தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 2, 2006

விரைவில் ததஜ அலுவலக முற்றுகை போராட்டங்கள்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:07 பிப
தவ்ஹித் ஜமாத்தினரின் முஸ்லிம் விரோத செயலை கண்டித்து
விரைவில் ததஜ அலுவலக முற்றுகை போராட்டங்கள் !!

கடந்த 30.07.2006 அன்று ஹாமித் பக்ரி அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து சென்னையில் தமிழகத்தில் சிறைகளில் வாடும் அனைத்து அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய அரசிற்கு கோரிக்கை விடுத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தினர்.

இதில் முக்கியமாக தமிழக உலமாக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து சென்னையில் உள்ள பள்ளிகளில் ஜீம்மா தொழுகைக்கு பின்னர் மௌலவிகள் பலர் ஒவ்வொரு பள்ளியிலும் இது சம்பந்தமான நோட்டிசை முஸ்லிம் சகோதரர்களுக்கு வழங்கி இந்த பொதுக்கூட்டத்தில் பங்கு பெற்று அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்குமாறு கேட்டு வந்தனர்.

அவ்வாறு சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏ.சுலைமான் சேட் அவர்கள் தலைமையில் சிலர் இந்த நோட்டிசை கொடுத்து கொண்டிருந்தனர் அப்போது அந்த பள்ளியில் ததஜ வின் மாநில செயளாலர் ஜனாப். பாக்கர் அவர்கள் தலைமையில் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத்தினர் லெபனான் சம்பந்தமாக போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்தனர் அந்த ததஜவினர் சிலர் நோட்டிஸ் கொடுத்து கொண்டிருந்த ஏ.சுலைமான் சேட் மற்றும அவருடன் வந்தவர்களை பிடித்து கொண்டு போய் பாக்கரிடம் விட்டு இவன்கள் அவனுக போடுர மீட்டிங்கிற்கு வரச்சொல்லி நோட்டிஸ் கொடுக்கின்றான்கள் என்று கூறியவுடன் ததஜ வின் மாநில செயலாளர் பாக்கர் நோட்டிசை பறித்து வைத்து கொண்டு ”பிள்ளைகள் ரொம்ப கோபமா இருக்குதுக இங்கிருந்து விபரீதமா ஏதாவது நடக்குறதுக்கு முன்னாடி ஓடிப்போயிருங்க’ என்று மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்கு சிறிதும் அஞ்சாத ஏ.சுலைமான் சேட் அவர்கள் நாங்க என்ன ஆர்.ஏஸ்.எஸ் மீட்டிங்கிற்கா நோட்டிஸ் கொடுத்தோம் இல்லை பள்ளியை இடிப்பதற்கா நோட்டிஸ் கொடுத்தோம் பிள்ளைக கோபமாகி எங்களை ஏதாவது செய்வதற்கு தமிழகமெங்கும சிறைப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வதற்காக மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கின்றோம் இங்கு தொழுகை முடிந்ததும் வருகின்ற நமது முஸ்லிம் சகோதரர்களிடம் தானே நோட்டிஸ் கொடுத்தோம் என்று கூறியிருக்கின்றார். உடனே கோபமான ததஜ வின் அடுத்த சேக். மௌலானா மொளலவி. எஸ்எம். பாக்கர் அவர்கள் டேய்..என்னடா சிறைவாசி…? அவனுக எல்லாம் வழிகேட்டில் உள்ள காஃபிர்கள்… அவர்களுக்காக மீட்டிங் போடுறது …நோட்டிஸ் கொடுக்குறது எல்லாம் உங்களை நரகத்தில் தள்ளும் செயல் … இங்கிருந்து ஓடிரு என்று மிரட்டியுள்ளார்… அத்துடன் அங்கு வந்த ததஜ வின் நிர்வாகி களஞ்சியம் கலில் ரசூலும் தன்பங்கிற்கு அச்சிலேற்ற முடியாத ததஜவின் தவ்ஹித் பிரச்சார வார்த்தைகளை கூறவும் ஏ.சுலைமான் சேட் தன்னுடன் வந்தவர்களை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

நேராக அப்பாவி சிறைவாசிகள் விடுதலை இயக்கத்தினரிடம் சென்று தகவல் அளித்ததும் அவர்கள் பொருமை காக்கும்படி கேட்டுள்ளனர். இதற்கிடையே 31.06.2006 அன்று மீட்டிங் முடிந்த பிறகு போன் செய்த மௌலானா மொளலவி. ஏஸ்எம். பாக்கர் ..சரி..சரி வந்து நோட்டிசை வாங்கிட்டு போங்க என்று கூறியுள்ளார்…மீட்டிங்கே முடிந்த பிறகு நோட்டிஸ் எதற்கு என்று கேட்டு இனைப்பை துன்டித்து விட்டனர்.

தற்போது இந்த விஷயம் தமிழகமெங்கும் விஷ்வரூபமெடுத்துள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் சிறைவாசிகளையும் வழிகெட்டவர்கள் என்று ஃபத்வா வழங்கி அவர்ளின் உணர்வுகளை புண்படுத்தியதோடல்லாமல் ஒட்டுமொத்த சிறைவாசி குடும்பத்தினரையும் கேவலப்படுத்தி ஏசிய ததஜ வின் மாநில செயளாலர் ஜனாப். பாக்கர் அவர்களும் ததஜ நிர்வாகி களஞ்சியம். கலில் ரசூல் அவர்களையும் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தவும் ததஜ அலுவலகத்தை முற்றுகையிடவும் சிறைவாசிகள் குடும்பத்தினரும் தமிழ்நாடு அப்பாவி சிறைவாசிகள் விடுதலை இயக்கத்தினரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

மற்றும் தமிழகமெங்கும் பள்ளிகளில் வரக்கூடிய வாரங்களில் ததஜ இயக்கத்தினரின் இந்த செயலை மக்களுக்கு விளக்கி பிரசங்கம் செய்யுமாறு உலமாக்களையும் கேட்டுகொண்டுள்ளார்கள். மாற்று மதத்தினர் கூட இந்த நோட்டிஸ்களை பெற்றுக்கொண்டு இதற்கு ஆதரவு தெறிவித்து சென்றபோது ததஜ வினரை இந்த அளவிற்கு கோபமூட்ட செய்தது எது? சிறைவாசிகள் விடுதலை என்றதும் ஏன் இவர்கள் இவ்வளவு கோப படுகின்றார்கள்? தேர்தல் சமயத்தில் சிறைவாசிகள் பற்றி இவர்கள் கூறிய அனைத்தும் பொய்தான்..மக்கா பள்ளி இமாம் காசிமி அவர்கள் கூறியது சரிதான் என்று மக்கள் முனுமுனுக்க தொடங்கிவிட்டனர்.

சிறைவாசிகளை வழிகெட்டவர்கள் என்று ஃபத்வா வழங்க கூடிய அளவிற்கு ததஜ வின் மாநில செயளாலர் ஜனாப். பாக்கர் அவர்கள் மார்க்க கல்வி பயின்றவரா? அவருக்கு இந்த தகுதியை வழங்கியது யார்? எனபது பொன்ற கேள்விகளை மக்கள் கேட்கின்றார்கள். இதற்காக தமிழகமெங்கும் ததஜ அலுவலகங்களை முற்றுகையிடவும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் திரட்டி ததஜ வினரது இந்த முஸ்லிம் விரோத செயலை அம்பலமாக்கவும் விரைவில் போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளார்கள்.மற்றும் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வரக்கூடிய வாரங்களில் ஜீம்மா பிரசங்கங்களில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரின் இந்த முஸ்லிம் விரோத செயலை கண்டித்தும் அவற்றை மக்களுக்கு கூறியும் தமிழக உலமாக்கள் பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.

செய்தி உதவி : களத்தில் இருந்த சென்னை மற்றும் தென்காசி சகோதரர்கள்

PLEASE HAVE A LOOK AT THESE RELAED LINKS

ததஜ வின் தவ்ஹித் பிச்சாரம் படிப்பதற்கு

ததஜவினரது மிரட்டல்கள் பற்றி அறிய

சிறைவாசிகள் ஃபாசிஸ்ட்டுகள் – ததஜ

Advertisements

1 பின்னூட்டம் »

 1. ஹா ஹா ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹ்ஹாஹாஹாஹாஹ்ஹாஹாஹாஹா.

  கவலை வேண்டாம்.

  சமுதாய மானத்தை சந்தி சிரிக்க வைக்கும் சிலரின் செயல்பாடுகளை கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் மனம் வெறுத்து மனநிலை குழம்பிப் போன ஒரு சகோதரனின் கழிவிரக்கச் சிரிப்புத் தான் இது.

  இது போன்ற சகோதரர்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் பெருகி வருவதாகவும் வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.

  கழிவிரக்கத்துடன்

  இறை நேசன்

  பின்னூட்டம் by இறை நேசன் — ஓகஸ்ட் 6, 2006 @ 9:33 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: