தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 18, 2006

முஸ்லிம் மாணவியிடம் சில்மிஷம்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:02 பிப
முஸ்லிம் மாணவிக்கு செக்ஸ் தொல்லை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
புகார் கூறும் மாணவ மாணவிகள்

சென்னை, நவ. 18-

சென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகள் சலீமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அங்குள்ள தியாகராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு இன்று பகலில் 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கையில் பேப்பருடன் நுழைந்தனர். பள்ளி மாணவர்கள் போலீஸ் நிலையத்திற்கு திடீரென நுழைந்ததால் ஆச்சரியமும், குழப்பமும் போலீசாருக்கு ஏற்பட்டது.

மாணவி சலிமா தனக்கும் சக மாணவிகளுக்கும் நேர்ந்த செக்ஸ் கொடுமைகள் குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நான் 8-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்களுக்கு கணக்கு சொல்லித்தரும் ஆசிரியர் குப்புராஜ் (வயது 45). இவர் தினமும் எங்களிடம் தவறான முறையில் நடக்கிறார். வகுப்பு முடிந்தவுடன் மாணவர்களை வீட்டுக்கு போக சொல்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்க சொல்வார்.

அப்போது மாணவிகளிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார். அவரிடம் நெருங்கி நிற்க சொல்லி வற்புறுத்துவார். கன்னத்தை பிடித்து கிள்ளுவார். கையை பிடித்து இழுப்பார்.

பள்ளிச்சீருடை அழுக்காக இருக்கிறதே எனச்சொல்லி சுடிதாரை பிடித்து இழுத்து வயிற்றில் தடவுவார். இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசி தொந்தரவு செய்தார்.

நோட்டில் கையெழுத்து வாங்க செல்லும் போது மிகவும் கிழே குனிந்து நிற்கும்படி கூறுவார். அவரது செக்ஸ் பார்வைக்கு நாங்கள் தப்ப முடியாமல் தவித்தோம்.

வெளியில் அறைஎடுத்து இருப்பதாகவும் அங்கு வந்தால் உங்களுக்கு சுடிதார் அன்பளிப்பாக தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி எங்களை அழைத்தார். நாங்கள் செல்ல மறுத்ததால் திட்டினார். மேலும் பாடத்தில் `பெயில்’ செய்துவிடுவதாக மிரட்டினார்.

திடீரென அவருக்கு வீராப்பு வந்து வீட்டால் சாக்பீசை எடுத்து மாணவிகள் மார்பகம் மீது தூக்கி வீசுவார். இதையெல்லாம் வெளியே சொன்னால் உங்களை பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டி எங்களை பயமுறுத்தினார்.

ஆசிரியர் சுப்புராஜீன் செக்ஸ் தொந்தரவுக்கு ஆசிரியை விஜயா உடந்தையாக இருந்து வந்தார். அவர் எங்களிடம் கணக்கு ஆசிரியைரை பற்றி அவர் நல்லவர், வல்லவர் எனச்சொல்லி அவரது புகழை தினமும் எங்களிடம் எடுத்து கூறுவார்.

ஆசிரியர் செய்யும் செக்ஸ் குறும்புகளை பற்றி வெளியே சொன்னால் உங்களை தொலைத்து கட்டி விடுவேன் என ஆசிரியை விஜயாவும் மிரட்டினார். இதனால் நாங்கள் வெளியே சொல்லாமல் வேதனைகளை அனுபவித்து வந்தோம் எங்களது பெற்றோரிடம் மட்டும் நடந்ததை கூறினோம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தோம். அவர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. “கல்வி கற்று தரக்கூடிய ஆசானே இவ்வாறு நடந்தால் நாங்கள் யாரிடம் முறையீடு செய்வது”

அரசு பள்ளியில் படிக்கும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் சுப்புராஜ், ஆசிரியை விஜயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளனர்.

இதையடுத்து கொருக்குப்பேட்டை போலீசார் ஆசிரியர் குப்புராஜ், விஜயா மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர். குப்புராஜ் தலைமறைவாகி விட்டார். அவர் மருத்துவ விடுப்பு போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாணவிகளை செக்ஸ் தொந்தரவு செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : மாலை மலர்
Advertisements

1 பின்னூட்டம் »

 1. 03. கணக்கு வாத்தியார் மீது கொடுத்த புகார் பொய்யானது மாணவியின் தாயார் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல்

  சென்னை:கணித ஆசிரியர் மீது தனது மகள் கொடுத்த புகார் பொய்யானது என்று அவரது தாயார், முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உண்மை நிலையை விசாரிக்குமாறு போலீசாருக்கு முதன்மை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.வடசென்னையில் தியாகராயா கல்லுõரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எட்டாவது படிக்கும் மாணவி, கணித ஆசிரியர் சுப்புராஜ்க்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார். தன் மீது சாக்பீஸ் துண்டு எறிவதாகவும், தனியாக அழைத்து பரிசுப் பொருட்கள் தருவதாகவும் ஆசிரியர் சுப்புராஜ்க்கு எதிராக அந்த மாணவி புகார் கூறினார். இதையடுத்து ஆசிரியர் சுப்புராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் சுப்புராஜ் மனு தாக்கல் செய்தார்.

  இந்த மனு நிலுவையில் இருக்கும் போதே பள்ளி மாணவியின் தாயார் ரமீஜா என்பவர் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகள் கூறியது போல் எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆசிரியர்களுக்கு இடையே உள்ள பிரச்னையில் எனது மகளை கருவியாக பயன்படுத்தியுள்ளனர். மற்ற ஆசிரியர்கள் கூறியதன் பேரில் அவ்வாறு புகார் கொடுத்ததாக எனது மகள் கூறினாள். எனது மகள் அளித்த புகார் பொய்யானது’ என்று கூறியுள்ளார்.

  இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெரிய கருப்பையா, உண்மை நிலவரம் என்ன என்பதை விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

  நன்றி – தின-மலர்

  பின்னூட்டம் by ஸிராஜ் — நவம்பர் 29, 2006 @ 6:31 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: