தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 25, 2006

தமுமுக-வே உனது கொள்கை என்ன?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:28 பிப

பிஜே-யை அவருடைய அரசியல் (சமூக) மற்றும் மார்க்க விரோத நடவடிக்கைகளை கடுமையான முறையில் விமர்சனம் செய்து வரும் தமுமுக-வின் (குறிப்பாக கிழக்கு மாகாண) கண்மணிகளே உங்களிடம் ஒரு கேள்வி.

நீங்கள் பிஜே-யை எதிர்ப்பதற்க்கு காரணம் அவருடைய மார்க்க விரோத நடவடிக்கைகளா?

அல்லது நீங்கள் வீற்றிருக்கும் கட்டுகோப்பான! தலைமையையும், உங்கள் இயக்கத்தையும் மிக கேவலமான முறையில் விமர்ச்சனம் செய்கின்றார் என்பதனாலா?

ஏன் பிஜேவை எதிர்க்கின்றீர்கள்,

இரண்டாவது வகைக்காக நீங்கள் பிஜே-யை எதிர்ப்பீர்கள் என்றால் உங்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் முதல் வகைகாக எதிர்ப்பீர்கள் என்றால் தொடர்ந்து படிங்கள்..

பிஜே-யின் மார்க்க கொள்கைகளை 80 சதவீதத்திற்க்கும் அதிகமானதை தன்னகத்தே கொண்டு அதனை மக்கள் மத்தியில் பரப்பிவரும் பரங்கிபேட்டை கு. நிஜாமுதீன் என்ற ஜி.என் என்பவரை தமுமுக-வின் மேடையில் ஏற்றி அவருடைய நச்சு கருத்துக்களை மக்கள் மத்தில் எடுத்து செல்கின்றீர்களே அதற்கு காரணமென்ன? பிஜே-யை மார்க்க விஷயத்திற்காக எதிர்ப்பீர்கள் என்றால் இவரை எப்படி ஆதரிப்பீர்கள்? இவர் தமுமுக-வின் உறுப்பினர் கார்டை புதிப்பித்துவிட்டதினாலா?

பிஜே ஸஹாபாக்களை தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றார் என்றால் இவர் ஒரு படி மேலே சென்று அல்லாஹ்-வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை விமர்சனம் செய்கின்றார், எப்படியென்றால்..

சமீபத்தில் கோபார் தமுமுக கிளையின் சார்பாக கடந்த 05-05-2006 வெள்ளிக்கிழமையன்று ஒரு கூட்டம் நடைபெற்றது அதில் கு.நிஜாமுதீனுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘இங்கு ஒற்றுமையும் அங்கு தனிமையும்’

அவரின் உரையில், இவ்வுலக ஒற்றுமையினால் மறுமையில் எந்த பயனுமில்லை என உதாரணத்துடன் கூற வருகிறார். அதாவது,

தமிழ்நாட்டில் அனைத்து முஸ்லிம்களும் தமுமுக-வில் ஐக்கியம் ஆகிவிடுகிடுகிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடுகின்றது அந்த அளவிற்க்கு தமுமுக வலுவாகிவிட்டது. தமுமுக இந்த பூமியில் செய்த சாதனைகளை வைத்துக்கொண்டு, இந்த ஓற்றுமையை வைத்துக்கொண்டு மறுமையில் ஏதாவது சாதிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது..

என்று கூறிவிட்டு புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணம் என்று கூறுகின்றேன் என்ற பீடிகையுடன் தனது நச்சுக்கருத்தை அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி ஒரு அவதூறை சுமற்றுக்கின்றார். எப்படியென்றால் அதாவது,

நபிமார்கள் இருக்கின்றார்கள், ரசூல் (ஸல்) அவர்கள் சமூகத்தை ஐக்கியபடுத்தினார்கள், ஒற்றுமையையும் ஏற்படுத்தினார்கள் இது எஙகே மதினாவில், ஆட்சி கைக்கு வருகின்றது, நிறைய இராணுவ வீரர்கள் வந்தார்கள், நிறைய போர்கள் நடைபெற்றன, எல்லாம் சரி எல்லாம் நமக்கு தெரியும்,

இதுவெல்லாம் என்ன காரணம் மறுமையில் போய் காட்டுவதற்காகவா? இந்த உலகத்திற்கு மட்டும் தான் இது ‘சூட்’ ஆகும், ஆட்சி, அதிகாரம் இதுவெல்லாமும் இந்த உலகத்தின் சாதனைகளுக்கு மட்டும் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐக்கியத்ததை ஏற்படுத்தினார்கள் மக்கள் மத்தியில், இதை வைத்து மறுமையில் எதுவொன்றும் செய்யமுடியாது இதை நான் சொல்ல வில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்’..

என்று கூறி ஒரு நவீன வியாக்கியானத்ததை மக்கள் மத்தியில் இந்த நச்சு கருத்தை வைக்கின்றார் (இது கோபர் தமுமுக வெளியிட்டுள்ள சிடியில் 31 நிமிடம் முதல் 33:20 வரை உள்ளது)

வேடிக்கை என்னவென்றால் இந்த கூட்டத்தில் ஒரு மௌலவி கலந்துக்கொண்டுள்ளார், இந்த உரைநிகழ்த்தும்போது தமுமுக-வின் கிழக்கு மாகாண நிர்வாகி ஒருவர் மேடையில் உள்ளார். எவருமே கண்டிக்கவில்லை என்பது தான் வேதனை தரக்கூடியதாக உள்ளது.

இப்போது கூறுங்கள் தமுமுகவின் கண்மணிகளே! இவரை ஏன் ஆதரிக்கின்றீர்கள் என்று, இந்த நச்சு கருத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது உங்களுக்கு பாவமாகத் தெரியவில்லையா? இதுவரை இந்த இந்த சிடியை காப்பி எடுத்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுக்கு விட்டு திரியும் தமுமுகவினரே உங்களுக்கு இதன் அர்த்தம் புரியவில்லையா? டென்மார்க் பத்திரிக்கையாளன் நபிகளார் (ஸல்) அவர்களைப்பற்றி கேலிசித்திரம் வரைந்தால் போராட்டம் நடந்தும் நீங்கள் உங்கள் இயக்கத்தின் உறுப்பினர் கார்டை புதுபித்த ஒருவர் நபிகளார் (ஸல்) அவர்களைப்பற்றி கேவலமாக பேசினால் நீங்கள் அவருடைய அந்த பேச்சை தெருதெருவாக எடுத்துச்சென்று கொடுப்பீர்களோ?

இது விஷயமாக கிழக்கு மாகாண தமுமுக தலைமை நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டபோது, கிடைத்த தகவல் நாங்கள் தமுமுகவிற்கு மட்டும் தான் மட்டும்தான் பயன் படுத்துவோம் மார்க்க விஷயத்திற்க்கு பயன் படுத்தமாட்டோம் என்றார் (ஆனால் மாகாண தலைவர் மட்டும் இவரை எந்த கூட்டத்திலும் பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்) மொத்தம் உள்ள 55 நிமிட சிடியில் 2 நிமிடம் டைட்டில்ஸ். மீதமுள்ளதில் 4 இடத்தில் மார்க்கத்தைப் பற்றி பேசப்படுகின்றது இவரால்.

வாசகர்கள் கவனத்திற்கு – கு. நிஜாமுதீன் என்பவருடைய கோணல் கொள்கைகள் சில..

– குர்ஆனில் மாற்றப்பட்ட சட்டங்கள் இல்லை, உதாரணமாக சாராயம் குடிக்கக் கூடிய முஸ்லிம் ஒருவன் ஒரேயடியாக சாரயத்தினை நிறுத்த முடியாது, எனவே 10 கிளாஸ் சாரயம் குடிக்க குடியவன் 8, 6 கிளாஸ்கள் என்று படிப்படியாக குறைத்துகொள்ளவேண்டும். குறைந்த நிலையில் சாரயம் குடித்துக்கொண்டு (தொழுதாலும்) இருக்கலாம் பிரச்சனையில்லை.

– ஈஸா (அலை) அவர்கள் மரியம் (அலை) அவர்களின் சதைத் துண்டு – குளோனிங் என்று கதை கதையாக அளந்துவிடுவது (4:171 என்ற குர்ஆன் வசனத்திற்க்கு முரணானது.)

இதுபோன்று இன்னும் பல.. தேவைப்பட்டால் வெளியிடுவோம்.

தமுமுக-வினருக்கு கடந்த கால சில வரலாற்று நிகழ்வுகள்..

1999ம் ஆண்டு கு. நிஜாமுதீன் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக அப்போதே தமிழ் தாஃவா கமிட்டின் ஆலோசனைக்குழுவினர்கள் எடுத்த நடவடிக்கைகளை திரும்பி பாருங்கள். கு. நிஜாமுதீன் தனது பழைய தவறான கொள்கையிலிருந்து தவ்பா செய்து மீண்டுவிட்டாரா? அதனை எழுத்துபூர்வமாக கு. நிஜாமூத்தீனிடமிருந்து வாங்கிவிட்டீர்களா?

22-12-1999 அன்று கு. நிஜாமுதீன் ஆதரவாளர்களுக்கு தமுமுக கிழக்கு மாகாண தலைவர் மரியாதைக்குரிய சகோ. ஷஃபியுல்லாகான் அவர்கள் எமுதிய தொலைநகல் (Fax) கடிதத்திலிருந்து சில பகுதிகள் (இதன் நகல் தமுமுகவின் தலைமைக்கு அனுப்பப்பட்டிருந்தது)

(பக்கம்-2 வரிசை எண்-3 முதல் மற்றும் இரண்டாவது பாராக்களிலிருந்து சில பகுதிகள்)

சகோ. கு. நிஜாமுதீன் (பரங்கிபேட்டை) பற்றி அன்றைய தினம் நான் எனது அனுமானத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தவில்லை. மாறாக அதனை நிரூபிப்பதற்கு அவரை அழைத்துக் கொண்டு என்னுடன் யாரும் வரத்தயாரானால் எந்த நபரிடம் அவர் அதுபோல் பேசினாரோ அந்த நபரிடமே சென்று மெய்ப்பிப்பதாகச் சொன்னேன். ஆனால் இன்று வரை அதற்கு யாரும் தயாராக வரவில்லை. இந்நிலையில்.. .. ..

தவிர தமுமுக வளர்ச்சி பணிகளில் அதிக ஆர்வமுள்ளவராக தாங்கள் சித்தரிக்கும் சகோ. கு. நிஜாமுதீன், தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை ராஜினமாச் செய்ததும் அதன் பின் கடந்த வருடங்களில் உறுப்பினர் அட்டையும் எடுக்காமல் தமுமுக-வுக்கான எந்தவிதமான அமைப்பு ரீதியான ஓத்துழைப்பும் ஈடுபாட்டையும் காட்டாமல் ஒதுங்கி இருந்தது ஏன்?…….. ஆனால் சமீப காலமாக அவர் தமுமுக-வின் மீது சற்று அக்கறை காட்டுவதாக நாம் அறிய வருவதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை?

தமுமுக தலைமைக்கு….

மேலும் 2004 ஆகஸ்ட் மாதம் 8 தேதி புதுக்கோட்டை பொதுகுழு தீர்மானத்தில் திருத்தியமைக்கப்பட்ட விதியின் படி தமுமுக குர்ஆன் மற்றும் ஹதீஸ் வழிகாட்டின் படி செயல்படும் என்ற தீர்மானத்திற்கு அர்த்தம் என்ன? அது தற்போது பி.ஜே விளங்கியதுபோல உள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் கொள்கையா? கு. நிஜாமூத்தினை மேடையில் ஏற்றும் தமுமுகவினர் விளக்குவார்களா?

(இந்த புதுக்கோட்டை பொதுகுழு தீர்மானங்கள் தமுமுக-வின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் இல்லை ஏனைய பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளன என்பதனை கவனிக்கவும்)

பரங்கிப்பேட்டை கு. நிஜாமூத்தீன் – முரண்பாடுகளின் மொத்த உருவம்

ஒரே நாளில், ஒரே மேடையில், ஒரே சொற்பொழிவில் தனக்குத் தானே முரண்படும் பரங்கிப்பேட்டை கு.நிஜாமுதீனைப் பாருங்கள்.

மறுமைக்காக ஓற்றுமை:

ஒற்றுமையைப்பற்றி பேசுகின்றபோது,

…..SMS கலாச்சாரத்தை நான் சொல்வேன் இன்னிக்கு, ஒரு பெண் விரும்பாமல் அவளுக்கு எவனையாவது மிஸ் கால் பண்ண சொல்லுங்களே பார்ப்போம் தமுமுக கால்பதித்துள்ள அந்த ஊர்களில் தமுமுக வலுவாக இருக்க கூடிய அந்த இடங்களிலே ஒரு பெண் விரும்பாமல் மிஸ் கால் பண்ண சொல்லுங்கள் பார்ப்போம். சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் அருமை சகோரதரர்களே அந்த அளவிற்க்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முஸ்லிம்களுடைய கண்ணியத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு என்ன காரணம் 4 எம்பி சீட வாங்கவேண்டுமென்றா? அஞ்சு பத்து எம்எல்ஏ சீட்வாங்கி பைக்குள் வைத்துகொள்ள வேண்டுமென பண்ணுகின்றதா? இல்லை. இங்கு வந்திருக்ககூடிய நீங்கள் முதல் அங்கு களத்தில் உள்ளவர்கள் வரை எல்லோரும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் கூலி வாங்கவேண்டுமென்பதற்காவே.. (Click here to play RealPlayer Video Clip)

இந்த ஓற்றுமையை வைத்து மறுமையில் ஒன்றும் செய்ய முடியாது:

…அதாவது தமிழ்நாட்டில் அனைத்து முஸ்லிம்களும் தமுமுக-வில் ஐக்கியம் ஆகிவிடுகின்றனர்கள் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடுகின்றது அந்த அளவிற்கு தமுமுக வலுவாகிவிட்டது. தமுமுக இந்த பூமியில் செய்த சாதனைகளை வைத்துக்கொண்டு, இந்த ஒற்றுமையை வைத்துக்கொண்டு மறுமையில் ஏதாவது சாதிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது….. (Click here to play RealPlayer Video Clip)

தமுமுக-வின் கண்மணிகளே! சுய சிந்தனையோடுதான் இந்த சி.டியை மற்றவர்களுக்கு பரப்புகிறீர்களா?

தமுமுக வை நன்றாக தூக்கி பேசும்போது ஒரு கட்டத்தில் “ஜவாஹிருல்லாஹ்வுக்கு ஒழுங்காக பேசத்தெரியுமாங்க?” என்று கேட்கிறார். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வரலாற்று விஷயங்களில் (குறிப்பாக பாபர் மசூதி, ஆர்.எஸ்.எஸ். காரர்களுடனான நேருக்கு நேர் நிகழ்ச்சி போன்றவற்றில்) ஆதாரங்களை நுனி விரலில் வைத்துக்கொண்டு அற்புதமாக பேசுகிறவர். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டை கு.நிஜாமுதீன் அவர்கள், தமுமுகவினர் முன்னிலையிலேயே வைக்கிறார் என்றால், தமுமுகவினர் மிகப்பெரிய தூக்கத்தில் உள்ளார்கள் என்பதைத்தான் அது தெரிவிக்கிறது. (Click here to play RealPlayer Video Clip)

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: