தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

திசெம்பர் 11, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 13

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:54 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய் எங்க ரண்டு வாரத்துக்கு மேலா காண முடியலியே.

என்ன அஹமது நக்கல் பண்றீங்களா. நாம தான் போன வாரம் சந்திச்சு பல விஷயங்கள பத்தி பேசிக்கிட்டமே.

நான் ஏன் ஒங்கள நக்கல் பண்ணப்போறேன். நீங்க தான் மக்களயே நக்கல்னு எளுதுறவுங்களாச்சே. நான் கேக்க வந்தது கடந்த 2 வாரத்துக்கும் மேலா நீங்க எளுதி எதுவுமே மெயில் அனுப்பலியே அதச் சொன்னேன்.

ஓ. அதுவா. என்னத்த அஹமது எளுதுறது. எத எளுதுனாலும் வாங்கி கட்டிக்க வேண்டியதிருக்கு. அதுதான் யோசனயாயிருக்கு.

அதுசரி. அப்புடி இப்புடின்னு நம்மள சந்திக்கிறதயும் நிறுத்திடாதீங்க. ஆமா. போனவாரம் இந்த ஹஜ்ஜ பத்தி பேசிக்கிட்டோமே அது சம்பந்தமா எதாவது லேட்டஸ்ட் நியூஸ் இருக்கா.

சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல. ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். எந்த அளவுக்கு சரின்னு தெரியல. அதாவது நம்ம தலவர நம்பி யாருமே கூட வராததுனால, அவரு மட்டும் கேரளாவில இருந்து ஹஜ்ஜுக்கு போகப் போறதா தகவல் கிடச்சிருக்கு.

எங்க இருந்து போனாலும் பரவாயில்ல. முதல்ல ஹஜ்ஜ முடிக்கச் சொல்லுங்க. மொதல்ல தான் ஹஜ்ஜு பண்ண காசில்லன்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. இப்பத்தான் தனக்கு மட்டும்னு இல்லாம குடும்பத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிஸினஸ்னு எல்லோருமே வளமாக்கிக்கிட்டாங்கல்ல. அதுனால முதல்ல ஹஜ்ஜ முடிக்கச் சொல்லுங்க ஒமர் பாய்.

எல்லாம் சரிதான் அஹமது. ஆனா நாம போன வாரமே சொன்னா மாதிரி போனா வருவாராங்கிற டவுட்டு இன்னும் அதிகமாகி கிட்டே போவுதே.

ஏன். இப்ப என்ன புதுசா மொளச்சிருக்கு.

என்னத்த சொல்றது அஹமது. நம்ம ஆளு இந்த ஜெயலலிதா கிட்ட பெட்டி வாங்கி எப்ப கூட்டு வச்சாரோ அப்பவுல இருந்து அந்த அம்மா மாதிரியே எதையாவது சொல்லி வச்சு வம்புல மாட்டிக்கிறாரு. அந்த வகையில போன ஏகத்துவம் பத்திரிக்கைல, ‘நாம் பின்பற்றுவது தூதரைத் தான் யூதரை அல்ல’ ன்னு எளுதி அதுல சவுதி அரசாங்கத்த தாக்கி இருந்தாங்கல்ல,

அதத்தான் போன வாரமே பேசிக்கிட்டோமே, இப்ப கூடுதலா என்ன வந்திருக்கு? அதச்சொல்லுங்க.

அவசரப்படாம கேளுங்க அஹமது. அதத்தான் சொல்ல வர்றேன். இப்ப என்னடான்னா நிகாப் பத்தி எளுதி அது குர்ஆன்லயோ ஹதீஸ்லயோ சொல்லப்படலன்னு எளுதி இருக்காரு. இதப்படிச்சு பார்த்தா போன மாச ஏகத்துவம் சவுதில தடை செய்யப்பட்ட மாதிரி இந்த வார உணர்வும் தடை செய்யப்பட்டுப் போயிடும்னு பயப்படுறேன்.

அப்புடியெல்லாம் ஆகாது. பயப்படாதீங்க. நம்மாளு என்ன அவ்வளவு வௌரமில்லாதவரா. ஏகத்துவம் பத்திரிக்கைல ‘நாம் பின்பற்றுவது தூதரைத் தான் யூதரையல்ல’ ன்னு மவ்லவி சம்சுல்லுஹாவ வச்சு எளுதி வுட்ட மாதிரி, இந்த நிகாப் விஷயத்தையும் குவைத் ஃபைஸல் ங்கிற பேர்ல தான் வெளிவுட்டு இருக்காரு. அப்புடி ஏதாச்சும் பிரச்னை வந்தா, இவுங்கள தள்ளி வுட்டுட்டு தப்ச்சுக்குவார்ல.

அட, ஆமா. இத நான் யோசிக்காம போய்ட்டேனே. இப்புடி ஒரு சிக்கல் இருக்குறதுனால தான் இந்த மாச ஏகத்துவத்துல அப்புடி ஒரு பதில் வெளியாகி இருக்கோ.

அது என்னங்க ஒமர் பாய்.

அதாவது அஹமது, முன்னால ஒரு சமயத்துல பிஜே ஒரு தலாக் விஷயமா கேட்ட கேள்விக்கு பதில் சொல்றப்போ, ‘பிரசுரமாக இருந்தால் நீங்கள் குறிப்பிடுவது போல் தான் உள்ளதா என சரி பார்த்து பதிலளிக்க முடியும். இது ஓர் உரை என நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், சரி பார்க்க இயலவில்லை’ ன்னு எளுதியிருக்காங்க.

இது என்னங்க இது. புது விளக்கமா இருக்கு. அட அப்புடியே இது ஒரு இடத்துல பேசுன பேச்சுன்னா, தமுமுகவோட உபகாரங்கள வச்சு நடக்குற பாக்கர்ர மீடியா வெர்ல்ட்லயோ அல்லது நம்ம தலவரு ஆரம்புச்ச மூன் மீடியாவுலயோ கேட்டு வாங்கி செக் பண்ண வேண்டியது தான. இல்லாட்டி அவரு கிட்டயே ஃபோனப் போட்டு கேக்க வேண்டியது தானே. செக் பண்ண முடியலைன்னு சொன்னா அதுல என்னமோ வில்லங்கம் இருக்குதுன்னு வெளங்குது.

அதே தான். இதப் படிச்ச ஒவ்வொரு தமுமுக காரனும் இப்புடி வெளங்கிக் கிட்டதுனாலதான ஃபோன் போட்டு நம்மள்ட்ட குசலம் விசாரிக்கிறானுக. இவரு இப்புடி ஹதீஸ வெளங்கப் படுத்துறேன்னுட்டு வலிஞ்சு என்னத்தயாவது சொல்லி வாங்கி கட்டிக்கிறாரு. ஏகத்துவத்துல அந்த வாசகர் குறிப்பிட்டிருந்த ஹதீஸ்ல நம்மாளு மேலதிகமாகச் சொன்ன, ‘ஆண்மை இல்லாதவர்னுலாம்’ குறிப்பிடப்படல. இவரா சொன்னதுனால இப்ப வந்தது வென.

ஒமர் பாய். அதவிட சம்சுல்லுஹா இந்த விஷயத்த இப்போ வெளியிட்டு இருக்குறது தான் முக்கியமானதுன்னு நான் நெனக்கிறேன். ஆக ஒருத்தரோட குடுமி இன்னொருத்தர் கைல மாட்டிக்கிட்டிருக்குற மாதிரி தெரியுது.

ஆமாங்க அஹமது. இப்புடித்தான் முன்னால ஒரு தடவ கூட லுஹாவுக்கு எதிரா பிஜே சொன்ன ஒரு விஷயத்துக்காக அப்போ இருந்த அல்முபீன்ல பிஜேவை மறைமுகமா தாக்கி ஒரு கட்டுரை எளுதுனாரு.

என்னமோ நடக்குது போங்க. அது கெடக்கட்டும். தமுமுகவ பத்தி உணர்வுல ஏன் மறுபடியும் உண்மய மறச்சு எளுதியிருக்காங்க.

என்ன இப்புடி கேட்டுட்டீங்க அஹமது. எந்த காலத்துல தமுமுக சம்பந்தப்பட்ட விஷயங்கல்ல முழு உண்மையையும் நாம எளுதியிருக்கோம். இப்போ நீங்க வருத்தப்படுறா மாதிரி என்னத்த எளுதி இருக்காங்க.

அந்த புதுப்பேட்டை சமாச்சாரத்தப் பத்தித்தான் சொல்றேன். புதுப்பேட்டைல தமுமுக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சேதி கெடச்ச உடனேயே மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து பொதுமக்களோடய முழு ஆதரவோட சாலை மறியல்ல ஈடுபட்டு, காவல் துறை கவனத்த ஈர்த்ததுனால, போலீஸும் உடனடியா செயல்பட்டு அந்த ரவுடிகள புடிச்சுட்டாங்க. இந்த நெலமைல எதுக்காக தமுமுக, அரசாங்கத்த எதுத்து போராட்டம் நடத்தனும்னு நம்மாளு பொலம்புறாரோ தெரியல.

இது புரியலயா ஒங்களுக்கு. இதுலாம் அவரே சொல்றமாதிரி அண்ணன் எப்போ போவான் திண்ண எப்ப காலியாகும்கிற கத தான். இவரு முத்துப்பேட்டை ததஜ நிர்வாகி மேல் திமுக அரசு போட்ட கேஸையே, ‘கேஸ் போடக்கூடாதுங்குறதுக்காக போட்ட கேஸ்’ னுலாம் சொல்லிப் பார்த்து, தன்னோட நிர்வாகிய பலி கொடுத்தாவது திமுகவோட நெருங்கிறனும்னு முயற்சி பண்ணுனாரு. கலைஞரு கண்டுக்கல. அந்த எரிச்சல்ல இப்புடி கிண்டி வுடறாரோ என்னமோ.

ஆமாமா. அப்புடித்தான் இருக்கும். இந்த வார கேள்விபதில்ல வந்திருக்குற கேள்விகள எளுதுனவங்களப் பார்த்தாலே இத தெரிஞ்சுக்கிறலாம். ஜாக் பத்துன கேள்விய ஜித்தா ஷிப்லி பேர்லயும், பித்ரா பத்துன கேள்விய ஜுபைல் அப்துல் காதர் பேர்லயும், புதுப்பேட்டை சமாச்சாரத்த ஒரு மெட்ராஸ்காரரு பேர்லயும் போட்டிருக்கிறத பாத்தாலே இது செட்டப்பு கேள்வி பதில்னு வெளங்கிப் போச்சு. தவிர செய்திகளும், சர்குலேசன் மாதிரியே கொறஞ்சு போய்ட்டதுனால இந்த மாதிரி செட்டப்புகளையும், படங்களையும் போட்டுத்தான் பக்கத்த நெரப்ப வேண்டியதிருக்கு. வேற என்ன பண்றது.

இதுல இன்னொரு காமெடியும் இருக்கு கவனிச்சீங்களா. அரசியல் சமுதாயம் ஆன்முகம் சம்பந்தமான கேள்விகளுக்கு பிஜே பதிலளிக்கிறார் போட்டுட்டு, ஜாக் சம்பந்தமான பதில்ல ‘.. .. பிஜே உண்மையைப் போட்டு உடைத்ததில்.. ..’ ன்னு யாரோ 3ஆவது நபர் எளுதுற மாதிரி எளுதியிருக்கிறத சுட்டிக்காட்டி ஜனங்க சிரிக்கிறாங்க. கூடவே பிஜே காட்டிக் கொடுக்க தயங்காதவர்னு பிஜேவே பதிலளிச்சு இருக்கிறதாவும் பேசிக்கிறாங்க போங்க.

சரி உமர் பாய். ஒங்களோட பேசிக்கிட்டிருந்தா நம்ம கத நடக்காது. என்ன தான் இடிச்சாலும் ததஜவோட தலமைக்கு புத்தியே வராது. நான் போய் என்வேலய பாக்கணும். வர்றேன்.

வஸ்ஸலாம்
முல்லா 11.12.2006

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: