தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

திசெம்பர் 30, 2006

ஒட்டகங்களை வெட்ட தடை நீக்கம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 4:28 பிப


ஒட்டகங்களை வெட்ட தடை நீக்கம்

சென்னை: ஒட்டகங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நேற்று நீக்கியது.

பக்ரீத் பண்டிகை அன்று ஏழைகள் மகிழ்ச்சியோடு உண்டு மகிழ கறி பங்கிட்டு தானமாக கொடுப்பர். இது “குர்பானி’ எனப்படுகிறது. வளைகுடா நாடுகளில் ஒட்டகங்களை குர்பானி கொடுப்பது வழக்கமாக இருப்பதால், இங்கும் அவற்றை குர்பானி கொடுப்பது விசேஷமாக கருதப்படுகிறது. ஒட்டகத்தின் விலை அதிகமாக இருப்பதால், பலர் சேர்ந்து ஒட்டகத்தை வாங்குகின்றனர். கடந்த முறை பக்ரீத் பண்டிகைக்கு சென்னையில் ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்பட்டன. தற்போதும் சென்னைக்கு ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாரதிய பிராணி மித்ர சங் அமைப்பின் நிறுவனத் தலைவர் கவுஹர் அசிஷ் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “வழிபாட்டுத் தலங்களில் ஒட்டகங்களை பலியிடுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். பக்ரீத் தினத்தன்று குர்பானி என்ற போர்வையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஒட்டக இறைச்சியை விற்பதற்கும் தடை விதிக்க வேண்டும். பலியிடுவதற்காக தமிழக எல்லைக்குள் ஒட்டகங்களை கொண்டு வருவதை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, சந்துரு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஒட்டகங்களை வெட்டுவதற்கு இடைக் காலத் தடை விதித்தது. ஐகோர்ட் விதித்த தடையை நீக்கக் கோரி தஸ்தகீர் சாகிப் ஜாமியா மசூதியின் செயலர் அப்துல்காதர் சாகிப், வக்கீல்கள் மிலாத் அமைப்பின் இணைச் செயலர் அப்துல்முபின் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நேற்று இந்த மனுக்களை நீதிபதிகள் ஜோதிமணி, சந்துரு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகி, “பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணை சென்னைக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு பொருந்தாது. மேலும், இந்தச் சட்டப்பிரிவு 28ன்படி, மத விழாக்களில் பிராணிகளை பலியிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பிராணிகளை கொல்வதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடங்களை மாநகராட்சி கமிஷனர் முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தார். தஸ்தகீர் சாகிப் ஜாமியா மசூதி சார்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஏழு பேர் சேர்ந்து கூட்டு குர்பானி கொடுக்கின்றனர். ஒட்டகங்களை ஏற்கனவே, விலைக்கு வாங்கி விட்டோம். ஐகோர்ட் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வாதாடினார். பாரதிய பிராணி மித்ரா சங் அமைப்பு சார்பில் வக்கீல் பார்த்தசாரதியும் மற்றும் வக்கீல் ராஜேந்திரனும் ஆஜராகி, ஒட்டகங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என்றும் மத்திய அரசின் அறிவிப்பாணை தமிழகம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் வாதாடினர்.
மனுக்களை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் தனது இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

பிராணி வதை தடுப்புச் சட்டப்பிரிவு 28ன்படி, மத விழாக்களில் பிராணிகளை வெட்டுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்பிரிவுகள் 296 மற்றும் 298 ஐ சுகாதார அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பிராணிகளை வெட்டுவதற்கு உரிய இடங்களை சுகாதார அதிகாரிகள் குறிப்பிட வேண்டும். இடைக்கால தடை உத்தரவு நீக்கப்படுகிறது.

இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்த டிவிஷன் பெஞ்ச், மனுக்களுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

நன்றி : தினமலர்

திசெம்பர் 28, 2006

உறக்கத்திலும் விழிப்பிலும் உளறும் ததஜ உமர்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:52 பிப

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

உறக்கத்திலும் விழிப்பிலும் உளறுவதை தவிர வேறொன்றும் அறியாத தறுதலை ஜமாதின் உ.உ.கூ.உமர், மீண்டும் தனது திருவாய் மலர்ந்துள்ளார்.

கடந்த வார கட்டுரையில் இவர் தக்லீதிலிருந்து விடுபட துஆச் செய்திருந்தோம். என்ன தான் துஆச் செய்தாலும், நான் இன்னும் தீவிரமான தக்லீதில்தான் இருப்பேன். தவ்ஹீத் சிந்தனையெல்லாம் தேவையில்லை என தெளிவுபடுத்தும் முகமாக இன்று மெயில் அனுப்பியுள்ளார்.

முன்பு இலாஹியின் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கியது போல், இன்று முகவைத்தமிழன் என்று பேச ஆரம்பித்தாலே வெளிறிப் போய் விடுகின்றனர். காரணம் இலாஹி, பீஜேவுடன் நேருங்கி இருந்த காலத்தில் நடந்தவைகளை பதிவு ஆவணமாக பாதுகாத்து வருகிறார். எனவே உளறுவாய் உமர் போன்றவர்களிடம் பிஜே வுட்டு அடிப்பதைப் போல், எங்காவது ஒரு விஷயத்தை மாற்றியோ, கூட்டியோ குறைத்தோ சொன்னால் – இலாஹி பிடி பிடி என பிடித்து விடுவார்.

அதைப் போலவே இன்றய முகவைத் தமிழனும் தான் பணிபுரியும் இடத்தில் ததஜவினர் நடத்தும் கூத்துக்களையும், மிரட்டல்களையும், கெஞ்சல்களையும் பதிவு ஆவணமாக பாதுகாத்து வருகிறார். எனவே அவரது பெயரைச் சொல்லக் கேட்டாலே உளறுவாய் உமர் – ஹை வோல்ட்டேஜை தொட்டது போல் துடித்துப் போகிறார்.

டிசம்பர் 6 அன்று ராமநாதபுரத்தில் நடந்த விஷயங்கள் குறித்து நாம் எழுதிய போது, அன்று அங்கு ததஜவின் நிலை என்னவென்பதை முகவைத்தமிழன் ஆதாரத்துடன் வெளியித்தயார் என் மார்தட்டுவதாக குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கு பதில் எழுத முடியாத உளறுவாயன், அவரது பாஷையில் பதிலடியாக, ‘அவர் மார்தட்டுவது இவருக்கு எப்படி தெரியும்’ என கிறுக்குத்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரைப் போல் ஒரு கூட்டுக்குள் முடங்கி கிடப்பவரைப் போல் – கிணற்றுத் தவளையைப் போல் – நம்மையும் எண்ணி விட்டார்; போலும். சுய சிந்தனை சக்தியற்றவர்களாக, தறுதலை ஜமாஅத்தின் தலைவன் கிரிமினல் பீஜேவின் வார்த்தைகளை மட்டுமே வாந்தி எடுக்கக் கூடிய வியாதியஸ்தர்களாக இவர்கள் திரிவதால் இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை.

தனது தாயின் மறைவுக்கு ஆறுதல் சொல்லச் சென்றவர்களையே அவமானப்படுத்தி அதிலே இன்பம் கண்ட குரூர புத்தியுடைய தனது தலைவன் வழியை பின்பற்றுவதால், ஒரு சகோதரனின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லும் இஸ்லாமிய நடைமுறை இவர்களுக்கு புரிவதில்லை. அச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டவற்றில் இதுவும் ஒன்று என இவர்களுக்கு விளங்கப் போவதுமில்லை. முகவை ததஜ டிசம்பர் 6 நிகழ்ச்சி பற்றி இன்னும் சந்தேகமாக இருந்தால் அதில் கலந்து கொண்ட சிங்கமுடி பாக்கரிடமோ, அதை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்த திருட்டு பத்திரிக்கை ஆசிரியரிடமோ கேட்டு உளறுவாயன் தெளிவு பெற்றுக் கொள்ளட்டும்.

சிந்தனை தெளிவு இல்லாத உளறுவாயன் சென்ற ஜனவரி கும்பமேளாவைப் பற்றியும் எழுதியுள்ளார். பத்து இலட்சம், பல இலட்சம் என பல சுருதிகளில் பாடித் திரிந்தவர்கள், தனது கிரிமினல் தலைவன் போயஸ் தோட்டத்து பொன்மகள் முன் பொட்டிப் பாம்பாக சுருண்டு, கூனி குறுகி இலட்சம் பேர் என ஈனஸ்வரத்தில் முனகிய பிறகும், வெளியில் மக்களை மடையர்களாக்க கோயபல்ஸ் பாணியில் மீண்டும் மீண்டும் உளறியவர் தற்சமயம் உஷாராக எண்ணிக்கையை விட்டு விட்டார்.

உளறலின் உச்ச கட்டமாக நீட்டி முழங்குவதும், எதார்த்தத்தை சுட்டிக்காட்டி நாமும், நம்மைப் போன்றவர்களும் அழகிய முறையில் பதில் கொடுத்த பின், தனது தலைமையிடம் குட்டுபட்டு மூடிக் கொண்டு அடக்கி வாசிப்பதும் உளறுவாயனின் வாடிக்கை. ‘எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான’ என பில்ட் அப் செய்து வந்தவர், நாம் சுட்டிக்காட்டியபின் ஏதோ கொஞ்சம் எதார்த்தத்தை புரிந்ததால், பல்லாயிரக் கணக்கான என்ற மாயையிலிருந்து விடுபட்டு, இப்பொழுதெல்லாம் ‘எனது மெயிலை பார்வையிடும் சகோதரர்களுக்கு’ என துவக்கி வருவதை நாம் அறிவோம்.

அதேபோல், கும்பமேளா விஷயத்திலும் இலட்சம் பேர் கூட கூடவில்லை என்ற உண்மையை உணர்ந்து உஷாராக எண்ணிக்கையை தற்சமயம் விட்டிருப்பாரேயானால், எதார்த்தத்தை புரிந்து கொண்டதற்காக பாராட்டுவோம். எமது நன்றிகளையும் கூறிக் கொள்கிறோம். இதேபோல் எதார்த்தமான தவ்ஹீதிற்கு எதிரான தக்லீதிலிருந்தும் விடுபட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

ஆனாலும் அது சந்தேகம் தான். ஏனெனில் உளறுவாயனின் தக்லீதின் தரம் அப்படிப்பட்டது. அதற்கு ஒரு உதாரணம் தான் ராஜ் மஹால் வைஸ் இலாஹி விஷயம். இன்று, ‘மேலப்பாளையத்தில் வேறொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது’ என ஒத்துக் கொள்ளும் உளறுவாயன் அன்று, இலாஹிக்காக பீஜே வெட்டித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார் என பரபரப்பான மெயில்களை தனது அடிவருடிகள் அனுப்பியிருந்தது நினைவு கூரத் தக்கது.

ரமளான் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக வரும் பீஜேயிடத்தில் இங்குள்ள இலாஹி என்பவர் பிரச்சனை செய்வார் என் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே அங்கு அவர் நுழைந்துவிடாமல் காக்க வேண்டியது உங்களது கடமை என காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்த கடிதத்தை இலாஹி ஸ்கேன் செய்து வெளியிட்டதன் பின்னும் மூதறிஞர் அபூஜெஹ்லின் கூற்றை நம்புவதற்கு நாம் ஒன்றும் உளறுவாயன் அளவிற்கு முட்டாள் இல்லையே.

நாம் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை தறுதலை ஜமாஅத்தினர் உதாசீனப்படுத்தி வருகின்றனர். நாம் குறிப்பிடுவது அவர்களது நன்மைக்காகத் தான் என்பதனை அறிந்து கொள்ள முடியாத அபூஜெஹ்ல்களாக இருப்பதனால் தான், உளறுவாய் உமரை தொடர்ந்து எழுத அனுமதிக்கின்றனர் போலும். அவரும் விடாமல் நம்மைக் காட்டிலும் அதிகமாக அவரது தறுதலை தலைமையின் தகிடுதத்தங்களை மக்களுக்கு நினைவூட்டி வருகின்றார்.

அந்த வகையில் ஆல்ஃப்ஸ் மலைத் தொடரின்.. .. .. முன்பு ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை குறித்து எழுதியுள்ளார். ஒற்றுமையை சீர்குலைத்த கயவர் கூட்டத்திற்கு, ஒற்றுமையை முடக்கிய கிரிமினல்களுக்கு இதனை குறிப்பிட எந்த அருகதையும் இல்லை.

ஆனால் இதன் மூலம் தற்சமயம் களவாடிச் சென்றுள்ள உணர்வு பத்திரிக்கைக்கு பெயரளவில் ஆசிரியராக இருந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்ட பீஜேயைப் பற்றி ஒவ்வொரு ரமளானிலும் முஸ்லிம் ட்ரஸ்ட்டில் பேசுவதற்கு பணம் வாங்கிக் கொண்ட மூதறிஞர்? பீஜேவைப் பற்றி
ஒவ்வொரு இடத்திலும் பேசுவதற்கு பணம் வாங்கிய பேச்சாளர் பீஜேவைப் பற்றி சுனாமி கணக்கில் கை வைத்து கிராபிக்ஸ் போட்ட தனது மகனுக்காக 65,000 ரூபாயை சுனாமி நிதியிலிருந்து சுருட்டிக்கொண்ட பீஜேவைப் பற்றி சுனாமியை காரணம் காட்டி, தனது பத்திரிக்கைக்கு ரூ 2 இலட்சம் சுரண்டிக் கொண்ட பீஜேவைப் பற்றி மக்கள் மத்தியில் நினைவூட்டி உள்ளார் என்றே பலர் கருதுகின்றனர்.

நாமே சொல்ல கூச்சப்படும் பீஜேவின் இத்தகைய தப்புத்தாளங்களை நினைவு படுத்திய உளறுவாயனுக்கு நன்றி.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 26.12.2006

திசெம்பர் 16, 2006

உறக்கம் களையாத ததவின் உளறுவாய் உமர்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:53 முப

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

உளறுவாய் உமர் தனது மூன்று வார உறக்கத்திலிருந்து மீண்டு வந்து தனது உளறல் திருப்பணியைத் துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள்.

ஆனால், சாதாரணமாகவே உளறக்கூடியவர், ஆழ்ந்த உறக்கத்தில் திடுக்கிட்டு விழித்தால் என்ன செய்வார். பாவம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறி கொட்டியுள்ளார்.

நாம் பல முறை குறிப்பிடுவது போல், இவர் எழுதக்கூடிய குற்றச்சாட்டுகள் பலமுறை இவரது கூட்டத்தாருக்கே மீளக்கூடியதாக இருப்பதை நாம் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.

அந்த வரிசையில் தற்சமயம் சுபுஹு தொழுகையைப் பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால், சுபுஹுமட்டுமல்ல, பல நேர தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழாமல் பீடி குடித்துக் கொண்டு உலவி வரும் தனது கிரிமினல் தலைவனைத் தான் சாடுகிறாரோ என உண்மை தவ்ஹீத்வாதிகள் தலையிலடித்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக, தேர்தலில் தமுமுக பங்கேற்பது குறித்து விளாசியுள்ளார். தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் பேரியக்கமாக பவனி வரும் தமுமுக தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு எங்கு, எப்பொழுது என்ன தேவைப்படுகிறதோ அதை எப்பாடுபட்டாவது பெற்றுத் தரும் தன்னலமற்ற பேரியக்கமாகும்.

தமுமுகவின் பணிகளை (அ) சேவைகளை காப்பியடித்து வரும் பல போலிகள் ஒரே ஒரு எம்எல்ஏ தனது கட்சி ஆபீஸுக்கு வந்து சென்றதும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் தாங்களனைவருமே எம்.எல்.ஏக்களாகி விட்டது போல் புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள் போலும். அதனால் தான் கவுஸ்பாஷா ததஜ அலுவலகத்திற்கு சென்றதால், தமுமுகவிலுள்ள தவ்ஹீத்வாதிகள் வெளியேறுவதாக மனப்பால் குடிக்கிறார் உளறுவாயன் உமர்.

ஒவ்வொரு ஸ்ட்டேட்மெண்டிலும் தானும் குழம்பி பிறரையும் குழப்பும் கலையில் பிரசித்தி பெற்ற உளறுவாயின் உளறலைப் பாருங்கள்.

தமுமுகவிலிருந்து தவ்ஹீத்வாதிகள் விலகுகிறார்கள்.

உளறல் உமரின் கிரிமினல் தலைவர், தான் பிரிந்து சென்ற நேரத்திலிருந்து இன்று உளறல் உமரின் இந்த ஈமெயில் வரை, பல்வேறு வகைகளில் அவர்களும் தத்தமது வாய் கை வலிக்க சொல்லியும், எழுதியும் தான் பார்க்கிறார்கள். அந்தோ பரிதாபம், மறுமையை நம்பக்கூடிய, ஸஹாபாக்களை மதிக்கக்கூடிய உண்மை தவ்ஹீத்வாதிகள் எவரும் தமுமுகவிலிருந்து விலகுவதாகத் தெரியவில்லை. எனவே செய்வதறியாது உளறல் உமர் வகையறாக்கள் கை பிசைந்து நிற்கின்றனர். எனவே தான் அடுத்ததாக அனைவரும் நகைக்கும் விதத்தில் ஒரு காரணம் கூறுகிறார் பாருங்கள்.

அதாவது, தமுமுகவிலிருந்த தவ்ஹீத்வாதிகள், கவுஸ் பாஷாவின் ததஜ அலுவலக விஜயத்தினால் மனம் வெறுத்து விலகுகிறார்களாம்.
இதன் மூலம் உளறல் உமர் தனது தலைமை மற்றும் தொண்டர்களின் தவ்ஹீதின் தரம் எப்படிப்பட்டதென தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஆக இவர்களது பார்வையில் அரசியல்வாதிகள் விஜயத்தினால் தான் இவர்களது ஈமான் கூடவும் குறையவும் செய்யும் போலிருக்கிறது. வெட்கம். வெட்கம்.

முகவை மாவட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தமுமுக நிர்வாகிகளை எத்தனையோ ஆசை வார்த்தை கூறி வளைத்து விட தறுதலை ததஜவின் கிரிமினல் தலைவன் எத்தனையோ முயற்சி செய்தும் ஒன்றும் பலிக்கவில்லை. அந்த விரக்தியில் தனது தலைவனின் சுன்னத்தை விட்டு விடாமல் தமுமுகவின் மேல் தன்னால் முடிந்தவரை அவதூறு சுமத்தியுள்ளார்.

நிர்வாக வசதிக்காக, தனது பலத்தை அதிகரிப்பதற்காக கிளைகளை அதிகமாக்குவதற்காக மாவட்டங்களை பிரிப்பது வளர்ச்சிப் பாதையின் குறியீடு. இந்த வகையில் தான் இந்திய அளவில் புதிய மாநிலங்களே உருவாக்கப்படுகின்றன. தமிழக அளவில் புதிய மாவட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. தமுமுகவும் அதே போல் தனது வளர்ச்சிப் பாதையின் குறியீடாக முகவை மாவட்டத்தைப் பிரித்தது. இன்று அதன் காரணமாக முகவையின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமுமுகவின் புதிய கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முகவை மக்களும் முழு மனதோடு ஆதரவளிக்கின்றனர்.

இதனை காண சகிக்காத தறுதலை ததஜவினர் எதையும் உடைத்தே பழக்கப்பட்ட தங்களது இயல்பு படி முகவை சின்னாபின்னமாகி விட்டதாக மனப்பால் குடிக்கின்றனர்.

அதனால் தான் முகவையில் நடந்த டிசம்பர்-6 போராட்டத்தை சிறுமைப்படுத்தி எழுதியுள்ளார். என்ன செய்வது தனது தலைவன் சரணடைந்த போயஸ் தோட்டத்து பொன்மகளை எதிர்த்து தமுமுக வீறுகொண்ட வீடு முற்றுகை போராட்டம் நடத்த புறப்பட்டதை இந்திய ஊடகமே வியந்து பாராட்டிய வேளையிலும், களவாடிச் சென்ற உணர்வில் சிறுமைப்படுத்தியே செய்தி வெளியிட்டார்கள்.
அத்தகைய சிறுமதியாளர்களின் சீரிய வழிகாட்டுதலில் செயல்படுவதால் உளறல் உமரும் முகவை மாவட்ட தமுமுகவின் டிச-6 போராட்டங்களை சிறுமைப்படுத்தியுள்ளார்.

இதே முகவையில் இவர்களது (அ)சிங்க குரல் பொதுச் செயலாளரின் டிச-6 போராட்டத்திற்கு வந்தவர்கள் மொத்தமாக மூன்று இலக்கத்தை தொட முடியாத அளவிற்குத்தான் இருந்ததாக தகவல்கள் வருகின்றன. ஆதாரத்துடன் வெளியிடத் தயார் என முகவைத் தமிழன் மார்தட்டுகிறார். முகவைத் தமிழன் வெளியிட்டுவிட்டால் தறுதலை ஜமாஅத் ததஜவினரின் முகமூடிகள் கிழிந்துவிடும்.

இலாஹி குறித்து நாம் எழுதியிருந்ததற்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு ‘ஒப்பந்தம் அவசியம் என்பது மனிதர்களுக்குப் புரியும், பிராணிகளுக்குப் புரியாது’ என் உளறியுள்ளார். ஒருவேளை இவர்கள் புரியாத பிராணிகளுடன் பேசும் பழக்கம் உள்ளவர்கள் போலும்.

நாம் குறிப்பிட்டிருந்தது, இலாஹி குறித்து காவல் துறையினரிடம் கம்ப்ளெய்ண்ட் கொடுத்ததோடு, அவரை ராஜ் மஹால் பக்கம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என கையை காலைப் பிடித்து கெஞ்சி எழுதிக் கொடுத்த கடிதத்தின் காப்பியை வெளியிட்டதைத்தான். இதற்கு பதில் எழுத வேண்டுமானால், அப்படி எழுதவில்லை என அவர்களது வழமைப்படி பொய் சத்தியமோ அல்லது அது ஒரு ஃபோர்ஜரி லட்டர் என்றோ உளறியிருக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக அவரை பேமானி என வசை பாடியிருப்பதிலிருந்தே ஓடிப்போனது பிஜே தான், இலாஹி அல்ல என விளங்க முடிகிறது.

சென்ற வருட ஹஜ்ஜில் தமுமுக தொண்டரணியின் சேவையை இந்திய தூதர் அவர்களே சிலாகித்து சொல்லியிருப்பதால் தறுதலை ஜமாஅத்தினருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்த வயிற்றெரிச்சலில் தான் தமுமுக ஏற்பாடு செய்யும் இவ்வருட ஹஜ்ஜையும் விமரிசித்துள்ளார் திருவாளர் உளறுவாய் உமர் அவர்கள். தனது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக, சுனாமி நிதியில் தனது தலைமை தறுதலை ததஜ தனது தொண்டர்களுக்கு சீருடை வாங்கித் தந்த சிந்தனையிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் போலும்.

கருணாநிதி அமைத்த கமிஷனுக்கும், ஜெயலலிதா அமைத்த கமிஷனுக்கும் வித்தியாசம் தெரியாத புத்திசாலிகளாக உளறல் உமர் வகையறாக்கள் இருப்பதால் தான் கமிஷன் பெற்றுக் கொண்ட அவர்களது கிரிமினல் தலைவர் தாராளமாக ஏமாற்றிக் கொண்டுள்ளார். வித்தியாசத்தையே புரிந்து கொள்ள இயலாதவர்களால் செல்வியின் ஆணை ஒரு செல்லாக்காசு – வேஸ்ட் பேப்பர் – டாய்லெட் பேப்பர் என்பதனை எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும்.

அதுதான் உளறல் உமர். அவரிடம் புரிதலை எதிர்பார்ப்பது நமது தவறு. என்றாலும், ஒரு காஃபிர் கூட இஸ்லாத்தை புரிந்து உண்மை முஸ்லிமாக மாற வேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ள உண்மை தவ்ஹீத் வாதிகளாகிய நாம் இந்த உளறல் உமரும் தெளிவு பெற்று உண்மை தவ்ஹீதை விளங்கி தக்லீதிலிருந்து விடுபட துஆச் செய்வோம்.

ராவுத்தர் (16.12.2006)

திசெம்பர் 11, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 13

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:54 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய் எங்க ரண்டு வாரத்துக்கு மேலா காண முடியலியே.

என்ன அஹமது நக்கல் பண்றீங்களா. நாம தான் போன வாரம் சந்திச்சு பல விஷயங்கள பத்தி பேசிக்கிட்டமே.

நான் ஏன் ஒங்கள நக்கல் பண்ணப்போறேன். நீங்க தான் மக்களயே நக்கல்னு எளுதுறவுங்களாச்சே. நான் கேக்க வந்தது கடந்த 2 வாரத்துக்கும் மேலா நீங்க எளுதி எதுவுமே மெயில் அனுப்பலியே அதச் சொன்னேன்.

ஓ. அதுவா. என்னத்த அஹமது எளுதுறது. எத எளுதுனாலும் வாங்கி கட்டிக்க வேண்டியதிருக்கு. அதுதான் யோசனயாயிருக்கு.

அதுசரி. அப்புடி இப்புடின்னு நம்மள சந்திக்கிறதயும் நிறுத்திடாதீங்க. ஆமா. போனவாரம் இந்த ஹஜ்ஜ பத்தி பேசிக்கிட்டோமே அது சம்பந்தமா எதாவது லேட்டஸ்ட் நியூஸ் இருக்கா.

சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல. ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். எந்த அளவுக்கு சரின்னு தெரியல. அதாவது நம்ம தலவர நம்பி யாருமே கூட வராததுனால, அவரு மட்டும் கேரளாவில இருந்து ஹஜ்ஜுக்கு போகப் போறதா தகவல் கிடச்சிருக்கு.

எங்க இருந்து போனாலும் பரவாயில்ல. முதல்ல ஹஜ்ஜ முடிக்கச் சொல்லுங்க. மொதல்ல தான் ஹஜ்ஜு பண்ண காசில்லன்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. இப்பத்தான் தனக்கு மட்டும்னு இல்லாம குடும்பத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிஸினஸ்னு எல்லோருமே வளமாக்கிக்கிட்டாங்கல்ல. அதுனால முதல்ல ஹஜ்ஜ முடிக்கச் சொல்லுங்க ஒமர் பாய்.

எல்லாம் சரிதான் அஹமது. ஆனா நாம போன வாரமே சொன்னா மாதிரி போனா வருவாராங்கிற டவுட்டு இன்னும் அதிகமாகி கிட்டே போவுதே.

ஏன். இப்ப என்ன புதுசா மொளச்சிருக்கு.

என்னத்த சொல்றது அஹமது. நம்ம ஆளு இந்த ஜெயலலிதா கிட்ட பெட்டி வாங்கி எப்ப கூட்டு வச்சாரோ அப்பவுல இருந்து அந்த அம்மா மாதிரியே எதையாவது சொல்லி வச்சு வம்புல மாட்டிக்கிறாரு. அந்த வகையில போன ஏகத்துவம் பத்திரிக்கைல, ‘நாம் பின்பற்றுவது தூதரைத் தான் யூதரை அல்ல’ ன்னு எளுதி அதுல சவுதி அரசாங்கத்த தாக்கி இருந்தாங்கல்ல,

அதத்தான் போன வாரமே பேசிக்கிட்டோமே, இப்ப கூடுதலா என்ன வந்திருக்கு? அதச்சொல்லுங்க.

அவசரப்படாம கேளுங்க அஹமது. அதத்தான் சொல்ல வர்றேன். இப்ப என்னடான்னா நிகாப் பத்தி எளுதி அது குர்ஆன்லயோ ஹதீஸ்லயோ சொல்லப்படலன்னு எளுதி இருக்காரு. இதப்படிச்சு பார்த்தா போன மாச ஏகத்துவம் சவுதில தடை செய்யப்பட்ட மாதிரி இந்த வார உணர்வும் தடை செய்யப்பட்டுப் போயிடும்னு பயப்படுறேன்.

அப்புடியெல்லாம் ஆகாது. பயப்படாதீங்க. நம்மாளு என்ன அவ்வளவு வௌரமில்லாதவரா. ஏகத்துவம் பத்திரிக்கைல ‘நாம் பின்பற்றுவது தூதரைத் தான் யூதரையல்ல’ ன்னு மவ்லவி சம்சுல்லுஹாவ வச்சு எளுதி வுட்ட மாதிரி, இந்த நிகாப் விஷயத்தையும் குவைத் ஃபைஸல் ங்கிற பேர்ல தான் வெளிவுட்டு இருக்காரு. அப்புடி ஏதாச்சும் பிரச்னை வந்தா, இவுங்கள தள்ளி வுட்டுட்டு தப்ச்சுக்குவார்ல.

அட, ஆமா. இத நான் யோசிக்காம போய்ட்டேனே. இப்புடி ஒரு சிக்கல் இருக்குறதுனால தான் இந்த மாச ஏகத்துவத்துல அப்புடி ஒரு பதில் வெளியாகி இருக்கோ.

அது என்னங்க ஒமர் பாய்.

அதாவது அஹமது, முன்னால ஒரு சமயத்துல பிஜே ஒரு தலாக் விஷயமா கேட்ட கேள்விக்கு பதில் சொல்றப்போ, ‘பிரசுரமாக இருந்தால் நீங்கள் குறிப்பிடுவது போல் தான் உள்ளதா என சரி பார்த்து பதிலளிக்க முடியும். இது ஓர் உரை என நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், சரி பார்க்க இயலவில்லை’ ன்னு எளுதியிருக்காங்க.

இது என்னங்க இது. புது விளக்கமா இருக்கு. அட அப்புடியே இது ஒரு இடத்துல பேசுன பேச்சுன்னா, தமுமுகவோட உபகாரங்கள வச்சு நடக்குற பாக்கர்ர மீடியா வெர்ல்ட்லயோ அல்லது நம்ம தலவரு ஆரம்புச்ச மூன் மீடியாவுலயோ கேட்டு வாங்கி செக் பண்ண வேண்டியது தான. இல்லாட்டி அவரு கிட்டயே ஃபோனப் போட்டு கேக்க வேண்டியது தானே. செக் பண்ண முடியலைன்னு சொன்னா அதுல என்னமோ வில்லங்கம் இருக்குதுன்னு வெளங்குது.

அதே தான். இதப் படிச்ச ஒவ்வொரு தமுமுக காரனும் இப்புடி வெளங்கிக் கிட்டதுனாலதான ஃபோன் போட்டு நம்மள்ட்ட குசலம் விசாரிக்கிறானுக. இவரு இப்புடி ஹதீஸ வெளங்கப் படுத்துறேன்னுட்டு வலிஞ்சு என்னத்தயாவது சொல்லி வாங்கி கட்டிக்கிறாரு. ஏகத்துவத்துல அந்த வாசகர் குறிப்பிட்டிருந்த ஹதீஸ்ல நம்மாளு மேலதிகமாகச் சொன்ன, ‘ஆண்மை இல்லாதவர்னுலாம்’ குறிப்பிடப்படல. இவரா சொன்னதுனால இப்ப வந்தது வென.

ஒமர் பாய். அதவிட சம்சுல்லுஹா இந்த விஷயத்த இப்போ வெளியிட்டு இருக்குறது தான் முக்கியமானதுன்னு நான் நெனக்கிறேன். ஆக ஒருத்தரோட குடுமி இன்னொருத்தர் கைல மாட்டிக்கிட்டிருக்குற மாதிரி தெரியுது.

ஆமாங்க அஹமது. இப்புடித்தான் முன்னால ஒரு தடவ கூட லுஹாவுக்கு எதிரா பிஜே சொன்ன ஒரு விஷயத்துக்காக அப்போ இருந்த அல்முபீன்ல பிஜேவை மறைமுகமா தாக்கி ஒரு கட்டுரை எளுதுனாரு.

என்னமோ நடக்குது போங்க. அது கெடக்கட்டும். தமுமுகவ பத்தி உணர்வுல ஏன் மறுபடியும் உண்மய மறச்சு எளுதியிருக்காங்க.

என்ன இப்புடி கேட்டுட்டீங்க அஹமது. எந்த காலத்துல தமுமுக சம்பந்தப்பட்ட விஷயங்கல்ல முழு உண்மையையும் நாம எளுதியிருக்கோம். இப்போ நீங்க வருத்தப்படுறா மாதிரி என்னத்த எளுதி இருக்காங்க.

அந்த புதுப்பேட்டை சமாச்சாரத்தப் பத்தித்தான் சொல்றேன். புதுப்பேட்டைல தமுமுக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சேதி கெடச்ச உடனேயே மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து பொதுமக்களோடய முழு ஆதரவோட சாலை மறியல்ல ஈடுபட்டு, காவல் துறை கவனத்த ஈர்த்ததுனால, போலீஸும் உடனடியா செயல்பட்டு அந்த ரவுடிகள புடிச்சுட்டாங்க. இந்த நெலமைல எதுக்காக தமுமுக, அரசாங்கத்த எதுத்து போராட்டம் நடத்தனும்னு நம்மாளு பொலம்புறாரோ தெரியல.

இது புரியலயா ஒங்களுக்கு. இதுலாம் அவரே சொல்றமாதிரி அண்ணன் எப்போ போவான் திண்ண எப்ப காலியாகும்கிற கத தான். இவரு முத்துப்பேட்டை ததஜ நிர்வாகி மேல் திமுக அரசு போட்ட கேஸையே, ‘கேஸ் போடக்கூடாதுங்குறதுக்காக போட்ட கேஸ்’ னுலாம் சொல்லிப் பார்த்து, தன்னோட நிர்வாகிய பலி கொடுத்தாவது திமுகவோட நெருங்கிறனும்னு முயற்சி பண்ணுனாரு. கலைஞரு கண்டுக்கல. அந்த எரிச்சல்ல இப்புடி கிண்டி வுடறாரோ என்னமோ.

ஆமாமா. அப்புடித்தான் இருக்கும். இந்த வார கேள்விபதில்ல வந்திருக்குற கேள்விகள எளுதுனவங்களப் பார்த்தாலே இத தெரிஞ்சுக்கிறலாம். ஜாக் பத்துன கேள்விய ஜித்தா ஷிப்லி பேர்லயும், பித்ரா பத்துன கேள்விய ஜுபைல் அப்துல் காதர் பேர்லயும், புதுப்பேட்டை சமாச்சாரத்த ஒரு மெட்ராஸ்காரரு பேர்லயும் போட்டிருக்கிறத பாத்தாலே இது செட்டப்பு கேள்வி பதில்னு வெளங்கிப் போச்சு. தவிர செய்திகளும், சர்குலேசன் மாதிரியே கொறஞ்சு போய்ட்டதுனால இந்த மாதிரி செட்டப்புகளையும், படங்களையும் போட்டுத்தான் பக்கத்த நெரப்ப வேண்டியதிருக்கு. வேற என்ன பண்றது.

இதுல இன்னொரு காமெடியும் இருக்கு கவனிச்சீங்களா. அரசியல் சமுதாயம் ஆன்முகம் சம்பந்தமான கேள்விகளுக்கு பிஜே பதிலளிக்கிறார் போட்டுட்டு, ஜாக் சம்பந்தமான பதில்ல ‘.. .. பிஜே உண்மையைப் போட்டு உடைத்ததில்.. ..’ ன்னு யாரோ 3ஆவது நபர் எளுதுற மாதிரி எளுதியிருக்கிறத சுட்டிக்காட்டி ஜனங்க சிரிக்கிறாங்க. கூடவே பிஜே காட்டிக் கொடுக்க தயங்காதவர்னு பிஜேவே பதிலளிச்சு இருக்கிறதாவும் பேசிக்கிறாங்க போங்க.

சரி உமர் பாய். ஒங்களோட பேசிக்கிட்டிருந்தா நம்ம கத நடக்காது. என்ன தான் இடிச்சாலும் ததஜவோட தலமைக்கு புத்தியே வராது. நான் போய் என்வேலய பாக்கணும். வர்றேன்.

வஸ்ஸலாம்
முல்லா 11.12.2006

திசெம்பர் 9, 2006

தந்தை பெரியார் சிலை உடைப்பு!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:00 முப
தமிழ்பகை – தமிழனுக்கு விடப்பட்ட சவால்

தந்தை பெரியார் சிலை உடைப்பு!!

வன்மையாகக் கண்டிக்கிறோம்!!

தந்தை பெரியார்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை உடைப்பு! அவர் பாதச் சுவடுகள் பதிந்த தமிழ் மண்ணில் சமூக நல்லிணக்க விரோதிகளால் உடைக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

கவிழ்ந்து விட்ட திராவிட தமிழ் இனத்தின் கேடு நீக்க ஒரு நூற்றாண்டைப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பிரச்சார பீரங்கியின் சிலை உடைக்கப் பட்டு இருப்பது ஒவ்வொரு தமிழனின் இதயத்தில் ரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலை வாளினை எடுடா, கொடியோர் செயல் அறவே என்றான் புரட்சிக்கவி. திராவிட பாரம்பரியத்தின் தமிழ் ஆய்ந்த தலைமகன் டாக்டர். கலைஞரின் ஆட்சியில் அரங்கேற்றப்பட்டு இருப்பது வகுப்பு வாத சக்திகளின் விஷ விருட்ஷம் தமிழ் மண்ணை விஞ்சி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. புற்றுக்குள் இருந்த வகுப்புவாத அரவம் மீண்டும் தமிழனுக்கு எதிராக விஷத்தைக் கக்கி இருக்கிறது.

பெரியார் சிலை உடைப்பு தமிழனுக்கு, சமூக ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால். தமிழக அரசே, வாய்மை வெல்லட்டும், தூண்டி விட்டு குளிர் காயும் சமூக நல்லிணக்க விரோதிகளை தமிழ் பகையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசை இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) கேட்டுக்கொள்கிறது.

கருத்துச் சுதந்திரம் மிளிரட்டும்! கயவாலித் தனம் ஒழியட்டும்!! தமிழன் தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்கட்டும்!!!

இவண்

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு.

திசெம்பர் 8, 2006

TMMK கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:11 பிப
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 1992 டிசம்பர் 6 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு டிசம்பர் 6 களிலும் மேலப்பாளையத்தின் உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெகுண்டெலுந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஐ துக்க நாளாக அறிவித்தனர். கறுப்புக் கொடிகளைக் கட்டி கடைகளை அடைத்து பந்த் நடத்தி பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்தனர். இந்த ஆண்டும் மேலப்பாளையத்தில் கடைகளை அடைத்து பந்த் நடத்தி எதிர்ப்பு காட்டியுள்ளனர். மேலப்பாளையம் போன்று உணர்வுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் இது போன்று நடந்திருக்கலாம். இது அன்றி எந்த அமைப்புகளும் 92க்குப் பிறகு அமைப்பின் சார்பில் எந்த டிசம்பர் 6 ரிலும் பாபரி மஸ்ஜித் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை.

அது கிழட்டு நரிகளின் கூடாரமாக ஆகி விட்டது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில ராணுவத்தின் துப்பாக்கி முன் ஆடையை தூக்கிக் காட்டியும் நெஞ்சை நிமிர்த்துக் காட்டியும் சுடுடா என வீரியத்துடன் கர்ஜித்த சிங்கங்கள் இருந்த முஸ்லிம் லீக் இருந்தது. 92இல் அது கிழட்டு சிங்கங்களின் கூடாரமாகக் கூட இருக்கவில்லை. கிழட்டு சிங்கங்களின் கூடாரமாக ஆகியிருந்தால் கூட அது சிங்கங்களின் கூடாரம் என்ற வீரியத்துடன் எதிரிகள் அச்சப்படும் வண்ணம் கர்ஜித்திருப்பர். ஆனால் அது கிழட்டு குள்ள நரிகளின் கூடாரமாக ஆகி இருந்தது. எனவே சடங்கு சம்பிரதாயத்துக்காக 92இல் மட்டும் அறிக்கை விட்டனர்.

எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது.

அதனால் 92க்குப் பிறகு பாபரி மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம் லீக் மய்யத் லீக்கானது. எனவே டிசம்பர் 6இல் கூட பாபரி மஸ்ஜித் பற்றி சட்டமன்றம் பாராளுமன்றம் உட்பட நாட்டில் எங்குமே பேச நாதி இல்லை என்ற நிலை ஆனது. அல்லாஹ்வின் அருளால் 1995இல் வீறு கொண்டெழுந்தவர்களால் புணர் நிர்மானம் செய்யப்பட்ட த.மு.மு.க. உருவானது. த.மு.மு.க. தான் முதன் முதலில் அமைப்பு சார்பான எதிர்ப்பைக் காட்டியது. பாபரி மஸ்ஜித்துக்காக தமிழகத்தில் த.மு.மு.க. குரல் எழுப்பிய பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6களில் சட்ட மன்றம் பாராளுமன்றம் என எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது. சட்ட மன்றத்தில் தேசிய லீக் லத்தீப் ஸாஹிபும் பாராளுமன்றத்தில் பனாத்வாலாவும் குரல் கொடுத்தனர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி.

1996இல் இருந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து லோக்சபாவையும் ராஜ்யசபாவையும் ஒத்தி வைக்குமாறு இடதுசாரி கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இதை 7 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து செய்து வந்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளி என்ற செய்தி ஊடகங்களில் கண்டு வந்தோம். அப்பொழுதெல்லாம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட தமிழ்நாட்டிலிருந்து பாராளு மன்றத்துக்கு சென்றிருக்கவில்லை.

2004இல் எதுவும் நடக்கவில்லை.

15ஆண்டுகளுக்கு (1989க்குப) பிறகு 2004இல் மு.லீக் தலைவரான காதர் மைதீன் என்பவர் உட்பட 2முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குச் சென்றனர். உணர்வுள்ள முஸ்லிம்களின் அமைப்பான த.மு.மு.க.வின் பேராதரவில் வென்ற முஸ்லிம் எம்.பி.க்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து விட்டனர். இனி அவர்கள் கர்ஜிப்பார்கள் என்று இடதுசாரிகள் எண்ணினார்களோ என்னவோ? 2004இல் இடதுசாரிகள் எதுவும் பேசவில்லை. காதர் மைதீனோ கிதர்(எங்கே) மைதீன் (என்று) ஆகி விட்டார். எனவே இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் எதுவும் நடக்கவில்லை.

பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.

இருந்தாலும் டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்திய பேரணி. த.மு.மு.க. தலைவர்கள் பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்து பாபரி மஸ்ஜித்தைக் கட்டித் தரக் கோரினார்கள். தமிழக எம்.பி.க்களில் முஸ்லிம் அல்லாத எம்.பி.க்களும் த.மு.மு.க. தலைமையின் கீழ் டெல்லியில் அணிவகுத்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் மக்களவையிலும் மாநிலங்களவையிலும்; அமளி நடைபெறாதது சமுதாயத்துக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. த.மு.மு.க.வின் டெல்லி பேரணி மக்களவை மாநிலங்களவை அமளிகளை விட பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.

சமுதாயம் அமைதி பெற்றது.

2005லும் த.மு.மு.க. டெல்லி செல்லும் என்று சமுதாயம் எதிர் பார்த்தது. த.மு.மு.க. அறிவிக்கும் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பலர் குளிர் ஆடைகளையும் வாங்கி தயாராக வைத்திருந்தனர். சில தூர நோக்கத்துடன் மீண்டும் டெல்லி சென்று போராடும் திட்டத்தை த.மு.மு.க. தவிர்த்தது. 2005லும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் நடந்த போராட்டங்களை மட்டும் கண்டு சமுதாயம் அமைதி பெற்றது.

இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.

2001-2006 வரையிலான சட்ட சபையில் மு.லீக் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் இருக்கவில்லை. இப்பொழுது இருக்கிறார்கள் தேசிய லீக் லத்தீப்புக்குப் பிறகு மு.லீக்கர்கள் பாபரி மஸ்ஜிதுக்காக டிசம்பர் 6இல் சட்ட மன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று பலர் நம்பி இருந்தனர். (நாம் நம்பவில்லை என்பது தனி விஷயம்.) மக்கள் எதிர் பார்த்தபடி தமிழக சட்ட மன்றம் அமளியானது. ஆனால் அது அ.தி.மு.க.வினர் கொண்டு வந்த இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.

நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.

2006 டிசம்பர் 6 மதியம் தொலைக் காட்சிகளில் மக்களவை மாநிலங்களவை அமளி காட்சிகளைக் காட்டினார்கள். ஆ பாராளு மன்றத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலிக்கிறது என்று மகிழ்ந்தார்கள். தலைப்புச் செய்தியிலும் ஷஷபாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி மக்களவை மாநிலங்களவைகளில் அமளி என்றுதான் சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்ப்பு காட்டி விட்டார்கள் என்றே நம்பி மகிழ்ந்தது நம் சமுதாயம். விரிவான செய்தியைக் கேட்டதும் நம் சமுதாயத்தவர் மனங்கள் இடிந்து விட்டன. வழக்கம் போல் நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.

இக்கதி ஏற்பட்டிருக்குமா?

7 ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து அமளி நடந்த பாராளுமன்றம் திசை திரும்பி விட்டது. பாபரி மஸ்ஜிதை கட்டித் தர வேண்டும் என்ற குரல் ஒலிக்க வேண்டிய பாராளு மன்றத்தில் பள்ளி இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற குரல் ஒலித்து திசை திரும்பியுள்ளது. உயிரை பணயம் வைத்து உழைக்கும் த.மு.மு.க. தொண்டர்கள் உழைப்பின் மூலம் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் யார் யாரையோ அனுப்பி விட்டதால்தான் இக்கதி. த.மு.மு.க. சார்பிலான உண்மையான முஸ்லிம்கள் உணர்வுள்ள முஸ்லிம்கள் சுய சின்னத்தில் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் சென்றிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்குமா?

பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.

எனவே சட்ட மன்றம் பாராளு மன்றம் உட்பட ஆட்சித் துறை அனைத்துக்கும் த.மு.மு.க.வினர் செல்ல வேண்டும். தேர்தலில் த.மு.மு.க. போட்டியிட வேண்டும். இது 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்ட பத்வாவின் தாக்கத்திலிருந்து த.மு.மு.க. விடுபட வேண்டும். தேர்தலில் களப் பணி ஆற்றினால் ஈமான் போய் விடும் என்று 2004இல் பத்வா கொடுத்தவர்தான் பி.ஜெ. அது பிராடுத்தனமான பத்வா என்பதை த.மு.மு.க. 2004இல் களப்பணி ஆற்றி நிரூபித்தது. பிறகு களப் பணி பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே 2005இல் தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.

அது போல் தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க அறிவித்து விட்டால். அடுத்து பி.ஜெ.யும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அவரே தேர்தலில் நின்று விடுவார். 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க. விரைந்து எடுத்தாக வேண்டும் என்பதே. இந்த முடிவை எடுப்பதில் கால தாமதம் செய்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். சட்ட ரீதியாக போராட த.மு.மு.க. வந்த பின்தான் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுபவர்கள் ஒதுங்கினார்கள். இதை த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றுமுள்ள தலைமைப் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

திசெம்பர் 7, 2006

முகவையில் டிசம்பர் ஆறு (MUGAVAI)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:11 பிப
முகவையில் டிசம்பர் ஆறு

மேடையில் கண்டன கோஷங்கள் முழங்கும் தமுமுக நிர்வாகிகள்

முகவை மாவட்ட தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6-ந்தேதியை முன்னிட்ட பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி யும் ராமநாதபுரம் அரசு போக் கு வரத்து கழக டெப்போ எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது பாபர் மஸ்ஜித் இடிப்பு விசாரனை நடத்திய லிபர்ஹான் கமிஷனின் விசாரனை முடிவுகளை வெளியிட வலியுருத்தியும், ரத யாத்திரை என்ற பெயரில் அத்வானி நடத்திய ரத்த யாத்திரை மூலம் நாடெங்கும் பல உயிர்கள் சூரையாடப்பட்டு 400 ஆண்டு கால வரலாற்று சின்னமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த துயர தினத்தை நிணைவு கூர்ந்தும் இந்திய அரசயில் சாசனத்தை கொலை செய்த அயோக்கிய ஹிந்து வெறி கும்பலான அத்வானி, பள்ளிவாசல் இடிக்கப்பட்ட போது கட்டிப்பிடித்து களிநடனம் ஆடிய பென் சன்னியாசி உமா பாரதி, முரளி மனோகர் ஜோஸி, சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்து நீதியை நிலை நாட்ட கோரியும் தமுமுக சார்பில் நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமுமுக வின் மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சமது அவர்கள் கழந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். பாம்பன், மன்டபம், இராமேசுவரம், கீழக்கரை, பனைக்குளம், பெரியபட்டினம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் தங்களின் கண்டனத்தை தெறிவிக்கவும் நீதி கோரியும் வந்து கோஷங்கள் எழுப்பியது அதிசயிக்கத் தக்கதாக இருந்தது.

கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி

தமுமுக வின் மாநில செயளாலர் ஜனாப் அப்துல் சமது அவர்கள் உரையாற்றுகையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட துயர வரலாற்றை நிணைவு கூர்ந்தார்கள் அத்துடன் பாதிக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம்களுக்கு நயாயம் கிடைக்க மத்தியில் பதவியில் உள்ள அரசுகள் ஆவன செய்திட வேண்டும் என்றும், தொடாந்து நீதி இந்த சமுதாயத்திற்கு மறுக்கப்பட்டு வருமானால் ஒரு நாள் இந்த சமுதாயம் தானே நீதியை உஎடுத்துக்கொள்ள நேரிடும் அதற்கு ஒருக்காலும் இந்த சமுதாயம் அஞ்சாது என்று கூறியபோது அல்லாஹீ அக்பர் என்ற குரல் வின்னைத் தொட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக வின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் அவர்கள் தலைமை தாங்கினார்கள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, பொரு ளாளர் சைபுல்லா, துணை தலை வர் ஹுமாயுன் கபீர், துணை செய லாளர் அஜ்மல்கான், மருத்துவ அணி செயலாளர் பாக்கர், மக் கள் தொடர்பாளர் பீர் முக மது ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி செயலாளர் அன் வர், ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் ருகைபு, மண்டபம் ரசூல்கான், போகலூர் அப்தா கீர், பரமக்குடி அப்பாஸ், ராம நாதபுரம் நகர் தலைவர் சுல் தான், நகர் செயலாளர் சாகுல் உள்பட பல்வேறு கிளைகளில் இருந்து த.மு.மு.க.வினரும், ஜமாத் தார்களும், முஸ்லிம் சங்கத்தினர் களுமாக ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

கூடிய பெண்களும் குழந்தைகளும்

அத்துடன் தமிழகமெங்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முஸ்லிம் ஜமாத்தினர்களையும், சங்கங்களையும், அமைப்புக்களையும் ஒன்றினைத்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்பாட்டம் செய்து கைதாகினர்.

மேலப்பாளையத்தில் தமுமுக வின் மாநில செயலாளர் ஜே.எஸ் ரிபாயி தலைமையில் தடையை மீறி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுல்த்தான் அமீர் உள்பட தமுமுக வின் நிர்வாகிகளும் ஜமாத்தினர்களுமாக சுமார் 800 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கைதாகினர்.

பேனர் ஏந்திய பெண்கள்

பொள்ளாச்சியில் தமுமுக வின் மாநில செயலாளர் தலைமையில் தடையை மீறி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் உள்பட தமுமுக வின் நிர்வாகிகளும் ஜமாத்தினர்களுமாக சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கைதாகினர்.

ஊட்டியில் தடையை மீறி ஆர்ப்பாட்டமும் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கும் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வழங்க கோரியும் மாபெரும் கடையடைப்பும் நடத்தப்பட்டது. அத்துடன் தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தின சிந்தனை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:00 பிப
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

1992 டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தின சிந்தனை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்து இடிக்கப்பட்ட மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள் 1992 ஆம் ஆண்டு தமிழத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு மேலப்பாளையத்தில் மட்டும்தான் துப்பாக்கி சூடு நடந்தது.

பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்.

1992 டிசம்பர் 7இல் நடந்த அந்த துப்பாக்கி சூட்டுக்கு இறையாகி இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்;. 25 இஸ்லாமிய இளைஞர்கள் படு காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த 40 இஸ்லாமிய இளைஞர்கள் மீது அநியாயமாக பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப் பணமாக உதவிட இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் அனுப்பிக் கொடுத்தோம்.

கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில்

மேலும் வழக்கு வகைகளுக்கு, சிறையில் உள்ளவர்களை அடிக்கடி சென்று பார்த்து ஆறுதல் கூறி வருவதற்கு, கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் வசதிகள் செய்தி கொடுத்திட என அவ்வப்போது பணம் அனுப்பிக் கொடுத்தோம். மொத்தம் 3 இலட்சம் ரூபாய் வரை அனுப்பிக் கொடுத்து உதவினோம்.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ.

இந்த உதவிகளை முன்னின்று செய்திட முதலில் மவுலவி பி.ஜெ.யை அணுகினோம். பணத்தை உங்களுக்கு அனுப்பித் தருகிறோம். ஜாக் சார்பில் நீங்கள் வினியோகியுங்கள். இதன் மூலம் தவ்ஹீதுவாதிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்புகள் நீங்கும் என்றோம். தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ. மறுத்து விட்டார்.

கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர் பி.ஜெ. என்பதை என்றும் உறுதியாகக் கூறுவோம். இதுபோன்ற உதவிகளை முன்னின்று செய்ய மறுத்த பி.ஜெ. இன்று தகுதியற்ற உதவிகளை செய்வதுபோல் காட்டி டி.வி. கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே இதற்கு போதிய ஆதாரங்களாகும். இதை 6-4-2002இல் பி.ஜெ.க்கு எழுதிய 25 பக்க கடிதங்கள் என்று பிரபலமான கடிதத்திலும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன.

1992 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை முன்னின்று செய்திட பி.ஜெ. மறுத்ததால் மேலப்பாளையம் சர்வ கட்சியினர் மூலம் உதவினோம். வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி குற்றவாளிகளுக்கு உதவி விட்டார் என சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன. போலீஸ் விசாரணை ஐ.பி. என பிரச்சனை ஆனது. இதனால் எமது தாயகப் பயணம் காலதமதமானது. 1991 ஜுலையில் துபை வந்த நாம் இதை சரி செய்து தயாகம் செல்ல 1994 ஆகஸ்டு ஆனது. தாயகம் சென்ற நாம் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் சிலரை நேரில் கண்டு ஆறுதல் கூறினோம்.

எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

அப்பொழுது ஒருவர் வந்து ஷஷஎன் பெயர் அமானுல்லாஹ். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு யாரும் உதவவில்லை. அரசாங்கத்தின் உதவியும் கிடைக்கவில்லை. நீங்கள் அனுப்பிய உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. நான் போய் கேட்டதற்கு இலாஹி அனுப்பிய லிஸ்ட்டிலும் உன் பெயர் இல்லை என கூறி விட்டார்கள் என்றார். மேலப்பாளையத்தைச் சார்ந்த அவர் 1992 டிசம்பர் மாதம் பம்பாயில் இருந்துள்ளார். அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட அவர் உயிரைக் காத்துக் கொள்ள மேலப்பாளையம் வந்து விட்டார். அதனால் மராட்டிய அரசு உதவி, தமிழக அரசு உதவி உட்பட எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

எனவே ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் அவருக்கு உதவிகள் செய்தோம். அவரது நெற்றியில் பாய்ந்த குண்டு அப்படியே தலையில் மூளைக்கு அருகில் தங்கி விட்டது. அதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மூளைக்கு அருகில் அந்த குண்டு இருப்பதால் அதை ஆபரேஷன் செய்து எடுப்பது மிக மிக கடினம். ஆபரேஷன் செய்ய அவரிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

ஆபரேஷன் செய்து குண்டை எடுக்கும்போது மூளையின் ஏதாவது ஒரு நரம்பு பாதித்து விட்டால் காலோ, கையோ, கண்ணோ செயல் இழந்து விடும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். குடும்பத்தாரிடம் கலந்து விட்டு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம். ஆபரேஷன் செய்யப்பட்டது. குண்டை எடுக்க முடியவில்லை. அவரது மனம் பாதித்து விடக் கூடாது என்பதற்காக டாக்டரின் ஆலோசனைப்படி குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார்.

இருந்தாலும் காலப் போக்கில் குண்டு எடுக்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்து விட்டார். அடிக்கடி பிக்ஸ் வந்து விடுகிறது. விலை உயர்ந்த 400 ரூபாய் ஊசி போட்டால் ஓரிரு வாரங்களுக்கு பிக்ஸ் வருவதில்லை. இந்த ஊசி போடக் கூட வழி இல்லாமல் அவ்வப்போது யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார். 1992 டிசம்பர் 6 இந்தியாவில் இது மாதிரி எத்தனை இளைஞர்களை உருவாக்கி விட்டதோ?

குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1947இல் மேலப்பாளையம் ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. அதன் பிறகு 1992 டிசம்பரில் அதே ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு இழுத்துச் சென்ற பரிதாப காட்சிகள் பத்திரிக்கைகளில் வந்தன.

500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த அவலங்களைக் கண்ட நாம் யு.ஏ.இ. வாழ் மேலப்பாளையம் முஸ்லிம்கள் சார்பாக ஒரு கடிதம் எழுதினோம். இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு முஸ்லிம்களையும் அரசியல் அளவில் ஒரே அமைப்பின் கீழ் ஒன்று படுத்த வேண்டுதல் என்ற தலைப்பிட்டு அந்தக் கடிதத்தை எழுதி இருந்தோம். 10-12-1992 அன்று எழுதிய அந்தக் கடிதக் காப்பிகளை பி.ஜெ, சமது சாகிப், லத்தீப் சாகிப், சுலைமான்சேட், பனாத்வாலா, மு.லீக் சமது அணி, முஸ்லிம் லீக் லத்தீப் அணி என நமது சமுதாயத்தின் எல்லா அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்குமாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம். (குறிப்பு: அப்பொழுது த.மு.மு.க. இருக்கவில்லை)

உண்மையான சமுதாய பற்றாளர் யார்?

சமுதாய ஒற்றுமை நோக்கில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்திற்கு யாரிடமிருந்தும் பதில் வரவே இல்லை. ஒரே ஒருவரிடமிருந்துதான் பதில் வந்தது. அந்த ஒரே ஒருவர் யாராக இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உத்தமர், பெருந்தகை, இவர்தான் உண்மையான மில்லத் என்று நீங்கள் எண்ணக் கூடியவர்களில் யாராவது இருப்பார்களா? நினைத்துப் பாருங்கள். ;. உண்மையான சமுதாய பற்றாளர் யார் என்ற விடை காணவும் நாம் எழுதிய கடிதத்தைக் காணவும்

அன்புடன்: காஅ.முஹம்மது பஸ்லுல் இலாஹி.

திசெம்பர் 6, 2006

தமிழகம் – டிசம்பர் 6 ஆர்ப்பாட்டங்கள்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:10 பிப
தமிழகம் – டிசம்பர் 6 ஆர்ப்பாட்டங்கள்

தமுமுக நடத்திய டிச.6 ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை துச்சமென மதித்து, காவல்துறையும், ராணுவமும் முன்னிலை வகிக்க, ஒட்டு மொத்த உலகையே சாட்சியாக வைத்து இந்துத்துவ வெறியர்கள் இடித்து தள்ளினார்கள் அல்லாஹ்வின் ஆலயமான பாபரி மஸ்ஜிதை. 400 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாபரி மஸ்ஜிதை மதவெறி பிடித்த ஃபாசிச பயங்கரவாதிகள் இடித்து தள்ளிய கறுப்பு நாளான டிசம்பர் 6 அன்று தமிழகமெங்கும் அணைத்து ஜமாத்தினர்களையும் முஸ்லி்களையும் திரட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தியது.

தமிழகமெங்கும் நடத்தப்பட்ட இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் கூடி நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். லிபர்ஹான் ஆணைய விசாரனை முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கோவை உமர் அவர்கள் உரையாற்றுகிறார்கள்

அது போல் பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஸி, உமா பாரதி கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் ஆர்ய சக்திகளுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் அடங்கி போகமாட்டார்கள் என்றும் இவார்ப்பாட்டங்களில் தெளிவாக உரைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

கோவையில் மாநில செயலாளர் உமர் அவர்கள் தலைமையிலும் மாவட்ட தலைவர் பஷிர் அஹமது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், அஸ்ரப் ஆகியோர் மேற்பார்வையிலும் இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த பல்வேறுபட்ட ஜமாத்தினரும் அமைப்பினரும் கழந்து கொண்டனர். சிறுபான்மை அறக்கட்டளையின் சார்பாக அதன் நிர்வாகிகள் அபுத்தாஹிர், கலீல், தங்கப்பா ஆகியோர் கழந்து கொண்டனர். மேலும் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் ஆண்களும் பெண்களுமாக கூடி நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தது காண்போர் கவணத்தை கவர்வதாக அமைந்திருந்தது.

இராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான மேலதிக செய்திகள் புகைப்படங்களுடன் விரைவில் புதுப்பிக்கப்படும்.

செய்தி மற்றும் புகைப்படங்கள் : கோவை தங்கப்பா

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 12

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:47 முப

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன போன தடவ அவசரமா ஓடிப்போயிட்டீங்க.

கொஞ்சம் வேலையிருந்துச்சு. அதான் அவசரமாப் போனேன். ஏன் எதாவது சேதி கலந்துக்குறதுல விடுபட்டுப் போச்சா.

அது வேற ஒண்ணுமில்ல. நம்ம உணர்வு பத்திரிக்க சம்பந்தமா ஒரு டவுட்டு.

கேளுங்க அஹமது.

அதாவது ஒமர் பாய். உணர்வுல தமுமுக ஆளுங்கள பாராட்டிலாம் இப்ப சேதி வருதே என்ன சமாச்சாரம்.

என்ன சொல்றீங்க. அஹமது! எப்ப அப்புடி ஒரு சேதி வந்துச்சு. சான்ஸே இல்லயே. வழமையா நாம தமுமுக காரன் செய்ற எந்த நல்ல செயலையும் ஏத்துக்கவே மாட்டோமே. அதுல எதாவது நொட்டு, நொள்ள சொல்ல முடியுமான்னு தானே பார்ப்போம். நீங்க வேற எதயோ பாத்துட்டு தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல.

சே.சே. அப்புடிலாம் கெடயாது. நான் சொல்றது நெசம் தான். போன வார உணர்வுல ஒரு சின்ன பையன் தஜ்வீது முறைப்படி ஓதி குர்ஆன் மனனப் போட்டியில முதல் பரிசு வந்ததா ஒரு நியூஸ் போட்டிருந்தாங்களே அதத்தான் சொல்றேன்.

ஹ்ஹாஹா.. ..அதுக்கும் தமுமுகவுக்கும் என்னங்க சம்பந்தம். ஏன் இப்புடி கெடந்து கொளப்புறீங்க.

அதுசரி. அப்ப ஒங்களுக்கு விஷயமே தெரியாதா. அந்த சின்ன பையன் சவுதில உள்ள அல் அஹ்ஸாங்குற பகுதி தமுமுக கிளை நிர்வாகியோட பையனாம். மக்கள் உரிமைல போட்டிருந்தாங்களே பாக்கலியா.

அப்புடியா சேதி. நம்மாளுங்க இந்த விவரத்த மறைச்சுட்டாங்களா. இப்புடித்தான் முன்னால ஒரு தடவ தமுமுக கார வக்கீல் ஒருத்தரோட ஆர்க்யூமெண்ட்டால, முஸ்லிம்களுக்கு சாதகமா ஒரு தீர்ப்பு வந்தப்ப விஷயத்தை மட்டும் எளுதிட்டு, யாரால அப்புடி ஒரு சாதகமான தீர்ப்பு வந்துச்சோ, அதுக்கு காரணமானவரு தமுமுக காரருங்குறதுனால மறைச்சாங்க.

அப்புடியா. இதுக்கு முன்னாலேயும் இதே மாதிரி நடந்துருக்கா. பேசாம தமுமுக காரங்க சம்பந்தபட்ட விஷயங்கள எளுதாம இருந்தாலே நல்லதுன்னு நெனக்கிறேன். அவுங்களோட சின்ன, சின்ன தவறுகளய்லாம் ஊதி பெருசாக்க நெனச்சு எளுதுறாங்க. அப்புறமா அது வெடிச்சு சுயிங்கம் மாதிரி நம்ம மூஞ்சிலேயே ஒட்டிக்கிறுது. அத தொடக்கிறதுக்கே நமக்கு போதும் போதும்னு ஆகிடுது. இந்த நெலமைல தமுமுகவோட நல்ல வெசயத்த எளுதி அதுலயும் கொஞ்சம் மறைக்கப்பட்டிருக்குனு மக்கள் புரிஞ்சுக்கிடணுமா.

நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க அஹமது. குர்ஆனையே தனக்கு சாதகமா வளைச்சவுங்க, ஹதீஸையே தனக்கு சாதகமாக மறைச்சவங்க நம்ம தலைவரு, இத மறைச்சதப் பத்தி ஏன் ஃபீல் பண்றீங்க. தனக்கு சாதகமா குர்ஆனையும் ஹதீஸையும் மறைக்கும் போது இதச் செய்ய ஏன் கூச்சப்படப் போறாரு.

அதுவுஞ் சரிதான் ஒமர் பாய். இப்போ ஹஜ் சீஸன் ஆரம்பிச்சுடுச்சே. இதுல போன தடவ நம்ம தலைவரு ஒரு ஃபத்வா குடுத்தாரே அதனோட நெலம என்ன தெரியுமா.

முதல்ல ஃபத்வாவே என்னன்னு மறந்து போச்சு. இந்த லட்சணத்துல அதனோட இப்போதய நெலம என்னன்னு கேட்டா நா என்ன சொல்றது.

அதாவது கடந்த மொற ஹஜ்ல, ஜம்ரத்துக்கு பக்கத்துல ஏற்பட்ட நெரிசல்ல பல நூறு ஹாஜிகள் வஃபாத்தானாங்கல்ல, அப்போ அந்த மாதிரி விபத்துகள் ஏற்படாம தடுக்கணும்னா என்ன செய்யனும்னு நம்ம தலைவரு உணர்வுல எளுதுனாருல அதப்பத்தி தான் கேக்குறேன்.

ஓ அதுவா. அது சம்பந்தமா அப்பவே பலபேரு அந்த கருத்த எதுத்ததுனால, நம்மாளு மூச்சடைச்சு போயிட்டாரே, ஜம்ரத்ல கல்லெறியுறதுக்கு தேச வாரியாக நேரம் ஒதுக்கி ஆளுங்கள அனுப்பனும்னும், கல்லெறியத் தேவை சைகை செஞ்சா போதும்னும் இவரு சொன்ன ஒடனேயே ஆளாளுக்கு பிச்சு எடுத்துட்டாங்களே.

அத எப்படி ஒமர் பாய். ஒத்துக்க முடியும். ஜகாத் விஷயத்துல இவரு ஒரு பொருளுக்கு ஒரு தடவ குடுத்தால் போதும்னு சொன்னத கொஞ்ச போராவது ஏத்துக்கிட்டாங்க. அதுக்கு கூட அவுங்க அவுங்களோட சுய நலமும், தன்னோட பொருள் மிச்சமாவுதுன்னு சிலர் நெனச்சாரோ என்னவோ. ஆனா இது இபுறாஹீம் (அலை) நபி காலத்துலருந்து வர்ற வழக்கமாச்சே. அப்புடி இவரு இத மாத்தனும்னு நெனச்சாரோ தெரியல.

அதவிட கூத்து என்ன தெரியுமா. இவரு இப்புடி எளுதுன ஒடனேயே ஒரு ஸைட்டுல உணர்வு ஆசிரியரின் அறியாமைன்னு போட்டு நாமெல்லாம் முதறிஞர்னு சொல்றவரு சரியான அபூஜெஹல்னு எளுதி நார்நாரா கிளி கிளின்னு கிளிச்சுட்டாங்க. கூடவே இதுக்குலாம் என்ன காரணம்னா இவரு உம்ராவுக்கோ, ஹஜ்ஜுக்கோ வராதது தான் காரணம்னும் எளுதி இருந்தாங்க.

அதுதானா விஷயம் இந்த வருசம் நம்ம தலவரு தலமையில ஹஜ்ஜுக்கு ஆள கூப்பிட்டுக்கிட்டு போறதா கேள்விப்பட்டேனே.

நானுந்தான் கேள்விப்பட்டேன். ஆனா, ஜம்ரத்து விஷயத்துல இப்புடி தன்னோட இஷ்டத்துக்கு ஃபத்வா குடுத்ததுனால, நம்மாளுங்கலே கூட ஹஜ் கமிட்டி மூலமாவோ, வேற ஏஜென்ஸி மூலமாவோ ஏற்பாடு செஞ்சுட்டதாவும் கேள்விப்பட்டேன்.

அப்ப நம்ம தலைவரு இப்பமும் ஹஜ்ஜுக்கு போகலியா.

என்ன செய்றது. குர்ஆன் தர்ஜமாவுல பண்ணுன கொளறுபடியினால சவுதில இருந்து கூட விசாரிக்கிறதுக்கு கூப்டாங்க. அப்ப போகாம டபாய்ச்சுட்டாரு. இப்போ ஹஜ் விசாவுல போனா திரும்பவும் புடிச்சுக்கிட்டுப் போயி விசாரிப்பாங்களேன்னு பயம். இது தவிர இப்போ லேட்டஸ்ட்டா இந்த ஜம்ரத்து விஷயமும், கூடவே ஏகத்துவத்துல ‘நாம் பின்பற்றுவது தூதரைத் தான், யூதரை அல்ல’ என்று சவுதியை விமரிசித்து எளுதுன விஷயமும் சேர்ந்துக் கிட்டதுனால அங்க போனா திரும்ப இந்தியாவுக்கு வர முடியாதுன்னு பயமும் சேர்ந்திருக்காம். அதுனால போறது டவுட்டு தான். ஒருவேள போனா திரும்பறது அதவிட டவுட்டு தான்.

ம். அப்புடியா சேதி.

சரி சரி, வாய மூடுங்க ஈ நொளஞ்சிடப் போகுது. நான் வர்றேன். பிறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 06.12.2006

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.