தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 13, 2007

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு

Filed under: இட ஒதுக்கீடு — முஸ்லிம் @ 7:38 பிப
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு

Source: http://www.tn.gov.in/pressrelease/pr130907/pr130907_579.pdf

செய்தி வெளியீடு எண்-
579 நாள்-13.9.2007
செய்தி வெளியீடு

பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு தமிழக அரசு அவசரச் சட்டம் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும்.

2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே, 24.5.2006 அன்று ஆளுநர் அவர்களின் முதல் உரையில், ” சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும்
கிறித்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு
ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் ” என்றும்; 2006-2007ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ” சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன்; தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் ” என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக – நீதியரசர் திரு.ஜனார்த்தனம் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் – இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. திரு ஜெ.அ. அம்பாசங்கர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; கிறித்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம்
ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான

30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறித்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதலமைச்சர் கலைஞர் அறிவித்துள்ளார்.
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Source: http://www.tn.%20gov.in/pressrele%20ase/pr130907/%20pr130907_%20579.pdf

தமிழக முதல்வருக்கு இதயம் கனிந்த நன்றி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெயிடும் அறிக்கை
தமிழகச் சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை அக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எங்கள் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புனித ரமலான் நோன்பு தொடங்கும் தருவாயில் இந்தத் தித்திப்பான அறிவிப்பை வெüயிட்ட முதல்வர் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் முன்னேற நல்லாட்சி தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட
1995 முதல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஜுலை 4 அன்று சென்னை கடற்கரையில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது.
2004 மார்ச் 4 அன்று தஞ்சாவூரில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி சாதனைப் படைத்த மாபெரும் பேரணியை நடத்தியது.
2006ல் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. கலைஞர் தலைமையிலான அரசு தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்து திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துத் தமுமுக தொண்டர்கள் கடுமையான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கலைஞர் தலைமையிலான அரசு நாட்டிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு அத்த வாக்குறுதியையும் நிறைவேற்றிக் கலைஞர் இந்தியா அரசியல் வரலாற்றில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்தியாவிற்கே முதல்வர் என்பதை பறைசாற்றியுள்ளார்.
சுதந்திரப் பெற்ற இந்தியாவின் கனிகள் முஸ்லிம் சமுதாயத்தை சென்றடையவில்லை என்று சச்சார் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வரின் தனி இடஒதுக்கீடு அறிவிப்புத் தமிழக முஸ்லிம்கள் அந்தக்கனிகளைச் சுவைக்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. எங்கள் நீண்ட காலக் கனவை நனவாக்கிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உள்üட்ட திமுக முன்னோடிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகன் தலைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்குக் கொண்ட அனைத்து சமுதாய நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்)
தலைவர்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: