தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 28, 2006

கத்தியைத் தீட்டாதீர் புத்தியை தீட்டுங்கள்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:11 பிப
ததஜவினரே கத்தியைத் தீட்டாதீர் புத்தியை தீட்டுங்கள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்….

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல் குர்ஆன் 4:93)

கெட்ட வார்த்தை பேசுபவனும், பிறரைத் திட்டுபவனும், பிறரைக் குறைகூறுபவனும் விசுவாசியாக மாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)

ஒரு முஸ்லிமுடைய உயிரும், உடமையும், மானமும் மற்ற முஸ்லிமுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அன்பின் சகோதர, சகோதரிகளே,

நான் இந்த வலைப்பதிவில் இயக்க சார்பின்றி அனைத்து இயக்கத்தினரது தவறுகளையும் சுட்டிக்காட்டி அவற்றை திருத்துமாறு வற்புறுத்தி விமர்சித்து வருகின்றேன். அதுபோல் இவ்வலைப்பதிவில் உறுப்பினர்களாக உள்ள பல சகோதரர்களும் எழுதியும் வருகின்றார்கள். அவ்வகையில் தான் “ததஜ-வின் இலட்சணம் பாரீர்” என்ற தலைப்பில் ரியாத் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரால் அனைவருக்கும் அனுப்பபட்ட ஒரு மின்னஞ்சலை இங்கு பதிவு செய்தேன். இது கூட எதன் அடிப்படையில் என்றால் குர்ஆன் ஹதீஸை சொல்பவர்கள் என்ற பெயரில் இவர்கள் பாமரனும் கூட பேசத்தயங்கும் மொழியில் தங்களது எதிர் இயக்கத்தினரை விமர்சனம் செய்ததால்தான். பொய்ச் செய்திகளும் தனிமணித தாக்குதல்களும் இவர்களால் செய்யப்படுவதை ஆதாரப்பூர்வமாக நான் இவர்களின் தலைமைக்கும் மற்றும் இவர்களின் நிர்வாகத்தினருக்கும் எடுத்துக் கூறி அவ்வாறு செய்யும் உங்கள் தொண்டர்களை கண்டித்து, தவ்ஹித் இயக்கமென்றால் மார்க்கத்தை சொல்லக்கூடியது, அதில் இவ்வாறு அசிங்கம் பேசக்கூடாது அது உங்களுக்கு இழுக்கு என்று உணர்த்தினேன்.

ஆனாலும் கூட இவர்களின் நிர்வாகத்தினர் இவர்கள் யார் என்பதை அறிந்த நிலையிலும் கூட இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் இவர்களின் இது போன்ற அநாகரிக எழுத்துக்களை மக்கள் மன்றத்தில் வைத்து இனி இவர்கள் தவ்ஹித் என்ற பெயரில் குர்ஆன் ஹதீஸ் என்று பேசி உங்களிடம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள் என்ற வகையில் பதிவு செய்தேன்.
அது போல் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் சில நிர்வாகிகளே (ரியாத் இனைச்செயலாளர் பைசல் போன்றோர்) இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்து தக்க ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் அம்பளப்படுத்தினேன். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் ரியாத் இணைச்செயலாளராக இருக்கும் இந்த ஆடுதுறை பைசல் என்பவர்தான் உமர், தீன் முகம்மது போன்ற பெயர்களிள் பொய்களையும் அநாகரிக மின்னஞ்சல்களையும் அனுப்புகிறவர் என்பது இவர்களின் தலைமையே அறிந்த ஒன்றாகும் மற்றும் இவரின் தலைமையில் ரியாத்தில் செயல்படும் மூவரணியைப்பற்றி ததஜவின் பொதுச்செயலாளர் சகோ. பாக்கரும் நன்கறிவார்.

தமாமில் வசிக்கும் சவுதி கிழக்கு மாகாண தலைவர் சகோ. முனீப் அவர்கள் எனக்கு நல்ல நண்பர் என்ற அடிப்படையில் இது குறித்து எடுத்துக்கூறினேன். மற்றும் நீங்கள் தவ்ஹித் ஜமாத் அல்லாது வேறு பெயர்களிள் இயக்கம் வைத்து இது போல் விமர்சித்தீர்கள் என்றால் உங்களை யாரும் கேட்க மாட்டார்கள் ஆனால் தவ்ஹித் பெயரில் நீங்கள் செயல்பட்டுகொண்டு இதுபோல் செய்யும் வரையில் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி கேட்பான் என்று கூறினேன். அவர் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் பேசியபோது அவர் உமரிடமும் பைசலிடமும் பேசி விட்டதாகவும் இனி இதுபோல் மின்னஞ்சல்கள் வராது என்றும் தெறிவித்தார். அதன் பின்னர் இங்கு பதியப்பட்டுள்ள ரஸ்மி என்பவரின் தவ்ஹித் பிரச்சார மின்னஞ்சல் உமர் என்பவரால் அனுப்பபட்டதால், நான் மீண்டும் சகோ.முனீப் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது அவர் உமரிடம் நான் 28 நிமிடம் பேசியுள்ளளேன் அவர் இது போல் எழுதியிருக்கவே மாட்டார் அது வேறு யாரோ செய்த செயல் எனக்கு கம்ப்யூட்டர் தெறியாததால் எது வேண்டுமானாலும் கூறாதீர்கள் என்று கூறினார்.

ஆகவே அந்த செய்தியையும் மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக வலைப்பதிவில் பதிந்தேன். அதன் பின்னர் அவர்களின் இந்த அநாகரிக மின்னஞ்சலை நியாயப்படுத்தும் விதத்தில் உமர் மீண்டும் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் முனீபை அறியாமையின் விளிம்பில உள்ளார் என்று எழுதியுள்ளார் என்பதையும் சகோ.முனீபிடம் (0507210931) தெறிவித்தேன்.
இந்நிலையில் கடந்த 24-6-2006 அன்று ரியாத் ததஜ இணைச்செயலளர் பைசல்(0507809247) என்பவரும் மற்றும் ரியாத்திலிருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த பரக்கத் (0509843542) என்பவரும் எனக்கு போன் செய்து தகாத வார்த்தைகளிள் பேசி மிரட்டினார்கள்.

நேற்று இரவு 27-6-2006 அன்று சுமார் 8-30 மணியளவில் ததஜ வின் தமாம் இணைச்செயலாளரும் ததஜவின் பொதுச்செயலாளர் சகே. பாக்கர் அவர்களின் நண்பருமான நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ஜனாப். கவுஸ் (0557714032) என்பவர் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து மேற்குறித்த “ததஜ-வின் இலட்சணம் பாரீர்” என்ற பதிவு குறித்து கேட்டார். நாமும் பதில் அளித்தேன். அதற்கவர், எழுதியது யாரோ அவரைத்தானே விமர்சிக்க வேண்டும் ஏன் ததஜ-வின் இலட்சனம் பாரீர் என்று எழுதினீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் இவர் தனிப்பட்ட முறையில் யாரை வேண்டுமானாலும் விமர்சித்தோ திட்டியோ எழுதி தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்தால் அதை நான் விமர்சித்திருக்க மாட்டேன். ஆனால் இவர் ததஜ என்ற இயக்கத்தின் சார்பாக ஒரு தனி நபரை தரக்குறைவாக முஸ்லிம் அல்லாதோர் கூட பேசத்தயங்கும் வார்த்தைகளால் எழுதி அதை அனைவருக்கும் அனுப்பியிருந்தார். ஆகையால் அதனை பதிவு செய்தேன்.

இன்னும் இதுபோன்ற மின்னஞ்சல்களை எழுதும் இந்த நபர் யாரென்பதை ததஜ வின் நிர்வாகிகளும் அறிந்துள்ளார்கள். அப்படியிருக்கையில் இதை எப்படி தனிப்பட்ட விஷயமாக எடுத்தக்கொள்ள இயலும் என்றேன். கிழக்கு மாகாண தலைவர் சகோ. முனீப் கூட, அவருடன் 28 நிமிடம் பேசினேன் என்றும் அவர் எழுத மாட்டேன் என்றார் இன்று மீண்டும் அவர் சகோ. முனீபையும் விமர்சித்து அவர் அறியாமையின் விளிம்பில் உள்ளதாக எழுதியுள்ளார். அத்துடன் எம்மை தலைமை கட்டுபடுத்த இயலாது என்றும் எழுதியுள்ளார். ஆக சகோ. முனீபுக்கு என்ன மறியாதை? இது போல் அசிங்கங்களை தவ்ஹித் என்ற பெயரில் எழுதுகிறார்களே இதை முஸ்லிம்கள் மட்டும் வாசிப்பதில்லை மாற்று மதத்தவரும் வாசிக்கின்றார்களே இவ்வாரெல்லாம் பேசுபவர்களை உங்கள் தலைமை கண்டிக்காதா? எந்த நடவடிக்கையும் எடுக்காதா? நீங்கள் தவ்ஹித் ஜமாத் என்று கூறுவதால்தான் நாங்கள் இதைக்கேட்கின்றோம் இல்லையென்றால் இதைப்பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என்றும் இனியும் உங்கள் தலைமை இது போன்றவர்களை கண்டிக்கத்தவறி எதிரி இயக்கத்தினரைதானே விமர்சிக்கின்றார்கள் என்று சும்மா இருந்தால், மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் தவ்ஹித் என்று கூறி செல்வீர்கள்? மாற்று இயக்கத்தவனும் இஸ்லாமிய சகோதரன்தானே என்ற அடிப்படை மார்க்க சிந்தனை கூட இல்லாமல் அசிங்கமான மூன்றாம் தர வார்த்தைகளால் அவர்களை விமர்சிக்கிறீர்களே? இதே வாயால் அடுத்த முறை மக்களிடம் தவ்ஹித் என்று கூறி தாவா செய்ய சென்றால் உங்கள் வார்த்தைகளுக்கு என்ன மறியாதை? மக்கள் செருப்பால் அடிக்க மாட்டார்களா? என்று கேட்டேன்.

உடனே சகோ. கவுஸ், நான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் விளங்காமல் “யாரைச் செருப்பால் அடிப்பேன் என்றாய்? என் தலைமையை செருப்பால் அடித்து விடுவாயா? நீ தவறான வழியில் செல்கின்றாய் உனது முடிவு மோசமானதாக இருக்கும். எனது தலைமையை செருப்பால் அடித்து விடுவாயோ பார்க்கலாம். உனது இறுதி முடிவு மிக மோசமாக இருக்கும் எச்சரிக்கின்றேன்” என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். அப்போதும் கூட நான், கவுஸ் பாய் நான் யாருக்கும் அஞ்சியவர்கள் அல்ல அல்லாஹ்வைத்தவிர. நீங்கள் தவறான புரிதலில் உள்ளீர்கள். நான் உங்களுக்கோ உங்கள் இயக்கத்திற்கோ எதிரியல்ல. தவ்ஹித் பெயரை சொல்லும் இயக்கத்தில் உள்ளவர்கள் இதுபோல் பேசுகின்றார்களே… மாற்று மதத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் அனைவருக்கும் அனுப்புகிறார்களே என்ற ஆதங்கத்தில் தான் நான் எழுதுகின்றேன். உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி திருந்தச்சொல்லித்தான் எழுதுகின்றேன். அதுவும் நீங்கள் தவ்ஹித் என்ற பெயரில் எழுதுவதால், இல்லையென்றால் அதுவும் செய்ய மாட்டோம் என்று கூறினேன் பின்னர் கோபமாக சென்று விட்டார்.

அவர் சென்ற பின் அன்று இரவே 27-6-2006 சுமார் 10.53 அளவில் 03 8304569 என்ற நம்பரில் இருந்து கிழக்கு மாகாண தலைவர் சகோ. முனீப் அவர்கள் என்னை தொடர்பு கொண்டார்.

ஆரம்பத்தில் சலாம் கூறி வழக்கத்திற்கு மாறாக நீ.. வா.. போ.. என்று பேசியவர் பின்னர் டேய்.. உனக்கு என்னடா மறியாதை… உன்னால் என் மயிரைக்கூட புடுங்க முடியாது.. நீ யாருடா டேய்.. உன்னைப் பற்றி எல்லாம் எனக்கு தெறியும்… அது போல் நான் யாருன்னு உனக்கு தெறியுமுலடா … என்ன செய்வேன்னு தெறியுமா?… டேய்… டேய்…என் மயிறை கூட என் ஜமாத்தில இருந்து பிறிக்க முடியாதுடா…. என்னையோ என் ஜமாத்தையோ பத்தி பேசுவதற்கு நீ யாருடா??? உனக்கு என்ன அருகதையிடா இருக்கு …டேய்… என்ற ரீதியில் கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசினார் அவரிடம் நான் என்னவென்று சொல்லிவிட்டு பேசுங்கள்.. மறியாதையாக பேசுங்கள் என்று
கூறினேன்..

அவர் தொடர்ந்து அசிங்கமாகவே பேசவே அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் இருந்து மேலும் அசிங்கமான வார்த்தைகளை கேட்க விரும்பாததால் இணைப்பை துண்டித்தேன்.

கெட்ட வார்த்தை பேசுபவனும், பிறரைத் திட்டுபவனும், பிறரைக் குறைகூறுபவனும் விசுவாசியாக மாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)

மேற்கூறியது போன்ற நபிமொழியைக்கூட அறியாதவரா சகோ. முனீப் என்று நினைக்கையில் வேதனையாக உள்ளது. மற்றும் இப்படிப்பட்ட தரக்குறைவான வார்த்தையை சொல்லும் ஒருவர் எப்படி சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் இஸ்லாத்தை போதிப்பதாக சொல்லும் தவ்ஹித் இயக்கத்தின் தலைமையில் உள்ளார்?

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான். இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல் குர்ஆன் 4:93)

என்ற இறைவசனத்திற்கு மாற்றமாகவும்,

ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)
(நய வஞ்சகன்) ‘அவன் சண்டையிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான்’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரி, முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

கோபத்தில் என்னிடம் மயிர்.. புடுங்குதல்…போன்ற கெட்டவார்த்தைகளிள் பேசிய சகோதரர்கள் சற்று சிந்திக்கட்டும்.

சகோ. முனீப் அவர்களே நீங்கள் கடுமையான கோபத்தில் என்னிடம் அவ்வாறு பேசினீர்கள் என்பதை மிக நன்றாகவே அறிந்திருந்தேன் ஆனால் தலைவர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படையான சக முஸ்லிமிடம் எப்படி நடந்து கொள்வது.. கோபம் வந்தால் எப்படி நடந்து கொள்வது போன்ற அடிப்படைகூட தெறியாமல் எம்மிடம் பேசினீர்கள்?. அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் தங்களை கோபமூட்ட செய்தது எது என்று சிந்தியுங்கள். அது உண்மையா என்று ஆராய்ந்தீர்களா? நான் என்ன மற்றவர்களை போலவா உங்களிடம் பழகினேன். எதையும் விரிவாக எம்மிடம் விளக்கம் கேட்டுவிட்டு பின்னர் பேசியிருக்கலாமே? நேற்று வரை எம்மிடம் நட்புடன் தானே பேசிவந்தீர் பின் எப்படி எம்மிடம் இப்படி ஒரு தரந்தாழ்ந்த முறையில் பேச முடிந்தது உங்களால்? இது தான் தங்களின் தஃவா பணியா?

ஒரு முஸ்லிமுடைய உயிரும், உடமையும், மானமும் மற்ற முஸ்லிமுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

என்ற பாடம் உங்கள் பாசறையில் போதிக்கப்பட வில்லையா? அல்லது எம்மை முஸ்லிம் அல்ல என்று உங்களது தலைவர் பத்வா வழங்கி விட்டாரா? எதன் அடிப்படையில் என்னிடத்தில் அவ்வாறு பேசினீர்? நான் முஸ்லிம் அல்ல என்று ஏதேனும் பத்வா உங்கள் தலைமை வழங்கியிருந்தால் அது எந்த அடிப்படையில் என்று எமக்கு விளக்கவும். இல்லையேல் நீர் அறியாமையின் விளிம்பில் இருப்பதாகவும் உங்கள் தலைவரை தக்லீது செய்பவராகவும் மக்கள் உங்களை கருத வாய்ப்புண்டு.

ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி,
அபூதாவூத்)

நீங்கள் உங்களை எந்தப் பெயர் கூறி அழைக்கப்போகின்றீர் சகோ. முனீப் அவர்களே? தங்களின் இந்தக்கோபத்திற்கு பின்னால் யார் என்று சற்று சுயமாக சிந்தித்து பார்ப்பீர்களா? யார் உங்களிடத்தில் என்ன சொன்னது? அது உண்மையா என்று கூட விசாரிக்காமல் என்னிடம் பேசியது ஏன்? தங்களின் கண்களை இந்த அளவிற்கு மறைத்தது இயக்க போதையா? அல்லது தங்கள் தவைர் மீது தாங்கள் செய்யும் தக்லீதா?

எம்மை கொல்வது என்பது மிக எளிதான காரியமாகும். தங்கள் தலைவர் ஏர்வாடி காசிம் தலைமையில் மூலைச்சலவை செய்யப்பட்ட ஒரு கும்பலை வைத்து மார்க்கத்தை பற்றிய தவறான போதனைகளைக்கூறி தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் ஜிஹாத் என்று கூறி ஏர்வாடி காசிம் போன்றோரை வைத்து செய்த கொலைகளை மக்கள் அறியாத விஷமில்லை. நாகூர் ஆலிம் ஜார்ஜ் கொலை முயற்சி மற்றும் கேகே நகர் இமாம் மடடுமல்லாது தன்னை எதிர்த்த பல முஸ்லிம்களை கொன்றதை அனைவரும் அறிவர். அதைப்போல் என்னைக் கொல்வதும் ஜிஹாத் என்று கூறி உம்மில் மூலைச்சலவை செய்யப்பட்ட ஒருவரிடம் சொல்லலாம்.

ஒன்றை மட்டும் தாங்களும் தங்கள் தலைமையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ..

நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)

(அவர்கள்) கர்வங்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர (மற்றெவரையும்) சூழ்ந்துகொள்ளாது. (35:43)

என்ற வேதத்தின் வரிகளை உமக்கு ஞாபகமூட்டுகிறேன். அல்லாஹ் நாடினால் தவிற என்னை உங்கள் கூட்டத்தாரால் ஒன்றும் செய்ய இயலாது. எனது உயிர் என்னை படைத்தவனின் கையில் உள்ளது. உம்மைப்போல் நான் பிஜே என்ற தனிமனிதனை விசுவாசம் கொண்டவனல்ல. மாறாக உண்மையான தவ்ஹித் கொள்கையில் நம்பிக்கை வைத்து உம்மையும் எம்மையும் எனது தலைவர் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் உமது தலைவர் பி.ஜெயினுலாபுதின் அவர்களையும் எவன் படைத்தானோ, நமது உயிர் யாரின் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது நம்பிக்கை கொன்டவன் நான். ஆக இறைவன் புறத்திலிருந்து மரணம் எம்மை நெருங்கும் வரை உமது கொலை மிரட்டல்கள் எம்மை ஒன்றும் செய்து விடாது.

உம்மை எதிர்த்த காரணத்திற்காக சகோ. பஸ்லுல் இலாஹி அவர்களை கொல்வதற்கு ஒரு மாற்று மதத்தவரை 10,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஏவிய விசயமும் மற்றும் இன்னும் தங்களை எதிர்த்த எத்தனை முஸ்லிம்களை கருத்துக்களால் எதிர் கொள்ளத் துனிவில்லாது கயமைத்தனமாக கொலை செய்துள்ளீர்கள் என்பதையும் கொல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளீர்கள் என்பதையும் இந்த சமூகம் நன்கறிந்துள்ளது.

இஸ்லாத்தின் பெயர் சொல்லி வளைகுடா நாடுகளிள் தனவந்தர்களிடமும் வியாபாரிகளிடமும் அப்பாவி சமுதாய மக்களிடமும் தவ்ஹித் என்ற பெயராலும் மதரசா என்ற பெயராலும் வசூல் செய்யப்படும் பணம் உங்களை எதிர்ப்பவரை கொல்வதற்கும், உங்கள் எதிரிகளை காமவெறியன் என்றும் திருடன் என்றும் தொலைக்கட்சிகளிலும் பத்திரிகைகளிளும் விமர்சிப்பதற்குதான் பயன்படுத்தப்படுகின்றது என்பதை மக்கள் உணரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.

அப்படியே நான் உமது தலைவரால் மூலை சலவை செய்யப்பட்ட ஒரு மூடனால் கொல்லப்பட்டாலும் கூட அந்த மரணத்தை ஏற்றுக்கொள்வேன் ஏனெனில் அன்னல் நபி (ஸல்) அவர்கள் நவின்றது போல் :

நல்லொழுக்க, நற்செயலை செயல்படுத்துவதில், விரோதிகளால் கொல்லப்படுபவர், தன்னுயிரை, மானத்தைக் காக்க போராடி, போரிட்டு அதில் மரணிப்பவர் ஆகியோரின் மரனம் நல்ல மரணமாக கருதப்பட்டு சுவனம் புகுவர் என்ற கூற்றின் அடிப்படையில் நான் எமது மரணத்தை ஏற்றுக்கொள்வோம்.

”…தாம் எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன். நுட்பமானவன். (திருக்குர்ஆன் 31:34)

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)

என்ற குர்ஆனின் வசனங்களின் அர்த்தங்களை மிக உணர்ந்தவர்களாகவே நான் உள்ளோம். ஆக இதையெல்லாம் இங்கு எழுதுவதை வைத்து எம்மை கோழை என்றும் பயந்து விட்டான் என்றும் எண்ணிவிடாதீர்கள். தங்களின் கயமைத்தனம் மக்களுக்கு தெறிய வேண்டும் என்பதற்காகவும் தங்களின் மறைக்கப்பட்ட மற்றோர் முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே இத்தனை விபரங்களையும் இங்கு பதிகின்றேன்.

ஒரு வேளை உம்மாள் நான் கொல்லப்பட்டாலோ அல்லது எமது உயிர் உடைமைக்கு ஏதாவது சம்பவித்தாலோ அவற்றிற்கு முக்கிய காரணம் முனிஃபாகிய
நீங்களும் உங்களை இயக்கும் தலைமையான பி.ஜெயினுலாபுதீன் அவர்களும் மற்றும்
உங்களைப்போல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நெல்லிக்குப்பம் கவுஸ் மற்றும் ஆடுதுறை
பைசல், முத்துப்பேட்டை பரக்கத் ஆகியோரே காரணமாவர் இதை அரசாங்கத்திற்கும் மற்றும் நடுநிலையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் இதன் மூலம் தெறிவித்து
கொள்கின்றேன். அப்படி சம்பவிக்கும் பட்சத்தில் நடுநிலையாளர்களும் ஊடகங்களும்
தவ்ஹித் பெயரில் வேசம் போடும் இந்த கொலைகாரக் கும்பலின் உண்மை முகத்தை மக்களுக்கு
காட்டவேண்டும். இதனை நகல் எடுத்து இவர்களுக்கு பொருளாததார உதவிகள் செய்யும்
நிறுவனங்களிடத்திலும் வளைகுடா வியாபாரிகளிடத்திலும் கொடுத்து அவர்கள் மார்க்கத்திற்காக கொடுக்கும் பணம் எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பதை வெளிச்சமிட்டு காட்டுங்கள்.

நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்ல. மற்றும் எந்த இயக்கத்திற்கும் எதிரியுமல்ல ஒரு சாதாரண சக முஸ்லிம் என்ற அடிப்படையில் எனது சமுதாய இயக்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறேன். அது உங்களைப்போன்றோரை கோபமூட்டுவதற்காக அல்ல. மாறாக உங்கள் தவறுகளை திருத்தி நேர் வழி செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே. அது யாராக இருந்தாலும் எந்த இயக்கமாக இருந்தாலும் நான் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவேன். முக்கியமாக தவஹித் பெயரால் செயல்படுவதால் உங்கள் தவறுகள் அடையாளப்படுத்தப்படும்.

நீங்கள் முன்பிருந்த இயக்கம் மார்க்கத்தை சொல்வதற்கு தடையாக உள்ளதென்றும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவும் கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசம் என்று செல்கின்றார்கள். ஆகவே தூய மார்க்கத்தை போதிக்கவென்று தனியாக செல்கின்றோம் என்று கூறி பிரிந்தீர்களோ, அந்த தமுமுக வின் தவறுகளை நான் பலமுறை கடுமையான முறையில் விமர்சித்தம் கூட அதன் தலைவர்களும் தொண்டர்களும் மிக நாகரீகமான் முறையில் கருத்து ரீதியாக தங்கள் பதில்களால் விமர்சனங்களை எதிர்கொண்டார்களே தவிர உங்களைப்போல் ரவுடியிசத்தாலும் கொலைமிரட்டல்களாளலும் அல்ல. ஏன் தமுமுக வின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களே நேரடியாக எனது விமர்சனத்திற்கு ஜனநாயக ரீதியல் பதில் அளித்து ஆச்சரியப்பட வைத்தார். நீங்கள் யாரை ரவுடி கட்டப்பஞ்சாயத்து மார்க்கத்திற்கு விரோதமானவன் என்று கூறினீர்களோ அவர்களிடத்தில் உள்ள மார்க்கம் உங்களிடத்தில் இல்லையே. உங்களின் சொல்லும் செயலும் முரண்பாடாக தெரியவில்லையா? இதிலிருந்து தமுமுக வை நீங்கள் பிறிந்த போது கூறிய காரணங்கள் பொய் என்று மக்கள் விளங்க மாட்டார்களா?

உங்களின் இது போன்ற மிரட்டல்கள் மூலம் எமது எழுத்தை நிறுத்தலாம் என்று நினைத்தால்… அது இயலாது… ஏனெனில் எம் முன்னோர்கள் எம்முள் மூட்டிய உண்மை
என்னும் யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகளாய் உத்வேகம் என்ற நெருப்பு எம்முள் கனன்று கொண்டிருக்கின்றது. அதை இறைவனைத்தவிற வேறு யாராலும் அனைத்து விட இயலாது.. மாருதங்கள் எம்மை தீண்டும் போது எம்முள் எறியும் நெருப்பின் வேகம் அதிகரிக்குமே தவிர அனையாது. உமது கொலை மிரட்டல்கள்களால் எனது எழுத்தின் வேகம் குறையவில்லை மாறாக ஒவ்வொரு முறை உங்கள் கூட்டத்தினரால் மிரட்டப்படும்போதும் சொல்லடிகளால்
தாக்கப்படும்போதும் எழுதவேண்டும் எனும் வேட்கை என் உள்ளத்தில் அதிகரிக்கின்றதே தவிற, என்க்கு அச்சம் ஏற்படவில்லை.

(அவர்கள்) கர்வங்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர (மற்றெவரையும்)
சூழ்ந்துகொள்ளாது… (35:43)

நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)

தீய சூழ்ச்சி செய்வதும், வஞ்சிப்பதும் பெரும் பாவங்களைச் சேர்ந்ததாகும். பிறரை வஞ்சிப்பவன் அல்லது பிறருக்கு சூழ்ச்சி செய்பவன் தன்னையே வஞ்சித்துக் கொள்கிறான். அவன் பிறருக்குச் செய்யும் சூழ்ச்சி அவனையே தாக்கிவிடும். இதுவே இந்தக் குர்ஆன் வசனத்தின் கருத்தாகும் என்று கூறி எம்மையும் உம்மையும் வல்ல அல்லாஹ் நேர்வழியில் நடத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இறைவனிடமே முழுமையான தவக்கல் வைத்தவனாக விடைபெறுகின்றேன். அவனே எனக்கு பாதுகாவல் வழங்குபவன்.

சகோதர முஸ்லிமுக்கு கண்ணாடியாக அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது பணிகள் முன்புபோல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி
முகவைத்தமிழன்
28.06.2006

1 பின்னூட்டம் »

  1. உண்மையைச் சொல்லும்போது பதில் சொல்ல இயலாத கையறு நிலையில் பிதற்றித் திரிகிறார்கள். பதில் இருந்தால்தானே சொல்வதற்கு.
    உண்மையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
    அல்லாஹ் உங்களது எல்லா நன்முயற்சிகளிலும் வெற்றியைத்தர பிரார்த்திக்கின்றேன்.

    பின்னூட்டம் by சுல்தான் — ஓகஸ்ட் 3, 2006 @ 11:15 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: