தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஒக்ரோபர் 30, 2006

மீண்டும் சாயம் வெளுத்தது

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:36 முப

யூனியன் தலைவர் பதவி தேர்தல் முன்னாள் எம்.எல்.ஏ., தோல்வி

பாபநாசம்: பாபநாசம் யூனியன் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேதுராமன் தேர்வு செய்யப்பட்டார்.

பாபநாசம் யூனியன் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேதுராமன், முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் தலைவர் பதவிக்கு மனுச் செய்தனர்.
மொத்த ஓட்டான 21ல் 19 பேர் ஓட்டளித்தனர். இதில் சேதுராமனுக்கு 12 ஓட்டும், ராம்குமாருக்கு 7 ஓட்டும் விழுந்தது. சேதுராமன் வென்றார். துணை தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த தாமரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பீ.ஜே.யின் சப்பைக்கட்டு என்ற பெயரில் மே மாதம் நாம் எழுதிய வலைப்பதிவு மீண்டும் இங்கு இடம்பெறுகிறது இதன் மூலம் பீ.ஜே. கும்பலின் பொய் பிரச்சாரம் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது

பி.ஜே.யின் சப்பைக்கட்டு

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிலைப்பாடு என்ற தலைப்பில் அவர்களின் வலைதளத்தில் சொல்லியுள்ள அபத்தங்களுக்கு பதில்

தமது வழக்கமான “கோயபல்ஸ்” பிரச்சாரத்தை ஜெய்னுல்ஆபிதீன் ஆரம்பித்து விட்டார்.அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் அணியை முன்பு நாடாளுமன்ற தேர்தலில் த.மு.மு.க. ஆதரித்தபோது நாற்பதில் பதிமூன்றை தானே இந்த அணி வென்றது”என்கிறார். ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தான் ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒரு சட்டமன்ற தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கலாம் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பார்களா? அப்படியும் அந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மயிலாடுதுறை, இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் ஆதரித்தவர்கள் தானே வென்றார்கள்.

மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தி.மு.க.வேட்பாளர் மைதீன்கான் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் நிஜாமுத்தீனை நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். கடந்த தேர்தலில் த.மு.மு.க.ஆதரவில் பதினைந்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
வாணியம்பாடியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆம்பூர்பாசித் பீ.ஜே.ஆதரவு தேசிய லீக் வேட்பாளர் முஹம்மது அலியை இருபத்திநான்காயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரும், அதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க.அணி வேட்பாளர் லத்தீப்சாஹிப் வெனறுள்ளார்கள்.

தவ்ஹீத் ஜமாத் தலைமைபீடமான கடையநல்லூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்க்காரரான பீட்டர் அல்போன்ஸிடம் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் கமாலுதீன் தோல்வி அடைந்துள்ளார்.

உண்மை இவ்வாறு இருக்க நமது”கோயபல்ஸ்” தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தது தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரத்தால் தான் என்கிறார்.இதுவரை அரசியல் கட்சிகள் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டது ஒரே ஒருமுறை தான் . அதுவும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணம் அவர் மூப்பனார் குடும்பத்தை பகைத்துக்கொண்டது தான். மேலும் மூப்பனாரின் தம்பி மருமகன் சுரேஷ்மூப்பனார் போட்டியிடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் டெல்லி மேலிடம் சிட்டிங் M.L.A.க்கள் அனைவருக்கும் சீட்டு தர முடிவு செய்ததால் தான் ராம்குமாருக்கு கிடைத்தது.2001 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் களை நாம் ஆதரித்தாலும் இந்த தொகுதியில் மட்டும் ராம்குமார் நீங்கள் என்னை ஆதரித்தால் பெரும்பான்மை முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி த.மு.மு.க.வை உதறி தள்ளியதால் பேராசிரியரின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.நமது ஆதரவு இல்லாததால் அவர் வெற்றிபெற்றார். .

பின்னர் தேர்தல் முடிந்தவுடன் எஸ். பி தலைமையில் முன்னூரு போலிசார் பாதுகாப்புடன் த.மு.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பாக்கர் கலந்துக்கொண்டார். ராஜகிரி,பண்டாரவாடையில் தான் த.மு.மு.க. தவ்ஹீத் சகோதரர்கள் உள்ளனர். அய்யம்பேட்டையில் ஜாக் பள்ளி உண்டு . த.மு.மு.க.விற்கு கூட கிளை கிடையாது. பழைய தஞ்சை மாவட்டத்திலேயே தவ்ஹீத் எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளது இப்பகுதியில் தான் என்பது பீ.ஜே.,பாக்கர்,ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோருக்கு நன்கு தெரியும். வழுத்தூரில் தவ்ஹீத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களே உள்ளே புகுந்து அடித்தார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையங்கள், மருத்துவமனை என்று தவ்ஹீத் சகோதரர்கள் அலைக்கழிக்கப்பட்டதும் இப்பகுதியில் தான்.

பழைய தஞ்சை மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியும், பீ.ஜே.யின் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு அடிக்கோலிட்ட தொகுதியுமான சங்கரன்பந்தலை உள்ளடக்கிய பூம்புகார் தொகுதியில் எந்த அணி வெனறுள்ளது. பழைய தஞ்சை மாவட்டத்தில் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் வென்ற மற்ற தொகுதிகளான தஞ்சாவூர்,கும்பகோணம்,நாகப்பட்டிணம் தொகுதிகளி்ல் எந்த அணி வெனறுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதும் வேண்டாம்
எழுதியவர்:கடல் கடந்த தமுமுக @ 11:16 AM

3மறுமொழிகள்:

document.write(GetThamizhDate(‘Monday, May 15, 2006’))
திங்கள், மே 15, 2006
மணிக்கு, எழுதியவர்: சுடர்
சிந்தாமல், சிதறாமல் முஸ்லிம் சமுதாயத்தின் மொத்த ஓட்டையும் அதிமுகவிற்கு வாங்கி கொடுப்போம் என்று சபதம் எடுத்தவர்கள் மேடைதோரும் ‘அம்மா ஜெயலலிதா’ வென்று புகழ்பாடியவர்கள் தோல்விக்கு பிறகு வேறுமுகத்தை காட்டுகிறார்கள் என்றால் பாவம் இந்தப் பிள்ளைகள் என்று என்னத் தோன்றவில்லையா…?


document.write(GetThamizhDate(‘Tuesday, May 16, 2006’))
செவ்வாய், மே 16, 2006
மணிக்கு, எழுதியவர்: sultan
தமிழகத்தில் மதவாத ஆட்சி…… என்ற தலைப்பில் ‘நபிமொழி’யின் ஆக்கத்திற்கான அதே மறுமொழி இங்கேயும்..At 8:36 AM, sultan said… பேச்சுத் திறமையில் மிகைத்த அந்த அறிஞர் தற்போது விண் டி.வி யில் முஸ்லீம்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகத்தான் ஓட்டுப்போட்டார்கள் என்பதாக தொகுதி வாரியாக பிரித்து சொல்கிறார். அது உண்மையில்லை என்பது வேறு விஷயம். இவ்வாறு சொல்வதற்கான அவசியம் அவருக்கு ஏன் ஏற்பட்டது. இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கலாம்.1. முஸ்லீம்கள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. தான் ஆதரிக்காத கட்சியின் மூலம் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளை அடைந்து விடக் கூடாது என்ற குள்ளநரித்தனம், குறுகிய புத்தி அல்லது அபூஜஹ்ல்தனம்.2.தான் வாங்கிய கூலிக்கு சரியாக மாரடித்திருக்கிறேன். திரும்ப எனக்கெதிராகப் பேசி என்னை காட்டிக் கொடுத்து விடாதே என்று முதலாளியிடம் கெஞ்சல்.3.தான் செய்த தவறுகளுக்காக தன்னை பிடிக்க முற்படாதீர்கள். நான் சொன்னால் இத்தனை பேர் கேட்பார்கள் என்று ஆளுபவர்களிடம் பொய்க்கணக்கு.சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே.

Advertisements

1 பின்னூட்டம் »

  1. பிஸ்மில்லாஹ் ஹிர்ரகுமான் னிர்ரஹீம்
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    இந்த மாதிரி பச்சை கலர், சிவப்பு கலர்னு எழுதி வெப்சைட்டை படிக்க முடியாம பண்ணாதிங்க. எப்பவும் போல கறுப்பு கலர்லேயே எழுதுங்க. அப்பதான் ஒழுங்க படிக்க முடியும்

    பின்னூட்டம் by Sirajudeen — ஒக்ரோபர் 30, 2006 @ 11:40 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: