தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 29, 2006

விவாத அழைப்பும் பொய்ச்சவடால்களும்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 4:38 முப
விவாத அழைப்பும் பொய்ச்சவடால்களும்!!

அன்புள்ள சகோதரரே! அஸ்ஸலாமு அலைக்கும்.

பகல் கொள்ளை என்று கேட்டிருக்கின்றோம். ஆனால் பகலையே கொள்ளையடிக்கும் உங்களைப் போன்றவர்களை எண்ணி இப்பொதெல்லாம் ஆச்சர்யப் படுவதில்லை! தவறுகள் என்று உணர்ந்ததும் சுட்டிக் காட்டிய – தட்டிக் கேட்ட – எட்டி உதைத்த ஒரு காலம் நம்மில் உங்களுடையதாய் இருந்தது அன்று. இவைகள் உங்களை மெச்சுவதற்கான பீடிகை அல்ல. மாறாக இப்போது அந்த குணம் உங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதுடன் சமுதாயத்தில் பிஜே ஒழிப்பு பூஜைகள் நடத்தும் சில அதிமேதாவிகளின் பட்டியலில் தாங்களும் உட்பட்டுவிட்டதை இன்னொரு முறை நினைவு படுத்துவதற்காகவே. இன்னும் சிலதுகளை எழுதுவதாயின் கவனம் அவற்றின் பால் மட்டுமே திரும்பிவிடும். இதை கேட்டு வைப்பதற்காக பிஜேவை ஒரு குழப்பவாதி என்று வைத்துக் கொள்வோம்.

அவரைத் தவிர்த்து ஏனைய தமிழக சர்வ தேச ???? அறிஞர்களும் சரியானவற்றை தான் கூறுகின்றார்களா? (பிறகு ஏன் அவர்கள் பிஜே கூப்பாட்டை தவிர மார்க்க விசையங்களில் ஒன்றுபடவில்லை? எனக் கேட்டுவிடுவேன் என்பதால்,)இல்லை என்றுதான் பதிலளிப்பீர்கள். (என்றால்) தாங்கள் இந்த சமுதாயத்தை காப்பதற்காக அவர்களுக்கெதிராக கொடுத்த குரல்கள் ஏதேனும் உண்டா?

தங்களின் ஆஸ்தான குரு அஷஷஹ் அபூ அப்துல்லாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு அமீர் கமாலுத்தீன் மதனியின் பதில் என்ன? பதில் சொல்லும் கடமை உங்களுக்கும் உண்டு. ‘ஒருநாள் பெருநாள’; என்ற முழக்கத்துடன் அங்கொருநாள் இங்கொருநாள் பெருநாள் பேர்வழிகளின் புத்தக ஏஜன்ட் ஆகிவிட்டீர்களே! இது மட்டுமா (பஞ்சு வைத்து அடைக்கும் சட்டம் உட்பட) எண்ணற்றவைகள்… பிஜெவை ஒழிப்போம் என்ற பெயரில் தவ்ஹீதுக்கு எதிராக ஆதாரங்களை தர முன்வந்த தரங்கெட்டவர்களுக்காக ஏராளமானோர் அணிசேர்ந்திருக்கும் வேளையில் தாங்களும் அவர்களில் சங்கமித்ததை ஆச்சர்யமாக கருதவில்லை. எனினும் அந்த அமீருக்கும் ஹுஸைன் மடவூரிக்கும் உள்ள (கள்ள அல்ல நல்ல) தொடர்பையும் அறிந்திருக்க வேண்டும். ஜகாத் விசயத்தில் எம். எம். அக்பர் அவர்களது நிலையை எப்படி விமர்சிக்கப் போகின்றீர்கள்?

அடங்கா பிடாரியாய் அலறும் உங்கள் அருமை நண்பர் ஆலிமுல் அல்லாமா மாமேதை ஞானி ஷம்ஸுத்தீன்பாலத் பெண்கள் கத்னா விசயத்தில் கூறியது என்ன? அதில் அவர் நிலைத்து நிற்கின்றாரா? இல்லை அது தவறு என்றால் மக்களிடம் அது விசயமாய் தவறை ஒப்புக் கொள்கின்றாரா? எப்படி பேசினாலும் வாய் கிழியாது என நினைத்து வாந்திகளை எல்லாம் வாதங்களாய் வைக்கக்கூடிய அவரை எத்தனை முறை திருவனந்தபுரம் சகோதரர்களர் மூலமாக விவாதம் செய்ய அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவருக்;கு நாக்கில் எலும்பு இல்லாததைப்போன்று நட்டெல்லும் உறுதியில்லை என கருதுகிறோம். ஸலபிகள் அவரை கைவிடும் நாள் மிக தொலைவில் இல்லை (ஸலபிகள் பரவாயில்லை-அவரின் தனி நபர் விமர்சனத்தால் மறுமையில் அல்லாஹ் அவரை கைவிடுவதை பயந்து கொள்ளட்டும்). இன்னும் பட்டியலிட்டால் தனிநபர் தாக்குதலைப் போன்று ஆகிவிடும். இவைகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல் படுபவர்களின் – இஸ்லாமிய பிரச்சாரகர்களை தாக்கும் அறிவிலிகளின் பட்டியலில் சில.

மேற் கூறியவைகளை செய்திக்காக என வைப்போம். விளக்கங்களை நீங்கள் எழுதினால் வக்காலத்துகள்தான் விடையகக் கிடைக்கும். எனவே பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள். கேள்விகளை மட்டும் விரும்பும் உங்களுக்கு சில வேள்விகள்!

பம்பரமாய் (பல நிறங்களுடைய தலைவர்களின் இயக்கங்களுக்காக ஒற்றைக்காலில்) சுழலும் நண்பரே. நூர் முஹம்மது பாகவியை ஒப்பந்ததிற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கின்றோம் அது ஒருபுறம் இருக்கட்டும். உங்களுக்கு துணிவிருந்தால் இறைவனின் துணையிருக்கும் என நம்புவதாக இருந்தால் உலகளாவிய தெடர்புடைய நீங்கள் குறைந்தது தங்களை அடையாளம் கூறும் ஒரு ஆறு மார்க்க அறிஞர்களை விவாதத்திர்காக கொண்டுவாருங்கள். நானும் எனது கடமைக்காக பிஜெ உட்பட ஆறு பேரை கொண்டு வந்து நிறுத்துகின்றேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையிலிருந்து ஒப்புதல் கடிதத்தை தருகின்றேன்.

ததஜ ஆலிம்கள் முன்வரவில்லை என்றால் அவர்கள் பொய்யர்கள் என புரிந்து செயல்படுகின்றேன். தனிப்பட்ட உங்களிடம் மட்டும் விளக்குவதைவிட தமிழ்கூறும் மக்கள் மத்தியில் சத்தியத்தை எடுத்துவைக்க சபதம் ஏற்போம். உங்கள் தரப்பு ஆலிம்களை எப்போது சம்மதிக்க வைப்பீர்கள் என்ற பதிலுக்காக மட்டும் காத்திருக்கின்றேன்.

அன்புடன் – ஷிஹாபுதீன்

துணிவும் துணையும்

காணாமல் போன ஷிஹாபுத்தீன் மீண்டும்!!!

நண்பர் ஷிஹாபுத்தீனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

மூதறிஞர் பி.ஜே அவர்களைப் பற்றி உலமாக்கள் சமூகம் கொண்டுள்ள நிலைபாட்டை அவரது மாயையில் சிக்கித் தவிக்கும் உங்களைப் போன்றவர்கள் சிந்தனைத் தெளிவை அடையலாம் என்ற நன்னோக்கில் நான் எழுதிய மடலைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள். பகலை எவ்வாறு கொள்ளையடிப்பது??? என்று புரியவில்லை. உங்களைப் போன்று வர்த்தை ஜாலங்களெல்லாம் எனக்குத் தெரியாது.

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களிடமிருந்து பதில் வந்துள்ளது. இதற்கு முன் நான் அனுப்பிய கடிதங்களுக்கெல்லாம் ஒரு பதிலையும் காணவில்லை. ஏன் மவுனம் சாதிக்கின்றீர்கள்? உங்கள் தரப்பில் உண்மை இருந்தால் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு நான் அனுப்பிய அத்தனை கடிதங்களுக்கும் அக்கமிட்டு பதில் அளியுங்கள். அதற்கு மாறாக சம்மந்தம் இல்லாததையெல்லாம் இழுக்காதீர்கள். கேரளாவைச் சார்ந்த அறிஞர்களை ஏன் வம்புக்கு இழுக்கின்றீர்கள்? ஷம்சுத்தீன் பாலத்துக்கு நாக்கில் எலும்பு இல்லாததைப் போன்று நட்டெல்லும் இல்லை என்று விமர்சித்திருக்கின்றீர்கள். ஆம் த.த.ஜ வகையறாக்களின் தரம் கெட்ட விமர்சனங்களுள் ஒன்றாகவே இதனை நாம் கருதுவோம். காரணம் ஸஹாபாக்களையே விமர்சிக்கத் துணிந்த நீங்கள் ஷம்சுத்தீன் பாலத்தின் மீது இத்தகைய விமர்சனங்களை வீசுவதைக்கண்டு நாங்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸஹாபா ஒழிப்புப் பூஜை நடத்திக் கொண்டிருக்கும் த.த.ஜ என்னும் ஷைத்தானிய சக்திக்கு எதிராக அறிஞர் படை திரண்டுவிட்ட நிலையில் அந்தப் போர்களத்தில் தங்களை இணைத்துக் கொண்ட சாதாரண மக்களுள் ஒருவனாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பஹ்ரைனில் பலவருடங்களாக நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எனது ஆசிரியர் பெருந்தகை ஷம்சுத்தீன் பாலத்து அவர்களும் பஹ்ரைனில்தான் இருந்தார். அல்ஃபுர்கானின் அழைப்புப் பணியில், வகுப்புகளில் உங்களையும் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த போதெல்லாம் வேலையைக் காரணம் காட்டிப் புறக்கணித்த நீங்கள் ஏதோ த.த.ஜ சில்லரைகள் திருவனந்தபுரத்தில் அவரை விவாதத்துக்கு அழைத்ததைக் காரணம் காட்டி எழுதியிருக்கின்றீர்கள்.உங்களைப்போன்று நேரம் கிடைத்தால் தவ்ஹீத் என்ற போர்வையில் சரடுவிடுபவரல்ல அவர். தனது முழு நேரத்தையும் மார்க்கப் பணிகளுக்காக ஒதுக்கியிருப்பவர். உங்களைப் போன்று பி.ஜே கக்கிய எச்சில்களை விழுங்கிவிட்டு அதுதான் மார்க்கம் என்று கண்மூடித்தனமாக அவரை நாங்கள் பின் தொடரவும் இல்லை. மாறாக மார்க்கத்தில் உங்கள் தலைவர் செய்யும் மோசடிகளை நாங்கள் உணர்ந்து விழித்துக்கொள்ள அவரைப் போன்றவர்கள் அளித்த கல்வி மூலம் அல்லாஹ் உதவி செய்தான். அல்ஹம்துலில்லாஹ்.

இனி திருவாளர் தாங்கள் (தங்கள்???) பஹ்ரைனுக்கு விஜயம் செய்த போது என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தயக்கம் காட்டினீர்கள். நானாக உங்களைத் தொடர்பு கொண்டபோது நாளை வரலாம் என்று கூறிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப்போய்விட்டு இப்போது கடிதத்தில் தலைகாட்டியுள்ள தாங்களைப் போன்றவர்கள் நாவில் எலும்பும் நட்டெல்லும் உடையவர்தான்.

தேங்காய் பட்டணம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கென புதிய பைலாவையும் (த.த.ஜ கொள்கையில்) உருவாக்கி இது எந்த இயக்கத்தையும் சாராதது என்ற சப்பைக் கட்டுடன் பஹ்ரைன் சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டுச் சென்றீர்கள். உங்களது இயக்க கொள்கை உண்மையானது என்றால் ஏன் ஒரு இயக்கம் சேரா இயக்கம் உருவாக்கி அதன் துபை மண்டல தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டும்? இது சம்மந்தமாக உங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட சகோதரர்கள் என்னை அழைத்தபோது நான் கூறும் பதில் இதுதான். தேங்காய் பட்டணத்தில் தவ்ஹீத் என்று தனி இயக்கம் தேவையில்லை. பஹ்ரைனில் தவ்ஹீத் பிரச்சாசத்திற்காக அல்ஃபுர்கான் சென்டர் உள்ளது. அதன் பால் இங்குள்ள தேங்காய்ப்பட்டணம் சகோதரர்களுக்கும் பொது அழைப்பு விடுப்போம். அது போன்று ஊரில் எந்த இயக்கம் உண்மையான முறையில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்கின்றதோ அந்த அமைப்பில் இணைந்து கொள்வோம். அல்லாமல் புதிய இயக்கம் உருவாக்கி அங்கொரு கால் இங்கொரு கால் வைக்கும் தெளிவற்ற நிலைபாடு நமக்குத் தேவையில்லை. சரி உங்கள் தலைவர் தான் எங்களைப் போன்றவர்கள் தவ்ஹீத் கிடையாது ஏனெனில் நாங்கள் ஸஹாபாக்களை ஏற்றுக் கொண்டவடர்கள் (த.த.ஜ தான் உண்மையான தவ்ஹீது) என்று பிரகடனம் செய்த பின்னர் உங்களைப் போன்றவர்கள் எங்களையும் நாடுவது ஏன்?

சகோதரர் முஜீபுர்ரஹ்மான் உமரியை நீங்கள் விவாதத்திற்கு அழைத்து நடத்திய பொய்ச்சவடால்களை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். (பாக்க: http://www.islamkalvi.com/vivatham/index.htm) ஹாமித் பக்கிரி உங்களிடம் விவாதத்திற்கான பகிரங்க சவால் விட்டபோது நைசாக நழுவிவிட்டீர்கள். அதோடு மட்டுமல்ல உங்களோடு விவாதத்திற்கு இன்னும் பல அறிஞர்கள் தயாராகவே உள்ளனர். நீங்கள் தயங்குவது ஏன்? நீங்கள் விவாதத் திறமை உள்ளவர்கள்தானே? அரபி மொழி அறிந்த அறிஞர்களிடம் விவாதம் செய்ய உங்கள் தலைவர் முன்வரட்டுமே. விவாதம் தமிழில் தமிழ் நாட்டில்தான் நடக்கவேண்டும் என்பது இரண்டாவது விசயம். முதலில் உங்களிடம் கொள்கைகளைப் பற்றி அது சரியா தவறா என விவாதிக்க அறிஞர்களுக்கு முன் தயாராகுங்கள். சவூதியின் தலைமை முஃப்தி ஆலி ஷைக் அவர்களே உங்கள் மூதறிஞரை விவாதிக்க அழைத்துள்ள நிலையில் விவாத ஏற்பாடு செய்ய என்னிடம் கேட்டுக் கொள்வதை விடுத்து நான் கேட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் அக்கமிட்டு பதில் சொல்லும் உருப்படியான வேலையைச் செய்யுங்கள்.

அபூஅப்தில்லாஹ்வை நான் என்றுமே எனது ஆஸ்தான குருவாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அவரிடம் நான் பாடம் பயின்றதும் கிடையாது. ஏன் அவரால் நடத்தப்படும் நஜாத் பத்திரிகையையே நான் தொடர்ந்து படிப்பதும் கிடையாது. இந்நிலையில் எதையுமே அலசி ஆராய்ந்து கூறும் திருவாளர் பரிசுத்தமாக தங்களைக் காட்டிக்கொள்ளும் நீங்கள் இதற்கு முன்னர் நான் த.மு.மு.க வில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை நான் மறுத்தபோது மவுனம் சாதித்தீர்கள். இப்போது புதிய சரடு விடுகின்றீர்களே! அவரின் குற்றச்சாட்டுகளுக்கு கமாலுத்தீன் மதனி பதில் சொல்லட்டும் அல்லது சொல்லாமலிருக்கட்டும். அதற்காக நான் எழுப்பிய கேள்விகள் பொய்யென்றாகி விடுமா?

இறுதியாக ஸஹாபாக்களைக் கிரிமினல், ரவுடி, எடுப்பார் கைப்பிள்ளை, அண்ணன் எப்ப காலியாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்தவர்கள், நாம் கூட செய்யத் தயங்கும் குற்றங்களைச் செய்தவர்கள் என்றும் இஸ்லாமியப் பேரறிஞர்களை மார்க்கம் தெரியாதவர்கள் விபரமற்றவர்கள் என்றும் உங்கள் தலைவர் விமர்சிக்கலாம்.

அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி உங்களைப் போன்றவர்களும் ஸலபிகள் குராபிகளை விட மோசமானவர்கள், தரம் கெட்டவர்கள், அடங்காப்பிடாரிகள், நாக்கில் நரம்பற்றவர்கள் நட்டெல்லு இல்லாதவர்கள் என்றெல்லாம் விமர்சிக்கலாம். இதுதான் உங்களின் நிலை என்றால் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்கு உங்கள் மூதறிஞர் பி.ஜே யை விட மேலானவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள். உங்களை விட மேலானவர்கள் இந்த சமுதாயத்தின் மூத்த மார்க்க அறிஞர்கள். அவர்களை நீங்கள் விமர்சிக்கும் நிலையில் உங்களின் நிலைபாட்டை இந்த சமூகத்திற்கு மத்தியில் எடுத்துக்காட்டி அந்த மகான்களின் கண்ணியத்தை பிரகடனப் படுத்துவதை அல்லாஹ்வின் பாதையில் செய்யும் ஒரு ஜிஹாத் என்று கருதியே செயல் படுவோம்!

مَّا كَانَ اللّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَا أَنتُمْ عَلَيْهِ حَتَّىَ يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَكِنَّ اللّهَ يَجْتَبِي مِن رُّسُلِهِ مَن يَشَاء فَآمِنُواْ بِاللّهِ وَرُسُلِهِ وَإِن تُؤْمِنُواْ وَتَتَّقُواْ فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ

தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (3:179)

அன்புடன்
மு.அப்துல்காதிர் தஸ்தகீர்
பஹ்ரைன்

நவம்பர் 28, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 11

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:46 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய் சவுக்கியமா.

சவுக்கியந்தான். என்ன அஹமது ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிற மாதிரி தெரியுது.

ஆமாமா. ஒங்கள்ட்ட ஒரு சேதி கேக்குறதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுதான்.

ம். கேளுங்க. என்ன சந்தேகம் ஒங்களுக்கு.

அது வேற ஒண்ணுமில்ல. நீங்க ஏன் இப்போ முல்லாவோட பாணிய காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டீங்க.

ஓ அதுவா. இதுதானா ஒங்களோட பெரிய சந்தேகம். இது நம்ம தலைவரோட பாணி தானே. எங்கயாவது ஒரு பாணிக்கு மக்களோட வரவேற்பு கெடச்சுதுன்னா ஒடனே அதுக்கு மாறிக்க வேண்டியது தானே.

அது சரிதான். ஆனா எல்லோருக்கும் மறந்து போய்ட்ட இலாஹி மேட்டர்லாம் ஏன் எழுதுனீங்க ஒமர். அத வச்சே தமுமுக காரன் போஸ்ட்டிங் போடட்டும்னு விஷயத்த எடுத்துக் குடுக்குறீங்களோ.

அப்டிலாம் ஒண்ணுமில்ல. சும்மா வாசகர்களோட கவனத்த தெச திருப்புறதுக்காக மாத்தி மாத்தி எளுதப் போக, அதேயே புடிச்சுக்கிட்டு திரும்ப அடிக்கிறானுக. அதுதான் என்ன செய்றதுன்னு தெரியாம முளிக்கிறேன்.

ஏன் சலிச்சுக்கிறீங்க. நம்மளோட தொண்டர்கள் (குண்டர்கள்?) சோந்து போயிடக் கூடாதுன்னு, கவனமா தொடர்ச்சியா தமுமுக மேல அபாண்டமான பொய்கள சேர்த்து சேர்த்து எளுதிக்கிட்டுத்தான வர்றீங்க.

உண்மைதான் அஹமது. ஆனா நாம என்ன எளுதுனாலும் நம்புறதுக்கு ஆளுக இப்போ கொறஞ்சு போயிட்டாங்களே.

ஆமா pjvstmmk ன்னு தானே ஒரு ஸைட்டு இருக்கு, ஆனா நீங்க டிஎம்எம்கேவும் பிஜேவும்னு எளுதியிருக்கிங்க. அப்புடி எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே மாத்தி எளுதுனா, பிறகு எப்புடி மக்கள் அந்த ஸைட்டுல தான் முதல்ல அவதூறு வந்துச்சுன்னு நீங்க சொல்றத நம்புவாங்க.

கரெக்ட் தான் அஹமது. நம்ம தலைவரு தமுமுகவுலயிருந்து ஓடி வந்ததோட ஆலந்தூர்ல வச்சுத்தான் அவதூறு பிரச்சாரத்த ஆரம்புச்சு வெச்சாரு. அத்தோட களவாடிக்கிட்டு வந்த பத்திரிக்கையிலயும் கண்டமேனிக்கு எளுதுனாரு. அதுக்கப்புறமா தான் யாரோ இப்புடி ஒரு ஸைட்டு ஆரம்புச்சாங்க. இது எல்லோருக்கும் தெரியும் தான். ஒருவேளை யாராச்சும் மறந்திருக்கலாம்ல. தவிர, இப்போ நம்மள்ட்ட இருக்கிற ஆளுங்களுக்கு பழய சங்கதியெல்லாம் தெரியாது தான. அதுதான் அவுத்துவுட்டேன்.

ஓ! அப்போ, தமுமுகவுக்கு லெட்ச லெட்சமா பணம் வருதுன்னும், முபாஹலா பத்தியும் சொன்னதும் இதே ரகம் தானா.

ஆமா. அத்தோட நம்ம தலவரு கச்சி ஆரம்புச்சு மூணு வருஷம் முடியுறதுக்கு முன்னால எவ்வளவு சொத்து வாங்கிட்டோம். அத எவனும் கேள்வி கேக்காம இருக்கணும்னா, இப்புடி தமுமுகவ பத்தி இல்லாததையும், பொல்லாததையும் எளுதி வைக்கனும்ல.

அதுசரி. நல்ல பாலிஸிதான். ஆனா ஒங்க மெயில் படிக்கும் போது எனக்குத்தான் பக்கு பக்குங்குது.

ஏங்க அஹமது.

பின்ன என்னங்க! சும்ம சும்ம சுனாமியபத்தி எளுதுறீங்க. சுனாமில சுருட்டுன ஒரே இஸ்லாமிய இயக்கம்னு நம்மள முழு தமிழக முஸ்லிம்கள் தெரிந்து வச்சிருக்குற நெலமைல, நீங்க எளுதுறது நமக்கு எதிராகத் தானே போயி முடியும்.

அப்டியெல்லாம் பயப்படாதீங்க. நாம எளுதுறது நம்மளோட இருக்குற கொஞ்சம் பேரும் ஓடிடக் கூடாதுங்குறதுக்காகத் தான் அப்டியெல்லாம் எளுதுறேன்.

அதுசரி. கும்பகோணத்துல ஒரு இலட்சம் பேர்தான் கூடுனாங்கன்னு அந்த அம்மா முன்னால நம்ம தலவரே சொன்னதுக்குப் பெறகு எப்படி 10 இலட்சம்னு நாம சொல்ல முடியும்.

அஹமது.. .. .. 29 ஜனவரி 2006 நாள் முடிவதற்கு முன்னாலேயே நம்ம ஆளுங்க, மூலமா 12,15,18 இலட்சம்னு கத வுட்டாச்சு. ஆனா உண்மைல வந்தது 1 இலட்சத்துக்கு கொறவுதான்னு வெளங்கிப் போச்சு. அதுக்காக சும்மா வுட்டுட முடியுமா. தமுமுகவுலயிருந்து விலகுன அன்னையில இருந்து கடப்புடிச்சு வரக்கூடிய X10 ங்கிற கணக்குல ஒன்னை பத்தால பெருக்கி சொல்லிட்டோம்.

ஓ! தமுமுகவுல இருந்து வந்தப்போ நம்ம தலவரு 90 சதவிகிதம் மக்கள் என்னோட வந்துட்டாங்கன்னு சொன்னாரே. அப்ப அது உண்மையிலே 9 சதவிகிதம் தானா.

இதுல ஒங்களுக்கு இவ்வளவு நாளைக்கு பிறகு சந்தேகம் வந்ததா. சரிதான் போங்கள். அன்னையிலருந்து எந்த ஒண்ணையும் பத்தால பெருக்கித்தான் சொல்லிக்கிட்டு வர்றோம். அதுனால கொளம்பிக்காதீங்க.

ரொம்ப நன்றிங்க. அப்போ பிறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 28.11.2006

நவம்பர் 26, 2006

ததஜவினருக்கு உளறுவாயனின் அறிவுரை?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:36 முப

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

உ.உ.கூ.உமருக்கும் உண்மைக்கும் என்றுமே தொடர்பு இருந்ததில்லை என்பதும், உளறிக் கொட்டி கிளறி மூடும் திருப்பணியைத் தவிர வேறொன்றும் அறியாத அறிவிலி என்பதும் அனைவரும் அறிந்த ரகசியம்.

அதனை மீண்டும், மீண்டும் மெய்ப்பிப்பதற்காக பெரு முயற்சி எடுத்து தனது கிரிமினல் தலைவனின் ஆலோசனைப்படி ஃபோர்ஜரிக்குள் புகுந்தவர், விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் திணறி உரைநடையிலிருந்து உரையாடலுக்குத் தாவி அதிலும் விழி பிதுங்கி நிற்கிறார். பாவம்.

RegistrationReferenceஎன அவசரப்பட்டு எழுதியதோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையிலேயே மற்றவர்களை, ததஜ சுன்னத்தை பின்பற்றி குதறி எடுத்திருந்தார்.

இதனை நாமும் மற்றவர்களும் தவறு என சுட்டிக்காட்டி இருந்தோம்.
தவறை தவறு என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத தலைவனால் வழிநடத்தப்படும் காரணத்தால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என புலம்பியுள்ளார்.

இவரதுReg Vs Refசந்தேகத்தைப் போக்க, முகவைத்தமிழன் தான் வெளியிட்டிருந்த ஷரீஅத் தீர்ப்பாய கடிதத்தில் இடம் பெற்றிருந்த Reg : 333/2003 என்பதனை வட்டமிட்டு காட்டியிருந்தார். மாறாக உளறல் உமரின் பினாமி நபிதரசன் (உளறல் உமரே ஒரு பினாமி. நபிதரசன் அவருக்கு பினாமியா?) வெளியிட்ட நகலில் Reg 333/200 என இடம் பெற்றிருந்ததால் அது வேறு இது வேறு என அவர் வாதிடவில்லை.

நாமும் கூட நமது முந்தய பதிவில் இதனை சுட்டிக்காட்டி,FAX செய்த சகோதரர்கள் ஒழுங்காக செய்திருந்தால் இதிலும் அதே எண்ணை கண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டு இருந்தோம்.

ஆக இந்த எண்ணை வைத்துக் கொண்டு வழக்காடியது உளறல் உமர் மட்டுமே. நாம் சுட்டிக்காட்டியதெல்லாம் Reg என்பது வேறுRef என்பது வேறு என்பதனைத் தான். இந்த விபரம் கூட புரியாத அவசர குடுக்கைகளை இன்னமும் தறுதலை ஜமாத் தங்களது பினாமிகளாக வைத்துக் கொள்ளப் போகிறதா என்றும் கேட்டிருந்தோம்.

இதுவரை பதிலில்லை. பதில் வராது என்பது திண்ணம். கற்பனை கலந்து கதைவிட்ட தீன் முஹம்மது என்ற பினாமியை பினவலித்துக் கொண்டது போல் உளறுவாயனையும் நிறுத்த முடியாத இக்கட்டான் சூழல். அதனால் தான் முழுக ஆரம்பித்த பின் சாண் என்ன முழம் என்ன என அடுக்கடுக்காக அவதூறுகளையும் அபாண்டங்களையும் அள்ளி வீச ஆரம்பித்துள்ளார்.

தன்னை நோக்கி வைக்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதிலளிக்காமல் மற்றவர்கள் மேல் புழதி வாரித் தூற்றுவதும், அந்தப் புழுதி அடங்குவதற்குள் வேறு ஒன்றில் ஓடிப் போய் பதுங்கிக் கொள்வதும்BJP மற்றும்PJ Party யினரின் வாடிக்கை.

அந்த சுன்னத்தை பின்பற்றி தமுமுக மீது தறி கெட்டு கூச்சலிடுகின்றார்.
இப்பொழுது முளை மழுங்கி விட்ட மூதறிஞர் (?) பிஜே, தமுமுகவிலிருந்த காலத்தில் வாளி தூக்கி நாங்கள் வசூலித்த பணத்தை, செல்வத்தை, சொத்துக்களை ஏமாற்றி திருடிச் சென்ற கயவர் கூட்டமான ததஜ, அன்றும் இன்றும் சாமானியர்களின் தியாகத்தால் சமுதாயப்பணி செய்து அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் தமுமுகவைப் பார்த்து குரைக்கிறது. சூரியனைப் பார்த்து எதுவோ குரைத்தது போல.

போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சரணடைந்த தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜே என குறிப்பிட்டிருந்தோம்.

உளறுவாயனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது.
ஒன்று கவனிக்க வேண்டும், தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவை அவரது நிகழ்கால எதார்த்த நிலையைச் சொன்னால், யாராவது சுட்டிக்காட்டினால் உளறுவாயனுக்கு பொறுக்காது. அதனடிப்படையில் பொங்கி (அசடு) வழிந்துள்ளார்.

சந்திப்பு நடந்தது கோட்டையில் தான், தோட்டத்தில் அல்ல – எனவே முதல்வர் என்று தான் குறிப்பிட வேண்டும். பொன்மகள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என கூறுகிறார்.

சந்திப்பு நடந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக பொறுப்பு வகித்ததால் அவரை கோட்டையில் மட்டுமல்ல, தோட்டத்திலோ அல்லது ட்ராபிக் சிக்னலிலோ சந்தித்தாலும் அவர் அன்று முதல்வர் தான். எனவே முதல்வருடனான சந்திப்பு என்று தான் கூற வேண்டும். ஆனால் பெட்டி வாங்கிக் கொண்டு அவரது டாய்லெட் பேப்பர் ஆணையத்தை தலை மேல் தூக்கி வைத்து காவடி ஆடியது குறித்துத் தான், நாம் போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சரணடைந்தார் எனக் கூறினோம்.

பணம் கொடுத்த ஜெயலலிதா முதல்வர் என்ற முறையில் கொடுக்க வில்லை. பணம் வாங்கி பிஜே, ஜெயலலிதா முதல்வர் என எண்ணி வாங்கவில்லை. மாறாக, ஜெயலலிதாவை, தான் சமுதாயத்தை கூறு போட்டதற்காக படி அளக்கும் பத்தினி (?) என்று எண்ணியே வாங்கிக் கொண்டார். இதனை சமுதாய மக்களிடம் மறைப்பதற்காகவே நாங்கள் தோட்டத்தில் சந்திக்க வில்லை. கோட்டையில் தான் சந்தித்தோம். எனவே பண பட்டுவாடாவிற்கு சாத்தியமில்லை என சப்பை கட்டு கட்டுகிறார்.

தோட்டத்தில் வைத்து கொடுப்பதற்கு ஜெயலலிதாவோ, தனது கட்சி ஆஃபீஸ் அல்லது வீட்டில் வைத்து வாங்குவதற்கு கிரிமினல் பிஜேவோ உளறுவாய் உமர் அளவிற்கு முட்டாள்களில்லை.

வாங்கிக் கொண்ட விசுவாசத்திற்காகவே, அப்ஸல் குரு விசாரணை நடுநிலையாக நடைபெறவில்லை. எனவே அப்ஸல் குருவை தூக்கிலிடக் கூடாது என நாடே எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் வேளையில்,BJP மற்றும்ADMK வைப் பின்பற்றி அப்ஸல் குருவிற்கு ஆதரவாக எழுதக் கூட மனம் வராமல் முரண்டு பிடித்து வருகிறார்.

இதுவெல்லாம் உளறுவாயனுக்கு தன்னாலும் புரியாது. சொன்னாலும் விளங்காது.

அடுத்ததாக முபாஹலா சம்பந்தமாகவும் முடிந்தவரை குழப்பியுள்ளார்.

கிரிமினல் தலைவன் பிஜே வளைகுடா விசிட்டின் போதே தனது கைத்தடி தொண்டியப்பாவை வைத்து நாடகமாடி இங்கிருந்து ஓடிப்போனார். என்றாலும் இலாஹி இந்தியா சென்ற போது வேறு வழியில்லாமல் தனது விசிலடிச்சான் தக்லீதுகளை சமாதாப்படுத்த மேலப்பாளையத்தில் முபாஹலா ஒப்பந்தம் தயாரா என முரசறைந்து பார்த்தார்.

ஒப்பந்தம் என்ன வெங்காய ஒப்பந்தம். முபாஹலாவிற்கே நான் ரெடி நீ ரெடியா என இலாஹி பதிலளித்ததும் வெலவெலத்துப் போய் மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் நோக்குடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தங்களது ரமளான் சிறப்பு பொதுக் கூட்டத்தில் இலாஹி வந்து இடையூறு செய்யலாம் என தாங்கள் அஞ்சுவதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, இலாஹி அந்த பக்கமே வராமல் தடுக்க வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என பொறுப்பாக புகார் செய்தார்.

இவ்வளவையும் செய்து விட்டு, தனது விசிலடிச்சான் தக்லீதுகளிடம் பார்த்தீர்களா இலாஹி பயந்து விட்டார். தென்காசிக்கு ஓடிவிட்டார். எனவே, அறிந்து கொள்ளுங்கள் நான் சொல்வது மாத்திரம் உண்மை என் அறிவிப்பு செய்தார். ரசிகர் கூட்டம் ஏமாந்தது. இலாஹி காவல் துறையினரிடம் தறுதலை ஜமாஅத் எழுதிக் கொடுத்த புகார் முதற்கொண்டு அனைத்தையும் வெளியிட்ட பின் சமுதாயத்திற்கு உண்மை விளங்கியது.

ஆனால் இந்த உளறுவாயனுக்கு அவ்விஷயம் இன்னமும் விளங்கவில்லை போலிருக்கிறது. அதனால் தான் முபாஹலா மொந்தையில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டுள்ளார்.

நாம் அடிக்கடி குறிப்பிடுவது போல், இந்த உளறுவாயன் சமயத்தில் எதிராளியை குறிப்பிடுகிறாரா அல்லது தனது தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவை குறிப்பிடுகிறாரா என்று சந்தேகப்படும்படி எழுதுவதில் கில்லாடியாக்கும்.

அதேபோல் மீண்டும் மீண்டும் சுனாமி பற்றி எழுதி வருகிறார். அத்தோடு, சுனாமியில் அமுக்கிக் கொண்டதை இப்பொழுதே பங்கிட்டு வழங்க தொண்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அறிந்த வரை சுனாமி நிதியை (ததஜவினரைத் தவிர வேறு எவரும்) தமது சொந்த கட்சியின் வளர்ச்சிக்காகவும், விளம்பரத்திற்காகவும், நஷ்டமடைந்து வரும் களவாடிய பத்திரிக்கைக்காக ததஜ செலவிட்டதைப் போலவும் ததஜவினரைத் தவிர வேறு எந்த அமைப்பினரும் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.

எனவே, உளறுவாய் உமரின் வேண்டுகோளின் படி, தனது சுய இலாபத்திற்காக ததஜ அமுக்கிக் கொண்ட சுனாமி நிதியை உடனே தாமதமின்றி பங்கிட்டு வழங்க வேண்டுமென ததஜ அடிவருடிகள் அனைவரும் தமது தலைமைக்கு அறிவுறுத்துவார்களாக.

அத்தோடு, தமுமுகவிலிருந்து அமுக்கிக் கொண்ட சொத்துக்களையும் திரும்ப ஒப்படைத்து மன்னிப்பு கோரி மடல் எழுதுவார்களாக.

உளறுவாய் உமரின் கோரிக்கைக்கு தக்லீது ததஜவினர் என்ன பதில் தருகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

அத்தோடு, நீக்கப்பட்ட நிர்வாகி என முகவைத்தமிழன் எழுதியதை வைத்துக் கொண்டு அப்துர்ரஹ்மான் தான் அந்த நிர்வாகி என உளறுவாய் முடிவு செய்துள்ளார்.
இதுவரை ததஜவிலிருந்து விலக்கப்பட்டோ அல்லது விலகியோ உள்ளவர் அப்துர்ரஹ்மான் ஒருவர் மட்டுமே என உளறுவாய் எண்ணிக் கொண்டார் போலும்.

தறுதலை ஜமாஅத்தின் தவ்ஹீத் நாடகம் தக்லீதாகிப் போனதால் மக்கள் சாரிசாரியாக, கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் தான் உள்ளனர். அவர்களில் பல கிளைகளின் நிர்வாக பொறுப்பிலிருந்தவர்களும் அடங்குவர். தமிழகத்தில் மட்டுமல்லாது தம்மாம், கோபர், மக்கா, ஜித்தா, யான்பு என சவுதியின் பல பகுதிகளிலும் வெளியேறி உள்ளனர். ஏன் சமீபத்தில் குவைத்தில் கூட கூண்டோடு நிர்வாகிகள் மாற்றம் நடந்ததே.

அது தவிர, மக்கா, ரியாத் கடிதங்களை முகவைத்தமிழன் வெளியிட்டதற்கு யாரை குற்றம் சாட்டப் போகிறார்கள். மவ்லவி பஷீரையா, அல்லது உலவியையா அல்லது ஆடுதுறை ஃபைஸலையா?

நாமறிந்த வரை அப்துர்ரஹ்மான் என்ற ஒருவரது பெயர் சந்திக்கு இழுக்கப்பட்டு பின்னப்படுகிறதென்றால், விலகிவிட்ட மற்ற நிர்வாகிகளுக்கு மறைமுகமாக எச்சரிப்பதற்காகத் தான்.

இதுவரை தன்னை கேள்வி கேட்பவர்கள் மேல் பொருளாதார மற்றும் பாலியல் குற்றச் சாட்டுகளையே சொல்லி வந்த கிரிமினல் தலைவன் பிஜே, தற்சமயம் ஃபோர்ஜரி என புதுக்காரணம் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

இறைவனை மட்டுமே அஞ்சக்கூடியவர்கள், எந்த கிரிமினலின் சூழ்ச்சிக்கும் பயப்படாமல் துணிந்து உண்மையைக் கூற முன்வருவார்கள். அவ்வாறு துணியாதவர்கள் ததஜவிலேயே தக்லீது செய்து கொண்டு உலக இலாபங்களை பெற்றுக் கொள்வார்கள்.

ஒவ்வொருவரும் ஆலொசிக்க வேண்டிய நேரம் இது.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 26.11.2006


நவம்பர் 21, 2006

ததஜவின் அறைகூவல் ஏற்பு!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:09 பிப
ஜகாத் கொடுத்துவிட்ட பொருளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

ததஜ-வின் அறைகூவுலை ஏற்று கடந்த 10.09.2006 அன்று மதுரையில் ததவினரின் மேடைக்கே சென்று விவாதத்திற்கு தயார் என்று மௌலவி ஹாஃபிழ் நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விவாதம் செய்வதற்காக 20.11.2006 அன்று ஒப்பந்தம் செய்வது என்று இருதரப்பாரும் அதே மேடையில் அமர்ந்து பேசி முடிவு செய்திருந்தனர். அதன்படி மௌலவி ஹாஃபிழ் நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அவர்கள்இ கடந்த 20.11.2006 அன்று மதுரையில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடன் செய்துக்கொண்ட விவாத ஒப்பந்தம்.

விவாத ஓப்பந்தம் பார்ப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
வீடியோ பதிவுக்கு இங்கு கிளிக் செய்யவும்
நன்றி : இஸ்லாம் கல்வி

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 10

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:46 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே உமர் பாயா. வாங்க. வாங்க. எங்க நீங்க வராம போயிடுவீங்களோன்னு நெனெச்சேன்.

ஏன் அப்புடி நெனெச்சீங்க அஹமது.

அது வந்து.. .. ..

ஏன் தயங்குறீங்க அஹமது. முகவைத் தமிழனோட மெயிலுக்கு பதில் சொல்ல நுழைஞ்சு ஏகத்துக்கு தர்ம அடி வாங்குனதுனால ஓடிப் போயிடுவேன்னு நெனெச்சீங்களா.

சேச்சே.. .. அதுக்காகவுலாம் இல்ல. நீங்க தான் முன்னாடியே நமக்கெல்லாம், வெட்கம், மானம், சூடு, சொரணையெல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் நான் அதயெல்லாம் ஒங்கள்ட்ட எதிர்பார்க்க முடியுமா.

நான் நெனெச்சது, நீங்க அண்ணனோட ஒக்காந்து இந்த மேட்டர அப்புடி வேற தெசயில திருப்புறதுன்னு ஆலொசிக்க போயிருப்பீங்களோன்னு தான் நெனெச்சேன்.

அங்க போனா மட்டும் என்ன புதுசா இருக்கப் போவுது. அதுனால தான், Reg என்பதை Ref என எழுதியது தவறுன்னு ஒத்துக்கிட்டு நானே ஒரு போஸ்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்.

அதுசரி. நான் அதப்பாக்கல. அதுனால தான் நீங்க அண்ணன்ட போயிட்டீங்களோன்னு நெனெச்சேன். ஆனா Reg ன்கிறதுக்கும், Ref ன்கிறதுக்கும் ஒண்ணும் சம்பந்தமே இல்லையே. அப்பறம் ஏன் நீங்க அந்த விஷயத்தை பெருசா எழுதுனீங்க.

என்னங்க அஹமது செய்யுறது. கைல கிடச்சு இருக்கிறது கம்பா, பாம்பான்னா வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போறவன் ஆராச்சி செஞ்சுகிட்டா இருப்பான். எதோ கெடச்சத வச்சு கர ஏறலாம்னு பாத்தா, அது நம்மளயே கடிக்கிற மாதிரி வளச்சுருச்சு. அதான் உதறிட்டேன்.

சரி விடுங்க. நீங்க என்னா வச்சுக்கிட்டா வஞ்சகம் செய்யப்போறீங்க. ஒங்க அறிவு அவ்வளவு தான்னு புரிஞ்சுகிட்டு இருப்பாங்க. ஏதுக்கும் இத எளுதுறதுக்கு முன்னால நீங்க அண்ணன்ட்ட ஒரு வார்த்தை பேசியிருந்திருக்கலாம்.

ஏன்? ஒரு வார்த்தையில ஒரு எழுத்த மறச்சதுனால அவர தமுமுக காரன் நார் நாரா ஊர் ஊரா தொங்க வுட்டானே அந்த அனுபவத்துனால உஷாரா வழிகாட்டியிருப்பார்னு சொல்றீங்களா?

ஒரு வார்த்தைல ஒரு எழுத்த அண்ணன் மறச்சாரா. என்ன உமர்பாய். வரவர நீங்களும் தமுமுக காரன் மாதிரி பேச ஆரம்புச்சுட்டீங்க.

ஏன் தமுமக காரன் மட்டும் தான் உண்மையப் பேசுவானா. நீங்க வேணா அத மறந்திருக்கலாம். ஒங்கள மாதிரியான மறதியாளர்கள நம்பித்தான் அண்ணன் பிஜே குர்ஆன், ஹதீஸ் எல்லாத்துலயும் தனக்கு தேவையான மாதிரி மறைக்கிறதும், திரிக்கிறதும், கைகழுவுறதுமா இருக்காரு.

சரி. விஷயத்த சொல்லாம ஏன் என்னென்னத்தையோ பேசுறீங்க.

ஜகாத் விஷயம் சர்ச்சையானப்ப, அண்ணன் என்ன சொன்னாரு. ‘துதஹ்ஹிரு’ – ன்னு தானே அடிச்சுப் பேசுனாரு, அப்புறமா தமுமுக மேடைல வேற ஒரு மவ்லவி வந்து ‘துதஹ்ஹிருக’ – ன்னு அதச் சொன்னப்புறமா தானே நமக்கு அண்ணன் ‘க’ வை மறச்ச விஷயம் வெளங்குச்சு. ஆனாலும் அவர மட்டும் தான் தக்லீது செய்யனும்கிற தவ்ஹீத் கொள்கைல நாம பிடிப்பாக நிக்கிறதுனால நாம உண்மைய தமுமுக காரன் சுட்டிக்காட்டுனப்புறமாவும் அத விட்டுட்டு அண்ணன் பின்னாலேயே நிக்கிறோமே – மறந்துட்டீங்களா.

ஆமாமா. உமர். சரியாத்தான் சொன்னீங்க. ஜகாத்ங்கிற ஒரு பெரிய கடமையிலேயே தனக்கு சார்பா மறைச்சோ, திரிச்சோ சொல்லிக்கலாம். வாதத்துல ஜெயிக்கிறது தான் முக்கியம்கிற அண்ணனோட அரிச்சுவடி பாடத்துனால தான் அப்புடி RegRef ன்னு எழுதிட்டீங்களாக்கும்.

ஆமாங்க அஹமது. எல்லாரும் என்னய, உங்கள மாதிரின்னு நெனெச்சு எழுதிட்டேன். ஆனா நம்மளத் தவிர மத்தவன்லாம் வெவரமாத்தான் இருக்காங்க. அதுனால தான் டக்குனு ஜகா வாங்கிட்டேன்.

அது சரி. இப்பத்தான் எனக்கு ஒண்ணு வெளங்குது. அதாவது இந்த மேட்டரு கிட்டத்தட்ட ஜகாத்துல மாட்டிக்கிட்டு அண்ணன் ஜகா வாங்குனத ஒத்தது மாதிரியாத் தான் இருக்கு. எப்புடின்னா.. .., ஜகாத் விஷயத்துல அண்ணன் ஆரம்பத்துல இந்த ‘துதஹ்ஹிரு’ வுல தான் எல்லாமே அடங்கியிருக்குன்னு தன்னோட ஆர்கியூமெண்ட்ட வச்சாரு. பெறகு அது துதஹ்ஹிரு இல்ல துதஹ்ஹிருக – ன்னு வெட்ட வெளிச்சமானதோட, ஒரு எழுத்து தவறிப்போனது பெரிய விஷயமான்னு ஜகா வாங்குனாரு. அது மாதிரி ததஜவோட வழக்கம் பிஸ்மில்லாவ அரபுல எழுதுறதா, தமிழ்ல எழுதுறதான்னு புடிச்சு தொங்குனீங்க. இரண்டு மாதிரியும் எழுதப்பட்டிருக்குன்னு தெரிஞ்சதும் அத கண்டுக்காம விட்டுட்டு RegRef ன்னு மாத்த முயற்சி பண்ணுனீங்க. அந்த குட்டும் ஒடஞ்சதுனால இப்ப ஜகா வாங்கிட்டீங்களாக்கும்.

கரெக்ட் தான். ஆனா நாம எப்பையும் நம்மோட தப்ப முழசா ஒத்துக்குற பளக்கமே இல்லியே. அதுனால தான் முகவைத் தமிழன் தான் ஜகா வாங்குறார்னு ஒரு அவதூறை துணிந்து தலைப்பாக்கி மெயில் அனுப்புச்சுட்டேன். இந்தாங்க நீங்களே படிச்சு பாத்துக்குங்க.

ம்.. .. .. சரிதான். நம்மோட சுன்னத்த அச்சு பிசகாம அப்புடியே கடப்புடிச்சு இருக்கீங்க. ஆனா,

Reg என்பதை Ref என்று எழுதி விட்டதால்? ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா? என்று எழுதியிருக்கீங்களே. இதப்படிக்கிறவங்க.. …

‘ஆமா, அதெப்புடி ஃபோர்ஜரி இல்லாமப் போகும். RegRef ன்னு எழுதுனா அது கண்டிப்பா ஃபோர்ஜரி தான்னு வெளங்கிக்கிட மாட்டாங்களா?’

அட – அப்புடி ஒரு அர்த்தம் வருமோ. வரவர நீங்களும் தமுமுக காரன் மாதிரி கண்ணுல வெளக்கெண்ண ஊத்திக்கிட்டு படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல. மேல படிங்க.

ம்.. .. .. நாய் குரைப்பது.. .. மாடு மேய்வது.. .. .. பாய்ந்து பிராண்டுவது.. .. .. நம்மளோட அதுக்கார்கள மறக்காம எளுதியிருக்கீங்க. எல்லாம் சரி. ஆனா நம்மோட முன்னாள் நிர்வாகி சகோ. அப்துர்ரஹ்மான் தான் அந்த ஷரீஅத் தீர்ப்பாயம் கடிதத்தை குடுத்தாருன்னு முகவைத் தமிழன் எழுதி நான் படிச்சதா ஞாபகமில்லியே.

என்னங்க அஹமது நம்மளோட சுன்னத்து, அதுக்காருகள யெல்லாம் வெளங்கிகிட்ட நீங்க இத மாத்திரம் ஏன் வெளங்க மாட்டேங்குறீங்க. நமக்கு புடிக்காதவங்கள யெல்லாம் நாம இப்புடித்தான் ஒண்ணா சேர்ப்போம். முகவைத் தமிழன் சொல்லலன்னாலும், அப்துர்ரஹ்மான சொல்லலன்னாலும் நாம் அப்புடித்தான் எளுதுவோம். அப்புடி சொல்லிச் சொல்லித் தான நாம அந்த ஜித்தா மவ்லவி முஜீப தமுமுக மேடைல பேசுற அளவுக்கு கொண்டு போயி விட்டோம்.

அதெல்லாம் சரிங்க. இந்த விவகாரத்துல ஆரம்பத்துல இருந்து எனக்கு ஒரு சந்தேகம். அவுங்க வெளியிட்டது, நாம வெளியிட்டதுன்னு இரண்டு கடிதம் இருக்குறப்ப ஒண்ணு அசல், ஒண்ணு போலின்னு சொல்றோமே அத கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு எனக்கு என்ன சந்தேகம்னா, மக்கா கூட்டமைப்புன்னு ஒரு கடிதமும், ரியாத் மண்டலம்னு ஒரு கடிதமும் முகவைத் தமிழன் பிளாக்ஸ்பாட்டு ல வந்துச்சே அதனோட நிலவரம் என்ன?

அதத்தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க. அவனுக தரப்புல இருந்து கூட ராவுத்தர தவிர வேற யாரும் அத கண்டுகல. அப்புடி இருக்கும் பொது நீங்க ஏன் அத கிளறுறீங்க.

அதில்லீங்க உமர். ஷரீஅத் தீர்ப்பாய கடிதத்துதை அப்துர்ரஹ்மான் தான் முகவைத் தமிழன்ட்ட கொண்டு போயி குடுத்தார்னு சொல்ற நீங்க.. .. மக்கா கூட்டமைப்பு கடிதத்தையும், ரியாத் மண்டல கடிதத்தையும் யாரு முகவைத் தமிழன்ட்ட குடுத்தாங்கன்னு சொல்லல. அது மாத்திரம் இல்ல. தம்மாம் கிளை கடிதத்தை அப்துர்ரஹ்மான் தான் குடுத்தார்னு திட்டவட்டமா நீங்க சொல்றதா இருந்தா, தம்மாம் கிளை நிர்வாகிகள் அத்தன பேரயும் தான் குத்தம் சொல்லனும் அத வுட்டுட்டு அப்துர்ரஹ்மான மாத்திரம் குத்தம் சொல்றது சரியில்லை. அப்புறம் மக்கா, ரியாத் கடிதம்லாம் யார் மூலமாக போச்சுன்னு சொல்லப் போறீங்க. பஷீர் மவ்லவி மூலமாவா அல்லது மக்காவுல இருக்குற அப்துர்ரஹ்மான் மவ்லவி மூலமாவா இல்ல மெட்ராஸுல இருந்து பிஜே வே குடுத்துட்டார்னு சொல்லப் போறீங்களா.

என்னங்க அஹமது. இப்புடி கேள்வி மேல கேள்வி கேட்டு குடஞ்சு எடுக்கிறீங்க. நம்மளோட கொள்கை ஒங்களுக்கு வெளங்கலன்னு நெனக்கிறேன். ரியாத், மக்கா கடிதம்லாம் ஒரிஜினலா, ஃபோர்ஜரியாங்குறதப் பத்தி நமக்கு கவலயில்ல. நம்மளோட ஒரே தக்லீதுக்கு தகுதியான தலைவன் பிஜே எந்த சந்தர்ப்பத்துலயும் மாட்டிக்கக் கூடாது. அதுக்காக யார வேணும்லாம் காட்டிக் குடுக்கலாம். அதுனால தான் ஷரீஅத் தீர்ப்பாயம்கிற பேர்ல அண்ணன் குடுத்த அவதூறுக்கான அங்கீகாரத்த ஃபோர்ஜரின்னு காட்ட தீவிரமா முயற்சி பண்றோம்.

அதுதான் பாத்தேன். முகவைத்தமிழன் வெளியிட்ட ரியாத் ததஜ லெட்டர்ல TEL ன்னு போட்டு +91 ன்னு தொடங்கியிருந்துச்சே, இத அவனுக ஃபோர்ஜரின்னு சுட்டிக்காட்டியும் நாம அதப்பத்தி மூச்சு விடலயே. அதுனால தான் எனக்கு சந்தேகமாக இருந்துச்சு. இப்போ புரிஞ்சுடுச்சு. அண்ணன் தானே சொல்றாருன்னுட்டு நாமளே எதாச்சும் ஃபோர்ஜரி செஞ்சு போட்டுட்டோம்னா நாளக்கி ரியாத் மீரான கைவிட்டா மாதிரி நம்மளயும் கை விட்டுருவீங்க போல.

அப்புடியலாம் ஆகாது அஹமது. கலப்படாம எனக்கு கொஞ்சமாச்சும் சப்போர்ட்ட பண்ணுங்க. நீங்களும் ஒடிட்டா நான் யார்ட்ட போயி பொலம்ப முடியும்.

சரி சரி .. .. நான் போன வாரம் ஒரு விஷயத்த விசாரிக்கச் சொன்னேனே விசாரிச்சிங்களா.

ம்.. .. .. அட்ரஸ் சமாச்சாரம் தானே. விசாரிச்சுட்டேன். அதாவது சுனாமி நிதிய ததஜ பொதுக்கணக்குல வசூலிச்சதுனால, தமுமுக காரன் அதயே புடிச்சிக்கிட்டு கொடஞ்சுகிட்டு இருக்கான். உண்மையிலேயே அவஞ் சொல்றா மாதிரி சுனாமி எது பினாமி எதுன்னு புரியாம ஒரு குத்து மதிப்பா அதே நேரம் நமக்கு தான் ஆதரவு அதிகம்னு காட்றதுக்கா பிலட்அப்பு, கள்ள கணக்குன்னு எழுதி அப்புடியும் உதச்சதுனால உணர்வுக்கு, யூனிஃபார்ம்முக்கு அதுக்கு இதுக்குன்னு எளுதி, வேற யாரும் பாத்தா வெவகாரமா போயிடும்னு நம்ம ஆளுங்கள மட்டும் கூப்பிட்டு கைய, கால, புடிச்சு ஒரு வழியா கணக்கு காட்னோம்ல.

ஸ்டாப். ஸ்டாப். உமர் பாய். சுனாமி கணக்குக்கும், அட்ரஸ் மாறுனதுக்கும் என்னங்க சம்பந்தம். ஏம் போட்டு கொளப்புறீங்க.

அவசரப்படாம அமைதியா கேளுங்க அஹமது. சுனாமி கணக்கு பத்தி கேள்வி வந்த மாதிரி குர்பானி கணக்குலயும் வந்துடக் கூடாதில்லையா. அதுனால கூட்டு குர்பானிக்கு பணம் அனுப்புறவங்க உணர்வு வங்கி கணக்குக்கு அனுப்பனும்னு சொல்லி வெளியிட்ட நோட்டீஸ்ல, வங்கி கணக்கு நம்பர்லாம் போடாம வெறுமனே உணர்வு அரண்மனைக்காரன் தெருன்னு போட்டுட்டாங்க. அதுனால தான் ஒங்கள மாதிரி பல பேரு கொளம்பிப் போயி கேள்வி மேல கேள்வி கேக்கவும் சுதாரிச்சுக்கிட்டு இப்போ சரியாப்போட்டு விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்காங்க.

அதுசரி. நம்மாளுகளுக்கு சீசனுக்கு ஒரு வியாபாரம் கெடச்சுருது. ஆமா இப்ப மட்டும் யாரும் கேள்வி கேக்க மாட்டாங்கன்னு எப்புடி நம்புறீங்க. இப்பவும் குர்பானி வகைக்குனு வெளிநாட்ல இருந்து அனுப்புறவங்க, குர்பானி கறிய யாருக்காச்சும் குடுத்துக்கட்டும்னு ஆள் அனுப்பி செக் பண்ணாம இருந்தா இப்பவும் உணர்வு கணக்குக்கு வர்ற தொகைல சந்தா எவ்வளவு, நன்கொடை எவ்வளவு, குர்பானிக்கு எவ்வளவுன்னு எப்புடிங்க தெரியும்.

வரவர நீங்க ரொம்ப கேள்வி கேக்க ஆரம்புச்சிட்டீங்க. முடிஞ்சா இத விசாரிச்சு அடுத்த வாரம் சொல்றேன். இல்லாட்டி சுனாமி தலையெழுத்து தான் குர்பானிக்கும்னு போக வேண்டியது தான். சரி நேரமாச்சு நான் வர்றேன்.

வஸ்ஸலாம் – முல்லா (21.11.2006)

நவம்பர் 20, 2006

புதிய ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:20 முப
ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் முதல்வர் உத்தரவு
முதல்வர் டாக்டர்.கலைஞர்

சென்னை:தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டிக்கு உறுப்பினர்களை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு:

 • ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி
 • ஜே.எம்.ஆரூண் எம்.பி.
 • முகவை ஹாசன் அலி எம்.எல்.ஏ.
 • கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர் அகமது,
 • பழநி நகராட்சி துணைத் தலைவர் ஹக்கீம்,
 • அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுலைமான் பாட்ஷா
 • தலைமை காஜி (ஜியா) குலாம் முகமது மேடி கான்,
 • சாமியத் இ அன்வருல் உலுõமைச் சேர்ந்த முகமது ரகூல் ஹக்,
 • வேலூர் அராபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா மவ்லவி முகமது இலியாஸ்,
 • தமிழ்நாடு ஹஜ் சேவை சங்கத்தின் முகமது காசிம்,
 • பர்வீன் டிராவல்ஸ் அப்சல் சாகிப்,
 • பிரசிடன்ட் ஓட்டல் அபுபக்கர்,
 • டாக்டர் அன்வருல்லா ஆகியோர்
 • உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
 • ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன் அரசு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தமிழக அரசு இணையம்

நவம்பர் 19, 2006

முஃப்தி உமர் ஷெரீஃப் காசிமி (VIDEO)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:25 முப
முஃப்தி உமர் ஷெரீஃப் காசிமி அவர்களின் ஆவேச உரை!!

முஃப்தி உமர் ஷெரீஃப் காசிமி

கோவையில் சிறுபான்மை உதவி அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் “தாருல் ஹீதா பதிப்பகம்” நிறுவனர் முஃப்தி உமர் ஷெரீஃப் காசிமி அவர்கள் மக்கள் கண்ணீர் வடிக்கும் வகையில் ஆவேசமாகவும் உருக்கமாகவும் உரையாற்றினார்கள்.

அவரின் இந்த உரையை காண இங்கு சொடுக்கவும்.

PLEASE CLICK HERE TO PLAY THE VIDEO

நவம்பர் 18, 2006

முஸ்லிம் மாணவியிடம் சில்மிஷம்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:02 பிப
முஸ்லிம் மாணவிக்கு செக்ஸ் தொல்லை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
புகார் கூறும் மாணவ மாணவிகள்

சென்னை, நவ. 18-

சென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகள் சலீமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அங்குள்ள தியாகராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு இன்று பகலில் 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கையில் பேப்பருடன் நுழைந்தனர். பள்ளி மாணவர்கள் போலீஸ் நிலையத்திற்கு திடீரென நுழைந்ததால் ஆச்சரியமும், குழப்பமும் போலீசாருக்கு ஏற்பட்டது.

மாணவி சலிமா தனக்கும் சக மாணவிகளுக்கும் நேர்ந்த செக்ஸ் கொடுமைகள் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நான் 8-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்களுக்கு கணக்கு சொல்லித்தரும் ஆசிரியர் குப்புராஜ் (வயது 45). இவர் தினமும் எங்களிடம் தவறான முறையில் நடக்கிறார். வகுப்பு முடிந்தவுடன் மாணவர்களை வீட்டுக்கு போக சொல்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்க சொல்வார்.

அப்போது மாணவிகளிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார். அவரிடம் நெருங்கி நிற்க சொல்லி வற்புறுத்துவார். கன்னத்தை பிடித்து கிள்ளுவார். கையை பிடித்து இழுப்பார்.

பள்ளிச்சீருடை அழுக்காக இருக்கிறதே எனச்சொல்லி சுடிதாரை பிடித்து இழுத்து வயிற்றில் தடவுவார். இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசி தொந்தரவு செய்தார்.

நோட்டில் கையெழுத்து வாங்க செல்லும் போது மிகவும் கிழே குனிந்து நிற்கும்படி கூறுவார். அவரது செக்ஸ் பார்வைக்கு நாங்கள் தப்ப முடியாமல் தவித்தோம்.

வெளியில் அறைஎடுத்து இருப்பதாகவும் அங்கு வந்தால் உங்களுக்கு சுடிதார் அன்பளிப்பாக தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி எங்களை அழைத்தார். நாங்கள் செல்ல மறுத்ததால் திட்டினார். மேலும் பாடத்தில் `பெயில்’ செய்துவிடுவதாக மிரட்டினார்.

திடீரென அவருக்கு வீராப்பு வந்து வீட்டால் சாக்பீசை எடுத்து மாணவிகள் மார்பகம் மீது தூக்கி வீசுவார். இதையெல்லாம் வெளியே சொன்னால் உங்களை பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டி எங்களை பயமுறுத்தினார்.

ஆசிரியர் சுப்புராஜீன் செக்ஸ் தொந்தரவுக்கு ஆசிரியை விஜயா உடந்தையாக இருந்து வந்தார். அவர் எங்களிடம் கணக்கு ஆசிரியைரை பற்றி அவர் நல்லவர், வல்லவர் எனச்சொல்லி அவரது புகழை தினமும் எங்களிடம் எடுத்து கூறுவார்.

ஆசிரியர் செய்யும் செக்ஸ் குறும்புகளை பற்றி வெளியே சொன்னால் உங்களை தொலைத்து கட்டி விடுவேன் என ஆசிரியை விஜயாவும் மிரட்டினார். இதனால் நாங்கள் வெளியே சொல்லாமல் வேதனைகளை அனுபவித்து வந்தோம் எங்களது பெற்றோரிடம் மட்டும் நடந்ததை கூறினோம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தோம். அவர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. “கல்வி கற்று தரக்கூடிய ஆசானே இவ்வாறு நடந்தால் நாங்கள் யாரிடம் முறையீடு செய்வது”

அரசு பள்ளியில் படிக்கும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் சுப்புராஜ், ஆசிரியை விஜயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளனர்.

இதையடுத்து கொருக்குப்பேட்டை போலீசார் ஆசிரியர் குப்புராஜ், விஜயா மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர். குப்புராஜ் தலைமறைவாகி விட்டார். அவர் மருத்துவ விடுப்பு போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாணவிகளை செக்ஸ் தொந்தரவு செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : மாலை மலர்

நவம்பர் 15, 2006

இறைவனால் கேவலப்படுத்தப்பட்டவர்கள்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:25 பிப
இறைவனால் கேவலப்படுத்தப்பட்டவர்கள்
போதையில் எழுதும் ததஜவினர்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு,

நாம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்னும் தரங்கெட்ட கூட்டத்தாரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ததஜ வின் சவுதி மன்டல நிர்வாகிகள் மக்கா நகரில் கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் தங்கள் எதிர் அமைப்பினரை (தமுமுக, ஜாக், விடியல் இன்னும்..) பற்றி தரக்குறைவான் உண்மைக்கு புறம்பான செய்திகளை அவதூராக பரப்புவதற்கு கள்ள மின்னஞ்சல் நடத்துவதற்கும் போட்ட தீர்மானத்தின் நகலையும் மற்றும் அந்த தீர்மானத்தை அங்கீகரித்து கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் அவதூறு பரப்புவதற்கும், கள்ள மின்னஞ்சல் அனுப்புவதற்கும் மற்றும் போலி பெயர்களில் பிட் நோட்டிஸ் போடுவதற்கும் தனது எதிரிகள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் மீது பொய்களை இட்டுக்கட்டி அவதூறு பரப்புவதற்கும் அனுமதி அளித்து ஷரீஅத் தீர்ப்பாய லெட்டர் ஹெட்டில் ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே என்ற பி.ஜெயினுல்லாபுதீன் கையெழுத்திட்டு அளித்த ரகசியமான கடிதத்தின் நகல் ததஜ வின் முன்னால் நிர்வாகிகள் சிலரால் நமக்கு கிடைக்கப்பெற்றது அவற்றை நாம் நமது வலைப்பதிவில் வெளியிட்டு இந்த தரங்கெட்ட ஜமாத்தின் உண்மை முகத்தினை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினோம்.

மக்கள் மன்றத்தில் இவர்களின் போலித்தனமும் இதுநாள் வரை தமிழகத்திலும், வலைகுடா நாடுகளிலும் போலி பெயர்களில் அவதூறுகள் தாங்கிய நோட்டிஸ்கள் வெளியிட்டதும் சமயங்களில் தங்களையே தாக்கி தமுமுக பெயரிலும் ஜாக் விடியல் போன்றோர் பெயரிலும் நோட்டிஸ் போட்டதும் தமுமுக, ஜாக், விடியல் போன்ற இயக்கங்களின் தலைவர்களை விபச்சாரம் செய்தவர்கள் திருடியவர்கள் என்றும் முஸ்லிம் பெண்களை பள்ளப் பயலுடன் ஓடிப்போனவள் என்று கண்ணியக்குறைவாக் அவதூறுகளை பல பெயர்களில் உதாரனம் ஜாக்கின் கோவை மாவட்ட நிர்வாகிகயை தாக்கி கோவை முஸ்லிம் பெண்கள் என்ற பெயரிலும் இன்னும் பல பெயர்களிலும் இணையத்திலும் மின்னஞ்சல்கள் மூலமாகவும் மக்கள் கூடும் இடங்களில் கள்ளத்தனமாக தூவப்படும் பிட் நோட்டிஸ்க்ள மூலமாகவும் செய்து வந்நத ததஜ வின் திருட்டுத்தனமும் தகிடுதத்தங்களும் அம்பலமாக்கப்பட்டு இவர்கள் அம்மனமாக்கப்பட்டதால் ததஜ வின் சொந்த தொண்டர்களின் கேள்விகளுக்கே பதில் அளிக்க இயலாத தர்ம சங்கடமான சூல்நிலைக்கு ததஜ வின் தலைவர்கள் வலைகுடா நாடுகளிலும் தமிழகத்திலும் தள்ளப்பட்டுள்ளனர்.

ரகசியங்கள் அம்பலமாக்கப்பட்டு, முகத்திரை கிழிக்கப்பட்டு, கள்ள வெப்சைட் நடத்துவதும் அவதூறு பரப்புவதும் தவ்ஹித் என்று கூறி விபச்சாரம் செய்வதும் முஸ்லிம் பெண்களை கண்ணியக்குறைவாக் திட்டி சிடி போடுவதும் தங்களுக்கு பிடிக்ககாதவர்களை விபச்சாரம் செய்தான் என்று போலி பெயர்களில் நோட்டிஸ் போடுவதும், தவ்ஹித் பெயரில் இதுவரை தவ்ஹித் எதுவும் செய்யாது தக்லீத் மட்டுமே செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை தன்னுள் வைத்துக்கொண்டு உலகில் உள்ள எல்லா வகையான பிராடு பித்தளாட்டங்களில் ஈடுபட்டு காசு சம்பாதிப்பதும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பி.ஜே மற்றும் அதன் நிர்வாகிகள் தான் என்ற ரகசியம் வெளிப்பட்டு போனதால் மக்ள் மன்றத்தில் நிர்வானமாக விடப்பட்ட ததஜ வினர் ஏதாவது செய்து தங்களை நியாயப்படுத்திக் கொள்ள செய்து வரும் பகீரத முயற்சிகைள மக்கள் அறிவீர்கள்.

அந்த வகையில் எப்படியாவது நாம் வெளியிட்ட ஆதாரங்களை பொய்யாக்கி விட வேண்டும் என்று சென்ற முறை ததஜ வின் தம்மாம் நிர்வாகிகளில் ஒருவர் தங்கள் தலைவன் சொல்லிக் கொடுத்தபடி “நபித்தறசன்” என்ற போலி பெயரில் (இவரின் உண்மை பெயர் விரைவில் வெளியிடப்படும்) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் என்றுமே எங்கள் தலைமை தமிழில் தான் எழுதும் ஆகவே முகவைத்தமிழன் வெளியிட்ட கடிதம் பொய் என்று கூறி மக்களை ஏமாற்ற எத்தனித்தனர் நாம் அப்போதே இறைவனின் மாபெரும் உதவியுடன் ததஜ வின் மக்களை முட்டாளாக்கும் அந்த முயற்சியை பொய்யென்று தகுந்த ஆதாரங்களுடன் ததஜ வின் தலைமை அரபியிலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் எழுதியுள்ளது என்று நிறுபித்து முறியடித்தோம்.

அதனால் மக்கள் மன்றத்தில் செருப்படி பட்ட இந்த கூட்டம் அரபுச்சல்லி பொருக்கும் வலைகுடா நாடுகளின் வீதிகளில் தங்களின் ரகசியம் அம்பலமாக்கப்பட்டு நிர்வானமாக ஓடவிடப்பட்டு மீண்டும் மீண்டும் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பி.ஜேயின் இந்த பித்தளாட்டங்களை பற்றியும் கள்ள வெப்சைட் நடத்த தான் அனுமதி வழங்கி விட்டு தமுமுக காரனுகளை கள்ள வெப்சைட் நடத்துவதாக உணர்விலும் ஏகத்துவத்திலும் எழுதிய பி.ஜேயின் திருட்டுத்தனத்தை பற்றியும் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பதால் மன உளைச்சலுக்கு உள்ளான ததஜ வின் இந்த கள்ள வெப்சைட் கும்பல் (ரியாத்தில் முத்துப்பேடடை பரக்கத், ஆடுதுறை ஃபைசல் தலைமையில் செய்ல்படும்) மீண்டும் ஒருமுறை முகவைத்தமிழன் பொய்யன் போர்ஜரி அவன் வெளியிடும் அத்தனையும் பொய் என்று கூறி செருப்படி பட்டுள்ளார்கள்.

நேற்று ரியாத்தில் முத்துப்பேடடை பரக்கத், ஆடுதுறை ஃபைசல் தலைமையில் செயல்படும் ததஜவின் கள்ள வெப்சைட் கும்பலின் கள்ள கதாபாத்திரமான போதையின் கிறக்கத்தில் கிறுக்குத் தனமாக எழுதி மாட்டிய ததஜ வின் உளறுவாய் உமர் (நன்றி முத்துப்பேட்டை) ஒரிஜினல் எது ? ஃபோர்ஜரி எது ? என்று அறிவுப் பூர்வமாக சிந்தித்துக் கொள்வதற்கு சில விளக்கங்களை உங்கள் முன் வைக்கிறோம் என்று கூறி ஒரு கள்ள மின்னஞ்சலை மக்கள் மன்றத்திலும் தங்களது கள்ள வெப்சைட்டுகளிலும் உலவ விட்டார்கள் அவற்றில் சில சாராம்சங்களை அப்படியே இங்கு தருகின்றோம் :

ததஜ விஞ்ஞானிகளின் அறிய கண்டுபிடிப்பை விளக்கும் கள்ள மின்னஞ்சல் டவுன் லோட செய்வதற்கு இங்கு சொடுக்கவும்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தால் நாம் வெளியிட்ட ஆதாரங்கள் பொய் என்று மறுத்து தனது கள்ளக் குழந்தைகள் மூலம் பரப்ப பட்ட மின்னஞ்சலின் சாரம் :

************************************************************

தலைமையிலிருந்து ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் பேடிலிருந்து ரெஃபரன்ஸ் நம்பர் 333/200 என்ற எண்ணிட்ட கடிதம் 15-12-2005 தேதியன்று தம்மாம் நிர்வாகத்திற்கு நிர்வாகிகளுடைய மறு சீரமைப்பை அங்கீகாரம் செய்து அனுப்பி இருந்தார்கள் அதன் இறுதியில் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகளை தவிர வேறெவரும் வசூல் செய்யக் கூடாது என்கின்ற செய்தியும் கூடவே எழுதி இருந்தார்கள்.

அதே தேதியிட்ட, அதே ரெஃபரன்ஸ் நம்பருடன் அதே ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் ஹெட்டிலிருந்து ரியாத் நிர்வாகிகள் வெப்சைட் நடத்துவதில் அனுபவமிக்கவர்களாக இருப்பதால் அவர்களுடன் இணைந்து எதிர் அமைப்பினரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுங்கள் எதிர் அமைப்புகiளைப் பற்றி எழுதும் போது தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அதன் இறுதியில் சவுதி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் மௌலவி அவர்கள் தலைமைiயில் தம்மாம் நிர்வாக சீரமைப்பு செய்த நிர்வாகிகளை தலைமை அங்கீகரிப்பதாகவும், தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறெவரும் வசூலிகக் கூடாது என்றும் குறிப்பிடப் பட்டு;ள்ளது.

நாடு தழுவிய ஒரு மாபெரும் மக்கள் பேரியக்கம் தனது கிளை நிர்வாகத்திற்கு எழுதும் கடிதத்தில் ஒரே ரெஃபரன்ஸ் நம்பரில் இரு கடிதங்களை எழுத மாட்டார்கள் இதை ஒரு ஜனநாயக அமைப்பு செய்யாது, தீவிரவாத அமைப்பு அதன் தலைமறைவு பேர்வழிகள் செய்வார்கள். காரணம் முகவரியற்றவர்களுக்கு அவர்களது வரம்பு மீறிய செயல்பாடுகளில் இதையும் பத்தோடு பதினொன்றாக ஆக்கிக் கொள்வார்கள் .ஆக முட்டாளுடைய கைவசம் இருந்தது ததஜவின் டிசம்பர் மாதத்து தம்மாம் புதிய நிர்வாகிகளுடைய அங்கீகாரம் செ;யயப்பட்ட தலைமையின் கடிதம் மட்டுமே என்பதால் அதில் மக்காவின் சவுதி கூட்டமைப்பு நடந்த தேதியை மாற்றியும், தம்மாம் நிர்வாகிகள் பெயர் இருந்த இடத்தில் கள்ளவெப்சைட் கதையையும் தினித்து தனது கைவித்தைகளை காட்டியுள்ளார். ( இதை அல்லாஹ் எங்களுக்கு காட்டிக் கொடுத்தான் அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும் )

பொது மக்களே !

இதுப் போன்ற ஒரு மோசடிப் பித்தலாட்டப் பேர்வழி தான் எங்கள் தலைமையை தரங்கெட்ட ஜமாத் என்று எழுதி வந்தார் இந்த ஃபோர்ஜரி மோசடி கண்டு பிடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் நிரூபணமாக்கப்பட்டு விட்டதால் யார் தரங்கெட்டவர்கள் ? யார் தரங்கெட்ட ஜமாத்தினர் ? இவரை மெஸ்மரிஸம் செய்த கூட்டத்தார்கள் தரங்கெட்ட ஜமாத்தினர்களா ? இல்லையா ? என்பதை சிந்தித்துக் கொள்வதுடன் ஃபிர்தவ்ஸி அவர்களைப் பற்றியும், ஜஃபர் அவர்களைப் பற்றி எழுதும் போது எனக்கு போனுக்கு மேல் போன் வந்து கொண்டே இருக்கிறது பாதிக்கப் பட்டவர்களுடைய ஆடியோ, வீடியோ என்றெல்லாம் புருடா விட்டது அவ்வளவும் ஃபோர்ஜரி தான

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

************************************************************
ததஜ வின் தலைவர் பி.ஜே எதையாவது கூறிவிட்டு அந்த ஹதீசில் உள்ளது இந்த வசனத்தில் உள்ளது என்று ஏதாவது நம்பரை கூறிவிடுவார் யார் சென்று குர்ஆனையும் ஹதீசையும் புரட்டி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஆனால் அதையும் கூட மார்க்க அறிஞர் முஜிபுர் ரஹ்மான் உமறி அவர்கள் ஆதாரப்பூர்வமாக பிரித்து மேய்ந்துள்ளார்கள் அதன் மூலம் மக்கள் மன்றத்தில் பி.ஜே யின் வாய்க்கு வந்தபடி அடித்துவிடும் போலித்தனம் நிறுபிக்கப்பட்டது. அதே முறையை பின்பற்றி ததஜ வின் தக்லீத் கூட்டமும் நம் மக்கள் எங்கே சென்று பார்க்க போகின்றார்கள் என்ற மிதப்பில் ரெஃபரன்ஸ் நம்பர் என்று கூறி ததஜ வின் ரெஜிஸ்ட்ரேசன் (பதிவு எண்) நம்பரை 333/200 என்று எழுதி இரன்டு கடிதத்திலும் இது ஒன்றாக இருபபதால் முகவைத்தமிழன் வெளியிட்டது போர்ஜரி என்று தங்கள் சொந்த தொண்டர்களையும் மக்களையும் முட்டாளாக்க முயன்றுள்ளார்கள்.


நம்மாள் வெளியிடப் பட்ட ததஜ வின் கடிதத்தின் முகப்பு

மேலே உள்ள கடிதத்தில் மிகத் தெளிவாக REG. NO: 333/2003 என்று குறிப்பிடப்பட்டுள்ளது இது படிக்காத பாமரனுக்கு கூட புறியும் இயக்கத்தின் ரெஜிஸ்ட்ரேசன் (பதிவு எண்) நம்பர் என்று இதை ரெஃபரன்ஸ் நம்பர் என்று கூறி இந்த ஆதாரப்படி முகவைத்தமிழன் கூறிய அப்துர் ரஹ்மான் பிர்தெளசி மேடடரில் இருந்து கோவை ஜாபர் மேட்டர் உள்பட அனைத்தும் பொய் போர்ஜரி என்று தங்களை நம்பும் ததஜ வின் தொண்டர்களையும் தங்களிடம் கேள்வி கேட்கும் மக்களையும் நம்ப வைக்கு முற்ப்பட்டுள்ளார்கள். இப்போது மக்களுக்கு புறிந்திருக்கும் யார் பொய்ர்கள் என்று? ஏன் இவர்கள் இத்தனை தூரம் சிறமப்பட்டு பல பொய்களையும் அவதூறுகளையும் எம்மீது கூறி எம்மை போர்ஜரி என்றும் பொய்யன் என்றும் நிறுபிக்க முனைகின்றார்கள் என்று.

சரிந்து வரும் தங்கள் இயக்கத்தின் செல்வாக்கை தடுத்து நிறுத்த இயலாததாலும், ததஜ வில் இருந்த அதன் பித்தளாட்டங்கள் தெறிய வந்ததால் கழட்டிக் கொண்டு ஓடும் சிந்திக்க தெறிந்த சகோதரர்களை தடுத்து நிறுத்த முடியாததாலும் இருக்க கூடிய மூலை கழுவி விடப்பட்டு தக்லீதில் முங்கி சமயங்களில் அருள் வந்து சாமியாடும் (பி.ஜே சாமி) மிச்சம் மீதியுள்ள தங்கள் கூட்டத்தை காத்துக் கொள்ளவும் தங்களை தாங்களே மனதளவில் திருப்தி படுத்திக் கொள்ளவும் தான் மீண்டும் இந்த பித்தளாட்ட முயற்சி ஆனால் அந்த அல்லாஹ் அவர்களுக்கு இதிலும் தோல்வியை கொடுத்து பொய்யர்களாக்கி அவமானப்பட வைத்துள்ளான் அந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

Registration No. என்பது எல்ல இயக்கங்களுக்கும் உள்ள பதிவு என்னாகும் இது எல்ல இயக்கங்களும் தங்கள் லெட்டர் பேடில் பரின்ட் செய்து வைத்திருப்பார்கள் அதை ரெஃபரன்ஸ் நம்பர் என்று கூறி ஏமாற்ற முயன்றுள்ளது என்றால் இந்த ததஜ வின் திருட்டுக் கும்பல் எவ்வளவு பெரிய பித்தளாட்டக் காரர்கள் என்று தெறிந்து கொள்ளுங்கள். இதெல்லாம் இவர்களின் தலைவன் பி.ஜே யின் வழிகாட்டுதலின் படி நடப்பது. ஒன்று ததஜ வின் இந்த கள்ள வெப்சைட் கும்பல்Registration நம்பருக்கும் Referenec நம்பருக்கும் வித்தியாசம் தெறியாத முட்டாள்களாக இருக்க வேண்டும் இல்லை தோல்வி தந்த விரக்தியிலும், தக்லீத் வெறியிலும், மேட்டர் எதுவும் கிடைக்காததால் குவாட்டரோ அல்லது ரியாத் பத்தாஹ் வீதிகளில் கிடைக்கும் பட்டையையோ அடித்து விட்டு முகவைத்தமிழனை அவதூறு கூறி பொய்யனாக்குவது எப்படி என்று சிந்தித்ததால் கிறக்கத்தில் Reg.No. என்ற எழுத்து Ref. No. என்று தெறிந்திருக்கலாம் அதைவைத்து முகவைத்தமிழனை பிறித்து மேய்வதாக நினைத்து தங்களையே பின்னி பெடல் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.


நமது சமுததாயம் இனியும் உரங்காமல் இவர்களின் தகிடு தத்தங்களை அவ்வப்போது கேட்டு இவர்களை செருப்பால் அடித்து அவமானப்படுத்த வேண்டும. ஒவ்வெலாரு முறை பித்தளாட்டம் செய்யும் போதும் பொய்யையும் அவதுர்றுகளையும் எழுதும்போதும் இந்த ததஜ வின் கூட்டம் திருக் குர்ஆன் வசனங்களை தங்கள் இஷ்ட்டத்திற்கு வலைத்து பயன் படுத்தும் இந்த போக்க நடுநிலையாளர்களும் மார்க்க அறிஞர்களும் கடுமையாக கண்டிக்க முன்வர வேண்டும். எல்லாம் வல்ல மகத்தான அந்த இறைவனால் முகத்தில் அறையப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுள்ள ததஜ வினரே இது உங்களுக்கு அந்த ஏகன் வழங்கும் எச்சரிக்கை இன்னும் நீங்கள் உங்கள் பொய்களையும் பித்தளாட்டங்களையும் அல்லாஹ்வின் வேத வசனங்களை வலைத்து அதை உங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தலாம் என்று நினைத்தீர்களானால் அல்லாஹ் உங்களை இன்னும் அவமானப்படுத்துவான் மக்கள் மத்தியில் இன்னும் மகா கேவலத்திற்குள்ளாக்கப்படுவீர்கள்.

இன்னும் நாம் ததஜ வினரை சவாலுக்கு அழைக்கின்றோம் நாம் வெளியிட்ட அந்த சவுதி கூட்டமைப்பின் மக்கா தீர்மானமும் அதை அங்கீகரித்து கள்ள வெப்சைட், போலி நோட்டிஸ் போட சொன்ன பி.ஜே யின் கடிதமும் பொய்யென்று சரியான ஆதாரங்களுடன் உங்களால் நிறுபிக்க முடியுமா?


உங்கள் தலைவன் பி.ஜே மீது நீங்கள் கொண்டுள்ள தக்லீத் என்னும் இந்த வெறியிலிருந்து உங்களை விடுவித்து அல்லாஹ்விடம் பாவ மண்ணிப்பு தேடியவர்களாக தூய இஸ்லாத்தின் பால் வாருங்கள். உங்கள் தலைவன் பி.ஜே யால் செய்யப் பட்ட மூலைச்சலவையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். சிந்திக்க கூடிய திறன் படைத்து ததஜ வினரே இப்போதாவது புறிந்து கொள்ளுங்கள் நீங்க்ள பரிசுத்தமானது என்றும் நம்பும் உங்கள் இயக்கத்தின் இலட்சனத்தை. அனைத்து நிகழ்வுகளையும் கவணித்து கொண்டிருக்கும் எனது அருமை சமுதாயமே விழித்தக் கொள்! இந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் பி.ஜே என்ற கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீனின் தவ்ஹித் என்ற பெயரில் செய்யும் தகிடு தத்தங்களையும் பித்தளாட்டங்களையும் திருட்டுத்தனங்களையும் தெறிந்து கொள் நாளைய நமது தலைமுறை தக்லீதின்றி முஸ்லிம்களாக தவ்ஹித் வாதிகளாக வளர வேண்டும்.

நன்றி

முகவைத்தமிழன்

ஜீபைலில் மாபெரும் பட்டிமன்றம்!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:10 பிப
ஜீபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் நடத்தும்
ஜீபைல் மாநகரில் தித்திக்கும் தேன் தமிழில்…
மாபெரும் பட்டி மன்றம்!

தமிழ் பேசுமு் இனிய இதயங்களுக்காக, ஜீபைல் அறக்கட்டளை நிலைய வெளிநாட்டவர் பிரிவு வழங்கும், மாபெரும் பட்டி மன்றம் இம்முறை முதல் தடவையாக சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதை தமிழ் நண்பர்களுக்கு அறிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

திகதி : 17-11-2006
நாள் : வெளிளிக்கிழமை
நேரம் : மாலை 03 மணிக்கு
இடம் : கேம்ப் -02-வளாகம்

குறிப்பு :

 • கேம்புகளுக்கான போக்குவரத்து வசதிகள்
 • கலந்து கொள்ளும் அனைவருக்குமு் பரிசில்கள்
 • நிகழ்ச்சி நடுவில் சிற்றுன்டி வைபவம்
 • நிகழ்ச்சி முடிவில் இரவுணவு பகிர்வு
 • நுலைவுகள், நிகழச்சிகள் அனைத்தும் முற்றிலும் இலவசம், போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இவ்வினிய மாலைப்பொழுதினை இனிதே கழித்து இனிமை பெற்றிட இனிய தமிழ் இதயங்களை அன்போடு அழைக்கின்றோம்

தொடர்புகளுக்கு : 03 3625500 Est. 1015, 1026, 1029 கைபேசி : 0556816371, 0502561645, 0568500214

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.