தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

பிப்ரவரி 19, 2007

மார்ச் 11 ஏன்? எதற்கு?

மார்ச் 11 ஏன்? எதற்கு?
வாருங்கள்…நாளைய வரலாற்றின் பக்கங்களில் உரிமைக்காக போரடியவர்களில் ஒருவராக உங்களையும் பதிவு செய்யுங்கள்!!


வரும் மார்ச் மாதம் 11 ம் நாள் கோவையில் நடக்கவிருக்கும் சமுதாய தலைமைகளின் சங்கமத்தில் நமது தமிழ் முஸ்லிம் அமைப்புக்களின் அணைத்து தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் இந்த சங்கமம் ஏன் எதற்கு என்று எம் சமுதாயத்தவர்களுக்கும் இன்ன பிற மக்களுக்கும் அறியத் தரவே இந்த விளக்க கட்டுரை.

கடந்த 9 ஆன்டுகாலமாக கோவை சிறை மட்டுமல்லாது தமிழகத்தின் பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கோவை குன்டு வெடிப்பு விசாரனை சிறைவாசிகள் உள்பட தாடர் கதையாகி கொண்டிருக்கும் தமிழகத்தின் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் சிறையிருப்பை 21 ஆம் நூற்றான்டு இந்திய முஸ்லிம் சமூகத்தின் பேரழிவாகவும் இழிவாகவும் வரலாறு பதிவு செய்யவிருக்கின்றது.

நீதி, நியாயம், ஜனநாயகம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி, நியாயம், சட்ட மனித உரிமைகள் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத சிறை இருப்பில் உள்ள முஸ்லிம்களுக்கு நம்மாள் உரிய நீதி பெற்றுத்தர முடியவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு,பேரழிவு வேறொன்று இருந்திடுமோ?

இந்தியாவில் இது வரை நடந்த வகுப்பு கலவரங்களின் சூத்திரதாரர்கள், மூலகர்த்தாக்கள் யாரென்று நடந்த ஆய்வில் முழுவதுமாக சங் பரிவாரக் கூட்டங்களே இருந்துள்ளனர். ஆனால் அக்கலவரங்களின் தொடாச்சியை ஆய்வு செய்ததில் பொருளாதார இழப்புக்கள், உயிர் இழப்புக்கள, உடமைகள் இழப்புக்கள், கைது நடவடிக்கைகள், வழக்குகள் என பாதிக்கப்பட்டோரின் பட்டியளில் முஸ்லிம்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

அது போலவே கோவையிலும் தமிழகமெங்கும் நடைபெற்ற வகுப்புக்கலவரங்களின் சூத்திரதாரிகளான சங்பரிவார், பாசிஸ்ட்டுகள் மீது இது வரை உருப்படியான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முஸலிம்களை படுகொலை செய்தவர்கள, முஸ்லிம் உடைமைகளை சேதப்படுத்தியவர்கள், முஸ்லிம் பென’களை மானபங்க படுத்தியவர்கள் என இன்று ஒருவர்கூட சிறைச்சாலைகளில் இல்லை. அவர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் நிலை என்னவென்பதை கூட அறிய இயல முடிவதில்லை.

அவர்கள் கூடடம், கூட்டமாய் பெரும் சதித்திட்டத்தோடு கோவை முழுவதையும் தமிழகத்தின் பல பகுதிகளையும் கலவரக்காடாய் ஆக்கியபோதும் அவர்களில் யாரும் “சங்பரிவார தீவிரவாதிகள்” என்றோ “இந்து தீவிரவாதிகள்” என்றோ சொல்லப்பட வில்லை, அவர்களுக்காக தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை, அவர்கள் யாரும் கனிக் காண்காணிப்பு சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்படவில்லை, ஆனால் உண்மையில் இந்த சங்பரிவார இந்து தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு தங்கள் சொத்து சுகங்களை உயிர் உடமைகளை இழந்து நின்ற அப்பாவி முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக சிறுவர், இளைஞர், முதியவர் என பாகுபாடு இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள், வெறும் விசாரனைக்கைதிகளாய்
குற்றம் நிருபிக்கப்படாமலேயே “முஸ்லிம் தீவிரவாதிகள்” என்ற அவப்பெயரோடு ஒரே வழக்கில் சதித்திட்டம் என்ற காரணம் கூறி முடிவடைய முடியாத பிரமான்ட வழக்கை தொடுத்து கடந்த 9 ஆன்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியில் சாசன சட்டத்திற்கு புறம்பாக உலக நியதிகள், மனித உரிமைகள் என அனைத்ழைதயும் மீறி சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகின்றார்கள். ஆனால் இத்தனைக்கும் காரனமான சங்பரிவார “இந்து தீவிரவாதிகள்” மீது எந்த வித நடவடிக்கையும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றார்கள். இது தான் இந்திய ஜனநாயகம்!!

இந்நீண்ட கால சிறைவாசத்தால் நோயுற்ற ஒரு முதியவருக்கு மரணமே விடுதலையை பெற்றுத்தந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!! விடுதலை நாட்களை என்ன வேண்டிய இன்னும் பலர் சிறை நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட தவறான மருத்துவத்தாலும், மறுக்கப்படும் மருத்தவ உதவிகளாலும் மரணத்தின் நாட்களை நோயுற்றவர்களாகவே என்னிக் கொண்டுள்ளனர். இதனினும் கொடுமை சிலர் விடுதலை வெளிச்சம் கூட தெறியாத நிலையில் தன் குடும்பத்தவர்கள் அனைவரையும் இழந்து விட்ட அநாதைகளாக…இனி இவர்கள் விடுதலை பெற்று யாரிடம் தஞ்சம் அடைவார்கள்?

அன்று பிரிட்ஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த அடிமை இந்தியாவில் சுதந்திரத்திற்காக ஆலி முஸ்லியார் என்ற முஸ்லிம் 1922ம் வருடம் பிப்ரவரி 17ம் நாள் தம் உயிரை விட்ட கோவை மத்திய சிறையில் எந்த சுதந்திரத்திற்காக உயிரை விட்டாரோ அந்த முஸ்லிம் அந்த சுதந்திர இந்தியாவில் இன்று பல நூறு அப்பாவி முஸ்லிம்கள் நீதி, நியாயம் மறுக்கப்பட்டு சுதந்திர தேசத்தில் சிறை வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

சங்கராச்சாரியார் என்ற மதவெறியர் படு பாதக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணித்துளிகளில் நாட்டின் அனைத்து சங்பரிவார அமைப:பக்களும் வீதி இறங்கி ” குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது” என்று சட்ட வியாக்கியானம் கூறி சங்கராச்சாரியை விடுவிக்க பல்வேறு சண்டித்தனங்களை செய்தது. அதே சமயம் 9 ஆன்டுகளுக்கும் மேலாக வெறும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் நிரபராதிகளாய் சிறைவாசம் இருந்து வருகின்றார்கள். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்நாட்டில் படுபாதக கொலை புறிந்த சங்கராச்சாரி என்ற மத வெறியருக்கு ஒரு நீதி சாமானியர்களான அப்பாவி சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஒரு நீதியா? என்று வீதி இறங்கி நீதி கேட்க நாதி அற்ற சமுதாயமாக அல்லவா நாம் இருக்கின்றோம். இந்த இழி நிலைமையை நாம் மறைக்கவோ, மறுக்கவோ அல்லது கண்டும் காணாது இருந்திடவோ நினைக்கலாம் ஆனால் அறிந்து கொள்ளுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட நேர்மையாக உள்ளது என்பதனை!!

ஆக இது போன்ற நீதி, நியாயம், சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு பட்டவாத்தனமாக உலக மனித உரிமை நியதிகள் மீறப்பட்ட நிலையில் தமிழகத்தின் சிறையெங்கும் பல்லான்டுகலாக மக்கள் தொகையில் தமது விகிதாச்சாரத்தை காட்டிலும் பல மடங்கு அதிக நிலையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை வலியுருத்தியும், மறுக்கப்பட்ட நியாயங்களை வழங்க கோரியும், சங்கராச்சாரிக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும் ஒரு நியாயாம் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுபான்மையின முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மற்றோர் நியாயம் என்ற போக்கை மாற்றி இந்த இந்திய சுதந்திர நாட்டில் இதன் குடிமக்களான அனைவருக்கும் சமநீதி வழங்க கோரியும், சிறைக் கொட்டடிகளில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசை வலியுருத்தியும் நடக்குமு் இக்கருத்தரங்கில், தமிழகமெங்கும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள், நமது சமுதாய தலைவர்கள், முன்னால் நீதிபதிகள், உயர்நீதி மன்ற, உச்ச நீதீ மன்ற வழக்குறைஞர்கள், சான்றோர்கள், ஜமாத்தினர்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்வில் பங்கேற்று சாட்சி பகர உங்களையும் அழைக்கின்றோம்!! பங்கேற்பீர் மக்களே…பதிவு செய்வீர் உங்களை நாளைய வரலாற்று பக்கங்களில் உரிமைக்காக, சமுதாயத்திற்காக, மறுக்கப்பட்ட நீதிக்காக போராடியோர் என்று!!

தாகத்தால் தவித்த நாய்க்கு தண்ணீர் வழங்கியதற்காக சுவனப்பேறு வழங்கப்பட்ட ஜீவகாருண்ய மார்க்கத்தின் சொந்தங்களே, இன்று பல நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் நீதி நியாயம் மறுக்கப்பட்டு பல்லான்டு காலமாக பெற்றோர்களை, குடும்பத்தினை இழந்து சகோதரிகளின் திருமணங்களை நடத்திட இயலாமல் அவர்களை முதிர் கண்ணிகளாக தவிக்க விட்ட விரக்தியிலும் மனைவி மக்களின் பாசப்பிரிவு என்று ஏக்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் உங்கள் சகோதரர்களான இந்த தமிழ் முஸ்லிம் சிறைவாசிகளுக்காக மறவாமல் நீதியை தேடி சங்கமமாகுங்கள் மார்ச் 11 அன்று இறைவன் நாடினால் நமக்கு நீதி வழங்கப்படும், நாளைய நமது தலைமுறையினர் இது போன்ற அநீதி இழைக்கப்படுவதில் இருந்தும் காக்கலாம்.

பர்க்காதவர்கள் இங்கு சொடுக்கி இவர்களின் அவலங்கள் குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்களையும் பார்க்கலாம்

1.அவலங்கள் மாறுமா?

2.கோவைக்கு ஒரு நீதி குஜராத்திற்கு ஒரு நீதியா?

3.நீதி கோரி ஒரு நெடும்பயனம்

4.முஸ்லிம் சிறைவாசி வழக்குகளின் இன்றைய நிலை

சிறுபான்மை உதவி அறக்கட்டளை
கோவை

மேலதிக தொடர்புகளுக்கு : கோவை தங்கப்பா
தொலைபேசி : +91-9443654473
www.ctmcoimbatore.com

இஸ்லாம், காரைக்குடி

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: