தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 17, 2007

சிதம்பரம் மெளலவி(?)யின் ஆட்டகாசம்

Filed under: இஸ்மாயில் நாஜி, ததஜ, PJ யின் பல முகம், TNTJ, TNTJ Fraud — முஸ்லிம் @ 11:18 முப
பெரிதாக்கி படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்

குறிப்பு : முஸ்லிம் பேரவைத் தலைவராக பி.ஜே யால் தேர்ந்தெடுக்கப்பட்டு “தவ்ஹித் வாதிகள் மற்றும் சுன்னத் ஜமாத்” இருபாலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் இவர் மட்டும்தான் என்ற புகழாரம் சூட்டப்பட்ட கணியூர் இஸ்மாயில் நாஜி என்பவரைப்பற்றி அதே பி.ஜே தனது களவாடப்பட்ட உணர்வு பத்திரிகையில் “சிதம்பரம் மெளலவியின் அட்டகாசம்” என்ற தலைப்பில் பொய்கள் நிறைந்த ஒரு அவதூற கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதற்கு மறுப்பாக ஜனாப் இஸ்மாயில் நாஜி அவர்கள் முட்டாள்தனமாக கிரிமினல் பி.ஜே யை பின்பற்றும் அதன் தொண்டர்களுக்கு ஒரு பதிலை எழுதியுள்ளார் அதை மக்களின் பார்வைக்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

மாட்டு ஈ

பரிதாபத்திற்குரிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு நேர்வழியுடன் கூடிய சாந்தியும் சமாதானமும் உண்டாகுமாக.

ஈக்களில் மாட்டு ஈ என்று ஒன்று இருக்கிறது. உடம்பில் உள்ள நல்ல பகுதிகளை விட்டுவிட்டு புண்ணான பகுதியில் அமர்ந்து நோண்டுவது அதன் இயல்பு. உங்கள் தலைவரும் அந்த ரகம்தான். அடுத்தவரின் நல்ல இயல்புகளை பாராமல் பிறரின் குறைகளைத் தேடுவதுதான் உங்கள் தலைவரின் நபிவழி.

மதரஸாவில் 200, 300 என்று சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவரை 1000 ரூபாய் சம்பளத்தற்கு அழைத்து வந்து நஜாத் என்ற பத்திரிக்கைக்கு ஆசிரியராக்கி அழகு பார்த்த அபு அப்துல்லாஹ்வை அசிங்கப்படுத்தியவர் உங்கள் தலைவர். கட்டுக்கோப்பான ஜாக் அமைப்பின் அமீர், கமாலுதீன் மதனியை கலங்கப்படுத்தியவர் உங்கள் தலைவர். அவர் நுழையமுடியாத ஊருக்கெல்லாம் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மேடையேற்றிவர்கள் த.மு.மு.க தொண்டர்கள். அந்த அமைப்பின் தலைவர்களை தரம் தாழ்த்தி விமர்ச்சித்து அந்த அமைப்பையே அழிக்க முயன்றவர் உங்கள் தலைவர். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய அவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமான உங்கள் கட்சியின் பொதுச் செயலாளரை விபச்சாரம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியவர். தன்னிடம் கேள்வி கேட்டார் என்ற காரணத்திற்காக உங்கள் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் கலீமுல்லாவை கேவலப்படுத்தயவர். ஆலிம்களை கிண்டல் செய்தார். இமாம்களை நக்கல் செய்தார். சஹாபாக்களை கிரிமினல் மோசடி பேர்வழி என்று விமர்சித்தார். மக்களை பக்குவபடுத்த வந்த பெருமானார் (ஸல்) அவர்களை அச்செயலை பூரணமாக செய்ய முடியவில்லை என்று பெருமானாரிடமே குறை கண்டவர்.

அத்தகைய யோக்கிய சிகாமணி தான் இஸ்மாயில் நாஜியைப் பற்றி உணர்வு பத்திரிக்கையில் எழுதியது வியப்புக்குரியதல்ல. உங்கள் தலைவர் காட்டும் நபி வழி அவதூறு பேசு, அமைப்பில் பிளவுபடுத்து, சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய் என்பதுதான். அந்த அடிப்படையில்தான் உங்கள் தலைவர் காட்டும் நபி வழியில் சிதம்பரம் ஈதுகாவை நீங்கள் ஆக்கிரமிக்க முயன்றீர்கள். எந்த ஒரு பள்ளியிலும் எந்த ஒரு முஸ்லீமும் தொழலாம். ஆனால் தொழுகை நடத்துவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன, அந்த அடிப்படையில்தான் ஜமாத் நடைபெறும் பள்ளிகளில் இரண்டாவது ஜமாத் நடத்துவது கூடுமா? கூடாது? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் ஈதுகா பள்ளியில் யாரும் தொழுவதற்கு தடையில்லை. ஆனால் ஜமாஅத்தாக தொழுவதற்குத்தான் அனுமதி தேவை. அந்த அடிப்படையில்தான் ஈதுகா கமிட்டியிடம் அனுமதி பெற்று ஜமாஅத்தாக தொழுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டது. உண்மையிலேயே நீங்கள் நபியின் சுன்னத்தை நிறைவேற்றும் எண்ணம் இருந்திருந்தால், அனுமதிப் பெற்று தொழுகை நடத்தியிருப்பீர்கள், ஆனால் உங்கள் நோக்கமோ உங்கள் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப அந்த இடத்தை ஆக்கிரமிப்பதுதான், இதனை புரிந்து கொண்ட ஜமாஅத்தார்கள் இதுரை இல்லாத அளவிற்கு ஒன்றிணைந்து காவல் நிலையத்திற்கு வந்தார்கள். அனுமதி கேட்டு தொழுங்கள் என்று கூறியும் அவர்கள் அனுமதி கேட்க மறுத்துவிட்டார்கள் என்ற எங்களின் வாதம்தான் காவல்துறை அதிகாரிகளை சிந்திக்க வைத்தது. உங்களின் நோக்கம் ஜமா அத்தை பிளவுப்படுத்துவதுதான் என்று உணர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கம்போல உங்கள் தலைவர் கால்துறையையும் கையூட்டுப் பெற்றதாக களங்;கப்படுத்துகிறார்.

ஜமாஅத்தார்களும் டவுன் காஜியும்:

டவுன் காஜியை கலந்து ஆலோசிக்கமல் கால்துறையிடம் பொய்த்தகவல் கொடுத்ததாக உணர்வு பத்திரிக்கையில் எழுதுவதன் மூலம் டவுன் காஜிக்கும், ஜமாஅத்தார்களுக்கும் இடையே உங்கள் தலைவரின் நபி வழி படி பிளவுப்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்கள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால் 01-10-2007ல் நவாப் பள்ளியில் மரியாதைக்குரிய டவுன் நாயிப் காஜி அவர்கள் முன்னிலையில் ஜமாஅத்தார்கள் மூன்று முக்கிய முடிவுகள் எடுத்தார்கள்.

1-ஈதுகா சம்மந்தப்பட்டது
2-ஃபித்ரா தொகை நிர்ணயித்தது
3-பிறை சம்மந்தப்பட்டது.

ஃபித்ரா தொகையை பொறுத்தவரை நபி (ஸல்) அவர்கள் கொடுத்த அளவு தற்கால கிலோ கிராம் எவ்வளவு என்பதில் சென்னை தலைமை காஜிக்கும், மாநில ஜமாஅத் உலமா சபைக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. 2.400 கிலோகிராம் என்பது தலைமை காஜியின் கருத்து. 1.600 கிலோகிராம் என்பது ஜமாஅத் உலமாவின் கருத்து இந்த கருத்து வேறுபாட்டை இருவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

குறைவாக நிர்ணயித்தால் அதிகம் பேர் கொடுப்பார்கள், எனவே அந்த தொகையையே கொடுக்கலாம் என்பது ஜமாஅத் உலமாவின் வாதம். ஏழைகளுக்கு எவ்வளவு அதிகமாக கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கலாம் என்பது காஜியின் விருப்பம். நீண்ட விவாத்திற்கு பின் அந்தந்த பள்ளி இமாமும் முத்தவல்லியும் இதன் இரண்டில் ஒன்றை நிர்ணணயித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சிதம்பரம் நகரில் பெரும்பாலான பள்ளிகளில் இஸ்மாயில் நாஜி நிர்வாகம் செய்யும் இப்ராஹிம் நகர் பள்ளி உள்பட பெரும்பாலான பள்ளிகளில் டவுன் காஜி நிர்ணயித்த 38 ரூபாய்தான் அறிவிக்கபட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்னால் டவுன் காஜிக்கும் ஜமாஅத்தார்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பெருநாள் தொழுகை விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டது. அதுபோன்று குழப்பம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பிறை பார்க்கும் கமிட்டி அமைக்கபட்டு பெருநாள் சம்பந்மான அறிவிப்புகளை கமிட்டியின் சார்பாக டவுன் காஜி அறிவிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே சிதம்பரம் நகரைப் பொருத்தவரைக்கும் டவுன் காஜியும் சிதம்பரம் ஜமாஅத்தார்களும் இணைந்தே செயல்படுகிறார்கள். பிளவுபடுத்த வேண்டுமென்ற உங்களின் முயற்சி எந்நாளும் பலிக்காது. உங்களுக்கு மார்க்க அறிவும் இல்லை, பொது அறிவும் இல்லை. அன்று காவல்நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் வரவே இல்லை. ஆனால் அவருக்கு கையூட்டு கொடுத்தாக எழுதியுள்ளீர்கள் அதேபோன்று மறுநாள் நடந்தது வட்டாட்சியர் முன்னிலையில் நீங்கள் ஆர்.டி.ஓ. என்று எழுதியுள்ளீர்கள்.

நபிவழி நடப்பவரா நீங்கள்?:

நபிவழி நடப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழியில் நடக்காமல் உங்கள் தலைவர் காட்டும் நபி வழியில்தான் நடக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் நபிவழி நடக்கின்றீர்கள் என்றால் மார்க்கம் கற்க வந்த மாற்று மத சகோதரியுடன் உங்கள் கட்சி பொதுச் செயலாளர் விபச்சாரம் செய்தார் என்று இணைய தளத்தின் மூலமும், பொதுமக்கள் முன்னிலையிலும் உங்கள் தலைவர் கூறியபோது ஒரு முஸ்லீமை இப்படி கேவலப்படுத்துவது கூடுமா? இது நபிவழிதானா? என்று கேட்கும் அறிவோ, ஞானமோ இல்லாத நீங்கள் சுன்னத்தான காரியங்களை இஸ்மாயில் நாஜி தடுத்துவிட்டார் என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

விபச்சாரம் செய்தார் என்று குற்றம் சாட்டிய பொதுச் செயலாளாரை எப்படி மீண்டும் கட்சியில் பதவிக் கொடுத்தீர்கள் என்று கேள்வி கேட்ட கடலூர் மாவட்ட தலைவர் கலீமுல்லாவை கட்சியில் நீக்கியவுடன் அவர் கட்சியின் letter Pad ஐ தவறாக பயன்படுத்தினார் என்றும் இன்னும் சில குற்றச்சாட்டுக்களை உங்கள் தலைவர் கூறி முபாஹலா செய்தபோது இப்படி ஒரு தனி மனிதனை கேவலப்படுத்தி முபாஹலா செய்வது நபி வழிதானா? என்று நீங்கள் கேட்டிருந்தால் நீங்கள் உண்மையான நபி வழி நடப்பவர்கள்.

உண்மையில் கலீமுல்லா அவர் தவறு செய்திருந்தால் உங்கள் தலைவரை எதிர்த்து கேட்கும்வரை தவறு செய்தவரை மாவட்ட தலைமை பொறுப்பில் வைத்தது ஏன்? உங்களை ஆதரித்தால் அவர் தவ்ஹீத்வாதி. உங்கள் தலைவரை எதிர்த்தால் தவ்ஹீத் விரோதியா? என்று உங்கள் தலைவரை கேட்க துப்பில்லாத நீங்கள் நபிவழி நடக்கிறோம் என்று சொல்லுவது நகைப்பிற்குரியது. நபிகளின் பொன்மொழிகள் லட்சக்கணக்கானது இருக்க எதைச் செய்தால் சமுதாயத்தில் குழப்பமும், பிளவும் ஏற்படுமோ அந்தக் காரியத்தைத்தான் செய்ய முயல்கிறீர்கள். ஒற்றுமை ஒளி கொடுத்த நபிகளின் பெயரையே குழப்பித்திற்கு பயன்படுத்தி குற்றவாளி ஆகிறீர்கள்.

இஸ்மாயில் நாஜியைப் பற்றி:

ஈதுகா ஆக்கிரமிப்பு என்றவுடன் ஒட்டுமொத்த சிதம்பரம் ஜமாஅத்தாரர்களும், இளைஞர்களும் ஒன்றிணைந்து காவல்நிலையம் சென்றார்கள். ஒரு பள்ளியின் நிர்வாகி என்ற முறையில் இஸ்மாயில் நாஜியும் சென்றார். பொய் செய்திகளை வெளியிடுவதில் மஞ்சள் பத்திரிக்கை அளவுக்கு வந்ததால் சிதம்பரம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கையில் ஈதுகா பிரச்சனைக்கு முழுக்க முழுக்க இஸ்மாயில் நாஜியே காரணம் என்ற ரீதியில் எழுதியிருக்கிறார்கள்.

இதற்கு முன்பும் அதே பத்திரிக்கையில் இஸ்மாயில் நாஜியைப் பற்றி கோழை என்றும் போலீஸ் என்றாலே தொடை நடுங்கி என்றும் போலீஸ் பிடித்துக்கொள்வார்கள் என்று பயந்து வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டார் என்றும் பொதுமக்களின் பிரச்சினைக்கு ஒத்துழைப்பு தராதவர் என்றும் எழுதினார்கள். இன்று அதற்கு நேர் மாற்றமாக அவரை காவல்துறை அதிகாரிகளையும், ரவுடிகளையும் சரிகட்டும் அளவிற்கு பெரிய ஆளாக சித்தரித்துள்ளார்கள். அன்று எழுதியதும் பொய்தான், இன்று எழுதியதும் பொய்தான். அன்றைய ஈதுகா பிரச்சினையின் போது வேறு ஒரு பிரச்சினையினால் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை. மாறாக இரண்டு துணை ஆய்வாளர்கள்தான் விசாரித்தார்கள். ஆனால் உணர்வு பத்திரிக்கை இன்ஸ்பெக்டரை சரிகட்டும் விதத்தில் சரிகட்டியதாகவும், ரவுடிகளுக்கும் ஜமாஅத் தலைவர்களுக்கும் ஏற்ப சாவிகொடுத்த பொம்மைபோல் இன்ஸ்பெக்டர் நடந்து கொண்டார் என்றும் காவல் நிலையத்திற்கே வராத இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுதியிருக்கிறார்கள்.

மறுநாள் நடைபெற்றது ஆர்.டி,ஓ. என்று எழுதியுள்ளார்கள். இப்படி ஆத்திரம் கண்ணை மறைக்க உண்மை எதுவென தெரியாதவர்கள் பொய் சொல்வதில் கைதேர்ந்த இஸ்மாயில் நாஜி கும்பல் டவுன் காஜியின் பேரில் பொய் சொல்லி அதிகாரியை நம்ப வைத்ததாக எழுதியுள்ளார்கள். ஆனால், உண்மையில் முதல் நாள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் முதல் கையெழுத்தே டவுன் காஜி கையெழுத்துதான். வட்டாட்சியர் விசாரணையின் போது வயது முதிர்வு காரணமாக காஜி அவர்கள் வராமல் அவர்கள் சார்பாக காஜியின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் வந்திருந்தார். வராத இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், நடக்காத ஆர்.டி.ஓ. விசாரணை நடந்ததாகவும், காஜியின் ஒப்புதல் நடைபெற்ற புகாரை காஜியின் ஒப்புதல் இன்றி நடைபெற்றதாகவும் எழுத்துப் பூர்வமாக பொய் சொல்லும் இவர்கள்தான் நாஜியை பொய்யர் என்கிறார்கள்.

பாம்புக்கு வாலையம், மீனுக்கு தலையையும் காட்டி நடிப்பதில் கைதேர்ந்தவரான இவரைப் பற்றி வண்டி வண்டியாக எழுதும் அளவுக்கு வண்டவாளங்கள் உள்ளன. நீடூரிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை நடந்த கதைகளை எழுதினால் நாறிப்போகும், அவற்றை இப்போதைக்கு நாம் எழுத விரும்பவில்லை என்று இஸ்மாயில் நாஜியைப் பற்றி உணர்வு பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்.

சுன்னத்துல்வல் ஜமாஅத்தினரும், தவ்ஹித் வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் மனிதர் இஸ்மாயில் நாஜி என்று முஸ்லீம் பேரவைக்கு தலைவராக முன்மொழிந்தவரின் கரங்கள்தான் இன்று இப்படி எழுதியள்ளது.

இஸ்மாயில் நாஜிக்கும் நீடுருக்கும் 37 ஆண்டுகளாக தொடர்பு இருக்கிறது இன்றும் நீடுர் செல்கிறார், பள்ளிவாசலில் பேசுகிறார், மதராஸவிற்கு செல்கிறார், முக்கிய திருமணங்களில் கலந்து கொள்கிறார், சிதம்பரத்தில் 22 ஆண்டுககளாக வசித்து வருகிறார். சிதம்பரத்தில் நடக்கும் அனைத்து சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பது சிதம்பரத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் தெரியும். இஸ்மாயில் நாஜி டிராவல்ஸ் தொழிலை விட்டு 13 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இப்பொழுது என்ன தொழில் செய்கிறார் என்று கூட தெரியமல் டிராவல்ஸ் தொழில் செய்யும் மௌலவி இஸ்மாயில் நாஜி என்று எழுதியிருப்பவர்கள் தான் அவரைப் பற்றி வண்டிவண்டியாக எழுதும் அளவுக்கு வண்டவாளங்கள் உள்ளன என்று எழுதியிருக்கிறார்கள்.

அப்படித்தான் இஸ்மாயில் நாஜியைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்? உங்கள் தலைவரை அறிமுகப்படுத்திய அபுஅப்துல்லாவைப் பற்றி சொல்லாததா? த.மு.மு.க. தலைவர்களைப் பற்றி சொல்லாததா? ஷம்ஷுதீன் காஸிமைப் பற்றி சொல்லாததா? த.த.ஜ. வின் கடலூர் மாவட்ட முன்னாள் தலைவரைப்பற்றி சொல்லாததா? எல்லாவற்றிக்கும்மேலாக உங்கள் தலைவரின் வளர்ச்சிக்கு முழு பாடுபடுகின்ற பொதுச் செயலாளர் மார்க்கம் பயில வந்த மாற்று மத சகோதரியிடம் விபச்சாரம் செய்தார் என்று பகீரங்கமாக சொன்னாரே! இதைவிட மோசமான வண்டவாளத்தையா சொல்லப்போகிறீர்கள்? தன்னை ஆதரிப்போர்கள் எல்லாம் தவ்ஹீத் வாதி என்றும் தன்னை வெறுப்போர்கள் எல்லாம் தவ்ஹீத் விரோதி என்றும் அவர் குறிப்பிடுவதும், அவரது ரசிக கூட்டமான நீங்கள் அவர் கூறுவது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நபிவழியா என்று ஆராயமல் அவருக்கு ஜே போட்டு பின்னால் செல்வதுதானே உங்கள் வழக்கம்.

உங்கள் தலைவரின் பேச்சால் கவரப்பட்டு அவரைப் பாராட்டிக் கொண்டிருந்த பல பெரியேர்கள் உங்கள் தலைவரின் இரட்டை வேடத்தைப் புரிந்து மனம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்க எத்தகைய அவதூறையும் சொல்லலாம் என்பது உங்கள் தலைவர் காட்டும் நபிவழி.

ஆனால், எங்களின் இறையச்சம் உள்ள இமாம்மார்கள் எங்கள் ஆசிரிய பெருந்தகைகள் எங்களுக்கு காட்டிய நபிவழி என்னவென்றால் அவதூறு அல்ல, உண்மையான பாவமான காரியத்தை செய்திருந்தாலும் ஒரு முஸ்லீமை அவமானப்படுத்துவது அல்லாஹ்வுக்கு விருப்பமானதல்ல என்பதுதான். இல்லாவிடின் பெரம்பூர் கிராமத்தில் சிறிய அளவில் மளிகை கடை வைத்துக்கொண்டு தொடை தெரிய வேட்டியை மடித்துக் கொண்டு ரோட்டில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவர் எப்படியெல்லாம் யார், யார் தோள் மேல் ஏறி சவாரி செய்துகொண்டு ஏற்றிவிட்ட ஏணிகளை எல்லாம் எட்டி உதைத்துவிட்டு இன்று எந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதையும் அவருடைய திருவிளையாடலைப் பற்றி அவருடைய முன்னாள், இன்னாள் சஹாக்கள் சொன்னதாக இணைய தளங்களில் உலாவருகின்ற அருவெறுப்பான செய்திகளையெல்லாம்; சிதம்பரம் நகர வாசிகள் முன்னால் வைக்க முடியும்.

வேலைக்காரியிடம் வீரியத்தைக் காட்டியவர் என்று புகைப்படத்துடன் தமிழ்முரசு பத்திரிக்கையில் வந்தவர்தான் அவரின் செயலாளரில் ஒருவர் என்பதையும், மாற்றான் மனைவியை அபகரித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட இரு நபர்கள்தான் அவருடைய கொள்கை பிரச்சாரகர்கள் என்பதையும் த.த.ஜ தின் முன்னாள் தலைவரைப் பற்றி ஊர்மக்கள் கொடுத்த புகாரைப் பற்றியும் எழுத்துபூர்வமாக வந்த நோட்டீஸ்களை மக்கள் முன்னால் வைக்க முடியும். ஆனால் உங்கள் தலைவரைப்போன்று தரந்தாழ்ந்திட இஸ்மாயில் நாஜி தயாராக இல்லை.

நிச்சயமாக அல்லாஹ் அவரை அம்பலப்படுத்தும்போது மக்கள், உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக.

இவண்,

இஸ்மாயில் நாஜி

பின்குறிப்பு:

நான், என்னை என எழுத வேண்டிய இடங்களில் இஸ்மாயில் நாஜி என்று எழுதியுள்ளேன். காரணம் அவருக்கு நேரடியாக எந்த தொல்லையும் தராத என்னைப்பற்றி ஏற்கனவே ஒருமுறை உணர்வு பத்திரிக்கையிலும், இட ஒதுக்கீடு பற்றி விண் டிவியில் நடந்த கலந்துரையாடலிலும், சிதம்பரம் ஈத்கா பிரச்சனையிலும் இஸ்மாயில் நாஜி என்றப் பெயரை இழுத்துள்ளார். அவருக்கு இஸ்மாயில் நாஜி என்ற பெயர் பிடித்திருப்தால் எல்லா இடத்திலும் இஸ்மாயில் நாஜி என்றே எழுதியுள்ளேன்.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: