்கிறார்கள். உதாரணம் கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கண்ட அமைப்புக்கள் நடந்து கொண்ட விதம். தங்களுடைய சுயநலனுக்காக சமுதாயத்தை சீரழிக்கிறார்கள் என்று இந்த இரு அமைப்பையும் சாராதவர்கள் இந்த இரு அமைப்பை குறித்து விமர்சித்திருக்கிறார்கள். இந்த விமர்சனமும் தவறுதான். நோக்கத்தை விட்டுவிட்டு இயக்கத்தை மட்டுமே பற்றி பிடித்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த விமர்சனம் பொருந்தும்.

    //பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் காங்கிரஸ்பிரதமர் நரசிம்மராவ் ‘மீண்டும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் கட்டித்தரப்படும்’ என உறுதிமொழி அளித்தார். அப்போது கேரளாவில் காங்கிரஸ்- முஸ்லிம்லீக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள் ‘காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் கொடுத்த உறுதிமொழியை உடனே நிறைவேற்ற கோரி கேரளாவில் முஸ்லிம்லீக் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் ‘என்றார். உடனே கேரளா முஸ்லிம் லீக்கினரின் பதவி சுகம் அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் பதவியிலிருந்து இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்களை நீக்கியது. அப்போது உதித்தது தான் இந்திய தேசிய லீக். இது போன்ற அவலநிலையைக்கண்டு மாற்றுவழி தேடி உருவானது தான்
    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்//

    சுலைமான் சேட் அவர்கள், உறுதிமொழி அளித்துவிட்டு அதை செய்யாத நரசிம்மராவை கண்டிக்க வேண்டிய முறையில் கண்டித்ததனால் தான் இந்திய தேசிய லீக்கை உறுவாக்கினார்கள். அப்படி உறுவாக்கிய போதும் சில முஸ்லிம்களால் அவர் விமர்சிக்கப்பட்டார். அவருடைய தெளிவான சமுதாயப் பார்வைக்கு சில முஸ்லிம்கள் கலங்கம் கற்பித்தனர் என்பதை நாம் இப்பொழுது நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். ஒரு அமைப்போ, இயக்கமோ தனது நோக்கத்தை விட்டு மாறும்போது புது அமைப்புக்கள் உறுவாது தவிர்க்க முடியாதது என்பதையும் மேற்கண்ட குறிப்பீடுகள் விளக்குகிறது.

    //வெளிநாட்டில் இருந்துக்கொண்டு, வியர்வை சிந்தாமல், தமிழக முஸ்லிம் சமுதாய வரலாறு ஏதும் அறியாமல், உளவுத்துறை, காவல்துறை நடைமுறை ஏதும் அறியாமல், தமிழகத்தில் மக்கள்பலம் ஏதும் இல்லாமல், தினமும் நூறு மின்னஞ்சல் அனுப்புவதால், வலைதளத்தில் நான்கு அமைப்பினரை ஒரே தளத்தில் எழுத வைத்ததற்காக பந்தல்மேடைகாரர், மைக்செட்காரர்கள் கட்சி ஆரம்பிப்பதைப்போல் அமைப்பு ஆரம்பிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை//

    இது போன்ற தவறுகளை செய்யக்கூடிய சூழ்நிலையை உறுவாக்கியவர்கள் யார் என்பதை தெளிவாக அறிந்து அவர்களை களை எடுக்காமல் இப்படிச் சொல்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

    //தமுமுக-தவ்ஹீத் ஜமாத் தலைவர்களின் வளர்ச்சி நேற்று விதை தூவி இன்று அறுவடை செய்வது போல் அல்ல. எவ்வளவு இழப்புகள், எவ்வளவு மனஉளைச்சல்கள் அத்தனையும் தாண்டித்தான் சமுதாயத்தை அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இன்று அவர்களில் சிலரிடம் தான் என்ற அகந்தை மேலோங்கியிருக்கலாம்//

    இறைவனிடம் எதிர்பார்க்கும் சிஃபத்துக்களை மனிதர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. எல்லா மனிதர்களிடமும் தான் என்கிற கர்வம் குடிகொண்டிருக்கிறது. அதிலும் தான் ஆதரித்தவர்கள் ஜெயித்து விட்டாலோ, இவர்களுடைய ஆனவத்திற்கு எல்லையே இல்லாமல் இருக்கிறது.

    //ஆனால் பத்தாண்டுகள் அவர்கள் ஆற்றிய பணி கள்ளம் கபடமில்லாத தூய்மையானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால்தான் இன்று இடஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்திற்கு இந்தியாவிலேயே இவர்கள் மட்டுமே களத்தில் உள்ளார்கள். மத்திய அரசே இவர்களின் குரலுக்குத்தான் செவி சாய்க்கிறது//

    சில நேரங்களில் மத்திய, மாநில அரசுகளின் கைப்பாவையாக, அவர்களை எல்லை கடந்து புகழ்வதும், பாராட்டுவதுமாக சில அரசியல் கட்சியினர் இருந்து வருகின்றனர்.

    //புதிய அமைப்பு தேவை இல்லை//

    அமைப்பு என்ற அடிப்படையில் பார்க்காமல், கொள்கை, நோக்கம் என்று பார்த்து அதை மீறுபவர்களை புறக்கணித்து அதே கொள்கையில் நீடிப்பதுதான் சரியான சிந்தனையாக இருக்க முடியும்.

    ஆகவே, புதிய கொள்கை தேவை இல்லை, புதிய (சுயநலம் கலந்த)நோக்கம் தேவை இல்லை.

    இப்னு முஹம்மத்
    ibinmohammed@gmail.com

    பின்னூட்டம் by இப்னு முஹம்மத் — ஜூன் 14, 2006 @ 11:11 முப

  2. ASSALAMU ALAIKKUM ANBIRKINIYA SAKOTHARARKALUKKU PUTREESALPOLA VEETHIKKU ORU ISLAMIYA AMAIPPU IRUNTHUVARUM IVVELAIYIL PUTHITHAKA ORU AMAIPPU THEVAIYILLAI ENBATHEI EN KARUTHU TAMILNADDAI POLA VERU ENGUME IVVALAVU AMAIPPUKAL IRUPPATHAKA NAAN ARIYAVILLAI IRUNTHAPOTHUM AVVAMAIPPUKALALEYE INTHA SAMUTHAYAM EVVITHA AATHAYAMUM ADAIYAVILLAI APPADI IRUKKAIYIL INNUM ORU AMAIPPU ITHAIKANDU AZHUVATHA? SIRIPPATHA? ENTRUKOODA VILANGAVILLAI INTHA SAMUTHAYAM UNMAIYILEYE ELUCHIPERA VENDUM ENA NINAIPPAVARKAL PUTHIYA AMIPPU ATHU ITHUVENA ETHUVUM PITHATRAMAL IRUNTHALE POTHUMAANATHU INTHA SAMUTHAYAM AMAIPPUKALIN PEYARAL PILAVUPATTU KIDAPPATHALTHAN SUTHANTHIRA INDIAVIL ELLORUM EVERAST ERIVITTAPOTHUMKOODA THARAIYIL NINTRUKONDU KAIYIRAI ETHIRPARTHU KONDIRUKKIRATHU IRUKKAKOODIYA AMAIPPUKALIL SAMUTHAYANALANUKKAHA PORADUBAVARKALAI AATHARIPPATHARKKU YAARUMILLAI INTHA SAMUTHAYA NALANIRKKAHA ORU THURUMBAIYUM EDUKKATHAVARKAL AC ARAIKALIL AMARNTHUKONDU PENAKIDAITHUVITTATHU ENBATHARKKAHA PUTHIYA METHAVIKALAHA AVATHARAM EDUTHU VIDUKIRARKAL AVARKALAI PONTRAVARKALAL MATRU SAMUTHAYA MAKKAL NAMMAI PARTHU ELLINAGAIYADUVATHAI ENNAVENTRU URAIPPATHU AAKAVE PUTHIYA AMAIPPU KAANA THUDIKKUM SAKOTHARARKALUKKU NAAN KOORIKOLVATHELLAM UNGALIN SAMOOKA AKKARAI PARATTUTHALUKKU URIYATHU ATHEI VELAIYIL UNGAL UZHAIPPU VILALUKKU IRAITHA NEERAKA VEENAAKAKOODATHU IRUKINTRA AMAIPPUKALIL ETHAI NALLA AMAIPPAKA NEENGAL KARUTHUKIREERKALO ATHANAI THERNTHEDUTHU AVVAMAIPPIL INAINTHU SEYALBATUNGAL ATHUVE UNGALIN ENNANGALUKKU INSHAALLAH VETRIYAI THARUM. WASSALAM

    பின்னூட்டம் by vengaiibrahim — ஜூன் 14, 2006 @ 12:11 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: