தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 29, 2006

உங்களின் தானதர்மங்களுக்கு தகுதியானவர்கள்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:41 பிப

உங்களுடைய ஜகாத் யாருக்கு?

பேரன்பு மிக்க இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு கோவையிலிருந்து சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பாக வரையும் விளக்க மடல்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

வல்லான் அல்லாஹ்வின் பேரருள் பிரதேசம் எங்கும் நிலவட்டுமாக! அவனுடைய சாந்தியும் சமாதானமும் அண்ணலார் பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அண்ணாரது உற்றார் உறவினர்கள் மீதும் சத்திய ஸஹாபாக்களின் மீதும் தீனை இம்மண்ணில் நிலைநாட்டிட வேண்டுமென்று அயராது பாடுபடும் எல்ல நல்ல உள்ளங்களின் மீதும் நின்று நிலவட்டுமாக! 8½ ஆண்டுகளாக சிறைபட்டு முடங்கி கிடக்கும் நம் சகோதரர்களை மீட்டுவதற்குரிய பொருளாதாரத்தை இப்புனித ரமலான் மாதத்தில் தாங்களின் து ஆவையும், தானதர்மங்களையும் தந்திட வேண்டுமென்பதை கோரும் விளக்கமடல்

நிகழ்ந்தவை

தமிழக சூழுநிலைகளை பற்றி தாங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே! இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் வேரடி மண்ணோடு மண்ணாக ஆக்கிட வேண்டுமென அதிதீவிரமாக செயல்பட்டு வரும் சங்பரிவார் கும்பல்களின் அடாவடித்தனங்களும் அக்கிரமங்களும் எல்லை மீறி சென்றுவிட்டன. இக்கும்பல்களின் தலையாய அக்கிரமமாக இறைஇல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. இக்கொடூர சம்பவம் இந்திய முஸ்லீம்களின் மனதை பெருமளவில் பாதிப்படையச் செய்தது. இதிலும் குறிப்பாக தமிழக முஸ்லீம்களின் மனதை அதிகமாக பாதிப்படையச் செய்தது மட்டுமன்றி வெகுண்டு எழச் செய்தது. காரணம் ஏனெனில் தொடர்ந்து சங்பரிவார் கும்பல்களில் தாக்குதலாக இஸ்லாமிய ஊழியர் ஜின்னா சாஹிப் அவர்களின் படுகொலையும், அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் படுகொலையும், அங்கிங்கென அவ்வப்Nபுhது அப்பாவி முஸ்லிம்களின் மீது நிகழும் தாக்குதல்களும் சிறு சிறு கலவரங்களும் இதற்கு உரிய பரிகார நடவடிக்கை கிடைக்காதது மட்டுமன்றி தமிழக அரசின் பாரபட்ச போக்கினை கண்ட நம் இளைஞர்கள் ஓர் அணியாக திரள்வதை தவிர்க்க இயலாததாகிவிட்டது.
1997 நவம்பர் மாதம் 29-ல் தேதி சங்பரிவார் கும்பல்களும் தமிழக காவல் துறையில் பலரும் இணைந்து கோவை முஸ்லீம்களுக்கு எதிராக நடந்திட்ட கோர தாண்டவம் முஸ்லீம்களை நிலைகுலையச் செய்தது. இக்கயவர்கள் மூட்டிய அநீதி நெருப்பில் முஸ்லீம்களின் 1000 கோடி சொத்துகள் கருகின. 18 முஸ்லிம் இளைஞர்களை காக்கா குருவி போன்று சுட்டுப்பொசுக்கித் தள்ளியது தமிழக காவல்துறை. பயங்கரவாத திமிர்பிடித்த இஸ்ரேல் ராணுவம் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரப்பர் குண்டுகளை பயன்படுத்துகின்றது. ஆனால் சொந்த நாட்டில் எம் சொந்த மண்ணில் எதிரிகளை சுட்டுக் கொல்வது போல் சுட்டுப் பொசுக்கியதை கண்டு பாதிப்படைந்த முஸ்லிம் இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது குற்றுயிரும் கொலை உயிருமாக கிடந்த நம் சகோதரர்களின் மர்ம உறுப்புகளை வெட்டி எறியப்பட்ட ஈனத்தனமான செயல்களையும், அராஜகத்தால் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக் சென்றவர்கள் குற்றுயிரும் கொலை உயிருமாக திரும்பியதையும், மருத்துவமனையில் சிக்கிய சடலங்களைக் கூட விட்டு வைக்காமல் மர்ம உறுப்புகளை வெட்டி தீக்கரையாக்கிய இக்கொடூர செயல்களைக் கண்ட மனித நாகரீகமே வெட்கப்படுமளவிற்கு வாhத்தைகளால் விவரித்திட முடியாத ஈனத்தனமான செயல்கள் நடந்தேறியது.

நடந்து முடிந்த இவ்வக்கிரமான வன்முறையை நியாய உணர்வுள்ள எவராலும் ஜீரணித்துக் கொள்ள இயலாது. அதே சமயம் இவ்வன்முறையை எதிர்கொள்ள இன்னொரு வன்முறை என்பதும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள இயலாது. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. அதே சமயம் இவ்வக்கிரமத்திற்குதிய எதிர்கொள்ளலையும் தீர்வுகளையும் வழிகாட்டுதல்களையும் ஒரிய முறையில் விளக்கி வழிகாட்டிட வேண்டியது அறிஞர் பெருமக்கள் மற்றும் இயக்கத்தலைமைகளின் தார்மீக பொறுப்பாகும். ஆனால் வெட்டி வேதாந்தம் பேசி வெறும் கண்துடைப்பு அறிக்கை வெளியிட்டு சால்ஜாப் செய்து இளைஞர்களை கோழைகளாக்கும் நிகழ்வுகள் ஒருபுறமும் இன்னொரு புறமோ ரத்தத்தை சூடேற்றும் வகையில் தீப்பொரிக்கும் அனல் பேச்சுகளால் இளைஞர்களைத் தூண்டி உணர்ச்சி வசமாக்கிய மடத்தனமான செயல்கள், இங்ஙனம் நிலவி வந்த தமிழக சூழ்நிலைகளால் நம் இளைஞர்களின் ஆற்றல்கள், உழைப்பு என அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் பயனற்றுப் போனது. செல்லரித்துப் போன இந்நிலையினை மீளாய்வு செய்த மீட்டிய வேண்டிட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 1997 நவம்பர் 29 கலவரத்தின் எதிர்வினையாக இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதை வைத்தவர் யார்? இதைச் செய்தவர்கள் யார்? என்பதையெல்லாம் முறையாக விசாரிக்கத் தவறிய தமிழக சிறப்பு புலனாய்வுத் துறை வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களையும், தெருவொரத்தில் தூங்கியவர்களையெல்லாம் கொத்தாகப் பற்றி வாரி வழித்து சகட்டுமேனிக்கு அனைவரையும் சிறையில் அடைத்தது. பலரை இப்போதுவிட்டு விடுவோம் என விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை ஆண்டுகள் எட்டு கட்ந்து விட்டும் இனியும் விட்டபாடில்லை. இங்ஙனம் இவ்வழக்கின் 166 நபர்கள் உள்ளனர். 8 ஆண்டுகளாக சிறைவாழ்வை கழித்துவரும் இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்களது இளமைக்காலம் முழுவதும் சிறையிலேயே கழிந்துவிட்டது. வெளி உலகமே என்னவென தெரியாத சிறுவர்களும் இன்றோ, நாளையோ என மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வயது சிறைவாசத்தில் உரிய சிகிச்சையின்றி சிறையிலே இறந்துபோன முதியவர் தஸ்தகீர் போன்றோர் நிலை விடுதலையாவதற்குள் இன்னும் எத்தனை பேருக்கு என்பது நாம் கொள்ளும் மிகப்பெரிய கவலையாகும்.

தலைவன் இல்லாத குடும்பம்… … …
மகனைப் பிரிந்த பெற்றோர்கள்… … …

வயதான காலத்தில் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் தங்களது எஞ்சிய நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறைப்பட்டவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு திடீரென ஏற்படும் உடல நலக்குறைவுகள், மரணம், திருமண வயதை அடைந்தும் மணமாகாமல் காத்திருக்கும் சிறைப்பட்ட சகோதரர்களின் குடும்பத்துப் பெண்கள், தொடக்க கல்வி பாட சாலை பார்த்திடாத இவர்களின் குழந்தைகள், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடும்ப பாரத்தை சுமந்து வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவர்கள், ஹிஜாபை பேணவேண்டிய குடும்பப் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை கவலையினால் நிரந்தர நோயாளியாகிப் போன தாய், தந்தையர்கள், என அவர்களின் தொடர்சிறை வாசத்தைப் போல இவர்களின் குடும்பங்களின் துன்பங்களும் தொடர் பட்டியல்கவே உள்ளன.

சி.டி.எம் ஓர் அறிமுகம்

இவ்வாறெல்லாம் துன்பங்களும் துயரங்களும் உள்ள இவர்களது வாழ்வுக்கு எந்த நிவாரணமும் உதவியும் செய்ய முன்வராத நிலை, எந்தவொரு அறிஞர்களோ, இயக்கங்களோ முயற்சி எடுக்காத நிலைகண்டு வேதனையிலும் வேதனையாக சிறைபட்டோரும் அவர்தம் குடும்பத்தாரும் செய்வதறியாது நிற்கையில் அல்லாஹ்வின் பேருதவியால் நல்ல மனம் படைத்த சிலரின் ஆலோசனையின் பெரில் பாதிப்பட்டவர்களின் குடும்பங்கயே ஒன்றிணைந்து 2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டன. குடும்பங்களில் நிலவிடும் பிரச்சனைகளை முழுவதும் தீர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வருகிறோம்.

(இந்த எட்டாண்டுகளுக்கு பிறகு பல அமைப்புகள் குரல் கொடுத்து வருவதும் பல அறிஞர் பெருமக்களின் ஆதரவு குரல்களும் ஓரிரு அமைப்புகளின் சிறு சிறு பொருளாதார உதவியும் எங்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது)

எம் பணிகளில் சில :

சிறைபட்டோரின் குடும்பத்தாருக்கு திருமண உதவி, கல்விக்காக என்று 40 குடும்பங்களுக்கும் மருத்துவ செலவுகள் 20 குடும்பங்களுக்கும் சில குடும்ப பெண்களுக்கு தையல் மெஷின் போன்ற சுய தொழில் முனைவு பொருட்கள் வழங்குதல் என உதவிப்பணிகள் செய்யப்பட்;டு வருகின்றன. ஹிஜாப் பேணவேண்டிய பெண்கள் வெளியிடங்களில் வேலைக்குச் சென்று வருவதை தடுக்க ஊ.வு.இ.ன் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு வேலையும் கொடுத்து வருகின்றோம். இக்குழுவின் சார்பாக குறைந்தது 40 குடும்பங்களுக்கு மாதா மாதம் 500 ரூபாய் குடும்ப நல உதவியாக அனுப்பப்படுகிறது. போதிய முதலீடு உதவிகளும் இல்லாததால் இப்பணி குறைவாகவே நடைபெற்று வருகின்றது. தங்களைப் போன்ங நல்லுள்ளங்கள் முன்வந்தால் இப்பணியில் குடும்பங்களின் உதவித்தொகை அதிகமாகவும் கொடுக்கலாம், அண்ணிய ஆடவர்கள் மத்தியில் வேலை செய்து பிழைக்க வேண்டிய அவலநிலையினை போக்கி சகோதரிகள் ஹிஜாப் முறையை பேணி சம்பாதிக்க உரியவகையில் எம் சமூக மக்களுக்கு உதவலாம்.

கண்ணீர் கருத்தரங்கம், மனித உரிமை கருத்தரங்கம், நீதி கோரும் கருத்தரங்கம் என்ற கருத்தரங்கங்கள் பல சமுதாய தலைவர்களின் முன்னிலையில் நடத்தியுள்ளோம். தமிழக மஸ்லீம் மக்களிடையயே சிறைபட்டோரின் விடுதலைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கண்ட நிகழ்ச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி உள்ளோம். எம் நிகழ்வுகளில் பங்கு பெற்ற சமூக ஆர்வலர்களின் சிலர் மனித உரிமை இயக்கத் தலைவர் கண்ணபிரான், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M காதர்மொய்தீன் MP மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், ஹாமித் பக்ரி, M.G.K. நிஜாமுதீன் Ex. MLA TGA. சலாவுதீன் ரியாஜு தேசியலீக் பஷீர் அஹம்மது, M மார்கஸ் போன்றோர்

வழக்குகள் பொருத்தவரையில் கோட்டை அமீர். போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்குகள் போன்ற சில வழக்குகள் அல்லாஹ்வின் உதவியால் விடுதலையாகிவிட்டது. இன்னும் எம் முயற்சிகள் தொடர்கின்றன, பல வழக்குகள் உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்பின் தருணத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றது. அதுபோல கோவை குண்டுவெடிப்பு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் வழக்குகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அரசு நியமித்துக் கொடுத்த போதிய அனுபவமற்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு விசாரணை ஒருவழியாக முடிவடையப் போகின்றன. இன்னும் சில மாதங்களில் இறுதி கட்ட விசாரணை நடக்கும். இச்சமயம் திறமையான சீனியர் வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு உண்டான பொருளாதாரம் கிடைக்கப் பற்றால் வழக்கின் வெற்றிக்கு வாய்ப்பாக இருக்கும். அல்லாங்வின் கிருபையால் இவ்வழக்கிலிருந்து நிறைய சகோதரர்களை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை நிறைய உள்ளன.

எதிர்கால திட்டம்

ஆனால், இன்னும் நடத்திட வேண்டிய வழக்குகளும் ஏராளம்! ஏராளம்! மேலும் வகையில் வாடும் குடும்பத்தின் வாட்டத்தைப் போக்கிடுவதும் மிவும் இன்றியமையாததாக உள்ளன. சட்ட உதவிகள் செய்வதற்குரிய பொருளாதாரம் இல்லாமையால் நம் சகோதரர்கள் நீண்ட காலம் சிறையில் வாடுகின்றனர் என்பதே நிஜம் முழு முயற்சி செய்து விடுதலையாகவில்லையெனில் அதைப்பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கவேண்டியதில்லை அல்லாஹ்வின் நாட்டமென பொறுமை காப்போம். உரிய பொருளாதாரம் கிடைக்காமையினால் சட்ட ரீதியான உதவிகள் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கின்றோம். பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட நம் சகோதரர்கள் பொருளாதார இன்மையால் போதிய அனுபவமற்ற வழக்கிறஞாகளை நியமித்து விசாரணை மேற்கொண்டதால் இன்று தமிழக சிறையில் 75க்கும் மேற்பட்ட வெள்ளை உடை தரித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக உலாவருகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் உரிய பொருளாதாரம் கிடைக்கப்பெற்றால் முழுவீச்சுடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். உச்ச நீதி மன்றம் வரை உடனுக்குடன் செல்ல பொருளாதாரமே தடையாக உள்ளன.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெறும் சகோதரருக்கு மேல் முறையீடு செய்து விசாரிப்பதற்கு கணிசமான பொருளாதாரம் தேவைப்படும் கோவை குண்டுவெடிப்பு அல்லாத வேறு பல வழக்குகளில் தண்டனைப் பெற்ற சகோதரர்களுக்கு மேல் முறையீடு செய்வதற்வே லட்சக்கணக்கில் பொருளாதாரம் தேவைப்படுகிறது. இங்ஙனம் பல வழிகளில் பொருளாதாரத்தின் அவசியம் மிகமிக இன்றியமையாததாக உள்ளன. கோவை குண்டு வெடிப்பு வழக்கிலுள்ள 166 நபர்களின் 40 நபர்களுக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகமும் 8 நபர்களுக்கு கேரள மதானி சகாய கமிட்டியும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை கோவை சிறையில் மட்டும் 115 நபர்களுக்கு பொறுப்பெடுத்து கவனித்து வருகிறது. உரிய பொருளாதாரம் கிடைக்கப்பெற்றால் தமிழகத்தின் மற்றைய சிறைகளில் சிக்குண்டு கிடக்கும் சகோதரர்களுக்கும் உதவிகள் மற்றும் வழக்குகளை கவனிக்கும் என இவ்வறக்கட்டளை தாங்களின் முன் வாக்களிக்கின்றது. வரும் காலங்களில் நம் சமூகத்தின் மீது இழைக்கப்படும் கொடுமைகளையும் பொய் வழக்குகளையும் எதிர் கொள்ள சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்யும் இன்ஷா அல்லாஹ்.

வேண்டுகோள்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். எட்டு ஆண்டுகள் நெருங்கியும் எங்களில் யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய எம் சகோதரர்களுகு;கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுத்து விடுகின்றனர். நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்களாக வெளியே உலா வருகின்றனர். ஏன் சட்ட மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டும் கூட சங்கராச்சாரியார் பிணையில் விடப்படுகின்றார். ஒரு சமுதாயத்தின் எண்ணற்றோர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இவ்வநீதிக்கு எதிராக முஸ்லீம்கள ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும். நமக்கென்ன என்று விட்டு விடுவது நல்ல முஸ்லீம்களின் பண்பு அல்ல.

அண்ணலார் பெருமானார் கூறியிருக்கின்றார்கள்:

அநீதிக்குள்ளாகப்படுபவனை பார்த்துக் கொண்டு தடுக்காமல் விட்டு விடுபவன் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்று கொள்வான் (தபராணி)
அநீதிகளுக்கு ஆட்படுகின்ற ஒருவனுடன் அவன் அந்த அநீதியிலிருந்து விடுபடும் வரை துணை நிற்பவனின் பாதங்கள் சிராத் பாலத்தில் அவன் நடக்கும் போது அல்லாஹ் பலப்படுத்தி வைக்கின்றான. (அஸ் பஹானி)
இவர்களுக்காக குரல் கொடுப்பது, போராடுவது, பொருளாதார உதவிகள் சேய்வது போன்ங அனைத்து உதவிகள் செய்திட வேண்டியது முஸ்லீம்களாகிய நம் மீது கடமையாகும்.

ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவார், அவன் அடுத்தவனை (முஸ்லீமை) அமுக்கவோ அடுத்தவனுடைய உரிமைகளை பறிக்கவோ மாட்டான். சகோதர முஸ்லீமுடைய தேவையை தருபவனுக்கு அல்லாஹு உதவி செய்வான். சகோதர முஸ்லீமுடைய ஒரு துன்பத்தை அகற்றுபவனுடைய துன்பங்களில் ஒன்றை அல்லாஹு மறுமைநாளில் அகற்றுவான். முஸ்லீம் சகோதரருடைய குறையை மறைப்பவனுக்கு மறுமைநாளில் அல்லாஹ் அவனுடைய குறையை மறைத்து அருள் புரிவான் (முஸ்லிம்)

மேலும் அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள். அல்குர்ஆன்(76:8)
முஸ்லீம்களிடம் காணப்பட வேண்டியப பரஸ்பர அன்பு, இறக்கம், தாராளத்தன்மை ஆகியவை ஒரு உடலுக்கு ஒப்பாகும். இந்த உடலில் ஒரு சில பகுதிகளுக்கு வேதனை ஏற்பட்டு விட்டால் உடலின் ஏனைய பகுதிகளும் உறக்கமின்மை, காய்ச்சல் ஆகியவற்றிற்கு இலக்காகி விடுகின்றன. (புகாரி)
இங்ஙனம் பல்வேறு தேவையுடையோராகவும் குறிப்பாக வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற இயலாத வகையில் முடங்கிக் கிடக்கும் இவர்களே! உங்களின் தானதர்மங்களுக்கு தகுதியானவர்கள். ஜகாத்தை பரித்தளித்திட 8 பிரிவினரில் இச்சிறைப்பட்டோரும் ஒருபிரிவனர் ஆவர்.

இன்னும் இவர்களுக்கு உதவுவதே நம் மீது கடமையாகும் என்பதை மேற்சொன்ன ஹதீதுகளும் குரான் ஆய்வுகளிலும் நாம் உணரலாம். ஆகவே, நன்மையை கொள்ளையடிக்க வேண்டிய ரமலான் மாதத்தில் உங்களின் தானதர்மங்களை இவர்களளுக்கு வாரி வழங்குவீர். இல்லாஹ்வின் தாதர் இம்மாதத்தை அடைந்து விட்டால் வேகமாக வீசக்கூடிய புயல் காற்றை விட அதிகமாக தானதர்மங்கள் செய்வார்கள். அண்ணலாரின் அடியொற்றி வாழும் நாமும் இச்சுவனத்தைப் பின்பற்றி சிறை பட்டோரின் நலனுக்கு வாரி வழங்கி மறுமை ஈடேற்றம் என்ற நற்பேற்றினை அடைவீராக! இவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரமாகிய நோன்பு திறப்பதற்கு சற்றுமுன் கேட்கப்படும் துஆவின் இவர்களின் விடுதலைக்காகவும் இதற்காக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் உதவியை நாடி உண்மையுடன்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை
CHARITABLE TRUST FOR MINORITIES என்ற பெயரில் M.O அல்லது DD அல்லது செக்காகவோ எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
CHARITABLE TRUST FOR MINORITIES
Rahim Plastic House
Gnaniyar Nagar
Saramedu, Karumbukkadai
Coimbatore – 641 008
Tamilnadu, India
Ph : +91-422-2307673
Mobile : +91 94436 54473
Email :
kovaithangappa@gmail.com

செப்ரெம்பர் 27, 2006

மதுரை – ததஜ வின் ஆதரவு திமுக விற்கு!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:14 பிப
திமுக வை ததஜ ஆதரிப்பது ஏன்?

கேள்வி: ஜெயலலிதா கமிஷன் போட்டார் என்று கூறி 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை தீவிரமாக ஆதரித்த தவ்ஹிதை தன் அமைப்பின் பெயரில் வைத்துக் கொண்ட ஒருவர், மதுரை மத்தியத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளாரே? – கே.எம்.எஸ். சஹாப்தீன், அடியக்கமங்கலம்

பதில்: இவரது பழைய நிலைப்பாடுகளை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரி யமில்லை. அவர் எப்போதும் ஒரே கொள்கையில், நிலைப்பாட்டில் நிலைத்து நின்றதில்லை.

தமுமுகவிலிருந்து தன்னை விலக்கி விட்டதாக முதலில் புளுகிவிட்டு, பிறகு தானே விலகிக் கொண்டதாக ஒப்புக் கொண்டார்.

இது கொடி தூக்கும் கூட்டமல்ல, கொள்கை காக்கும் கூடாரம் என்றார். பிறகு கொடியை உருவாக்கி, அதை தேர்தல் ஊர்வலங்களில் ஆட்டிக் கொண்டு போகச் செய்தார்.

பச்சைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை என்று முதலில் பச்சைக் கொடிகளை ஏகடியம் பேசியவர், தனது கொடியில் பச்சையை சேர்த்துக் கொண்டு புதுவிளக்கம் கொடுத்தார்.

அரசியல் கூடாது என்று கூறி ஏகத்துவப் பணிகளைச் செய்வதற்காகவே அமைப் பை விட்டுப் போவதாகச் சொல்லிவிட்டு, முழுநேர அரசியல் சித்து விளையாட்டு களில் ஈடுபட்டார்.

தேர்தல் களப்பணி ஈமானையே அழித்துவிடும் என்று கூறிவிட்டு, தேர்தலின் போது முழுவீச்சில் தேர்தல் களப் பணியாற்றினார்.

நரேந்திர மோடியை விடக் கொடியவர் என்று கருணாநிதியை 2006 சட்டமன்றத் தேர்தலில் வர்ணித்துவிட்டு, இப்போது அவர் நிறுத்திய வேட்பாளரை ஆதரிக் கிறார்.

தற்போது முஸ்லிம் வேட்பாளர் என்ற அடிப்படையில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாகச் சொல்லும் இவர், சட்டமன்றத் தேர்தலின்போது புதுக்கோட்டை தொகுதி திமுக
வேட்பாளர் ஜாபரையும், சென்னை பூங்கா நகர் தொகுதி வேட்பாளர் ரகுமான்கானையும், தஞ்சை
தொகுதி வேட்பாளர் உபைதுல்லாஹ் உள்ளிட்டோரை ஏன் எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

சமுதாயத்தை விட, தன்னலமே பெரியது என்ற கொள்கையை உடைய அவர் தன்னிடம் எஞ்சியிருக்கும் ஒருசில ஏதுமறியா சகோதரர்களை தக்கவைத்துக் கொள்ளவே இந்த முடிவை எடுத்துள்ளார். சுயநலனே தனக்கு அனைத்தையும் விட பெரிது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி : TMMKONLINE.ORG

செப்ரெம்பர் 25, 2006

கடமை உள்ளோர்களின் கவனத்திற்கு…

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:30 பிப

இறைவனின் திருப்பெயரால்

கடமை உள்ளோர்களின் கவனத்திற்கு…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

தமிழக சிறைச்சாலைகளில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். சிறைபட்டோரின் துயரை துடைத்திடவும் அவர்தம் நலன்களில் அக்கறை கொண்டிடவும் வேண்டுமென சர்வதேச சமுதாயமான ‘முஸ்லிம்உம்மா’ விடம் சிறுபான்மை உதவி அறக்கட்டளை, ஓர் வேண்டுகோள் மடலை சமர்ப்பிக்கின்றது.

புனிதமிகு ரமலான் மாதத்திஜல் நாம் இருக்கின்றோம். படைத்த இரப்புல் ஆலமீன் திருப்பொருத்தத்தை மட்டுமே வாழ்வியல் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய பயிற்சியைத்தான் இந்த ரமலான் மாத நோன்புகள் நமக்கு படிப்பினையை தருகின்றன.. இப்புனித ரமலானில் வசதிவாய்ப்பற்றோர்களுக்கும் வறியவர்களுக்கும் தங்கள் செல்வங்களை வாரி வழங்கி தங்கள் ‘ஆன்மாவை’ தூய்மைப்படுத்திட தலைப்படுவார்கள் செல்வச் சீமான்கள்.

அங்ஙனம் இவ்வருடத்து ஜக்காத்துகளை யாருக்கு வழங்கிடவேண்டும். தற்போதைய சூழலில் உதவிப்பெறக்கூடிய தகுதிவாய்ந்தவர்கள் யார்? என இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழும் உண்மை முஸ்லிம்கள் உண்மையாக சிந்திப்பார்கள். அத்தகைய தூய உள்ளம் கொண்ட செல்வச் சீமான்களுக்கு மத்தியல் சிறுபான்மை உதவி அறக்கட்டளை – கோவை இக்கருத்தை முன் வைத்துள்ளது. இதை படித்து நல்லதோர் முடிவிற்கு வந்திடவேண்டும் என கோரிய வண்ணம் துவங்குகிறோம்.

உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்பிரயாணிகள், யாசிக்கிறவர்கள், அடிமைகளை விடுவிக்க என ஆறு வகையினருக்கு மட்டுமே! தங்கள் செல்வத்திற்குரிய ஜக்காத்தினை கொடுத்து உதவிட வேண்டுமென அல்லாஹ் சுபஹானுத்தஆலா தன் திருமறைக்குர்ஆனில் 2-177 வசனத்தில் கூறியுள்ளான். அல்லாஹ் (ஜல்) கூறிய இந்த ஆறு வகையினரில் அடிமைகளை விடுவிப்பது தவிர மற்றமுள்ள ஐந்து வகையினருக்கு முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து உதவிகள் தாராளமாக சென்றடைகின்றன. ஆனால் அடிமைகளை விடுவிப்பது என்ற தகுதியிலுள்ளவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து உரிய உதவிகள் சென்றடைவதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். அதிமுக்கியமாக செயலாற்றிடவேண்டிய இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் கவனக்குறைவாக இருப்பது ஏனோ! என புரியவில்லை விலங்குகள் பூட்டப்பட்டு விலங்கினங்களைப் போல் நடத்தபடுபவர்களையும், போர்காலங்களில் சிக்குண்ட கைதிகள் மட்டுமே! அடிமைகள் தரத்தில் உள்ளவர்களாக கருதுவதாலும், அத்தகைய நிலை தற்போது இல்லை என்பதாலும், அடிமைகள் யாரும் இல்லை என இந்த சிறந்த சமுதாயம் முடிவு செய்துவிட்டதோ?

இஸ்லாமிய சமுதாயத்தின் உயர்வுக்கும், அதன் மேலாண்மைக்கும் அதன் கண்ணியத்திற்காகவும், வேண்டி தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி சிறையினுள் சிக்கியவர்களையும், அநீதியாக கைது செய்யபட்;டவர்களும் – அடிமைத்தரத்தில் வரக்கூடியவர்களே! இத்தகையவர்களை அடிமை சிறைவாழ்விலிருந்து மீட்டிட வேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்தின் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். (பர்ளு ஐன்) இப்பணியை ஒவ்வொருவரும் செய்திடவேண்டும் என்பதற்காகத்தான் சிற்சில குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை பொருள் கொடுத்து வாங்கி விடுதலை செய்ய வேண்டுமென்ற சட்டம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சிறைப்பட்ட ஒவ்வொருவரையும் அடிமைதளையிலிருந்து விடுதலையளிக்கும் நோக்குடன் பொருள் உதவிசெய்வது சிறந்ததொரு நன்மையாகும்.

எவரேனும் முஸ்லிமான ஓர் அடிமையை விடுதலை செய்யின் – அவனுடைய ஒவ்வோர் உறுப்பையும் இவருடைய ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றி விடச்செய்வான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறி: அபூஹுரைரா (ரலி) ஆதாரம் புகாரி முஸ்லிம் திர்மிதி’

இத்தகையவர்களுக்கு நிச்சயம் உதவிகள் செய்திட வேண்டும் என அல்லாஹ் ஜல்லஷனுஹுத் தஆலா தன் திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டு கூறியுள்ளான்.

பூமியில் நடமாடித் (தம் வாழ்க்கை தேவைகளை நிறைவேற்ற)எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்களுக்குத்தான் உங்களுடைய தான தர்மங்கள் உரியவையாகும். அல் பகரா :273′

மேலும் அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள் (அத்தஹ்ர் -76.8 )

இத்தகைய நன்மையான அதே நேரத்தில் மிகவும் சிரமமான பணியை இவ்வல்லான் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுபான்மை உதவி அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் செய்திட்ட உதவிகளைக் கொண்டு பல வழக்குகளிலிருந்து இவ்வாறாண்டு காலத்தில் 25-க்கும் மேற்பட்டவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்துள்ளது. தற்போது நமது பணிகள் விரிவடைந்துள்ளன தமிழகமெங்கும் நம் அப்பாவி முஸ்லிம் சகோதரர்கள் மீது பல புதிய பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல சிறைகளில் வாடி வரும் பல சகோதரர்களின் வழக்குகளையும் நாம் கவணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். இப்பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்வதற்கு பொருளாதாரத்தின் அவசியம் மிக மிக இன்றியமையாததாக உள்ளன. இஸ்லாத்தின் பல பணிகளுக்கு உதவிகள் பல தந்துதவுவது போல இப்பணிக்கும் உதவிகள் தந்துதவிட வேண்டும்.

இன்னும் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டுள்ள முஸ்லிம்கள் தமிழக சிறைகளில் அடிமைதளைகளில் கட்டுண்டு கிடக்கிறார்கள். நீண்ட நெடிய சிறைவாழ்வினால் இவர்தம் குடும்பங்கள் முறையாக மூன்று வேளை உணவு உண்பதற்கே திண்டாட்டம் என்கின்ற போது இவர்களால் இவர்களின் குழந்தைகளை எங்ஙனம் படிக்க வைக்க இயலும்! குடும்பங்களை கட்டிக் காக்கவேண்டிய பொறுப்புமிக்க ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் முதிர்கன்னிகளாகிவிட்ட இவர்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள். மூன்றுவேளை உணவிற்கும், படிப்பிற்கும் திண்டாட்டம் என்கிறபோது இவர்களின் வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால் என்னாவது? இங்ஙனம் குடும்ப நிலைகள் ஒரு பக்கம் இப்படியிருக்க அதன் மறுபக்கமோ ஒவ்வொருவரின் மீதும் அடுக்கடுக்காக சுமத்தப்பட்ட வழக்கின் சுமைகள். இவ்வழக்குகளை எதிர்கொள்ள போதிய பொருளாதாரமின்மையால் உரிய முயற்சியினை செய்திட முடியாமல் முடங்கிக் கிடக்கும் அவல நிலை. இவ்வடிமைதளையிலிருந்து இவர்களை விடுத்து இவர்களும் சுதந்திரகாற்றை சுவாசித்திட தங்களின் மகத்தான பங்களிப்பை இப்புனிதமிகு ரமலானில் தந்துதவிடவேண்டும் என மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எத்தனையோ ரமலான்கள் சிறைப்பட்ட நம் சகோதரர்களை கடந்து விட்டன. இந்த வருடத்து ரமலானையும் நமது சகோதரர்கள் சிறையிலேயே சந்தித்துள்ளார்கள். இந்த
ரமலானே இவர்கள் சிறையில் கொண்டாடும் இறுதி ரமலானாக இருக்க நாமனைவரும் துஆ செய்வோமாக.


நாமெல்லாம் நம் முஹல்லாக்களில் ஜமாத்தாக ஒன்றுகூடி நோன்பு பிடிப்பதும், நோன்பு திறப்பதும், குதூகலத்துடன் இரவுத் தொழுகைக்கு கலந்து கொள்வதும் என எத்தனை பூரிப்புடன் ரமலான் நம்மை கடக்கின்றன. பூட்டிய கொட்டறையில் தன்னந்தனியாக நோன்புபிடிப்பதும், திறப்பதும், தனிமையில் இரவு தொழுகை என எட்டாண்டுகளாக சிறைபட்ட சகோதரர்களை விட்டு கடந்துவிட்டன.

காலங்களை நாம் அவ்விடத்தில் இருந்து நாம் அனுபவிக்கும் வேதனையாக உணர்ந்து ஒரு கணம் சிந்தித்தால் அதன் வலியை நாம் உணர முடியும் அப்போதுதான் நம் பிரார்த்தனையும் உண்மையாக இருக்கும் உண்மையாளர்களாவும் இருப்போம். இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நம்மோடு நம் முஹல்லாக்களில் ஒன்று கூடி நோன்பு நோற்று நின்று தொழுது ரமலானை நம்மைப்போல் பூரிப்புடன் கொண்டாடக்கூடிய பராக்கிரமத்தை வல்லான் அல்லாஹ் அருளிடுவானாக என நாமெல்லாம் ‘துஆ’ அங்கீகரிக்கப்படும் நோன்பு திறக்கும் சற்றுநேரத்திற்கு முன்பு உருக்கமாக ‘துஆ’ செய்வோமாக!

நம் முஸ்லிம் சமுதாயம் இயக்கங்கள் ரீதியாக அமைப்புகள் ரீதியாக பலவாறு பிரிந்து கிடப்பது போல சிந்தனைகளும், செயல்களும் பிரிந்தே இருக்கின்றன. இத்துரதிர்ஷ்ட நிலையிலிருந்து நம் சமுதாயம் என்று மீளுமோ? அன்றே நமக்கு விடிவுகாலமாகும். இந்த மின்னஞ்சல் மற்றும் பிரசுரத்தை படிக்கக்கூடிய சகோதரர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இயக்க ரீதியாக இச்சிறைப்பட்ட சகோதரர்களை பிரித்து பார்த்திட வேண்டாம். துன்பத்தில் ஆட்பட்ட ஒரு முஸ்லிமிற்கு தேவை உதவிகளே! அவ்வுதவியை நீங்கள் தாராளமாக தந்துதவிடவேண்டும். ஒருமுஸ்லிமை ஆதரவற்றவராக விட்டுவிடுவது நல்ல ஒரு முஸ்லிமின் பண்பல்ல. இத்தகையதொரு சுயநலப்போக்கு சமுதாயத்தில் தோன்றிவிட்டால் அது சமுதாயத்தின் அழிவிற்கு வழிவகுத்திடும். அநீதிக்கெதிராக குரல்கொடுப்பதும், போராடுவதும், உதவிகள் செய்வதும் ஒவ்வோர் முஸ்லிமின் மீதுள்ள தார்மீகப்பொறுப்பாகும்.

நபிமொழி ஒன்றில் இஃது இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அநீதிகளுக்கு ஆட்படுகின்ற ஒருவனுடன் அவன் அந்த அநீதியிலிருந்து விடுபடும்வரை துணை நிற்பவரின் பாதங்கள் சிராத் பாலத்தில் அவன் நடக்கும் போது அல்லாஹ் பலப்படுத்தி வைக்கிறான். (அஸ்பஹானி)

வஸ்ஸலாம்
இப்படிக்கு

சிறுபான்மை உதவி அறக்கட்டளை

தங்கள் சதக்காக்களை அல்லது ஃபித்ராக்களை அல்லது ஜக்காத்துகளை அவை சிறிய தொகையாக இருந்தாலும் தயவு செய்து சிரமம் பாராமல் அனுப்ப வேண்டிய முகவரி :

CHARITABLE TRUST FOR MINORITIES என்ற பெயரில் M.O அல்லது DD அல்லது செக்காகவோ எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU, KARUMBUKKADAI
COIMBATORE – 641 008
TAMILNADU, INDIA


அத்துடன் தங்களுக்கு இது குறித்து ஏதேனும் தகவல்களோ அல்லது விபரங்களோ தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி :

சகோ. கோவை தங்கப்பா : +91-9443654473

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

செப்ரெம்பர் 24, 2006

நவீன முப்ததிஆக்கள்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:45 பிப
நபித்தோழர்களை விமர்சிக்கும் நவீன முப்ததிஆக்கள்
நெல்லை. இப்னு கலாம் ரசூல்

மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பல. கோபம் தாபம் பாசம் பரிவு ஆசை பொறாமை பெருமை பொறுமை காமம் கஞ்சம் குரோதம் குறும்பு என பல பண்புகளை தன்னகத்தே கொண்ட மனிதனுக்குள் நரகத்துக்கு இழுத்துச் செல்லும் மற்றொரு பண்பும் சேர்ந்தே இருக்கிறது. உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத் தெரியாமல் மறைத்து, தம்மைச் சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புக்கு நயவஞ்சகம் என்று சொல்வார்கள்.

இந்நயவஞ்சகர்கள் அன்றிலிருந்து இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் தோற்றங்களை வைத்து இவர்களை அடையாளம் காண நம்மால் இயலாது. இருப்பினும் இந்நயவஞ்சகத்தின் அடிப்படைகளாகத் திகழும் ஒருசில நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யேபேசுவான்; வாக்களித் தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’ என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:புகாரி)

‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;. பேசினால் பொய் பேசுவான்;. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்’ என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல்: புகாரி)

இத்தகைய நயவஞ்சகர்கள் எவ்வாறு ஈமான் கொள்கின்றார்கள் என்பதை வல்ல அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக அடையாளம் காட்டுகிறான்:-

(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்! என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், ‘மூடர்கள் ஈமான் கொண்டது போல், நாங்களும் ஈமான் கொள்ளவேண்டுமா?’ என்று அவர்கள் கூறுகிறார்கள்;. (உண்மை அப்படியல்ல!) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.(அல்குர்ஆன் 2:13)

அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம்கள் இத்தகைய நயவஞ்சகத்தில் நிலைத்திருக்காமல், திருந்தி, தவ்பாச் செய்து, உண்மை மூமின்களாகத் திகழ பல அறிவுரைகளை அல்லாஹ் அருள்மறையில் வழங்குகிறான். ‘தெரிந்து கொண்டே தாங்கள் செய்கிற தீமையானவற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 3:135)

நயவஞ்சகத்தில் நிலைத்து தம்மை மாற்றிக்கொள்ளாது மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழ மார்க்கத்தில் தடையுள்ளது என்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது.

(நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்களின் தலைவனாகத் திகழ்ந்த) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அவரை கஃபனிடுவதற்காக உங்கள் சட்டையைத் தாருங்கள்! மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்’ என்று கோரினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(கஃபனிட்டு ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்;! நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்’ என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது! என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை’ என்ற (அல்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டி விட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ‘அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்’ என்ற (அல்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது. (அறிவிப்பவர்: இப்னு உமர் -ரலி, நூல்: புகாரி 1269)

நயவஞ்சகர்களுக்காக ஜனாஸா தொழுவதை தடைசெய்த அல்லாஹ், மறுமையில் அவர்கள் நரகவேதனையில் இருப்பார்கள் என்பதை அருள்மறையில் சுட்டிக்காட்டுவதைப் பாருங்கள்:-

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்;. அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.(அல்குர்ஆன் 4:145)

இவ்வாறு அல்லாஹ்வாலும் அல்வாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களாலும் எச்சரிக்கப்பட்ட, இனங்காணப்பட்ட நயவஞ்சகர்களின் நடவடிக்கைகளை வரலாற்று ஒளியில் பார்த்தால் நாம் அதிர்ந்து போவோம்:-

அன்ஸார்களாகிய மதீனவாசிகளின் கிளைக் கோத்திரங்களாகிய அவுஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுக்கு மத்தியில் நடந்துவந்த போர்ச் சூழலை இஸ்லாம் மாற்றியது. மதீனாவில் சகோதரத்துவம் நிலவி துவங்கியது. உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய பேரரசின் தலைவராக நிகழ்தார்கள். எனவே தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தலைமைத்துவம் பறிபோய் விட்டதை ஜீரணிக்கவியலாத அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்ற நயவஞ்சகன், தன் நயவஞ்சக கூட்டத்திற்கு தலைவனாக செயலாற்றத் துவங்கினான். இவனும் இக்கூட்டத்தாரும் போரில் புறமுதுகு காட்டி ஓடினர். முஸ்லீம்கள் என்ற போர்வையிலேயே ஊடுறுவிய நயவஞ்சகர்கள், ஒன்றுபட்டிருந்த முஸ்லிம் சமூகத்தை இரண்டாக உடைப்பதற்காக தனிப் பள்ளிவாயில் கட்டினர். நுபி (ஸல்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணியத்தை கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவி மீது அவதூறைப் பரப்பினர். நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, இஸ்லாமிய எதிரிகளுடன் இரகசியமாகக் கைகோர்த்திருந்தனர். இவ்வாறு அவர்களின் ஈனச் செயல்களின் பட்டியல் நீள்கிறது.

இத்தகைய நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவது கூடாது! என்றும் நயவஞ்சகத்தனம் மன்னிக்கப்படாத குற்றங்களில் ஒன்று என்றும் அல்குர்ஆனின் எச்சரிக்கையைக் கண்டோம். இது நயவஞ்சகத்தின் ஒருபுறம்தான். மற்றொரு புறம் புகாரியில் இடம் பெறும் நபிமொழி கூறுவதைப் பாருங்கள்:-

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்;. அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை (அன்ஸாரிகளை) நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: பராஉ -ரலி ஹதீஸ் எண்: 3783)

வழிகெட்ட கூட்டங்களின் வெளிப்படையான அடையாளங்களில் ஒன்று நபித் தோழர்களை விமர்சிப்பதுதான். அவர்களை விமர்சிப்பது, திட்டுவது, அவர்களின் நம்பிக்கையில் சந்தேகங்களை கிளப்புவது, நமக்கிருக்கும் சாதாரண அறிவு கூட நபித்தோழர்களுக்கு இல்லை என்று அர்ச்சிப்பது, தரம் தாழ்த்தி நாராச நடையில் மேடைகளில் பேசுவது, அன்ஸாரி நபித்தோழர்களை அவமதிக்கும் வாசகங்களை நாக்கூசாமல் கூறுவது, இன்றைய நவீன நயவஞ்சகத்தின் மறுபக்கம். இதனை அறியாமல் வார்த்தை தவறி வந்துவிட்டது அல்லது ஊர் பேச்சு வழக்கம் என்ற ஜால்சாப்புகள் ஒருபுறம்கூறி பசப்பி விட்டு மற்றொரு புறம் மார்க்கம் என்ற பெயரிலேயே நபித்தோழர்களை விமர்சித்துக் கொண்டிருப்பது இவர்களின் இரு முகங்களை மிகத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

மார்க்கத்தின் பல்வேறு விஷயங்களில் தெளிவுபெற, அருள்மறை வசனங்கள் சில இறங்குவதற்குப் பின்னணியாகத் திகழ்ந்த, அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களும் கண்ணிப்படுத்திய உத்தமத் தோழர்களைக் கண்ணியப்படுத்தாமல், கடும் விமர்சனம் செய்யும் இவர்கள்தான் இன்றைய நவீன நயவஞ்சகர்கள்.

நபித் தோழர்களை விமர்சிக்கும் இந்த நவீன முப்ததிஆக்கள் (மார்க்கத்தில் புதிய கருத்துக்களை திணிக்கும் நவீனவாதிகள்) நபிமார்கள் விஷயத்திலும், நபித்தோழர்கள் விஷயத்திலும் சம காலத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் விஷயத்தில் துணிந்து பொய் சொல்வதில் திறமை படைத்தவர்கள் என்பது பலமுறை மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நயவஞ்சகர்களை குறிப்பிட்டு இனங்காட்டினான். எனவே அவர்கள் நயவஞ்சகர்களை மிகத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட நபரை இவர் நயவஞ்சகர் என்று நம்மால் தீர்ப்புக் கூற முடியாது. ஆனால் நயவஞ்சகம் மற்றும் நயவஞ்சகர்களின் தன்மைகளும் நடவடிக்கைகளும் குணாதிசயங்களும் அல்குர்ஆனின் பல இடங்களிலும் நபி (ஸல்) அவர்களின் வாயிலாகவும் மிகத் தெளிவாக அடையாளங்காட்டப்பட்டுள்ளன. இதன்படி நடப்பவர்கள் நயவஞ்சக பண்புக்குரியவர்கள் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

எனவே அல்லாஹ்விடத்தில் நயவஞ்சகத்தை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும். அவர்களின் தன்மைகளை விட்டும் நம்மையும் நம் குடும்பத்தையும் முஸ்லிம் உம்மத்தையும் காப்பாற்ற வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக!

நன்றி: “அல்இர்ஷாத்” வெளியீடூ-2, இஸ்லாமிய அழைப்பகம், ஷாரஃ ஸப்யீன், ஜித்தா இவ்வெளியீடு பற்றி தங்களின் கருத்துகளை alershad@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவும்

நன்றி : இஸ்லாம் கல்வி டாட் காம்

இடஓதுக்கீடு: சமுதாயமே…! தயாராக இரு…!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:55 பிப
கலைஞர் அரசு தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையத்தை ஈராண்டுகள் கால நீட்டிப்பு செய்ததைக் கண்டித்தும், அதில் முஸ்லிம் உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்றும் கூறி சிலர் சலசலப்பை ஏற்படுத்த முயன்று அது தோல்வியில் முடிந்து விட்டது.

இதன்மூலம் சமுதாயம் ஏமாறவில்லை என்பதையும், ‘கமிஷன்’ பிரமுகரின் துர்பிரச்சாரத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதையும் தமிழ்நாடு புரிந்து கொண்டு விட்டது. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், ஆணையம் அமைப்பது தேவையில்லை என்றும், அப்படியே அமைத்தாலும் அதில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதையும், ஆணையம் அமைத்திருப்பது கூட ஒரு சம்பிரதாய நடவடிக்கை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

ஆனால் சிலர் திட்டமிட்டே மீண்டும் மீண்டும் குழப்பினார்கள். ஆணையம் அமைத்து அது ஊர், ஊராக ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு வருடம் தேவைப்படும் என்றும், அதுவும் ஒரு வருடம் என்பதுகூட குறைந்த கால அளவு என்பதும், இதை ஜெயலலிதா கூறியதாகவும் ‘கமிஷன்’ பிரமுகர் கூறி வந்தார்.

ஜெயலலிதா அந்த ஆணையத்திற்கு ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் நீதிபதி குமார ராஜரத்தினத்தை தலைவராகப் போட்டிருந்தார். திமுக அரசு வந்ததும் சமூக நீதி சிந்தனையுள்ள நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனனை தலைவராக நியமித்தார். இதற்கான கால அளவை ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்களாகவும் நீடித்தார்.

இதையெல்லாம் ‘கமிஷன்’ பிரமுகர் விமர்சித்தார். நாமோ, இதில் ஒன்றும் பிரச்சி னை இல்லை. இது ஒரு சம்பிரதாய நடவடிக்கை என்றோம்.

இதோ கடந்த 12.09.06 அன்று திமுக அரசு நியமித்த ஆணையம் இரண்டே மாதத்தில் தனது அறிக்கையை சமர்பித்தது. இடஒதுக்கீடு குறித்து ஆணையம் ஆய்வு செய்வதற்கு ஒரு வருடம் ஆகும் என்றும் ஜெயலலிதா கூறியதாக ‘கமிஷன்’ பிரமுகர் கூறிவந்தார். திமுக அரசு இரண்டு ஆண்டுகளாக நீட்டித் ததையும் கடிந்து கொண்டார்.

ஆணையத்திற்கு ஒரு வருடமும் தேவையில்லை, இரண்டு வருடங்களும் தேவையில்லை! இதோ இரண்டு மாதம் போதும் என ஆணையம் அறிவித்து விட்டது.

இந்த ஆணையம் ஊர் ஊராக அலைந்ததா? புள்ளி விவரங்களை சேகரித்ததா? என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. அது என்னவெனில், ‘தமுமுக கூறி வந்தபடி இது ஒரு சம்பிரதாய நடவடிக்கை’ என்பதே!

இந்த சம்பிரதாய நடவடிக்கை இல்லாமலேயே கலைஞர் கருணாநிதி இடஒதுக்கீடு அறிவிக்கும் நிலையில் இருந்தார். அதுவும் அக்டோபர் மாதத்திற்குள் இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என சட்ட அமைச்சர் பெரியசாமிக்கு ஆணையிட்டிருந்தார். இந்தக் கால அளவு என்பது தமுமுக கேட்டிருந்த ஆறு மாதங்கள் என்பதையும் இங்கே மறந்துவிடக் கூடாது.

ஆனால் அவர் அறிவித்த பின்னால் காவி வெறியர்கள் யாராவது கோர்ட்டுக்குச் சென்று தடை வாங்கி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்போதும் சிலர் ‘கலைஞர் கருணாநிதியின் அஜாக்கிரதையும் கவனக் குறைவும்தான் இதற்குக் காரணம்’ என பழிபோடும் வாய்ப்பு உண்டு.

எதற்கு வம்பு என்றுதான் கலைஞர் கருணாநிதி சம்பிரதாய நடவடிக்கையைக் கூட ஒரு ஆதரவாக இருக்கட்டுமே என்று பயன்படுத்தியுள்ளார். இது அவரது ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு!

அடுத்து ‘தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையம்’ குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. நாம் அப்போதே விளக்கினோம். என்னவெனில் ‘இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான சிறப்பு ஆணையம் இல்லை! 1993லிருந்து வரும் ஆணையம். அரசுகள் மாற மாற தொடர்ந்து புதுப்பிக்கப்படும்’ என்று!

மேலும் இது பல்வேறு பிற்பட்ட மக்களின் பணிகளைக் கவனிக்கும் என்றும் கூறியிருந்தோம். இதையும் சில கிண்டலடித்தார்கள். இப்போது நடந்திருப்பது என்ன?

அந்த ஆணையம் சம்பிரதாய நடவடிக்கை செய்துவிட்டது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மட்டுமே போடப்பட்ட ஆணையமாக இது இருந்திருந்தால், இது அறிக்கையை சமர்பித்து விட்டதும் உடனே கலைக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக மும்பையில் பாபர் மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்து போடப்பட்ட நீதிபதி கிருஷ்ணா ஆணையம். அந்த அறிக் கையை சமர்பித்ததும் கலைக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையம் கலைக்கப்படவில்லையே!

இதிலிருந்தாவது தமுமுக சொன்னதுதான் சரி என்பதை வேறு அமைப்பிலிருக்கும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், ஆணையத்தில் ஒரு முஸ்லிமை போட வேண்டும் என்றார்கள். நாமோ, ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்து முஸ்லிம்கள் நீக்கப்பட்ட பின்னரும் அவரை தூக்கிப் பிடித்துவிட்டு இப்போது சம்பிரதாய நடவடிக்கையாக இருக்கும் ஒரு ஆணையத்தில் ஒரு முஸ்லிமை போட வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களே, ஏன் குழப்பம் செய்கிறீர்கள்? என்றோம்.

இப்போது என்ன குடிமூழ்கிப் போய்விட்டதா? ஒரு முஸ்லிம் இல்லாமலே அறிக்கை, அதுவும் இரண்டே மாதத்தில் தமுமுக கேட்டுக் கொண்டபடி எல்லாம் எளிதாக நடந்து முடிந்து விட்டதே!

எது எப்படியோ! நடந்து முடிந்த நிகழ்வுகள் பொய்களையும், பழி பிரச்சாரங்களையும் தோலுரித்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்துவிட்டது.

எல்லோரும் கேட்டார்கள் ‘எப்போது இடஒதுக்கீடு’ என்று? நாம் சொன்னோம்: ஒரு ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று!

திண்டுக்கல் திமுக மாநாட்டில் தமுமுக தலைவர் வைத்த கோரிக்கையும் ஆறு மாதம் என்பதுதான்! இதோ… கலைஞர் கருணாநிதியுடன் தமுமுக தலைவர்கள் கடந்த 16.09.2006 அன்று மூன்றாவது சந்திப்பை நடத்தியுள்ளார்கள். பல நல்ல விஷயங்கள் பேசப்பட்டன.

இன்ஷாஅல்லாஹ் சமுதாய மக்களே… நமது இலட்சிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற உள்ளன!

தயாராக இருங்கள்! வெற்றி முழக்கமிட!!

செப்ரெம்பர் 23, 2006

ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டது!! (FLASH NEWS)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:19 பிப
ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டது !!
கடையநல்லூர் செப்டம்பர் 23, ஹைகோர்ட் உத்தரவிற்கினங்க கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் கள்ளத்தனமாக ஆக்கிரமித்த தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்டு மீண்டும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் வசம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

கடையநல்லுலர் ஆர்.டி.ஓ முன்னிலையில் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநில துனைத்தலைவர் சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லா ஹாஜா வகையராக்கள் இனி பள்ளியில் எந்த பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் என்று கையெழுத்திட்டு கொடுத்தனர்.

பள்ளியின் அனைத்து வக்ஃப் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் ஜாக்குக்கு மட்டுமே உள்ளது என்ற ஹைகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் பள்ளி இன்று தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரிடம் இருந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் மீண்டும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஒப்படைக்கப்பட்டது. இன்று 23.09.2006 மஃக்ரிப் தொழுகையில் இருந்து அனைத்தும் ஜாக்கால் மீண்டும் நியமக்கப்பட்ட இமாம் ஜனாப் அப்துல்லாஹ் உமரி அவர்களாலேயே நடத்தப்பட்டதாக வரும் தகவல்கள் தெறிவிக்கின்றன.

மேற்கொண்டு விரிவான செய்தி மற்றும் புகைப்படங்களுடன் விரைவில் பட்டனத்தான் அவர்கள் பட்டய கிளப்ப வருவார்.

இத்துடன் எமது அடுத்த ஹாட் ஆர்ட்டிக்கிள் : ததஜ ஜெயாவுடன் செய்த ஹீதைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதா? விரைவில்.

Related Articles :
கடையநல்லூர் பள்ளி பிளாஸ் நியுஸ் உண்மையா?
கண்களை கசக்கி விட்டு பாருங்கள்!!
முந்தானையால் மூக்கை சிந்துகிறார்கள்!!

ஆயிரக்கணக்கில் தமுமுக வினர் கைது!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:03 பிப
ஜெயா வீட்டை முற்றுகையிட திரன்ட தமுமுக வினர்

சென்னை செப்டம்பர் 22, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமைச்செயலாளர் ஜனாப் முனீர் ஹோடா அவர்களை தேசத்துரோகி என்றும் இவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டியவர் என்றும் தொடாந்து தனது முஸ்லிம் விரோத போக்கை காட்டி வரும் ஜெயலலிதாவை கண்டித்து அவரது இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமுமுக கோவையில் கூடிய தனது மாநில செயற்குழுவில் அறிவித்திருந்தது.

கைதாகும் ஆன்களும் பென்களும்

அதன்படி இன்று மாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் ஆன்களும் பென்களும் குழந்தைகளுமாக கடற்கரை சாந்தி சிலை அருகில் கூடி ஜெயலலிதா வீட்டை நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர் அப்போது அவர்களை தடுத்து றிறுத்திய காவல்துறையினர் அங்கு திரன்டிருந்த ஆயிரக்கனக்கான முஸ்லிம்களை கைது செய்து வேணில் ஏற்றி அழைத்து சென்றனர்.

கைதான தமுமுக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது

முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணை பொதுச் செயலாளர் கேப்டன் அமீருத்தீன், மாநிலச் செயலாளர்கள் அ. சாதிக் பாஷா, எஸ். முஹம்மது ஜைனுலாபிதீன், எம். தமிமுன் அன்சாரி, பி. அப்துஸ் ஸமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தடையை மீறி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.எஸ். ஹாருண் ரஷீது, முஹம்மது கவுஸ், முஹம்மது சிராஜுதீன், முஹம்மது ஆரிப், சாதிக் அலி, ஹாஜாகனி உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜெயலலிதாவைக் கண்டித்து அறவழியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களும் அதிகளவில் கலந்து கொண்டனர்.

செப்ரெம்பர் 21, 2006

ததஜவினர் தன்மான சிங்கங்களா?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:02 முப

இஸ்லாமிய சரித்திரத்தை திரித்து கூறும் நிகழ்ச்சிகள், தற்போது டான் டீ.வியில் தஃவா என்ற பெயரில் ததஜவினரால் நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை தூண்டும் வகையில் பாக்கரின் சொற்பொழிவு ஒன்றை சமீபத்தில் டான் டீ.வியில் ஒளிபரப்பியுள்ளார்கள்.

அவரின் சொற்பொழிவில் பிரச்சனைக்குறிய இரண்டு விஷயங்கள்:

1) நபியர்களின் மனைவிகள் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர அனைவரும் கிழவிகள் என்றும் 2) வரகா இப்னு நவ்பல் அவர்கள் யூதர் என்றும் தனது சொற்பொழிவில் பாக்கர் பேசியுள்ளார்.

மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் தவறு என்று சுட்டிக்காட்டிய முகவைத்தமிழனின் கட்டுரையை படிக்கும்போது, ஒரு தவ்ஹீத் இயக்கத்தை வழிநடத்தும் ஒரு நிர்வாகியிடமிருந்து இதுபோன்ற தவறான தகவல்கள் இடம்பெறுமா? அப்படியே சொல்லியிருந்தாலும் சுற்றியுள்ள ததஜவினர் கவனிக்காமலா விட்டிருப்பார்கள்? அதையும் மீறி எடிட்டிங்கிலும் இந்த தவறான விஷயம் கத்திரிக்கோல் வைக்கப்படாமல் இருந்திருக்குமா? போன்ற கேள்விகளை என் மனதில் எழுப்பிய நான், ஏதோ முகவைத்தமிழன்தான் ஒழுங்காக கவனிக்கவில்லை போலும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முகவைத்தமிழனின் கட்டுரைக்கு மறுப்பு எழுதிய ததஜவினரின் விளக்கவுரையை படித்த நான் இந்த மறுப்புரையை எழுதாமல் இருக்கமுடியவில்லை.

நபியர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்கள் கன்னிப்பெண்களாக மணமுடிக்கவில்லை என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு அனைவரும் கிழவிகள் என்று சொல்வது சரித்திர புரட்டல் என்பது தான் இங்கு முதல் பிரச்சினை. நபியவர்களுக்கு வந்தது இறைச்செய்திதான் என்று முதன் முதலில் உண்மைப் படுத்தியவர் வரகா இப்னு நவ்பல் என்ற கிருத்துவ மார்க்கத்தை சேர்ந்த வேத விற்பன்னர் என்பதை மாற்றி யூத மார்க்கத்தை சேர்ந்தவர் என்று பாக்கர் புரட்டி போட்டுள்ளது இரண்டாவது பிரச்சினை.

தவறு செய்பவர்கள் மனிதர்கள். தவறே செய்யாதவன்தான் இறைவன். பாக்கர் விபரம் தெரியாமல் தவறாக கூறிவிட்டார் என்று ததஜவினர் சொல்லிவிட்டால் இப்பிரச்சினை முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிடும். ஆனால் பாக்கரின் தவறுக்கு விரிவுரை வழங்க ததஜவினர் புரப்பட்டுவிட்டதாலும் இந்த சரித்திர புரட்டல்களை உண்மை என்று நிரூபிக்க விவாதம் செய்ய ததஜவினரின் கடையநல்லூர் மதரஸாவில் படிக்கக்கூடிய மாணவர்கள் தயாராக இருப்பதாக கூறுவதாலும், இவர்கள் (ததஜவினர்) எந்த அளவுக்கு வழிகேட்டில் உள்ளார்கள் என்று மக்கள் அறிந்துக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

ததஜவினரின் விளக்கத்திலிருந்து நான் விளங்கிய சில விஷயங்களை பட்டியலிட்டுள்ளேன். அதனைப் படித்து மனதில் வைத்துக்கொண்டு ததஜவினரின் விளக்கத்தை நீங்களும் படிப்பதோடு நின்றுவிடாமல், ததஜவின் பீ.ஜே, பாக்கர் மற்றும் அவர்களின் பொறுப்பாளர்கள் எங்கு வந்தாலும் இதனை காப்பி எடுத்துக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இதனால் ததஜவின் கடைநிலை ஊழியன் எந்த அளவுக்கு வழிகேட்டில் உள்ளான் என்பதை அவர்கள் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

1) ஆயிஷா ரலி அவர்களைத்தவிர மற்றவர்கள், கன்னிப் பெண்களாக இல்லை என்பதும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்துப் பெற்றவர்கள் என்பதும் நாமறிந்த உண்மை. ஆனால் பாக்கரின் வார்த்தைக்கு விளக்கவுரை எழுதிய உளறுவாய் உமர், “வயது முதிர்ந்தவர்கள்” என்ற வார்த்தையை போட்டு நபிகளாரின் மனைவிகள் அனைவரும் கிழவிகளே என்பதை நிறுவுவதற்கு முயன்றுள்ளார்.

இதற்கு பதில், நபிகளாரின் மனைவிகளில் அன்னை ஆயிஷா ரலி அவர்களைத் தவிர மற்றவர்கள் கன்னிப்பெண்களல்ல என்றும் கணவனை இழந்தவர்கள் என்பதைத்தான் பாக்கர் கவனக்குறைவாக ஆயிஷா ரலி அவர்களைத் தவிர மற்றவர்கள் கிழவிகள் என்று சொல்லிவிட்டார் என்று எழுதியிருந்தால் அதுவே அழகான பதிலாக இருக்கும்.

2) யூதர்களையும் கிருத்துவர்களையும் இறைவன் பல இடங்களில் சேர்த்தே கண்டிக்கிறான். ஆகவே ஒரு கிருத்துவரை யூதர் என்று பாக்கர் குறிப்பிட்டு விட்டதால் என்ன தவறு இருக்க முடியும் என்றும், யூதர் என்று சொல்லிவிட்டதால் முஸ்லிமாகிவிடுவாரா என்று கேள்வி கேட்டும், யூதர் என்று சொன்னதால் எந்த அளவுக்கு உயர்ந்துவிட்டார் என்றும் சொல்லி, “ஒரு கிருஸ்துவராக இருந்தவரை யூதர் என்று சொல்லும் அளவுக்கு ஏனப்பா விபரமில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று சொன்னதை மறக்கடிக்க முன் வருகிறார்கள்.

3) ததஜ சகோதரர்கள், (அசத்தியமான விஷங்களில்) மற்ற தவ்ஹீத்வாதிகளை விவாதத்திற்கு அழைப்பதன் காரணம், இதுபோன்ற சம்பந்தமில்லாத விளக்கங்களை கொடுத்து பார்வையாளர்களாக வந்தவர்களை பிரச்சினைக்குறிய கேள்வி என்ன என்பதை மறக்கடிக்க வைத்துவிட்டு, தங்களிடம் உண்மை இருப்பதுபோல் ஒரு பிம்பத்தை தோற்றுவிப்பதற்குத் தானா?

வரகா இப்னு நவ்பல் ஒரு கிருத்துவராக இருந்தார் என்பது இஸ்லாமிய சரித்திரம் சொல்லும் உண்மை. ஆனால் அவர் ஒரு யூதர் என்று தவறான குறிப்பை சகோதரர் பாக்கர் அவர்கள் தந்துவிட்டார் என்பதை சரிகட்ட, அதனைச் சுட்டிக்காட்டியவருக்கு ததஜ சகோதரர்கள் கொடுத்த பதிலைப் படித்தால் இவர்களின் விவாதத் திறமை என்னவென்பதை அறிய முடிகிறது.

4) தங்களின் இமாம்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்பது ஷியாக்களின் கொள்கை. அதுபோல தங்களின் பொதுச் செயலாளர் பாக்கர் சொன்னது தவறே இல்லை என்று நிறுவ முன்வருகிறார்கள். விடியல்காரர்களை ஷியாக்களின் கொள்கையை பின்பற்றுபவர்கள் என்று வாய்கிழிய விமர்சனம் செய்த பீஜேயானிகள், அத்தவறை தாங்களே செய்யும்போது வாய்மூடி இருப்பதுதான் ததஜ தலைமையின் தனித்தன்மையா?

5) இஸ்லாமிய LKG பாடத்தினைக் கூட தெரியாத பாக்கரின் தவறுகள் அடங்கிய சொற்பொழிவை, டான் டீ.வியில் தொடர்ந்து ஒளிப்பரப்ப உதவியாக, தங்களின் வசூலுக்கு பங்கம் வந்துவிடக்கூடாதே என்பதற்காகவா தவறுகளை மறைக்க இதுபோன்ற விரிவுரை எழுதுகிறார்கள் என்ற கேள்வியை முன்வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ததஜவின் கடைநிலை தொண்டனை தள்ளிவிடுகிறது ததஜவினரின் மறுப்புரை.

6) ததஜ அமைப்பில் யாராவது நல்ல மனம் படைத்தவர்கள் இருந்தால், ததஜவினரின் இந்த பதில் மூலம், எந்த அளவிற்கு அவர்கள் வழிகேட்டில் கொண்டு சென்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தங்களின் மண்டையை குளோரக்ஸ் போட்டு ததஜவின் தலைமை கழுவி உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

7) ஒரு காலத்தில் சுய பரிசோதனை பற்றிய சொற்பொழிவில் தான் சொல்வதெல்லாம் சரி என்று ஒரு கூட்டம் உருவாவதை கண்டித்த பீ.ஜே, தற்போது தங்களை வணங்கக்கூடிய கூட்டம் உருவாவதை கண்டும் காணாமல் இருந்து வருவதால், பீ.ஜே மற்றும் பாக்கர் உயிரோடு இருக்கும்போது அவர்களின் கூற்றில் தவறே இல்லை என்று விரிவுரை எழுதும் ததஜவினர், பீ.ஜே மற்றும் பாக்கர் இறந்துவிட்டால் எந்த அளவுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு அழைய போகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது.

8) கடையநல்லூர் தவ்ஹீத் மரரஸாவில் படிக்கக்கூடிய ஒரு மாணவரை வைத்து பாக்கர் சொன்னது சரிதான் என்று நிரூப்பிக்கப் போகிறார்களாம். அப்படியென்றால் இவர்கள் உருவாக்கி வரும் மவ்லிகளின் தரம் இதுதான் என்பதை ததஜவின் கடைநிலை ஊழியன் அவசியம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

9) தவறான விஷயங்கள் தவ்ஹீத் மேடைகளில் வெளிப்பட்டால் சீட்டு எழுதி கொடுக்கக்கூடிய ஆட்கள் அனைவரும் ததஜ-வை விட்டு வெளியேறிவிட்டார்களா? எனவே அத்தவறான தகவல்கள் எடிட்டிங் செய்யும்போதுகூட பொறுப்பாளர்கள் பார்க்கவில்லையா? அல்லது தவறு என்று உணரவில்லையா? அல்லது அந்த அளவுக்கு ததவின் அனைத்து பொறுப்பாளர்களும் ஞான சூன்யமாகிப் போகிவிட்டார்களா என்பதுபோன்ற உபரி கேள்விகளும் எழுகின்றன.

10) ததஜவினர் தங்களின் மறுப்புரையில் வரகா இப்னு நவ்பல் அவர்களை “நவ்பல் இப்னு வரகா” என்றும் எழுதியிருப்பது இவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

11) பாக்கர் அவர்கள் தியாகி என்று எழுதியுள்ளார் அந்த மறுப்புரையில். பாக்கர் தியாகியா இல்லையா என்பதை அடுத்தது பார்ப்போம். பாக்கர் சொன்னது சரித்திர உண்மை என்று லூசுதனமாக எழுதிய “உளறுவாய் உமரை” அல்லது “அப்படி எழுதி கொடுத்தவரை” அல்லது “எழுத அனுமதி வழங்கியவரை” செருப்பால் அடித்துவிட்டு அவர் உண்மை முஸ்லிம் என்று நிரூபிக்கட்டும்.

12) ஆன்லைன் பீ.ஜே டாட் காம் தளத்தில் வரகா இப்னு நவ்பல் யார் என்று கேட்டால், யூதர் என்று எழுதுவார்களா? கிருஸ்துவர் என்று எழுதுவார்களா? அவர் ஒரு யூதர் என்று யாராவது பதில் அளித்திருந்தால் அவரும் சரியான பதிலை எழுதியிருப்பதாக முன்வருவார்களா?

ததஜவினர் உண்மையில் தன்மான சிங்கங்களாக இருந்தால், மேற்கண்ட கேள்விகளை தங்கள் தலைமையிடம் நேரடியாக கேட்பார்கள். அவர்கள் உண்மையில் தக்லீது வாதிகளாக இருந்தால், உளறுவாய் உமர் அல்லது ஏதேனுமொரு பிஜேயானி எழுதப்போகும் சமாளிஃபிகேஸனில் திருப்தியுறுவார்கள்.

சஹாபாக்களையும், இறைத்தூதரரையும் கண்ணியக்குறைவாக எழுதுவதும் பேசுவதும் ததஜவினரின் முழுநேர தஃவா பணியாக மாறிவிட்டபொழுது, அதனை கடுகளவுகூட கண்டிக்காத சில சகோதரர்கள், ததஜவினரை விமர்சனத்துக்கு உட்படுத்தினால் கொதித்தெழுகிறார் என்றால், ஈமான் எந்த அளவுக்கு துருப்பிடித்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

எனக்கும் உங்களுக்கும் இறைவன் நேர்வழியை கொடுத்து, ததஜ என்ற நவீன கால முஃதஸிலாக்களின் பிடியில் இருந்து தமிழ்முஸ்லிம்களை இறைவன் காப்பாற்றுவானாக, ஆமீன். ஆமீன்.

இப்படிக்கு
அப்துல்லாஹ்

ததஜவினரின் விளக்கத்தை இங்கு கிளிக் செய்து படியுங்கள்.
இஸ்லாம் முஸ்லிம் இஸ்லாமியர்கள்

செப்ரெம்பர் 20, 2006

ததஜவின் கிசுபுள்ளா பாக்கர்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:06 பிப

அன்புள்ள முகவைத்தமிழனுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

கிசுபுள்ளா பாக்கர் விஷயமாக தாங்கள் எழுதியிருந்த கிசுகிசுக்களை பார்த்தோம். இன்று நேற்றல்ல ததஜவின் உயர்மட்டக்குழுவில் உள்ள அனைத்து நிர்வாகிகள் பெயரிலும் இதைப் போன்ற உறுதியான ஆதாரங்கள் உள்ள பல கிசுகிசுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை எவ்வளவு தான் நீங்கள் வெளிக்கொண்டு வந்தாலும் உண்மையை திரிப்பதற்கென்றே அவதாரம் எடுத்துள்ள உளறுவாய் உமர், அதனை சர்வசாதாரணமாக நியாயப்படுத்தத்தான் செய்வார்.

ஏனெனில், தவறுகள் மிகைத்து விட்டால் அவையெல்லாம் நியாயமானதாகவே தோன்றும். எந்தவொரு குற்றவாளியும் தனது செயலை நியாயப்படுத்தி வருவதையே நாம் காண்கிறோம்.

யூதருக்கும் கிருத்தவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்டுள்ளார் திரு உளறுவாய் உமர் உண்மையில் யூதர்கள் தமது சமூகத்திற்கு வந்த தூதர்களையும் சமூகத்தில் இருந்த நல்லோர்களையும் கொலை செய்தே பழக்கப்பட்டவர்கள்.

கிருத்தவர்கள் தமது சமூகத்திற்கு வந்த இறைத்தூதரை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து அல்லாஹ்விற்கு இணையாக அல்லது அல்லாஹ்விற்கு மேலாக உயர்த்திக் கொண்டவர்கள்.

இந்த ததஜவினர் யூதர்களின் வழிமுறையை பின்பற்றி இஸ்லாமிய சமூகத்திற்குள்ளாகவே கொலை வெறித் தாண்டவமாடி வருகின்றனர்.

அதே போல் கிருத்தவர்களின் வழியைப் பின்பற்றி தனது தலைவரை (கிரிமினல் பிஜேவை) அளவுக்கு அதிகமாக உயர்த்தியும் புகழ்ந்தும் வருகின்றனர்.

இந்த யூத கிருத்தவர்களை தமது முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட காரணத்தினால் அவர்களுக்கு யூதருக்கும் கிருத்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை போலும்.

சஹாபாக்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து விட்ட காரணத்தினால் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உம்முல் முஃமின்களையும் சஹாபிய பெண்மணிகளையும் விமர்சிக்க இறங்கி விட்டார்கள் போலும்.

கடந்த ரமளானில் அந்த ‘அந்த 72 கூட்டத்தினர்’ என்ற பெயரில் சஹாபா பெருமக்களை விமர்சித்தவர்கள் இன்று இப்படி இறங்கி இருக்கிறார்கள் என்றால், இந்த வருட ரமளானின் முன்னோட்டமோ இது.

பொதுவாகவே, மரியாதைக்குரிய எவரையும் கிழவன் கிழவி என்று எவரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். இப்படி உம்முல் முஃமின்களை விமர்சனம் செய்த பாக்கருக்கு என்ன 18 வயதா? அவர் குடும்பத்தில் உள்ளவர்களை உறவு முறையை சொல்லாமல் இப்படித்தான் கிழவன் என்றும் கிழவி என்றும் குறிப்பிடுவாரோ?

நாம் அறிந்தவரை இராமநாதபுர மாவட்டம் என்றில்லாமல் எந்த பகுதியிலுமே நெருக்கமான உறவினர்களை கிழவன் கிழவி என்று குறிப்பிடக்கூடியவர்கள் இல்லை.

ஒருவேளை ததஜவின் தரத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் இப்படித்தான் நாங்கள் எங்களது குடும்ப உறுப்பினர்களை (தாய் தந்தையரை) அழைப்போம் என்று கூட ஒருவேளை வக்காளத்து வாங்க உளறுவாய் உமர் முன்வரலாம்.

உம்முல் முஃமினீன்கள் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தாய் ஸ்தானத்தில் உள்ளவர்கள் ஆவார்கள். இதனை மறுப்பவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்க தகுதியற்றவர்கள்.

முகவைத்தமிழன் அவர்களே! ததஜவோடு மல்லுக்கு நிற்பதனால் சற்று மூலை குழம்பி விட்டீர்களோ? எந்த விவாதத்திற்கய்யா அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒப்புக் கொண்ட களியக்காவிளை விவாதம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தோல்வியை தந்ததென்று அறிந்த பிறகும் உங்களின் சவாலை ஒப்புக் கொள்ள அவர்கள் என்ன மாங்கா மடையர்களா?

பொறுத்திருந்து பாருங்கள், இதற்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்லி அபுஅப்துல்லாஹ்விடமிருந்து, பழுலுல் இலாஹியிடமிருந்து, ஹாமித் பக்ரியிடமிருந்து, முஜீபு உமரிடமிருந்து நாடகமாடி தப்பித்து ஓடியது போல் உங்களிடமிருந்தும் ஓடுவதற்கு நாடகம் தயார் செய்வார்கள். எனவே காத்திருந்து ஏமாற வேண்டாம்.

‘அடுத்து அவர் அள்ளி வீசிய பொய்களில் நவ்பல் பின் வரக்கா அவர்களை யூதர் என்று குறிப்பிட்டதாகும்’ என்பது உ.உ.கூ.உமரின் கூற்றாகும்.

நவ்பல் என்பவரின் வாப்பா வரக்காவா? வரக்கா என்பவரின் வாப்பா நவ்பலா?

வரக்கா பின் நவ்பல் என்பது தான் ஹதீஸ்களில் நமக்குக் கிடைக்கும் தகவலாகும்.

உ.உ.கூ.உமர் ஆத்திரப்படாமல் கவனமாக ஹதீஸ்களை படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆத்திரப்பட்டால் முகவைத்தமிழனிடம் சரியாக மாட்டிக் கொள்ள வேண்டியது வரும்.

நிதியளிப்பவர்களே நியாயவான்களே உங்களின் பொருளாதாரத்தை இத்தகைய இஸ்லாமிய எதிரிகளுக்கா வழங்கப்போகிறீர்கள்.

கான் சாயபு 20.09.2006

செப்ரெம்பர் 19, 2006

ததஜ வின் S.M பாக்கர் மார்க்க அறிஞரா? (REVISED)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:45 பிப
*********************************************************
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பின் சொந்தங்களே,நாம் இங்கு ஆதாங்கத்தில் ஆதாரப்பூர்வமாக வைத்த ஒரு வாதத்திற்கு எப்படி அசாதரனமாக நியாயப்படுத்தி ததஜ வினர் பதில் அளித்துள்ளார்கள் என்பதை காணவும்.

ததஜ வினர் பதில் டவுன்லோட் செய்வதற்கு
எமது அடுத்த பதிவில் ததஜ வின் முக்கிய புள்ளிகளின் காம லீலைகள் ஆடியோ வீடியோ ஆதாரங்களுடன். உலகம்?? முழுவதும் ரமாழான் வசூலுக்காக வேண்டி சூராவளி சுற்றுப்பயனத்தில் வந்து உங்களிடம் தாயிகளாகவும் மார்க்க அறிஞர்களாகவும் வேசமிடும் ததஜ நிர்வாகிகளின் உண்மை முகம் காம வெறியர்களான இவர்கள் காம பித்து தலைக்கேறி தவ்ஹித் என்ற பெயரில் மாற்றான் மணைவிகளுடன் போட்ட காம கழியாட்டங்களும் மாற்றான் மணைவிமார்களை கர்ப்பமாக்கி தவ்ஹித் பிரச்சாரம் செய்த விபரங்களும் ஷ்யாமாலாக்களுடன் மாநில செயளாலர்கள் நடத்திய தனிக்குடித்தனங்களும் அம்பலமாக்கப்படும்.

அத்துடன் இது குறித்து எந்த ஒரு பொது மேடையிலும் அல்லது லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விவாதிக்க நாம் தயார்.

நன்றி
முகவைத்தமிழன்
KEEP WATCH WWW.TMPOLITICS.NET
*********************************************************
உம்முல் முஃமினீன்களை பற்றி வாய்க்கு வந்தவாறு பொய்களை அள்ளி வீசி நபிகளின் வாழ்க்கை வறலாற்றை திறிக்கும் ததஜ வின் கிசுபுள்ளா எஸ்.எம் பாக்கர்

ததஜ வின் கிசுபுள்ளா எஸ்எம்.பாக்கர் (வெள்ளையில்)

தகுதியானவர்கள் பலர் இருக்க அவர்களை புறக்கனித்து தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பவர்கள் இறைவன், இறைத்தூதர், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோருக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவராவார். – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நூல் – ஹாகிம்)

அதே போல்தான் தாவா செய்வதற்கு மார்க்கத்தை தெளிவாக அறிந்த பல தாயிகளும் மார்க்க அறிஞர்களும் இருக்கும் வேலையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் என்ற அமைப்பினர் மார்க்க அறிவு சிறிதும் இல்லாத மாபெரும் பொய்யன் ததஜ வின் கிசுபுள்ளா எஸ்.எம் பாக்கர் என்பவரை மார்க்க மாமேதை போலவும், பெறிய தாயி என்றும் கூறி தகுதியில்லாத இவரை தாயி என்றும் மார்க்க அறிஞர் என்றும் கூறி பொருப்புக்களை ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 14.09.2006 வியாழன் அன்றுமு; பின்னர் 15.09.2006 வெள்ளியன்றும் டான் டிவி யில் ஒளிபராப்பான இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில் இந்த பொய்யர் ததஜ வின் கிசுபுள்ளா எஸ்.எம் பாக்கர் சென்னை துறைமுகத்தில் நமது பெண்கள் மத்தியில் ‘அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்’ என்ற தலைப்பில்’ ஆற்றிய உறை ஒளிபரப்பபட்டது அதை எதேச்சையாக கண்ட நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். ஏனென்றால் இந்த பொய்யன் பாக்கர் மாபெரும் மாக்க மேதை என்று தன்னை என்னிக்கொன்டு நபிக்ள நாயகம் ரசூல் (ஸல்) அவர்களின் மேல் பொய்யுரைத்து இஸ்லாமிய வறலாற்றை மாற்றி கூறிக்கொண்டிருந்தார். அத்துடன் நிற்காது ‘உம்முல் முஃமினீன்’ இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்கள் என்றழைக்கப்படும் நபிகள் நாயகத்தின் மணைவிகளை பற்றி வாய்க்கு வந்தவாறு பொய்களை அள்ளி வீசி மறியாதை இன்றி பேசினார்.

ஒரு சாதாரன பாமரனுக்கு தெறிந்த மாக்கம் கூட இந்த பொய்யர் பாக்கருக்கு தெறியவில்லையா அல்லது தெறிந்தே யாருடனோ சேர்ந்து செய்யும் சதிச்செயலாக மார்க்கத்தை மாற்றும் முயற்சியா?

நபிகள் நாயகத்திற்கு வஹி எனும் இறைத்தூது வந்ததை குறிப்பிடும்போது அவரை கதிஜா நாயகம் அவர்கள் வரக்கா என்பவரிடம் அழைத்து சென்றதாகவும் அவர்தான் நபி என்று அறிவித்ததாகவும் கூறியவர் திடீரென்று எதற்கோ செய்யும் முன்னேற்பாடு போல் வரக்கா பின் நவாஃபல் யார் தெறியுமா ? அவர் ஒரு யூதர் என்று ஒரு மாபெரும் பொய்யை நபிகளாரின் வறலாற்றின் மீது இட்டுக்கட்டியவராக வறலாற்றை திறிக்கும் முயற்சியல் தான்ஈடுபட்டுள்ளதை அடையாளப்படுத்தினார்.

ஆனால் உண்மை வறலாறு என்ன? வஹி வந்ததன் பின்னர் கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரை அழைத்துக் கொண்டு வரகா பின் நவாஃபல் ஒரு வயது முதிர்ந்த மார்க்கப்பற்று மிக்க கிறிஸ்தவராவார். இவர் தவ்ராத் வேத விற்பன்னர். கதீஜா (ரலி) அவர்கள் அப்பெரியவரிடம் நடந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிவித்தார்கள். இவற்றைச் செவியுற்ற வரகா ‘அவர் மூஸா (அலை) அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதே (மறைவான உண்மைகளை அறிந்த) வானவர் ஆவார். அந்தோ! (முஹத்ததே) உங்களை உங்கள் சமூகத்தார் இந்நகரை விட்டு வெளியேற்றும்போது நான் உயிரோடு இருக்கக் கூடாதா!’ என்று பெரு முச்சுசிட்ட வண்ணம் கூறினார். அண்ணலார் வியப்புற்று ‘என்ன, எனது சமூகம் என்னை வெளியேற்றிவிடுமா!’ என்று வினவினார்கள். அதற்கு அப்பெரியவர் ‘ஆம்! நீர் கொண்டு வந்திருக்கும் இந்தச் செய்தியை இதற்கு முன் கொண்டு வந்த எந்த மனிதரையும் அவரது சமூகத்தார் பகைத்தே வந்திருக்கினறார்கள். நான் அந்த நேரத்தில் உயிருடனிருந்தால் உங்களுக்குத் துணைபோவேன்’ என்று கூறினார். இதற்குச் சில நாட்களுக்குள்ளயே வரகா இறையடி சேர்ந்துவிட்டார். இந்த வரகா பின் நவாஃபல் என்பவர் ஒரு கிருத்துவர் என்றும் வேத விற்பன்னர் என்றும் ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த உண்மையைத்தான் பொய்யன் பாக்கர் மறைத்து அவரை ஒரு யூதர் என்று அடையாளப்படுத்த முற்படுகிறார்.

அத்துடன் நிற்காது நபிகளாரின் மனைவிமார்களை பற்றி பேசும்போது அவர்களை சாதாரன பெண்களுடன் ஒப்பிட்டு சரிசமமாக பேசியதோடல்லமல் மறியாதை இல்லாமல் ‘உம்முல் முஃமினீன்’ இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களை கிழவிகள் என்று அவமறியாதை செய்யும் விதமாக பேசினார். அதாவது நபிகள் நாயகம் அவர்கள் கல்யானம் செய்தது அத்ததையும் யார்? ஆம்பது அம்பத்தஞ்சு வயசுக்கு மேல் உள்ள கெழவிகள் ..அவ்வளவும் கெழவிகள் …ஒரே ஒரு கொமரியத்தேன் (குமரி) ரசுலுல்லா கல்யானம் முடிச்சாங்க..என்பதாக இவரது பொய் நீழ்கின்றது.

நாம் மார்க்க அறிஞரோ அல்லது தாயியோ அல்ல ஒரு சாதாரன முஸ்லிம் எனக்கு தெறிந்த மாhக்கமும் வறலாறும் தாயியாக அடையாளம் காட்டப்படும் இந்த மாபெரும் பொய்யன் எஸ்.எம் பாக்கருக்கு தெறியாமல் போனது ஏன்? அல்லது தெறிந்தே பொய்யுரைத்து இஸ்லாமிய வறலாற்றை திறித்து பி.ஜே நபித்தோழர்களை அவமானப்படுததி தரம் தாழ்த்தி பேசியது போல் இவர் ‘உம்முல் முஃமினீன்’ இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களையும் அவர்தம் தோழியரையும் கண்ணியக்குறைவாக பேசி எதற்கு வழி வகுக்கிறார்? இவருக்கு மார்க்கம் தெறியவில்லை என்றால் இவரை இது போன்ற கூட்டங்களில் பேச விடுவது ஏன்? அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது ஏன்?

நபிகள் நாயகம் அவர்களின் வறலாற்றின் படி நபிகள் நாயகம் கிழவிகளை கல்யானம் முடித்ததாக எங்குமே கூறப்படவில்லை மாறாக அவர்கள் முடித்த திருமனங்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் கண்ணிப்பெண் என்றும் மற்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில் விதவையாகவோ அல்லது மணமுறிவு பெற்றவர்களாகவோ தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் அவர்கள் 12 திருமணம் முடித்தார்கள் அதில் 11 மணைவிகளின் பெயர் எனக்கு நினைவில் உள்ளது.

அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)
அன்னை சௌதா பின் சமாஆ (ரலி)
அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
அன்னை உம்மு ஸலமா (ரலி)
அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித்(ரலி)
அன்னை மைமூனா பின்த் ஹாரித் (ரலி)
அன்னை ஆயிஷா (ரலி)
அன்னை ஷஃபிய்யா பின்த் ஹுயைய்(ரலி)
அன்னை ஜனப் பின்த் ஃகஸீமாஹ் (ரழி)
அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி)
அன்னை உம்மு ஹபீபா ரம்லா (ரலி)

இதில் அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் திருமணம் செய்யும் போது அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களின் வயது 40 (நாற்பது) நபிகளுக்கு வயது 25 (இருபத்தி ஐந்து) என்று தெளிவாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அன்னை ஷஃபிய்யா பின்த் ஹுயைய்(ரலி) அவர்களை நபிகள் நாயகம் திருமணம் செய்யும் போது அன்னை ஷஃபிய்யா பின்த் ஹுயைய்(ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு 30 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவராகவே தெளிவாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது இறைவன் நடத்தி வைத்த திருமணம் ஆன அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி) மற்றும் நபிகள் நாயகத்தின் திருமணத்தின் போது அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி) வய்து எத்தனை என்பதை அனைவரும் அறிவர்.

இந்த பொய்யன் பாக்கருக்கு நாம் சவால் விடுகின்றோம் நபிகள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்கள் கல்யானம் முடித்த ‘உம்முல் முஃமினீன்’ இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்கள் அனைவரும் கிழவிகள் தான்’ என்று நிறுபிப்பதற்கு!! உன்னால் நிறுபிக்க முடியுமா?

அத்துடன் வரகா பின் நவாஃபல் அவர்கள் ஒரு யூதர் என்று உம்மால் தக்க ஆதாரங்களுடன் நிறுபிக்க முடியுமா?

பொது மேடையில் ஜவாஹிருல்லாஹ்வை தே…..மவனே என்று பேசியவர்தான் இந்த எஸ்.எம் பாக்கர் என்ற பொய்யன். இவர்மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது எப்படி இவரை நமது கண்ணியம் மிகுந்த பெண்கள் மத்தியில் உரையாற்ற விடலாம்? நாம் கேட்டது வரை இத்தனை பொய்களும் அவமாறியாதைகளும் …இன்னும் எத்தனையோ? இவரின் இந்த பொய்யுரையை கேட்ட சகோதரர்கள் படடியளிட்டால் தான் தெறியும்.

பொய்யன் பாக்கரை எச்சரிக்கிறோம்!! நீ பொய் சொல்வதென்றால் உனது குடும்ப வறலாற்றில் பொய் சொல் நபிகள் மீதோ அல்லது இஸ்லாமிய வறலாற்றையோ திறித்து பொய்கூற முயலாதே!! கண்ணியத்திற்குறிய ‘உம்முல் முஃமினீன்’ இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களை கேவலப்படுத்தாதே!!

நடுநிலையான ததஜவினரே, நீங்களே மார்க்கம் தெறியாத வறலாறு அறியாத இந்த பொய்யனை தாயியாக சித்தறிக்க முற்படுவதும் ‘இது தான் இஸ்லாம்’ என்று இவரது உரைகளை ஒளிபரப்புவதும் நமது கண்ணியத்திற்குறிய பெண்கள் மத்தியில் இவரை பேச விடுவதும் சரிதானா என்று நீங்களே தீர்மானியுங்கள்!! உங்கள் தலைமையிடம் கேளுங்கள்!! இங்கு எழுதப்பட்டுள்ளது எதுவும் காழ்ப்புணர்வால் எழுதப்பட்டதல்ல மாறாக ஆதாங்கத்தில் எழுதியது. ஏத்தனையோ மார்க்கம் அறிந்த தாயிக்கள் இருக்கையில் மாhக்க அறிவு சிஞ்சிற்றும் இல்லாத பேட்டை ரவுடியைபோல் சக முஸ்லிமை ‘தே…. மவன்’ அந்த மவன் இந்த மவன் என்று பேசுகின்ற இந்த மாபெரும் பொய்யனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரது உரைகளை டிவி யிலும் சிடியிலும் வெளியிடுவது ஏன்?

அப்படி இவரை தூக்கி விட்டு புகழ் பரப்பவேண்டும் என்றாலோ அல்லது இது போன்று நபிகள் நாயகம் மீது பொய்களை கூறி இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களை கெழவிகள் என்றும் கூறி கேவலப்படுத்தி தன்னை மார்க்க அறிஞராக அடையாளப்படுத்த முயன்றாலோ தமிழகத்தில் கேவலப்பட வேண்டியிருக்கும் . அப்படி உண்மையிலேயே ததஜ வின் கிசுபுள்ளா பாக்கருக்கு ஆசையிருந்தால் கீழக்கரை கடற்கரையோரம் எங்காவது சென்று குச்சு போட்டுக்கொண்டு வெளியே பாக்கரப்பா ஒலியுள்ளா (ஒலியுடன் பேசுவதால்) என்று போர்ட் மாட்டிக்கொள்ளவும்.

நன்றி
முகவைத்தமிழன்

வாசகர்களின் கருத்துக்கள் வறவேற்க படுகின்றன.

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி இஸ்லாமியர்கள்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.