தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 28, 2007

குவைத்தில் பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம்

Filed under: இந்திய யூனியன் முஸ், பாபர் மசூதி, IUML — முஸ்லிம் @ 2:15 பிப
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
ஏற்பாடு செய்யும்
பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 30-11-2007 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல், சிராஜுல் மில்லத் அரங்கத்தில் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்யும் பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம் ‘சாய்க்கப்பட்ட பாபர் மசூதியம், சமுதாய அரசியலும்…’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற இருக்கின்றது.

தலைமை : ஆலி ஜனாப் அல்ஹாஜ் K. அப்துல் காதர் (டில்லி பாட்சா)
முன்னாள் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், துறையூர் வட்டம், திருச்சி முன்னாள் தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), குவைத்.

கிராஅத் : மவ்லவீ காரீ A.R. முஹம்மது அலீ ரஷாதி
தலைமை நிலைய சொற்பொழிவாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

முன்னிலை : ஆலி ஜனாப் லால்குடி M. அப்துல் மஜீத்
முன்னாள் தலைவர், குவைத் முஸ்லிம் நல அமைப்பு

வரவேற்புரை : மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி
துணைத்தலைவர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

தொடக்கவுரை: ஆலி ஜனாப் Y. முபாரக் ரஸ்வி
துணையாசிரியர், குவைத் தமிழ் டாட் காம் மாத இதழ்

சிறப்புரை : சமுதாய சிந்தனைச் செல்வங்கள்
பேராசிரியர் மவ்லவீ A. அப்துஸ் ஸலாம் தாவூதி
மார்க்க அறிஞர்(உலமாக்)கள் குழு, K-Tic

ஆலி ஜனாப் கா. ரஹ்மத்துல்லாஹ்
தலைவர், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை (TISA), குவைத்

சமுதாயக் கவிஞர் – எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி M.A., B.Ed.,

மவ்லவீ அஃப்ஜலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic )

நிறைவுரை : டாக்டர் K.S. அன்வர் பாட்சா
அமைப்பாளர், குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
துணைத்தலைவர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

நன்றியுரை : ஆலி ஜனாப் ஷாஹின் ஷா கான்
தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புளியந்தோப்பு வட்டம், சென்னை

வருகை தரும் அனைவருக்கும் குவைத், ஃபஹாஹீல் பகுதியிலுள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல் நிர்வாகத்தினர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு உணவுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுபெறும்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள், முஸ்லீம் லீக்கர்கள், சமுதாய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) அமைப்பாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு iumlkuwait@yahoo.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 7862316, 7302747, 7549025, 6948224, 7872482 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
மின்னஞ்சல் :
iumlkuwait@yahoo.com


நவம்பர் 27, 2007

தமிழக முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களின் உயிருக்கு குறி!!

Filed under: கிரைம், பி.ஜே, பித்தளாட்டம் — முஸ்லிம் @ 10:02 முப

தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபீதீன் பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பதவி ஏற்கும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பாதிப்பது வாடிக்கையாகி விட்டது. ஜெயலலிதா ஆட்சியில் வன்முறைகள் குறைவு. உதாரணமாக காவல் நிலையம் செல்லவே அ.தி.மு.க., ஆட்சியில் அக்கட்சித் தொண்டர்கள் முதல், தலைவர்கள் வரை தலைமைக்குப் பயந்து போவது இல்லை. ஆனால், தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., கரை வேட்டி கட்டிய பிரமுகர்கள் காவல் நிலையம் சென்று போலீசை மிரட்டுகின்றனர். போலீஸ் சுதந்திரமாக செயல்பட,தி.மு.க.,வினர் காவல் நிலையம்
நுழைவதை, சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பதைக் கட்டுப்படுத்த முதல்வர் முன் வரவேண்டும். – நன்றி : தினமலர் 27-11-2007

மு. கருணாநிதி தலைமையில் உள்ள தமிழக அரசு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து வருகிறது – ததஜ-வின் மாநில தலைவர் பிஜெ அவர்களின் புகழ்ஆரம் -ஆகஸ்ட் 16, 2006.

கடந்த சில தினங்களுக்குமுன் ததஜ-வின் அதிகாரபூர்வ இணையதளத்தினை விஜயம் செய்தபோது அதில் துபையிலிருந்த ஒரு முஸ்லிம் சகோதரர் ததஜ மாநில தலைவரிடம் தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு பதில் என்று சுமார் 4.28 நிமிட ஆடியோ கிளிப் போட்டுள்ளார்கள். அதை டவுன் லோட் செய்து கேட்ட நமக்கு அண்ணன் பிஜெ-யின் சரணகதி சாஸனம் பளிச்சிட்டதை காண முடிந்தது..

இன்று பிஜெ….ததஜ இணையதள கேள்வி பதில் அடியோ கிளிப்-லிருந்து….

கேள்வி…. அதாவது நாம் ஆதரித்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை எதிர் கட்சி தான் ஆட்சி அமைத்துள்ளது இந்நிலையில் நமக்கு எதாவது எதிர்பு உண்டா?

பிஜெ பதில் : நமக்கு எதாவது இடைஞ்சல் பண்ணுகிறார்களா? என்று கேட்கின்றீர்களா? அதாவது இந்த ஆட்சி மாற்றம் எற்பட்ட பிறகு தமிழகத்திலுள்ள நடவடிக்கைகளை நாம்பார்த்தோம்ணு சொன்ன நம்மளைவந்து இந்த அரசாங்கம் நம்மை நசுக்கவேண்டுமென்றோ பாரபட்சமாக நடத்துகிறார்களோயென்று நினைப்பதற்க்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை இன்னும் சொல்லப்போன நமக்கு கிடைத்திருக்கின்ற தகவர் படி முத்துப்பேட்டை அன்சாரி அவர்கள் நோட்டீஸ் போட்டதற்காக ஒருபொய் வழக்கு போட்டார்கள் அதுகூட பொய்வழக்குயில்ல வழக்குபோடகூடாதுதென்று வழக்குபோட்டார்கள்.

நோட்டீஸ் கொடுத்துநெசந்தா நோட்டீஸ் கொடுத்து கலட்டா பன்னார் என்கிறமாதிரி வழக்குபோட்டார்கள் தவிர ஒரு கொலைகேஸ் ஒன்னும்போடவில்லை அதுகூட நாம் ஆர்பாட்டமெல்லாம் பண்ணிபிறகு தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விசயத்தில் வந்து நேர்மையாக மட்டும் நடந்துகொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கெல்லாம் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது அது ஏன்னுகேட்ட நாம ஒரு வலிமையா இருக்கோம் அடுத்து நாமவந்து தேர்தல்உறவு தேர்தலோடு போச்சு என்கிறவிஷயத்தில் தெளிவா இருக்கிறோ மறுபடியும் அவங்கள வந்து நாமவந்து பகைச்சுக்கவேண்டாம் என்றுசொல்லி கவர்மென்ட் வந்து ரொம்ப சாப்ட்கார்னராக இருப்பதைதான் நாமவந்து பல சம்பவங்கள பார்க்கிறோம்…..(இதனை தொடர்ந்து மேலப்பாளையம் பள்ளி விசயத்தில் காவல்துறை மற்றும் ஆட்சிதுறை இரண்டும் ததஜ-விற்கு சாதகமாக நடந்ததாகவும் மற்றும் தமுமுக-க்கு வேல்யூ இல்லை அவர்கள் இயக்கவாதிகள் கைது செய்து ரவுடி லிட்டில் சேர்த்தாகவும் அதுபோல் கடையநல்லூர் பள்ளிவிஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை தமுமுகவால் என்று செய்திகளை சொல்லுகிறார் (CLICK HERE TO LISTEN)

4வது நிமிடம் 8 செகன்டிலிருந்து….
நமக்கு எந்த சங்கடமோ இடைஞ்சலோ கிடையாது இன்னுசொல்லபோன நமக்கு வந்து வீட்டில எனக்து போலீஸ் பாதுகாப்பு போட்டுயிருக்காங்க ஒருவாரகாலமா வெளங்குதா? வீட்டுக்குள்ள போகமுடியல அந்தஅளவுக்கு போலிஸ் பாதுகாப்பு இது எதுக்குசொல்றன்கேட்ட அந்தஅளவுக்கு நம்மவிசயத்தில கூடுதல்கவன செலுத்துறாங்க எந்தவொறு அடக்குமுறையு கிடையாது நேர்மையா கரெக்டா நடக்கறாங்க…. (CLICK HERE TO LISTEN) இப்படி முடிக்கின்றார் அண்ணன் பிஜெ அவர்கள்

அன்று பிஜெ….

http://www.onlinepj.net/ என்ற இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ‘தேர்தல் முடிவுகளும் ததஜவின் நிலைபாடும்’ என்ற தலைப்பில் நான்கு வீடியோ கிளிப்ஸ் போட்டுயிருந்தார்கள் அதில் 2வது கிளிப்ஸ் 10:40வது செகன்டிலிருந்து…

என்ன தயக்கோம் ஏம்மா வந்துருச்சே.. கருணாநிதி ஏற்கனவே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே உள்ளபுடிச்சுபோட்டாரே பொய்வழக்கெல்லாம் போட்டாரே இரும்புகரம் கொண்டு நசுக்குவேன்னு சொன்னரே ஒவ்வொரு டிசம்பர் ஆறுலேயும் அம்பது, நாப்பதுநாயிரம் பேர புடிச்சு புடிச்சு உள்ள போட்டரே அந்த ஆளுவந்துடரே… வரடடுமே அட..இவங்தேன் பாதுகாவலர்களா? அவரு புடிச்சுபோட்டு என்னத்த பணனிபுட்டாருன்னு கேட்டேன் ……..(திடிரென அவேசமாக) கருணாநிதி பழைய கருணாநிதியா வந்து எங்களுவள போட்டு மிதிச்சு உள்ளபோட்டு தள்ளி பொய்வழக்கு போட்டு உனக்கு என்னென்ன செய்ய முடியுமோ செய்…..

அதனால இந்த உருட்டல் மெரட்டலுக்கெல்லாம் பயந்து நாங்கள் இறங்க மாட்டோம்…..எவனுக்கும் பயபடமாட்டோம் எங்களோட பிரச்சாரத்துக்கு நீ நினைக்கலாம் பிரச்சாரத்துக்கு இப்படி முட்டுகட்டைபோட்டு தடுத்துடலாம் பள்ளிவாசலுக்கு வரவிடமா முடக்கிலாம்னு…..(திடிரென அவேசமாக) முடியுமா உன்னலா அடக்கிருவியா பாரு பாப்போம் என்று நாங்க சேலஞ்சு நெஞ்சைநிமிர்த்தி சொல்லகூடியவர்கள் நாங்கள்……இதுனால யாருக்கும உருத்தலோ..(வாயை ஒரு மாதிரி ஆக்கி கொண்டு …ச்சுசோ…ஹே….ஹே.. என்று ஒரு மாதிரி குரல் எழுப்புகின்றார்) அவனெல்லாம் ஜீஜீபி…(திடிரென அவேசமாக) டேய்… அல்லாஹ்வே நம்பி நிப்போ வா …….வாடா டேய்..வா..எவன வேண்டாலும் கூட்டிட்டு வா..(திடிரென அவேசமாக) இந்த மிரட்டலெல்லா அதாவது ரெய்டா இருந்தாலு சரி ஜெயிலா இருந்தாலும் சரி காப்பா இருந்தாலும் சரி இதுக்கு பயப்படுற ஆளு… நீ பயப்படுவே…காப்பையும் ஆப்பையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்..

தயவுசெய்து நம்புங்கள் மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் அண்ணன் பிஜெ-யின் அவேசமான வசனங்கள்தான் அவர் வாயிலிருந்து வந்தவைதான் (CLICK HERE TO SEE THE VIDEO)

அடுத்து குடந்தை குலுங்கிய?? பேரணியில் பேசும்போது…

லூசுப்பய கருனாநிதி…

உங்களுக்கு எட ஒதுக்கீடு தருகிறோம் ..கருனாநிதி சொன்னானா??? தேர்தல் அறிக்கையில சொன்னாரா? …காங்கிரஸ் கட்சி சொன்னதா?? பாட்டாளி மக்கள் கட்சி சொன்னதா??? (ரசிகர் மன்றத்தினர் ..ஆமாம்…ஆமாம்…) அதையிலாம் நீ நம்புனியா ??? வாக்களிச்சில்ல …நம்புனம்ல …இப்ப என்ன சொல்ரான் கருனாநிதி…லூஸ் …லூசு மாதிரி பேசுகிறான்.. (CLICK HERE TO SEE THE VIDEO)

த.த.ஜ தொண்டர்களுக்கும் மக்களின் சிந்தனைக்கும் :
இப்ப சொல்லுங்கள் மக்களே …யார் லூசு? யார் மனநலம் குழம்பியவன் போல் பேசுவது?
.
தனக்கு ஆதரவாக இருந்தால் தான் செய்யும் அநியாயங்களை (பள்ளியை திருடுவது, பள்ளிக்குள் தொழவிடாமல் குறுக்கே புகுந்து தடுப்பது, மாற்று மத பென்களை இஸ்லாத்துக்கு கொண்டு வருகின்றேன் என்று கூறிற விபச்சாரம் செய்வது, அக்கிரமமாக கொலை செய்வது) கண்டு கொள்ளாமல் இருந்தால் நல்லவன் தன்னை எதிர்த்து தனது தவறுகளை சுட்டிக்காட்டினாலோ கெட்டவன்!! இது தான் பி.ஜே என்ற அயோக்கியனின் உண்மை முகம்.
தமிழகத்தில் கருனாநிதி ஆட்சி வரும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டதற்கு யார் காரணம்? இதே பி.ஜே தான்!!
.
ராஜகோபாலன் கொலையில் இருந்து, கோவை குண்டு வெடிப்பு, RSS அலுவலக குண்டு வெடிப்பு என் கலைஞர் ஆடசிக் காலத்தில் சட்ட ஒழுங்கை கெடுத்தது யார்? ஆலிம் ஜார்ஜ் முதல் K.K நகர் இமாம் வழைர கொன்றது யார்? தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து ஜாதி கலவரத்தை தூன்டியது யார்?
.
இவன் பேச்சை கேட்டு குற்றம் செய்த இளைஞர்கள் யாவரும் இன்று இவனை விட்டு விலகி விட்தாலும் தனது கைகளுக்கு காப்பு நெருங்குவதாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் அம்மா ஜெயலலிதாவின் ஆடசிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க பட்டதாகவும் புலம்புகிறார் இந்த அரசியல் அநாதை!!
.

தானும் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவதாகவும் அதற்கு முதல்வரும் அவரின் மகள் கனிமொழியும் வரவேண்டும் என பலர் மூலமாக தூது அனுப்பியும் இவரைப்பற்றி கணிமொழி அவர்களுக்கு தனி விளக்கம் அளிக்கப்பட்டிருந்தமையாலும் இவரின் கிரிமினல் வேலைகளைப்பற்றியும் இவர் ஒரு அரசியல் அநாதை என்பதைப் பற்றியும் தமிழ் முஸ்லிம் மக்கள் தற்சமயம் இவர் பக்கம் இல்லை என்பதை தெளிவாக அறிந்திருந்ததாலும் இவரின் கெஞ்சல்க்ள புறக்கனிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

.
வலியப் போய் காலில் விழுந்தும் செருப்படி கொடுத்து விரட்டி விட்டார்களே என்ற ஆதாங்கத்தில் மீண்டும் அம்மாவின் பாவாடையை தூக்கிபிடித்து மோடியின் ஆதரவாளர்களோடு சேர்ந்து தமிழக அரசுக்க கலங்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியல் இரங்கி உள்ளார் கிரிமினல் பி.ஜே.
.
தமிழக அரசு உடனடியாக இவரை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகத்தில் தி.மு.க. வின் அரசியல் எதிரிகளோடு சேர்ந்து தமிழகத்தில் ஒரு மத மோதலை ஏற்ப்படுத்த இவர் முயலலாம்.
.

இந்து அமைப்பகளுக்கு , தமிழகத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்னும் நோக்கில் விரைவில் உங்கள் அமைப்புகளின் தலைவர்கள் யாராவது கொல்லப்படலாம் நொலை திசை திருப்பப் படலாம் கவணம். அப்படி யாராவது கொல்லப்பட்டால் அதற்கு மூல காரணம் பி.ஜே தான். மதுரை ராஜ கோபாலன் தமுதற்கொண்டு பல இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதன் பிண்ணணியில் பி.ஜே உள்ளார் என்பது தமிழக உளவுத்துறைக்கு மிக அறிந்த விசயம்.

நவம்பர் 26, 2007

சத்தமின்றி படைக்கப்பட்ட வரலாறு – TMMK நன்றி அறிவிப்பு மாநாடு

Filed under: இட ஒதுக்கீடு, தமுமுக, நன்றி அறிவிப்பு — முஸ்லிம் @ 9:32 பிப

மேடையில் கலைஞருடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள்

(இதைப் பார்த்து விட்டு சிவப்பு விளக்கு கணவில் இருக்கும் சிலருக்கு துர்க்கம் வரவில்லையாம்)

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்காக எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள்

PHOTO GALLERY (PART-01)

PHOTO GALLERY (PART-02)

கடந்த 24.11.2007 அன்று இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியமைக்காக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழக இஸ்லாமிய மக்களின் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாட்டை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடத்தி காட்டியது.

சகோ. சஃபியுல்லா மற்றும் அப்பாஸ் அலி

தமிழகத்தில் பலர் சிந்திகக் திறனற்றவர்களாக பத்து லட்சம் கூடியது என்று கூறி சமுதாயத்தை அடகு வைத்ததோடு மட்டுமல்லாமல் அன்று கலைஞர் வெளியிட்ட அரசானையையும் கின்டல் செய்து இட ஒதுக்கீடு எல்லாம் கிடைக்காது என்று கேலி பேசினார்கள், ஆனால் இட ஒதுக்கீடு கிடைத்தவுடன் இன்று அது தன்னால் தான் கிடைத்தது என்று சின்னப் பிள்ளையாட்டம் கைப்பிள்ளை விளையாட்டு விளையான்டு கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் பேரதிகமான தமிழ் முஸ்லிம் மக்களை அழைத்து வந்து சென்னை மாநகரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தார்கள் த.மு.மு.க வினர்.

சவுதி அரேபியா கிழக்கு மன்டல நிர்வாகி பொறியாளர் சஃபியுல்லா கலைஞருக்கு பரிசளிக்கிறார்

வின் டி.வி யில் கிசுபுள்ளாவின் பேச்சை நேற்று இரவு கேட்டபோது ஒரே சிரிப்பானி சிரிப்பானியா வந்தது. இட ஒதுக்கீடு தங்களால் தான் வந்தது என்றெல்லாம் கிச்சு கிச்சு மூட்டினார். இந்த அண்டப் புழுகையும் பார்த்து மூழை கழுவிடப்பட்டு வின் டி.வி பார்த்து இஸ்லாத்து வந்து கொண்டிருக்கும் கூட்டம் புல்லரித்து போனது தனிக் கதை.

சகோ. சஃபியுல்லா மேடையில்

சகோ. கோவை தங்கப்பா

த.மு.மு.க வெற்றிகரமாக நடத்திய இந்த கூட்டத்திற்கு தமிழகமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். கோவையில் இருந்து ஒரு ரயிலை 7 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகைக்கு பிடித்து ஆயிரக்கணக்கில் வந்து வரலாறு படைத்தனர் கோவை மாவட்ட த.மு.மு.க வினர்.

கோவையில் இருந்து தனி ரயிலில் வந்து வரலாறு படைத்த கூட்டம்

குவைத் த.மு.மு.க நன்றி அறிவிப்பு மாநாடு

Filed under: குவைத் த.மு.மு.க — முஸ்லிம் @ 8:34 முப


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம…)

குவைத் நாட்டில் தமுமுக – குவைத் மண்டலத்தின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நன்றி அறிவிப்பு மாநாடு” ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமையிலிருந்து மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பு செய்தவுடனேயே இதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டன. குவைத் முர்காப் சிட்டியில் தஞ்சை உணவகத்தில் ஷஹீத் ராஜாமுஹம்மது நினைவு அரங்கத்தில் கடந்த 23-11-2007 அன்று இரவு 8:00 மணிக்கு மாநாடு துவங்கப்பட்டது. பொருளாளர் ஃபஜ்லுர்ரஹ்மான்-திருச்சி அவர்கள் கிராஅத் ஓதி மாநாட்டை துவக்கி வைத்தார். சகோ. கலீல்ரஹ்மான் – எருமப்பட்டி அவர்கள் வரவேற்புரையாற்றி மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களை தலைமையுரையாற்ற அழைத்தார்.

தலைமையுரையில் 60 ஆண்டுகால கனவு, 12 ஆண்டுகால போராட்டம், 16 மாத திட்டம், 12 நிமிடங்களில் நிறைவேறிய அவசரச்சட்டத்தில் இந்தத் தனி இடஒதுக்கீட்டை அறிவித்த கலைஞர் அவர்களுக்கும், இடஒதுக்கீட்டையும், சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்து திமுகவுடனான கூட்டனிக்கு திட்டமிட்டு அதன்படி உழைத்து வெற்றிபெறச்செய்த தமுமுக தலைமை முதல் அடித்தொண்டன் வரை அனைவருக்கும் நன்றி கூறினார்.


சிறப்பு அழைப்பாளராக ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஷாநவாஸ் – லால்குடி அவர்களும், குவைத் – தமிழ் கிருஸ்த்தவ திருச்சபையின் தலைவர் சகோ. ஹெர்பர்ட் சத்தியதாஸ் – நாகர்கோயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குவைத்தில் அனைவருக்கும் அறிமுகமான நீண்டகாலமாக சமுதாயத்தொண்டாற்றி வரும் பேரா. தாஜ்தீன்- புதுஆத்தூர் அவர்களும் தங்களது உரையில் பெற்ற இடஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்கள்.

மறைந்த இணைச்செயலாளர் ராஜாமுஹம்மது அவர்களின் அன்புச்சகோதரர் சகோ. முபாரக்அலி-லால்குடி அவர்கள் கலந்துகொண்டு பணியாற்றிய டெல்லிப்பேரணி, சிறைநிரப்பும் போராட்டம், இரண்டு வாழ்வுரிமை மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் அரங்கம் நெகிழ அழகாக எடுத்துரைத்தார். குவைத் மண்டல இணைச்செயலாளர் சகோ. தமீம் அன்சாரி-முத்துப்பேட்டை அவர்களின் நன்றியுரையோடு மாநாடு இனிதே நிறைவுபெற்றது.

அதே மாநாட்டில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மவ்லவி பி.அப்துல்ரஹீம் நினைவு அரங்கத்தில் நடைபெறவுள்ள பாபர்மசூதி கண்டனக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதுவரை ரியாத் மண்டலத்தில் செயலாளராக பணியாற்றிய சகோ. ஷாநவாஸ் அவர்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க குவைத் மண்டலத்தில் மண்டலச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரவு தேனீர் விருந்தோடு மாநாடு 10:30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

நவம்பர் 25, 2007

சவுதி அரேபியா – ரஹிமா மாநகரில் இஸ்லாமிய மாநாடு

Filed under: ரஹிமா ஒருநாள் மாநாட, rahima, rastanoora — முஸ்லிம் @ 3:42 பிப
ரஹிமா மாநகரில்
8ம் ஆண்டு ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு


நாள் : இன்சா அல்லாஹ் ஹிஜ்ரி துல்கஃதா 20, 1428
நவம்பர் 30, 2007 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணி முதல் மக்ரிபு வரை

இடம் : மஸ்ஜித் உஸ்மான் பின் அஃப்வான்
(ரஹிமா பான்டா மார்க்கெட் அருகில்)

  • சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மார்க்க அறிஞர்களின் சிறந்த சொற்பொழிவுகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள்!
  • பென்களுக்கு தனி இட வசதி – காலை மதிய உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு!
  • கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தஃவா சென்டர்களில் இருந்தும் வாகன ஏற்பாடு
  • கேள்வி பதில் மற்றும் நுலைவு எண்களுக்கான பரிசுகள் (குலுக்கள் முறையில்)

முதலில் வரும் 200 நபர்களில் குலுக்கல் முறையில் தோந்தெடுக்கப் படுபவர்களுக்கு 21″ டி.வி உட்பட பல மெகா பரிசுகள்!!

அறிவமுதம் தேடி ரஹிமாவுக்கு வாரீர் என்று அழைக்கின்றது

ரஹிமா தஃவா சென்டர்

தொடர்புகளுக்கு : 0555665646 – 0503893350 – 0503804610 – 0502120301 – 0507298714 – 0503866736 – 0507949626

நவம்பர் 24, 2007

ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2008

Filed under: ஷெய்கு சதக்கத்துல்ல — முஸ்லிம் @ 2:08 பிப
ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2008சென்னை சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம் ஆண்டு தோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு வழங்கி வருகிறது.

2008 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெறும் சிறந்த நூலுக்கு ரூ. 30,000/- பரிசு வழங்கப் பெறும். இப்பரிசுக்காக இவ்வாண்டு “வன்முறைக்கு எதிரானது இஸ்லாம்” என்னும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நூல்கள் ஏ4 அளவில் கணினி அச்சில், இடம் விட்டு ( Space ) 200 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இது புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ புத்தக அளவு 200 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

தாளில் ஒருபுறம் மட்டும் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.3.2008 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு அனுப்பப் பட வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு :

சீதக்காதி அறக்கட்டளை
எண் 688 ( புதிய எண் 272 ) அண்ணா சாலை
சென்னை 600 006

செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு

Filed under: நாவலர் ஏ.எம். யூசுப் — முஸ்லிம் @ 2:05 பிப


நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு

டாக்டர் கலைஞர் அவர்களால் நாடறிந்த நாவலர் என்று போற்றப்பட்டவரும், தமிழ் இஸ்லாமிய முற்போக்கு வார இதழான மறுமலர்ச்சி வார இதழை ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக கடும் போராட்டங்களுக்கிடையே நடத்தி இஸ்லாமிய சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுச்செயலாளராய் பல்லாண்டுகாலம் பணிபுரிந்தவரும், காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், சுலைமான் சேட், பனாத்வாலா, இ.அஹமது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி, என்று எல்லா தலைவர்களிடமும் நட்பு கொண்டிருந்தவரும், பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என படைத்தளித்த சிறந்த எழுத்தாளரும், மிகச் சிறந்த பேச்சாளருமாகிய

நாடறிந்த நாவலர் மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சமுதாயக் கவிஞர் எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி எம்.எ., பி.எட். அவர்கள் எழுத முனைந்துள்ளார்கள். இது தனிப்பட்ட ஒருவரின் வரலாறல்ல. தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் நலனுக்காக அயராது போராடியவரின் எழுச்சிமிகு வீரச் சரிதம். தமிழ் இஸ்லாமிய சமூகம் தன் நன்றியறிதலுக்குரிய ஒருவரை, அவரின் தியாகங்களை நினைவு கூர்ந்து வருங்கால சந்ததிக்காக ஏற்றிப் போற்றவேண்டிய அற்புத ஆவணம்.
நாவலர் அவர்களைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளோ, அவர் பற்றிய குறிப்புகளோ, துணுக்குகளோ, புகைப்படங்களோ தங்களிடமிருப்பின் தயவு செய்து அவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முபாரக் ரஸ்வி
+968 6951546
sithima@gmail.com
ysmrazvi@yahoo.com
A.M. Haneef
No 42 Jail Street
Palakkarai
TRICY 620 008
Tel : 0431 2714338
செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

IFT பெண்களால் நடத்தபெறும் இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி

Filed under: I.F.T — முஸ்லிம் @ 2:02 பிப

சென்னையில் பெண்களுக்காக பெண்களால் நடத்தபெறும் இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி

சென்னையில் புரசைவாக்கம் ஹோட்டல் சில்வர்ஸ்டாரில் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி 24.11.2007 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு துவங்குகிறது.

இக்கண்காட்சியை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ. தமிழரசி ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்கிரா தலைமை தாங்குகிறார். மத்திய சென்னை மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா ஜலால் முன்னிலை வகிக்கிறார்.

புத்தகக் கண்காட்சி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை நடைபெறும்.

புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய சென்னை மகளிர் அணியினர் ஏற்பாடுசெய்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு 26651031 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

நவம்பர் 21, 2007

நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு தமுமுக அழைக்கின்றது

Filed under: த.மு.மு.க கோவை, TMMK kovai — முஸ்லிம் @ 8:27 பிப


தமிழக முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெறிவிக்க மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாடு ஒன்றை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்” நடத்த இருக்கின்றது.

இம்மாநாட்டிற்காக தமிழகமெங்கும் இருந்து முஸ்லிம்களை சாரை சாரையாக அணி திரன்டு வாரீர் வாரீர் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அழைக்கின்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கோவை மாநகர கிளைகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பு போஸ்ட்டர்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

நவம்பர் 20, 2007

ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-03)

Filed under: குடந்தை சயீத், ஜகாத், ததஜ, பி.ஜே — முஸ்லிம் @ 9:05 பிப
ஜகாத் ஓர் ஆய்வு – பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)
குடந்தை சயீத் – தாயிஃப்-சவுதி அரேபியா

இதன் முதல் பகுதி (PART-01) வாசிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
இதன் முதல் பகுதி (PART-02) வாசிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
ஏக இறைவனின் திருப்பெயரால்…

காலக்கெடு இருக்கிறது

இதை யாவரும் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம். ஒரு காரியத்தை செய்து கொண்டே இருங்கள் என்று சொன்னால், அங்கு கால இடைவெளி இல்லை. அந்த காரியத்தையே திரும்பவும் செய்யுங்கள் என்றால், ஒரு இடைவெளிவிட்டு திரும்பவும் செய்யுங்கள் என்று அர்த்தம். அந்த இடைவெளி ஒரு நாளாக இருக்கலாம், ஒரு மாதமாக இருக்கலாம் அல்லது ஒரு வருடமாக இருக்கலாம். ஒரு காலஇடைவெளியில் அதைச்செய்ய வேண்டும் என்பது தெளிவு. காலஇடைவெளி இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் திரும்பவும் செய்யுங்கள் என்று சொன்னாலே ஒரு
இடைவெளிக்கு பிறகு செய்யுங்கள் என்றுதான் அர்த்தம். தொடர்ந்து செய்யுங்கள் என்றால் இடைவெளி கிடையாது தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டியது தான்.

கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புகாரியில் இடம் பெற்ற பலமான நபி மொழி மூலம் முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு இடைவெளி (காலக்கெடு) உண்டு. எத்தனை ஆடுகள் இருந்தால், எத்தனை ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும், என்பதை விளக்குவது தான் அந்த நபி மொழியின் நோக்கம். கால இடைவெளி நிச்சியமாக உண்டு என்பதை அது நிரூபிக்கிறது.

கால இடைவெளியை அறிவிக்கக்கூடிய வேறு நபி மொழிகள் இருக்கின்றன. அதைப் பின்னால் பார்ப்போம். இங்கு நாம் சொல்ல வருகின்ற விஷயம், கொடுத்த பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, மாற்றமாக கொடுத்த பொருளுக்கு தேவையில்லை என்று பி.ஜே. சொல்லிக்கொண்டு இருக்கிறார். காலக்கெடு இருக்கிறது என்று நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மாற்றமாக காலக்கெடு இல்லை என்று பி.ஜே. சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் எந்த ஆதாரமும் தான் கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லியே இவைகளைச் சொல்கிறார். (மதுரை விவாத சிடியில் இதைப் பார்க்கலாம்). அதையும் ஏற்றுக்கொள்ள பலர் இருக்கின்றனர். ஆதாரத்தின் அடிப்படையில் சொல்வதை உதாசீனப்படுத்துகின்றனர்.

சுருக்கமாக: கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு காலக்கெடு உண்டு. அதைப் போலவே கால இடைவெளியில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றாலே கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் கொடுக்க வேண்டும். இதற்கான விளக்கத்தைத்தான் மேலே சில ஆதாரங்களுடன் பார்த்தோம்.

மேலதிக நடைமுறை உதாரணம்.

மேலதிகமாக சில நடைமுறை உதாரணங்களைக் கொண்டும் இவைகளைப் புரியலாம். ஒரு அரசாங்கம் கீழ் கண்ட ஒரு வரியை கட்டச்சொல்லி உத்தரவு இடுகிறது. அதாவது ஒரு இலட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் அதில் இருந்து 2.5% வரியாகக் கட்ட வேண்டும். ஒரு இலட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒருவர் பத்து இலட்சம் வைத்திருக்கின்றார். இந்த வருடம் 2.5ம% கட்டிவிட்டார். அடுத்த வருடம் 12 இலட்சம் இருக்கிறது. இப்போது 12 இலட்சத்துக்கு 2.5ம% கட்ட வேண்டுமா? அல்லது 2 இலட்சத்துக்கு 2.5% கட்ட வேண்டுமா? அந்த சட்டத்தின் படி 12 இலட்சத்திற்கு 2.5ம% கட்ட வேண்டும் என்றுதான் யாரும் கூறுவார்கள். அவர் இரண்டு இலட்சத்திற்கு மட்டும் வரி கட்டினால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

அவர் இரண்டு இலட்சத்திற்கு வரி கட்டினால் போதும் என்றால், அது சொல்லப்பட்டிருக்க வேண்டும். போன வருடம் கட்டிய பணத்திற்கு இந்த வருடம் கட்டத் தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் சொல்லப்படாவிட்டால் தானாகவே கையில் உள்ள அனைத்துக்கும் கட்ட வேண்டும் என்பது சொல்லாமலே புரியக்கூடியதாக இருக்கிறது. வரி கட்டிய பணத்திற்கே திரும்பத் திரும்ப கட்டு என்று சொல்லப்பட வேண்டியதில்லை, அப்படி யாரும் சொல்வதும் இல்லை, இதுதான் நடை முறை.

ஜகாத் விஷயத்திலும் அது தான் சட்டம்

ஜகாத் விஷயத்தில் மட்டும் வருடா வருடம் 2.5 சதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு வேறு அர்த்தமாம். வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று நிரூபித்தால் மட்டும் போதாது, கொடுத்ததற்கே திரும்பத் திரும்ப கொடு என்று நபி மொழி வேண்டும் என்று பி.ஜே. கேட்கின்றார். அதையே இலட்சக்கணக்கானோரின் உதடுகளும் திருப்பி சொல்கின்றன.

ஆக அவர் கேட்பது எல்லாம் ‘இல்லாத ஊருக்கு வழிதான்’. நாம் திருப்பிக் கேட்கின்றோம் கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வந்ததற்கு மட்டும் கொடு என்று சொல்லப்பட்டிருக்கின்றதா? அதற்கு தான் ஆதாரம் தர வேண்டும். இல்லை என்றால் கொடுத்ததற்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது தான் அர்த்தம். பி.ஜே. மாற்றி சொல்வதற்கு காரணம் அவர் போட்ட அடிப்படை தான். பொருளுக்கு தூய்மை என்று வைத்து அடித்தளம் போட்டாகிவிட்டது. இப்போது அடித்தளத்தை மாற்ற முடியாது என்று கட்டிடத்தை அடித்தளத்திற்கு தகுந்தாற் போல் கட்டப் பார்க்கிறார். கொடுத்த பொருள்தான் தூய்மையாகிவிட்டதல்லவா? அதற்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டுமா? இதுதான் அவரின் பிரச்சினை.

ஆனால் பொருளுக்குத் தூய்மை ஜகாத் என்பது ஒரு வாதத்திற்கு தவறாகப் போனாலும் நான் சொன்னது சரி தான் என்று கூறிக்கொள்கிறார். அதை முக்கியமான ஆதராமாக வைக்கவில்லை என்கின்றார். அதையும் பலர் ஆமோதிக்கின்றனர்.

காலக்கெடு (இடைவெளி) என்ன?

காலஇடைவெளியில் தான் ஜகாத் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜகாத் சட்டத்தில் காலஇடைவெளியும் ஒரு அம்சமாக இருக்கிறது. அதை விட்டுவிட்டு செயல்படுத்தவே முடியாது.

நாம், கால இடைவெளி ஒன்று நிச்சயமாக உண்டு என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்த பின் காலக்கெடு பற்றி அறிவிக்கின்ற ஏராளமான ஹதீஸ்களைப் பார்த்து அவைகளில் பலமான நபி மொழிகளை சுட்டிக்காட்டுகிறோம். மௌலவி பி.ஜே. அவர்களோ காலக்கெடு இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்கின்றார். அது மட்டுமல்ல அதனால் தான் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தேன் என்கின்றார்.

ஆகவே வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சரியான நபி மொழி இருக்கின்றது என்று அவர் ஏற்றுக்கொண்டால், அவரது முடிவு தவறு என்று அவரே சொன்னதாக ஆகிவிடும், இந்த நிலையில் தான் அவர் இருந்து கொண்டிருக்கிறார்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நபி மொழி உட்பட பல ஆதாரங்கள் தரப்படுகின்றன. சகோதரர் பி.ஜே. அவர்கள் இது பலகீனம், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எல்லாவற்றையும் தட்டி விடுகின்றார்.

நாம் கேட்பது இதுதான், ஒரு காலக்கெடு இருக்கிறது என்று சரியான நபி மொழி சொல்லிக் கொண்டிருக்கிறது, என்பதை நிரூபித்த பின் அந்த காலக்கெடு ஒரு வருடம் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு அதை ஏற்றுக்கொள்கிறோம்.

காலக்கெடு இருக்கின்றது என்பது உறுதிபடுத்தப்பட்ட ஒன்று. வருடா வருடம் கொடுக்க ஆதாரம் இல்லை என்றால், அந்த காலக்கெடு என்ன? என்று திருப்பிக் கேட்கின்றோம். ஆறு மாதமா? இரண்டு வருடமா? இரண்டு மாதமா? அதற்கு ஏதும் ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும். இல்லை என்றால் இந்த விஷயத்தில் வீண் குழப்பங்கள் செய்யாமல் இருக்கட்டும்.

திருக்குர்ஆனின் 6:141 வசனத்திற்கே, உண்மைக்கு மாற்றமான விளக்கம் கொடுக்கும் போது, சரியான நபி மொழிகளை ஏதேனும் காரணம் காட்டி தட்டி விடுவது அதைவிட இலகுவான காரியம்தான்.

வருடா வருடம் கொடுக்க வேண்டும்

வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு பல நபி மொழிகள் இருக்கின்றன. இதில் பலமானதும், பலகீனமானதும் இருக்கின்றன. இவை அணைத்துமே வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதையே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆறு மாதம் என்றோ, இரண்டு வருடம் என்றோ அறிவிக்கும் ஒரு நபி மொழி கூட இல்லை. நபித் தோழர்களின் செயல்பாடுகளும் கருத்து வேறுபாடில்லாமல் இதையே உறுதி செய்கின்றன.

ஸஹீஹ்கான நபி மொழியாக அபு-தாவூத்தில் வரக்கூடிய ஒரு நபி மொழியை அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்:

மூன்று விஷயங்களை செய்யும் ஒருவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார்

(1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை மட்டுமே வணங்குவது. (2) தனது செல்வத்திற்கான ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் மன விருப்பத்துடன் வழங்கி வருவது……………. என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காழிரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த நபி மொழியையும் பல காரணங்களைக் கூறி பலவீனம் என்று ஒதுக்குகிறார். எல்லாவற்றையும் எழுதினால் இன்னும் நீண்டு கொண்டே போகும் என்ற காரணத்தினால் ஒரு காரணத்தை மட்டும் விளங்குவோம்:

இதை அறிவிக்கக் கூடியவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைக் கூறிவிட்டு அவரே சொல்கிறார், இருந்தாலும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறி இருப்பது ஏன் என்று புரியவில்லை என்று.

அறிவிப்பாளர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்ட இவர் மேற்கோள் காட்டும் எல்லா நூல்களிலும் இவரை நபித் தோழர் என்றே கூறப்பட்டுள்ளது.

(01) தக்ரீப் – 226 (02) தஹ்தீபுத் தஹ்தீப் – 2ஃ670 (03) அல் இஸாபா – 2ஃ371 இந்த மூன்று நூல்களும் நபித் தோழருக்கான இலக்கணம் கூறிய இப்னு ஹஜர் அவர்களுக்குரியதாகும். (04) தாரிக்குல் கபீர் – 4ஃ345 இது இமாம் புஹாரிக்குரியது. (05) அல் இஹ்திஆப் – 3ஃ117 (06) அல் ஜரஹ் வத்தஃதீல் – 5ஃ185 (07) தஹ்தீபுல் கமால் – 5ஃ645. (08) ஃதிகாத் – 1ஃ365. (09) தபகாத்துல் குப்ரா – 7ஃ421. (10) உசுல் ஃகாபா – 3ஃ392. (11) அவ்னுல் மஃபூத் 2ஃ324. (12) அல் காஷpஃப் – 1ஃ599. (13) முஃஜமுஸ் ஸஹாபா – 2ஃ37. (14) மஃரிபத்துஸ் ஸஹாபா – 4ஃ178. (15) நைலுல் அவ்தார் – 4ஃ152. (16) தஜ்ரீத் அஸ்மாவுஸ் ஸஹாபா – 1ஃ335.

இவர் நபித் தோழர் இல்லை என்று உலகில் உள்ள எந்த ஒரு நூலிலும் கூறப்படவில்லை. ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் யாருமே இவரை நபித் தோழர் இல்லை என்று கூறவில்லை.

அது மட்டுமல்ல நபித் தோழர் என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று கூட கூறவில்லை. நாம் இத்தனை நூட்களின் பட்டியலைக் காட்டி அவர் நபித்தோழர் என்று நிரூபிக்கின்றோம். பி.ஜே. ஏதாவது ஒரு நூலில் இருந்தாவது, அவர் நபித் தோழர் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இவராக ஒர காரணத்தைச் சொல்லி அதனால் அவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைப் போன்று சில காரணங்களைச் சொல்லி அந்த நபிமொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்.

ஹதீஸ் கலையின் பொது விதி

இந்த நேரத்தில் ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதியையும் இங்கே குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. மேற்கண்ட ஹதீஸை நாம் முன்பு பார்த்த (நபித் தோழர் இல்லை என்ற) காரணத்தைச் சொல்லி எந்த ஆதாரமும் இல்லாமல், அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னாலும், ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதி அந்த ஹதீஸ் சரிதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நபி மொழியை சரி இல்லை என்று சொல்வதற்கு எந்த ஹதீஸ் கலையின் விதியை பயன்படுத்துகிறோமோ, அதே ஹதீஸ் கலையின் பொதுவிதியைத் தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அந்த விதியாவது:
‘அறிஞர் பெருமக்கள் அணைவரும் ஒரு ஹதீஸை செயல்படுத்தி வர வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தால் அந்த ஹதீஸை ஏற்று செயல்படுத்துவது கட்டாயக் கடமையாகும்’ இக்கலையின் சிறந்த அறிஞர்கள் பலரும் இதனைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (அந்நுகத் – 171)

‘ஒரு நபி மொழியை மக்கள் அணைவரும் ஒப்புக்கொண்டுவிட்டால் அதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றாலும் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று தீர்மானிக்கப்படும்’ (தத்ரீப் – 29)

இவ்வாறு ஒப்புக்கொள்ளப்படுவதற்கு கீழ்கண்ட நிபந்தனைகளும் உண்டு.

* அந்த நபி மொழியின் அறிவிப்பாளர் மீது பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர், என்ற குற்றச்சாட்டு இருக்கக் கூடாது. ஆனால் நினைவாற்றல் குன்றியவர் என்ற குற்றச்சாட்டு இருக்கலாம்.

* மேலும் குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழியுடன் நேரடியாக மோதக்கூடியதாக இருக்கக் கூடாது.

* முக்கியமாக இக்கலையின் அறிஞர் பெருமக்கள் யாவரும் மறுக்காது அந்தக்கருத்தை செயல்படுத்தி வந்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையின் படி ஒரு ஹதீஸ் இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலையின் பொது விதியாகும்.

நாம் முன்பு பார்த்த அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். அதைப் பி.ஜே. அவர்கள் தான், ஏற்கப்படாத காரணங்களைக் கூறி சரியானது இல்லை என்கின்றார். அவர் சொல்கின்ற காரணங்களில் ஒன்றை ஏற்கனவே பார்த்தோம்.

அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள அதே ஹதீஸை வேறொரு அறிவிப்பாளராகிய அப்துல் ஹமீத் அபுத்தகி என்பவரும் அறிவிக்கிறார். இது தப்ரானி, முஃஜமுஸ் ஸஹாபா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது. இதுவும் ஹதீஸ் கலையின் விதியின் படி சரியான ஹதீஸ் ஆகும்.

இந்த அறிவிப்பாளர், பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்.

* இந்த ஹதீஸ் குர்ஆனுக்கோ நபி மொழிக்கோ எதிரானது அல்ல. மாறாக, மற்ற நபி மொழிகளோடும், நபித் தோழர்களின் நடவடிக்கையோடும் ஒத்துப் போகக்கூடியது.

* இந்த ஹதீஸ் நபித் தோழர்கள் காலத்தில் இருந்து இன்று வரை எல்லா அறிஞர்களாலும் ஏற்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட மூன்று நிபந்தனைகள் தான் அந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஹதீஸ் கலையின் விதிப்படி நிரூபிக்கிறது. அது மட்டுமல்ல அபு-தாவூத்தில் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர் வழியாக பதிவாகியுள்ள இதே ஹதீஸையும் ஆதாரப்பூர்வமானது என்று ஊர்ஜீதப்படுத்துகிறது.

ஆதாரத்தின் அடிப்படையில்

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை எவ்வித சந்தேகங்களுக்கும் இடமில்லாமல், ஆதாரங்களுடன் கூறியுள்ளோம். அது மட்டுமல்ல வருடா வருடம் கொடுக்கும் போது, ‘கொடுத்த பொருள்’, ‘கொடுக்காத பொருள்’ என்றெல்லாம் சொல்ல முடியாது. கொடுத்த பொருள் செலவாகியிருக்கலாம். புதிய பொருள் வந்திருக்கலாம். அல்லது கொடுத்த பொருள் கையில் இருக்கவும் செய்யலாம். கையில் இருக்கின்ற மொத்த பொருட்களையும் கணக்கிட்டு 2.5 சதம் ஜகாத் கொடுக்க வேண்டும். இது தான் இஸ்லாமிய நடை முறை. உலகம் முழுவதும், எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படிப் பின் பற்றவில்லை, என்பதற்கான ஆதாரங்களையும் விளக்கங்களையும் தந்துள்ளோம். இதற்கு மாற்றமாக சொல்பவர்களிடம் தான்
ஆதாரம் இல்லை. எந்த ஒரு சரியான ஆதாரத்தைக் காட்டினாலும், ‘அந்த அறிஞர் தவறுக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அவர் தவறு செய்துவிட்டார்’ என்று சொல்லி, இவர் தனது சொந்த விளக்கத்தை தான் ஆதாரமாக வைக்கின்றார். அவைகள்தான் தவறாக இருக்கின்றன. இவைகளை நாம் ஆதாரத்துடன், சுட்டிக்காட்டியுள்ளோம். ஆகவே அவர் சொல்வது இங்கு அவருக்கே பொருத்தமாக இருக்கிறது. இந்த ஜகாத் விஷயத்தில் பி.ஜே. தவறாக சொல்கின்றார். தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
பி.ஜே.

மார்க்கத்தில் சொல்லாத புதிய சட்டத்தின் பயங்கர விளைவுகள்

* பி.ஜே. சொல்வது மார்க்கத்தில் உள்ளதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது புதிதாக தினிக்கப்பட்டது. ஆகவே பித்அத்தான விஷயம். பித்அத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றவர், இந்த விஷயத்தில் பித்அத்தை செய்யச்சொல்லி பிரச்சாரம் செய்கின்றார். பித்அத்தான விஷயம் ஒவ்வொன்றும் வழிகேடு, ஒவ்வொரு வழி கேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

* இவரது சட்டம், மக்களுக்கு கூடுதலான சுமை. செயல்படுத்தவே சாத்தியம் இல்லாத ஒரு சட்டம். ஜகாத் கடமையான ஒருவன், அவனுக்கு புதிதாய் வருகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், (ஒரு பைசாவாக இருந்தாலும்) உடனே ஜகாத் கொடுத்துவிட வேண்டும். கொடுக்காமல் செலவு செய்ய முடியாது. அப்படிச்செய்தால், அந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்காத குற்றவாளி. அந்த பொருட்கள் எல்லாம் உருக்கப்பட்டு மறுமையில் சூடு போடப்படுவான். உதாரணமாக ஒரு பத்து ரூபாய் பணம் வருகின்றது, உடனே அதற்கு ஜகாத் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நிமிடமே இன்னொரு ஐந்து ரூபாய் வந்தாலும் உடனே கொடுக்க வேண்டும். இப்படியாக வாழ்நாள் முழுவதும் வருகின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* அல்லாஹ் (ஸுப்) சொன்ன சட்டம் வெகு எளிமையானது. அதன்படி ஜகாத் கடமையான ஒருவன் இந்த வருடம் ஜகாத் கொடுக்கின்றான். பின்பு எவ்வளவு சம்பாதித்தாலும் அவைகளை எல்லாம் ஜகாத் கொடுக்காமலே செலவு செய்து கொள்ளலாம். செலவு போக மிச்சம் உள்ளதை சேமிக்கலாம். இவைகளுக்கெல்லாம் ஜகாத் இல்லை. அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் நேரம் வரும் பொழுது, அவன் செலவு போக அதிகப்படியாக சேமித்து வைத்ததிலிருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அதாவது அவன் ஜகாத் கொடுக்கின்ற நேரத்திலே, கையிலே எவ்வளவு உள்ளதோ அவைகளுக்கு 2.5 சதம் ஜகாத். இடையில் வருகின்ற பொருட்களை அவன்
விரும்பியபடி செலவு செய்து கொள்ளலாம்.

* ஆனால் மார்க்கத்தில் இல்லாத, பி.ஜே. அவர்களின் சட்டத்தை செயல்படுத்தினால் அவன் குற்றவாளியாகிறான். அந்த சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குற்றவாளியாகிவிடுவான். ஏன் என்றால் ஜகாத் கடமையான ஒருவன் வாழ் நாள் முழுவதும் சம்பாதிக்கின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்தே ஆக வேண்டும். இதை செயல் படுத்த முடியாமல் மறுபடியும் குற்றவாளியாகிறான். ஆக பி.ஜே.யின் சட்டத்தை செயல்படுத்தினால், எப்படியும் அவனக்கு அல்லாஹ்வின் தண்டனை உண்டு என்பதிலே எவ்வித சந்தேகமும் இல்லை.

* பி.ஜே. யின் கருத்துப்படி, ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத், ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் அப்படி ஒரு தடவை கொடுத்தே ஆக வேண்டும் என்பதை விளக்கமாகக் கண்டோம். ஆனால் பி.ஜே.யோ, ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத், ஆனால் கொடுத்ததிற்கே திரும்பத் திரும்ப கொடுக்கச் சொல்கின்றார்கள், என்று சொல்லி அவர் சொல்வது எளிமையாக இருப்பது போல் பிரச்சாரம் செய்கிறார். மாற்றுக் கருத்துப்படி ஜகாத் கொடுத்தால் பிச்சைக்காரனாகி விடுவார்கள் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இவர் சொல்கின்றபடி ஜகாத் கொடுத்தால்தான், ஒருவன் அதிகப்படியான பொருளை செலவிட வேண்டி வரும். ஏன் என்றால் புதிதாய் வரும் அனைத்து பொருட்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும.

* ஜகாத் கொடுத்த பொருளை அப்படியே வைத்துக் கொண்டு, அதற்கு திரும்பவும கொடுக்க வேண்டும் என்ற யாரும் சொல்லவில்லை. அடுத்த வருடம் திரும்பவும் கொடுக்கின்ற நேரம் வருகின்ற போது, இவர் செலவு எல்லாம் போக அந்த பொருள் கையில் மிச்சம் இருந்தால், அதில் இருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அந்த பொருளை செலவு செய்து இருந்தால் அதற்கு ஜகாத் கிடையாது. இதை நடை முறை உதாரணத்துடன் முன்பே கண்டோம்.

முடிவுரை

இறுதியில் மறுபடியும் தமிழ் முஸ்லீம்களுக்கு நாம் வைக்கும் அன்பான வேண்டுகோள். எதையும் ஆதாரத்தை வைத்து முடிவெடுங்கள்.

ஜகாத் விஷயத்திலே பல நிலைபாடுகளிலே, பி.ஜே. இருந்து வருகிறார் என்பதை நாம் ஆதாரத்துடன் தந்துள்ளோம். சுருக்கமாக மறுபடியும் கீழே
தரப்பட்டுள்ளது.

* முதலிலே சில ஆதாரங்களை கொடுத்தது.

* அது தவறானதும், அதே கருத்தில் வேறு ஹதீஸைத் தந்தது.

* பின்பு அதையும் விட்டுவிட்டு, வேறு ஆதாரம் இருக்கிறது என்றது.

* ஆதாரம் என்று சொல்லிவிட்டு ‘கொடு’ என்ற பொதுவான கட்டளையை காண்பித்தது.

* ஆதாரம் கொடுக்க அவசியம் இல்லை என்று தற்சமயம் சொல்வது.

மேற்கண்ட இந்த நிலைப்பாடுகளை ஒருவர் கவனித்தாலே, அவரது கருத்து சரியா? தவறா? என்பது தெளிவாக விளங்கும்.

இப்பொழுது, ஆதாரம் கொடுக்க மாட்டேன், ஆனால் நான் சொன்னதுதான் சரி என்று சொல்கின்றார். அதுவும் முக்கிய கடமையான ஜகாத் விஷயத்திலே.

விவாதம் என்று அழைத்து, ஆனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்றால், தாம் சொல்வது சரி என்று மக்களுக்கு காட்டும் நிகழ்ச்சிதான் நடைபெறுகிறது. இதற்கு ஆதாரமாக மதுரையிலே நடந்த விவாதத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். தான் கூறுவதுதான் சரி என்று காண்பிக்க, குர்ஆனின் வசனத்தையே (6:141) மறுக்கும் நிலைக்கு போய் விட்டார், சகோதரர் பி.ஜே.

இவ்வளவுக்கு பின்பும், விவாதத்தின் மூலம்தான் உண்மையை கண்டறிய முடியும் என்று ஒருவர் நினைத்தால், அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்யட்டும். நாம் தயாராக இருக்கின்றோம். ஏற்கனவே அவரோடு இருக்கின்ற மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி உடன், சிறிய அளவிலே ஒரு விவாதம் நடத்தி உள்ளோம். நாம் பின் வாங்க மாட்டோம் என்று இதன் மூலம் மறுபடியும் உறுதி கூறுகின்றோம்.

அடுத்தது இதைவிட, பொதுவாக யாருக்கும் விளங்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

குர்ஆனோடு, பலமான நபி மொழி மோதுமா? என்பதுதான் அது. ஜகாத் விஷயத்தைவிட அது இன்னும் எளிதாக மக்களுக்கு புரியும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

Older Posts »

Create a free website or blog at WordPress.com.