தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

பிப்ரவரி 3, 2007

பெண்களிடம் பரவும் ஆபாச "CD’ மோகம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 4:02 பிப
பெண்களிடம் பரவும் ஆபாச “சிடி’ மோகம் வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சி தகவல்

குறிப்பு : நமது சமுதாயத்திடமும் இந்த பழக்கம் பரவி வருவதால் இங்கு இந்த தகவலை பதிகின்றேன். நமது சமுதாயத்தில் இந்த பழக்கம் பரவுவதற்கு முக்கிய காரணம் வலைகுடா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இல்லம் திரும்பும் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களே இப்பழக்கத்தை தமது மனைவிகளுக்கு ஏற்படுத்தி வருகின்றார்கள் அதன் மூலம் இது மற்ற பென்களுக்கும் பரவும் அபாயம். இதை ஆதாரப்பூர்வமாக அறிந்ததால் நான் இதை இங்கு பதிகின்றேன். இந்த விஷயத்தை நாட்டை விட்டு திரும்பியவுடன் இங்கிருக்கும் நன்பர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இது போல் உள்ள சிலரை எனக்கு முகவை மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்திலும் மதுரையிலும் தெறியும். இன்னும் சில வருடங்களுக்கு முன் முகவை மாவட்டம் பனைக்குளத்திலும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதை பலர் அறிவர். MNP சகோதரர்கள் இப்பகுதிகளில் பயங்கர விழிப்புணர்வுடன் பணியாற்றி வருவதால் பயத்தில் இந்த பழங்கங்கள் சற்று குறைந்துதுள்ளன ஆனால் இவற்றை நிரந்தரமாக நம் சமுதாயத்திடம் இருந்து போக்க வேண்டுமானால் MNP பியினரும் இன்ன பிற இயக்கத்தினரும் IFT செய்வது போல் வீட்டுக்கு வீடு சென்று மார்க்கம் குறித்த அறிவை நமது பென்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இது யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற என்னத்தில் பதிந்ததல்ல ஆனால் சமுதாய அக்கறையால் பதிந்தது தேவைப்பட்டால் தெறிந்த ஆதாரங்களை வெளியிடவும் தயார். இயக்கங்கள் சரியான மார்க்க அறிவை நம் சமுதாய பென்களிடம் ஏற்படுத்த முன் வர வேண்டும்.

முக்கியமாக MNP யினருக்கு: பயத்தை ஏற்படுத்துவதும் கடுமையாக தன்டிப்பதும் தற்காலிக தீர்வையே தரும் ஆனால் நீங்கள் உங்கள் மகளிர் அணியினரின் துனை கொண்டு IFT போன்று வீட்டுக்கு வீடு தாவா செய்து மார்க்க அறிவை நம் சமுதாய பென்களிடம் ஏற்படுத்த முன் வர வேண்டும் அதன் மூலமே நாம் இதை நிரந்தரமாக அகற்றலாம்.

சென்னை:ஆபாச “சிடி’ பார்க்கும் மோகம் பெண்களிடம் அதிகரித்து வருவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மளிகைக் கடை, பாத்திரக்கடை, பால் கடையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆபாச, புதுப்பட “சிடி’க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் அப்பகுதியில் 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் புதுப்பட தமிழ் பட “சிடி’க்களை வாடகைக்கு விட்டு வந்தார். அதில், ஒரு சில பெண்கள் ஆங்கில படங்களை விரும்பிக் கேட்டனர். ஆங்கில பட “சிடி’க்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாடகை பெற்று வந்தார். ஆங்கில படங்களை விரும்பி பார்த்து விட்டு, மீண்டும் வேறு ஆங்கில படங்கள் வேண்டும் என்று சில பெண்கள் கேட்டனர். அப்பெண்களுக்கு “பெண்கள் மட்டும் நடித்திருக்கும்’ ஆபாச “சிடி’க்களை வாடகைக்கு கொடுத்தார். ஒரு சில பெண்கள் ஆபாச “சிடி’க்களை மளிகைக் கடைக்காரரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து போட்டு பார்த்தனர். பெண்களிடம் ஆபாச “சிடி’ மோகம் அதிகரித்து வரும் ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட முடிவு செய்தனர்.கமிஷனர் லத்திகாசரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதுப்பட மற்றும் ஆபாச “சிடி’க்களை பறிமுதல் செய்தனர். மளிகைக் கடையில் “சிடி’க்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, காய்கறி வாங்கச் சென்ற பெண்கள் “சிடி’யை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, வேறு புதுப்பட “சிடி’ கேட்டனர். அப்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

திருவொற்றியூர் எர்ணாவூரைச் சேர்ந்தவர் அசோக்(28). இவர் அப்பகுதியில் ஆனந்த் மெட்டல் என்ற பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் உள்ள பாத்திரங்களில் சிறிய ஆபாச படங்களை போட்டு வைத்து விடுவார். வழக்கமாக பாத்திரம் வாங்கச் செல்லும் பெண்கள் பாத்திரத்தை எடுத்து பார்த்தனர். அப்போது, பாத்திரத்திற்குள் இருக்கும் ஆபாச படத்தை பார்த்து கடைக்காரரிடம் ஆபாச “சிடி’க்களை கேட்கின்றனர். பெண்கள் கடைக்கு வந்து பாத்திரம் வாங்குவது போல், கடையின் உரிமையாளர் அசோக்கிடம் ஆபாச “சிடி’க்களை வாங்கிச் சென்றனர். இத்தகவலை அறிந்த போலீசார் பாத்திரக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த சிறிய அளவிலான ஆபாச படங்களுடன் “சிடி’க்களை பறிமுதல் செய்தனர்.

அண்ணாநகர் 13வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(23). இவர் எஸ்.எஸ்.மில்க் என்ற பெயரில் பால் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பட மற்றும் ஆபாச “சிடி’க்களை விற்பனை செய்து வந்தார். பிராட்வே பகுதியில் “சிடி’ விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் காசிம்(23). இவரது கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட “சிடி’களை பறிமுதல் செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கவிமணி(43) என்பவரது கடையில் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச “சிடி’க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் 10வது பிரதான சாலை பிளாட்பாரத்தில் புதுப்பட, ஆபாச “சிடி’க்களை விற்பனை செய்து வந்த முஸ்தபா(37) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் இருந்து ஆயிரத்து 500 “சிடி’க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “சிடி’க்களின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.

ஓட்டம் பிடித்த கல்லுõரி மாணவி:மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாறு “சிடி’ வேர்ல்டு என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட “சிடி’க்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற கல்லுõரி மாணவி, போலீசாரை பார்த்ததும் திகைத்து நின்றார். வாடகைக்கு எடுத்துச் சென்ற “சிடி’யை திருப்பிக் கொடுக்க வந்ததாக மாணவி கூறினார். மாணவியின் கையில் இருந்த “சிடி’யை வாங்கிக் கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த “சிடி’யை கடையில் உள்ள கம்ப்யூட்டரில் போலீசார் போட்டுப் பார்த்த போது, அது ஆபாச “சிடி’ என தெரிய வந்தது. சிறிது துõரம் மெதுவாக நடந்து சென்ற அந்த மாணவி பின்னர் ஓட்டம் பிடித்தார்.

நன்றி : தினமலர்

1 பின்னூட்டம் »

  1. அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு எம் என் பியினர் பல ஊர்களிளும் பெண்களுக்கு விழிப்புணர்வாக ஜம்இயத்துன்னிஸா மூலமாக பல கூட்டங்களை நடத்தி வருகின்றார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
    Ibn Balkies
    ரியாத்

    பின்னூட்டம் by Samudhaya Nalam virumbi — பிப்ரவரி 7, 2007 @ 9:09 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: