தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 31, 2007

அரசு மற்றும் தமுமுக வின் கவனத்திற்கு…(URGENT)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:29 பிப
தமிழக அரசும் தமுமுக வும் கவனிக்குமா?

தனது கைக்குழந்தையுடன் நிலோஃபர் நிஷா

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்களால் மறக்க இயலாதது கடந்த 16.09.2006 அன்று மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரசு பேருந்தில் சமூக விரோதி ஒருவனால் குத்தி கொல்லப்பட்ட பைசுல் ரஹ்மானின் படுகொலையையும் அன்று 8 மாத கற்பினியாக இருந்த அவரது மனைவி நிலோஃபர் நிஷாவின் கதறலையும். நமது வலைத்தளத்தில் தான் முதன் முறையாக இந்த செய்தி வெளியிடப்பட்டது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சமூக விரோதியை கைது செய்யவும் இந்த படுகொலையால் பாதிக்கப்பட்ட பைசுல் ரஹ்மானின் இளம் விதவையும் கற்பினியுமாக இருந்த நிலோஃபர் நிஷாவிற்கு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரன நிதியில் இருந்து உதவி வழங்கவும் கோரியிருந்தோம்.

சம்பவம் நடந்த அன்று அதே கோவையில் ஜே.பி மஹாலில் நடைபெற்ற தமுமுக வின் செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்த தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் மற்றுமுள்ள தமுமுக தலைவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று பைசுல் ரஹ்மாதனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அடுத்த நாள் நடைபெற்ற பைசுல் ரஹ்மானின் உடல் நல்லடக்கத்தின்போது தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் அதன் தலைவர்களும் தொன்டர்களும் திரளாக கலந்து கொண்டனர் அதன் பின்னர் மையவாடியில் நடத்திய உரையில் தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் அதன் மற்ற தலைவர்களும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும் பைசுல் ரஹ்மானின் குடும்பத்தாருக்கும் அவரது மனைவி நிலோஃபர் நிஷாவிற்கும் உதவிகள் வழங்க தமுமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் வாக்குறுதிகள் அளித்து உரை நிகழ்த்தினர்.

மையத்தின் முன் தமுமுக தலைவர்

அதன் பின்னர் அன்று மாலை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமுமுக தலைவர் ஜனாப் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக செயற்குழுவில் பைசுல் ரஹ்மானின் படுகொலையை கண்டித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், கோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்றும் பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது என்றும் படுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை கோரியும் கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

அன்று கணவரது மையத்தை பார்த்து கதறும் கற்பினி நிலோபர் நிஷா

அதன் பின்னர் சமூக நலத்தொன்டர்கள் உதவியுடன் குற்றவாளிளை கைது செய்ய கோரியும், கணவரை இழந்து வருமையில் வாடும் தனக்கும் தனது கணவரின் தாயாருக்கும் நிவாரான நிதி உதவி வழங்க கோரியும் தமிழக முதல்வருக்கும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் இன்ன பிற அதிகாரிகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார் பைசுல் ரஹ்மானின் விதவை நிலோஃபர் நிஷா. அதன் நகலும் தமுமுக தலைமைக்கு அனுப்ப பட்டுள்ளது.

முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தை படிப்பதற்கு


முதல்வருக்கு அனுப்பிய கடிதம்

பின்னர் அவருக்கு பிரசவத்தில் அழகான குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது, பிரசவ செலவு உள்பட பலதையும் தாங்கி கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்ட அந்த குடும்பம் மிகவும் கஷட்டமான சூழ்நிலையிலேயே இன்று வரை இருந்து வருகின்றது. தனது தாய் வீடுமு் மிக்க வருமையில் இருப்பதால் தனது கணவரின் வீட்டிலேயே நோயால் பாதிக்கப்பட்டுள்ள பைசுல் ரஹ்மானின் தாயாருடனும் தனது கைப்பிள்ளையுடனும் மிக்க கஷ்ட்ட ஜீவனம் நடத்தி வருகின்றார் இந்த சகோதரி.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சமூக விரோதி பின்னர் காவல்துறையிடம் சரன் அடைந்து குன்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் தங்கள் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித்தந்து கொண்டிருந்தே ஒரே நபரையும் சமூக விரோதிகளின் கொலை வெறிக்கு இழந்து இந்த இளம் வயதிலேயே விதவையாகி எதிர்காலம் கேள்வி குறியாய் எந்த வருமானமும் இன்றி நிர்கதியாய் நிற்கும் சகோதரி நிலோஃபர் நிஷவிற்கும் பைசுல் ரஹ்மானின் தாயாருக்கும் இது வரை எவ்வித அரசு உதவியோ சமுதாய உதவிகளோ கிடைக்காமல் இன்றளவும் கண்ணீருடன் நமது சமுதாயமோ அல்லது இந்த அரசோ உதவும் என்று எல்லா வாயில்களையும் தட்டிக் கொண்டுள்ளனர்.

நோய் வாய்ப்பட்ட தனது கணவரின் தாயாருடன்

மாவட்ட நிர்வாகத்தினை அனுகும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகின்றது, கோவை மாவட்ட ஆட்சித் தலைவரோ “ஏம்மா உங்கள் கட்சி தமுமுக தானே இதில் தலையிட்டுள்ளது அவர்கள் தற்போது ஆளும் கட்சி கூட்டணியிலும் உள்ளனர், அவர்களாலேயே ஒன்றும் செய்யவில்லை எனும்போது நாங்க என்னம்மா செய்யிரது?” என்று கூறியுள்ளார்.


மையவாடியில் வாக்குறுதிகள் அளித்த தமுமுக வின் தலைமையோ அல்லது அந்த இயக்கத்தினரோ அரசின் உதவிகளை பெற்றுத்தருவதற்கு ஏதும் முயற்சிகள் எடுப்பதாகவோ அல்லது சமுதாயத்திடம் இருந்து ஏதாவது உதவிகள் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பவர்களாகவோ தெறியவில்லை.

தமிழகத்தின் தரம்கெட்ட அரசியல்வாதிகளின் ரத்தத்தில் ஊரிப்போனது எளவு வீட்டில் வைத்து அள்ளி வீசும் வாக்குறுதிகளும் பினத்தின் மீது செய்யும் அரசியலும் நாடறிந்தது தமுமுக வும் அந்த லிஸ்ட்டில் சேராது என்ற நம்பிக்கை நமது சமுதாயத்திற்கும் அந்த குடும்பத்திற்கும் உள்ளது. வாக்குறுதி அளித்த தமுமுக தலைமையின் நேரடி கவணத்திற்கு இந்த விஷயத்தை நாம் கொண்டு வருகின்றோம். கோவை மாவட்ட ஆட்சியர் கூறியது போல் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமுமுக இந்த ஏழைக் குடும்பத்திற்கு ஏதாவது அரசு உதவிகளை பெற்றுத்தருமா? தான் சார்ந்துள்ள சமுதாயத்திடம் ஏதாவது உதவிகளை பெற்றுத்தருமா? காத்திருந்து பார்ப்போம்.

தமிழக அரசின் கவணத்திற்கு :

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு இந்து ஒரு முஸ்லிமால் தனிப்பட்ட காரணத்திற்காக கொல்லப்பட்டாலும் கூட அந்த இந்துவின் குடும்பத்திற்கு உடனடியாக முதலமைச்சரின் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் இது போல் இந்து சமூக விரோதியாலோ அல்லது இந்து தீவிரவாதிகளாலோ கொல்லப்படும் எந்த ஒரு முஸ்லிம்’ குடும்பத்திற்கும் ஒரு போதும் இது போன்ற உதவிக்ள அறிவிக்கப்படுவதில்லை. ஏன் இந்த மாற்றான்தாய் மனப்பான்மை? எம் சமுதாயம் என்ன குற்றம் செய்தது?

தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தனது ஆட்சியில் சமூக விரோதிகளால் மக்கள் கூடும் இடத்தில் வைத்து தனது அரசின் பேருந்தில் படு கொலை செய்யப்பட்ட பைசுல் ரஹ்மானின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரன நிதியில் இருந்து உடனடி உதவிகள் அறிவிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் துயரம் துடைக்கப்பட வேண்டும். கருனை உள்ளம் கொண்ட தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.

இந்த செய்தியின் நகல்கள் கீழக்கண்டவர்களுக்கு அனுப்ப பட்டுள்ளது :

முதலமைச்சரின் தனிப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைமை

தமுமுக வின் தலைவர்

இஸ்லாம்,முஸ்லிம்,காரைக்குடி,இராமநாதபுரம்,கோவை

கருத்து சொல்ல வாங்க….

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:35 முப
பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களை பற்றி கருத்து கணிப்பு!!

சகோதரர். பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் (1984-85) ஆரம்ப கால மார்க்கச் சேவைகளை எவரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் உதவியால் ஷிர்க், பித்அத்கள் அடையாளம் காட்டப்பட்டன. கப்ர் வழிபாடுகளை விட்டும் பலர் தவ்பாச் செய்தனர். . . .

மார்க்கச் சேவைகள் சிலவற்றில் அவர் ஈடுபட்ட போதும் மற்றொரு புறம் அவரிடம் மார்க்க ஆய்வுகளில் சில குறைகள் இருந்தே வந்தன. தனிப்பட்ட முறையில் அந்தக் குறைகளை எடுத்துக் கூறி அவரை திருத்த முனைந்தவர்களும் உள்ளனர். அவைகளை பகிரங்கமாக அப்போதே சுட்டிக் காட்டியவர்களும் உள்ளனர்.

அவருடைய மார்க்க உழைப்புகள் இயக்கமாக உருமாறின! சமுதாயத்தை பிரித்தாண்டு, கொள்கைச் சகோதரர்களை எதிரிகளாக மாற்றியதற்கு காரணமானார்! பிற மதத்தவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லப் போகிறோம் என்ற பெயரில் மார்க்கத்தை விட்டுக் கொடுக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது! மார்க்கத்தை ஆய்வு செய்வதில் அவருடைய பக்குவமற்ற அணுகு முறையால் அவர் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகளிலும் அல்குர்ஆன் தமிழாக்கத்திலும் விரிவுரையிலும் பல தவறுகள்! குழப்பங்கள்! (மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்)

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமும் தற்சமயம் (2006-2007) அவர்களைச் சார்ந்துள்ளவர்களிடமும் ஏற்பட்டுள்ள கொள்கைக் குழப்பங்களையும் பக்குவமற்ற விவாதங்களையும் நன்கு அறிந்து கொண்ட கப்ரு வணக்க ஆதரவாளர்கள் சமீப காலமாக தமிழகத்தில் தலை தூக்க முற்படுகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க, மற்றொரு புறம் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை மீடியாக்களில் ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துப் பழகிய சிலர், அவருடைய மார்க்க மற்றும் சமூக விரோதப் போக்குகளை எளிதில் அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்க்கத்திற்காக சேவை செய்தவர்கள் அடையாளம் காட்டப்பட்டதைப் போன்று மார்க்கத்திற்கு எதிராக நடந்தவர்களும் சம காலத்தவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அடையாளம் காட்டப்பட வேண்டிய ஒருவர் என்பதால் அவருடைய சாதக, பாதக கருத்துக்களை சேகரித்து, சம காலத்தவர்களுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் இவரைப் பற்றிய எதார்த்த நிலையை அறிமுகப்படுத்த வேண்டும்! நன்மைகள் வரவேற்கப்பட்டதைப் போன்று, தீமைகளும் எதிர்க்கப்பட வேண்டும்! அது உலகிற்கு உணர்த்தப்பட வேண்டும்! என்ற காரணத்தினால் ஒரு சிறிய முயற்சியை மேற்கோண்டுள்ளோம். அதற்காக மார்க்க அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.
பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மார்க்க மற்றும் சமூகப் பணிகளில் மிகைத்து நிற்பதுநன்மையா? தீமையா?என்ற தலைப்பில் உங்களுடைய கருத்துக்களை ஆதாரங்களுடன், திறந்த மனதுடன், கண்ணியமான நடையில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

1) ஆக்கம் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு தலைப்பில் எழுதப்படும் தகவல் -அதிக பட்சமாக- மூன்று பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

2) 2007 ஏப்ரல் மாதம் islamparvai.com தளத்தில் உங்களுடைய பதிவுகள் வெளிவரும்.-இன்ஷா அல்லாஹ்!

3) சரியான முகவரியுடன் அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே இணைய தளத்தில் வெளியிடத் தகுதி பெறும்.

4) நீங்கள் விரும்பினால் மட்டுமே உங்களுடைய பெயர் மற்றும் முகவரி வெளியிடப்படும்.

5) கருத்துச் சிதையாமல் கட்டுரையை முறைப்படுத்த இணையக் குழுவுக்கு உரிமை உண்டு.

6) சிறந்த 3 கட்டுரைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள இஸ்லாமிய நூல்கள் வழங்கப்படும்.

சவூதி அரேபியாவில் -இன்ஷா அல்லாஹ்- 2007 ஜூன் மாதம் ‘தமிழகத்தில் அழைப்புப் பணிகள்’ தொடர்பாக நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் உங்களுடைய பதிவுகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் அல்லாஹ்விடத்தில் விசாரணை உண்டு என்பதால் உண்மைகள் மட்டுமே இடம்பெறட்டும்!
கட்டுரைகள் வந்து சேரவேண்டிய இறுதித் தேதி: 2007 மார்ச் 31

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : islamparvai@gmail.com

அல்லது தபால் மூலம் அனுப்ப:

IEF Tamil Section
Post Box: 15798
Jeddah 21454 – K.S.A
M. முஜீபுர் ரஹ்மான் உமரீ

இப்பக்கத்தை பிரிண்ட் செய்ய இணைப்பி்ல் உள்ள PDF கோப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.

நன்றி : இஸ்லாம்பார்வை

ஜனவரி 29, 2007

MUGAVAI-MNP ஜம்இய்யத்துல் அத்ஃபால் கண்டன பேரணி

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:09 பிப
காட்டுமிரான்டி செயலான குழந்தைகளின் படுகொலையை கண்டித்து ஜம்இய்யத்துல் அத்ஃபால் கண்டன பேரணி
முகவை MNP மழழையர் அணி நடத்திய கண்டன பேரணி

கடந்த 20.01.2007 அன்று முகவை மாநகரில் மனித நீதி பாசறையின் மழழையர் அணியினர் டெல்லி நொய்டாவில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற காட்டுமிரான்டி செயலான குழந்தைகளின் படுகொலையை கண்டித்தும் இதில் நேர்மையான முறையில் நீதி விசாரனை நடத்த வேண்டியும் மனித நீதி பாசறையின் மழழையர் அணியினரான “ஜம்இய்யத்துல் அத்ஃபால்” கண்டன பேரணியை நடத்தினர்.

பதாகைகள் தாங்கிய பாலகர்கள்

இந்த பேரணியில் பெருந்திரளான குழந்தைகள் மாவட்டமெங்கும் இருந்தும் சுற்றுப்புற கிராமங்களான பெரியபட்டினம், வண்ணாங்குன்டு போன்ற கிராமங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.

அணிவகுத்துச் செல்லும் முகவை MNP யின் மழழையர் அணி

பெருந்திரளான குழந்தைகள் கலந்து கொண்ட இந்த பேரணியில் நொய்டா குழந்தைகள் படுகொலைகளை கண்டித்து மனித நீதி பாசறையின் மழழையர் அணியினரான “ஜம்இய்யத்துல் அத்ஃபால்” குழந்தைகள் கோசங்கள் எழுப்பினர். MNP மழழையர் அணி ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட தங்களின் சக வயது குழந்தைகளுக்காக நடத்திய இந்த போராட்டம் முகவை மாநகர மக்களின் கவணத்தை கவர்வதாக அமைந்திருந்தது.

செய்திகள் மற்றும் புகைப்படம் : முகவை மாவட்ட MNP – சின்னக்கடை

ஜனவரி 26, 2007

விவாதமும் சத்தியமும்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 4:18 முப

விவாதமும் சத்தியமும்

உம் இறைவனின் பால் மக்களை ஞானத்தைக் கொண்டும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக. மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் நேர்வழி பெற்றவர்களையும் நன்கறிவான் (அத்தியாயம் 16 அந்நஹ்ல் – வசனம் 125)

அழைப்புப் பணி என்பது மிகவும் புனிதமான ஓர் அறப்பணியாகும். இதற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் இறைத்தூதர்கள். சமுதாய நன்மையைக் கருத்தில் கொண்டு அவர்களது பணி அமைந்திருந்தது. புனிதமான இந்தப் பணியை அதாவது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்க மிகச்சிறந்த வழிமுறைகளை அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகின்றான். அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1. ஹிக்மத் அதாவது ஞானம் என்னும் திடமான அறிவைக் கொண்டு அழைக்கவேண்டும் (ஹிக்மத் என்றால் தந்திரத்தைக் கையாள்வது என்ற தவறான பொருள் பலராலும் வழங்கப்படுகின்றது. இதற்குக் குர்ஆனிலோ நபிவழியிலோ எந்த ஆதாரமும் கிடையாது என்பதே உண்மை)

2. அழகிய உபதேசங்கள்: மக்களுக்குப் பயன் உள்ள உபதேசங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு முழுக்க முழுக்க நன்மையை நாடவேண்டும்

3. எது நல்லதோ அதனைக் கொண்டு விவாதித்தல்: அழகிய முறையிலான விவாதங்கள் அழைப்புப் பணியில் அனுமதிக்கப் பட்டவையாகும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகேட்டின் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றக்கூடியவர்களும் தாங்கள் செல்லும் வழிகேட்டிற்கு சாதகமாகத் திருக்குர்ஆன் வசனங்களின் அர்த்தத்தை திரித்துக் கூறுவது வாடிக்கை.

தாங்கள் மட்டுமே தவ்ஹீத்வாதிகள் மற்றவர்கள் அதனை விட்டும் வெளியேறியவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் சிலர், இறைவன் கூறிய விவாதம் என்ற வழிமுறையை தவறாகப் பயன்படுத்தி வருவதுதான் இக்கட்டுரை உருவாகக் காரணமாகும்.

தங்களின் ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக, எதற்கெடுத்தாலும் விவாத அழைப்பு விடுத்துவிட்டு, விவாதம் நடக்காமலிருப்பதற்கான நடைமுறைகளையும் கடைபிடித்துக் கொண்டு, அதன்பிறகு விவாதத்துக்கு வராமல் ஒடிவிட்டார்கள் என்று கூப்பாடு போடுவதும், உட்கார்ந்து பேசி முடிவு செய்துக் கொள்ளக்கூடிய சிறு விஷயத்திற்கும் கூட, “விவாதத்திற்குத் தயாரா?” என்று தமது சீடர்களை தூண்டிவிட்டு சவால் விடுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில் உண்மையில் இஸ்லாமிய விவாத நடைமுறைகள் என்னவென்பதையும், இவர்களின் விவாதச் சவடால்கள் அதற்கு எவ்வாறு முரண்பட்டு நிற்கின்றன என்பதையும் மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டியது அவசியமாகின்றது.

அழைப்புப் பணியின் வழிமுறைகளில் ஒன்றே விவாதம் என்றாலும்கூட, எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடவில்லை. விவாதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதற்கான விதிமுறைகளையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதோடு மிகச்சிறந்த முறையில் நடைபெற்ற சில விவாதங்களைம் நமக்குப் படிப்பினையாகக் குறிப்பிடுகின்றான். உதாரணத்திற்காக ஒரு சம்பவம் மட்டும்.

தவ்ஹீதின் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நடத்திய விவாதம்

أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَآجَّ إِبْرَاهِيمَ فِي رِبِّهِ أَنْ آتَاهُ اللّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِـي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِـي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று. அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன், மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான், நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2:258)

மாமேதை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அளித்த ஒரே ஒரு பதிலால் நிராகரிப்பாளனாகிய நம்றூது மன்னன் வாயடைபட்டுப் போகின்றான் என மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். மேடை போட்டு நாட்கணக்கில் மணிக்கணக்கில் விவாதம் நடத்துவது மட்டுமே விவாதமாகும் என்று கருதியிருப்பவர்களுக்கு மேற்கண்ட விவாதச் சம்பவம் ஒரு பாடமாக அமையட்டும். தவறான கொள்கைகள் உண்மையான ஆதாரங்களைக் கொண்டு நியாயமான கேள்விகளைக் கொண்டு ஆணித்தரமான பதில்களைக் கொண்டு தகர்க்கப் படுவதே விவாதம் என்பதை மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. விவாதம் என்னும் போது அதில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடைபெறும் விவாதத்தில் சத்தியவாதிகளின் ஆணித்தரமான கேள்விகள் ஆதாரப்பூர்வமான பதில்களிலேயே அசத்தியம் உடைந்து சிதறி சின்னாபின்னமாகிவிடும் என்பதே நபிமார்கள் நடத்திய விவாதங்கள் நமக்கு அளிக்கும் படிப்பினையாகும். இததகைய விவாதங்கள் நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ நடைபெறலாம்.

தவ்ஹீதின் பெயரால் புதிய கொள்கைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய த.த.ஜ வின் தவறான கொள்கைகளுக்கு, இன்று பல மார்க்க அறிஞர்களும் நியாயமான முறையில் பதிலளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் ஒருமுறையில் விவாதம் தான். அவ்வறிஞர்கள் வைக்கும் கேள்விகளுக்கு ததஜவினரிடம் நியாயம் இருந்தால் அதனை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்கலாம். ஆனால் ததஜவினரின் தவறான கொள்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு பதில் சொல்ல முடியாத நிலையில் இவர்களால் கையிலெடுக்கப்பட்ட முனை மழுங்கிய ஆயுதமாக இவர்களின் தற்போதைய விவாதப் பூச்சாண்டிகள் அமைந்துள்ளதைக் காண்கின்றோம்.

ஆனால் இவர்களின் எதிர் தரப்பு அறிஞர்களோ இத்தகைய விவாதத்தில் குர்ஆன் ஹதீஸ் கூறும் நியாயமான போக்கைக் கடைபிடித்து வருவதையே நாம் கண்டு வருகின்றோம். இது அவர்களைப் புகழ்வதற்காக அல்ல. மாறாக விவாதக் கூப்பாடு போடுபவர்களின் வழிமுறை தவறானது எனக் காண்பிக்கவேதான். ததஜவினரிடம் காணப்படும் தவறுகளை மிகவும் கண்ணியமான முறையில் சுட்டிக்காட்டினார்கள். நேசத்துடன் அழகிய முறையில் உட்காந்து விவாதிக்க இவர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகப் போகவே, சத்தியத்தை நியாயமான முறையில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவதாக இருந்தால் ஜகாத் விஷயத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கூறிய தவறான கருத்துக்களைப் பற்றி விவாதிக்க பிலால் பிலிப்ஸ் அவர்கள் சென்னைக்கு வந்திருந்தபோது அழைத்தது. ஆனால் மக்களுக்கு முன்னால் விவாதிக்க வேண்டும் என்று கூறி பி.ஜைனுல் ஆபிதீன் என்பவரால் இது மறுக்கப்பட்டது.

ஒரு புதிய கருத்து மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான ஜகாத் பற்றியது. மக்களிடம் அது செல்வதற்கு முன் அதனை மார்க்க அறிஞர்கள் சபை உட்கார்ந்து அலசி ஆராய வேண்டும். ஏனெனில் மக்களிடம் தர்க்க வாதங்களும் வார்த்தை ஜாலங்களும் மட்டுமே எடுபடும். எல்லோரும் ஹதீஸில் புலமை பெற்றவர்களாகவோ ஹதீஸ் கலையைக் கற்றுத் தேர்ந்தவர்களாகவோ இல்லை. இந்த நியாயமான உண்மையை மறந்து அல்லது புறக்கணித்து மக்களிடம் பிலால் பிலிப்ஸ் அவர்கள் விவாதத்துக்கு வராமல் ஒடிவிட்டதாக செய்தியை கசிய விட்டார்கள்.

அடுத்ததாக தங்களுடைய தவறான கொள்கைகளுக்கு ஏற்ப சில சம்பவங்களையும் வரலாறுகளையும் ஹதீஸ்களையும் வளைத்து திரித்து தவறான ஒரு புரிதலை மக்களிடம் விதைத்தபோது அது பற்றி விவாதிக்க அறிஞர்கள் சபை அழைப்பு விடுத்தது. நீங்கள் அளிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அரபு மொழியை மூலமாகக் கொண்டுள்ளது.

எனவே முதலில் அரபு மொழி அறிஞர்களிடம் கலந்துரையாடலுக்குத் தயாராகுங்கள். நீங்கள் தவறாக விளக்கம் கொடுக்கும் ஹதீஸ்களில் உங்களது பிழைகளை சுட்டிக்காட்டி அதன் உண்மையான விளக்கத்தை உங்களுக்கும் பின்னர் மக்களுக்கும் உணர்த்துவதற்கு அதுவே வழிமுறை என்று கூறியபோது அதனையும் புறக்கணித்து தமிழ் நாட்டில் அதுவும் தமிழில் மக்கள் மன்றத்தில் வைத்துதான் விவாதம் நடக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்? குர்ஆன் சுன்னா எந்த மூல மொழியில் நமக்கு கிடைக்கிறதோ அந்த மூல மொழிபற்றி ஆழமான அறிவு இல்லாது மக்களிடம் தர்க்கவாதங்களை வைத்து நியாயப்படுத்துவதற்காகவும் அதன் மூலம் இவர்களின் ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும்தானே?

விவாதத்தில் நாங்கள் சளைத்தவர்களல்ல என்று கூறக்கூடியவர்களின் நோக்கம் எதிர் தரப்பினர் விவாத்திற்குத் திறமையற்றவர்கள், விவாதம் என்றால் ஒடிவிடுபவர்கள் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்துவது ஒன்றே தவிர சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக அல்ல. இதற்கு சில உதாரணங்கள். முஜீபுர் ரஹ்மான் உமரியிடம் விவாத அழைப்பு விடுத்து அவர் கொடுத்த தேதியில் விவாதத்துக்கு தயாராகமல் புறக்கணித்தவர்கள் அவர் ஓடிவிட்டார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். ஹாமித் பக்ரி அவர்கள் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்தபோது அதிலிருந்தும் தந்திரமாக நழுவி விட்டவர்கள்.

கேரள ஆலிம்களிடமும் தங்களது கைவரிசைகளைக் காட்டியுள்ளனர் என்பது சமீபத்தில் நாம் அறிந்துள்ள செய்தியாகும். ஸஹாபாக்களை மட்டம் தட்டி திருவனந்தபுரத்தில் பீ.ஜே உரையாற்றிய போது, அது கேரள முஜாஹித் அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டது. தங்களது நிலைபாட்டைத் தெளிவுபடுத்தத் தயங்கிய ததஜவினர் அவர்களையும் விவாதத்துக்குத் தயாரா? என்று வாய்ச் சவடால் விட்டதுடன் “முஜாஹிதுகளுக்குச் சாபம்” என்று தலைப்பிட்டு அவர்களை விமர்சித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். விவாதத்திற்கான நியாயமான வழிமுறைகளுடன் அணுகாததால் முஜாஹிதுகளுடன் விவாதம் நடைபெறவில்லை. ஆகவே முஜாஹிதுகளும் ஓடிவிட்டார்கள் என்பதும் இவர்களின் புதிய பொய்ப் பிரச்சாரமாகும். ஆக த.த.ஜ என்றாலே விவாத அழைப்பு விடுக்கும் அமைப்பு என்றும் மற்றவை விவாதத்தை விட்டும் ஓடும் அமைப்புகள் என்ற நிலையை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நுர் முஹம்மத் பாக்கவி – பீ.ஜே விவாத ஒப்பந்தம்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்ற கருத்தை பீ.ஜே வெளியிட்டபோது அவரின் கருத்துக்களில் உள்ள குறைபாடுகளை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார் நூர் முஹம்மத் பாக்கவி. அவருக்கும் விவாத சவால் விட்டவர்களின் சவாலை அவர்களது மேடையிலேயே ஏறி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து விவாதத்திற்கு ஒப்பந்தம் செய்ய ஒரு நாளை தேர்ந்தெடுத்து அங்கு வருவதற்கான ஒப்புதலை பீ.ஜே மற்றும் நூர் முஹம்மத் பாக்கவி ஆகியோரால் அளிக்கப்பட்டது. இதனைத்தான் விவாத ஒப்பந்தம் என்று வழக்கமான பொய் அறிமுகத்துடன் ஓடிவிட்ட அவரைப் பிடித்துக் கொண்டு வந்தது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தியிருந்தனர். இதனை பீ.ஜேவின் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் காண முடிந்தது.

ஒப்பந்தம் செய்ய ஒத்துக்கொண்ட தேதியில் நூர் முஹம்மத் பாக்கவி அவர்கள் வந்து 10, 11 பிப்ரவரி 2007 அன்று விவாதம் செய்வதென ஒப்பந்தம் எழுதப்பட்டு கையெழுத்தாயின. பாக்கவியுடன் நடைபெற இருக்கும் விவாதத்தில் தாம் தோற்றதாக ஆகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் சில தந்திரங்களை பீ.ஜேயும் அவர் உடன் இருந்தவர்களும் செய்ததை விவாத ஒப்பந்த வீடியோ மூலம் மக்களுக்கு வெளிப்பட்டுவிட்டன.

நிலைபாடு மாற்றம்

ஜகாத் சம்மந்தமாக பீ.ஜே தரப்பினரால் படிப்படியாக மாற்றப்பட்ட நிலைபாடுகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனை பீ.ஜேதரப்பினரால் வைக்கப்படுகின்றது. இவர்களால் மாற்றப்பட்ட நிலைபாடுகளை இன்னும் நம்பியிருக்கும் மக்களுக்கும் உண்மை சென்றடைய வேண்டும் எனவே அதுவும் விவாதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஏதோ உளறல் என்று சித்தரிக்கும் முயற்சி. ஆனாலும் ஜகாத் ஒருமுறை மட்டும் என்பதை நிலைநாட்ட எடுத்து வைக்கப்பட்ட தர்க்க வாதங்களே இவர்களால் மாற்றப்பட்டுவிட்ட நிலைபாடுகளாகும்.

நிலைபாடு மாற்றத்தைத் தங்களது பணிவுக்குக் காரணமாகக் காட்டுபவர்கள் இனிமேல் தர்க்க வாதங்களையே வைப்பதில்லை என்று தங்களது நிலைபாட்டை மாற்றிவிட்டார்களா? என்பதையும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். காரணம் இனியும் தர்க்கவாதங்களைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் மற்றும் அல்லாஹ்வின் சிஃபத்துக்கள் உட்பட ஏராளமான கொள்கை விஷயங்களும் உள்ளன. அவற்றுக்கெல்லாம் ஆதாரங்களை விடுத்து தர்க்க வாதங்களே இவர்களால் எடுத்துக் காட்டப்படுகின்றன. தேவைப்படும் வசதிகளில் பாக்கவி அவர்கள் புரொஜக்டர் வேண்டும் என்று கேட்டபோது அதையும் விவகாரமாக்கிவிட்டனர். புரொஜக்டர் வழங்கப்பட்டால் தங்களது முரண்பாடுகள் வீடியோ மூலம் மக்களுக்குக் காட்டப்படுவதை பயந்துவிட்டனர் போலும்.

நேரடி ஒளிபரப்பு:

விவாதத்தை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் கேலிக் கூத்தாக்கி அதில் பாக்கவியை மிரட்டும் தொனி காணப்படுகின்றது. விளைவுகள் என்ன ஏற்படும் என்ற அவரது நியாயமான கேள்விக்கு, விளைவு அரசாங்க தரப்பிலிருந்து ஏற்படும் என்று மிரட்டியவர்கள் பிறகு போலீஸ் பாதுகாப்பையும் மீறி கலவரம் ஏற்படும் என்று முரண்படுகின்றனர்.

“போலீஸ் பாதுகாப்பை மீறி எவ்வாறு கலவரம் ஏற்படும்? அவ்வாறு ஏற்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு?” என்று K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி மடக்கியதும் சப்பைக் கட்டுடன் நேரடி ஒளிபரப்புக்கு ஒத்துக் கொண்ட நிலையையும் காணமுடிகின்றது.

ஆக ஒப்பந்தத்திலேயே இவ்வளவு முரண்பாடுகளை உடைய இவர்கள் விவாதத்தில் நேர்மையைக் கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கீழ்கண்ட விஷயங்களை இங்குள்ள வீடியோவில் பார்வையிடலாம்.

1) நேரடி ஒளிபரப்பு பற்றிய சர்ச்சை முதல் கிளிப்பின் 57 ஆம் நிமிடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. இரண்டாவது கிளிப் 8:56 ல் கலவரம் என்று திசை திருப்பி ரஹ்மதுல்லா இம்தாதி குறுக்கு கேள்வி கேட்பது. மூன்றாம் கிளிப் 8 ஆம் நிமிடம் வரை நேரடி ஒளிபரப்பு விவாதம் நீளுகின்றது.

2) கடந்த காலத்தின் முரண்பட்ட (தர்க்க) வாதங்கள் விவாதத்தில் உட்படுத்தக் கூடாது என்ற சர்ச்சை மூன்றாம் கிளிப் 55 ஆம் நிமிடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. 5 ஆம் கிளிப் 5 ஆம் நிமிடம் வரை நீண்டு செல்கின்றது. விவாதத்தில் தோற்றுவிடாமலிருக்க செய்யும் முயற்சிகள் அதில் அம்பலமாகின்றன.

3) புரொஜக்டர் விவகாரம் 5 ஆம் கிளிப் 5:25 ல் ஆரம்பமாகின்றது. அதனை ஒத்துக் கொண்டாலும் அதனைக் கேலி செய்து விவகாரமாக்குகின்றனர்.

4) பீ.ஜே வாய் கொடுத்து மாட்டிக்கொண்டால் கலீல் ரசூல் என்பவர் குறுக்கே புகுந்து அவரை காப்பாற்றுகிறார். (பீ.ஜேவின் புழுகு மூட்டைகளை தூக்கி சுமக்கும் அற்புதமான கைத்தடிகள்)

பொய் சொல்பவர்கள், இட்டுக்கட்டி சம்பவங்களை திரிப்பவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் சொன்ன நபிமொழிகளை ஏற்காமல் இருப்பது ஹதீஸ் கலையில் முக்கிய சட்டமாகும். ஆனால் வெட்கமில்லாமல் இலங்கை மக்களிடம் இட்டுக்கட்டி கீழ்கண்ட பொய்யை கூறிவிட்டு, அதனை பொய் சொல்கிறோமே என்ற சிறிதுகூட கூச்சமில்லாமல் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய இந்த மாமேதைதான் ஹதீஸ்களைப் பற்றி மற்றவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

திருவிதாங்கோடு என்ற ஊரில் ஜாக் என்ற இயக்கம் தவ்ஹீத் பள்ளி கட்டிக் கொடுத்ததாகவும் அதில் இன்று குத்பியத் என்ற இருட்டு திக்ர் நடப்பதாகவும் பீ.ஜே சொன்ன பொய்யிற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. இந்த ஒரு விஷயத்தை விசாரித்துவிட்டு இந்த மாமேதையின் இலட்சணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதனைப் படிப்பவர்கள், ஒரு சவாலாக ஏற்று, திருவிதாங்கோட்டில் ஜாக் இயக்கத்திற்கு பள்ளி இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

மேற்கண்ட திருவிதாங்கோடு பற்றிய பொய் ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. பொதுவாழ்வில் இந்த அளவுக்கு பொய் சொல்லும் ஒரு நபர் சாமானியர்கள் சோதித்து பார்க்க முடியாத இஸ்லாமிய ஆதாரங்களில் எந்த அளவுக்கு பொய் சொல்லுவார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு சென்று இந்தியாவில் உள்ளவரை மட்டும்தான் புழுகுவார் என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். இலங்கையில் உள்ளவரைப் பற்றியும் இந்தியாவில் புழுகுவார். அதற்கான ஆதாரம் இதோ.

இவரின் பொய்களுக்கென்றே அசைக்க முடியாத ஆதாரங்களுடன் “இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்” என்ற ஒரு விவரணப்படத்தை தயாரித்துள்ளார்கள். அந்த அளவுக்கு இவர்களின் பொய்கள் மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வழிக்கெட்ட கூட்டத்தினரின் பட்டியலில் ததஜவினர் இவ்வளவு அவசரமாக இடம் பிடிப்பார்கள் என்று பீ.ஜேவின் சிஷ்யர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இதிலும் இவர்களை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையென்றால், குடந்தை குலுங்கியது என்று வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர்களின் பொய்யைப் பார்த்தாவது சிந்திக்கவேண்டும்.

ததஜவினரின் விவாதங்கள் எப்படியிருக்கும்?

ததஜவினர் மார்க்க ஆதாரங்களுக்கு முதலிடம் கொடுப்பதை விட, பெண்கள் விஷயங்கள் என்றால் மிகுந்த ஆர்வமுடன் பேசுவார்கள் என்பதை, களியக்காவிளை விவாதத்தில் காண முடிந்தது. “தடவினார் தடவினார்” என்ற கூறி அதிக சிரத்தை எடுத்து அசிங்கமான வர்ணனைகள் செய்த மாவீரர்கள் இவர்கள்.

இலங்கை மார்க்க அறிஞர்கள் பீ.ஜே.தரப்பினரின் “தடவினார் தடவினார்” என்ற நாரச பேச்சைக் கேட்டு, உங்கள் நாட்டு அறிஞருக்கு குர்ஆனிலும் சுன்னாவிலும் மவ்லூது ஓதக்கூடாது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லையா என்று சிரிக்கிறார்கள்.

விவாதம் என்பது யுத்தமாம்?

விவாதம் என்றால் யுத்தம் என்று பி.ஜைனுல் ஆபிதீன் புரிந்து வைத்துள்ளார். அப்படித்தான் அவரின் மாணவர்களுக்கும் அவர் போதித்துள்ளார். பீ.ஜே கலந்துக்கொண்ட ஒரு மதுரை பொதுக்கூட்டத்தில் நூர் முஹம்மத் பாக்கவி அவர்கள் இருக்கிறார் என்று தெரிந்தவுடன், நூர் முஹம்மது பாக்கவியை விவாதத்திற்கு அழைத்து வருகின்றவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிப்பு செய்தார்கள். இவர்கள் விவாதத்திற்கு மற்றவர்களை அழைக்கும் இங்கிதமும் இலட்சணம் இதுதான் போலும். இது போன்ற அநாகரிக செயல்களுக்கு கொடிபிடிக்கும் ஒரு கூட்டம் இவர்களுடன் இருக்கும்போது, இதுவும் செய்வார். இன்னமும் செய்வார்.

ஆனால், பீ.ஜே எதிர்பார்த்ததற்கு மாற்றமாக, விவாதத்திற்கு தயார் என்று நூர் முஹம்மது பாக்கவி அவர்கள், ததஜவினரின் மேடையிலேயே ஏறி அறிவிப்பு செய்துவிடவே, விவாதம் செய்வதற்காக ஒப்பந்தம் போட ஒரு நாளை குறிக்கிறார்கள். அந்த பேச்சின்போது விவாதம் என்றால் யுத்தம் என்கிறார் பீ.ஜே. (வீடியோ கிளிப்-ஐ பார்க்க இங்கு சொடுக்கவும்). யுத்தத்தில் பொய் சொல்வது அனுமதிக்கப்பட்டுள்ளதால், சூழ்நிலைக்கு தகுந்தார்போல் விவாதம் மற்றும் அது சார்ந்த விஷயங்களில் இட்டுக்கட்டி பொய்கள் சொல்வதை பீ.ஜே மற்றும் அவரின் மாணவர்களிடமிருந்து வெளிப்படுவதை பார்க்கிறோம். இன்னும் இதுபோன்ற பல பொய்களை வருகிற (2007) பிப்ரவரி 10, 11 அன்று நூர் முஹம்மது பாக்கவி அவர்களுடன் ஜக்காத் விஷயத்திற்காக மதுரையில் நடக்கவிருக்கும் விவாதத்தில் பார்க்கலாம்.

அதனால்தான், நூர் முஹம்மது பாக்கவி அவர்கள் விவாதத்திற்கு நழுவுவது போலவும், ததஜவினர் அவரை பிடித்து இழுத்து வந்து சம்மதிக்க வைத்தது போலவும் ஒரு அறிமுகத்தை கொடுத்து வீடியோ வெளியிட்டார்கள். மற்றவர்களை இழுத்து வரவேண்டும் என்ற அஃறினைக்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தையை பயன்படுத்தும் ததஜவினர், பி.ஜேவை மட்டும் அழைத்து வருகிறோம் என்பார்கள்.

விவாதத்தின் தலைப்பு எப்படியிருக்கும்?

வெட்ட வெளிச்சமாக உள்ள விஷயத்தில்கூட பொய்கள் சொல்லும் இவர்களை நோக்கி நீங்கள் சுட்டிக்காட்டினால், அதற்கும் இவர்கள் விவாதம் செய்யத் தயார். “பீ.ஜே அதிகம் பொய் சொல்கிறாரா? மற்ற இயக்கங்கள் அதிகம் பொய் சொல்கிறார்களா?” என்ற தலைப்பில் விவாதிக்கலாமா? என்று கேட்பார்களே தவிர, பீ.ஜே சொன்னதில் பொய்கள் இல்லை என்று நிரூபிக்க முன்வர மாட்டார்கள்.

இதனை நான் கற்பனையில் சொல்லவில்லை. களியக்காவிளை விவாதத்தில் பீ.ஜே மொழிப்பெயர்த்த குர்ஆனிலிருந்தும் அவரின் புத்தகங்களிலிருந்தும் பொய்களையும் முரண்பாடுகளையும் எடுத்து மக்கள் மன்றத்தில் அடுக்குகிறார்கள். அதற்கு “நீங்கள் வைத்திருக்கிற தர்ஜுமாவையும் இந்த தர்ஜுமாவையும் வைத்து பேசுவோமா? என்று பி.ஜைனுல் ஆபிதீன் மிகுந்த கோபத்துடன் கர்ஜிக்கிறார்.

இவர் உண்மையானவர் என்றால், இவரின் குர்ஆன் மொழிப்பெயர்ப்பில் தவறுகள் இல்லை என்று நிரூபிக்கத் தயார் என்றல்லவா கர்ஜிக்க வேண்டும். சிஷ்யர்களால், தங்கள் தலைவரின் பொய்களை ஒத்துக்கொள்ள முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் சமாளிக்கும் நிலை.

சுன்னத்வல் ஜமாஅத்தினர் என்று சொல்லிக்கொண்டு தர்ஹா வழிபாட்டில் மூழ்கித் திளைத்தவர்கள் பின்பற்றுவது முன்னோர்களின் தவறான வழிமுறை என்பது நாமறிந்த உண்மையாகும். ஆனால் மனோ இச்சைக்கு ஆட்பட்டு, தலைவரை அப்படியே தக்லீத் செய்யும் மோசமான ஒரு கூட்டம் ததஜ என்ற பெயரில் உருவாகியிருப்பது களியக்காவிளை விவாதத்தின் மூலம் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ததஜவினரின் ரவுடியிஷத்தை புரிந்துக்கொள்ள சரியான உதாரணம்தான் களியக்காவிளை விவாதம்.

களியக்காவிளை விவாதத்தின் மூலம் தர்ஹாவாதிகள் தலைநிமிரக் காரணமாக பீ.ஜே அமைந்துவிட்டார். அவ்விவாதத்தின் போது தர்ஹாதிகளால் அம்பலமாக்கப்பட்டவை பீ.ஜேவின் தடுமாற்றங்களும் பொய்களும்தான்.

உதாரணத்திற்கு ஒன்று:

“பொய்கள் உள்ள புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றால், ஆதாரப்பூர்வமான புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் பொய்கள் உள்ளதாக நம்பும் நீங்கள் புகாரி போன்ற புத்தகங்களை என்ன செய்யப்போகிறீர்கள்?” என்பது போன்ற தர்ஹாவாதிகளின் கேள்விகளுக்கு, பீ.ஜேவிடம் ஏற்பட்டிருக்கும் சமீபகால தடுமாற்றம்தான் முக்கியக் காரணமாகத் திகழ்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

யாராவது ததஜவினருடன் விவாதம் செய்ய ஆசைப்பட்டால் களியாக்காவிளை விவாதத்தின் முதல் 3 சி.டி.களை அவசியம் பார்க்க வேண்டும்.

விவாதத்தை அழைப்புப் பணிக்கான ஒரு வழிமுறையாகக் கற்றுத் தந்த திருமறை சிலரிடம் விவாதிப்பதை விட்டும் ஒதுங்கிவிட வேண்டும் என்றும் நமக்குக் கட்டளையிடுகின்றது.

لِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوهُ فَلا يُنَازِعُنَّكَ فِي الأمْرِ وَادْعُ إِلَى رَبِّكَ إِنَّكَ لَعَلَى هُدًى مُسْتَقِيمٍ وَإِنْ جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ اللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்; நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்; ”நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக. ”நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.” (22: 67-69)

وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ

(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். (2:204)

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الأرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلامًا

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ”ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (25:63)

பீ.ஜே போன்ற அதிகப் பிரசங்கிகளிடமும் மார்க்கத்தில் வரம்பு மீறுபவர்களிடமும் விவாதம் புரியும்போது அவர்களால், அல்லாஹ்வின் வல்லமைகளும், தூதரின் வழிமுறைகளும், சஹாபாக்களின் கண்ணியங்களும் தெருவுக்கு வரும் நிலைதான் ஏற்படும்.

சிறு வயதிலிருந்து வளர்ப்பு பிள்ளையாக வளர்க்கப்பட்ட ஸாலிம் (ரலி) என்ற கண்ணியமிக்க நபித்தோழரும் தத்தெடுத்த தாயாக உள்ள சஹாபியப் பெண்மணியும் (ரலி), எவ்வளவு கேவலமாக பீ.ஜேவினால் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதை இங்கு சொடுக்கிப் பார்வையிடுங்கள்.

மேலும் விளக்கங்களை கேட்க பீ.ஜே.யின் அல்குர்ஆன் விரிவுரையும் விபரீதங்களும் மற்றும் திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு என்ற வீடியோ தலைப்புகளை பார்வையிடவும்.

சஹாபாக்கள் விஷயத்தில் இவரின் பழைய நிலை என்னவென்று தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும்.

நபிமார்கள் அனைவரும் சத்தியத்தைக் கொண்டு வந்த போது அதனை நிராகரித்தவர்கள் அதனைப் பொய்யாக்கும் முயற்சியில் தர்க்க வாதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் என்பதையும் குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது.

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَالأحْزَابُ مِنْ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ وَجَادَلُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَأَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ

இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (40:5)

மார்க்க காரியங்களில் விவாதத்திக்கான நடைமுறை இவ்வளவு தெளிவாக இருக்கும் நிலையில் இன்று மேடையேறி பகிரங்க விவாதம் என்ற பெயரில் தர்க்கவாதத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து மக்களை குழப்பும் இவர்களை அறிவுடையோர் உதாசீனம் செய்யட்டும். அதற்கு பதிலாக, அமைதியாகத் சத்தியத்தை எடுத்துக் கூறுவதுடன் அசத்திய வாதிகளின் அசத்தியங்களுக்கு எதிரான உறுதியான ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் அறிஞர்கள் எடுத்து வைத்துக்கொண்டே இருக்கட்டும். இல்லையென்றால், இது போன்ற தடம் மாறிய கூட்டம் உருவாகக் காரணமாக இருந்துவிட்டற்காக இறைவனுக்கு பதில் சொல்வதோடு மட்டுமல்லாமல், நமக்கு பின்னால் வரும் சமுதாயம் நம்மை நோக்கி சாபம் இடும் நிலையும் ஏற்படலாம். (அந்நிலைமையை விட்டும் இறைவன் காப்பாற்றட்டும்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவிபுரிவானாக.

நன்றி : இஸ்லாம்கல்வி

ஜனவரி 23, 2007

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:44 பிப

திமுக அரசை எதிர்த்து தமுமுக ஏன் போராட்டம் நடத்துவதில்லை? கூட்டணியில் இருப்பதால் சமரசமா?
! போராட்டம் எப்போது நடத்த வேண்டும்? ஏன் நடத்த வேண்டும்? என்பதற்கு சில வரைமுறைகள் உண்டு. நியாயம் கிடைக்காத போதும், அதற்கான முயற்சிகள் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் போதும் போராட்டம் நடத்த வேண்டும். இதுதான் பொது நியதி. இந்த அடிப்படையில்தான் தமுமுக போராட்டங்களை நடத்தி வருகிறது.
புதிதாக அமைந்த திமுக ஆட்சியில் பல கோரிக்கைகளை தொலைபேசி வேண்டுகோளிலேயே தமுமுக முடித்து விடுகிறது. எனவே போராட்டங்கள் தேவையில்லாமல் போகிறது.

அதையும் மீறி நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் போது அதற்காக புதிய ஆட்சியை எதிர்த்து தமுமுக போராடியுள்ளது. சளைக்கவும் இல்லை, சமரசமும் செய்யவில்லை.

26-5-2006 அன்று செங்கத்தில் காவல்துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
5-7-2006 அன்று பொதக்குடி திமுகவினரைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியில் மாநிலச் செயலாளர் காஞ்சி அப்துஸ் ஸமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
18-08-2006 அன்று ஊட்டியில் தமிழக அரசின் காவல்துறையைக் கண்டித்து மாநிலச் செயலாளர் கோவை உமர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேற்கண்ட அதே வாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் மாநிலச் செயலாளர் எஸ். முஹம்மது ஜெயினுலாபிதீன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
19-08-2006 அன்று தாம்பரத்தில் திமுக எம்.எல்.ஏ. ராஜாவைக் கண்டித்து மாநிலச் செயலாளர் ஏ. சாதிக் பாஷா தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஏராளமான தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

22-11-2006 அன்று திமுக பெயரைச் சொல்லி சில ரவுடிகள் தமுமுகவின் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளைத் தாக்கியபோது ரவுடிகளை கைது செய்யக்கோரி மறியல் நடத்தப்பட்டது. இந்த ஆட்சியில்தான் இரண்டு முறை அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் சென்று, அதிகாரிகளின் வேண்டு கோளைப் புறக்கணித்து இரண்டு முறை காவல்துறை தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தமுமுக நினைத்திருந்தால் திமுக ஆட்சிக்கு சங்கடம் தரக்கூடாது என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியின்போது நடத்தப் பட்டது போல் காவல்துறை அனுமதியுடன் அவர்கள் குறிப்பிடும் இடத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க முடியும். ஆனால் அமெரிக்கத் தூதரகத்தின் அருகிலேயே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.
18-09-2006 அன்று கோவையில் கூடிய தமுமுக மாநிலச் செயற்கு ழுவில் துணை நகரம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவையெல்லாம் கடந்த
ஆறு மாதத்தில் நடைபெற்றவை.

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விரைவில் விடுதலை செய்யப்படா விட்டால் இந்த ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் தமுமுக தயங்காது என்றும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதிலிருந்து தமுமுகவின் நேர்மையான அணுகுமுறையை சில பொது அறிவில்லாதவர்கள் வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுத்தாலும், மனசாட்சி உள்ளவர்கள் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்வார்கள்.

RSS தீவிரவாதிகள் பெங்களுரில் வன்முறை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:21 முப
RSS தீவிரவாதிகள் பெங்களுரில் வன்முறை
தம்பி ஜடாயு ஆர்.எஸ்.எஸ் என்ற சமூக விரோத அமைப்பு நடத்திய கூட்டம் பற்றி எழுதி இருந்தார். அவர் சொல்லாத விபரங்களை நான் இங்கே தருகிறேன்.

பெங்களூரில் நடந்த பார்ப்பன வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் 3 போலீஸாருக்கு கத்திக்குத்து காயமடைந்தனர். இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, 3 நாள்களாக பதற்றத்துடன் இருந்த சிவாஜிநகர், பாரதிநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்எஸ்எஸ் என்ற சமூக விரோத அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி மீண்டும் வன்முறை துவங்கியது.

இந்த வன்முறையில் பல பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் எரிக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன.

இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் மாலையில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலையாததால் பாரதிநகர் காமராஜர் சாலையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் குண்டு காயங்களுடன் பெளரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வன்முறையில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறையில் 3 போலீஸாருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. பலர் கல்வீச்சில் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்ட இந்து வெறியர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுமார் 300 ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.

அரவிந்தனும் காக்கி அரை ட்ரவுசர்களும்!

அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பெங்களூர் சம்பவம் குறித்த எனது பதிவுகளை விமர்சிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இரட்டை நாக்கு தனம் என்று சொல்லி இருக்கிறார். அது தனிமனித தாக்குதல் என்றாலும் நாம் அவருக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நீலகண்டன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஆலகால விசத்தை தொண்டையிலிருந்து கக்கிவரும் காக்கி அரை டிராயர் ஆர்எஸ்எஸ் தொண்டர் தான் இந்த அரவிந்தன் நீலகண்டன். இந்து மதத்தை தாங்கிப் பிடிக்கிறேன் என்ற போர்வையில்(தொங்கிக் கொண்டிருக்கிறதா?) பல்வேறு கட்டுக்(கதை) கட்டுரைகளை ராஜாராமின் துணையோடு திண்ணையில் எழுதி விசமித்தவர். அடிப்பொடிகளை நம்பி இப்பொழுது வலைப்பதிவுகளிலும் தன் வாந்தியை கக்கிக் கொண்டிருக்கிறார்.

கீழக்கரையில் இஸ்லாமியன் ஒருவன் தும்மினால் கூட சென்னையில் வெடிகுண்டு என்ற ரீதியில் பழைய செய்தித் தாள்களை நூலகம் சென்று தேடி எடுத்து வந்து தூசிதட்டி, ஸ்கேன் செய்து ஆதாரம் இதோ எனக் காட்டுபவர். பிரியாணி அதிகம் உண்டு ஒரு இஸ்லாமியர் தன் வாயுக் கோளாரினால் அது கொஞ்சம் சத்தமாக(குசு) வெளிப்பட்டு இருந்தால்கூட தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால் விசவாயு என்றும், கரிக்கடையில் ஒரு பாய் ஆடு வெட்டினால்… இஸ்லாமியர்கள் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார்கள் என்றும் பீதியைக் கிளப்புவதில் வல்லவர்.

அன்னார் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அடிப்பொடிகளைத் தவிர யாரும் அன்னாரின் பதிவுகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் தமிழகம் பீகார் ஆகிவிட்டது என்றும் பெங்களூரில் இந்து முன்னணி அமைப்பினரின் அமைதி ஊர்வலத்தில் பங்கம் என்று சொல்வதை கேட்டு நம்மால் நகைக்காமல் இருக்க முடியவில்லை.

அன்னாரிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் ‘இந்து’ எழுச்சி என்ற போர்வையில் எழுதுவதை விட்டுவிட்டு பார்ப்பனர்களின் ஊதுகுழல் என்ற ரீதியில் எழுதினால் இன்னும் நல்லது. ஏனென்றால் இந்துக்கள் சமத்துவம் பெறவேண்டும் என்று சமூக நீதிக்காக போராடுபவர்களின் உணர்வை உம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாமெல்லாம் இந்துக்கள் என்று தலித்துக்களை தந்திரமாக இந்து மதத்துக்குள் வைத்திருந்து… மலம் அள்ளவும் மற்றும் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யவும், கோவிலுக்குள் வெளியில் விட்டுச் செல்லும் செருப்பை பாதுகாக்கவும் பார்ப்பனர்கள் திட்டம் போட்டு செயல்படுத்தி வருவதை உம்மால் கண்டிக்கவோ, சுட்டிக் காட்டவோ இயலாது. பார்ப்பனர்களிடமிருந்தும், பார்ப்பிணியத்தில் இருந்தும் இந்து மதத்தை மீட்க உம்மால் ஒருபோதும் முடியாது.

முதலில் நமது இந்து மதத்திற்குள் எல்லோருக்கும் சம உரிமை கிடைக்க முயற்சி செய்துவிட்டு… ஒருவேளை கிடைத்தால் பின்பு இந்து என்ற உணர்வை ஊட்ட முயற்சி செய்வீர். அதை விட்டுவிட்டு இரட்டை நாக்கு எனக்கென்றால், இரட்டை நாக்கும், விசப்பல்லும் உடைய விசம்பாம்பு நீர் என்று சொல்வதற்கு நானும் கொஞ்சமும் தயங்கமாட்டேன்.

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_116952455847034531.html


அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.

நன்றி : விடாது கருப்பு

ஜனவரி 22, 2007

DUBAI-IJTIHAD ஹஜ் செர்வீஸ் ஊழல்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:59 முப

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

நீங்கள் சமுதாய நல விரும்பிகளா? இதைப் படியுங்கள்.

அன்புள்ள சமுதாய நல விரும்பிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வாழ்க்கையில் இழந்துவிட்ட நன்மைகளை ஈடு செய்ய, கோடிக்கணக்கான நன்மைகளை குறுகிய காலத்தில கொள்ளையடித்திட முஸ்லிம்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பே புனித ஹஜ் பயணம். ஓரு தொழுகைக்கு ஒரு லட்சம் தொழுகையைவிட அதிகமான நன்மைகள் கஃபதுல்லாவில் தொழுதால் கிடைக்கும். இது மாதிரி நன்மைகளை உலகில் வேறு எங்கு தொழுதாலும் அடைய முடியாது. இது கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

அந்த ஒரு லட்சம் நன்மைகள்.

புனிதமான கஃபதுல்லாவுக்கு போகாமல் மக்காவில் எங்கு தொழுதாலும் எந்தப் பள்ளியில் தொழுதாலும் எந்த இடத்தில் தொழுதாலும் ரூமில் தொழுதாலும் அந்த ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வீர்களா? அது மட்டுமா? அப்படி அல்லாஹ் தராவிட்டால் அந்த ஒரு லட்சம் நன்மைகளை நான் வாங்கித் தருவேன் என்று ஒருவர் சொன்னால் ஜீரணிப்பீர்களா? இப்படி சொன்னது யார் தெரியுமா? துபையிலிருந்து சென்ற அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸ் பொருப்பாளர்களில் ஒருவரான ஹுமாயூன் கபீர் அவர்கள்;தான்.

15 ஆண்டுகள் அனுபவம், 20 ஆண்டுகள் அனுபவம் என்று விளம்பரம் செய்த அனுபவசாலிகளெல்லாம்? சமுதாய நலன் கருதி? கூட்டணி அமைத்து ஓரணியாக செல்வதாக விளம்பரம் செய்தார்கள். 21-01-2004 புதன் காலை பயணம் இல்லை மதியம் அஸர், மஃரிபு, இஷh இப்படி இழுத்தடித்து புறப்படும் நேரங்களை மாற்றி மாற்றிக் கூறி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டார்கள். ந{ர் 1, 2, 3. என்று மூன்று (மதனி டிரான்ஸ் போர்ட்) பஸ்கள் புறப்பட்டன. இதில் ஹுமாயூன் கபீர் அவர்களை அமீராகக் கொண்ட 3 வது எண் பஸ்ஸிலிருந்து நேர்முக வர்ணனையை சுருக்கமாகத் தருகிறோம்.

ஸ்பீக்கரில் ஒலித்த (கண்ணியமான?) முதல் குரல்.

ஷஷஏம்பா எல்லாம் இங்க கவனி, அவன் அவன் பாஸ்போர்ட் அவனவன் கையில் இருக்கா? விஸா அடித்து இருக்கான்னு பாரு. பஸ் புறப்பட்டதும் ஹஜ் பயணிகபை; பார்த்து ஸ்பீக்கரில் ஒலித்த (கண்ணியமான?) முதல் குரல் இது. ஒரு ஹஜ் பயணி ஏதோ ஒரு விளக்கம் கேட்கிறார். யாருப்பா நீ, உன் வேலையைப் பாருப்பா நீ, நான் அமீரா? நீ அமீரா? இப்படி கனிவான? முறையில் பதில் கூறிய அமீர் பயான் செய்து கொண்டே வருகிறார். பஸ் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ எத்தனை வேலை தொழுகையை விட்டிருப்பே?

மஃரிபு நெருங்குகிறது அஸர் தொழாதவர்கள் இருக்கிறோம் பஸ்ஸை நிறுத்துங்கள் என்று சிலர் அமீரைப் பார்த்து கூறினார்கள். ஷஷநீ எத்தனை வேலை தொழுகையை விட்டிருப்பே? எனக்கு தெரியாதா? என்னவோ 5 நேரமும் ஜமாஅத்தோடு தொழுத மாதிரி என்ன அஸர் அஸருங்கிறே பேசாட்டு உட்காரு ஹஜ் பயணிகளின் அமீர் அளித்த பதில் இது. அபுதாபியிலிருந்து வரும் பயணிகளுக்காக மப்ரக்கில் குறுகிய ஆபத்தான ரோட்டில் பஸ் நிற்கிறது. ஏம்பா யாரும் இறங்கக் கூடாது என்ற உத்தரவுடன் அமீர் இறங்கி விடுகிறார். அஸர் தொழாதவர்கள் இறங்கி அஸர் தொழுது முடிக்கவும் மஃரிபு பாங்கு ஒலித்தது. மஃரிபுடன் இஷh ஜம்வு செய்ததும் புறப்பட்ட பஸ் இரவு 10 மணிக்கு டிரைவர்கள் சாப்பிடும் ரெஸ்ட்ராரண்டில் நின்றது.

11 மணிக்கு யு.ஏ.இ. பாடரில் நின்றதும் அமீர் இறங்கி போய் விடுகிறார். பெண்களெல்லாம் கால் வலிக்க உட்கார்ந்திருக்கிறார்கள். 11.45க்கு பஸ் புறப்படுகிறது. நமது நாட்டில் டவுண் பஸ்ஸில் கூட இவ்வளவு நேரம் நிற்கும் என கண்டக்டர் அறிவிப்பார்;. நீங்கள் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறீர்களே! என்று ஹஜ் பயணிகள் கேட்டார்கள். ஓட்டலில் நின்றால் சாப்பிடுவதற்கு, பெட்ரோல் பங்கில் நின்றால் பெட்ரோல் போட இதையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்றார் அமீர்.

காணாமல் போன பாஸ்போர்ட்டுகள்.

சவூதி நேரம் 11 மணிக்கு சவூதி பாடரில் முதல் பஸ்ஸாக 3 ஆம் ந{ர் பஸ் நின்றது. யாரும் இறங்காதீர்கள் என்ற உத்தரவுடன் அமீர் போய் விட்டார். பிறகு வந்த ஒமான் பஸ்களெல்லாம் இமிகிரேஷன் கிளீயர் ஆகி போய் விட்டன. விடிய விடிய வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரும் கடுங்குளிரில் நடுங்கித் தவித்தனர். அமீர் மட்டும் பள்ளிவாசலில் போய் படுத்து தூங்கி விட்டார். காலை 6 மணி ஆகியும் 3 ஆம் ந{ர் பஸ் செல்லவில்லை. இமிகிரேஷனில் பாஸ்போர்ட்டுகளே இல்லை என்ற பதில். பல கவுண்டர்களில் தேடிப் பார்த்த பின்னர் இரவு 1 மணிக்கே கிளியர் ஆகி உள்ளது. பல முறை அழைத்தும் பொறுப்பாளர் செல்லாததால் பாஸ்போர்ட்டுகள் ஓரங்கட்டப்பட்டதை பயணிகள் முயற்சியால் அறிந்தோம்.

நீ அமீரா? நான் அமீரா?

ஹஜ் பயணிகள் தங்குவதற்கு குளிரிலிருந்து பாதுகாப்பான பல கூடாரங்களை கழிப்பிட வசதியுடன் சவூதி அரசு அமைத்து உள்ளது. வழிகாட்டிகள் அமீர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் அனுபவித்தார்களே தவிர பயணிகளுக்கு வழிகாட்டவில்லை. திறந்த வெளி மணல் மேடுகளைத்தான் கழிப்பிடங்களாக பலர் பயன் படுத்தினர். காலை நாஷ;ட் டாவுக்காக டிரைவர்கள் சாப்பிடும் ரெஸ்ட்ராரண்டில் நின்றது. அப்பொழுது மணி 10-30 இருக்கும். 3ஆம் ந{ர் பஸ் அமீர் ஷஎல்லோரும் லுஹர் அஸர் ஜம்வு கஸர் தொழுங்கள் என்கிறார். வக்து வரவில்லையே என்று கேட்டவர்களிடம் ஷநீ அமீரா? நான் அமீரா? பேசாம உன் வேலையைப் பாருப்பா என்கிறார். அமீர் சொல்படி சிலர் தொழுதனர். மிகுந்த கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு சரி வண்டிக்கு போங்கப்பா என்கிறார்.

பஸ் போய்க் கொண்N;ட இருக்கிறது. யாராவது பசிக்கிறது என்றால் யா அல்லாஹ் இவரது பசியை போக்குவாயாக! என்பார். பாத் ரூம் போகணும் என்றால் யா அல்லாஹ் இவரது பாத் ரூம் தேவையை பூர்த்தி செய்வாயாக என்பார். இது மாதிரி பதில்களால் வெறுத்துப் போன ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அமீருடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள். மதிய உணவு இன்றி ரியாத்-அல்மாஸியா சென்றடைய மஃரிபு ஆனது. அங்கு முத்துப் பேட்டை நஜ்முத்தீனின் தமிழ்நாடு உணவகத்தில் சாப்பிட்டார்கள். சுபுஹுக்கு முன் மீகாத் சென்றடைந்தது பஸ்.

மக்காவை வரக் காணோம்!

சுபுஹு தொழுது இஹ்ராம் ஆனார்கள். அதற்குப் பிறகு புறப்பட்ட பஸ் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டே இருக்கிறது மக்காவை வரக் காணோம்! பஸ் டிரைவர்கள் இஹ்ராம் ஆடை அணியாததால் நமது 3 பஸ்களை போலீஸ் விடவில்லை என்றார்கள். இஹ்ராம் ஆடை அணியாத டிரைவர்களுடன் மற்ற பஸ்கள் செல்வதைக் கண்ணால் கண்டும், நம் அமீர்கள் வாய் திறந்தால் உண்மைதானே பேசுவார்கள்? என்ற நம்பிக்கையில்? இருந்தார்கள்.

குறிக்கோலில் வெற்றி கண்டு விட்ட அமீர்கள்.

பிறகு வேறு 3 மதனி பஸ்கள் வந்தன. அதில் ஏறுமாறு அமீர்கள்; கட்டளை இட்டனர். தலை விதி என வெறுப்புடன் இஹ்ராமான எல்லாரும் வாய் மூடி இறங்கி ஏறினர். சாமான்களை இறக்கி ஏற்றினர். அந்த டிரைவர்களும் இஹ்ராம் ஆகவில்லை பேண்ட்-ஷர்ட் போட்டிருந்தனர். ஆனால் மக்கா எல்கைக்குள் பஸ் சென்றது. மக்கா எல்கைக்குள் வெளிப் பகுதி பஸ்கள் நுழைய ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். அதை செலுத்தாமல் நுழைய பல வழிகளில் முயன்றுள்ளனர். முடியாமல் போனதும் மக்கா எல்கைக்குள் ஓடும் மதனி டிரான்ஸ் போர்ட்டின் பஸ்களை கொண்டு வரச் செய்துள்ளனர். ஆக மக்கா எல்கைக்குரிய நுழைவு கட்டணம் செலுத்தாமல் செல்ல வேண்டும் என்ற குறிக்கோலில் வெற்றி கண்டு விட்டனர் நம் அமீர்கள்.

எஜமான் பட காதல் பாட்டு

லுஹருக்கு மக்கா சென்றடைந்தும் ஹரமுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமல் சாமான்களை இறக்கி ரூம்களில் ஏற்றக் கூறினர். 4 கி.மீ. தொலைவில் உள்ள ரூமில் இருந்து நடந்து நடந்து ஹரம் சென்றும் நடந்து கொண்டிருந்த அஸர் ஜமாஅத்தில் சேரவிடவில்லை. 5 மணிக்கு வெளிப் பள்ளியில் அஸர் தொழ வைத்தார். பூமியிலிருந்து வானத்தை பிரித்ததும் பூமி ஆடியது. உடன் அல்லாஹ் மலைகளை ஊன்றினான் ஆட்டம் நின்றது. அப்பொழுது ஊன்றிய முதலாவது மலைதான் இதோ இருக்கும் அபூ குபைஸ் மலை என சப்தமாக டி.வி. பாணியில் அதிய? தகவல்களை பயான்களாக கூறிக் கொண்டிருந்தார்.

நடராஜர் யார் தெரியுமா? அவர்தான் ஆதம் (அலை) என்பன போன்றவைகளை பயானாகக் கூறியதையும், ஷஎஜமான் படத்தில் வரும் ஷஒரு நாளும் உனை மறவாத .. என்ற காதல் பாட்டை கஃபாவை நோக்கி நின்று பாடியதாகக் கூறி பெருமைபட்டதையும் ஏற்கனவே செவிமடுத்தவர்கள் இவரது உரைகளை புறக்கணித்தனர். இப்படியாக மஃரிபு, இஷh முடிந்தும் உம்ராவை நிறைவேற்ற விடாமல் காலம் தாழ்த்தினார்.

கஃபாவில் முட்டியால் இடித்து தள்ள வேண்டும்?

வலம் வரும்போது எல்லாரும் கைகளை கோர்த்துக் கொள்ள வேண்டும். யாராவது நுழைந்தால் முட்டியால் இடித்து தள்ள வேண்டும். என்பன போன்ற (அழகிய?) மார்க்க உபதேசங்களைக் கூறினார். சுபுஹுவில் இஹ்ராம் ஆனவர்கள் உம்ரா செய்து முடிக்க இரவு 12 மணி ஆனது. ரூம் வசதிகள் பற்றி சவூதி அரசு அதிகாரிகள் பார்வையிட ரூமுக்கு வந்துள்ளார்கள். அப்பொழுது பயணிகள் இருந்தால் 30 பேர் தங்குகிற இடத்தில் 50 பேர் அடைக்கப்பட்டுள்ளது தெரிந்து விடும். எனவே இவ்வளவு காலம் தாழ்த்தி உள்ளார்.

21 நாள் பயணத்தில் சாப்பாட்டுக்கு என்று 350 திர்ஹங்கள் வீதம் வாங்கி உள்ளனர். வழியில் சாப்பாடு இல்லை என்றனர். மக்கா சென்றும் சாப்பாடு இல்லை. சாப்பாடு கேட்டால், ஷஇருந்தால் சாப்பிடு இல்லாவிட்டால் பேசாமல் இரு என்றார். ஏன் சாப்பாட்டுக்கு காசு வாங்கவில்லையா என்றதற்கு அப்படித்தான் என்ன செய்ய முடியுமோ செய் நோட்டீஸ் போடுவியா? போடு. பத்தாயிரம் நோட்டீஸுக்கு நான் காசு தாரேன். எஹ்யா, தாவூதிடம் சொல்லி விட்டேன் அவர்கள் உங்கள் சாப்பாட்டுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை என்றார். பசியால் சண்டை போடுபவர்கள் எண்ணிக்கை கூடியதும், ஷஎத்தனை நாள் சாப்பாடு கிடைக்கவில்லையோ அதற்குரிய பணம் திரும்ப தருவோம். உங்கள் செலவை எழுதி வையுங்கள். சராசரி 200 திர்ஹங்கள் தருவோம் என்று 3ஆம் ந{ர் பஸ் அமீர் ஹுமான் கபீர் கூறினார்.

ஹுமாயூன் இல்லாத நேரத்தில் 2 ஆம் ந{ர் பஸ் அமீர் எஹ்யா ஹஜ்ரத் வந்தார். அவரிடம் ஹஜ் பயணிகளுக்குரிய அடையாள அட்டைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களை போலீஸ் பிடித்தால் என்ன செய்ய என்று முறையிட்டனர். எங்கே ஹுமாயூனை? பாஸ்போர்ட்களை முஅல்லிமிடம் கொடுத்தால்தான் மினா, அரபாத்தில் கூடாரம் கிடைக்கும் அதற்குரிய டோக்கன்களும் கிடைக்கும். அவர் செய்யாவிட்டால் என்னிடம் தந்தால் நானாவது செய்வேன் என்றார். எல்லாரும் ஹுமாயூன் பற்றிய குறைகளைக் கூறினர். 27 ஆம் தேதியிலருந்து ஏனோ தானோ சாப்பாடு போட்டார்கள். அதுவும் தொடராக அல்ல திடீரென காலை நாஷ;ட்டா இல்லை என்பர். திடீரென மதிய உணவு இல்லை என்பர்.

எத்தனை ஜமாஅத்தை ஊரில் விட்டிருப்பே?

28 ஆம் தேதி சுபுஹுக்குப்பின் ஜியாரத் என்றார்கள். 11 மணிக்குத்தான் பஸ் வந்தது. இப்பொழுது போனால் எப்படி லுஹர் ஜமாஅத் கிடைக்கும் என்று கேட்டனர். எத்தனை ஜமாஅத்தை ஊரில் விட்டிருப்பே, என்னைக்காவது சுபுஹுவை ஜமாஅத்தோடு தொழுது இருப்பியா? என்றார் ஹுமாயூன். தொழுகை சம்பந்தமாக பேசும்போதெல்லாம் இது மாதிரிதான் மக்காவிலும் மதினாவிலும் பதில் கூறி ஹஜ் பயணிகளின் மனதை நோகடித்தார். மக்காவில் எங்கு தொழுதாலும் எந்த பள்ளியில் தொழுதாலும் எந்த இடத்தில் தொழுதாலும் ரூமில் தொழுதாலும் ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும். அப்படி அல்லாஹ் தராவிட்டால் அந்த ஒரு லட்சம் நன்மைகளை நான் வாங்கித் தருவேன் என்று ஜியாரத்தின்போது தவ்ர் குகை மலை அடிவாரத்தில் நின்று கூறினார்.

மார்க்கத்தை விடுங்க, உங்க விருப்பத்தைச் சொல்லுங்க.

மினாவுக்கு பிறை 7 இஷh தொழுதவுடன் போகிறீர்களா? ஜும்ஆவுக்குப் பிறகு போகிறீர்களா? நடந்து போகிறீர்களா? என்று தனித்தனியாகக் கேட்டார். மார்க்கம் என்ன சொல்கிறது அதன்படி நடப்போம் என்றால், மார்க்கத்தை விடுங்க உங்க விருப்பத்தைச் சொல்லுங்க என்றார். மார்க்கப்படிதானே நடக்கனும் என்று குறுக்கிட்டு பேசிய மற்றவர்களை உன்னிடம் யார் கேட்டா? உன்னிடம் கேட்டால் நீ பதில் சொல் என பேச விடாமல் வாயை அடைத்தார். மரியாதையாகப் பேசு, நீ – நீ என என்ன மரியாதை இல்லாமல் பேசுகிறாய். உன் தகப்பன் வயதில் உள்ளவர்களும் இருக்கிறோம் இப்படியாக பல முறை நடந்த சண்டை ஜியாரத்தின் போது உச்சகட்டத்தை அடைந்து பஸ் ஆடியது.

இது ஒரு கூட்டு நாடகம்.

29 ஆம் தேதி யஹ்யா ஹஜ்ரத் வந்து வித்தியாசமான விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்தார். எங்கே ஹாஜிகளுக்குரிய அடையாள அட்டை? எங்கே மினா கூடார அட்டை என்றதற்கு, இதுதான் அரபி தந்தான் என்றார். ஒரே சண்டையும் கூச்சல் குழப்பமுமானது. ஹாஜிகளுக்குரிய அடையாள அட்டை எங்கே என யஹ்யா ஹஜ்ரத்திடம் போய் கேளுங்கள் என்று 3 ஆம் ந{ர் பஸ் பயணிகளை ஹுமாயூன் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார். இதை கவனித்து பார்த்தவர்கள் இது ஒரு கூட்டு நாடகம் என விளங்கிக் கொண்டார்கள்.

ஹஜ்ஜாளிகளுக்கு சக்தி மாத்திரை?

ஒவ்வொரு வக்துக்கும் 4 கி.மீ. தூரம் நடந்து நடந்து அசதியாகி பல நோய்களுக்கு உள்ளாகி விட்டார்கள். பிறை 7 அன்று ஷநாளை மினா செல்ல இருப்பதால் சக்தி மாத்திரை சாப்பிடுங்கள். ஆண்களுக்கு 3 பெண்களுக்கு 2 குழந்தைகளுக்க 1 என ஹுமாயூன் கொடுத்தார். நம்பிக்கையுடன் சாப்பிட்டவர்கள் நிரந்தரமாக கக்கூஸில் இருந்தார்கள். அவர் கொடுத்தது பேதி மாத்திரை. யாரும் நல்ல சாப்பாடு கேட்கக் கூடாது. அவர்கள் தரும் லெமூன் சாதமே கதி என இருக்கணும் என்பதற்காக செய்த சதி இது.

லேபிலை கிளித்து மாத்திரையை மட்டும் கையில் கொடுத்து வாயில் போடுங்கள் என்றே கொடுத்தார். பிறகு சாப்பிடுகிறேன் என்று வைத்தவர்கள் தப்பினார்கள். ஒரு மூதாட்டி சீரியஸ் ஆகி அஸரிலிருந்து இஷh வரை நினைவற்றுப் போனார். பாதிக்கப்பட்டவர்கள் என்னங்க சக்தி மாத்திரைன்னு பேதி மாத்திரை தந்து விட்டீர்கள். ஒரே வயிற்றுப் போக்கால் நிற்க முடியவில்லை என்று கேட்டதற்கு, ஷவயிறு சுத்தமாகி விட்டதில்ல போங்க என்று சாதரணமாக பதில் சொன்னார்.

மினாவில் தங்க தேவை இல்லை?

தாவூத் அலி ஹஜ்ரத், யஹ்யா ஹஜ்ரத் பொறுப்பில் உள்ள பெரும்பாலானவர்களை பிறை 7 இஷhவுக்குப்பின் மினா அழைத்துச் சென்று விட்டனர். அதில் 6 பேர் மட்டும் மாhக்க அடிப்படையில் சுபுஹுக்குப்பின் புறப்பட்டுள்ளனர். பிறை 8ல் மட:;டும் மினாவில் தங்கினால் போதும். 10,11,12களில் மக்காவில் உள்ள ரூம்களில் தங்கி விட்டு மினாவில் கல் எறிந்தால் போதும் என்ற புதிய சட்டத்தை 3 அமீர்களும் கூறினார்கள். பிறை 8 அன்று காலை 10 மணி ஆனது. வாங்க மினா போவோம் நேரம் ஆகுது என ஒருவர் சொன்னார். அவரைப் பார்த்து ஹுமாயூன், ஷஉன் வேலையைப் பார்த்துப் போ என விரட்டினார். பிறகு எல்லாருக்கும் ஹஜ் நிய்யத்? சொல்லிக் கொடுத்தார். பிறகு இதோ இதோ என 2 கி.மீ. நடத்திச் சென்றார். 20 சீட் உடைய மினி பஸ்ஸை பிடித்து 50 பேரை ஏறச் சொன்னார். பெண்களையும் வேன் டாப்பில் ஏறச் சொன்னார். சிறிய சண்டைக்குப் பிறகு வேறு வேன் பிடித்தார்.

ஹுமாயூனை வரச் சொல்கிறேன்.

மினாவில் போய் கூடாரம் தெரியவில்லை என 1-30மணி நேரம் அங்கும் இங்குமாக நடக்க வைத்தார். பிறகு ஒரு இடத்தில் நிற்க வைத்து 2 மணிக்கு 20 மஞ்சல் கயிறு அட்டையை தந்து 20 பேரை 17 ஆம் ந{ர் கூடாரத்திற்கு போகச் சொன்னார். பிறகு 10 பிறகு10 பிறகு 10 என எல்லாரும் கூடாரத்திற்குள் நுழைந்தோம். பெண்களை தாவூத் அலி ஹஜ்ரத் அழைத்துச் சென்று ஒரு கூடாரத்தில் நுழையச் சொன்னார். நுழைந்த வேகத்தில் பெண்கள் திரும்ப வந்து கால் வைக்க இடமில்லை என்றனர். அட்ஜஸ் பண்ணி இருங்கள் என்றார். பெண்களுக்கும் தாவூத் அலி ஹஜ்ரத்துக்கும் சிறிது விவாதம் நடந்தது. ஹுமாயூனை வரச் சொல்கிறேன் என்று தாவூத் போய் விட்டார். ஹுமாயூன் வந்து அவருக்கே உரிய அடாவடித்தனமானப் பேச்சால் பெண்களை நிர்ப்பந்தமாக உள்ளே போகச் செய்தார்.

அமீராக ஹுமாயூன் வர வேண்டாம்.

முந்தைய நாளில் எஞ்சிய புரோட்டாவை முதலில் கொடுத்தார்கள். பிறகு முந்தைய நாளில் தயாரித்த எலுமிச்சை சாப்பாடு கிடைத்தது. நமது கூடாரம் என்று எண்ணி உரிமையுடன் நுழைந்த ஆண்கள் பகுதியில் நெருக்கடி அதிகமானது. ஜும்ஆ முபாரக் என்ற அரபி வந்து யா ஹைவான் — – – என (பெயர் சொல்லி) கூப்பிபட்டார்? வொய்ன் ஹாதா ஹைவான் என சப்தம் போட்டார் அமீர்கள் தலைமறைவாகி விட்டனர். 50 பேர்களுக்கு மட்டும் கூடாரம் எடுத்து விட்டு 150 பேர்களை நுழைத்துள்ளனர். இரவில் வந்தவர்கள் கழுத்தில் போட்டிருந்த மஞ்சல் கயிறு அட்டைகளை கழட்டி வாங்கி வந்து 3 ஆம் ந{ர் பஸ் ஆட்கள் கழுத்தில் மாட்டி விட்டு கூடார நுழைவாயில் பொறுப்பாளர்களை ஏமாற்றியுள்ளனர் என்று பிறகுதான் விளங்கியது. இந்த கூடாரத்தில் தங்க முடியாது என்றானதும் வேறு கூடாரம் உள்ளது என்றனர். ஆக 3 பேரும் சேர்ந்துதான் வியாபார நோக்குடன் செயல்படுகின்றனர். இதை புரியாதவர்கள் எங்களுக்கு அமீராக ஹுமாயூன் வர வேண்டாம் என்றனர்.

யஹ்யா ஹஜ்ரத்தை அமீராக ஏற்று வேறு கூடாரம் நோக்கி சென்றோம். சென்றோம், சென்றோம் சென்று கொண்டே இருந்தோம். மினா முடிந்தது என்ற போர்டைத் தாண்டி முஜ்தலிபா என்று போர்டு உள்ள பகுதியின் கூடாரத்தில் விட்டார். முஜ்தலிபா என்று போர்டு உள்ளதே என்று கேட்டதற்கு இதை மினாவாக அரசாங்கம் ஆக்கி உள்ளது என்று யஹ்யா ஹஜ்ரத் கூறினார். பெரும்பாலானவர்கள் நடந்து நடந்து நோயாளிகளாக ஆகி விட்டார்கள். வழக்கமான போராட்டத்திற்குப் பிறகு இரவு உணவாக காய்ந்த குபுஸ் கிடைத்தது.

இஹ்ராம் ஆடை பற்றிய புதிய விளக்கம்.

கந்தூரா அணிந்து கொண்டு மினாவில் தங்கிய ஹுமாயூன். ஷஇதுதான் இஹ்ராம் ஆடை என்று கூறி, இஹ்ராம் ஆடை என்றால் தூய்மையான ஆடை என்பதுதான் பொருள். ரசூலுல்லா காலத்தில் தையல் மிஷpன் கிடையாது எனவே தைக்கப்படாத 2 ஆடை அணிந்தார்கள் என்று யாரும் கேள்விப்படாத புதுமையான விளக்கங்களை மினாவில் கூறிக் கொண்டிருந்தார்.

பிறை 9 ல் அரபா செல்ல காலை 4 மணிக்கே பஸ் பிடிக்க சென்றதாக கூறினார்கள். இதோ இதோ என காலை 9மணி ஆகியும் பஸ் வரவில்லை. எல்லா கூடாரத்திலுள்ளவர்களும் காலியாகி சென்று விட்டனர். 9.30க்கு வந்த யஹ்யா ஹஜ்ரத் ஷசுபுஹு தொழுதவுடன் சென்ற இன்ன இன்ன குரூப் பஸ்களெல்லாம் இன்னும் அரபா சென்று சேரவில்லை. டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டுள்ளது. நாம் லேட்டாகப் போய் எளிதில் சேர்ந்து விடுவோம் என்று கூறிய ஆறுதல் வார்த்தைகளை நம்பினோம். முதலில் பஸ் கூடார வாசலுக்கு வரும் என்றார். பிறகு மெயின் ரோடு நோக்கி நடக்கக் கூறினார் நடந்தோம்.

10.30 மணிக்கு வந்த பஸ் அரபா சென்றடைய 2-30 மணி ஆனது. கூடாரம் சென்று அடையவில்லை. நடு ரோட்டில் இறக்கி விட்டார்கள். காலை நாஷ;ட்டா இன்றி மதிய உணவும் இன்றி பசியுடன் லுஹர், அஸர் தொழுதார்கள். கூடாரம் சென்றடை அரை மணி நேரம் நடக்கணும் என்றார்கள். சரி என நடந்தோம் அங்கும் இங்குமாக நடை நடை என நடக்க வைத்தார்கள். 4 மணிக்கு கூடாரம் சென்று அடைந்தோம். அதே ஜும்ஆ முபாரக் கூடாரம்தான்.

தாவூத் அலி ஹஜ்ரத் அவர்கள் கொடுத்த உணவு.

தாவூத் அலி ஹஜ்ரத் அவர்கள் மதிய உணவு பொட்டலங்களை வினியோகித்தார். கொஞ்ச நேரம்தான் உள்ளது வணக்கத்தில் ஈடுபடணும் என சிலர் வாங்க மறுத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிலர் ஹஜ்ரத் தருகிறார் என வாங்கி ஓரமாக வைத்தனர். பசியால் மயக்க நிலைக்குச் சென்றவர்கள் ஆவலுடன் பெற்று பொட்டலத்தை பிரித்தனர் கெட்டுப்போன உணவு துர்நாற்றம் அடித்தது. ஷஎன்ன ஹஜ்ரத் கெட்டுப் போய் இருக்கு? ஷஅப்படியா வேறு பொட்டலம் பிடியுங்கள் என்றார். அதிலும் அதே வாடை. ஆம் பிறை 7 ல் தயாரித்த எலுமிச்சை சோற்றைத்தான் பிறை 9ல் அரபாவில் 3ஆம் ந{ர் பஸ் ஆட்களுக்கு கொடுத்தார்கள். அவர்கள் என்ன ஓசியிலா வந்தார்கள். 3,500 – 3800-4500 திர்ஹங்கள் வரை கொடுத்துத்தான் வந்தார்கள். அவர்களுக்குத்தான் இந்த கதி. நேரடியாக ஜும்ஆ முபாரக்கிடம் பணம் கொடுத்தவர்கள் 2500 திர்ஹங்கள் மட்டுமே கொடுத்துள்ளனர்.

இது உங்கள் கூடாரமே இல்லை எப்படி சாப்பாடு கிடைக்கும்?

கூடாரம் வர 4 மணி ஆகிவிட்டதே! என்று வருந்தியவர்களிடம் 4மணிக்குப் பிறகுதான் துஆ கபூல் ஆகும் நேரம் என்று கூறி கந்தூராவை கழட்டி விட்டு தைக்கப்படாத 2 ஆடைகளுடன் வந்தார் ஹுமாயூன். அரபாவில் முஅல்லிம் சாப்பாடு என்று நேற்று எஹ்யா ஹஜ்ரத் கூறினார். எங்கே எங்கள் சாப்பாடு? என்று கேட்டதற்கு, இது உங்கள் கூடாரமே இல்லை எப்படி சாப்பாடு கிடைக்கும் என்றார் ஹுமாயூன். 12 மணிக்கு முன்பாக வந்தால் கூடாரத்திற்கு பணம் கட்டப்படாதவர்கள் நுழைய முடியாது. எனவே 4 மணிக்குப் பிறகு ஜியாரத் அடிப்படையில் இங்கு கொண்டு வரப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள். ஆக 3 ஆம் ந{ர் ஆட்களுக்கு அரபாவிலும் கூடாரம் கிடையாது.

மினாவா? முஜ்தலிபாவா?

மஃரிபு ஆனதும் மற்ற கூடாரங்களில் உள்ள எல்லாரும் முஜ்தலிபா சென்றார்கள். 9 மணி ஆகியும் அரபாவை விட்டு கிளம்பவில்லை. ஒருவருக்கு 10 ரியால் 8 ரியால் 5 ரியால் இப்படியாகக் குறைந்து 2 ரியாலுக்கு வந்ததும் புறப்பட்டார்கள். இலவச பஸ்ஸில் 3 ஆம் ந{ர் ஆட்கள் ஏற்றப்பட்டார்கள் அமீராக ஹுமாயூன் வந்தார். இரவு 3மணிக்கு நடு வழியில் இறக்கி விட்டார்கள். அங்கு மஃரிபு, இஷh தொழுது விட்டு நடந்து நடந்து மினா என்று நாங்கள் தங்க வைக்கப்பட்ட கூடாரத்திற்கே கொண்டு வந்து விட்டார் அமீர் ஹுமாயூன். என்னங்க முஜ்தலிபாவில் சுபுஹு தொழுது விட்டுத்தானே மினா வரணும்? முன்னதாக கூட்டி வந்து விட்டீர்களே! என்று கேட்கப்பட்டது. இதை யார் மினா என்றார்கள்? இதுதான் முஜ்தலிபா என்றார் அமீர் ஹுமாயூன்.

ஒழுங்கான வழிகாட்டுதல் இல்லாமல் மினா, கஃபா அங்கிருந்து 4 கி.மீ தூரமுள்ள ரூம் பிறகு கஃபா, மினா இப்படியாக நாங்கள் நடந்து சீரழிந்து கொண்டிருந்தோம். இந்த பாதிப்பின் உச்ச கட்டம் பிறை 12 காலையில் கூடாரம் கொந்தளிப்பால் குலுங்கி காட்சிப் பொருளாகியது. யஹ்யா ஹஜ்ரத்திடம் ஒவ்வொருவரும் போட்ட சப்தத்தில் சுற்றி உள்ளவர்களெல்லாம் வந்து வேடிக்கை பார்த்தார்கள். விபரங்களை கேட்டுவிட்டு அவர்கள் வெட்கித்தார்கள். யஹ்யா ஹஜ்ரத்திடம் ஆயிரம் திர்ஹங்கள் வீதம் நஷ;ட ஈடு தரணும் என்றார்கள். ஒழுங்காக சாப்பாடு தராத வகைக்கு 200 திர்ஹம் வீதம் திரும்ப தருகிறோம் என்றார்.

மினாவில் கூடாரம் போட்டு தங்குவது ஏன்?

10,11,12களில் மினாவில் கூடாரம் போட்டு தங்க சொன்னது — — அரபிகள் இல்லறம் கொள்ளத்தான் எனவே மற்றவர்கள் மக்காவில் தங்கலாம் என்று விளக்க உரை வழங்கினார் ஹுமாயூன். குர்பானி கொடுக்க வேண்டியதில்லை. தவாபுல்விதா போன்றவை செய்ய வேண்டியதில்லை என்பன போன்ற நூதன விளக்கங்களை ஹுமாயூன் தரப்பில் கூறிக் கொண்டிருந்தார். பிறை 12 அன்றே தவாபுல்விதாவும் செய்துவிட்டு மதீனா செல்ல தயாரகச் சொன்னார்கள்.

இதோ பஸ் அதோ பஸ் என கஃபா சென்று தொழ முடியாத வண்ணம் ஒரு நாளை வீணடித்தார்கள். பிறை 14 வியாழன் காலை 12 மணிக்கு அமீர் ஹுமாயூன் கொண்டு வந்த பஸ் மஸ்ஜித் ஆயிஷh போய் நின்றது. லுஹர்,அஸர் ஜம்வு தொழுகை முடிந்து மணி 2 ஆகியும் பஸ் புறப்படவில்லை. பசித்தவர்கள் சாப்பாடு கேட்டதற்கு புத்தகத்தை படியுங்கள் என்றார். பள்ளிவாசலில் சண்டை களை கட்டியது. பாஸ்போர்ட்கள் தாவூத், யஹ்யா வண்டியில் உள்ளது. அந்த வண்டிகள் வந்துதான் போக முடியும் என்றார். கூட்டுக் கொள்ளையர்கள்., சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களைவிட கேடுகெட்டவர்கள். இப்படியாக ஹிந்தி, இங்லீஷ; என பல மொழிகளில் ஹுமாயூனையும் மற்ற அமீர்களையும் திட்டினார்கள். மஸ்ஜித் ஆயிஷhவே ஸ்தம்பித்தது.

ஹுமாயூன் போய் யஹ்யாவும் போய் தாவூத் அலி ஹஜ்ரத் அமீராக வந்தார். பஸ் புறப்பட்டது பயண துஆவை சொல்லிக் கொடுத்தார். பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து சிரியுங்கள். பக்கத்தில் ஆள் இல்லாவிட்டால் வானத்தைப் பார்த்து சிரியுங்கள் என்றார். 150 கி.மீ. தூரத்தில் உள்ள ஓட்டலில் சாப்பாட்டுக்காக பஸ் நிற்கும் என்றார். இரவு 11 மணிக்கு மதீனாவில்தான் சாப்பாடு கிடைத்தது.

நீங்கள் ஆலிம் மற்றவனாக இருந்தால்?

சாப்பாடுகளெல்லாம் ஏனோதானோ என்றிருந்தது. வெந்ததையும் வேகாததையும் விதி என சாப்பிட்டார்கள். ஒரு நாள் காலை வந்த புரோட்டா பார்த்ததும் வாமிட் வரச் செய்தது. வெறுத்துப் போனவர்கள் தாவூத் அலி ஹஜ்ரத்திடம் சண்டை போட்டார்கள். — கிறுக்கன் மடையன் முட்டாள் அவனைப் பார்த்து பேசுவதும் சரி சுவரைப் பார்த்து பேசுவதும் சரி எனவே அவன் வேண்டாம் என ஆலிம்ஸாக்களான உங்களை அமீராக ஏற்றோம். நீங்கள் இப்படி நடக்கலாமா? என்று ஆளுக்கொருவிதமாக கடுமையான வார்த்தைகளால் சப்பதம் போட்டார்கள். (தாவூத் அலி ஹஜ்ரத்தாகிய) நீங்கள் அரபாத்தில் கெட்டுப் போன சோற்றைத் தந்தீர்கள். நீங்கள் ஆலிம் என்பதால் மரியாதைக்காக விட்டேன். மற்றவனாக இருந்தால்? — இந்த செருப்பால் அடித்திருப்பேன் என்று காலில் கிடந்த தடித்தச் செருப்பைக் காட்டினார். புதிய நாஷ;ட்டாவாக மக்ரோரினி கிடைத்தது. 13 ஆம் தேதி மதியம் வந்த சாப்பாட்டைப் பிடித்த சவூதி அதிகாரிகள், இதையா ஹாஜிகள் சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டனர். சாப்பாட்டின் தரம் அப்படி இருந்தது. சாப்பாடு கொண்டு வந்த பங்காளியை பிடித்துச் சென்றனர்.

பிரயாணிகளுக்கு ஜும்ஆ கடமை இல்லை என்று கூறி மதீனாவில் ஜும்ஆ தொழாமல் ரூமில் படுத்துக் கொண்ட ஹுமாயூன், பள்ளிக்குப் போகத் தேவை இல்லை என பிறரையும் கெடுத்தார். ஷமதீனாவில் ரசூலுல்லாவுக்கு (ஸல்) அடுத்து அபூபக்கர் (ரலி) அடுத்து உமர்(ரலி) அடங்கப்பட்டுள்ளார்கள். அடுத்து ஒரு இடம் கியாம நாளில் வரும் ஈஸா (அலை) அவர்கட்கு அதற்கு அடுத்து உள்ள இடம் யாருக்கு தெரியுமா? அதுதான் இந்த ஹுமாயூனுக்கு என்றார். ஷஏங்க இப்படி சொல்லலாமா? என்று கேட்டதற்கு ஷநான் அங்கு அடங்க ஆசைப்படுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். மார்க்க கடமைகளை மார்க்க ரீதியாகச் சொல்லாமல் ஏம்பா அந்த பள்ளியில் போய் 2 ரகஅத் தொழு. இந்த பள்ளியில் 2 ரகஅத் தொழு என கட்டளையாகக் கூறி வந்தார்.

துபை திரும்பும் நாள் பற்றி பலவிதமான தகவலை பரவவிட்டு 13 ஆம் தேதி வெள்ளி இஷhவுக்குப் பின் என்று உறுதி செய்தனர். தங்க வைத்த ரூம் 12 ஆம்தேதி வரை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கடைசி நாள் வரை மறைத்தனர். இன்று காலி செய்ய வேண்டும் என்று ஹுமாயூன் ஒரு ரூமில் போய் கூறுகிறார். எங்கே? தாவூத் யஹ்யா என்று கேட்டதற்கு வேறு பில்டிங்கில் இருக்கிறார்கள் நான்தான் உங்களுக்கு தகவலாக கூறுகிறேன் என்று கூறி உள்ளார். ஒழுங்கான சாப்பாடு இல்லை சர்வீஸ் இல்லை பணத்தை திருப்பி கொடுங்கள்; என ஹுமாயூனை விரட்டிச் செல்ல லிப்டில் ஹுமாயூனை எதிர் நோக்கி தாவூத் யஹ்யா நின்றுள்ளனர்.

இன்னொரு ரூமில் போய் இதே மாதிரி ஹுமாயூன் தகவலாக சொல்வதாக கூறி உள்ளார். அவர்களும் எங்கே? தாவூத் யஹ்யா என கேட்க, இல்லை என கூறி உள்ளார். அங்கு உள்ளவர்கள் ஹுமாயூனுடன் சண்டை போட சப்தம் அதிமாகவே வெளியே நின்ற தாவூத் கதவை திறந்து ஹுமாயூனை கூட்டிச் சென்றுள்ளார். மூன்று பேரும் கூட்டுதான் என்பதை எவ்லாரும் விளங்கிக் கொண்டனர். முந்தைய ஆண்டுகளில் ஒரு நாள் 2 நாள்கள் ரோட்டில் தங்க வைக்கப்பட்டதை அறிந்தோம். எல்லாரும் கூடி மஷ{ரா செய்து வேறு ரூம் எடுத்து தந்தால்தான் இருக்கும் ரூம்பை விட்டு காலி செய்வோம் என்றோம். ஒரு நாளுக்காக வேறு ரூமுக்கு சென்றோம்.

இப்படியாக அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டவர்களுக்கு துபை திரும்பும்போதும் நிம்மதி இல்லை. சிறிய பஸ்ஸைக் கொண்டு வந்து நடக்க முடியாத வண்ணம் நடை பாதை முழுவதும் சீட்டு உயரத்திற்கு தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டன. ஆண்கள் கேன்கள் மீது ஏறி நடந்து விடலாம் பெண்கள்? பெண்களும் ஏறி நடந்தார்கள். இதைப் பற்றி கூட சிந்திக்காத ஹஜ் சர்வீஸ்தான் அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸ். துபையிலிருந்து வந்த பஸ்ஸிலேயே மினா, அரபா, முஜ்தலிபா, மக்கா,மதீனா என மற்ற சர்வீஸ்களில் வந்தவர்கள் எல்லாம் சென்றார்கள். அந்த தொலை தூர பஸ்களில் டாய்லட் வசதிகளும் இருந்தன. ஒரே பஸ்ஸில் எல்லா இடங்களும் சென்றால் திரும்பும்போது இடையில் பஸ் நின்று விடும் என்று வியாக்கியானம் கூறினர். இவர்களின் 2 ஆம் ந{ர் பஸ் வரும்போது வழியில் படுத்துக் கொண்டது.

வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாத பயணம்.

ஆண்டு முழுவதும் சும்மா இருக்கும் அவர்கள் 20 நாள் சர்வீஸில் ஒரு ஆண்டு வருவாயை தேடுகிறார்கள். அதற்காக ஹஜ்ஜாளிகளை ஒவ்வொரு ஆண்டும் கசக்கிப் பிழிகிறார்கள். காலை 10 மணி வரை காக்க வைத்து இன்று நாஷ;டா இல்லை என்றார்கள். மதியம் 3 மணிக்கு இன்று மதிய உணவு இல்லை என்றார்கள். இந்த பட்டினிக் கொடுமையால் அல்சர் வியாதிக்கு ஆளாகி விட்டவர்களும் உண்டு. பயணம் புறப்பட்டதிலிருந்து திரும்ப வரும்வரை தொழும் நேரத்தை தவிர எல்லா நேரங்களிலும் சண்டைதான் நடந்தது. வணக்க வழிபாடுகளில் யாராலும் கவனம் செலுத்த முடிந்ததில்லை. வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாத பயணமாகத்தான் இந்தப் பயணம் இருந்தது.

சட்ட ரீதியாக நடவடிக்கை.

இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாரும் கையெழுத்திட்டு அபுதாபி சகோதரர்களிடம் ஒப்படைத்தோம். ஷசட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதீர்கள். வருகிற ஆண்டுகளில் இது மாதிரி நடக்க மாட்டோம் என அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸினர் கூறி உள்ளனர். சாப்பாடு ஒழுங்காக தராதால் அதற்கு 200 ரியால் திரும்ப தருவோம் என்று யஹ்யா ஹுமாயூன் ஒப்புக் கொண்டனர். பிறகு 140 திர்ஹம் வீதம் துபை வந்து தருவதாக தாவூத் அலி ஹஜ்ரத் கூறினார். யாருக்கும் ஒரு பைசா கொடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் அடுத்த ஆண்டு ஒழுங்காக நடப்போம் என்று அளிக்கும் வாக்குறுதி எப்படி இருக்கும். இந்த ஆண்டு சென்றவர்கள் அடுத்த ஆண்டு செல்ல மாட்டார்கள். எல்லாரும் புதியவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கதி ஏற்பட வேண்டுமா? சமுதாய நல விரும்பிகளே! சிந்தியுங்கள். இவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிடும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள். நடந்த கொடுமைகளின் சுருக்கம்தான் இது என்பதையும் கனத்தில் கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.

இது உண்மைதானா? என்று அறிய இந்த குழுவில் ஹஜ் சென்றவர்களின் போன் எண்களை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 050- 5478377 – 5168774 ‘ 6540422.

fazlulilahi@gmail.com

ஜனவரி 19, 2007

புனித ஹஜ்-ல் வழிகாட்டியாக நயவஞ்சகர்கள் (Hajj Culprits)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 4:58 முப

இந்த கட்டுரை மூலம் தனிப்பட்ட மனிதரையோ, குழுக்களையோ, அமைப்பையோ சாட வேண்டுமென்பது நோக்கமல்ல. அற்ப லாபத்திற்காக ஹாஜிகளை வஞ்சிக்கும் நயவஞ்சகர்களை கண்டித்தும், போதிய அறிவு நிர்வாகத்திறமையின்மையை உணர்ந்து விலகியிருக்க அறிவுறுத்துவதே நோக்கம். இந்நயவஞ்சகர்களின் வாக்கை நம்பி உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஹஜ் செய்ய வந்து நிர்கதியாக்கப்பட்டவர்களின் மன வேதனையே இது.

புனித ஹஜ்-ல் வழிகாட்டியாக நயவஞ்சகர்கள்

நயவஞ்சகனின் அடையாளம் மூன்று:

1. பேசினால் பொய்யுரைப்பான்.
2. வாக்களித்தால் மாறு செய்வான்.
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிம்கள் (வசதி, உடல் தகுதி படைத்தவர்கள்) தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்கள் மீது இறைவன் கடமையாக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது.

அல்லாஹ் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது கடமையாக்கிய ஐந்து கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றி, வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி, பல்வேறு நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வருகின்றார்கள்.

மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது) தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்;. எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (2:197)

முஸ்லிம்கள் தங்களது வாழ்நாள் கடமையான புனித ஹஜ்ஜை நபி வழியில் நிறைவேற்றுதவற்காக (தனித்து செல்ல இயலாத சூழ்நிலையால்) சிறந்த வழிகாட்டிகள் மற்றும் குழுக்களை நாடி தன் வாழ்நாள் சாதனையை நேரிய முறையுடனும், தக்வா-உடனும் செய்ய முற்படும் வேளையில் ‘ஹஜ் வழிகாட்டிகள்’ என்ற போர்வையில் சில நயவஞ்சக கூட்டங்கள் செய்யும் (சைத்தானினிய) சூழ்ச்சியினால் இவர்களை உண்மையாளர்கள் என நம்பி ஏமாந்த ஹாஜிகள் அலைகழிக்கப்பட்டு, நிம்மதியிழந்து, ஈமானிய சிந்தனை குன்றி தங்கள் வாழ்நாள் கனவான புனித ஹஜ்ஜை தக்வாவுடனும், முழுமையாகவும் (மினா, அரஃபா, முஸ்தலிஃபா-வில் குறித்த காலத்தில் தங்குவது, தொழுவது) நிறைவேற்ற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு நிலைகுலைந்து வெறுத்து மனசஞ்சலத்துடன் குறைகளுடன் ஹஜ்ஜை மனம் வெதும்பி நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். காரணம் இந்த நயவஞ்சக வழிகாட்டிகள் தனிமையில் சைத்தானுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றும் பொருட்டு.

இன்னும் மனிதர்களில் ”நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்)
அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. ”பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் ”நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை)உணர்கிறார்களில்லை. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம்
சொல்லப்பட்டால், ‘மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?’ என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, ”நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, ”நிச்சயமாக நாங்கள்
உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள். அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர். (அல் குர்ஆன் 2:8-16)

ஆனால் அல்லாஹ்! இந்நயவஞ்சகர்கள் சைத்தானுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை முறியடிக்கும் பொருட்டு, ஹாஜிகளுக்கு நல்ல உடல்நிலை, மன நிலை, தன்னம்பிக்கை, ஒவ்வொரு இடத்திலும் தனது அடியார்களின் மூலம் உதவி செய்து ஹஜ்ஜை நிறைவேற்றச் செய்குகிறான். ‘அல்லாஹ்! தனது அடியானின் எண்ணத்தையும், முயற்சியையும் பார்க்கிறான்’ என்ற அல்லாஹ்வின் வாக்கை ஹாஜிகள் நினைவில் வைத்துக்கொண்டே அல்லாஹ்வின் உதவியுடன் தன்னம்பிக்கையுடன் சைத்தானின் சதியை முறியடிக்கிறார்கள். புகழனைத்தும் இறைவனுக்கே.

இந்நயவஞ்சகர்கள், மார்க்க அறிஞர்கள் என்ற போலி முகவரியில் உதட்டளவிலும், நடிப்பிலும் மக்களை நம்ப வைத்து ஏமாற்றி தனது ஏமாற்று வேலைக்கு (மறைத்து) தகுந்தவாறு நேரத்திற்கு நேரம் மார்க்கத்தை திரித்து லோக்கல் பத்வாக்களை வெளியிட்டு முஸ்லீம்களை மூடர்களாக்கி தனது வாதத்திறமையின் மூலம் நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள். இவர்கள் மக்களை ஏமாற்றியே பழகியதால், இறையச்சம் துளியுமின்றி ஹஜ்ஜை பொடுபோக்காக எண்ணி தன் தவறை திருத்திக்கொள்ளும் திராணியற்று, கல் நெஞ்சத்துடன் கடைசிவரை விழிக்காமல் உணர்ச்சியற்றவர்களாக நடித்து மொத்தப்பணத்தையும் தனது இலாபமாக எடுத்துக்கொள்வதில் குறியாக இருக்கிறார்கள். ஹாஜிகள் கோபப்பட்டு திட்டினால் சமாதானத்திற்காக சிறிது செலவு செய்து அரசியல்வாதியை மிஞ்சி காட்டுகிறார்கள்.

சவுதிக்காரரிடம் அல்லது வேறு ஏஜண்ட்டிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று இந்நயவஞ்சகர்கள் கூறுவதை உண்மை என நம்புவதற்கு நீங்கள் சவுதிக்காரரிடம்
கொடுத்த பணத்திற்கு ரசீது எங்கே! காவல் துறை புகார் எங்கே! மீதி பணத்தில் மீதி ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை! என கேட்டால் உணர்ச்சியற்ற மழுப்பலே வருகிறது.

குறிப்பிட்ட காலத்தில் ஹஜ்ஜின் ஒவ்வொரு கடமையையும் கட்டாய சூழ்நிலையால் ஹாஜிகள் தன்னம்பிக்கையுடன் சென்று செய்ய கிளம்புவதால் இந்நயவஞ்சகர்கள் ஹஜ் காலம் வரை குருடர்களாகவும், செவிடர்களாகவும் நடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற இறுமாப்பு. முதன்முதலாக ஹஜ் செய்ய வருபவர்களுக்கு இருக்கிற முன் யோசனை கூட இன்றி சிந்திக்கும் திராணியற்றவர்கள் போல் நடிக்கிறார்கள்.

நீங்கள் அளித்த வாக்கை நிறைவேற்றுவீர்கள் என நம்பி தானே பணத்தை உங்களிடம் கட்டினோம் என உரிமைக்குரல் கொடுத்தால் நான் வெறும் எடுபிடி, எங்கள் (கொள்ளைக்) கூட்டத்தலைவரை கேளுங்கள் எனக் கை காட்டுவது உங்களின் மடத்தனத்திற்கும், கையாலாகததிற்கும் ஒரு எடுத்துக்காட்டு. உங்களின் எந்த மாதிரியான 10 (அ) 15 வருட ஹஜ் சர்வீஸ் அனுபவம் (டிரைவர், எடுபிடி, கமிஷன் ஏஜண்ட், கொள்ளை கூட்டத்திற்கு ஏமாறுபவர்களை ஆள் பிடித்து கொடுப்பது) என்பதை விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பெருமைபட பட கூறும் விஷயம் யாதெனில் மற்ற (இவர்களை விட) மோசமான ஹஜ் சர்வீஸின் குறைகளை கேட்டறிந்து அதை விட நாங்கள் நல்லவர்தானே என்பது.

இந்நயவஞ்சகர்களால் கை விடப்பட்டு புதிய இடத்தில், புதிய சூழலில் மினா, அரபா, முஸ்தலிபாவில் தங்குமிடம், உணவு, போக்குவரத்தின்றி வெயிலிலும், குளிரிலும் அல்லல்பட்டு உடல்நிலை மோசப்பட்டு பலகீனப்பட்டவர்கள் பலர். அமானிதத்தின் பொறுப்பை பற்றியே அறியாத இச்செவிடர்களுக்கு உயிரின் மதிப்பா தெரியப்போகின்றது?.

நயவஞ்சகர்களே!
… யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை
நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)

மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

உங்களின் வாதத்திறமையான ஏமாற்று பதிலுக்கு ஹாஜிகள் மறு பேச்சு பேசவில்லையெனில் ஹாஜிகள் நம்பி விட்டதாக நினைக்காதீர்கள். உங்களின் தாடி, தொப்பி, மார்க்க அறிவுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து குறைந்தபட்சம் முஸ்லீமாகவாவது கடைபிடிக்க முயற்ச்சி செய்யவும். உங்களை போன்ற சொல்லும், செயலும் ஒன்றாக இருக்காத போலிகளால் உண்மையான தாஃவா பணியில் ஈடுபடுபவர்களுக்கு அவப்பெயரே.

மறுமையில் மூவருடன் தான் வழக்காடுவதாக அல்லாஹ் கூறுகிறான். எனக்காக (உடன்படிக்கை) கொடுத்து அதை மீறுபவன், ஒரு சுதந்திரமானவனை விற்று அப்பணத்தால் பசி தீர்த்தவன், ஒருவனை வேலைக்கு அமர்த்தி வேலை முடிந்தவுடன் கூலி கொடுக்காது இருந்தவன் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, இப்னுமாஜா)

அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

இவ்உலகில் பிழைக்க எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது. அல்ப இலாபத்திற்காக புனித ஹஜ் கடமையை அல்லாஹ்க்காக தக்வாவுடன் செய்ய, நிறைந்த எதிர்பார்ப்புடன், சிறுக சிறுக சேமித்த சேமிப்பை செலவு செய்து, உடலை வருத்தி, குடும்பத்தினர், வயதானவர்கள், குழந்தைகள், புதிதாக இஸ்லாத்தை கவர்ந்து வந்தவர்கள் என்று பலதரப்பட்டவர் இஸ்லாத்தை முழுமையாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற பரவசத்துடன் உங்களின் வாக்குகளை உண்மையென நம்பி வரும் ஹாஜிகளுக்கு நீங்கள் ஏமாற்றத்தையே பரிசாக அளிக்கிறீர்கள். உங்களை உண்மையாளர் என நம்பி நீங்கள் வாக்களித்த வசதிகளுக்கு ஈடாக முன்பணமாக நீங்கள் கேட்ட முழுதொகையையும், முழு ஒத்துழைப்பையும் கொடுத்ததற்கு செய்யும் சேவை ஹாஜிகளை ஏமாற்றுவதா?

இப்படி ஈனப்பிழைப்பு நடத்தி வயிறு புடைப்பதை விட மற்றவர்களிடம் கையேந்தி ஸதகா, ஜகாத் வாங்கி பிழைத்துக் கொள்ளுங்கள். இனிமேலாவது, உங்களுக்கு நேர்வழி காட்டி முஸ்லீமாக வாழ வழி செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இறைவன் எப்பொழுதும் எல்லா இடத்திலும் மனிதனைப் பார்க்கக் கூடியவனாக இருக்கின்றான். உலகத்தாரின் பார்வையை மனிதன் ஏமாற்றலாம். ஆனால் இறைவனை ஏமாற்ற இயலாது. உலகத்தாரின் – அரசின் தண்டனையிலிருந்து தப்பலாம். ஆனால் இறைவனின் பிடியிலிருந்து தப்ப முடியாது. இறை திருப்தியை – இறை மகிழ்ச்சியைப் பெறுவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகின்றது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இக்கட்டுரையை வாசிப்பவர்கள், தயவு செய்து வாக்கை நிறைவேற்ற தவறிய ஹஜ் சர்வீஸ்க்கு ஆள் சேர்ப்பவர்களிடம் கொடுத்து அநியாயத்திற்கு துணை போக வேண்டாம் என எச்சரிக்கவும்.

இப்படிக்கு,

இந்நயவஞ்சகர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள்.

இக்கட்டுரையில் நாங்கள் பாதிக்கப்பட்ட ஹஜ் சர்வீஸ், மௌலவியின் பெயரை சுட்டிக்காட்டி கேவலப்படுத்த மனம் விரும்பாததால் எங்களின் அனுபவத்தையும் மற்றும் எங்களைப் போல் உள் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்வேறு ஹஜ் சர்வீஸ் வழியாக வந்து ஏமாற்றப்பட்ட மக்களின் பாதிப்பை அறிந்து, அனுபவித்து மேலோட்டமாக எழுதப்பட்டது.

நன்றி : தமிழ் முஸ்லிம் யாஹீ மின்னஞ்சல் குழுமம்
http://groups.yahoo.com/group/tamil-muslim/message/2678

ஜனவரி 18, 2007

KIC நிகழ்ச்சி தெடக்க அறிவிப்பு!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:56 முப
முக்கிய அறிவிப்பு!
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்கோபர் மாநகரில் புதிதாக தொடங்கப்பெற்ற இஸ்லாமிய அழைப்பு மற்றுமு் வழிகாட்டி மையத்தில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 18, 2007 ஹிஜ்ரி 29-12-1427 வியாழக்கிழமை முதல் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும், இஸ்லாமிய(ஷரிஆ) வகுப்புகளும் ஆரம்பிக்கப’படவுள்ளன என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். எனவு, தமிழறிந்த இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

  • வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வயாழன்தோறும் இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும்.
  • இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள் வெளிதோறும் காலை 8 மணி முதல் 11 மணிவரை நடைபெறும்.
  • மார்க்க சொற்பொழிவு நிகழச்சியில் கலந்து கொள்பவர்களுக்கும் சொற்பொழிவிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பவர்களுக்கும் பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படும்.

இஸ்லாமிய நிலையம் அல் மிறா பில்டிங்கில் (மதீனா ரெஸ்ட்டாரென்ட் எதிர்புறம்) உள்ள யுனிவைட் (UNIWIDE) சூப்பர் மார்க்கெட்டிற்கு மேல் அமைந்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு :

மெளலவி அப்துல் காதிர் ஃபலாஹி – 0508599445
சகோதரர் ஹாஜா பஷீர் – 0555225967
சகோதரர் பிஸ்மில்லாஹ் கான் ஃபைஜி – 0508866062

ஆகியோரை அணுகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
தமிழ் பிரிவு
அல்கோபர்

ஜனவரி 17, 2007

படமும் செய்தியும்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:25 பிப
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக – தமிழகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது அறுபது அல்லது எழுபது கிளைகளைக் கொண்டதாகும். அதில் மிகச் சிறந்தது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று சாட்சி கூறுவதாகும். அதில் இறுதியானது நடைபாதையில் ஊறுவிளைவிக்கும் பொருட்களை அகற்றுவதாகும். இன்னும் கூறினார்கள்: நடைபாதைக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவது தர்மமாகும். (புகாரி, முஸ்லிம்)

குர்ஆன் ஹதீஸ் பெயரில் இயக்கம் நடத்துபவர்கள், போராட்டம் என்னும் பெயரில் நடைபாதைக்கு ஊறுவிளைவிக்கும் இத்தகைய செயல்களில் தங்கள் இயக்கத் தொண்டர்கள் ஈடுபடுவதைத் தடைசெய்வதை விட்டு பெருமையாக!! தங்கள் இணைய தளத்தில் வெயியிட்டுள்ளனர். மார்கத்தை நபித்தோழர்களைவிட அதிகம் புரிந்து கொண்டதனாலோ??

தேங்கை முனீப்
பஹ்ரைன்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.