தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 16, 2007

முச்சந்தி சிரிக்கும் ததஜவின் நாடகங்கள்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களுக்கிடையிலேயான ராஜினாமா? நாடகத்தின் பின்னணி பற்றி நாம் எதுவும் எழுதாமல் இருந்தோம். பின்னணி பற்றி முன்பே எழுதி இருந்தால் முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர் என்ற கீழ் தர முடிவை பி.ஜெ. இவ்வளவு விரைவாக எடுத்திருக்க மாட்டார். நமது எழுத்தைக் காட்டியே பாக்கரை ஏமாற்றி இருப்பார். பாக்கரும் பி.ஜெ.யை மிரட்ட முடியாத நிலைக்கு வந்திருப்பார். பிராடு பி.ஜெ.யின் முடிவுகள் பித்தலாட்டமானது என்பதும் இவ்வளவு சீக்கிரம் அம்பலமாகி இருக்காது.

பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர்

பாக்கர் ராஜினாமாவை ஒட்டி பி.ஜெ. வள வள கொழ கொல என ஒரு விளக்கெண்ணை விளக்கம் வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் பித்தலாட்டம் என அறிவுள்ளவர்கள் அனைவரும் விளங்கிக் கொண்டார்கள். எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டோம். கலீல் ரசூல் விஷயத்திலும் இந்த அடிப்படையில்தான் அவர் ராஜினாமா செய்தார் என கப்ஸா அடித்தார். பி.ஜெ. அடித்தது கப்ஸா இல்லை என்றால் இதே விளக்கத்தை கலீல் ரசூல் ராஜினாமாவின் போதும் கூறி இருப்பார். இது பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர் என்பதற்கு இன்னொன்றையும் நினைவுக்கு கொண்டு வருவோம்.

பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

தங்களுக்கு தாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டுப்படிதான் இந்த ராஜினாமா என்றால் புகழ் பெற்ற ஒய்.கே. மேன்சன் விவகாரத்தின் போதே பாக்கரின் ராஜினாமா நடந்திருக்க வேண்டும். அல்லது ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். சென்னையிலிருந்து கோவில்பட்டி வரை அந்நிய பெண்ணுடன் அடுத்தடுத்து இருந்து வந்தார் என்பதற்கு உள்ள சாட்சிகளைவிட பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் ஜமாஅத்தின் நலன் கருதி ஆரம்பத்திலேயே எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு என்பது உண்மையானால் மாணவனிடம் ஆண் புணர்ச்சி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஸைபுல்லாவை தலைமைப் பொறுப்பில் வைத்திருப்பார்களா? அடுத்தவன் மனைவிக்கு தர்ஜுமாவில் வைத்து காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது.

கோயில்பட்டி வரை பாக்கர் கும்மாளமடித்தார் என்ற குற்றச்சாட்டு பரவிய சம காலத்தில்தான் ஆமினா என்ற அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா மதுரையில் தங்கினார். அதனால் அந்தப் பெண்ணின் கணவரும் தலாக் சொல்லி விட்டார். என்ற செய்தியும் பிரபலமானது. ஆனால் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா ராஜினாமா செய்யவில்லை. பாக்கர் ராஜினாமாவுக்கு பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது, பித்தலாட்டமானது ரீல் என்பதற்கு இவையே போதுமானதாகும்.

பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யாவிடம் ராயல்டி வாங்கி பிழைப்பு நடத்தியவர்தான் பி.ஜெ. தானே தனியாக புக் வியாபாரம் செய்ய ஆரம்பித்ததும் தனது புக்குகளை தானே பிரிண்ட் செய்து விற்க வேண்டும். முழு வருமானமும் தனக்கே வர வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே ஜக்கரிய்யாவை கழட்டி விட்டார். இதுபோல்தான் பாக்கரின் விஷயமும். பி.ஜெ.யின் மூன் கிரியேஷன் மூலம் மட்டுமே சி.டி. விற்பனைகளும் டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். அந்த வருமானங்கள் முழுவதும் தனக்கே வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பாக்கர் தன்னோடு இருந்தால் பாக்கரின் மீடியா வேல்டு மூலம் நடைபெறும் சி.டி. விற்பனை டி.வி. நிகழ்ச்சிகளை தடுக்க முடியாது. எனவே பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

தஃவா சென்டர் மாணவியும் பாக்கரும் ஏதோ பஸ் ஸடாண்டுக்கு போன இடத்தில் ஒரே பஸ்ஸில் ஏறி அடுத்தடுத்து இருக்கவில்லை. பி.ஜெ.யின் திட்டப்படி ஹாமித் பக்ரிக்கு 2ஆவது திருமணம் நடந்தது அல்லவா. அது போல் பி.ஜெ.யின் திட்டப்படி ஒரு வாரத்திற்கு முன்னரே தஃவா சென்டர் மாணவிக்கும் பாக்கருக்கும் ஒரே பஸ்ஸில் கணவன் மனைவி போல் அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ. விரித்த வலையில் பாக்கர் வீழ்ந்து விட்டார். இதை பயன்படுத்தி பாக்கரை மிரட்டிய பி.ஜெ. ராஜினாமா செய்ய வைத்தார். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தில் சிக்கிய பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோருக்கு போன் செய்தார். யாரும் பாக்கரின் போன் அழைப்பில் கிடைக்கவில்லை.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி

காரணம் அனைவரது போனும் டெல்லி பேரணி பணியால் எந்த நேரமும் பிஸியாக இருந்தது. சிலர் டெல்லிக்காக சிம் கார்டையும் மாற்றி இருந்தனர். அவர்களில் ஒருவர் மேலப்பாளையத்துக்காரர். டெல்லி நம்பர் வாங்கி இருந்த அவரின் தமிழக எண்ணுக்கு பாக்கர் போன் செய்துள்ளார். அதனால் அவரிடம் பேச முடியவில்லை. பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி செய்யும் இந்தச் செய்தி கசிய ஆரம்பித்தது. உடனே த.மு.மு.க.வின் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். பெரும்பாலான தொண்டர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

முதல் முயற்சியாக துபை சென்றார்.

மாநில நிர்வாகிகளிடம் பாக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில செயற்குழுவில் பாக்கர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை இல்லை. மாநில பொதுக்குழுவில்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அதன் பின்தான் சேர்ப்பது பற்றி யோசிக்கவே வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டனர். இதை அறிந்த பாக்கர் பி.ஜெ.யை மிரட்ட முடிவு செய்து வெகுண்டெழுந்து முதல் முயற்சியாக துபை சென்றார்.

விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு.

துபை செல்லும் முன் த.த.ஜ.வின் முன்னாள் மாநில செயலாளர்களில் ஒருவரான வழித் தோழர் என்ற பொருள்படும் பாளையவாசியிடம் பேசி உள்ளார். டேய் நீ ஏண்டா போனே. வாயை திறந்தால் நாறும்டா. அவ்வளவு அசிங்கம்டா. துபை சென்று வந்து பேசுகிறேன் என்று கூறி இருக்கிறார். அடுத்து அல்லாஹ்வின் அருள் என்ற பொருள்படும் பெயருடைய நல்லூராரிடம் பேசிய பாக்கர். துபை சென்று விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு ஆகியவற்றை சேர் (பங்கு) சேர்ந்தவர்களிடம் விளக்கி விட்டு வரப் போகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார்.

பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற திட்டமிட்டு துபை சென்ற பாக்கர் அப்பா கடை பார்ட்னர்களான ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகளை தனது ஆதரவாளர்களாக ஆக்கிக் கொண்டார். பிறகு விண் டி.வி.க்கு சேர் (பங்கு) கொடுத்து ஏமாந்தவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியை செய்து கொண்டு அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார். ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகள் பாக்கர் ஆதவாளர்களாக மாறியதை அறிந்த பி.ஜெ. தொடர்ந்து பாக்கர் துபையில் இருந்தால் யு.ஏ.இ. முழுக்க வென்றெடுத்து விடுவார் என்பதை உணர்ந்தார்.

பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

யு.ஏ.இ.யை வென்றெடுத்து விட்டால் அப்படியே கத்தார், குவைத் என சென்று பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விடுவார் பாக்கர். பி.ஜெ.யின் சுக போக வாழ்வுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அரபக வருமானத்தில் மண் விழுந்து விடும் என்பதையும் உணர்ந்தார். எனவே தாயகம் வாருங்கள் பேசிக் கொள்வோம் என பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து

துபை சென்றதால் புதிய தெம்மை பெற்ற பாக்கர் தாயகம் வந்ததும் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி தனக்குத் தர வேண்டும். இல்லை என்றால் மானம் காற்றில் பறக்கும். உங்கள் அந்தரங்களை அரங்கத்தில் ஏற்றி நாறடித்து விடுவேன் என்று பி.ஜெ.யை மிரட்டினார். நிர்ப்பந்தத்தால் பி.ஜெ.யிடம் அடிமை போல் கிடக்கும் த.த.ஜ. மாநில நிர்வாகிகளும் பாக்கர் பின் அணி வகுத்தனர். இதனால் நிர்வாகிகள் மட்டத்திலும் பாக்கரின் கை ஓங்கியது. கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு மேடையில் பேசும்போது பி.ஜெ. பெண்கள் பக்கமே அதிகம் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு மூலம் பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து என்ற நிலை உருவானது.

செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு.

பாக்கரின் மிரட்டலுக்கு அடி பணிந்தார் பி.ஜெ. அடி பணிந்த பி.ஜெ. பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளானார். எனவே பி.ஜெ.யே பாக்கருக்காக கேன்வாஸ் செய்யும் பணியில் ஈடு பட்டார். மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆக்கப்படுவதை எதிர்த்த கலீல் ரசூலும் அவரது ஆதரவாளர்களும் செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு செய்தனர். பி.ஜெ. முயற்சியால் மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆனார். பி.ஜெ. தனது சுய நலத்துக்கா மார்க்கப் பணியை பின் தள்ளி விட்டு அரசியல் பண்ணுகிறார் என்பதை உணர்ந்த உண்மை தவ்ஹீதுவாதிகள் பி.ஜெ.யிடமிருந்து விடை பெற்று வருகின்றனர்.

நன்றி : கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

காரைக்குடி, இஸ்லாம்

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: