தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 29, 2007

நீதியைத்தேடி – ஹாமித் பக்ரி உரை (VIDEO)

கருத்தரங்கில் ஹாமித் பக்ரி அவர்கள் உரையாற்றுகையில்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் “ஐக்கிய சமாதானப் பேரவை” தலைவர் மெளலவி ஹாமித் பக்ரி மன்பஈ அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

இதைக் காண்பதற்கோ அல்லது டவுன்லோட் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும்.

தமிழ் முஸ்லிம் மீடியா

மார்ச் 28, 2007

வக்ஃப் வாரியத் தலைவராக ஹைதர் அலி

Filed under: தமுமுக வக்ஃப் வாரிய — முஸ்லிம் @ 10:11 முப
வக்ஃப் தலைவராக பதவியேற்கும் ஜனாப்.ஹைதர் அலி

கடந்த 27.03.2007 அன்று தமுமுக வின் பொதுச் செயளாலர் ஜனாப். ஹைதர் அலி அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு பதவியேற்றுள்ளார்கள்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக புதிதாக பதவியேற்றிருக்கும் ஜனாப் ஹைதர் அலி அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெறிவித்துக் கொள்வதோடு அவர் இப்பதவியின் மூலம் இச்சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளதையும் நினைவூட்டுகின்றோம்.

இதற்கு முன்னர் வந்து சென்ற ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்களைப்போல் அல்லாமல் இவர் பலம் பொருந்தியவராக சமுதாயக் கடமை ஆற்றக் கூடியவராக இருகக் வேண்டும்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிறையச சொத்துக்கள் பலம் பொருந்தியவர்களால் பல காலமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. அவ்வகையான சொத்துக்களை மீட்டெடுப்பது இவரது தலையாயக கடமைகளில் ஒன்று.

இன்னும் சிதறிக் கிடக்கும் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம்களை பலம் பொருந்தியவர்களாக மாற்ற இயலும் அதற்கான காரியங்களிலும் இவர் தனது இந்த பதவியைப் பயன்படுத்தி முனைய வேண்டும்.

தமிழகத்தில் சில பள்ளிகள் சில கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன அவ்வகைளான பள்ளிகளையும் அதன் சொத்துக்களையும் மீட்டெடுத்து வக்ஃப் செய்ய வேண்டியது அல்லது உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது கடமைகளில் அடங்கும்.

இன்னும் இவரும் இவர் சார்ந்த இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் கவனத்தில் கொள்ள வேண்டியது, இந்த பதவியை நீங்கள் அடைந்ததால் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உங்களுடைய நடவடிக்கைகளை கண்கொத்திப் பாம்பாக பலர் கவணித்துக் கொண்டுள்ளனர். இந்த பதவியில் இருந்தபடி நீங்கள் செய்யும் செயல்பாடுகளில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ அல்லது மார்க்கத்திற்கு புறம்பான காரியங்கள் இருந்தாலோ அவை பெறிதாக்கப்பட்டு மக்கள் மததியில் உங்கள் இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புக்க்ள உள்ளன.

அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புத் தராமல் தமுமுக இந்தப் பணியை முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு திறம்பட செய்தது என்ற வகையில் இவரது பணிகள் இருக்க வேண்டும் இவரது பணிகளை தமுமுக வும் தனது இயக்கத்திற்கு எந்த பங்கமும் வராத வகையில் கண்கானித்து வரவேண்டும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

மார்ச் 26, 2007

முகவையில் தமுமுக தர்பியா முகாம்

Filed under: முகவையில் தமுமுக தர — முஸ்லிம் @ 9:10 பிப
முகவை தமுமுக தர்பியாவில் கலந்து கொண்டவர்கள்

முகவை மத்திய மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக கழகத்தின் சார்பாக கடந்த 25.03.2007 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகவை சின்னக்கடையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றி கிளை நிர்வாகிகளுக்கு ”தர்பியா” எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மௌலவி அப்துல் காதிர் நூரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் துனைச் செயளாலர் கோவை சாதிக் மற்றும் மாநிலப் பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இம்முகாமில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்புக்களை நடத்தினர்.

மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட சுமார் 150 சகோதரர்கள் இந்நிகழ்வில் நலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் கலந்து கொண்டு பெரும்பாலான சகோதரர்கள் மாவட்டும் முழுவதுமுமாக இம்மாதிரி முகாம்களை அடிக்கடி நடத்திட வேண்டும் என்று கருத்து தெறிவித்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமுமுக முகவை மத்திய மாவட்ட தலைவர் சகோ. சலிமுல்லா கான் அவர்கள் திறம்பட செய்திருந்தனர்.

மார்ச் 24, 2007

தனது பெயரில் வெளியான மடல – பாக்கர் மறுப்பு!!

Filed under: ததஜ காம லீலைகள், பாக்கர் மறுப்பு — முஸ்லிம் @ 6:55 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொதுச்செயளாலராக இருந்த எஸ்.எம். பாக்கர் என்பவர் ததஜ வால் நடத்தப்படும் மாற்று மதத்தில் இருந்த இஸ்லாத்திற்கு வந்தோருக்காக நடத்தப்படும் மதராஸாவில் பயின்ற மாணவி ஒருவருடன் நெருக்கமாக ஒரே சீட்டில் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்து பயணிக்க கூடிய முகாந்திரங்களுடன் பயணம் செய்ததாக ததஜ வின் தலைவர் பி.ஜே யால் குற்றம் சாட்டப்பட்டு ததஜ வின் பொதுச் செயளாலர் பொருப்பிலிருந்து பாக்கர் நீக்கப்பட்டார். இது குறித்து பி.ஜே அவர்கள் பாக்கரை பற்றிய குற்றச் சாட்டக்களுடன் இணையத்தில் ஆடியோ ஃபைல் ஒன்றையும் உலவ விட்டார்கள்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் வியாழக் கிழமை (22.03.2007) இணையத்தில் மின்னஞ்சல் மூலமாக “அநியாயத்துக்கு அளவேயில்லையா பி.ஜே?” என்ற தலைப்பில் தனது பக்க நியாயங்களை எடுத்துறைத்து பாக்கர் எழுதியதாக ஒரு மடல் நமக்கும் கிடைக்கப் பெற்றது அதை மக்களின் பார்வைக்காக உடனடியாக நாமும் இங்கு பதிவு செய்தோம்.

நாம் பதிவு செய்த சில மனித்துளிகளிலேயே ததஜ வில் இருந்து பி.ஜேயால் மிக அசிங்கமாக முஸ்லிமாக மாறி மதரஸாவில் பயின்ற மாணவியோடு இணைத்து காம குற்றச் சாட்டு சாட்டப்பட்டு பொருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட எஸ்.எம் பாக்கர் அவரது பெயரில் பி.ஜே யை தாக்கி வெளியான அந்த மடல் தான் எழுதியதில்லை என்றும் அவரும் பி.ஜேயும் இப்போதும் நட்புடன் தான் உள்ளதாகவும் கூறி ஒரு மறுப்பு ஆடியோ ஃபைலை ததஜ வின் அதிகாரப் பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். வாசகர்களின் பார்வைக்காக அதையும் நாம் இங்கு தருகின்றோம். பாக்கரின் அந்த மறுப்பை கேட்பதற்க கீழே சொடுக்கவும்.

பாக்கரின் மறுப்பு

மார்ச் 22, 2007

அநியாயத்துக்கு அளவில்லையா PJ? S.M பாக்கரின் மடல்..

Filed under: பி.ஜே பாக்கர் ததஜ செக — முஸ்லிம் @ 10:06 முப

குறிப்பு : இந்த மடல் நமக்கு இறைவனின் அடிமை (iraivan_adimai@yahoo.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து நமக்கு கிடைக்கப்பெற்றது. அதை அப்படியே இங்கு மக்களின் பார்வைக்கு தருகின்றோம்.

திருவாளர் பி.ஜே தனது கூட்டாளி பாக்கரை பற்றி தனது திருவாயால் கூறிய குற்றச்சாட்டுக்களை கேட்கவோ அல்லது டவுன்லோட் செய்யவோ இங்கு சொடுக்கவும். (பாக்கரை பற்றி மட்டும் கூறும் குற்றங்கள்)

இறைவனின் திருப்பெயரால்…

அநியாயத்துக்கு அளவில்லையா? பீ.ஜே

உங்களுடைய விசயத்தில் உங்களின் நன்மையை மட்டும் நினைத்தே செயல்பட்டனே! அதற்கு நீங்கள் எனக்கு தரும் பரிசு ஒழுக்கக்கேடன் பட்டமா?

உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றியே சிந்தித்தேனே! அதற்கு பரிசு பொருக்கி பட்டமா?

உங்களை உத்தமர் என்று ஊரெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தேனே! அதற்கு நான் அயோக்கியத்தனம் செய்ததாக ஊரெல்லாம் நீங்கள் தரும் பட்டமா?

உங்கள் குடும்ப மேன்மையே என் இலட்சியம் என்று இருந்தேனே! அதற்கு தான் நான் குடும்பஸ்த்தன் இல்லை என்று தாங்ள் தரும் பட்டமா?

நீங்கள் மக்கள் ஆதரவற்று இடிவழுந்தவனைப் போல் இருந்தபோது உங்களுக்கு உற்ற துணையாக இருந்த எனக்கு நீங்கள் தருவது இடி ராஜா பட்டமா?

உங்கள் கை அசைவுக்கும், கண் அசைவுக்கும் களம் கண்ட என்னை களங்கமானவன் என்பது நீங்கள் எனக்கு தரும் பட்டமா?

உங்களின் பொன்னான முகம் வாடக்கூடாது என்றிருக்கும் எனக்கு பெண் மோகம் கொண்டவன் என்று நீங்கள் தரும் பட்டமா?

உங்களின் சிந்தனைகள் சிற்றூhருக்கும் சென்றிட வேண்டும் என்று எண்ணிய எனக்கு சிலுமிஷகாரன் என்று நீங்கள் தரும் பட்டமா?

குழப்பவாதி என்று சமுதாயம் உங்களை தூற்றிய போது, சமுதாயத்தின் அண்ணன் என்று உங்களை வலம் வரச் செய்த எனக்கு குறும்புத்திக்காரன் என்று தாங்கள் தரும் பட்டமா?

உலவி என்று ஊர் அறியா பட்டம் பெற்றிருந்த உங்களை பேரறிஞர் என்று புகழ் சூட்டி மகிழ்ந்த எனக்கு, செல்லாக் காசாகிவிடுவாய் என்று தாங்கள் தரும் எச்சரிக்கை பட்டமா?

உங்களின் அநியாயச் செயலுக்கு உங்கள் மீதுள்ள பாசத்தால் நான் நிறையவே துணை போய்ட்டேன், உங்களால் நானும் அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டேன். அநியாயத்துக்கு அளவில்லையா? அண்ணனே, உங்களால் அநீதிக்கு ஆளனது நானே கடைசியாக இருக்க வேண்டும். நீங்கள் சுவனம் செல்ல வேண்டும்.

இவண்

எஸ்.எம்.பாக்கர்
முன்னாள் பொதுச் செயலாளர்
த.த.ஜ
0091 94443 60006

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்


நியாயம் கேட்க தயங்கும் த.த.ஜ.வின் உண்மை தவ்ஹித்வாதிகள்

பிஜேயின் நினைவாற்றலும் மாhக்க அறிவும் உலகத்தின் பல பகுதிக்கு சென்றடையவும், தமிழகத்தில் பரவலாக குக்கிராமங்கள் வரை சென்றடைய பாக்கரின் உடல் உழைப்பும், பணமும், பிரச்சார யுக்தியும், துணிச்சலான நடவடிக்கையும், தொண்டர்களை அரவணைத்து செல்லும் மனப்போக்கும் இறைவனின் உதவியால் காரணம் என்பதை பிஜே விட பாக்கரை அறிந்த தவ்ஹித்வாதிகள் நன்கு அறிவார்கள்.

தன்னைவிட ததஜாவில் முக்கியத்துவம் யார் பெறுவதையும் பிஜே விரும்ப மாட்டார் என்பது ஊர் அறிந்த பரம ரகசியம், கீழக்கரையின் சிங்கமான பாக்கரை அசிங்கபடுத்தி மகிழ்ந்துள்ளார்.

பேச்சுக்களை ஆடியோ, வீடியோ, சிடி என தொகுத்து மீடியாத்துறையில் குடும்பத்துக்கு வேலை கொடுத்து ஊதியம் கொடுத்து வந்த பாக்கரின் மீடியா வேல்ட் மீது மோகம் கொண்ட பிஜே மூன்(கமர்)என்ற பெயரில் மீயாத்துறை தொடங்கி ஊதியம் தந்த பாக்கரின் மீடிய வேல்டை ஒளி மங்கச் செய்தார்.

செல்வப் பின்னனியும் தொழில் துணிச்சலும் உள்ள பாக்கர் டிராவல்ஸ் தொழில் தொடங்கினார், இதில் பிஜேயின் எந்த தொடர்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டார், பிஜே சும்மா இருப்பாரா? பாக்கரை அசிங்ப்படுத்த தொடங்கி விட்டார்.

குர்ஆன்க்குள் காதல் கடிதம் கொடுத்தவர்,ஆணுக்கு ஆண் என்ற அமெரிக்க அனுமதியை பின்பற்றுபவர்கள், அடுத்தவர் மனைவியை கவர்ந்து கணவன் அப்பெண்ணை மன்னித்து இருவரும் இணைந்த பின்பும் மீண்டும் தொந்தரவு செய்து அப்பெண்ணைக் கொண்டு கணவனை குலா கொடுக்கச் சொல்லி பின்பு திருமணம் செய்து இன்று அப் பெண்ணை நடுரோட்டில் தவிக்கவிட்டுள்வர், மாணவிக்கு கொடுக்க கூடாததை கொடுத்தவர், பாலியல் மற்றும் கற்ப்பழிப்பு குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர், தான் செய்யும் தொழிலுக்கு எல்லாம் மார்க்க அடிப்படையில் பிஜேயின் பித்தலாட்ட தீர்ப்பு கேட்டு மகிழும் யப்பாக்களும், தம்பிகளும் எப்படி பாக்கரிடம் விசாரிக்க முடியும் என்று ஆரம்ப கால தவ்ஹித் வாதிகள் எழுப்பும் கேள்வியில் நியாயம் உள்ளதுதானே?

ஓரு வேளை பாக்கரின் பஸ் பயனத்தில் தவறு செய்யும் முகந்திரம் தெரிந்தால் அதை மறைத்து அவரின் மரியாதையை காப்பாற்றி அவரை எச்சரித்து நல்வழி காட்ட வேண்டியது பிஜேயின் கடமையில்லையா? பத்திரிக்கையில் செய்தி போட்டு, இன்டர்நெட்டில் செய்தி போட்டு அசிங்கப்படுத்துவது தான் பிஜே கற்றுத் தரும் இஸ்லாமா?

பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்த பாக்கரை கேவளப்படுத்தும் பிஜே அவர்கள், இதுபோன்று குற்றச்சாட்டுகள் வந்து அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டு தேவையான நேரத்தில் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றியும் பத்திரிக்கையில் போட முன்வர வேண்டும். பிஜே தவறுகளுக்கு உடந்தையாக செல்பவர்கள் அல்லாஹ்க்கு அஞ்ச வேண்டும்.

மார்ச் 21, 2007

விரைவில்…

Filed under: கோவை இனக்கலவரம், muslim documentary, Tamil muslim prisoners — முஸ்லிம் @ 11:12 முப

காவல்துறையின் அராஜகம்…

காக்கிகள் மற்றும் காவி உடை பயங்கரவாதிகளால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் பென்கள்..

காக்கிகளோடு காவிகள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரவாதம்…

விரைவில் எதிர் பாருங்கள்…

தமிழ் முஸ்லிம் மீடியா

தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்கெதிராக நடத்தப்படும் அடக்குமுறைகளையும் எதிரொலிக்கும் ஊடகமாக இன்சா அல்லாஹ்…

காரைக்குடி,இஸ்லாம், முஸ்லிம்

மார்ச் 19, 2007

வஞ்சிக்கப்பட்டோர் வீறு கொண்டு எழட்டும் (IDMK AUDIO)

Filed under: இந்திய தேசிய மக்கள் , IDMK — முஸ்லிம் @ 10:49 முப


இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட அவர்களின் கொள்கை விளக்க உரையின் முதல் வெளியீடு.

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் பெக் அவர்கள் வஞ்சிக்கப்பட்டோர் வீறு கொண்டு எழட்டும் என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.

உரையை கேட்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு
CLICK HERE TO LISTEN OR DOWNLOAD
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

மார்ச் 18, 2007

செய்திகள் – நீதியைத்தேடி கருத்தரங்கம்

கோவை குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்: முன்னாள் நீதிபதி

கோவை மார்ச்-11 “நீதியைத் தேடி” கருத்தரங்கின் புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கு சொடக்கவும் :

புகைப்படத் தொகுப்பு – 1

புகைப்படத் தொகுப்பு – 2

முகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு

கோவை, மார்ச் 12: இந்திய தண்டனைச் சட்டத்தில் விசாரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு 9 ஆண்டுகளாக ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தெரிவித்தார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், 9 ஆண்டுகளாக தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் நீதியைத் தேடி கருத்தரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி

கருத்தரங்கில் அவர் பேசியது:

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

ஆனால், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீவிரவாதச் சட்டத்தில் கைதானவரர்களுக்கு விசாரணையின்போதே ஜாமீன் வழங்கப்பட்டது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்.

அரங்கினுல் கூடிய பென்கள் கூட்டம்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தவணை முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர் என்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலர் கே.ஜி.கண்ணபிரான்: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை பாரபட்சமாகச் செயல்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

கேரள மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.பலராமன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கேரளம் வருவதற்கு தமிழக அரசு 2003-ல் விதித்த தடையை நீக்க வேண்டும்.

அவரது உடல் நிலையை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அவர் மீதுள்ள பிற வழக்குகளை விரைந்து முடிக்க கேரள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.

ஆனால், அவரை கோவையிலிருந்து கேரளம் அழைத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ப.பா.மோகன் வரவேற்றார். முஸ்லிம் சிறைவாசியின் குடும்ப நிலையைச் சித்தரிக்கும் குறுந்தகட்டை தமிழக, புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.திருமலைராஜன் வெளியிட்டார்.

தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பியுசிஎல் மாவட்டச் செயலர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்குக் கூட தண்டனைக் குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்குவதில்லை. எனவே, 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகள் : நன்றி தினமனி

காரைக்குடி, இஸ்லாம் , முஸ்லிம்

மார்ச் 17, 2007

முஸ்லிம்கள் சமூகப் பொருளாதார அரசியல் பின்னடைவிற்கு காரணம் (Frontline Report)

Filed under: முஸ்லிம்கள் சமூகப் — முஸ்லிம் @ 1:39 பிப
முஸ்லிம்கள் சமூகப் பொருளாதார அரசியல் பின்னடைவிற்கு காரணம் அதன் தலைவர்களே!
அதிர்ச்சியூட்டும் FRONTLINE ரிப்போர்ட்

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் எல்லா சமூகங்களின் சமூகப் பொருளாதார வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு அரசு பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது.

நல வாரியத்திட்டம், ஐந்து ஆண்டு திட்டம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தொகுதி மறு சீரமைப்புத் திட்டம், அரசு ஆய்வு கமிஷன் பரிந்துரையின் பேரில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபாண்மை சமூகங்களுக்கு வழங்கியும், வளர்ந்து வரும் சமூகப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மற்ற சமூகங்களைவிட முஸ்லிம் சமுதாயம் ஏன் மிக மிக பின் தங்கி உள்ளது? அதற்குக் காரணம் தகுதியற்ற முஸ்லிம் தலைவர்களே என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை குசழவெடiநெ ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியல் பலத்தைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய சக்திகள் முஸ்லிம்கள். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் 50 – 60 சதவீதம் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகள் திட்டமிட்டு தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டு சட்டமியற்றும் சபைகளில் முஸ்லிம்கள் குரல் ஒலிக்க மறைமுகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

அற்ப பதவிக்கு பார்வைக் குருவிகளாக முஸ்லிம் தலைவர்கள் நியமிக்கப்படுதல்.

தேர்தல் நேரங்களில் முடிவான முடிவு எடுக்க இயலாத தலைமை.

முஸ்லிம் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த விடாமல் முஸ்லிம் தலைவர்களைக் கொண்டே பிளவு செய்தல்.

முஸ்லிம் தலைவர்களின் பலகீனங்களை பயன்படுத்தி உளவு மூலம் அவர்களுக்குள் மோத விடுதல்.

அற்ப விஷயங்களின் பக்கம் கவனத்தை செலுத்த விடுதல், தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர் பல்டி என குழப்பத்தை ஏற்படுத்தல்,

இவை முஸ்லிம் சமூகப் பின்னடைவிற்கு முஸ்லிம் தலைவர்களால் செய்யப்பட்ட சாதனைகள், சமூகத் தலைவர்கள் தடம் மாறி, இடம் மாறி, இலக்கு மாறி, லட்சியங்களை விட்டு விட்டு லட்சத்திற்கு வில் வளைவது போல் வளைந்ததால் ஏற்பட்ட சோதனைகள், வீழ்ந்தவர்கள் மீண்டும் எழுந்தார்கள் என்ற வரலாற்றை நாமே பார்க்கிறோம். நிதர்சனமாக இன்று வீழ்வதையே வெற்றி என்று பாடும் இயங்கா இயக்கத் தலைவர்களை என்னவென்று சொல்ல???

ஆம், மாண்டு விட்ட இதயங்களால் மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. கோழிகளுக்கு கோதுமையைத் தூவினால் சண்டை வந்து விடுகிறது, தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தால் முஸ்லிம் தலைவர்களுக்குள் சண்டை வந்து விடுகிறது. கோழிகளுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டன.

இளைஞனே! எத்தனைத் தேர்தல்கள், எத்தனை வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள், தலைவர்கள் கோட்டை விட்டதை உன் சிந்தனையில் நிறுத்திப் பார். உண்மை புரியும். உழுவதற்கு முன் நிலத்தின் தன்மையை அறிந்து இருக்க வேண்டும். விதைக்கும் முன் விதையின் வீரியத்ததைத் தெரிந்து இருக்க வேண்டும். வேகம் இருந்த அளவு விவேகம் இல்லாததால் ததியற்ற தலைமைத்தனம், முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்து விட்டது என்று குசழவெடiநெ பத்திரிக்கை சுட்டிக் காட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது உனக்கு.

வீழ்ச்சியில் இருந்து வெற்றி பெற்றிட, வாருங்கள் தலைவர்களை உருவாக்குவதை விட, மக்களை உருவாக்குவோம், சிந்தனைகளை கூர்மைப்படுத்துவோம், ஓய்வற்ற அறப்போராட்டம், உறக்கமற்ற விழிப்புணர்வு, கடின உழைப்பு தேவை.

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK ), தமிழ்நாடு
No. 39/21, Maraikayar Street,

Mannady, Chennai – 600 001
Tel : 98407-30652
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

மார்ச் 13, 2007

தமுமுக டெல்லி பேரணி புகைப்படங்கள் (DELHI RALLY GALLERY)

இந்தியாவெங்கும் இருந்து பல்வேறு அமைப்புக்கள் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்த தமுமுக வின் டெல்லி பேரணி பற்றிய புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.

CLICK HERE TO VIEW THE GALLERY

இட ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் டெல்லியல் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் அகில இந்திய அளவில் பல அமைப்புக்களும் தங்கள் தொண்டர்களை தமுமுக வின் டெல்லி பேரணிக்கு அனுப்பி தங்கள் ஆதரவைத் தெறிவித்திருந்தன.

இப்பேரணியில் கேரளம், கர்நாடகம், மும்பை உள்பட அகில இந்திய அளவில் பல்வேறு அமைப்புக்களும் முஸ்லிம் மானவர் அமைப்புக்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களின் உரிமைக்காக தமுமுக நடத்தும் இப்பேரணியின் அவசியத்தை உணர்ந்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்தார்கள். நிகழச்சியின் இறுதியில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் தலைவர்கள் அடங்கிய குழு பாரதப் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தது.

முஸ்லிம்களின் பொது நலனில் சிறிதும் அக்கறை இல்லாத குடந்தை மாநாடு புகழ் ஏமாற்று பேர்வழிகளான தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதினும் அதன் ஏனைய தலைவர்களும் இப்பேரணியை நடக்க விடாமல் தடுக்கவும் இதற்கு ஏனைய மாநிலங்களில் இருந்து முஸ்லிம்கள் கலந்து கொள்ளாமல் இருக்கவும் தங்களாளான பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். தமுமுக பேரணியில் கலந்து கொள்ள வேண்டாமெனவும் அந்த இயக்கம் தவறானது எனவும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முஸ்லிம் அமைப்பு்ககளுக்கும், சங்கங்களுக்கும் கடிதம் எழுதினர் ஆனாலும் வல்ல அல்லாஹ்வின் பெருங்கருனையாளல் இவர்களின் சதி முறியடிக்கப்பட்டு, இவர்களின் சுய முகங்களை அடையாளங்கண்டு கொண்ட முஸ்லிம்கள் பெருந்திரளாக வந்திருந்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்திருந்தனர்.

தமுமுக டெல்லியல் முஸ்லிம்களின் உரிமைக்காக முழங்கிய முழக்கம் உலகெங்கும் எதிரொழித்ததை பல்வேறு பட்ட உலக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிந்தது. ஈரான், இத்தாலி, பாகிஸ்தான்,சவுதி அரேபியா என பல்வேறு பட்ட வெளிநாட்டு ஊடகங்களும் இதைப்பற்றி மிகப்பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டிருந்ததன் மூலம் தமுமுக வின் இந்த பேரணி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினை அறிய இயன்றது.

இன்சா அல்லாஹ் தமுமுக இத்து்ன் விட்டுவிடாது இன்னும் பல போராட்டங்களை நடத்தி நமது உரிமைகளை மீட்டெடுக்கும் என்று நம்புவோமாக.

இந்தியாவெங்கும் இருந்து பல்வேறு அமைப்ப்கக்ள் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்த தமுமுக வின் டெல்லி பேரணி பற்றிய புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.

CLICK HERE TO VIEW THE GALLERY

காரைக்குடி, இஸ்லாம்

Older Posts »

Create a free website or blog at WordPress.com.