தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 31, 2007

யார் போலி? யார் பொய்யர்?

Filed under: இஸ்லாமிய இணையப் பேர, ஐஐபி, IIP, iiponline — முஸ்லிம் @ 8:31 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதர சகோதரிகளே,

கடந்த சில காலமாக நமது உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களை பொய்யரென்றும் போலியென்றும் அவதூறு கூறி இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகின்றது ஒரு பொய்யர் கூட்டம்.

அவர்களின் கூற்றுக்களை பொய்யாக்கும் விதமும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடியாகவும் இஸ்லாமிய இணையப்பேரவையினர் தகுந்த விளக்கங்களுடன் பதில் கொடுத்து வருகின்றனர். அவற்றை நாம் அனைவரும் படித்து பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

நன்றி

****************************************************

யார் பொய்யர்? (பாகம் – 1)

பொய்யர்கள் யார்? புளுகுவது யார்?

இவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது. ….மேலும் படிக்க….

யார் பொய்யர்? (பாகம் – 2)

இவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்?

இன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா? தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா? உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா? சற்று சிந்தியுங்கள். …மேலும் படிக்க……

இஸ்லாமிய இணையப் பேரவை

IIPONLINE.ORG


யார் போலி? யார் பொய்யர்?

Filed under: இஸ்லாமிய இணையப் பேர, யார் பொய்யர்?, IIP — முஸ்லிம் @ 8:14 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதர சகோதரிகளே,

கடந்த சில காலமாக நமது உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களை பொய்யரென்றும் போலியென்றும் அவதூறு கூறி இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகின்றது ஒரு பொய்யர் கூட்டம்.

அவர்களின் கூற்றுக்களை பொய்யாக்கும் விதமும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடியாகவும் இஸ்லாமிய இணையப்பேரவையினர் தகுந்த விளக்கங்களுடன் பதில் கொடுத்து வருகின்றனர். அவற்றை நாம் அனைவரும் படித்து பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

நன்றி

****************************************************

யார் பொய்யர்? (பாகம் – 1)

பொய்யர்கள் யார்? புளுகுவது யார்?

இவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது. ….மேலும் படிக்க….

யார் பொய்யர்? (பாகம் – 2)

இவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்?

இன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா.? தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா? உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா? சற்று சிந்தியுங்கள். …மேலும் படிக்க…….

இஸ்லாமிய இணையப் பேரவை

IIPONLINE.ORG


ஓகஸ்ட் 25, 2007

பிஜேயின் கைதால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியா?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:24 முப

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அன்புள்ள நண்பர் சகோ.முஹம்மதுவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

இந்த வலைத்தளத்தில் வெளியான ‘சென்ற இடமெல்லாம் செருப்பு’ என்ற செய்திக்கு தாங்கள் எழுதிய விமரிசனம் கண்டேன். தங்களின் மேலான பார்வைக்கு கீழ்காணும் தகவல்களைத் தர விரும்புகிறேன்.

முதலாவதாக, ஒருவரைப் பற்றி அறிய வேண்டுமானால் அவரது நண்பரைப் பற்றி அறிவது நல்லது. அந்த அடிப்படையில் தாங்கள் மனம் வருந்தும் அளவிற்கு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள திருவாளர் பிஜேயின் தற்கால உற்ற நண்பர் யார் தெரியுமா?

ரதி மீனா சொகுசு பஸ்ஸில், இஸ்லாத்தை கற்க வந்த நந்தினி என்ற பெண்ணோடு சல்லாபித்தபடி பிரயாணித்த சகா, திருவாளர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் தான். இவரது வீர தீர பிரதாபங்களை சரச சல்லாபங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டால் கடலூர் நிர்வாகிகளிடமோ ஒய்.கே.மேன்ஸன் (மண்ணடி) நிர்வாகிகளிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இப்ப மேட்டருக்கு வாங்க.

இந்த செய்தியில் (சென்ற இடமெல்லாம் செருப்பு) மூலமாக செய்தியாளர் சந்தோசப்படுவதாக தாங்கள் கருதினால் அது தவறாக கூட இருக்கலாம். ஒருவேளை அந்த செய்தியை வெளியிட்டவர், கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என கேள்விப்பட்டுள்ளோமே, ஆனால் கற்றவர் என பலராலும் நம்பப்படுகிற ஒருவர் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் பொழுதும் அங்குள்ள காவல் துறையினராலும் சுங்க குடியேற்ற அதிகாரிகளாலும் கைது செய்யப்படுவதும், விசாரிக்கப்படுவதும் பின்னர் உடனடியாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்படுவதும் தொடர்கதையாவதால் ஆதங்கத்தோடு கூட அந்த தலைப்பை இட்டிருக்கலாம்.

என்றாலும் சகோதரரே தாங்கள் எண்ணுவது போல் சந்தோஷப்படக்கூடியவர்களும் இல்லாமலில்லை.

ஏனெனில், அல்லாஹ்விற்காக ஒருவரை விரும்புவதும், அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதும் ஒரு உண்மை விசுவாசியின் பண்பு என அவர்கள் அறிந்துள்ளது தான் காரணம்.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஸகாத் விஷயத்தில் சமுதாயத்தை வழிகெடுக்க முனைந்தவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அல்லாஹ் அருளிய வேதமான அல்குர்ஆனிற்கு தான்தோன்றித்தனமாக விளக்கம் எழுதியவர், அதிலே நபி ஸுலைமான் (அலை) அவர்களை கண்ணியக்குறைவாக எழுதியவர், அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் எம் பெருமான் முஹம்மது ரஸுல் ஸல் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெற்ற அருமை நபித்தோழர் அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை, ஒருவர் கிரிமினல் என்று கேவலமாக விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை மட்டுமல்ல இன்னும் ஏராளமான நபித்தோழர்களையும் கண்ணியக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்தியைக் கேட்டு ஒரு முஸ்லீம் சந்தோஷப்படாமல் இருக்க முடியுமா?

கஸ்டோடியன் ஆஃப் அபூஸானி (பாக்கரின் பாதுகாவலன்)கைது செய்யப்பட்டதை கேட்ட முஸ்லீம் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்?

பொய்யான காரணங்களைக் கூறி சமுதாயத்தை பிளவுபடுத்தி வரும் யூதர், பாப்பாத்தியின் கைக்கூலி, கருங்காலி ஒருவர் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் அறைக்குள் ஒன்றும், அம்பலத்தில் ஒன்றுமாக உலவி (உளறி?!!!) வரும் ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

சமுதாயத்தின் பொருளாதாரத்தை சுனாமியின் பெயரால் வசூலித்து தனது சொந்த கட்சியை வளப்படுத்த, கட்சியின் குண்டர்களுக்கு சீருடைக்காக செலவழிப்பார் எனில், அவர் கைது செய்யப்பட்டார் எனில் அதைக் குறித்து எந்த ஒரு முஸ்லிமும் சந்தோஷப்படவே செய்வான்.

இப்படி அவரது கைது குறித்து முஸ்லிம்கள் சந்தோஷப்பட ஏராளமான காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே அதற்காக தாங்கள் வருத்தப்படாமல், தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

வஸ்ஸலாம்
அன்புடன் – அபூதாஹிர்

ஓகஸ்ட் 24, 2007

ஏகத்துவ எழுச்சி மாநாடு – ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ)

Filed under: ஏகத்துவ எழுச்சி மாந, ஐ.டி.ஜே, ITJ, kadaloor, TNTJ — முஸ்லிம் @ 4:01 பிப
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இன்ஷாஅல்லாஹ் ,

ஏகத்துவ எழுச்சி மாநாடு

அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு


நாள்: 26/08/2007 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி

இடம் : மஞ்சை நகர் மைதானம், கடலூர்.

தலைமை: மவ்லவி. ராஜ்முஹம்மது மன்பஈ

முன்னிலை: மவ்லவி. தவ்லத்முஹம்மது

சிறப்புரை :

ஆலிமா. சல்சஃபீன்

(தலைப்பு : ஈமானை அசைக்காத இம்மை வாழ்வு)

மவ்லவி. முஃப்தி உமர் ¬ரீஃப்

(தலைப்பு: நரகில் தள்ளும் தனி மனித துதி)

மவ்லவி. அப்துல் காதிர் மதனி

(தலைப்பு : வணக்கம் என்ற போர்வையில் வழிகேடுகள்)

கோவை அய்யூப்

(தலைப்பு : மரணத்திற்கு பின்னும் மரணிக்காத நற்செயல்கள்)

* தூய இஸ்லாத்தின் ஒப்பற்ற கொள்கைகளை வாழ்க்கையில் பரிபூரணமாக ஏற்று செயல்படவும்!

* எந்த தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும் அடிபணியாமல் இருக்கவும்!

* இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் போலி வணக்க வழிபாடுகளை இனங்கண்டு புறந்தள்ளவும்!

* நமது இறப்பிற்கு பிறகும் வல்ல அல்லாஹ்விடம் நற்பாக்கியம் பெற்றவர்களாக ஆகவும்!

குடும்பத்துடன் அனைவரும் வாரீர்! வாரீர்!!

என அன்புடன் அழைக்கிறது.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ டி ஜே)

கடலூர் மாவட்டம்.

குறிப்பு : பெண்களுக்கு தனியாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 9443402576, 9894671055, 9894897890, 9894677674


ஓகஸ்ட் 22, 2007

கோர்ட்டில் கைவிலங்கிட்டு ஆஜர் : PJ & BAKAR ரை நாடு கடத்த உத்தரவு

Filed under: ஆப்பு, காப்பு, பாக்கர், பி.ஜே, மலேசியா — முஸ்லிம் @ 6:08 முப

பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை இன்றே நாடு கடத்த உத்தரவு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மலேசியா சென்ற பி.ஜெ. பாக்கர் கைது செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். குவாங் சிறையிலிருந்த பி.ஜெ. பாக்கர் கை விலங்குடன் இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்கள். மலேசிய நாட்டின் சட்டம் தெரியாமல் தாங்கள் நடந்ததற்காக நீதிபதி முன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்கள். தாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்ய வேண்டி நின்றார்கள்.

மலேசிய நாட்டுக்குள் இனிமேல் நுழையவே கூடாது எனும் நோ என்ட்றி முத்திரை இவர்கள் பாஸ்போர்ட்டில் குத்த வேண்டும். இன்றைய தினமே இவர்களை நாடு கடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார்.


தீர்ப்புக்குப் பின் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை புத்துராஜெயா இமிகிரேசன் சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இன்று ஆயுளு விமானம் மூலம் ஏற்றி விடப்படுகிறார்கள். அந்த விமானம் இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் வந்து சேருகிறது.

மலேசியாவில் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட பி.ஜெ, பாக்கர் ஜாமீனில் வந்ததும் கைது செய்தியை பொய் என்று கூறினார்கள் த.த.ஜ.வினர். 21 ஆம் தேதி ஜாமீன் ரத்து செய்யப்பட்டு குவாங் சிறையில் தள்ளியது. உடனே மலேசியாவில் பி.ஜெ, பாக்கர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மலேசிய சென்னை தூதராகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய த.த.ஜ. அழைப்பு விடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியது.

நாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்யுங்கள் என்று வேண்டி மன்னிப்பு கேட்டதால் சிறை தண்டனை இன்றி இன்று நாடு கடத்தப்பட்டு சென்னை வருகிறார் என்றதும் கைது செய்தியை மீண்டும் பொய் என்று கூறுகிறார்கள் . பொய்யர்களான த.த.ஜ.வினர்.

செய்திகள் தொகுப்பு : பஸ்லுல் இலாஹி

பி.கு : வந்தவுடன் ஹீரோயிசமாக புட்டிகளும் சி.டி க்களும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கூடிய விரைவில் தமிழகத்திலும் ஒரு முக்கிய வழக்கில் பி.ஜே கைது செய்யப்படலாம் என்று எதிர் பாாக்்கப்படுகின்றது.

ஓகஸ்ட் 21, 2007

பி.ஜே & பாக்கர் மலேசிய மத்திய சிறையில் (குவாங்) அடைப்பு (BREAKING NEWS)

Filed under: ஆப்பு, காப்பு, சிறை, பாக்கர், பி.ஜே, மலேசியா — முஸ்லிம் @ 6:42 பிப
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்று சொன்ன பி.ஜெ. அணிக்கு மலேசியாவில் பாடை கட்டியது யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மலேசியாவில் த.த.ஜ. கூட்டம் சிறப்பாக நடந்த மாதிரி அவர்களது வெப் சைட்டில் செய்தி போட்டு பி.ஜெ.யின் ரசிகர்களை குஷp படுத்தினார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியே அவர்களை பொய்யர்கள் என அடையாளம் காட்டியுள்ளது.

இவர்கள் உணர்வில் விளம்பரம் செய்த இடத்தில் நடத்தவில்லை. உணர்வில் விளம்பரம் செய்தபடி 9.30 முதல் 6.30வரை நடநத்தவில்லை. பத்துகேவ்ஸில் உள்ள எஸ்டி.சி. உணவு விடுதியில் (மொத்தமாக) பார்ட்டியாக வந்து சாப்பிடுவதாகக் கூறி சாப்பிட போன இடத்தில் பேசுவது போல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்தது. கைது செய்வோம் என்றதும் ஓடி விட்டார்கள்.

மறுநாள் 20ஆம் தேதி மீண்டும் திருட்டுத்தனமாக நிகழ்ச்சி நடத்தினார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்ததும் பி.ஜெ.யையும் பாக்கரையும் அம்போ என விட்டு விட்டு நொண்டியப்பாவான அபுபக்கர் என்ற தொண்டியப்பா கோவை ஜாபர் போன்றவர்கள் ஓடி விட்டார்கள். போலீஸ் பி.ஜெ.யையும் பாக்கரையும் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது. பிறகு நிபந்தனை ஜாமீனில் விடப்பட்ட அவர்கள் 21ஆம் தேதி இஸ்லாமிய சமய விவகார துறை முன் ஆஜரானார்கள்.

இந்த துறையின் தலைவருக்கே லஞ்சம் தருவதாகக் கூறி ஒரு நாள் மட்டும் பேச அணுமதி தாருங்கள் என பி.ஜெ. பேரம் பேசியுள்ளார். பி.ஜெ. மீது வழக்கு தொடர விரும்புகிறீர்களா? என பி.ஜெ.யின் எதிர் தரப்பை இஸ்லாமிய சமய விவகார துறை கேட்டுள்ளது.

பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோர் பி.ஜெ.யை எதிர்த்து வேலை செய்தவர்களை அணுகி வழக்கு போடா வண்ணம் சமாதானம் செய்தார்கள். எனவே இஸ்லாமிய சமய விவகார துறை பி.ஜெ. பாக்கர் வகையறாக்களை போலீஸிடம் ஒப்படைத்து 24 மணி நேரத்திற்குள் நாடு கடத்த உத்தரவு இட்டது.

நுழலுந் தன் வாயாற் கெடும் என்பது போல் பத்துகேவ்ஸில் உள்ள எஸ்டி.சி. உணவு விடுதியில் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்கள் பேசியதை சி.டி.யாக ஆக்கி கொடுத்து எங்கள் பேச்சில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்டுள்ளார்கள். அதைப் பெற்ற மலேசிய போலீஸ் மலாய் விஸிட் விஸா அனுமதியை தவறாக பயன்படுத்தியதற்கு இதுவே ஆதாரம். இந்த ஆதாரம் இல்லாததால்தான் உங்கள் எதிர் தரப்பை வழக்கு போடச் சொன்னோம்.

உங்களுக்கு எதிராக நீங்களே ஆதாரம் தந்து விட்டீர்கள் என்று கூறி போலீஸ் ரவாங் பகுதியில் உள்ள குவாங் மத்திய சிறையில் பி.ஜெ, பாக்கர் ஆகியவர்களை அடைத்து விட்டது.

22ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்று சொன்ன பி.ஜெ. அணிக்கு மலேசியாவில் பி.ஜெ. அணியே பாடை கட்டி விட்டது.

இந்தியாவில்தான் இருக்கிற அமைப்புகளை இரண்டாக ஆக்கினார் என்றால் மலேசியாவிலும் கிம்மா தேசிய ஒருங்கிணைப்பு குழுவையும் உடைத்து விட்டார்.

செய்தி :மலேசிய சகோதரர்கள்

தொகுப்பு : பஸ்லுல் இலாஹி

ஓகஸ்ட் 19, 2007

FAKE ENCOUNTER KILLINGS கண்டன கருத்தரங்கம்

Filed under: பொலி மோதல்கள், Fake encounter, killings — முஸ்லிம் @ 9:34 பிப

புதுவை சுகுமாரன் அவர்கள் உரையாற்றுகையில்

கோவையில் நேற்று “போலி மோதல் கொலை எதிர்ப்பு கூட்டு இயக்கம்” கண்டன கருத்தரங்கம் கோவை சேரன் டவர் பின்புறம் உள்ள திவ்யோதயா அரங்கத்தில் நடைபெற்றது. சரியாக மாலை 4.00 மனிக்கு துவங்கிய இந்த கருத்தரங்கிற்கு தமிழக மக்கள் உரிமை கழக ஒருங்கினைப்பாளர் திரு பாவேந்தன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தை சேர்ந்த வழக்குரைஞர். கா. கேசவன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள். அத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த கீழக்கண்ட அறிஞர்கள் கண்டன உரையாற்றினார்கள்..

தோழர் கு.ராமகிருட்டினன் – பெதுச் செயலாளர்ஈ பெரியார் திராவிட கழகம்

தோழர் பேரா. அ. மார்க்கஸ் – PUHR மாநில ஒருங்கினைப்பாளர்

தோழர் திருமலைராஜன் – தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்குரைஞர் சங்க கூட்டமைப்பு தலைவர்

தோழர் முஜீபுர்ரஹ்மான் – செயலாளர் – DIFT தமிழ்நாடு

தோழர் நீலவேந்தன் – ஆதி தமிழர் பேரவை

தோழர் ஆ.நாகராசன் – புரட்சி புலிகள்

தோழர் சுகுமாறன் – மக்கள் உரிமை கூட்டமைப்பு – புதுவை

தோழர். உதயம் சுப மனோகரன் – ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர். வழக்குரைஞர் ரஜினிகாந்த் – உயர் நீதி மன்ற வழக்குரைஞர் சங்க கூட்டமைப்பு

தோழர். வழக்குரைஞர் ப.பா. மோகன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர். மா. செந்தில் – புதியன பண்பாட்டு இயக்கம்

தோழர் ந. மோகன் குமார் – PUHR கோவை

தோழர் அ.ஜீவானந்தம் – தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

தோழர். வழக்குரைஞர் பெ.தமயந்தி – பொதுச்செயலாளர் குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

தோழர் ருத்ரன் – எழுத்தாளர்

தோழர் வள்ளுவராசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் மு.சக்திவேல் – நிறுவனர் மனித நேய பாசறை

தோழர் வி.ராமச்சந்திரன் – ஒருங்கினைப்பாளர் மக்கள் விடுதலை இயக்கம்

தோழர் முத்து லட்சுமி வீரப்பன் – மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம்

தோழர் கமலா வெள்ளை ரவி – வெள்ளை ரவி துனைவியர்

தோழர் பூபதி மணியன் – மணல்மேடு சங்கரின் தாயார்

தோழர் DIFT முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் ஆக்ரோஷமாக

* ஆகியோர் போலி மோதல் காவல்துறை படுகொலைகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள் , அவாக்ளது உரையில் குறப்பாக கீழக்காணும் விஷயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன்.

* டெல்லி ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஷாப்பிங் சென்ற இரு முஸ்லிம்களை சுட்டு கொன்று விட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளா என காவல் துறை ஆராய்ச்சி செய்கின்றதாம்.

* சுற்றுலா சென்ற நான்கு கல்லூரி மாணவாக்ளை செராத்தில் வைத்து சுட்டு கொன்று விட்டு முதல்வரை கொல்ல வந்ததாக கட்டுக்கதை கட்டியது.

* மும்பை கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா குண்டர்களுடன் இணைந்து காவல்துறை நடத்திய கூட்டு படுகொலைகள்.

* கோத்ரா ரயில் எரிப்பை காரணம் காட்டி சிறுபான்மை இன முஸ்லிம் மக்கள் மீது குஜராத்தை ஆளும் இனவாத மோடி அரசும் R.S.S குண்டர்களும் நடத்திய இனப்படுகொலைகள்.

* கோவையில் பூலிஸ்காரர் படுகொலையை காட்டி R.S.S இந்துமுன்னணி குண்டர்களும் காவல்துறையும் நடத்திய வெறியாட்டம், தீவைப்பு, கொள்ளை மற்றும் துப்பாக்கிசூடு கோரப்படுகொலைகள்.

* வீரப்பனை தேடுவதாக கூறி காவல்துறை அப்பாவி பொதுமக்கள் 66 பேரை கொலை செய்து 14 பென்களை கற்பழித்த கொடூரம்.

* காஷ்மீர் தற்காப்பு படை என்ற பெயரில் காஷமீரில் நடத்தி வரும் பயங்கரவாதம்.

* நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்திலும், ஆந்திரத்திலும் காவல்துறை நடத்தி வரும் கோரப்படுகொலைகள்.

* மற்றும் இந்தியாவெங்கும் சிறுபான்மை இன மக்கள் மீதும் தாழத்தபட்டவாக்ள் மீதும் நடத்தப்படும் ஈவிரக்கமற்ற துப்பாக்கி சூடுகள்.

* இந்தியாவெங்கும் ரவுடிகளை ஒழிப்பதாக கூறி என்கவுன்டர் என்ற பெயரில் காவல்துறை நடத்தி வரும் போலி மோதல் படுகொலைகள்.

இவ்வாறாக இந்திய ஜனநாயக நாட்டில் நடந்து வரும் ஜனநாயக அத்துமீறல்களை சுட்டிக்காட்டி கண்டித்து பேசினார்கள். அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் நடந்து வரும் கலைஞரின் ஆடசியில் அதிகரித்து வரும் போலி மோதல் காவல்துறை படுகொலைகளையும் அகில இந்திய அளவில் பல அமைப்புகள் அரசுக்கு சுட்டிக்காட்டிய பின்பும் சமீபத்தில் வெள்ளை ரவி என்பவரை காவல்துறை போலி மோதல் நாடகத்தில் சுட்டு கொன்றிருப்பதையும் சுட’டிக்காட்டினர்.

தமிழக அரசும் காவல்துறையும் பூலி மோதல்களை உடணடியாக நிறுத்த வேண்டும் என்றும்,

போலி மோதல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும்,

சித்திரவதைக் கூடங்களான அதிரடிப்படை முகாம்களை உடணடியாக கலைக்க கோரியும்,

தமிழகமெங்கும் நக்சல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்களை அச்சுருத்துவதை உடனே நிறுத்தக் கோரியும் அமைப்பின் சார்பாக கோரிக்க வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுருத்தி பேச்சாளர்கள் பேசினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் தோழர் வழக்குரைஞர் இளங்கோவன் அவர்கள் நன்றியுரை நல்கள் கருத்தரங்கம் முடிவுற்றது.இக்கருத்தரங்கில் அதிக அளவில் மனித உரிமை ஆர்வளர்களும், பாதிக்கப்பட்டவாக்ளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்திகள் & புகைப்படம் : கோவை தங்கப்பா

வக்ஃப் வாரியத் தலைவரின் அறிக்கை

Filed under: ஜெயலலிதா, வக்ஃப் வாரியம், ஹைதர் அலி — முஸ்லிம் @ 4:36 பிப
பொறுப்புணர்வை மறந்து பொய்யான தகவல்களுடன் வெளியிடப்பட்ட அறிக்கை -ஜெயலலிதாவின் அறிக்கை குறித்து தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் விளக்கம்

பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஹைதர் அலி

ஆகஸ்ட் 17, 2007 அன்று ஹோட்டல் பிரசிடென்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மதவாத பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மக்கள் மன்றத்தில் அம்பலமாகிப் போன ஜெயலலிதா, இப்போது முஸ்லிம்களுக்கு .ஆதரவாக இருப்பதுபோல அறிக்கை வெளியிட்டு, அதிலும் வழக்கபோலவே பொய்களைப் புனைந்துள்ளார்.

முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிராக வக்ஃபு வாரியத்தை திமுக அரசு தூண்டிவிடுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் பற்றியும், முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றியும் ஜெயலலிதா பேசியிருப்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையாகத் தெரிகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் திமுக இழந்து வருவதாகவும், ஜமாஅத் நிர்வாகங்களில் வக்ஃப் வாரியத்தைத் தலையிடச் செய்து முஸ்லிம்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக திமுக அரசு இழந்து விட்டதாகவும், நரேந்திர மோடியின் அரசியல் தோழி குற்றம்சாட்டியுள்ளார்.

அறிவார்ந்த விமர்சனத்திற்கும், ஜெயலலிதாவிற்கும் அறவே சம்பந்தம் இருக்காது என்பதை அவரது இந்த அறிக்கை அறுதியிட்டு உறுதி செய்துள்ளது.

பாபர் பள்ளிவாசலை இடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை அனுப்பிய ஜெயலலிதா, வக்ஃப் வாரிய நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடியில் உள்ள கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள புனித மகான்களின் நினைவிடங்களை உடைத்துத் தரைமட்டமாக்கியுள்ளதாக உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா குறிப்பிடுவது போல எந்த ஒரு சம்பவமும் நடக்கவே இல்லை. வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்கள் தமிழகமெங்கும் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் நிலையில், கன்னிகாபுரத்தில் உள்ள வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான பி. ஹைதர் அடக்கஸ்தலத்தை வியாசர்பாடி சுற்றுவட்டாரத்தில் 12 ஜமாத்துகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த பொது அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிலர் அத்துமீறி நுழைந்து கட்டடம் எழுப்ப முனைந்துள்ளனர். அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்கள் மீது வக்ஃபு வாரிய ஆய்வாளர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதான் உண்மை.

ஜெயலலிதா, கனவுக் காட்சிகளிலும் கற்பனைக் காட்சிகளிலும் நடித்தவர். அந்த முன் அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுக்கிறது போலும்.

இறையில்லமான பாபர் பள்ளிவாசலை இடிக்க ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா என்பதும், 1992ம் ஆண்டில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பாபர் பள்ளிவாசலை இடிக்கும் கரசேவையை ஆதரித்த ஒரே முதலமைச்சர் இவர்தான் என்பதும் நாடறிந்த உண்மை.

கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில்

மதத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்துவது பற்றி ஜெயலலிதா பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது.

இஸ்லாமிய இறைக் கோட்பாட்டுத் தத்துவம் பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். திரைக்கோட்பாடு, தில்லானா நாடகங்கள் பற்றித் தெரிந்த அவருக்கு இஸ்லாமின் இறைக் கோட்பாடு பற்றி என்ன தெரியும்? இஸ்லாம் இறைக்கோட்பாட்டை அவர் படித்திருந்தால் முதலில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருக்கவே மாட்டார்.

வாக்குறுதிகளைப் பற்றி ஜெயலலிதா வாய்க்கூசாமல் பேசுகிறார். ”1999ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்…

”நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைத் தவறு என்று ஒத்துக்கொள்ளும் துணிவு எனக்குண்டு. பாஜகவுடன் நான் தேர்தல் உறவு வைத்ததுதான் வாழ்வில் நான் செய்த பெரும் தவறு. எதிர்காலத்தில் ஒருபோதும் பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்ளவே மாட்டேன்” லி என்று மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, அதன்பிறகு பாஜகவுடன் எப்படியெல்லாம் உறவாடினார் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிட வில்லை.

குஜராத்தில் 2002ல் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் நரேந்திர மோடியின் ஆசியுடனேயே நடைபெற்றது என்று சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த குஜராத் உள்துறைச் செயலாளர் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து, லட்சக்கணக்கான முஸ்லிம்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கிய மாபாதக நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தனி விமானத்தில் பறந்து சென்று, பூச்செண்டு கொடுத்து வாழ்த்தியவர், முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்துப் பேசுவது வேதனையான வேடிக்கைதான்.

2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்காலம் முடியும்வரை முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார்.

ஆந்திர முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டி, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதைக் கடுமையாக கண்டனம் செய்து, எனது தலைமையில் முஸ்லிம்கள் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஆளானவர் ஜெயலலிதா.

வக்ஃப் வாரியத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இதன்காரணமாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதைத் திறக்காமல் உள்ளதாகவும், இக்கட்டிடம் தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதுவும் முழுக்க முழுக்க பொய்யானதாகும். 2001ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டையிலிருந்து வக்ஃபு வாரிய புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2001ல் புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டாலும், அரசின் நிர்வாக அனுமதி கிடைக்கவில்லை. வக்ஃபு வாரியத்தின் நீண்ட போராட்டத்திற்குப் பின் அரசின் நிர்வாக அனுமதி 2004ம் ஆண்டில் மட்டுமே கிடைத்தது. இது ஜெயலலிதா ஆட்சியின் அவலத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்டிடப் பணிகள் 30.1.2005ல் தான் தொடங்கப்பட்டது. மேலும் கட்டிடப் பணிக்கு அரசு மானியமாக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த ஜெயலலிதா, 2001லி2002ஆம் ஆண்டில் ரூ.24 லட்சம் மட்டும் ஒதுக்கினார். பிறகு மீதி தொகை 2005லி2006ஆம் ஆண்டில்தான் ஒதுக்கினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டாலும், ஜெயலலிதா ஆட்சியில் கட்டுமானப் பணியை கான்ட்ராக்ட் எடுத்துக்கொண்டவர்கள் செய்த குளறுபடிகள் கட்டட திறப்பை தாமதப்படுத்துகிறது.

புதிய கட்டிடம் திறக்கப்படாததற்கு ஜெயலலிதாவே காரணம் என்பதை குற்றம்சாட்டுகிறேன். காலதாமதத்திற்கு திமுக அரசு பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இக்கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக ஆகிவிடவில்லை என்பதையும், வக்ஃபு வாரியம் இவ்வலுவலகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு முன்னாள் முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேலாவது அவர் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

பத்திரிகை அறிக்கையினை டவுன்லோட் செய்வதற்கு

பக்கம் – 01

பக்கம் – 02

பக்கம் – 03

பி.ஜே யின் வெற்றிகர மலேசிய சுற்றுலா!!

Filed under: ததஜ, பி.ஜே, மலேசியா, TNTJ — முஸ்லிம் @ 9:07 முப

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முஸ்லிம் சமுதாயத்தின் சாபக் கேடானவரானவரும் தமிழகத்தில் நடந்த பல கொலைகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணமானவருமான பி.ஜெ. அவரால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட பாக்கர் என்பவருடன் மலேசியா சென்றுள்ளார்.

ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியம் என்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அவரது கூட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு முத்தியாரா காம்ளக்ஸில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது. 17.8.07 வெள்ளி மாலை ஜெட் விமானம் மூலம் பி.ஜெ.யும் அவரால் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் விபச்சாரம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் புறப்படுவதற்கு முன்பே இந்த தகவல்கள் கிடைத்து விட்டது. சமுதாய பணத்தை சீரழிக்காதீர்கள். உங்கள் பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்கள்.

இதனை நிராகரித்த சமுதாய பணத்தில் மஞ்சள் குளியல் செய்து கொண்டிருக்கும் பி.ஜெ.யும் அவரால் நந்தினியுடன் இணைத்து விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் மலேசியா சென்றார்கள். போலீஸ் தடையை மீறி வேறு பெயரில் ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடத்த கூடுதலாக பணம் தருவதாக பேரம் பேசினார்கள்.

கடைசியில் பத்து மலை என்ற இடத்தில் ஒரு மண்டபத்தில் கூட்டத்தை நடத்தினார். திருட்டுத்தனமாக நடத்திய இந்தக் கூட்டத்தில் முதலில் மற்றவர்களை பேச விட்டு வேவு பார்த்தார். பிறகு பி.ஜெ.யால் களியக்காவிளை விவாதத்தின் போது விபச்சாரம் செய்யச் சென்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை பேச வைத்தார். 2 மணி நேரம் பேசுவார் என சொல்லப்பட்ட பாக்கர் 25 நிமிடம் மட்டுமே பேசினார்.

அதன் பிறகு இறையில்லக் கொடை வள்ளல் நூருல் மில்லத் என்றழைக்கப்பட்ட எஸ்.பி. நூர் முஹம்மது போன்றவர்களை கொலை செய்ய பத்வா கொடுத்த பி.ஜெ. இஸ்லாம் ஒரு சம்பூர்ண மார்க்கம் என்ற தலைப்பில் பேசாமல் நாங்கள் என்ன சொல்கிறோம் என்ற தலைப்பில் பேசத் துவங்கினார். 20 நிமிடமே பேசிய அவர் கேள்வி கேளுங்கள் என திசை திருப்பல் வேலை செய்தார்.

அணுமதி இன்றி திருட்டுத்தனமாக கூட்டம் நடத்துவதை அறிந்த காவல் துறை அதிகாரிகள் பத்து மலை பகுதிக்கு விரைந்தனர். உடனே நிறுத்துங்கள். என மேடை ஏறிய காவல் துறை அதிகாரிகள் கூறினர். நாங்கள் ஒரு லட்சம் வெள்ளி வரை செலவு செய்து இருக்கிறோம். எனவே ஒரு மணி நேரமாவது பேச அணுமதி தாருங்கள் என கெஞ்சினார்கள். நீங்கள் கூட்டம் நடத்த அனுமதி இல்லை எனவே கலைந்து செல்லுங்கள் இல்லா விடில் உங்களை கைது செய்வோம் என காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

இந்திய போலீஸா காலையில் கைது செய்து மாலையில் விட. அரண்டு மிரண்டு விட்ட பி.ஜெ.யும் பாக்கரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பத்து மலை மண்டபத்தை விட்டு ஓடி விட்டார்கள்.

செய்திகள் : மலேசிய சகோதரர்கள்
தொகுப்பு : ஃபஸ்லுல் இலாஹி

ஓகஸ்ட் 17, 2007

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் – துபை

Filed under: ஐக்கிய முதுகுளத்தூர — முஸ்லிம் @ 10:24 முப
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு


ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பினை ஏற்படுத்தி தங்களது ஊரில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வமைப்பின் நிர்வாகக்குழுக்கூட்டம் துபாயில் ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துவக்கமாக பொதுச்செயலாளர் அல்ஹாஜ் சம்சுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு : கெளரவ தலைமை ஆலோசகராக ஹெச்.ஹஸன் அஹமது , தலைவராக மெளலவி என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் , துணைத்தலைவராக அல்ஹாஜ் சம்சுதீன் , பொதுச்செயலாளராக கே. முஹம்மது ஹிதாயத்துல்லா, பொருளாளராக ஏ.அஹமது இம்தாதுல்லா சேட், ஆடிட்டராக ஹெச். அமீர் சுல்தான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக ஹெச்.இப்னு சிக்கந்தர் ( தேரா ) , ஏ.முஹம்மது தாஹா ( அல் கூஸ் ) , ஏ. ஜஹாங்கீர் ( அஜ்மான் ), முஹம்மது ரிஸ்வி ( ஷார்ஜா ), ஏ.அஹமது இஸ்மத்துல்லாஹ் சேட் ( சோனாப்பூர் ) , ஜாஹிர் உசேன் ( ராசல் கைமா ) மற்றும் எஸ்.அமீனுதீன் , கஸ்ஸாலி ( அபுதாபி ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கெளரவிப்பது எனவும் , இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் தாயகப் பிரதிநிதிகள் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் , மெளலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் , மெளலவி ஏ உமர் ஜஹ்பர் ஆலிம், ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

www.mudukulathur.com என்ற இணையத்தளத்தை ஏற்படுத்துவது, மின்னஞ்சலில் உலகெங்கும் உள்ள முதுகுளத்தூர் மக்களை muduvai@googlegroups.com ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொடர்புக்கு 050 5196433 எனும் அலைபேசியிலோ அல்லது muduvaihidayath@gmail.com எனும் மின்னஞசல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : முதுவை ஹிதாயத்

Older Posts »

Create a free website or blog at WordPress.com.