தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 4, 2007

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில்…..

Filed under: முபாஹலா இஸ்லாத்தில் — முஸ்லிம் @ 12:11 பிப

அனைவருக்கும் வணக்கம்.

நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மதங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மக்களிடையே பகைமையையும், மூட நம்பிக்கைகளையும் வளர்க்கின்றன என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.

இஸ்லாம் மதத்தை வளர்க்க பி.ஜெய்னுலாபிதீன் என்ற இஸ்லாமிய பெரியவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்ப்பேன்.

சமீபத்தில் அவர் நடத்திய முக்காபுலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் எழுந்த சந்தேகமே இக்கேள்வி.

கிறிஸ்த்தவத்தில் ஆதி மனிதன் செய்த பாவம் எல்லா மனிதர்கள் மீதும் தொடர்ந்து இருந்து வந்ததை தன் இரத்தத்தால் களையவே இயேசு சிலுவையில் உயிர் நீத்தார் என்ற கிறிஸ்த்தவ சித்தாந்தத்தை, “ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க இயலாது” என அறிவுக்கு இணங்கும் வகையில் அது தா நியாயமும் என இதே பி. ஜெயினுலாபித்தீன் பெரியவர் அறிவுப்பூர்வமாக வாதிட்டுள்ளது எனக்கு தெரியும்.

அவ்வாறிருக்க, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில், ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது என விளக்க இயலுமா?

இவ்வாறு சாபம் கோர இஸ்லாம் தான் வழிகாட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வமான மார்க்கமாகிறது என்பதையும் சற்று விளக்குங்களேன்.

நன்றி.

சுதர்ஸன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் சுதர்சனின் கேள்வி்க்கு நம்மவர்கள் யாராவது அல்லது சம்பந்தப்பட்ட பி.ஜே யோ பதில் அளிக்க இயலுமா?

சுய விஸயங்களுக்கும், சொந்த பிரச்சினைகளுக்கும் முபாஹலா செய்வது மார்க்கத்தில் கூடுமா? அல்லது இஸ்லாத்தில் முபாஹலா என்று ஒன்று உள்ளதா? அதை மார்க்கம் அனுமதிக்கின்றதா? அப்படியானால் அது எதற்காக எந்த சூழ்நிலையில் செய்ய வேண்டும்?

நமது சகோதரர்கள் யாராவது இது குறித்து விளக்க கட்டுரை எழுதி அனுப்பினால் இங்கு பிரசுரி்க்க்ப்படும் அத்துடன் அக்கட்டுரை சகோதரர் சுதர்ஸன் போன்றவர்களின் இஸ்லாத்தினை பற்றிய கேள்விகளுக்கும் பதிலாக அமையும்.

அன்புடன்
முகவைத்தமிழன்

4 பின்னூட்டங்கள் »

 1. சுதர்சன் உங்களது ஆர்வம் பாராட்டத்தக்கது,
  முபாஹலா பற்றிய உங்களது வினா இந்த இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என நான் கருதுகின்றேன்.மிக ஆரம்பத்தில் P.J அவர்களுடைய முற்போக்கில்லாத,சர்ச்சைகள் மிகுந்த நடத்தைகளுடன் எனக்கு உடன்பாடு எப்பொழுதும் இருந்ததில்லை. எனினும் உங்களது ஆர்வத்திற்கு மதிப்பளித்து இங்கு பதில் தர விளைகின்றேன், எனது பதில் முழுமையானதாக இருக்காது இதற்கு மாற்றுக்கருத்திகளும் இருக்க முடியும்.(அல்லாஹ் நன்கு அறிந்தவன்).

  உங்களது வினாவில் இரண்டு அம்சங்களை என்னால் உணர முடிகின்றது.
  01- பாவங்களை சுமத்தல்
  02-அழிவை வேண்டி சாபமிடுதல்.
  பாவங்களை சுமத்தல் என்பதில் இஸ்லாம் மிக அறிவு பூர்வமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.அதுபற்றிய விளக்கம் இங்கு அவசியப்படாது.

  ஆனால் அழிவை வேண்டி சாபமிடுதல் என்ற அம்சம் மிகவும் இக்கட்டான சூழ் நிலையின் போது மார்க்கத்தையும், அதனை பின்பற்றுவோரையும் பாதுகாக்கவென மேற்கொள்ளப்படும்”பரஸ்பர சாபம் வேண்டும் பிரார்த்தனை” யாகும். இங்கு இரண்டு சந்தர்ப்பங்கள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றது
  01- இஸ்லாம் தவிர்ந்த் ஏனைய வேதமுடய சாராருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாத சந்தர்ப்பம்.
  02- முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் பாதுகாக்க வேண்டிய சந்தர்ப்பம்.

  இவை தவிர்ந்த சாதாரண சந்தர்ப்பங்களில் முபாஹலா செல்லுபடியற்றது.

  இங்கு இரு சாராரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து தாம் இருக்கும்/சார்ந்துள்ள அம்சம் மிகவும் சரியானது என அடையாளம் கண்டு, தாம் பிழை எனில் தாம் நம்பிக்கை வைத்துள்ள அல்லாஹ்விடமிருந்து சாபத்தை தாமே வேண்டிப் பிரார்த்தனை புரிதல் முபாஹலா எனப்படுகின்றது.

  தம்மீது தாமே சாபம் வேண்டுதல் என்பது- நம்பிக்கையின் உச்ச அளவைக்காட்டப்போதுமானது.
  இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள அன்பு தனது உயிர்,தனது குடும்பத்தின் வாழ்வு என்பவற்றையும் மிகைத்தது என்பதாகவே முபாஹலா அமையும்.

  இது எனது சாதாரண பதில் மட்டுமே. விரிவான பதில் வேண்டின் தயவுசெய்து விண்ணப்பிக்கவும்.
  நன்றி
  அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
  அ.அஸ்மின்

  பின்னூட்டம் by Idealeye — ஜூலை 6, 2007 @ 2:09 பிப

 2. சகோதரர் ரைசுதீனுக்கு,

  அந்நஜாத் ஜூலை – 2007 இதழில் முபாஹலா தொடர்பான வினாவுக்கு அதன் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதனை உங்கள் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்யலாமே?

  போராட்டங்களில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொள்வதை விமர்சிக்கும் உங்கள் கட்டுரையில் வாசகங்களை இன்னும் நல்லமுறையில் பயன்படுத்தி இருக்கலாம். நமது செயல் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் அமைந்து விடக் கூடாது அல்லவா?

  பின்னூட்டம் by Chutti — ஜூலை 8, 2007 @ 5:22 முப

 3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  அன்பின் சகோதரருக்கு,

  தாங்களட அந்த அந்நஜாத் ஜூலை – 2007 இதழை ஸ்கேன்ட் காபியாகவூ அல்லது டெக்ஸ்ட் ஃபார்மெட்டிலோ அனுப்பி கொடுத்தல் உடனடியாக பிரசுரிக்கப்படும்.

  நன்றி
  முகவைத்தமிழன்

  பின்னூட்டம் by முகவைத்தமிழன் — ஜூலை 8, 2007 @ 6:19 முப

 4. பல்வேறு தளங்களில் இக்கேள்வியை கேட்டதில் இங்கு மட்டுமே என் கேள்வி எவ்வித எடிட்டிங்கும் இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது.

  அதற்காக முதலில் தோழர் முகவைத்தமிழன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  என் கேள்விக்கு பதிலளிக்க “முயன்றுள்ள” தோழர் அஸ்மின் அவர்களுக்கும் என் நன்றி.

  ஆனால் உங்களின் பதில் என் கேள்விக்கு போதுமான பதிலாக இல்லை.

  என் கேள்வி நேரடியானது.

  1. “ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்கமாட்டார்” எனில், ஆண்கள் தங்களுக்குள் நடத்திய கொடுக்கல், வாங்கல் போன்ற மற்று விஷயங்களில் செய்த தவறுகளுக்கு எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளையும் பொதுவில் குற்றவாளி போன்று நிறுத்தி, அவர்கள் மீதும் சாபம் இறங்கட்டுமாக எனக் கூறுவது எவ்வகையில் சரியானது?

  2. அறிவுப்பூர்வமான இஸ்லாம் இவ்விஷயத்திற்கு கூறும் அறிவுப்பூர்வமான விளக்கம் என்ன?

  இதனை நான் மாற்று வார்த்தையில் கேட்பதானால்,

  மஹாபாரத கதையில்…. ஓ! இ(த்)தி(போன)காசத்தில்(!), கட்டிய மனைவி திரௌபதியை மக்கள் மத்தியில் தன் சுயகவுரவத்தை காக்க பந்தயப்பொருளாக வைத்து சூதாடுகிறானே யுதிஷ்டிரன் – இந்து சனாதன தர்மம் அவதார புருஷனாக எடுத்துக்காட்டும் இவனின் செய்கைக்கும், அறிவுப்பூர்வமான மார்க்கமான இஸ்லாத்தை தூக்கி நிறுத்த அறிவுப்பூர்வமான விளக்கங்கள் அளித்து மற்றவர்களை மதம்மாற்ற முயலும் உங்களின் அறிஞர் பி.ஜெய்னுலாபித்தீன் மற்றும் அவரின் எதிரிகளாக இருந்த அந்த 8 பேர்களின் செய்கைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இதனை அறிவுப்பூர்வமாக விளக்க இயலுமா?

  நன்றி,
  சுதர்சன்.

  பின்னூட்டம் by sutharsan — ஜூலை 8, 2007 @ 12:32 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: