தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 28, 2006

இஸ்லாத்தை ஏற்பார்களா? காரித்துப்புவார்களா?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:10 பிப
களியக்காவிலை விவாத நிகழ்ச்சிகள்..
தயவு செய்து சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தின் கோட்பாடுகளை எவ்வாறு புறிந்துக்கொள்வது என்பது குறித்து பல நூற்றாண்டுகளாகவே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..
ஆரோக்கியமான, நாகரீகமான, வரம்புக்கு உட்பட்ட அழகிய விவாதங்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

மார்க்கத்தை தூய வடிவில் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் தெரிந்து கொள்ள இத்தகைய விவாதங்கள் நடைபெற்றால் அதை வரவேற்க வேண்டும்.
ஆனால் தங்கள் தவறுகளையும், தோல்விகளையும், திசை திருப்புவதற்காகவும், ஒருவரை ஒருவர் வெற்றி பெற்று அதன் மூலம் புகழ் பெறுவதற்காகவும் விவாதத்தைப் பயன்படுத்தினால் அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதிலளிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். இப்போது இரண்டு தொலைக்காட்சிகளில் நடைபெற்று வரும் விதண்டாவாதங்களும், விவாதங்களும் ஆபாச அர்ச்சனைகளும் கவலை அளிக்கின்றன. .

இது போண்ற விவாதங்கள் பள்ளிவாசல்கள் அல்லது உள்அரங்குகளில் மட்டுமே நடைபெற வேண்டும். அவற்றை முஸ்லீம் சமுதாயம் மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் விற்பனைக்கு சிடிக்களாக வெளியிடலாம். ஆனால் பல்வேறு சமுதாயங்களும் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது. காரணம் ஒருவர் இன்னொருவரின் கருத்தின் மீது வைக்கக்கூடிய விமர்சனங்கள் இஸ்லாத்தின் மீது வைக்கக்கூடிய விமர்சனங்களாகவே மாற்று மத நண்பர்களால் புரிந்துக் கொள்ளப்படும். இதன் மூலம் இஸ்லாமும் வலஹீனமான மார்க்கம் என்ற கருத்துப் பரவவும் அபாயமுள்ளது.

கொள்கையைப் பிரச்சாரம் செய்வது வேறு. கொள்கைகளோடு மோதுவது என்பது வேறு. இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்கும் புரிதல் மாற்று சமூக மக்களுக்கு இருக்காது. முஸ்லீம்களுக்குள் மோதல் என்ற செய்திதான் வேகமாக பரவும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.இந்தியா போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டில் ‘தாவா’
எனும் அழைப்பு பணி முக்கியமானதாகும். மஸாயீல் குறித்த மோதல்கள் தொலைக்காட்சிகளில் வரும்போது அது தாவா பணியையே பாதித்துவிடும் அபாயம் உள்ளது.


கிறிஸ்தவர்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் தங்கள் கிறித்தவ இறைக்கோட்பாடுகள் குறித்து பிரச்சாரம் செய்கிறார்கள். கிறித்தவர்களிலும் உள்அரங்கில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தபோதிலும் அவர்கள் தொலைக்காட்சி பிரச்சாரங்களில் அதை எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. இவ்விஷயத்தை கிறித்தவப் பிரிவுகள் மிகவும் கவணத்துடன் கையாறுகின்றன்.

இதை முஸ்லிம்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பரந்து விரிந்த பார்வையோடு தொலைநோக்கோடு, பொறுப்புணர்வோடு இது குறித்து சிந்திக்க வேண்டும்.தொலைக்காட்சிகளில் அவரவர் சார்ந்து நிற்கும் கொள்கைகளை அழகிய முறையில் பிரச்சாரம் செய்யுங்கள். அதில் எது சரி என்பதை முஸ்லிம் சமூகம் இயல்பாகவே புரிந்துக் கொள்ளும். ஆனால் விவாதம் என்ற பெயரில் தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்பி முஸ்லிம்களை மட்டுமின்றி, முஸ்லீம் அல்லாத மக்களையும் பீதியடைய வைக்காதீர்.

இப்படி எழுதுவதன் மூலம் நான் யாரையும் குறை சொல்லவில்லை. குறைத்தும் மதிப்பிடவில்லை. நம் எல்லோரையும் விட மார்க்கம் பெரியது என்பதை யாவரும் உணர வேண்டும் என்பதே எனது நோக்கம். இது கட்டளை அல்ல. அன்பான – தாழ்மையான வேண்டுகோள்.

பேராசிரியர் எம். ஆஹமது மெய்தீன்,
சென்னை – 21
நன்றி : மக்கள் உரிமை (ஜூன் 30 – ஜூலை 06, 2006)

அன்புள்ள சகோதரர்களே! இந்த ஆக்கத்தை எந்த வித விருப்பு – வெறுப்புமில்லாமல் நடுநிலையோடு சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது சில தொலைக்காட்சிகளில் – இஸ்லாத்தைப் பரப்புவதற்காகவும் – இஸ்லாமிய கொள்கைகளைத் தெளிவு படுத்துவதற்காகவும் துவங்கப்பட்ட சில நிகழ்சிகளில், சமீபத்தில் இரு முஸ்லீம் பிரிவினருக்கிடையே நடைபெற்ற விவாதத்தை அப்படியே எடிட் செய்யாமல் – நடந்ததை அப்படியே வெளியிடுகிறோம் என்றப் பெயரில் – அந்த விவாத்தில் நடைபெற்ற சில விரும்பத்தாகாத விவாகாரங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பரப்புகின்றனர்.

தற்போது ஆரம்பக்கட்ட விவாத நிகழ்சிகள் ஒளிபரப்பப்பட்டு வரும் வேலையில் இன்னும் போகப்போக பல பிரச்சனைகளைப் பற்றியும் பல நபிமொழிகள் பற்றியும் தங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சிக்கப்படுகின்ற காட்சிகளும் அந்த விவாதத்தில் இடம் பெற இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இரு தரப்பாரும் ஏய்… ஊய்… என்று முஸ்லீம்களுக்குள் இருக்கும் பகைமை உணர்வை வெளிக்காட்டும் சில விரும்பத்தாகாத காட்சிகளும் கூட (எடிட்செய்யாத நிகழ்சியில்) இடம்பொறலாம். அதிலும் குறிப்பாக மற்றொரு தரப்பினர் நடத்தும் நிகழ்சியில் ‘ஒரு மவ்லவி உட்பட பலர் முஸ்லீம்களின் ஒரு தரப்பாரை அடிக்கப்பாய்வது போன்றக் காட்சிகளை போட்டு அவர்களின் உன்மைநிலையை மக்களுக்கு காட்டுகிறோம் என்றப் பொயரில் நமது சமுதாய நிகழ்வை வெளிஉலகுக்குக் காட்டி கேவளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல இந்த கத்தரிக்கப்படாத நடந்த அசிங்களையும் சேர்த்து அப்படியே காட்டக்கூடிய விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடியவர்கள் தான் மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லக்கூடிய ‘இஸ்லாம் ஒர் இனியமார்க்கத்தையும்’ வாரம் இருமுறை அதே டிவியில் நடத்திவருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களின் நிகழ்சிகளுக்கு மாற்று மதத்தவர்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது.

இந்த விவாதத்தை பார்க்ககூடிய மாற்று சமூகத்தவர்கள் இந்த
கத்தரிக்கப்படாத விரும்பத்தகாத சம்பவங்களைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்பார்களா? அல்லது காரித்துப்புவார்களா? சம்பந்தப்பட்ட சகோதரர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தை மாற்று மதத்தவர்களிடம் எடுத்துச்சொல்வது ஒரு புறம் இருக்க அதை அழகிய முறையில் செயல் வடிவில் செய்து காட்டுவது என்பது மிகச்சிறந்த இஸ்லாமியப் பிரச்சாரமாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இஸ்லாத்தின் மீது உன்மையான அக்கரையுள்ளவர்கள், தஃவாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லுபவர்கள்; ‘இஸ்லாமியர்கள்’ தங்களுக்கும் விரும்பத்தகாத வகையில் நடந்துக்கொண்ட அந்த விவாத நிகழ்சியை ஒளிபரப்புவதால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பதை சற்று சிந்திக்க வேண்டும். சிலரின் உன்மைநிலையை உலகுக்கு உணர்த்துகிறோம் என்றப் பொயரில்

சிலரின் உன்மைநிலையை உலகுக்கு உணர்த்துகிறோம் என்றப் பொயரில் சில கொள்கை வேறுபாட்டிற்காக இஸ்லாத்தையும் – இஸ்லாமிய தஃவாவையும் தரம் தாழ்த்தும் செயலில்
ஈடுபடுவது மாபெறும் குற்றமாகும் என்பதை சம்பந்தபட்ட சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

நன்றி : நபிவழி நடப்போம்

Advertisements

1 பின்னூட்டம் »

 1. உன்மையில் இஸ்லாமிய பிரச்சாரத்தின் மீது நம்பிக்கையுள்ள சகோதரர்கள் இந்த ஆக்கத்தில் கூறப்பட்டுள்ள உன்மைகளை சற்று சிந்தித்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் யாகவா முனிவருக்கும், சிவ சங்கர் பாபாவுக்கும் நடந்த விவாதத்தில் நடைபெற்ற ரகலைகளால் அவர்கள் கேவலப்பட்டது மட்டுமல்லாது அவர்கள் நடவடிக்கைகளைப் பார்த்து நாடே சிரித்தது என்பதை களியக்காவிலை விவாத நிகழ்சியை (அதில் நடந்த ரகலைகலை) ஒளிபரப்பக்கூடியவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்ல அந்த சாமியார்களுக்கும் நடைபெற்ற ரகலைகளை ஊரே சிரிக்கும் வகையில் சினிமாக்களில் அந்த சாமியார்கள் கோமாளிக்களாக சித்தரிக்கப் பட்டார்கள் என்பதையும் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

  இதை ஒரு ஆலோசனையாக சம்பந்தப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் தலைமைக்கு உடனே தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

  அப்துல்லாஹ்

  சென்னை

  பின்னூட்டம் by ibrahim — ஜூன் 29, 2006 @ 6:50 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: