தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 12, 2006

இவர்களுடன் செய்யும் ஹஜ் உம்ரா கூடுமா? (Important)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 1:48 பிப

குறிப்பு : இதை பிரின்ட் செய்து கேம்புகளில் வினியோகிக்க விரும்புபவர்கள் நம்மை தொடர்பு கொண்டால் Word Document Format ல் பிரின்ட் செய்ய ஏதுவாக வழங்கப்படும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் முஸ்லிம் சகோதரர்களே,

ரமழான் மாதம் நெருங்கி விட்டது இப்போது பலரும் பல வகைகளில் உங்களிடம் வசூல் செய்வதற்கு திட்டமிட்டு கொண்டிருப்பார்கள் அவற்றில் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்களும் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலோனோர் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் வளப்படுத்திக் கொள்வதற்காக வசூலில் ஈடுபடுபவர்களே.

அந்த வகையில் தான் உம்ரா அழைத்து செல்வதற்கும் நோட்டிஸ் போடுவார்கள் “நபி வழியில் உம்ரா” என்று விளம்பரம் செய்வார்கள் அதை நம்பி தங்களது உழைப்பில் சம்பாதித்த பணத்தை கட்டி வாழ்வில் ஒரு முறை உம்ரா செய்ய நிணைப்பவர்களை தங்களின் தலைவன் பி.ஜே வழியில் உம்ரா செய்ய வைப்பார்கள். இதன் மூலம் இவர்களிடம் பணம் கட்டி உம்ரா சென்ற அந்த நபரின் அமல்கள் அனைத்தும் வீணாகும் நிலை.

அதற்கான முன்னேற்பாடுகள் இப்போதே ஆரம்பமாகி விட்டது. நமக்கு கிடைத்த ஒரு மின்னஞ்சலில் அபுதாபியில் இருந்து நபி வழிக்கு புறம்பாக நடக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் ஒரு நோட்டிஸ் போட்டுள்ளார்கள் அதில் “நபி வழிப்படி” உம்ரா அழைத்து செல்வதாகவும் அதற்கு ஆயிரம் திர்ஹம் கட்ட வேண்டும் என்றும் போட்டள்ளார்கள். இதன் மூலம் வரும் இலாபம் அணைத்தும் இவர்களின் தலைமையை வளப்படுத்தவும் மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களுக்கு செலவளிக்கவும் (அதாவது மீடியா மூலம் முஸ்லிம் பெண்களை விபச்சாரி என்றும் (உ. ஹாமித் பக்ரி மனைவியை) முஸ்லிம்களை விபச்சாரம் செய்தான், ஓரின சேர்க்கை செய்தான் என்றும் உலக மக்கள் மத்தியல் பிரச்சாரம் செய்வது அதன் மூலம் உலக மக்கள் மத்தியல் முஸ்லிம்களை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் தவறான அபிப்ராயம் ஏற்படுத்துவது) போன்ற காரியங்களுக்கே பயன்படுத்தப்படும்.

ஆக சகோதரர்களே, இது போல் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் வலைகுடா நாடுகளின் பல பகுதிகளிலும் உம்ராவிற்கான அழைப்பு செய்வார்க்ள இவர்களை நம்பி பணம் கட்டி உங்கள் அமல்களை வீணாக்கி விடாதீர்கள் ஏனெனில் இவர்கள் நபி வழிக்கும், மாாக்கத்திற்கும் முரனான காரியங்களை கூறியும் செய்தும் வருகின்றார்கள். கடந்த 1400 ஆண்டுகளாக ரசூலாலும் சஹாபாக்களாலும் தாபியின்களாலும், தபாத்தாபியின்களாலும் மற்றும் அதன் பின் வந்த இமாம்கள் கலீபாக்கள் மார்க்க அறிஞர்களாலும் மாற்றப்படாமல் இருக்கும் ஜக்காத், ஹஜ், உம்ரா போன்ற வற்றிலும் குர்ஆனிலும் ததஜ வின் தலைவாக் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் அத்துடன் நிற்காது இவர்களை பின்பற்றாதவர்கள் முஸ்லிமகள் அல்ல என்றும் இவாக்ளின் இதழ்களான உணர்விலும் ஏகத்துவத்திலும் எழுதியும் வருகின்றார்கள் (உதாரனம் இவர்களின் எதிரி இயக்கமான தமுமுக வினரை “மொட்டையன்” என்றும் “மாவு” (மாவு என்றால் காஃபிர் என்று அர்த்தம் என்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பயன்படுத்தும் வாாத்தைகளை பயன்படுத்தி எழுதியது).

இவர்களின் இஸ்லரத்திற்கெதிரான கொள்கைகளில் சில :

இவ்வேதத்தில் எந்த மாற்றமோ மாறுதலும் செய்யவியலாத வகையில் அல்லாஹ்வே இதனைப் பாதுகாக்கிறான் (15:9).

என்ற இறை வசனத்திற்கு முரனாக ததஜ வின் தலைவர் பி.ஜே குர்ஆன் தொகுக்கப்பட்ட முறை தவறு என்றும் சஹாபாக்களுக்கு குர்ஆனை தொகுக்க தெறியவில்லை என்றும் குர்ஆனில் வசனங்கள் சரியான முறையில் மொழிபெயாக்கப்படவில்லை என்றும் குறை கூறி அதன் அாத்தங்களை மாற்றி எழுதியது.

1400 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் ஹஜ்ஜின் கட்டாய கிரியைகளில் ஒன்றான ஷைத்தானுக்கு (ஜம்ரத்) எல்லெரிவது கட்டாயமில்லை என்றும் கல் எறிவதற்கு பதிலாக கையால் சைகை செய்யலாம் என்றும் ததஜ வின் தலைவர் ஃபத்வா வழங்கியுள்ளார் அந்த கொள்கையை ஹஜ்ஜிலும் உம்ராவிலும் கட்டாயமாக பின்பற்றுபவர்கள் ததஜ வினர் (உம்ராவில் கல் எறிவது எங்கே என்று கேட்க வேண்டாம் இது போன்ற கொள்கைகளையே உம்ராவிலும் பின்பற்றுவார்கள்).

அல்லாஹ்வால் ரசூல் (ஸல்) அவாக்ளுக்கு இரக்கியருளப்பட்ட திருக்குர்ஆனில் எழுத்துப்பிழைகள் உள்ளதாக பிரச்சாரம் செய்து வருவது.

சஹாபாக்களை விட தனக்கே குர்ஆன் விளங்கியுள்ளது என்ற அளவில் பேசுவது.

ஸஹாபாக்களை கேவலமாக விமர்சித்தவர்.

நபி (ஸல்) அவர்களால் சொர்க்கத்தை குறித்து நன்மாராயம் சொல்லப்பட்ட உத்தம ஸஹாபி அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களை கிரிமினல் என்றவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்.

முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களை ரவுடி என்றவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

அன்ஸாரி தோழர்களை (ரலி-அன்ஹும்) பணத்தாசை, பதவி ஆசை பிடித்தவர்கள் என்றவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

நபியின் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களை பதவி ஆசை பிடித்தவர் என்றவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்.

இஸ்லாமிய குடியரசின் இரண்டாம் கலீஃபாவாகிய உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்தான் முதன் முதலில் பித்னாவை ஆரம்பித்து வைத்தவர் என்றவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்.

நான்காம் கலீஃபாவாகிய அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எடுப்பார் கைப்பிள்ளை என்றவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்.

இப்படியாக, இதற்கும் மேலாக உத்தம சத்திய ஸஹாபாக்களை – எதிரிகளும் சொல்ல கூசும் வார்த்தைகளால் விமர்சனம் செய்பவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்று கூறியவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

அல்லாஹ் முதல்வானத்தில் இறங்குகின்றான் என்ற ஹதீஸைப் பொருள் மாற்றிக் கூறியவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்து புதிய விளக்கம் அளித்ததவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிய கருத்துக்களைக் கூறியது. பொருளை மாற்றியவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தவில்லையெனில் புறம் தள்ளவேண்டும் என்றவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

ஆண்கள் அரைக்கால் டிரவ்ஸரில் தொழலாம் என்று ஃபத்வா வழங்கியவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால் நபிகள் (ஸல்) அவர்களுக்கு அடுத்து, குர்ஆனின் அர்த்தங்களை தான் விளங்கி தெளிவு பெற்ற அளவிற்கு யாரும் ஏன் ஸஹாபாக்கள் கூட தெளிவு பெறவில்லை என்ற தொனியில் பேசுவபவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

ஸஹாபா பெருமக்களை தன் வயதுக்கு ஒத்தவர்கள் போலவும், சக மாணவர்களாகவும் பாவித்து, அவர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற தொனியில் பேச்சும் செயலும் கொன்டிருப்பவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்

உத்தம ஸஹாபா பெருமக்கள், தாபியீன்கள், தபஅத்-தாபியீன்கள் போன்றவர்களின் தரத்திற்கு சமமாக/மேலாக தானும் இருப்பதாகவும் காட்டிக்கொள்பவர்கள் இந்த ததஜவினரும் அவரது தலைவர் பி.ஜே யும்.

ஆக இத்தகைய கொள்கை உடையவர்களுடன் உங்கள்காசு பணத்தை செலவிட்டு வருடத்தில் ஒரு முறை நன்மையை நாடி செய்யும் உம்ரா மற்றும் வழிபாடுகள் அமல்கள் கூடுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் அருகிலுல்ல மார்க்கம் அறிந்த அறிஞர்டகளிடத்தில் இவற்றையெல்லாம் கூறி இவர்களிடம் பித்ரா கொடுப்பதும் இவர்களுடன் உம்ரா செய்வதும் கூடுமா என்று கேளுங்கள்.

இவர்களோடு இந்தியாவில் இருந்து ஹஜ் செய்ய நாடியுள்ளேர் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும் சந்தேகத்திற்கிடமாக கொள்கை கொண்டவர்களுடன் ஹஜ் செய்து உங்கள் அமல்களை சந்தேகத்திற்கிடமாக வீணாக்குவதை விட தமிழகத்தில் பல நல்ல ஹஜ் சேவை ஸ்தாபனங்கள் உள்ளன அவர்களுடன் சென்று உங்கள் கடமையை எந்தவித பிரச்சினையும் இன்றி நல்ல முறையில் நிறைவேற்றலாம்.

அதே போல் வலைகுடா வாழ் தமிழ் முஸ்லிம் சமுதாயமே நீங்கள் இவர்களிடம் கொடுக்கும் பணத்தை காட்டிலும் குறைவாகவோ கூடுதலாகவே கொடுத்தாலும் உங்களை அழைத்து சென்று உண்மையான நபி வழியில் குர்ஆன் ஹதீஸ் முறைபடபடி ஹஜ் உம்ரா செய்ய வைப்பதற்கு பல சேவை மையங்களும் பல நல்ல இயக்கங்களும் பஸ் விட்டு வருகின்றார்கள் அவர்களுடன் சென்று உங்கள் கடமைகளை அழகான முறையில் நிறைவேற்றலாம்.

ஏன் இது போன்ற இஸ்லரத்திற்கெதிராக செயல்படும் யூதர்களை போன்றும் கிருத்துவர்களை போன்றும் குர்ஆன் ஹதீசின் பொருளை மாற்றி கூறியும் கல் எறிதல்ட ஜக்காத் கொடுத்தல் போன்ற கட்டாய கடமைகளை மாற்றியும் இஸ்லாத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி தங்கள் சுய கருத்தக்கள் தினக்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை வெளியிடும் யூதக்கூட்டத்தின் தமிழக கைக்கூலிகளாக குர்ஆனையும் ஹதீசையும் மாற்றி கூறும் இந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்என்ற கூட்டத்துடன் சென்று உங்கள் அமல்களை வீணாக்க வேண்டும்?
இவர்களிடம் நீங்கள் வழங்கும் ஃபித்ரா ஜக்காத் போன்றவையும் அதற்குறிவர்களிடம் போய் சேர்வதில்லை இடையில் அவை ஹோட்டல்களாகவும், ரெஸ்ட்டாரென்டுகளாகவும், எவர்சில்வர் பாத்திர தொழில்களாகவும், சவா (பிரிபெய்ட் மொபைல் கார்ட்) தொழில்களாகவும் மாறிவிடுகின்றன. அது மட்டுமல்லாது நமது சொந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளை விபச்சாரிகள் என்றும் ஓரின சேர்க்கைவாதிகள் என்றும் டிவியிலும் சிடிக்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்வதற்கே பயன்படுத்தப்படும் சகோதராகளே ஆக தயவு செய்து இவர்களிடம் பித்ராவோ அல்லது ஜக்காத்தோ கொடுக்காதீர்கள் உங்கள் அருகில் எத்தனையோ பள்ளிகளில் பித்ரா ஜக்காத் வசூலிப்பர்கள் அவர்களிடம் கொடுங்கள் இல்லையேல் உங்கள் குடும்பத்திடம் கூறி ஊரில் கொடுக்க சொல்லுங்கள்.

மேடை போட்டு நமது சகோதரிகளின் மானத்தை விபச்சாரி என்றும் பள்ளப்பயலோடு ஓடிப்போனவள் என்றும் பேசி சிடியில் வெளியிடுகிறார்கள் இவர்கள் அத்தோடு இல்லாமல் பழனி பாபா போன்ற சஹீதுகளை கேவலமாக விபச்சாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்றும் தங்களுக்கு பிடிக்காத காசிமி மற்றும் பல மார்க்க அறிஞர்களை ஓரின சேர்க்கைவாதி என்றும் பென்களுடன் விபச்சாரம் செய்தவர்கள் என்றும் நோன்பு காலத்திலும் மற்ற காலங்களிலும் டிவியிலும் பல ஊடகங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்வது இதற்குத்தான் உங்களிடம் உம்ரா என்றும் ஜக்காத் என்றும் பித்ரா என்றும் வசூல் செய்யப்படும் பணம் செலவளிக்கப்படுகின்றது ஆக சகோதரர்களே உஙக்ள அமல்களை இந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திடம் கொடுத்து வீணாக்கி விடாதீர்கள். முக்கியமாக உம்ரா ஹஜ் இவர்களுடன் செய்யாதீர்கள் செய்வதற்கு முன் ததஜ அல்லாத மார்க்க அறிஞர்களிடம் இது குறித்து இவர்களுடன் ஹஜ் உம்ரா செய்தால் கூடுமா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

என்றும் அன்புன்
முகவைத்தமிழன்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: