தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 11, 2006

கவிதை அல்ல கண்ணீர்! சமுதாயத்தின் செந்நீர்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 2:51 பிப

இது கவிதை அல்ல கண்ணீர்!
ஆம், சமுதாயத்தின் செந்நீர்!!
அகண்ட பாரதத்திற்கு அச்சாணி கொடுத்தவனே
அடிமை இந்தியாவில் சிலர் அகல் செய்த போது
விடுதலைக்கு குருதியில் மண்ணை நனைத்தவனே – உன்னை
நீ உணரத் தவறியதால் காற்றுக்கு சாயும் நாணலாய்
மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நிற்கிறாய்
விடுதலைப் புரட்சிக்கு அன்று புதுமை செய்தாய் – இன்றோ
பலர் பார்த்து சிரிக்க தொலைக்காட்சியிலும்
வெப் சைட்டிலும் ஈமெயில்களிலும்
அருவருக்கத்தக்க வார்த்தைகளை அள்ளி வீசுகிறாய்
வாழ்க உம் பணி என்று சொல்ல இதயம் வலிக்கிறது – காரணம்
எம் உதிரத்தின் அங்கமாய் நம்மை இஸ்லாம் இணைத்து இருக்கிறது
கலவரப் பூமியில் கூட கருத்துப் புரட்சி நடக்கிறது இன்று – கருத்துப்
புரட்சியை அரங்கேற்றிய மார்க்கத்தில் அடித்துக் கொண்டு நிற்கிறாய்.
ஒற்றுமைக்கு இலக்கணம் தந்த மார்க்கத்தின் தோழனே
சமூகத்தின் கண்ணீர் கடல் மட்டத்தை தாண்டி விட்டது – நீயோ
வேதனையை மறந்து விட்டு வேற்றுமைக்கு கடை விரிக்கிறாய்
ஒற்றுமை ஒற்றுமை என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் – ஒற்றுமை
என்ற வார்த்தைக் கூட நம்மைப் பார்த்து பரிகசிக்கும்.
திருவிழாவைப் போல் தேர்தல் வருகிறது – எம் தேசத்தில்
திருவோடு தூக்குபவர் எல்லாம் கோட்டையில் கோலோச்சுகின்றனர்
கோட்டை விட்டு விட்டு மண் கோட்டையை
நம் கோட்டை என்கிறார்கள் நம்மவர்கள்
பாவம் தெருவுக்கு தெரு ஒரு கூட்டம் முழக்கம் – நம் உரிமைகள்எல்லாம் கானல் நீர் போன்ற மயக்கம்.
அரசியலில் பூனைகளே நம்மை மிரட்டுகின்றன
புலி வேகம் காட்டிய அமைப்புகளோ எலிகள் போல் நடுங்குகின்றன
வாழ்க தலைவர்கள் எங்கள் தலைவலிகள்
நமது உரிமைகள், உணர்வுகள் பற்றி உரக்கப் பேசுவார்கள்
நாட்டில் மடம் கட்டும் ஆண்டிகள் கூட தேவலை
பாவம் நமது தலைவர்கள் ஆம் நடிப்பதில் வல்லவர்கள்
முட்டி விட்டு குனிவதையே சாதனை என்று குதிப்பார்கள்.
எத்தனை நாட்கள் பொறுப்பது, பொறுத்துக் கொண்டு புன்மைத்
தேரைகளாக வாழ்வதை விட புது அரசியல் விடிவை தட்டி விட
வாருங்கள் சகோதரர்களே! தலைவர்களை – SORRY தலைவலிகளை
உதறித் தள்ளுவோம். எதிர்காலத்தை நாமே கட்டமைப்போம்.
இது கவிதை அல்ல, கண்ணீர் – சமூகத்தின் செந்நீர்.
வாருங்கள் இந்திய மக்கள் பேரவையில் சங்கமிப்போம்! சீர் பெறுவோம்!
இவண்
அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்
ipftamil@yahoo.com
ipftamil@hotmail.com
Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: