தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 6, 2006

தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 1:39 பிப
கோவையை தகர்க்க பயங்கர சதி தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது

கடந்த மாதம் 23 ம் தேதி அன்று தமிழகமெங்கும் பத்திரிகைகள் அலரின, டிவி சேனல்கள் விடாமல் ஃபிளாஸ் நியுஸ் காட்டினார்கள் துப்பறியும் இதழ்கள் எக்ஸ்குளுசிவ் ஆர்ட்டிகிள் எழுதினார்கள் என்னவென்றால் மும்பை போன்று கோவையில் முக்கிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தவிருந்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் தகுந்த நேரத்தில் முறியடிக்கப்பட்டது. விடிய, விடிய போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கையெறி குண்டு, வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட எட்டு இடங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது என்றும் பிடிபட்ட தீவிரவாதிகளுக்கும் அல்குவைதாவிற்கும் தொடர்பு என்று தினமலர் உள்ளிட்ட பல பத்திரிகைகள் எழுதின. அவ்வாறு தீவிரவாதிகளிடம் பிடிபட்டவை என்றும் அதி பயங்கர வெடிகுண்டு கோவை மாநகரையே தகர்க்க வல்லது என்று பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் காவல் துறையால் காட்டப்பட்ட வெடிகுண்டின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களிடம் கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயதம்

ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், கோவை அரசு மருத்துவமனை, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், அவினாசி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் உட்பட எட்டு இடங்களை தகர்கும் சக்தி வாய்ந்த குண்டைத்தான் நீங்கள் மேலே பார்க்கின்றீர்கள் அதை சற்று கூர்நது கவனித்திர்கள் என்றால் அது உண்மையில் என்னவென்று தெரியும். சாதாரனமாக நமது வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டர் மற்றும் கிரைண்டர் மோட்டர்களில் மேலே கிளிப் செய்யப்பட்டிருக்கும் கண்டன்சர் தான் அந்த உருளை அதன் மேல் கட்டப்பட்டுள்ளது இரண்டு சாதாரண எவரடி பேட்டரி.

அதிபயங்கர அல்குவைதா தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய அதிபயங்கர ஆயதங்களாக காவல்துறையால் காட்டப்பட்டு தினமலர் போன்ற துப்பறியும் பத்திரிகைகள் சிறப்பு கட்டுரை எழுத காரணமான ஆபத்தான பொருள்களின் பட்டியல் : (Click Here to See the news)

பொட்டாசியம் – 40 கிராம்
சிடி கேசட்டுகள்
குர்ஆன்
இஸ்லாமிய பிரச்சாரம் அடங்கிய காகிதங்கள்
உடைந்த கண்ணாடி பாட்டில்கள்
30 மீட்டர் வயர்

கடந்த ஆகஸ்ட் 02 அன்று கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த, விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார் அவரிடம் காவல் துறை கைப்பற்றிய ஆயுதங்களின் படத்தையும் பட்டியலையும் பாருங்கள் :

இந்துக்களிடம் கைப்பற்றப்பட்ட ஆபத்தில்லாத சாதாரண பொருள்கள்??

மூன்று “பிஸ்டல்’
இரண்டு “ஏர்கன்’,
டபுள் பேரல் கன்
எட்டு துப்பாக்கிகள்
துப்பாக்கி குண்டுகள் 930 (காட்ரேஜ்)
“ஏர்கன்’ துப்பாக்கிக்கான குண்டுகள் 600
“பெல்லட்’டுகள்,
129 தோட்டாக்கள்,
இரண்டு கிலோ கன் பவுடர்
மான், புலித்தோல்,
டார்ச் லைட்,
பைனாகுலர்,
கேமரா

இது குறித்து காவல் துறை வெளியிட்ட செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியையும் பாருங்கள் :

கோவையில் துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்! விமானப்படை ஊழியர் கைது (Click Here to See the news)

கோவை : கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த, விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் நடத்திய சோதனையில் பிஸ்டல், ரைபிள் உள்ளிட்ட எட்டு துப்பாக்கிகள், இரண்டு கிலோ கன் பவுடர், காலி தோட்டாக்கள், மான் மற்றும் புலித்தோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸ் குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் தேன்மொழி கூறுகையில்,”கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டவை. வேறு காரணங்களுக்காக இவை பதுக்கி வைக்கப்படவில்லை”

என்னடா உலகம் இது …குர்ஆனும், சிடி கேசட்டும் பிடிபட்டதை கோவை மாநகரையே தகர்க் கூடிய ஆயுதங்கள் பிடிபட்டதாக செய்தி வெளியிடும் காவல்துறை அதை பலமடங்காக்கி ஒரு சமுதாயத்தையே தீவிரவாதிகளாக்க முனையும் பத்திரிகைகள் காரணம் குர்ஆனும் சிடியும் பிடிபட்டது முஸ்லிமிடம்.

கிலோ கணக்கில் வெடிமருந்து, ஆயிரக்கணக்கில் துப்பாக்கி குண்டுகள், வித விதமான இராணுவ உபோயகத்துக்கான துப்பாக்கிகள் இராணுவ பைனாகுலர்கள், அதிநவீன கேமராக்கள் டபுள் பேரள் கண்களுடன் பிடிபட்டால் காவல்துறையினர் அளிக்கும் செய்தியும் அதை பத்திரிகைகள் வெளியிடும் விதமும் “கோவையில் துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்! விமானப்படை ஊழியர் கைது இந்த ஆயுதங்கள் ஆபத்தற்றவை” காரணம் இந்த பயங்கர ஆயதங்களுடன் பிடிபட்டது நாகராஜ் என்ற ஒரு ஹிந்து.

கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்ட வெடிமருந்தும் விதவிதமான இராணுவ துப்பாக்கிகளும் ஆயிரக்கணக்கில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும் ஆபத்தற்றவையா? இதை வைத்திருந்தவன் தீவிரவாதியில்லையா ? என்னடா உலகம் இது?

தீவிரவாதிகள் உண்டாவதில்லை ..இதுபோன்ற பொருப்பற்ற காவல்துறை அதிகாரிகளாலும், பத்திரிகைகளாலும் உண்டாக்கப்படுகின்றார்கள்.இது ஒரு உதாரணமே ஆனால் இதுதான் “தீவிரவாதிகள் கைது, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல், நகரங்களை தகர்க்க சதி” என்று வெளிவரும் செய்திகளின் பின்னால் ஒளிந்துள்ள உண்மை.

இது போன்ற இனப்பாகுபாடுகள் நீக்கப்படாமல் காவல்துறையிலும் பத்திரிகை துறையிலும் உள்ள கருப்பு ஆடுகள் தங்கள் சுய விருப்பு வெருப்புக்களுக்காக சம்பவங்களை திரித்து பாகுபாடுகளுடன் பொய்ச்செய்தி வெளியிட்டு மக்களை பீதிக்குள்ளாக்கி வருவார்களேயானால்’ உண்மை குற்றவாளிகள் என்றும் தப்பியே வருவார்கள் அவர்களை பிடிக்கவும் இயலாது மும்பையில் நிகழ்ந்தது போன்ற பெரும் அசம்பாவிதங்களை தடுக்கவும் இயலாது.

நமது காவல்துறையிலும் பத்திரிகை துறையிலும் ஆழமாக வேர்விட்டுள்ள இந்த இனவெறி, இனப்பாகுபாடுகள் உடனடியாக களையப்பட வேண்டும் அப்போது தான் இந்த நாடு தீவிரவாதிகளின்றி, தீவிரவாதமின்றி அமைதியாக திகழும்.

நன்றி

முகவைத்தமிழன்

பயங்கர சதி தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது

Advertisements

1 பின்னூட்டம் »

 1. பிஸ்மில்லாஹ்
  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  சகோதரரே, இக்கதையையும் உங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியது வரும் என நினைக்கிறேன்.

  தமிழகத்தில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டிய முக்கிய தீவிரவாதி இம்ரான் பிடிபட்டான். திருச்சியில் பதுங்கி இருந்த அவனை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

  சென்னை, ஆக.9-

  கோவை குண்டு வெடிப்” உள்பட த-ழகத்தை உலுக்கிய நாசவேலைகளில், 216 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

  அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

  முஸ்லிம் பாதுகாப்” படை

  இந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு `முஸ்லிம் பாதுகாப்” படை’ (எம்.டி.எப்.) என்ற “திய தீவிரவாத இயக்கம் -ண்டும் வேரூன்றி முளைக்க ஆரம்’த்தது. இந்த இயக்கத்தில் உள்ள தீவிரவாதிகள் அனைவரும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ரகசிய கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினார்கள். இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக போலீசார் களத்தில் இறங்கி இந்த இயக்கத்தை சேர்ந்த 20 தீவிரவாதிகளை கூண்டோடு வேட்டையாடி ‘டித்தார்கள்.

  காயல்பட்டினம், மேலப்பாளையம், நெல்லை, மதுரை, சென்னையில் கொடுங்கைïர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் இந்த தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை கொடுங்கைïரில் தவு’க் என்ற சோட்டு, ஜக்ரியா என்ற ஜாகீர்உசேன் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

  ஆயுதங்கள் பறிமுதல்

  போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் முஸ்லிம் பாதுகாப்” படை தீவிரவாத இயக்கம் முளைத்து வளர தொடங்கியபோதே வேறோடு ‘டுங்கி எறியப்பட்டது. இதில் ‘டிபட்ட 20 தீவிரவாதிகளிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

  இந்த தீவிரவாதிகள் -து சென்னை “ந்தமல்லி பொடா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தவு’க் தவிர மற்ற குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஜா-னில் உள்ளனர்.

  தளபதி இம்ரான்

  முஸ்லிம் பாதுகாப்” படை இயக்கத்தின் தளபதிபோல் செயல்பட்டவன் முகமது இம்ரான் என்ற இம்ரான் (வயது 30). இந்த இயக்கத்தின் தலைவர்களாக செயல்பட்டவர்கள் அ”ஹம்சா, அ”உமர் என்பவர்கள் ஆவர்.

  இம்ரான், அ”ஹம்சா, அ”உமர் ஆகிய 3 பேரும் போலீஸ் வேட்டையில் சிக்கவில்லை. சவுதி அரே’யாவில் தங்கி இருந்ததால் இவர்களை போலீசாரால் ‘டிக்க முடியவில்லை. எனவே இவர்கள் 3 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக கோர்ட்டு அறிவித்தது.

  வலைவீச்சு

  இம்ரான் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவன். துப்பாக்கி சுடும் பயிற்சி, வெடிகுண்டு செய்யும் பயிற்சி பெற்றவன். இவனை விட்டுவைத்தால் ஆபத்து என்று போலீசார் கருதினார்கள். எனவே இம்ரான் த-ழகத்தில் நுழையும்போது அவனை சுற்றி வளைத்து ‘டிக்க திட்டம் தீட்டியிருந்தனர். இம்ரானின் நடமாட்டம் உள்ளதா என்று ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

  இம்ரான் கடந்த 2005-ம் ஆண்டு த-ழகத்திற்கு வந்துவிட்டான். ஆனால் போலீசாரால் அவனை ‘டிக்க முடியவில்லை. மாறுவேடத்தில் சுற்றி திரிந்தான்.

  துப்பாக்கி முனையில் கைது

  கடந்த வாரம் இம்ரான் திருச்சியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவனை ‘டிக்க சி.’.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.’. முகர்ஜி உத்தரவிட்டார். சி.’.சி.ஐ.டி. ஐ.ஜி. துக்கையாண்டி, விசேஷ போலீஸ் படை ‘ரிவு டி.ஐ.ஜி. ராஜேந்திரன், சூப்’ரண்டு அதுப் வாங்கடே, கூடுதல் சூப்’ரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் தீவிரவாதி தளபதி இம்ரானை ‘டிக்க 3 தனி படைகள் அமைக்கப்பட்டன.

  இன்ஸ்பெக்டர் பாலவண்ணநாதன் தலைமையிலான தனி போலீஸ் படையினர் திருச்சியில் முற்றுகையிட்டு பல இடங்களில் தேடினார்கள். இதற்கிடையில் இம்ரான் காயல்பட்டினத்தில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தனிபடை போலீசார் காயல்பட்டினமë விரைந்தனர். போலீஸ் படை காயல்பட்டினம் செல்வதற்குள் இம்ரான் -ண்டும் திருச்சி வந்துவிட்டான்.

  திருச்சி பஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் பாலவண்ணநாதன் இம்ரானை துப்பாக்கி முனையில் கைது செய்தார்.

  வெடிகுண்டு வைக்க சதி

  நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட இம்ரானை உடனடியாக சென்னை கொண்டு வந்தனர். சென்னையில் அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவன் கொடுத்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர். த-ழகத்தில் வெடிகுண்டு வைத்து நாசவேலையில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியதாக போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அவனை -ண்டும் காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என்று தெரிகிறது. விசாரணையின் போது அவன் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

  எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ஆகும். எனது தந்தை பெயர் அப்துல்காதர். நான் 10-ம் வகுப்” வரை படித்துவிட்டு அதன் ‘ன் ஐ.டி.ஐ.யில் ஏ.சி. மெக்கானிக் படித்தேன். கோவை குண்டு வெடிப்” வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாகீர்உசேன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆவான்.

  5 கிலோ வெடிமருந்து

  ஜாகீர்உசேனை போலீசார் தீவிரமாக தேடியபோது அவனிடம் 15 கிலோ வெடிபொருட்கள் இருந்தன. அவற்றை தலா 5 கிலோ வீதம் 3 பேரிடம் கொடுத்து வைத்தான்.

  ஒரு ‘ரிவான 5 கிலோ வெடிமருந்தை என்னிடம் கொடுத்தான். நான் அதை எனது வீட்டு தோட்டத்தில் பாலீதின் பையில் போட்டு “தைத்து வைத்திருந்தேன். ஜாகீர்உசேனை போலீசார் ‘டித்ததும் என்னையும் தேட ஆரம்’த்தார்கள். நானும் மாட்டிக்கொண்டேன்.

  போலீஸ் உளவாளி

  போலீஸ் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்” கொடுத்ததால் கோவை குண்டு வெடிப்” வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் என்னை உளவாளி போல பயன்படுத்தினார்கள். பல முக்கிய குற்றவாளிகளை ‘டிப்பதற்கு நான் உதவி செய்தேன்.

  இதனால் என்னை போலீசார் கவுரவமாக நடத்தினார்கள். கோவை குண்டு வெடிப்” வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து என்னை விடுவித்துவிட்டனர். போலீஸ் தயவுடன் நான் கவுரவமாக வாழ்ந்து வந்தேன்.

  தீவிரவாதிகளுடன் -ண்டும் தொடர்”

  போலீசுக்கு நண்பனாக செயல்பட்டபோதிலும் தீவிரவாதிகளுடன் உள்ள தொடர்பை என்னால் துண்டித்துக்கொள்ள முடியவில்லை. ஐதராபாத்தில் இருந்து அப்துல் அஜீஸ் என்ற தீவிரவாதி என்னோடு அடிக்கடி போனில் தொடர்” கொண்டு பேசுவான். அவனை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டனர். அவனை சுட்டுக்கொன்ற போது அவனது டைரியில் எனது பெயரும், டெலிபோன் நம்பரும் இருந்ததை போலீசார் கண்டு’டித்துவிட்டனர்.

  த-ழகத்தில் முஸ்லிம் பாதுகாப்” படை என்ற தீவிரவாத இயக்கம் வேரூன்றிய தகவலும் அப்துல் அஜிசின் டைரியில் இருந்தது. சென்னையை சேர்ந்த தவு’க் ஜக்ரியா ஆகியோரின் பெயர்களும் அப்துல் அஜிசின் டைரியில் இருந்தன. டைரியில் இருந்த தகவல்களை ஆந்திர போலீசார் த-ழக போலீசாருக்கு தெரிவித்துவிட்டனர். இதை வைத்து தான் த-ழக போலீசார் முஸ்லிம் பாதுகாப்” படை அமைப்பை சேர்ந்த 20 பேரை கைது செய்தனர். எனது வீட்டில் “தைத்து வைத்து இருந்த வெடி மருந்தை -ட்டனர்.

  சவுதிஅரே’யா ஓட்டம்

  இதை வைத்து போலீசார் அப்போது என்னையும் தேட ஆரம்’த்தார்கள். அந்த சமயத்தில் சவுதிஅரே’யா செல்வதற்கு எனக்கு விசா கிடைத்தது. இதை வைத்து நான் சவுதிஅரே’யா சென்றுவிட்டேன்.

  அங்கு ஏ.சி.மெக்கானிக்காக வேலைபார்த்தேன். நிம்மதியாக என் வாழ்க்கை கழிந்தது. முஸ்லிம் பாதுகாப்” படை அமைப்’ன் தலைவர்களான அ”ஹம்சா, அ”உமர் ஆகியோர்களை சவுதி அரே’யாவில் ரியாத் நகரில் சந்தித்து பேசினேன்.

  த-ழகம் வந்தேன்

  இந்த நிலையில் கடந்த ஆண்டு எனது விசா முடிந்துவிட்டதால் சவுதிஅரே’யாவில் இருந்து -ண்டும் த-ழகம் வந்துவிட்டேன். த-ழகத்தில் எனது பழைய தீவிரவாத நண்பர்களை எல்லாம் சந்தித்து பேசினேன். அவர்கள் தயவால் வாழ்ந்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

  இவ்வாறு இம்ரான் கூறி இருப்பதாக தெரிகிறது.

  15 நாள் நீதிமன்ற காவல்

  போலீஸ் விசாரணை முடிந்ததும் இம்ரான் நேற்று சென்னை எழும்”ர் 10-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அலமேலு நடராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். 15 நாள் நீதிமன்ற காவலில் அவனை ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

  இதன்பேரில் இம்ரான் சென்னை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டான். இம்ரான் -து “ந்தமல்லி கோர்ட்டில் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.’.சி.ஐ.டி. போலீசார் கூறினார்கள். தீவிரவாதி தளபதி இம்ரான் ‘டிபட்டது போலீசாருக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

  பின்னூட்டம் by Sirajudeen — ஓகஸ்ட் 9, 2006 @ 5:39 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: