தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 3, 2007

தமிழகம் பாகிஸ்த்தானாக மாற்றப்படும் அபாயம் (Exclusive)

Filed under: தமிழக போலி ஜிஹாதிக — முஸ்லிம் @ 8:22 முப


எங்கு போய் முடியும் ?

மேலப்பாளையத்தில் அந்தக் கொடுமை நடந்திருக்கின்றது. கடுமையாக கண்டிக்க வேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய கொடுமை.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆண்டவர் தெருவைச் சேர்ந்த ஒரு பென்னை (பெயர் விபரம் தவிர்க்கப் பட்டுள்ளது) அதே ஊரைச் சோர்ந்த இம்ரான் கான் (19) முஹம்மத் மைதீன் (21) ரசூல் மைதீன் (22) நவுஷாத் (18) சாகுல் அமீது (27) முகமது உசேன் (எ) அல்லப்பா (23) ஆகியோர் நடுரோட்டில் கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப் பட்ட பென் விபச்சாரத்தில் ஈடுபட்டதாலும் கண்டித்தும் தவறான நடத்தையை திருத்திக் கொள்ள மறுத்ததாலும் கொலை செய்தோம் என்று இந்த இளைஞர்கள் காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்கள்.

காஷ்மீர் காந்தர்பால் என்கவுன்டர் கொலைகளுக்கு பிறகு காவல்துறையினரின் தகவல்களை நூறு சதவீதம் உண்மையானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. என்றாலும் இவர்கள் காவல் துறையினருக்கு தந்ததாக சொல்லப்படுகின்ற ஒப்புதல் வாக்கு மூலம் உண்மையானது தான் என அனுமானிக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகள் கனமானவை, முக்கியமானவை, தவிர்கக் முடியாதவை.

முதலாவதாக, ஒரு மனித உயிரைப் பறிக்கின்ற உரிமையை இவர்களுக்குத் தந்தது யார்?

ஓர் உயிரைக் கொல்வது ஒட்டுமொத்த மனி-த குலத்தையே கொல்வதற்கு சமமாகும் என்பதுதானே இஸ்லாத்தின் கட்டளை (பார்க்க குர்ஆன் 5:32).

தண்டனை கொடுக்கின்ற அதிகாரம் காஜிக்கும் (நீதிபதிக்கும்) அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் அரசாங்கத்துக்கும் தான் உண்டு. தனி மனிதர்கள் சட்டத்தை கையில் எடுத்தக் கொள்ளக் கூடாது என்று தானே ஷரிஅத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்ப்பட்டபோது திருடனின் கையை வெட்டுகின்ற தண்டனையை உமர் (ரலி) அவர்கள் தற்காலிகமாக ரத்து செய்யவில்லையா?

இன்று ஒட:டு மொத்த சமூகச் சூழலே நாறிக் கிடக்கின்ற போது விபச்சாரப் பழியை ஒரு பென்ணின் மீது சுமத்தி கொல்கின்ற அளவுக்கு போய் இருக்கின்றார்கள்.

இவர்கள் என்ன உமர் (ரலி) அவர்களை விடவும் அறிவில் சிறந்தவர்களா? பாவம் செய்யாதவர்கள் மட்டும் கல் எறியட்டும் என்று ஈசா (அலை) சொன்னதை இவர்கள் கேள்விப்படவில்லையா?


மார்கக்த்தை பற்றிய சரியான புரிதல் இல்லாத அரைவேக்காட்டுக் தனமான அறிவை வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தலாமா?

எல்லாவற்றையும் வன்முறையால் போட்டுத் தள்ளிவிடுவதால் தீர்த்துவிட முடியும் என்கிற சிந்தனை எங்கு போய் முடியும்?

– T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

நன்றி : சமரசம் (Click Here to View teh Scaned Copy)

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். “மதக் கோட் பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், கொலை செய்தோம்’ என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்

நெல்லை மேலப்பாளையம் ஆண்டவர் தெருவைச் சேர்ந்தவர் மும்தாஜ் (38). கணவர் ஷாஜகான் பிரிந்து சென்று விட்டதால் மும்தாஜ் தனியே பீடிச் சுற்றி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருடன் தவறாக பழகியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமுற்ற அந்த பகுதி இளைஞர்கள் கடந்த 9ம் தேதி பட்டப்பகலில் மும்தாஜை நடுரோட்டில் தரதரவென இழுத்து வந்து குத்திக் கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மேலப்பாளையம் சாகுல் அமீது (27), ரசூல் மைதீன்(22), நவுஷாத் அலி(19), இம்ரான், முகமது உசேன் அல்லாப்பா, முகமது மைதீன்(23) ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் முகமது மைதீன் பி.ஏ., இரண்டாமாண்டு பட்டப்படிப்பும், இம்ரான் ஐ.டி.ஐ.,யிலும் படிக்கும் மாணவர்கள் . நவுஷாத்தின் அண்ணன் ஷாகுல் அமீது என்பவரை தேடி வருகின்றனர்.

மும்தாஜ் அதே பகுதியைச் சேர்ந்த பீடி நிறுவன ஊழியர் ஒருவருடன் தவறாக பழகுவதை பார்த்து அவரை இவர்கள் மிரட்டியுள்ளனர்.

பீடி நிறுவன ஊழியர் கேரளாவுக்கு தப்பிச் சென்றதால் உயிர் பிழைத் துள்ளார். மும்தாஜை இவர்கள் மிரட் டிய போது அவர் பணியவில்லை.

தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், மும்தாஜை குத்திக் கொலை செய்தோம் என ஆறு பேரும் கூறி இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி : தினமலர்

தமிழக அரசு இதுபோன்ற தீவிரவாதிகள் மீது கடுமையான
நடவடிக்கை எடுத்து ஒடுக்க முன்வர வேண்டும். இவர்கைளை இந்தக் காரியத்தை செய்யத் தூண்டியது யார்? இவர்களின் பின்னால் கள்ள பத்வா வழங்கி இந்த கொடுமையை செய்யத்
தூண்டிய அமைப்பு எது? இவர்களிடம் இஸ்லாத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில் கள்ள பைஅத் வாங்கி ஜிஹாத் செய்யத் தூண்டும் அமைப்பு எது? என்பது குறித்து தீவிர
விசாரனை நடத்தி குற்றத்தின் காரனகர்த்தாக்களையும் இதன் பின்னினியில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இந்தக் குற்றத்தில் எந்த அமைப்பாவது ஈடுபட்டிருந்தால் அந்த அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தாமதிக்காது எடுத்திட வேண்டும்.

தமிழக அரசு இந்த விசயத்தில் மந்தமான நடவடிக்கைகள் எடுத்தால், தமிழகம் கலவரக் காடாவதையும், குஜராத்தில் நடந்தது போல் ஒரு மாபெரும் மதக்கலவரம் தமிழகத்தில் நடக்கவிருப்பதையும் தவிர்க்க இயலாது.

இறைவன் நாடினால் இந்த கள்ள பைஅத் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் உண்மை நிலவரங்களை அலசும் கட்டுரை விரைவில் தக்க ஆதாரங்களுடன் இங்கு வெளியிடப்படும்.

 • தமிழகத்தை கலவரக்காடாக்க இவர்கள் செய்யும் சதி.
 • வெளி அமைப்பினரிடம் பெறும் பணத்திற்காக தமிழக முஸ்லிம் இளைஞர்களை பலிகடாவாக்கும் தலைவர்கள்.
 • அப்பாவி தமிழக முஸ்லிம் இளைஞர்களை மூலைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அபாயம்.
 • பொய்யான ஹதீஸ்கள், தவறாக கள்ள ஃபத்வாக்கள் மூலம் தமிழக இளைஞர்களை தீவிரவாதிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு.
 • இவ்வமைப்பு இரகசியமானதா? இவர்கள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவக் கூடியவாக்ளா?
 • மற்ற அமைப்புக்களை கொடி கட்டுகிறான், போஸ்ட்டர் ஒட்டுகின்றான், தேர்தல் வேலை செய்கின்றான் அவர்கள் அனைவரும் முனாஃபிக்குகள்? காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்த இந்த அமைப்பினர் இன்று தங்களுக்கும் கொடியை உருவாக்கி பதாகைகள் ஏந்தி வீதி ஊர்வளம்?? மற்றவர்கள் இந்த காரியத்தை செய்ததால் முனாஃபிக்குகள் என்று பத்வா வழங்கிய இந்த அமைப்பினர் கையில் கொடியை ஏந்தி தாங்களும் முனாஃபிக்குகளாக மாறி விட்டார்களா? இல்லை அந்த ஃபத்வா மற்ற அமைப்பினருக்கு மட்டுமா?

தமிழகத்தில் பல முஸ்லிம் கிராமங்களில் விபச்சாரத்தை ஒழிக்கின்றேன், விபச்சாரியை பிடிக்கின்றேன் என்று இவர்கள் செய்யும் அட்டகாசங்கள்?

ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்கள் மீதும் குற்றம் செய்தவர்கள் மீதும் சட்டத்தை கையில் எடுத்து வண்முறையை ஏவும் இந்த கும்பலை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? இன்னும் ஓரு கோவையை உருவாக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

இன்னும் ஏராள தகவல்களுடன் இறைவன் நாடினால் இங்கு விரைவில் அந்த போலி இஸ்லாமிய ஜிஹாதிகளின் முகமூடி கிழிக்கப்படும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Advertisements

5 பின்னூட்டங்கள் »

 1. BISMILLAHIRRAHUMANIRRAHEEM

  WHAT A NONSENSE ARTILCE,WHO WROTE THIS.THIS WEBSITE IS GOING ON WRONG ROUTE.

  பின்னூட்டம் by muslimeen — ஏப்ரல் 5, 2007 @ 5:00 முப

 2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோ. முஸ்லிமின் அவர்களுக்கு நீங்கள் கூறியுள்ளது போல் இந்த நான்சென்ஸ் ஆர்ட்டிக்கிளை பதிந்ததது நான்தான்.

  இந்த தளம் “ராங் ரூட்டில்” செல்வதாக கூறியுள்ளீர்கள், அது எந்த வகையான ராங் ரூட் என்றும் எப்படி அதை நீங்கள் கணித்தீர்கள் என்றும் கூறினால் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

  நன்றி
  முகவைத்தமிழன்

  பின்னூட்டம் by முகவைத்தமிழன் — ஏப்ரல் 5, 2007 @ 8:17 முப

 3. BISMILLAHIRRAHUMANIRRAHEEM

  WHAT HAPPENED TO U MR MUGAVAI.WHAT IS THE RELATIONSHIP WITH MELAPALYAM MATTER AND BAIATH GROUP ALIAS VIDIAL.why u wrote the big lie.I think u r a big lier

  பின்னூட்டம் by muslimeen — ஏப்ரல் 5, 2007 @ 9:21 முப

 4. assalamu alaikum varahmathullahi va barakaathu hu,

  your title for this article (தமிழகம் பாகிஸ்த்தானாக மாற்றப்படும் அபாயம் (Exclusive))in tamil is so vigorous, yourself exagirate it with the title,

  எங்கு போய் முடியும் ? itself is enough,it is our duty to condemn the act, and those did this should be punished by law.

  The youngsters who perform those act will get in “Aakhir” with allah

  பின்னூட்டம் by Mohamed — ஏப்ரல் 22, 2007 @ 8:44 பிப

 5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  அன்பின் சகோ. முகம்மது அவர்களுக்கு, நீங்கள் சொல்வது போல் அதே தலைபடபை வைத்திருக்கலாம்தான். ஆனால் நான் வைத்துள்ள தலைப்பு தான் அதற்கு பொருந்தும். எமது நோக்கம் அந்த செய்கையை செய்த இளைஞர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டுமு் என்பதல்ல இதன் பின்னர் இயங்கும் அமைப்பும் இவர்களை செய்யத் தூண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

  இன்று அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அங்கு முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட வைக்க சில நாசகார சக்திகள் ஜிஹாத், இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் முட்டாள் தனமான திட்டங்களை வகுத்து தமிழக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூலைச்சலவை செய்து இது (மும்தாஜ் படுகொலை) போன்ற சம்பவங்களை இஸ்லாமிய தண்டனை என்ற பெயரில் செய்து வருகினற்னர்.

  மேலப்பாளையத்தில் நடந்தது தனிப்பட்ட சம்பவமல்ல மாறாக ஒரு தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்களை மூலைச்சலவை செய்து வரும் வெளிநாட்டில் பணம் பெறும் ஒரு தீவிரவாத அமைப்பின் செயலின் ஒரு பகுதியாகும்.

  புறிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். இதை நாம் அனைவரும் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.

  நன்றி

  பின்னூட்டம் by முகவைத்தமிழன் — ஏப்ரல் 23, 2007 @ 6:58 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: