தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 31, 2007

கருத்து சொல்ல வாங்க….

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:35 முப
பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களை பற்றி கருத்து கணிப்பு!!

சகோதரர். பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் (1984-85) ஆரம்ப கால மார்க்கச் சேவைகளை எவரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் உதவியால் ஷிர்க், பித்அத்கள் அடையாளம் காட்டப்பட்டன. கப்ர் வழிபாடுகளை விட்டும் பலர் தவ்பாச் செய்தனர். . . .

மார்க்கச் சேவைகள் சிலவற்றில் அவர் ஈடுபட்ட போதும் மற்றொரு புறம் அவரிடம் மார்க்க ஆய்வுகளில் சில குறைகள் இருந்தே வந்தன. தனிப்பட்ட முறையில் அந்தக் குறைகளை எடுத்துக் கூறி அவரை திருத்த முனைந்தவர்களும் உள்ளனர். அவைகளை பகிரங்கமாக அப்போதே சுட்டிக் காட்டியவர்களும் உள்ளனர்.

அவருடைய மார்க்க உழைப்புகள் இயக்கமாக உருமாறின! சமுதாயத்தை பிரித்தாண்டு, கொள்கைச் சகோதரர்களை எதிரிகளாக மாற்றியதற்கு காரணமானார்! பிற மதத்தவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லப் போகிறோம் என்ற பெயரில் மார்க்கத்தை விட்டுக் கொடுக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது! மார்க்கத்தை ஆய்வு செய்வதில் அவருடைய பக்குவமற்ற அணுகு முறையால் அவர் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகளிலும் அல்குர்ஆன் தமிழாக்கத்திலும் விரிவுரையிலும் பல தவறுகள்! குழப்பங்கள்! (மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்)

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமும் தற்சமயம் (2006-2007) அவர்களைச் சார்ந்துள்ளவர்களிடமும் ஏற்பட்டுள்ள கொள்கைக் குழப்பங்களையும் பக்குவமற்ற விவாதங்களையும் நன்கு அறிந்து கொண்ட கப்ரு வணக்க ஆதரவாளர்கள் சமீப காலமாக தமிழகத்தில் தலை தூக்க முற்படுகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க, மற்றொரு புறம் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை மீடியாக்களில் ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துப் பழகிய சிலர், அவருடைய மார்க்க மற்றும் சமூக விரோதப் போக்குகளை எளிதில் அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்க்கத்திற்காக சேவை செய்தவர்கள் அடையாளம் காட்டப்பட்டதைப் போன்று மார்க்கத்திற்கு எதிராக நடந்தவர்களும் சம காலத்தவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அடையாளம் காட்டப்பட வேண்டிய ஒருவர் என்பதால் அவருடைய சாதக, பாதக கருத்துக்களை சேகரித்து, சம காலத்தவர்களுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் இவரைப் பற்றிய எதார்த்த நிலையை அறிமுகப்படுத்த வேண்டும்! நன்மைகள் வரவேற்கப்பட்டதைப் போன்று, தீமைகளும் எதிர்க்கப்பட வேண்டும்! அது உலகிற்கு உணர்த்தப்பட வேண்டும்! என்ற காரணத்தினால் ஒரு சிறிய முயற்சியை மேற்கோண்டுள்ளோம். அதற்காக மார்க்க அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.
பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மார்க்க மற்றும் சமூகப் பணிகளில் மிகைத்து நிற்பதுநன்மையா? தீமையா?என்ற தலைப்பில் உங்களுடைய கருத்துக்களை ஆதாரங்களுடன், திறந்த மனதுடன், கண்ணியமான நடையில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

1) ஆக்கம் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு தலைப்பில் எழுதப்படும் தகவல் -அதிக பட்சமாக- மூன்று பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

2) 2007 ஏப்ரல் மாதம் islamparvai.com தளத்தில் உங்களுடைய பதிவுகள் வெளிவரும்.-இன்ஷா அல்லாஹ்!

3) சரியான முகவரியுடன் அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே இணைய தளத்தில் வெளியிடத் தகுதி பெறும்.

4) நீங்கள் விரும்பினால் மட்டுமே உங்களுடைய பெயர் மற்றும் முகவரி வெளியிடப்படும்.

5) கருத்துச் சிதையாமல் கட்டுரையை முறைப்படுத்த இணையக் குழுவுக்கு உரிமை உண்டு.

6) சிறந்த 3 கட்டுரைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள இஸ்லாமிய நூல்கள் வழங்கப்படும்.

சவூதி அரேபியாவில் -இன்ஷா அல்லாஹ்- 2007 ஜூன் மாதம் ‘தமிழகத்தில் அழைப்புப் பணிகள்’ தொடர்பாக நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் உங்களுடைய பதிவுகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் அல்லாஹ்விடத்தில் விசாரணை உண்டு என்பதால் உண்மைகள் மட்டுமே இடம்பெறட்டும்!
கட்டுரைகள் வந்து சேரவேண்டிய இறுதித் தேதி: 2007 மார்ச் 31

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : islamparvai@gmail.com

அல்லது தபால் மூலம் அனுப்ப:

IEF Tamil Section
Post Box: 15798
Jeddah 21454 – K.S.A
M. முஜீபுர் ரஹ்மான் உமரீ

இப்பக்கத்தை பிரிண்ட் செய்ய இணைப்பி்ல் உள்ள PDF கோப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.

நன்றி : இஸ்லாம்பார்வை

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.