தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 21, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 10

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:46 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே உமர் பாயா. வாங்க. வாங்க. எங்க நீங்க வராம போயிடுவீங்களோன்னு நெனெச்சேன்.

ஏன் அப்புடி நெனெச்சீங்க அஹமது.

அது வந்து.. .. ..

ஏன் தயங்குறீங்க அஹமது. முகவைத் தமிழனோட மெயிலுக்கு பதில் சொல்ல நுழைஞ்சு ஏகத்துக்கு தர்ம அடி வாங்குனதுனால ஓடிப் போயிடுவேன்னு நெனெச்சீங்களா.

சேச்சே.. .. அதுக்காகவுலாம் இல்ல. நீங்க தான் முன்னாடியே நமக்கெல்லாம், வெட்கம், மானம், சூடு, சொரணையெல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் நான் அதயெல்லாம் ஒங்கள்ட்ட எதிர்பார்க்க முடியுமா.

நான் நெனெச்சது, நீங்க அண்ணனோட ஒக்காந்து இந்த மேட்டர அப்புடி வேற தெசயில திருப்புறதுன்னு ஆலொசிக்க போயிருப்பீங்களோன்னு தான் நெனெச்சேன்.

அங்க போனா மட்டும் என்ன புதுசா இருக்கப் போவுது. அதுனால தான், Reg என்பதை Ref என எழுதியது தவறுன்னு ஒத்துக்கிட்டு நானே ஒரு போஸ்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்.

அதுசரி. நான் அதப்பாக்கல. அதுனால தான் நீங்க அண்ணன்ட போயிட்டீங்களோன்னு நெனெச்சேன். ஆனா Reg ன்கிறதுக்கும், Ref ன்கிறதுக்கும் ஒண்ணும் சம்பந்தமே இல்லையே. அப்பறம் ஏன் நீங்க அந்த விஷயத்தை பெருசா எழுதுனீங்க.

என்னங்க அஹமது செய்யுறது. கைல கிடச்சு இருக்கிறது கம்பா, பாம்பான்னா வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போறவன் ஆராச்சி செஞ்சுகிட்டா இருப்பான். எதோ கெடச்சத வச்சு கர ஏறலாம்னு பாத்தா, அது நம்மளயே கடிக்கிற மாதிரி வளச்சுருச்சு. அதான் உதறிட்டேன்.

சரி விடுங்க. நீங்க என்னா வச்சுக்கிட்டா வஞ்சகம் செய்யப்போறீங்க. ஒங்க அறிவு அவ்வளவு தான்னு புரிஞ்சுகிட்டு இருப்பாங்க. ஏதுக்கும் இத எளுதுறதுக்கு முன்னால நீங்க அண்ணன்ட்ட ஒரு வார்த்தை பேசியிருந்திருக்கலாம்.

ஏன்? ஒரு வார்த்தையில ஒரு எழுத்த மறச்சதுனால அவர தமுமுக காரன் நார் நாரா ஊர் ஊரா தொங்க வுட்டானே அந்த அனுபவத்துனால உஷாரா வழிகாட்டியிருப்பார்னு சொல்றீங்களா?

ஒரு வார்த்தைல ஒரு எழுத்த அண்ணன் மறச்சாரா. என்ன உமர்பாய். வரவர நீங்களும் தமுமுக காரன் மாதிரி பேச ஆரம்புச்சுட்டீங்க.

ஏன் தமுமக காரன் மட்டும் தான் உண்மையப் பேசுவானா. நீங்க வேணா அத மறந்திருக்கலாம். ஒங்கள மாதிரியான மறதியாளர்கள நம்பித்தான் அண்ணன் பிஜே குர்ஆன், ஹதீஸ் எல்லாத்துலயும் தனக்கு தேவையான மாதிரி மறைக்கிறதும், திரிக்கிறதும், கைகழுவுறதுமா இருக்காரு.

சரி. விஷயத்த சொல்லாம ஏன் என்னென்னத்தையோ பேசுறீங்க.

ஜகாத் விஷயம் சர்ச்சையானப்ப, அண்ணன் என்ன சொன்னாரு. ‘துதஹ்ஹிரு’ – ன்னு தானே அடிச்சுப் பேசுனாரு, அப்புறமா தமுமுக மேடைல வேற ஒரு மவ்லவி வந்து ‘துதஹ்ஹிருக’ – ன்னு அதச் சொன்னப்புறமா தானே நமக்கு அண்ணன் ‘க’ வை மறச்ச விஷயம் வெளங்குச்சு. ஆனாலும் அவர மட்டும் தான் தக்லீது செய்யனும்கிற தவ்ஹீத் கொள்கைல நாம பிடிப்பாக நிக்கிறதுனால நாம உண்மைய தமுமுக காரன் சுட்டிக்காட்டுனப்புறமாவும் அத விட்டுட்டு அண்ணன் பின்னாலேயே நிக்கிறோமே – மறந்துட்டீங்களா.

ஆமாமா. உமர். சரியாத்தான் சொன்னீங்க. ஜகாத்ங்கிற ஒரு பெரிய கடமையிலேயே தனக்கு சார்பா மறைச்சோ, திரிச்சோ சொல்லிக்கலாம். வாதத்துல ஜெயிக்கிறது தான் முக்கியம்கிற அண்ணனோட அரிச்சுவடி பாடத்துனால தான் அப்புடி RegRef ன்னு எழுதிட்டீங்களாக்கும்.

ஆமாங்க அஹமது. எல்லாரும் என்னய, உங்கள மாதிரின்னு நெனெச்சு எழுதிட்டேன். ஆனா நம்மளத் தவிர மத்தவன்லாம் வெவரமாத்தான் இருக்காங்க. அதுனால தான் டக்குனு ஜகா வாங்கிட்டேன்.

அது சரி. இப்பத்தான் எனக்கு ஒண்ணு வெளங்குது. அதாவது இந்த மேட்டரு கிட்டத்தட்ட ஜகாத்துல மாட்டிக்கிட்டு அண்ணன் ஜகா வாங்குனத ஒத்தது மாதிரியாத் தான் இருக்கு. எப்புடின்னா.. .., ஜகாத் விஷயத்துல அண்ணன் ஆரம்பத்துல இந்த ‘துதஹ்ஹிரு’ வுல தான் எல்லாமே அடங்கியிருக்குன்னு தன்னோட ஆர்கியூமெண்ட்ட வச்சாரு. பெறகு அது துதஹ்ஹிரு இல்ல துதஹ்ஹிருக – ன்னு வெட்ட வெளிச்சமானதோட, ஒரு எழுத்து தவறிப்போனது பெரிய விஷயமான்னு ஜகா வாங்குனாரு. அது மாதிரி ததஜவோட வழக்கம் பிஸ்மில்லாவ அரபுல எழுதுறதா, தமிழ்ல எழுதுறதான்னு புடிச்சு தொங்குனீங்க. இரண்டு மாதிரியும் எழுதப்பட்டிருக்குன்னு தெரிஞ்சதும் அத கண்டுக்காம விட்டுட்டு RegRef ன்னு மாத்த முயற்சி பண்ணுனீங்க. அந்த குட்டும் ஒடஞ்சதுனால இப்ப ஜகா வாங்கிட்டீங்களாக்கும்.

கரெக்ட் தான். ஆனா நாம எப்பையும் நம்மோட தப்ப முழசா ஒத்துக்குற பளக்கமே இல்லியே. அதுனால தான் முகவைத் தமிழன் தான் ஜகா வாங்குறார்னு ஒரு அவதூறை துணிந்து தலைப்பாக்கி மெயில் அனுப்புச்சுட்டேன். இந்தாங்க நீங்களே படிச்சு பாத்துக்குங்க.

ம்.. .. .. சரிதான். நம்மோட சுன்னத்த அச்சு பிசகாம அப்புடியே கடப்புடிச்சு இருக்கீங்க. ஆனா,

Reg என்பதை Ref என்று எழுதி விட்டதால்? ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா? என்று எழுதியிருக்கீங்களே. இதப்படிக்கிறவங்க.. …

‘ஆமா, அதெப்புடி ஃபோர்ஜரி இல்லாமப் போகும். RegRef ன்னு எழுதுனா அது கண்டிப்பா ஃபோர்ஜரி தான்னு வெளங்கிக்கிட மாட்டாங்களா?’

அட – அப்புடி ஒரு அர்த்தம் வருமோ. வரவர நீங்களும் தமுமுக காரன் மாதிரி கண்ணுல வெளக்கெண்ண ஊத்திக்கிட்டு படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல. மேல படிங்க.

ம்.. .. .. நாய் குரைப்பது.. .. மாடு மேய்வது.. .. .. பாய்ந்து பிராண்டுவது.. .. .. நம்மளோட அதுக்கார்கள மறக்காம எளுதியிருக்கீங்க. எல்லாம் சரி. ஆனா நம்மோட முன்னாள் நிர்வாகி சகோ. அப்துர்ரஹ்மான் தான் அந்த ஷரீஅத் தீர்ப்பாயம் கடிதத்தை குடுத்தாருன்னு முகவைத் தமிழன் எழுதி நான் படிச்சதா ஞாபகமில்லியே.

என்னங்க அஹமது நம்மளோட சுன்னத்து, அதுக்காருகள யெல்லாம் வெளங்கிகிட்ட நீங்க இத மாத்திரம் ஏன் வெளங்க மாட்டேங்குறீங்க. நமக்கு புடிக்காதவங்கள யெல்லாம் நாம இப்புடித்தான் ஒண்ணா சேர்ப்போம். முகவைத் தமிழன் சொல்லலன்னாலும், அப்துர்ரஹ்மான சொல்லலன்னாலும் நாம் அப்புடித்தான் எளுதுவோம். அப்புடி சொல்லிச் சொல்லித் தான நாம அந்த ஜித்தா மவ்லவி முஜீப தமுமுக மேடைல பேசுற அளவுக்கு கொண்டு போயி விட்டோம்.

அதெல்லாம் சரிங்க. இந்த விவகாரத்துல ஆரம்பத்துல இருந்து எனக்கு ஒரு சந்தேகம். அவுங்க வெளியிட்டது, நாம வெளியிட்டதுன்னு இரண்டு கடிதம் இருக்குறப்ப ஒண்ணு அசல், ஒண்ணு போலின்னு சொல்றோமே அத கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு எனக்கு என்ன சந்தேகம்னா, மக்கா கூட்டமைப்புன்னு ஒரு கடிதமும், ரியாத் மண்டலம்னு ஒரு கடிதமும் முகவைத் தமிழன் பிளாக்ஸ்பாட்டு ல வந்துச்சே அதனோட நிலவரம் என்ன?

அதத்தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க. அவனுக தரப்புல இருந்து கூட ராவுத்தர தவிர வேற யாரும் அத கண்டுகல. அப்புடி இருக்கும் பொது நீங்க ஏன் அத கிளறுறீங்க.

அதில்லீங்க உமர். ஷரீஅத் தீர்ப்பாய கடிதத்துதை அப்துர்ரஹ்மான் தான் முகவைத் தமிழன்ட்ட கொண்டு போயி குடுத்தார்னு சொல்ற நீங்க.. .. மக்கா கூட்டமைப்பு கடிதத்தையும், ரியாத் மண்டல கடிதத்தையும் யாரு முகவைத் தமிழன்ட்ட குடுத்தாங்கன்னு சொல்லல. அது மாத்திரம் இல்ல. தம்மாம் கிளை கடிதத்தை அப்துர்ரஹ்மான் தான் குடுத்தார்னு திட்டவட்டமா நீங்க சொல்றதா இருந்தா, தம்மாம் கிளை நிர்வாகிகள் அத்தன பேரயும் தான் குத்தம் சொல்லனும் அத வுட்டுட்டு அப்துர்ரஹ்மான மாத்திரம் குத்தம் சொல்றது சரியில்லை. அப்புறம் மக்கா, ரியாத் கடிதம்லாம் யார் மூலமாக போச்சுன்னு சொல்லப் போறீங்க. பஷீர் மவ்லவி மூலமாவா அல்லது மக்காவுல இருக்குற அப்துர்ரஹ்மான் மவ்லவி மூலமாவா இல்ல மெட்ராஸுல இருந்து பிஜே வே குடுத்துட்டார்னு சொல்லப் போறீங்களா.

என்னங்க அஹமது. இப்புடி கேள்வி மேல கேள்வி கேட்டு குடஞ்சு எடுக்கிறீங்க. நம்மளோட கொள்கை ஒங்களுக்கு வெளங்கலன்னு நெனக்கிறேன். ரியாத், மக்கா கடிதம்லாம் ஒரிஜினலா, ஃபோர்ஜரியாங்குறதப் பத்தி நமக்கு கவலயில்ல. நம்மளோட ஒரே தக்லீதுக்கு தகுதியான தலைவன் பிஜே எந்த சந்தர்ப்பத்துலயும் மாட்டிக்கக் கூடாது. அதுக்காக யார வேணும்லாம் காட்டிக் குடுக்கலாம். அதுனால தான் ஷரீஅத் தீர்ப்பாயம்கிற பேர்ல அண்ணன் குடுத்த அவதூறுக்கான அங்கீகாரத்த ஃபோர்ஜரின்னு காட்ட தீவிரமா முயற்சி பண்றோம்.

அதுதான் பாத்தேன். முகவைத்தமிழன் வெளியிட்ட ரியாத் ததஜ லெட்டர்ல TEL ன்னு போட்டு +91 ன்னு தொடங்கியிருந்துச்சே, இத அவனுக ஃபோர்ஜரின்னு சுட்டிக்காட்டியும் நாம அதப்பத்தி மூச்சு விடலயே. அதுனால தான் எனக்கு சந்தேகமாக இருந்துச்சு. இப்போ புரிஞ்சுடுச்சு. அண்ணன் தானே சொல்றாருன்னுட்டு நாமளே எதாச்சும் ஃபோர்ஜரி செஞ்சு போட்டுட்டோம்னா நாளக்கி ரியாத் மீரான கைவிட்டா மாதிரி நம்மளயும் கை விட்டுருவீங்க போல.

அப்புடியலாம் ஆகாது அஹமது. கலப்படாம எனக்கு கொஞ்சமாச்சும் சப்போர்ட்ட பண்ணுங்க. நீங்களும் ஒடிட்டா நான் யார்ட்ட போயி பொலம்ப முடியும்.

சரி சரி .. .. நான் போன வாரம் ஒரு விஷயத்த விசாரிக்கச் சொன்னேனே விசாரிச்சிங்களா.

ம்.. .. .. அட்ரஸ் சமாச்சாரம் தானே. விசாரிச்சுட்டேன். அதாவது சுனாமி நிதிய ததஜ பொதுக்கணக்குல வசூலிச்சதுனால, தமுமுக காரன் அதயே புடிச்சிக்கிட்டு கொடஞ்சுகிட்டு இருக்கான். உண்மையிலேயே அவஞ் சொல்றா மாதிரி சுனாமி எது பினாமி எதுன்னு புரியாம ஒரு குத்து மதிப்பா அதே நேரம் நமக்கு தான் ஆதரவு அதிகம்னு காட்றதுக்கா பிலட்அப்பு, கள்ள கணக்குன்னு எழுதி அப்புடியும் உதச்சதுனால உணர்வுக்கு, யூனிஃபார்ம்முக்கு அதுக்கு இதுக்குன்னு எளுதி, வேற யாரும் பாத்தா வெவகாரமா போயிடும்னு நம்ம ஆளுங்கள மட்டும் கூப்பிட்டு கைய, கால, புடிச்சு ஒரு வழியா கணக்கு காட்னோம்ல.

ஸ்டாப். ஸ்டாப். உமர் பாய். சுனாமி கணக்குக்கும், அட்ரஸ் மாறுனதுக்கும் என்னங்க சம்பந்தம். ஏம் போட்டு கொளப்புறீங்க.

அவசரப்படாம அமைதியா கேளுங்க அஹமது. சுனாமி கணக்கு பத்தி கேள்வி வந்த மாதிரி குர்பானி கணக்குலயும் வந்துடக் கூடாதில்லையா. அதுனால கூட்டு குர்பானிக்கு பணம் அனுப்புறவங்க உணர்வு வங்கி கணக்குக்கு அனுப்பனும்னு சொல்லி வெளியிட்ட நோட்டீஸ்ல, வங்கி கணக்கு நம்பர்லாம் போடாம வெறுமனே உணர்வு அரண்மனைக்காரன் தெருன்னு போட்டுட்டாங்க. அதுனால தான் ஒங்கள மாதிரி பல பேரு கொளம்பிப் போயி கேள்வி மேல கேள்வி கேக்கவும் சுதாரிச்சுக்கிட்டு இப்போ சரியாப்போட்டு விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்காங்க.

அதுசரி. நம்மாளுகளுக்கு சீசனுக்கு ஒரு வியாபாரம் கெடச்சுருது. ஆமா இப்ப மட்டும் யாரும் கேள்வி கேக்க மாட்டாங்கன்னு எப்புடி நம்புறீங்க. இப்பவும் குர்பானி வகைக்குனு வெளிநாட்ல இருந்து அனுப்புறவங்க, குர்பானி கறிய யாருக்காச்சும் குடுத்துக்கட்டும்னு ஆள் அனுப்பி செக் பண்ணாம இருந்தா இப்பவும் உணர்வு கணக்குக்கு வர்ற தொகைல சந்தா எவ்வளவு, நன்கொடை எவ்வளவு, குர்பானிக்கு எவ்வளவுன்னு எப்புடிங்க தெரியும்.

வரவர நீங்க ரொம்ப கேள்வி கேக்க ஆரம்புச்சிட்டீங்க. முடிஞ்சா இத விசாரிச்சு அடுத்த வாரம் சொல்றேன். இல்லாட்டி சுனாமி தலையெழுத்து தான் குர்பானிக்கும்னு போக வேண்டியது தான். சரி நேரமாச்சு நான் வர்றேன்.

வஸ்ஸலாம் – முல்லா (21.11.2006)

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: