தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 22, 2006

ஈழத்தமிழரும் கோவை சிறைவாசிகளும்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:42 முப
ஈழத்தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த போது அவர்களுக்கு தமிழக மக்கள் வாரி வழங்கினர். பல்வேறு போராளிக் குழுக்களுக்கும் தங்கள் ஆதரவை அளித்து அள்ளி வழங்கினர். பிறகு ஈழத்தமிழர்களுக்கு பல ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் வாய்ப்பு கிடைத்த போது, அவர்களுக்கு தமிழகத்தின் நிதியாதரவு முக்கியமாகப் படவில்லை. பழைய உதவிகளையும் மறந்து நன்றி கொன்றார்கள். இப்போது கோவை சிறைவாசிகளுக்கு பல முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம்களும் பல உதவிகளையும் செய்தபோதும் எதுவுமே செய்யவில்லை என சிறைவாசிகளுக்காக அறக்கட்டளை நடத்தும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல முஸ்லிம் அமைப்புகளும் பொது மக்களிடம் கணக்கு காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி பொது மக்களிடம் தங்கள் வரவு செலவு கணக்கை காண்பித்து உள்ளன. ஆனால், கோவை சிறைவாசிகளுக்காக அறக்கட்டளை நடத்தும் வியாபாரிகள் யாரிடம் கணக்கு காட்டியுள்ளனர்? இவர்கள் மீது எனக்கு முன்னரே சந்தேகம் இருந்தாலும், கேப்டன் அமீர் அலி, ஆற்காடு இளவரசர் முஹமது அலி ஆகியோர் இணைந்து கோவை முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளுக்கும் ஓர் அறக்கட்டளை தொடங்கியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது முஸ்லிம் அமைப்புகளின் மீது நாம் வைக்கும் இயக்க வெறி என்ற குற்றச்சாட்டை விட கடுமையானது. அவர்களோ இயக்க வெறியில் செயல்படுகின்றனர் என்றால், கோவை சிறைவாசிகளுக்காக அறக்கட்டளை நடத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில் தங்கப்பா என்ற பெயரில் செயல் படுபவர் ஒரு பித்தளை என்பதைக் காட்டியுள்ளார். தங்களுக்காக உதவி செய்தவர்களை எதுவுமே செய்ய வில்லை எனக் கூறுவதும், தீவிரப் போக்குடைய அமைப்புகளை மட்டும் புகழ்ந்து பேட்டி தருவதும், இவர்களை நேர்மையற்றாவர்கள் என்பதைக் காட்டுகிறது. கோவை முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை. ஆனால், அவர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்களின் ஃபாசிசச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதும் நம் கடமை தான் . ஈழத் தமிழர்களுக்காக தமிழகத் தமிழர்கள் எப்படி தங்கள் அமைதியைக் கெடுத்துக் கொள்ள முடியாதோ, அது போல கோவை சிறைவாசிகளுக்காக தமிழ் நாடு முஸ்லிம்களும் தங்கள் அமைதியைக் கெடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
http://antifacismmovement.blogspot.com/2006/06/blog-post_20.html
Advertisements

2 பின்னூட்டங்கள் »

 1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  அன்பின் வாசகர்களே தாங்கள் இந்த பதிவைப்பார்த்து குழப்பமடையக்கூடாது என்பதற்காக நான் இங்கு குறிப்பு எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

  தமிழ்முஸ்லிம் என்ற பெயரில் இங்கு சில பதிவுகள் பதியப்பட்டுள்ளன அதைப்பார்த்து பல வாசகர்கள் எனக்கு தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு இந்த பதிவுகளை இடுவது http://www.tamilmuslim.com அல்லது தமிழ் முஸ்லிம் மன்றத்திலிருந்தா அல்லது பஸ்லுல் இலாஹியா என்று கேட்கிறார்கள்.

  இப்போது இந்த விடயம் மிகவும் சீரியஸ் ஆக போயிருப்பதால் சிறைவாசிகளை ஃபாசிஸ்ட்டுகளாக சித்தரித்து எழுதி அவர்களின் மொத்த உணர்வுகளையும் புண்படுத்தியிருப்பதால் இதைப்பற்றிய உண்மையை நான் இங்கு எழுத வேண்டியுள்ளது.

  antifacist@gmail.com என்ற ஐடி யிலிருந்து உறுப்பினர் அழைப்பு கேட்டு விண்ணப்பித்தார்கள். அதை நான் நிராகரித்து விட்டதால் அதே ஐடி யோடு http://antifacismmovement.blogspot.com என்று ஒரு பிளாக் ஓபன் செய்து அதிலிருந்து இந்த செய்தியை “சத்திய மேவ ஜயதே??-பஸ்லுல் இலாஹி” என்ற பதிவில் மறுமொழியாக பதிவு செய்தார்கள். அதையும் நான் அனுமதிக்காததால் இப்போது இங்கு உறுப்பினராக அனுமதிக்கப்பட்டிருக்கும் “தமிழ்முஸ்லிம்” என்ற ஐடி யில் இருந்து நேரடியாக போஸ்ட் செய்து விட்டார்கள். (TNTJ Faisal’s IP details) ஆகவே தற்போது இந்த ஆன்டி ஃபேசிஸ்ட் என்ற பெயரில் செயல்படுவது யார் என்ற உண்மையை உங்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்ப்பட்டுள்ளது.

  safaisal@mubarrad.com என்ற முகவரியில் இருந்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் நிர்வாகத்தில் இருக்கும் ஃபைஸல் என்பவர் சவுதி அரேபியா ரியாத் நகரில் இருந்து என்னை தொடர்பு கொன்டு ததஜ சார்பில் எழுதுவதற்காக அவருக்கு ஒரு உறுப்பினர் அழைப்பு அனுப்பவேண்டும் என்று கோரினார். ஆகவே safaisal@mubarrad.com என்ற முகவரிக்கு நாமும் ஓர் அழைப்பை அனுப்பினோம் அதன் மூலம் உருவாக்கப்பட்டதுதான் இந்த “தமிழ்முஸ்லிம்” என்ற வலைப்பதிவும் உறுப்பினர் ஐடியும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த ஃபைஸல் என்பவரால் உண்டாக்கப்பட்டதாகும்.

  ஆக இந்த “தமிழ்முஸ்லிம்” மற்றும் antifacist என்ற பெயர்களிள் சிறைவாசிகளுக்கு எதிராக செயல்படுவது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் ரியாத் நிர்வாகிகளில் ஒருவரே என்பதை இதன் மூலம் வாசகர்களுக்கு அறியத்தருகின்றேன். பிரச்சினைக்குறிய அந்த உறுப்பினர் நமது கூட்டு வலைப்பதிவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

  எனவே, பஸ்லுல் இலாஹியோ அல்லது தமிழ் முஸ்லிம் மன்றம், தமிழ்முஸ்லிம்.காம் போன்ற மற்ற இணையச் சகோதரர்களுக்கோ மேற்கண்ட பதிவுடன் தொடர்பில்லை என்பதையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

  நன்றி
  முகவைத்தமிழன்

  பின்னூட்டம் by முகவைத்தமிழன் — ஜூன் 22, 2006 @ 11:29 முப

 2. //தீவிரப் போக்குடைய அமைப்புகளை மட்டும் புகழ்ந்து பேட்டி தருவதும், இவர்களை நேர்மையற்றாவர்கள் என்பதைக் காட்டுகிறது. //

  சமீபத்தில் இதே வலைப்பதிவில், காதர் முகைதீன் தலைமையில் அமைந்த முஸ்லிம் லீக்-ஐ கோவை சிறைவாசிகள் சார்பாக புகழ்ந்து சொல்லியுள்ளார்கள். ததஜ -வினரின் பார்வையில் தீவிர போக்குடையவர்கள் முஸ்லிம் லீக் என்றால், இப்னு மரியம் அவர்கள் குறிப்பிட்டதுபோல் தாதா வேலைகள் செய்தவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்றும் அறியத்தரவும்.

  //கோவை முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை.//

  பதிவில் உள்ளே உள்ள விஷயம் மேற்கண்ட விஷயத்துடன் சற்றும் ஒட்டாமலேயே செல்கிறது.

  ததஜ வின் தலைவர் பி.ஜே. அவர்கள், தங்களின் இயக்கத்தினர்களுடன் ஒருமாதிரியும் மற்றவர்களுடன் ஒரு மாதிரியும் போடும் வேசம் முழுவதுமாக கலையும் நேரம் வந்துவிட்டது என்பதைத்தான், ஃபைசல் என்ற ததஜவின் ரியாத் நிர்வாகி மூலம் மேற்கண்ட பதிவாக வெளிப்பட்டுள்ளது.

  பி.ஜே.யானிகள் இனிமேலாவது, ததஜ என்ற அமைப்பு கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக பாடுபடுகிறது என்று சொல்லாமல் இருந்தால் சரி.

  கோவை முஸ்லிம் சிறைவாசிகளும், தற்போது இலங்கை தமிழர்களும் பட்டுக்கொண்டிருக்கும் அளப்பெரிய துயர நேரத்தில்கூட தங்களின் வக்கிர புத்தியை வெளிப்படுத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினரைப் பற்றி என்னத்தச் சொல்ல.

  தேர்தலுக்கு முன்பு முதல்வருடன் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து சம்சுதீன் காசிமி அவர்கள் பி.ஜே.வின் மீது வைத்த குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டது.

  பின்னூட்டம் by அபூ முஹம்மத் — ஜூன் 22, 2006 @ 1:48 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: