தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 29, 2006

விவாத அழைப்பும் பொய்ச்சவடால்களும்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 4:38 முப
விவாத அழைப்பும் பொய்ச்சவடால்களும்!!

அன்புள்ள சகோதரரே! அஸ்ஸலாமு அலைக்கும்.

பகல் கொள்ளை என்று கேட்டிருக்கின்றோம். ஆனால் பகலையே கொள்ளையடிக்கும் உங்களைப் போன்றவர்களை எண்ணி இப்பொதெல்லாம் ஆச்சர்யப் படுவதில்லை! தவறுகள் என்று உணர்ந்ததும் சுட்டிக் காட்டிய – தட்டிக் கேட்ட – எட்டி உதைத்த ஒரு காலம் நம்மில் உங்களுடையதாய் இருந்தது அன்று. இவைகள் உங்களை மெச்சுவதற்கான பீடிகை அல்ல. மாறாக இப்போது அந்த குணம் உங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதுடன் சமுதாயத்தில் பிஜே ஒழிப்பு பூஜைகள் நடத்தும் சில அதிமேதாவிகளின் பட்டியலில் தாங்களும் உட்பட்டுவிட்டதை இன்னொரு முறை நினைவு படுத்துவதற்காகவே. இன்னும் சிலதுகளை எழுதுவதாயின் கவனம் அவற்றின் பால் மட்டுமே திரும்பிவிடும். இதை கேட்டு வைப்பதற்காக பிஜேவை ஒரு குழப்பவாதி என்று வைத்துக் கொள்வோம்.

அவரைத் தவிர்த்து ஏனைய தமிழக சர்வ தேச ???? அறிஞர்களும் சரியானவற்றை தான் கூறுகின்றார்களா? (பிறகு ஏன் அவர்கள் பிஜே கூப்பாட்டை தவிர மார்க்க விசையங்களில் ஒன்றுபடவில்லை? எனக் கேட்டுவிடுவேன் என்பதால்,)இல்லை என்றுதான் பதிலளிப்பீர்கள். (என்றால்) தாங்கள் இந்த சமுதாயத்தை காப்பதற்காக அவர்களுக்கெதிராக கொடுத்த குரல்கள் ஏதேனும் உண்டா?

தங்களின் ஆஸ்தான குரு அஷஷஹ் அபூ அப்துல்லாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு அமீர் கமாலுத்தீன் மதனியின் பதில் என்ன? பதில் சொல்லும் கடமை உங்களுக்கும் உண்டு. ‘ஒருநாள் பெருநாள’; என்ற முழக்கத்துடன் அங்கொருநாள் இங்கொருநாள் பெருநாள் பேர்வழிகளின் புத்தக ஏஜன்ட் ஆகிவிட்டீர்களே! இது மட்டுமா (பஞ்சு வைத்து அடைக்கும் சட்டம் உட்பட) எண்ணற்றவைகள்… பிஜெவை ஒழிப்போம் என்ற பெயரில் தவ்ஹீதுக்கு எதிராக ஆதாரங்களை தர முன்வந்த தரங்கெட்டவர்களுக்காக ஏராளமானோர் அணிசேர்ந்திருக்கும் வேளையில் தாங்களும் அவர்களில் சங்கமித்ததை ஆச்சர்யமாக கருதவில்லை. எனினும் அந்த அமீருக்கும் ஹுஸைன் மடவூரிக்கும் உள்ள (கள்ள அல்ல நல்ல) தொடர்பையும் அறிந்திருக்க வேண்டும். ஜகாத் விசயத்தில் எம். எம். அக்பர் அவர்களது நிலையை எப்படி விமர்சிக்கப் போகின்றீர்கள்?

அடங்கா பிடாரியாய் அலறும் உங்கள் அருமை நண்பர் ஆலிமுல் அல்லாமா மாமேதை ஞானி ஷம்ஸுத்தீன்பாலத் பெண்கள் கத்னா விசயத்தில் கூறியது என்ன? அதில் அவர் நிலைத்து நிற்கின்றாரா? இல்லை அது தவறு என்றால் மக்களிடம் அது விசயமாய் தவறை ஒப்புக் கொள்கின்றாரா? எப்படி பேசினாலும் வாய் கிழியாது என நினைத்து வாந்திகளை எல்லாம் வாதங்களாய் வைக்கக்கூடிய அவரை எத்தனை முறை திருவனந்தபுரம் சகோதரர்களர் மூலமாக விவாதம் செய்ய அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவருக்;கு நாக்கில் எலும்பு இல்லாததைப்போன்று நட்டெல்லும் உறுதியில்லை என கருதுகிறோம். ஸலபிகள் அவரை கைவிடும் நாள் மிக தொலைவில் இல்லை (ஸலபிகள் பரவாயில்லை-அவரின் தனி நபர் விமர்சனத்தால் மறுமையில் அல்லாஹ் அவரை கைவிடுவதை பயந்து கொள்ளட்டும்). இன்னும் பட்டியலிட்டால் தனிநபர் தாக்குதலைப் போன்று ஆகிவிடும். இவைகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல் படுபவர்களின் – இஸ்லாமிய பிரச்சாரகர்களை தாக்கும் அறிவிலிகளின் பட்டியலில் சில.

மேற் கூறியவைகளை செய்திக்காக என வைப்போம். விளக்கங்களை நீங்கள் எழுதினால் வக்காலத்துகள்தான் விடையகக் கிடைக்கும். எனவே பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள். கேள்விகளை மட்டும் விரும்பும் உங்களுக்கு சில வேள்விகள்!

பம்பரமாய் (பல நிறங்களுடைய தலைவர்களின் இயக்கங்களுக்காக ஒற்றைக்காலில்) சுழலும் நண்பரே. நூர் முஹம்மது பாகவியை ஒப்பந்ததிற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கின்றோம் அது ஒருபுறம் இருக்கட்டும். உங்களுக்கு துணிவிருந்தால் இறைவனின் துணையிருக்கும் என நம்புவதாக இருந்தால் உலகளாவிய தெடர்புடைய நீங்கள் குறைந்தது தங்களை அடையாளம் கூறும் ஒரு ஆறு மார்க்க அறிஞர்களை விவாதத்திர்காக கொண்டுவாருங்கள். நானும் எனது கடமைக்காக பிஜெ உட்பட ஆறு பேரை கொண்டு வந்து நிறுத்துகின்றேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையிலிருந்து ஒப்புதல் கடிதத்தை தருகின்றேன்.

ததஜ ஆலிம்கள் முன்வரவில்லை என்றால் அவர்கள் பொய்யர்கள் என புரிந்து செயல்படுகின்றேன். தனிப்பட்ட உங்களிடம் மட்டும் விளக்குவதைவிட தமிழ்கூறும் மக்கள் மத்தியில் சத்தியத்தை எடுத்துவைக்க சபதம் ஏற்போம். உங்கள் தரப்பு ஆலிம்களை எப்போது சம்மதிக்க வைப்பீர்கள் என்ற பதிலுக்காக மட்டும் காத்திருக்கின்றேன்.

அன்புடன் – ஷிஹாபுதீன்

துணிவும் துணையும்

காணாமல் போன ஷிஹாபுத்தீன் மீண்டும்!!!

நண்பர் ஷிஹாபுத்தீனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

மூதறிஞர் பி.ஜே அவர்களைப் பற்றி உலமாக்கள் சமூகம் கொண்டுள்ள நிலைபாட்டை அவரது மாயையில் சிக்கித் தவிக்கும் உங்களைப் போன்றவர்கள் சிந்தனைத் தெளிவை அடையலாம் என்ற நன்னோக்கில் நான் எழுதிய மடலைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள். பகலை எவ்வாறு கொள்ளையடிப்பது??? என்று புரியவில்லை. உங்களைப் போன்று வர்த்தை ஜாலங்களெல்லாம் எனக்குத் தெரியாது.

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களிடமிருந்து பதில் வந்துள்ளது. இதற்கு முன் நான் அனுப்பிய கடிதங்களுக்கெல்லாம் ஒரு பதிலையும் காணவில்லை. ஏன் மவுனம் சாதிக்கின்றீர்கள்? உங்கள் தரப்பில் உண்மை இருந்தால் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு நான் அனுப்பிய அத்தனை கடிதங்களுக்கும் அக்கமிட்டு பதில் அளியுங்கள். அதற்கு மாறாக சம்மந்தம் இல்லாததையெல்லாம் இழுக்காதீர்கள். கேரளாவைச் சார்ந்த அறிஞர்களை ஏன் வம்புக்கு இழுக்கின்றீர்கள்? ஷம்சுத்தீன் பாலத்துக்கு நாக்கில் எலும்பு இல்லாததைப் போன்று நட்டெல்லும் இல்லை என்று விமர்சித்திருக்கின்றீர்கள். ஆம் த.த.ஜ வகையறாக்களின் தரம் கெட்ட விமர்சனங்களுள் ஒன்றாகவே இதனை நாம் கருதுவோம். காரணம் ஸஹாபாக்களையே விமர்சிக்கத் துணிந்த நீங்கள் ஷம்சுத்தீன் பாலத்தின் மீது இத்தகைய விமர்சனங்களை வீசுவதைக்கண்டு நாங்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸஹாபா ஒழிப்புப் பூஜை நடத்திக் கொண்டிருக்கும் த.த.ஜ என்னும் ஷைத்தானிய சக்திக்கு எதிராக அறிஞர் படை திரண்டுவிட்ட நிலையில் அந்தப் போர்களத்தில் தங்களை இணைத்துக் கொண்ட சாதாரண மக்களுள் ஒருவனாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பஹ்ரைனில் பலவருடங்களாக நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எனது ஆசிரியர் பெருந்தகை ஷம்சுத்தீன் பாலத்து அவர்களும் பஹ்ரைனில்தான் இருந்தார். அல்ஃபுர்கானின் அழைப்புப் பணியில், வகுப்புகளில் உங்களையும் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த போதெல்லாம் வேலையைக் காரணம் காட்டிப் புறக்கணித்த நீங்கள் ஏதோ த.த.ஜ சில்லரைகள் திருவனந்தபுரத்தில் அவரை விவாதத்துக்கு அழைத்ததைக் காரணம் காட்டி எழுதியிருக்கின்றீர்கள்.உங்களைப்போன்று நேரம் கிடைத்தால் தவ்ஹீத் என்ற போர்வையில் சரடுவிடுபவரல்ல அவர். தனது முழு நேரத்தையும் மார்க்கப் பணிகளுக்காக ஒதுக்கியிருப்பவர். உங்களைப் போன்று பி.ஜே கக்கிய எச்சில்களை விழுங்கிவிட்டு அதுதான் மார்க்கம் என்று கண்மூடித்தனமாக அவரை நாங்கள் பின் தொடரவும் இல்லை. மாறாக மார்க்கத்தில் உங்கள் தலைவர் செய்யும் மோசடிகளை நாங்கள் உணர்ந்து விழித்துக்கொள்ள அவரைப் போன்றவர்கள் அளித்த கல்வி மூலம் அல்லாஹ் உதவி செய்தான். அல்ஹம்துலில்லாஹ்.

இனி திருவாளர் தாங்கள் (தங்கள்???) பஹ்ரைனுக்கு விஜயம் செய்த போது என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தயக்கம் காட்டினீர்கள். நானாக உங்களைத் தொடர்பு கொண்டபோது நாளை வரலாம் என்று கூறிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப்போய்விட்டு இப்போது கடிதத்தில் தலைகாட்டியுள்ள தாங்களைப் போன்றவர்கள் நாவில் எலும்பும் நட்டெல்லும் உடையவர்தான்.

தேங்காய் பட்டணம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கென புதிய பைலாவையும் (த.த.ஜ கொள்கையில்) உருவாக்கி இது எந்த இயக்கத்தையும் சாராதது என்ற சப்பைக் கட்டுடன் பஹ்ரைன் சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டுச் சென்றீர்கள். உங்களது இயக்க கொள்கை உண்மையானது என்றால் ஏன் ஒரு இயக்கம் சேரா இயக்கம் உருவாக்கி அதன் துபை மண்டல தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டும்? இது சம்மந்தமாக உங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட சகோதரர்கள் என்னை அழைத்தபோது நான் கூறும் பதில் இதுதான். தேங்காய் பட்டணத்தில் தவ்ஹீத் என்று தனி இயக்கம் தேவையில்லை. பஹ்ரைனில் தவ்ஹீத் பிரச்சாசத்திற்காக அல்ஃபுர்கான் சென்டர் உள்ளது. அதன் பால் இங்குள்ள தேங்காய்ப்பட்டணம் சகோதரர்களுக்கும் பொது அழைப்பு விடுப்போம். அது போன்று ஊரில் எந்த இயக்கம் உண்மையான முறையில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்கின்றதோ அந்த அமைப்பில் இணைந்து கொள்வோம். அல்லாமல் புதிய இயக்கம் உருவாக்கி அங்கொரு கால் இங்கொரு கால் வைக்கும் தெளிவற்ற நிலைபாடு நமக்குத் தேவையில்லை. சரி உங்கள் தலைவர் தான் எங்களைப் போன்றவர்கள் தவ்ஹீத் கிடையாது ஏனெனில் நாங்கள் ஸஹாபாக்களை ஏற்றுக் கொண்டவடர்கள் (த.த.ஜ தான் உண்மையான தவ்ஹீது) என்று பிரகடனம் செய்த பின்னர் உங்களைப் போன்றவர்கள் எங்களையும் நாடுவது ஏன்?

சகோதரர் முஜீபுர்ரஹ்மான் உமரியை நீங்கள் விவாதத்திற்கு அழைத்து நடத்திய பொய்ச்சவடால்களை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். (பாக்க: http://www.islamkalvi.com/vivatham/index.htm) ஹாமித் பக்கிரி உங்களிடம் விவாதத்திற்கான பகிரங்க சவால் விட்டபோது நைசாக நழுவிவிட்டீர்கள். அதோடு மட்டுமல்ல உங்களோடு விவாதத்திற்கு இன்னும் பல அறிஞர்கள் தயாராகவே உள்ளனர். நீங்கள் தயங்குவது ஏன்? நீங்கள் விவாதத் திறமை உள்ளவர்கள்தானே? அரபி மொழி அறிந்த அறிஞர்களிடம் விவாதம் செய்ய உங்கள் தலைவர் முன்வரட்டுமே. விவாதம் தமிழில் தமிழ் நாட்டில்தான் நடக்கவேண்டும் என்பது இரண்டாவது விசயம். முதலில் உங்களிடம் கொள்கைகளைப் பற்றி அது சரியா தவறா என விவாதிக்க அறிஞர்களுக்கு முன் தயாராகுங்கள். சவூதியின் தலைமை முஃப்தி ஆலி ஷைக் அவர்களே உங்கள் மூதறிஞரை விவாதிக்க அழைத்துள்ள நிலையில் விவாத ஏற்பாடு செய்ய என்னிடம் கேட்டுக் கொள்வதை விடுத்து நான் கேட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் அக்கமிட்டு பதில் சொல்லும் உருப்படியான வேலையைச் செய்யுங்கள்.

அபூஅப்தில்லாஹ்வை நான் என்றுமே எனது ஆஸ்தான குருவாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அவரிடம் நான் பாடம் பயின்றதும் கிடையாது. ஏன் அவரால் நடத்தப்படும் நஜாத் பத்திரிகையையே நான் தொடர்ந்து படிப்பதும் கிடையாது. இந்நிலையில் எதையுமே அலசி ஆராய்ந்து கூறும் திருவாளர் பரிசுத்தமாக தங்களைக் காட்டிக்கொள்ளும் நீங்கள் இதற்கு முன்னர் நான் த.மு.மு.க வில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை நான் மறுத்தபோது மவுனம் சாதித்தீர்கள். இப்போது புதிய சரடு விடுகின்றீர்களே! அவரின் குற்றச்சாட்டுகளுக்கு கமாலுத்தீன் மதனி பதில் சொல்லட்டும் அல்லது சொல்லாமலிருக்கட்டும். அதற்காக நான் எழுப்பிய கேள்விகள் பொய்யென்றாகி விடுமா?

இறுதியாக ஸஹாபாக்களைக் கிரிமினல், ரவுடி, எடுப்பார் கைப்பிள்ளை, அண்ணன் எப்ப காலியாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்தவர்கள், நாம் கூட செய்யத் தயங்கும் குற்றங்களைச் செய்தவர்கள் என்றும் இஸ்லாமியப் பேரறிஞர்களை மார்க்கம் தெரியாதவர்கள் விபரமற்றவர்கள் என்றும் உங்கள் தலைவர் விமர்சிக்கலாம்.

அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி உங்களைப் போன்றவர்களும் ஸலபிகள் குராபிகளை விட மோசமானவர்கள், தரம் கெட்டவர்கள், அடங்காப்பிடாரிகள், நாக்கில் நரம்பற்றவர்கள் நட்டெல்லு இல்லாதவர்கள் என்றெல்லாம் விமர்சிக்கலாம். இதுதான் உங்களின் நிலை என்றால் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்கு உங்கள் மூதறிஞர் பி.ஜே யை விட மேலானவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள். உங்களை விட மேலானவர்கள் இந்த சமுதாயத்தின் மூத்த மார்க்க அறிஞர்கள். அவர்களை நீங்கள் விமர்சிக்கும் நிலையில் உங்களின் நிலைபாட்டை இந்த சமூகத்திற்கு மத்தியில் எடுத்துக்காட்டி அந்த மகான்களின் கண்ணியத்தை பிரகடனப் படுத்துவதை அல்லாஹ்வின் பாதையில் செய்யும் ஒரு ஜிஹாத் என்று கருதியே செயல் படுவோம்!

مَّا كَانَ اللّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَا أَنتُمْ عَلَيْهِ حَتَّىَ يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَكِنَّ اللّهَ يَجْتَبِي مِن رُّسُلِهِ مَن يَشَاء فَآمِنُواْ بِاللّهِ وَرُسُلِهِ وَإِن تُؤْمِنُواْ وَتَتَّقُواْ فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ

தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (3:179)

அன்புடன்
மு.அப்துல்காதிர் தஸ்தகீர்
பஹ்ரைன்

Advertisements

1 பின்னூட்டம் »

  1. பிஸ்மில்லாஹிர்ரஹ்மனிர்ரஹீம்

    ஷிஹாபுதீனும் தஸ்தகீரும் முன்பு விடியலிலிருந்து வெளியேறியவர்கள்.ரத்தத்தை கண்டு பயப்படுபவர் தஸ்தகீர்(நஜாத்தில் இவர் எழுதிய கட்டுரை)ஷிஹாபுதீனோ தவ்ஹீத் பேசிவிட்டு ஆடம்பர திருமணம் நடத்தியவர்.இவரின் அக்காள் கணவரோ முழுநேர தவ்ஹீது எதிர்ப்பு பிரச்சாரகர்.இவர்கள் என்ன பிரச்சரம் செய்தார்கள்? என்ன தியாகத்தை சந்தித்தார்களோ?

    பின்னூட்டம் by muslimeen — நவம்பர் 29, 2006 @ 10:01 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: