தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 4, 2006

ரத்தின சபாபதி கைதாவாரா? CBCID விசாரனை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:57 முப
தமிழக அரசின் நேர்மை!! தாட்சன்யமற்ற நீதி விசாரனை!!
கதறும் காவல்துறையின் கருப்பாடுகள்!!
குறிப்பு : கோவை குண்டு வெடிப்பு விரைவு நீதிமன்றத்தில் சிறைவாசிகள் தரப்பில் வாதடிவரும் மரியாதைக்குரிய வக்கீல் கண்ணபிரான் அவர்கள் வாதத்தில் வைத்துள்ள அதாவது 1873 வருட சாட்சிகள் சட்டம் பிரிவு 10 கீழ் சாட்சி சொன்ன 1067 வது சாட்சி அலாவுத்தீன் மற்றும் 1225வது சாட்சி அண்ணன் பிஜெ அவர்களை விசாரிக்க நடவடிக்கை எடுத்து முஸ்லிம் சமுதயாத்திற்க்கு ஆறுதல் அளிப்பாரா முதலைமைச்சார் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.


கோவை: கோவையில் வெடிமருந்துகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப் பட் டது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு “சம்மன்’ அனுப்பி, சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) விசாரணையை துவக்கியிருக்கிறது. இவ்விசாரணைக்கு ஆஜரான தங்களை குற்றவாளிகளை போல, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நடத்தியதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர் போலீசார்.

கோவை மாநகரில் எட்டு இடங்களை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக குறிச்சி பிரிவைச் சேர்ந்த ஆருண்பாஷா(27), மாலிக் பாஷா(25), கணபதியைச் சேர்ந்த அத்திக்கூர் ரகுமான்(31), திப்புசுல்தான்(எ) ரவி(24), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சம்சுதீன்(32) ஆகியோரை ஜூலை 22ல் போத்தனுõர் போலீசார் கைது செய்தனர். வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான நபர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் கமிஷனர் கரன்சின்ஹா, நுண் ணறிவுப்பிரிவு (ஐ.எஸ்.,) உதவி கமிஷனர் ரத்தினசபாபதி ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், இந்நடவடிக்கையை விமர் சித்த சில அமைப்புகள்,போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாக கூறின. இதையடுத்து, கோவை போலீஸ் நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் ரத்தினசபாபதி, நீலகிரிக்கு மாற்றப் பட்டார். வெடிமருந்துகளுடன் கைதான இளைஞர்கள் மீதான வழக்கு விசாரணை, போத்தனுõர் போலீசாரிடம் இருந்து கோவை சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,)க்கு மாற்றப் பட்டது.

இவ்வழக்கை கையாண்ட போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், கைதான இளைஞர்களுக்கு காவல் இருந்த போலீசார் உட்பட மேலும் சிலருக்கு, சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் “சம்மன்’ அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர். ஆஜரான போலீசாரிடம் சி.பி.சி. ஐ.டி., கூடுதல் எஸ்.பி., பாலன், டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் விசாரித்தனர்.

கைதான நபர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தியது எப்படி, வெடிமருந்து இருப்பதாக தகவல் தெரிவித்தது யார், கைதான நபர்கள் எங்கு வைத்து விசாரிக்கப்பட்டனர், வெடிமருந்து பறிமுதல் நடவடிக்கையின்போது உடனிருந்த சாட்சிகள் யார் என “கிடுக்கிப்பிடி’ கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த மாநகர போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிருப்தியுடன் காணப்பட்டனர். சி.பி. சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணைக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு மறைமுகமாக மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

விசாரணைக்கு ஆஜரான போலீசார் ஒருவர் கூறியதாவது:

குண்டு வெடிப்பு சதி திட்டம் தொடர் பான வழக்கு விசாரணையை, சி.பி.சி. ஐ.டி., அதிகாரிகள் சரியான கோணத்தில் விசாரிக்க வேண்டும். வழக்கை கை யாண்ட போலீசாரை விசாரணைக்கு அழைத்து, குற்றவாளிகளை போல நடத் துகின்றனர். போலீசாரை குற்றவாளிகளாக சித்தரிக்கவும், வெடிமருந்துகளுடன் கைதான நபர்களை “நிரபராதி’யாக் கவும் முயற்சிக்கின்றனர். இதில் உள் நோக்கம் இருப்பதாக அஞ்சுகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) அதிகாரி ஒருவர் கூறுகையில்,”விசாரணை சரியான கோணத்தில் தான் நடக்கிறது. இவ்வழக்கை கையாண்ட மற்றும் வழக்கு தொடர் பான தகவல் அறிந்த அனைவரும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படுவர்’ என்றார்.

நன்றி : தினமலர்

இப்போது தான் வழக்கு சரியான கோணத்தில் செல்வதாக மக்கள் நம்புகின்றனர். நீதி விசாரனைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ் முஸ்லிம் சமுதாயம் தனது நன்றியை தெறிவிக்க வேண்டிய விதத்தில் தெறிவிக்கும். தமிழக முதல்வர் மூதறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இந்த நல்லாட்சி என்றும் தொடர இந்த சமுதாயம் பாடுபடும். – முகவைத்தமிழன்

MNP தீவிரவாதிகள் காவல்துறையின் சதி அம்பலம்

பி.ஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி??

குறிவைக்கிறார்கள் – ரிப்போர்ட்டர்

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: