தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஒக்ரோபர் 2, 2006

இங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை!! (KHOBAR ICC)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:52 முப
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!

இங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை!!

சேவையில் தொண்டர்கள் இன, மொழி பேதமில்லாமல்
இஸ்லாத்தின் வழி காட்டுதலில்…

அல்கோபர்,செப்டம்பர் 29, 2006 : சவுதி அரேபிய நாட்டின் பெட்ரோல் வளம் கொழிக்கும் கிழக்கு மாகாணத்தின் கடற்கறையோர எழில் கொஞ்சும் நகர் அல்-கோபர். இந்நகரின் மத்தியின் நகர் மத்தியில் இவ்வருடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ”இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின்” சார்பில்; தினமும் சுமார் 5000 நோன்பாளிகள் நோன்பு திறக்கக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே குடிலின் கீழ் 5000 த்திற்கும் மேற்ப்பட்ட நபர்கள் அமர்ந்து நோன்பு திறக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரமலானில் முதல் நோன்பன்றே அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் எதிர் பார்த்ததை விடவும் அதிகமான அளவில் பெருந்திரளான முஸ்லிம்கள் வந்திருந்தது ஆச்சர்யமளிக்கக்கூடியதாக இருந்தது.

ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து கடைசிநாள்வரை தினம்தோறும் நடைபெறும் இந்த பிரணம்மாண்டமான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து நாட்டவர்களும் தம் நாடு, மொழி மறந்து ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்தது இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. அல்கோபர் – தம்மாம் மற்றும் அல்கோபர் – தஹ்ரான் முக்கிய நெடுஞ்சாலையின் சந்திப்பில் இக்குடில் அமைந்துள்ளதால் பல்வேறு நாடுகளை சார்ந்த முஸ்லிமல்லாத வெளிநாட்டவர்கள் இக்குடிலில் 5000 த்திற்கும் மேற்ப்பட்ட பல மொழி பேசக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும், தங்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இன்றி ஒன்றாக அமர்ந்து நோன்பு திறக்க கூடிய காட்சியினை ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

குடிலின் ஓரு பகுதி தோற்றம்

இங்கு நோன்பு திறப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விடுகின்றன. ஓவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் அவரவருக்கு புரியக்கூடிய வகையில் அவரவர் மொழியில் மார்க்க அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் நோன்பு திறப்பதற்கு முன்னரே மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவை கேட்பதற்கு வந்துவிடுகின்றனர். அவ்வகையில் தமிழ் அறிந்த முஸ்லிம்களுக்காக கற்றரிந்த பல மார்க்க அறிஞர்கள் தினந்தோரும் உரையாற்றுகின்றனர்.

தமிழ் பேசும் மக்களை ஒழுங்குபடுத்தக் கூடிய பொறுப்புக்களும் அம்மக்களுக்குறிய வசதி வாய்ப்புக்களை ஏற்ப்படுத்தி தரும் பொறுப்புக்களையும் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில் தம்மாம்-அல்கோபர் நகரைச் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள், தமிழ் தாஃவா கமிட்டியின் பொறுப்பாளர்களான முகம்மது மக்கீன் நளீமி மற்றும் பொறியாளர் சபியுல்லாஹ் கான் ஆகியோரின் வழிகாட்டலில் இப்பணிகளை மிகச்சிறப்பாக செயல்படுத்துகிறார்கள்.

நுலைவு வாயில்

இந்த ‘தமிழ் தாவா கமிட்டி’ கடந்த பல வருடங்களாக தம்மாம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற பணிகள் மட்டுமல்லாது தமிழ் பேசும் மக்களுக்காக கருத்தரங்கங்கள், மாற்று மத மக்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளச் செய்யம் நிகழ்ச்சிகள் தமிழ் பேசும் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் அழைப்பு பணி ஆற்றுதல் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமுதாய பேதமின்றி பயன் பெறக்கூடிய வகையில் பல சமூக நலப்பணிகளையும் இலங்கை இந்திய தமிழ் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து திறம்பட செய்து வருகின்றது.


அலி அக்பர் உமரியின் மார்க்க உரை

தற்போது அல்கோபர் நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இம்மையத்தின் தமிழ் பிரிவில் தன்னார்வ தெர்டணடர்களான முக்கியமாக இந்த நோன்பு திறக்கும் மையத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டி இங்கு கூடும் தமிழ் சகோதரர்களை ஒழுங்குபடுத்தி தகுந்த ஏற்பாடுகளை செய்யவேண்டியும் அல்கோபரை சேர்ந்த சேவை மணப்பான்மையுள்ள இலங்கை இந்திய தமிழ் முஸ்லிம் சகோதரர்களான இலங்கையைச் சார்ந்த அப்துல் காதர் ஃபலாஹி மற்றும் தமிழகத்தைச் சார்ந்த சகோதரர் ஹாஜா பஷீர் ஆகியோர் தலைமையில் தன்னார்வக்குழு ஏற்படுத்தப்பட்டு அனைத்து பணிகளையும் மிகச் சிறப்பாக செய்து வருகின்றது. இவர்களின் பணியை கண்டு இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் பாராட்டிச் செல்கின்றனர். இங்குள்ள பல்வேறு மொழிப்பிரிவுகளிலும், தமிழ் மொழிப் பிரிவுதான் ஏற்பாடுகளிலும் ஓழுங்கு படுத்துதலிலும் சிறந்து விளங்குகின்றது. இதற்கான ஏற்பாடுகளையும் பணிகளையும் தங்கள் அலுவல்களுக்கிடையேயும் சிரமம் பாராது தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் சிறப்பாக களப்பணியாற்றி தமிழ் முஸ்லிம்களின் சேவை மணப்பான்மையை நிலைநிறுத்தி வருகின்றார்கள்.

இலங்கையை சேர்ந்த சகோ. முபாரக், மதுரையை சேர்ந்த சகோ. சுபுஹான், சங்கராபுரம் சகோ. முகம்மது யூனுஸ், சகோ. நவாப்ஜான், சகோ. பாபு என்ற சஃபி அஹமது, நெல்லிக்குப்பம் சகோ. பைஃசர், மற்றும் சகோ. சலீம், சகோ. கலீல், நெல்லை ஏர்வாடி சகோ. முகம்மது மீராசாஹிப், சென்னையை சேர்ந்த சகோ. சஃபி அஹமது, இலங்கை சகோ. ஜெயினுதீன், சகோ. ஜப்பார், சகோ. சலாஹீத்தீன், டி.ஆர் பட்டினம் சகோ. ஹாஜா நஜ்முத்தீன், கும்பகோனம் ஷம்சுதீன் செம்மங்குடி சகோ. இஸ்மாயில், இலங்கை நிந்தாவூர் சகோ. நவ்பர் மற்றும் இலங்கையை சேர்ந்த சகோ. ஸஹீன், சகோ. இஸ்ஹாக் மற்றும் தமிழ்நாடு முகவையை சேர்ந்த சகோ. முகம்மது ரைசுதீன் ஆகியோர் சிறந்த சேவை மணப்பான்மையுடன் தங்கள் அலுவல்களுக்கிடையேயும் நேரத்தோடு வந்து இங்கு வரக்கூடிய பெருந்திரளான கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு உணவு மற்றும் நோன்பு திறப்தற்கு உண்டான அனைத்து பொருள்களையும் பரிமாறுவது, மேலும் இறுதி வரை ஓய்வேயின்றி பணியாற்றுவது பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

கூடும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

அத்துடன் இங்கு வரக்கூடிய சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலும், சஹாபாக்கள் மற்றும் உம்முல் முஃமினீன்களின் கண்ணியத்தையும் காக்கக்கூடிய வகையிலும், தங்களது சிறந்த சொல்லாற்றலால் எடுத்தியம்பி வருகிறார்கள் தமிழ் முஸ்லிம்களின் மார்க்க அறிஞர்களான மௌலவி. பிஸ்மில்லாஹ் கான் ஃபைஸி, மௌலவி. அலி அக்பர் உமரி, இலங்கை மௌலவி. முபாரக் மஸ்ஊத் மதனி, மௌலவி. முகம்மது ஸக்கி மதனி மற்றும் பொறியாளர் ஜக்கரியா ஆகியோர். இவர்களின் சிறந்த சொற்பொழிவால் இங்கு கூடும் மக்கள் மிகுந்த பயனை அடைந்து வருகின்றார்கள்.

தமிழ் மொழிப் பிரிவின் நுலைவாயில்

ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியின் இறுதியில் அழைப்பு பணி செய்யும் தமிழகத்தைச் சார்ந்த பொறியாளர் ஜக்கரியா மற்றும் மேற்கூறிய மார்க்க அறிஞர்கள் இiணைந்து நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சி வருகின்ற மக்களிடையே இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் தருபவருக்கு பெருமதியான பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

மார்க்க அறிஞரின் பிரச்சாரம்

5000 க்கும் அதிகமான முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் இலவச உணவு, குளிர்பானம், அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறப்பதற்கான பிரம்மாண்டமான குடில், தண்ணீர் மற்றும் காற்றோட்ட வசதி மற்றும் மின்சார வசதிகள் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்வதற்கு நாளொன்றுக்கு குறைந்தது சவுதி ரியால் 50,000 க்கு அதிகமாகவே செலவாகலாம். இந்நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்தும் “அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்” ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பாகும். இந்த ஏற்ப்பாட்டிற்கும் ஆகும் அணைத்து செலவினங்கள் அனைத்தும் தனிநபர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமாவே எதிர் கொள்ளப்படுகின்றது. இப்பணியில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

Tel. +966 3 8655557

P.O Box # 4254

Al Khobar 31952

Saudi Arabia

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: