தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 16, 2007

தமுமுகவின் ஹஜ் மோசடி??

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:27 முப
**********************************************************

ஆசிரியர் குறிப்பு :

நமக்கு இது குறித்து நிறைய மின்னஞ்கல்கள் வந்து கொண்டுள்ளன, நாம் விசாரித்த வரையில் இதில் கூறப்பட்டுள்ள நிறைய விஷயங்கள் உண்மையாகவே உள்ளன அதாவது வாக்களிக்கப்பட்ட வசதிகள் வழங்கப்படாமை, அனைவருக்கும் தசாரிஹ் என்ற அடையாள அட்டைகள் வழங்காதது, வந்தவர்களுக்கு டென்ட் வழங்காதது என ஆனால் இரவ அனைத்திற்கும் தமுமுக தரப்பில் விசாரித்ததில் இவர்கள் பணம் கட்டிய சவுதி ஏமாற்றி விட்டு சென்று விட்டதாகவும் தாங்கள் தற்போது நிலைமையை சரி செய்ய முயன்று வருவதாகவும் இன்னும் சில ஹாஜிகளுக்கு பணத்தை திரும்ப வழங்கியள்ளதாகவும் என பல்வேறு பட்ட தகவல்கள் வருகின்றன.

நான் 2001ல் ஹஜ்ஜீக்கு சென்றபோது கூட (தமுமுகவோடு அல்ல ஹம்லா என்றழைக்கப்படும் ஏஜன்டு மூலம்) இதே போல் ஆயிரக்கணக்கில் தம்மாம் மற்றும் கோபரில் இருந்து சென்றவர்கள் ஏமாற்றப்பட்டோம் பின்னர் திரும்பியவுடன் தம்மாம் அமீரிடம் புகார் அளித்துகாவல் துறை மூலம் செலத்தப்பட்ட பணத்தில் ஓரு குறிப்பிட்ட அளவுபணம் அணைவருக்கும் திரும்ப வழங்கப்பட்டது.

அதுபோல் ஹஜ்ஜீக்கு அழைத்த சென்ற இந்த குழுவினர் முன்வருவார்களா? சம்பந்தப்பட்டவர்கள் இந்த கேள்விகளுக்கும் தங்கள் மீதுது வைக்கப்படும் புகார்களுக்கும் தகுந்த விளக்கமும் பதிலும் அளிப்பார்களா? மக்கள் ஆர்வமுடன் காத்துள்ளார்கள்!! – முகவைத்தமிழன்

**********************************************************

—– Original Message —–
From: Riaz Anwar Farook / ZAC Consumer Eng’g Dept.
To: undisclosed-recipients:
Sent: Tuesday, January 09, 2007 3:53 PM
Subject: FW: Fw :Comment on TMMK – 2006 – Hajj
த.மு.மு.க.வில் 2006 ஆம் ஆண்டு ஹஜ் சென்ற குழுவினரின் சோகக்கதை
——————————————————————-
அந்தோ!!! பரிதாபம்!!!

நம்பி ஏமாந்து போன தமிழ் நெஞ்சங்கள்!!!

த.மு.மு.க என்ற போர்வையில், கயவாளிகள் நடாத்திய ஹஜ் குழுவில், 2006 டிசம்பர் மாதம், ரியாதிலிருந்தும் மற்றும் தம்மாமிலிருந்தும் ஹஜ் சென்றவர்களின் கதியைப் பற்றித் தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ரியாத் மற்றும் தம்மாம் ஹஜ் குழுக்களின் பொறுப்பாளர்கள்.
அவர்களோடு சேர்ந்து இருந்த இன்னும் அதிகமான நபர்கள்.

மிக அழகான பேச்சு. நேர்த்தியான நடைமுறை. எல்லாம் ஹஜ் புறப்படுவதற்கு முன் வரை தான்.

தலைக்கு 1500 ரியால்கள் என 250 பேருக்கு 4 இலட்சம் வரை ரியால்கள் வாங்கிக் கொண்டு, தமிழக அரசியல்வாதிகளையெல்லாம் தோற்கடித்து, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை – மக்கா மாநகரத்தில் – காற்றில் பறக்க விட்ட மேதாவிகள் தான் அவர்கள்.

பாலைவன வெயிலின் உக்கிரம் தெரியாமல், விடுமுறைவாசியின் பட்டு சொக்காவையும், சிட்டிஜன் வாட்சையும், சென்ட் மணத்தையும் பார்த்து ஏமாந்து சவூதி வந்துக் கொண்டிருக்கும் நம்மூர் கிராமத்து சகோதரனைப் போல…,

…வருடம் ஒரு இலட்சம் ரியால்கள் வரை லாபம் பார்க்கும் … ரியாதிலிருக்கும் அதிமேதாவி தமிழ் மெளலவிகளின் …பண சம்பாதிப்பை பார்த்து, கனவு கண்ட கயவாளிகளின் கைங்கர்யம் தான் இந்த பித்தலாட்டம்.

அரசாங்க அடையாள அட்டை இல்லாததால், தாஃய்ப் நகரிலே, தவியாய் தவிக்க விட்டார்கள்.

தாஃய்ப் நகரில், இரவு 11 மணி …
பஸ் முழுவதும் அழுகுரல்…
என்ன! ஆச்சர்யப்படுகிறீர்கள். இறைவனிடம் அத்தனை பேரும் அழுது முறையிட்டது தான்.

4, 5 முறை செக்போஸ்ட் சென்று திரும்பி, திரும்பி வருகிறது பஸ்.
அழுகையும், புலம்பலும் அதிகமாகி கொண்டே போகிறது.
என்ன ஆச்சர்யம்! இறைவனின் கருணை. ஒரு போலீஸ் 3 பஸ்களை விட்டு விடுகிறார்.

அந்தோ! பரிதாபம்! மீதம் 2 பஸ்கள் இருக்கின்றதே!
இருக்கவே இருக்கிறது – காட்டரபிகளின் GMCயில், கரடுமுரடு சாலைகளில், குறுக்கு வழிப் பயணம்.

மக்காவை அதிகாலை அடைந்து விட்டோம் என்று பெருமூச்சு விட்டால், பாழாப் போனவர்களால் தொல்லை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவசர அவசரமாக, உம்ரா. முடித்து விட்டு மினா செல்ல நின்று கொண்டிருந்தால், பொறுப்பாளர் வரவேயில்லை.
…..பிறகு, பாக்கெட்டிலிருந்து ரியால்களை கணக்கின்றி செலவழித்து, மினாவிற்கு பயணம்.

பொறுப்பாளரின் டென்ட் நம்பர் அறிவிப்பு – 3.8.9…
யாருக்குத் தெரியும் டென்ட் எங்கிருக்கிறதென்று?
ஒரு வழியாய்.. நடுத்தெரு நாயகனாய், கிடைத்த டென்டில், லக்கேஜை வைத்துக் கொண்டு கால்கடுக்க நின்று கொண்டே மணி நகர்ந்து கொண்டிருந்தது.

சவூதி அரேபியாவின் மணிக்கொருமுறை மாறும் தட்பவெப்பம் போல, “இதோ!”, “இன்னும் ஒரு மணி நேரத்தில்,”, “அங்கே!”, “இங்கே”, “வந்துக் கொண்டேயிருக்கிறார்”, என்ற பொய்ப் பேச்சால், ஹாஜிகளை மணிக்கொருதரம் மாவீரர்களாய் வஞ்சித்தார்கள்..

இடியாய் இறங்கிய செய்தி!!! பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

மினாவின் முதல் நாளில், பெண்களையும், அப்பாவிக் குழந்தைகளையும், தள்ளாத வயது முதிர்ந்தவர்களையும், பாவிகள் பட்டினி போட்டார்கள். கிடைத்ததை வைத்துக் கொண்டு முதல் நாள் கடந்தது.

மினாவிலிருந்து அரஃபாத்துக்கு காலை 9 மணிக்கு, பஸ் ஏற்பாடு செய்த ஒரு பொறுப்பாளரின், மிக அருமையான உரையாடலை கேளுங்கள்.

ஹிந்தியில் பாவப்பட்ட பாகிஸ்தானி டிரைவரிடம் உண்மையில் உரையாடியது…
பொறுப்பாளர் : “காடி கப் ஆயகி?” – வண்டி எப்பொழுது வரும்?
டிரைவர் : “காடி நகி ஆயகி! டிராபிக் ஜாம்ஹே இதர்! சப்கோ ஹுத் ஜானேகேலியே பதாவ்! “வண்டி எல்லாம் வராது. இங்கு டிராபிக் ஜாம். நீங்களாகவே போய்கொள்ளுங்கள்:

பொறுப்பாளர் ஹாஜிகளுக்கு எப்படி மொழிபெயர்த்தார் தெரியுமா? இதோ!
“வண்டி இன்னும் 15 நிமிடத்தில் வந்து விடும்”

அடி உதவுவது போல், அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் தானே!
உருது தெரிந்த ஹாஜியின் அடி மிரட்டலுக்கு பயந்து, உண்மையை சொன்ன பொறுப்பாளர், “அரஃபாத்துக்கு நீங்களே போய்க்கொள்ளுங்கள்” என்று சொல்லும் பொழுது மணி காலை 11மணி. என்ன திட்டமிட்ட ஏற்பாடு பாருங்கள்?

இந்த இக்கட்டான சூழ்நிலையில், இறைவனின் கருணையும், உதவியும் இல்லாவிட்டால் ஏற்பட்டிருக்கும் சிரமங்களை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
எல்லோரும் போய்விட்ட பிறகு, வெறுமனே கிடந்த மினாவில், காலியாக வந்த பஸ்ஸில், காலை 11:15க்கு ஏறி, 11:30மணிக்கு அரஃபாத் சென்றடைய முடிந்தது. அதுவும் 15 நிமிடத்தில்.

… அழுது அழுது இறைவனிடம் மன்றாடியதன் பிரதிபலன்.
… வாழ்வில் மறக்க முடியாத உச்சக்கட்ட டென்ஷன்.

அரசாங்க அடையாள அட்டை ஒன்று கூட, ஒருவருக்கு கூட இல்லாமல், 5 பஸ்களில், கிட்டதட்ட 250 ஹாஜிகளை ஏற்றிச் வந்த கொடூரம்.

38 அனுமதிக்கப்பட்ட டென்டுக்கான கை வளையங்களை மட்டும் வைத்துக் கொண்டு, 5 பஸ்கள் நிறைய உள்ள ஹஜ் பயணிகளுக்கு, டென்டுகளை படுபாவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

38 பேர் தங்கும் இடத்தில், 250 பேரா?

உள்ளே செல்ல கை வளையம் இல்லாவிட்டால், ரோட்டில் தான் நிற்க வேண்டும்.
நின்றார்கள், சகோதரர்களே! நின்றார்கள்! எப்படி தெரியுமா?

ஒருவர் தன் கை வளையத்தை வைத்துக் கொண்டு, சிறிது ஓய்வெடுத்த பின், வெளியில் வந்து விடுவார். அடுத்தவரிடம் அதை கொடுத்து உள்ளே அனுப்புகிறார். இப்படியே மாறி, மாறி, பொழுது கரைந்து கொண்டிருந்தது.

அப்பவும், நம்மூர் அரசியல் வாதிகள் தோற்றார்கள், போங்கள்.
… “இதோ, இன்னும் கொஞ்ச நேரத்தில். கொண்டு வந்து விடுவார். தந்து விடுவார்” என்ற நிறைவேறாத வாக்குறுதிகள். சண்டாளிகள். கட்டி வைத்து உதைத்தால் கூட மனம் ஆறாது.

ஒரு கப்சா சாப்பாடு, ஒரு கோழியை – பரிதவித்த 8 பேர்களுக்கு பாசத்தோடு உணவாக ஊட்டினார்கள்.

இரண்டு புரோட்டாக்களை ஆறு பேருக்கு புரவலர்களாய் பகிர்ந்து கொடுத்தர்கள் .

“எனக்குத் தெரியாது. அவனிடம் ஏமாந்து விட்டேன்.” என்று பழியைத் தூக்கி அடுத்தவர் மீதுபோட்டு விட்டு, சொகுசாய், சாகச வீரர்களாய் வலம் வந்தார்கள்.

த.மு.மு.க. வின் – தானாய் வந்து உதவி செய்யும் உறுப்பினர்களை நம்பி பயணித்தவர்களெல்லாம், தனக்குக் கூட உதவ முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டது இவர்களால் தான்.

ஆம்!

மூட்டை முடிச்சுகளோடு, குழந்தை குட்டிகளோடு, பெற்ற தாய் தந்தையோடு, வயிறை கிள்ளி எடுக்கும் பசி மயக்கத்தோடு, ஒண்டக் கிடைத்த குட்டி இடத்தில் அடுத்தவர் மடியில் தலை வைத்து, தன்னை மறந்து தூங்க வைத்த தியாக சீலர்கள் தாம் அவர்கள்.

தவறு நேர்ந்து விட்டது. சரி! மாற்று ஏற்பாடு கடைசி நாள் வரை நடக்கும் என்று நம்பியவர்களை ஈரத்துணி போட்டு கழுத்தறுத்தார்கள். கையில் மீதமிருக்கும் காசை வைத்துக் கொண்டு, குறைந்தபட்சம் சாப்பாட்டிற்காகவாவது ஏற்பாடு செய்திருக்கலாம்.

ஒதுங்க இடம் கிடைக்காத பாவம். பாத்ரூம் பக்கத்தில் இடம். தலை சிறந்த ஆசான்களாய், சகித்து இருக்க கற்றுக் கொடுத்தார்கள்.

இறுதியில், ஒரு குழுவினரை, அஜீஜியாவில் 5 அறைகளில், எல்லோரையும் போட்டு அடைத்தார்கள்.

தண்ணீர் வேறு இல்லை அங்கு… சோதனை மேல் சோதனை.
கடைசியாக, ஒரு வேளை, வயிரார சாப்பாடு. நிம்மதி பெரு மூச்சு விட்டால், அதுவும் ஒரூ ஹாஜி கொடுத்த – இன்ஃபாக் ஃபீ ஸபீலில்லாஹ் – இலவச சாப்பாடு.
என்ன இரக்கமற்ற மனசு?

சாப்பாட்டிற்காக மொத்தம் எல்லா நாட்களுக்கும், ஒருவருக்கு 30 ரியாலுக்கு மேல் கூட செலவு செய்யவில்லை.

எல்லோரும் சொந்த செலவிலேயே, மக்கா-மினா-அரஃபாத்-முஸ்தலிப்ஃபா-மினா-மக்கா சென்று வந்திருக்கின்றனர்.

கடைசி இரன்டு தினங்களுக்கு கொடுத்த சாப்பாடும் பற்றாக்குறை. பலர் சொந்த செலவில் தான் சாப்பிட்டார்கள்.

பஸ்ஸிற்கு கொடுத்தது போக, மீதமுள்ள மொத்தப் பணமும் எங்கே போனது?

தமிழ் முஸ்லிம் சமுதாயமே!

ரியாத் மற்றும் தம்மாம் வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்களே!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு சிலரின் முயற்சிக்கு நீங்கள் பலியாகி விடாதீர்கள்.!!!

யாரை பழி சொல்ல?

த.மு.மு.க வையா? இல்லை. கயவர்களை ஹஜ் குழு அமைக்க அனுமதித்த அதன் தலைமையையா?

த.மு.மு.க ஹஜ் குழு போன வருடம் கையை சுட்டதை மறக்காமல்…
… பட்ட கஷ்டம் மறந்து… இந்த வருடம் படுபாதாளத்துக்குள் வீழ்ந்தது.

த.மு.மு.க ஹஜ் குழு அடுத்த வருடம் எத்தனை அப்பாவி தமிழர்களை ஏமாற்ற காத்திருக்கிறதோ?

தங்க இடம் தராமல் ஏமாற்றப்பட்டு, உண்ண உணவு கூட இல்லாமல், கைக்காசு செலவழித்து, கஷ்ட நஷ்டத்தோடு ஹஜ்ஜை நிறைவேற்றியவர்களுக்கு த.மு.மு.க தரும் பதில் என்ன?

தனி நபரை சுட்டி காண்பித்து, தப்பிக்கும் வழி பார்க்க போகிறார்களா?

இறைவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்ற இறையச்சத்தோடு, ஏதேனும் செய்யக் காத்திருக்கிறார்களா?

மறுமைப் பற்றிய பய உணர்வு இருக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹாஜிகள் பட்ட கஷ்டங்களை வல்ல இறைவன் நன்மைகளாக மாற்றி, ஹாஜிகளுக்கு நல்லருள் புரிய பிரார்த்திப்போம்!!!

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: