தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 10, 2006

திருச்சி சிறையில் குர்ஆன் அவமதிப்பு

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:39 முப
திருச்சி மத்திய சிறையில் குர்ஆன் அவமதிப்பு


திருச்சி மத்திய சிறையில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை திருச்சி மத்திய சிறை டெபுடி ஜெயிலர் மாரியப்பன் தலைமையில் வார்டன்கள் யுவராஜ் மற்றும் ராஜன் என்போர் கைதிகளை சோதனையிடுகின்றேன் என்று அங்குள்ள முஸ்லிம் சிறைவாசிகளிடம் கொடூரமான முறையில் நடந்துள்ளனர்.

வார்டன்கள் யுவராஜ் மற்றும் ராஜன் காட்டுமிரன்டித்தனமாக முஸ்லிம் சிறைவாசிகளை தாக்கியதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்களின் புனித நூலான
திருக்குர்ஆனை கீழே எடுத்து வீசி காலால் எத்தியுள்ளனர். அத்துடன் நிற்காது முஸ்லிம் சிறைவாசிகளை பலவாறு அவர்களின் சமயத்தை அவமதித்தும் பேசியுள்ளனர்.


இவை அனைத்தையும் தலைமை தாங்கி நடத்தியது டெபுடி ஜெயிலர் மாரியப்பன் என்பவராவார். இந்த மாரியப்பன் கடந்த 99 ம் ஆன்டு வேலூர் மத்திய சிறையில் இதே போன்று முஸ்லிம் சிறைவாசிகளிடம் நடந்து கொண்டதற்காக பிரச்சினையில் சிக்கியவராவார். தற்போது திரச்சி மத்திய சிறையில் பணி புறிந்து வரும் இவர் தன்னுடன் அது சங்பரிவார சிந்தனை கொண்ட வார்டன்களான யுவராஜ் மற்றும் ராஜன் ஆகியோரை சேர்த்து கொண்டு இந்த அட்டூளியத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் கொதிப்படைந்த சிறை கைதிகள் இவர்களின் அக்கிரமங்களை எதிர்த்து உள்ளுக்குள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் புனித நூலான திருக்குர்ஆனை கீழே எடுத்து வீசி காலால் எத்தி அவமதித்தது மட்டுமல்லாமல் அங்குள்ள முஸ்லிம் சிறைவாசிகளின் மத உணர்வுகள் புன்படும் வகைியலும் நடந்த திருச்சி மத்திய சிறை டெபுடி ஜெயிலர் மாரியப்பன் வார்டன்கள் யுவராஜ் மற்றும் ராஜன் ஆகியோரது இந்த மத வெறியை தூன்டும் கொடூர செயல் சிறைக்குள் மட்டுமல்லாது சிறைக்கு வெளியே இஸ்லாமியர்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

தமிழக காவல்துறையில் பல நல்ல அதிகாரிகளும் இந்திய மதச்சார்பின்மையை நிலைநிறுத்தும் வகையில் பொருப்புடன் செயல்படும் நேர்மையான அதிகாரிகளும் இருக்கும் அதே நேரத்தில் ஃபாசிச சிந்தனை கொண்ட , சங் பரிவாரால் பயிற்றுவிக்கப்பட்டு சிறைத்துறையிலும் காவல்துறையிலும் ஊடுருவ விடப்பட்டுள்ள திருச்சி டெபுடி ஜெயிலர் மாறியப்பன் வார்டன்கள் யுவராஜ், ராஜன் போன்ற புல்லுருவிகளால் இந்த துறைக்கே மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகின்றது.

இஸ்லாமியர்களின் மதத்தையும் அவர்களின் புனித நூலான திருக்குர்ஆனையும் அவமதித்து முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புன்படுத்தும் வகையில் நடந்த சங்பரிவார
ஆதரவு திருச்சி மத்திய சிறை டெபுடி ஜெயிலர் மாரியப்பன் வார்டன்கள் யுவராஜ் மற்றும் ராஜன் மீது தமிழக சிறைத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து இவர்களை பணி நீக்கம் செய்து
காவல்துறையும் சிறைத்துறையும் மதச்சார்பற்றே இயங்குகின்றது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கோரி சிறுபான்மை இன அமைப்புக்களும் முஸ்லிம் இயக்கங்களும் பாதிக்கப்பட்டசிறைவாசிகளின் குடும்பங்களும் தங்களின் மத உணர்வுகளை புன்படுத்தியதற்காக போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றார்கள்.

தமிழக முதல்வர் அவர்களும் சிறைத்துறை அதிகாரிகளும் சங்பரிவார சிந்தனையுள்ள திருச்சி மத்திய சிறை டெபுடி ஜெயிலர் மாரியப்பன் வார்டன்கள் யுவராஜ் மற்றும் ராஜன் ஆகியோர் மீது துறை ரீதியிலான தக்க நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு எதிர்வரும் காலங்களில் இது போல் சிறையில் உள்ளோரின் மத உணர்வுகள் புன்படுத்தப்படாமல் இருக்க ஆவன செய்வார்கள் என்று நம்புகின்றோம்.

செய்தி உதவி : திருச்சி வாசகர்கள் மற்றும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை-கோவை

கடைசி செய்திகள் :

திருச்சி சிறையில் கைதிகளை நிர்வாணமாக்கி சித்திரவதை விசாரனை கோரி கோர்ட்டில் மனு தாக்கல்

அதிகாரிகளின் அராஜாக போக்கை கண்டித்து திருச்சி சிறையில் கைதிகள் தொடாந்து உண்ணாவிரத போராட்டம் 700 க்கும் மேற்ப்பட்ட கைதிகள் கடந்த 6ம் தேதியில் இருந்து உண்ணாவிரதம்.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: