தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 16, 2006

உணர்வின் பாதையில் மக்கள் உரிமை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:18 முப

சென்ற மாதம் “நபிகள் நாயகம் பெருமானார் (ஸல்) அவர்களின் கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியர் மர்ம மரணம்” என்ற பொய் செய்தியினை ஈமெயில்களில் நமது சகோதரர்கள் ரவுண்ட் கட்டி அடித்தார்கள். அச்செய்தி தமுமுக -வின் அதிகாரப்பூர்வ வாரஇதழில் ஜூன் 30 அன்று வெளியானது.

முன்பு பில்கேட்ஸ் பற்றி பொய் செய்தி வெளியிட்ட உணர்வு வாரஇதழுக்கு, தமுமுகவின் மக்கள் உரிமை எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்ற போட்டியில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

கடந்த மாதம் “நபிகள் நாயகம் அவமதிப்பு கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் மர்ம மரணம்” என்ற செய்தி மின்னஞ்சல் வழியே பரபரப்பு செய்தியாகப் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. இச்செய்திக்கு ஆதாரமாக “நேஷன்” என்ற பாகிஸ்தானிய பத்திரிக்கையின் இணைய முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. “முஹம்மது (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரங்களை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை ஜைலாண்ட்ஸ் போஸ்டனின் கலாச்சார செய்தி ஆசிரியர் எலியட் பேக் தனது படுக்கை அறையில் ஏற்பட்ட மர்மமான தீ விபத்தில் கருகி பலியானதாக” அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. எலியட் பேக் தனது படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது நெருப்பு அவரது அறையை சூழ்ந்ததாகவும் அதில் அவர் உயிரோடு கருகிச் சாம்பலாகிப் போனதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை உறுதிப் படுத்திக் கொள்ளும் எவ்வித முயற்சியும் செய்யாமல், அதே செய்தி தமிழ் முஸ்லிம்களின் வார இதழ் ஒன்றில் இடம் பிடித்துவிட்டது.

ஜைலாண்ட்ஸ் போஸ்டனின் கலாச்சார செய்தி ஆசிரியரின் பெயர் ஃபெலம்மிங் ரோஸ் என்பதாகும். ஆனால், கலாச்சார செய்தி ஆசிரியரின் பெயர் எலியட் பேக் என்று முஸ்லிம்களின் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

ஆனால் உயிருடன் உள்ள எலியட் பேக் இந்தச் செய்தியை தனது பிரத்யேக வலைப்பதிவில் மறுத்திருந்தார். இக் கற்பனைச் செய்தியில் முஸ்லிம்களின் அவசரப் புத்தியும் பக்குவமின்மையும் பிறமதத்து ஊடகங்களிடம் பல்லிளித்து நின்றன.

(நன்றி: இஸ்லாம்கல்வி.காம்)

Flemming Rose

According to the Nation, a Saudi Arabian newspaper claimed that an “Elliot Back” was the notorious editor of the “Mohammed Cartoons” and perished in a fire in his apartment. Unfortunately, neither is true. The actual culture editor of Jyllands Posten is Fleming Rose.

மற்றவர்களெல்லாம் பத்திரிக்கையா நடத்துகிறார்கள்? என்று கேலி பேசியவர்கள், பத்திரிக்கை நடத்துவது எப்படி என்று பிறருக்கு சொல்லித்தருவோம் என்று சூழுரைத்தவர்கள், இப்படித்தான் சமுதாயத்தை கேலி பேசுவதற்கு வழி செய்து கொடுப்பதா?

தவறான செய்தியை வெளியிட்டதற்கு மக்கள் உரிமை வருத்தம் தெரிவிக்குமா? அல்லது உணர்வின் பாதையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதி விட்டு போங்கள் நாங்கள் எப்போதும் போல் பொய்களையே தொகுத்து வழங்குவோம் உண்மையை சொன்னால் தீன்முகம்மது , முனீப், பைசல் போன்ற அரபுநாட்டு பணத்துக்காக கூலி வேலை பார்க்ககூடிய ததஜ ரசிகர் மன்ற தலைவர்கள் கோபித்து கொள்வார்கள் அதனால் இவர்கள் மூலம் வரும் “அரபுச் சல்லி” (பணம்) நின்று விடும் என்று தொடர்ந்து பொய்யர்களின் பொய்களுக்கு வக்காலத்து வாங்குவதுபோல் வருத்தம் தெறிவிக்காமல் தொடர்ந்து பொய்களை பரப்பி ரசிகர் மன்றத்தினரை குஷியூட்டி வருகின்றதே ததஜ வின் உணர்வு இதழ் அதுபோல் மக்கள் உரிமையும் செய்யுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்
முகவைத்தமிழன்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: