தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

திசெம்பர் 31, 2007

பொய்யர்களின் கூடாரம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:48 முப

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் குறைந்த இடங்களே கிடைத்துள்ளதை அறிந்து கொண்ட தமுமுக உடனடியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்கிறது. அதன் அடிப்படையில் சில மாற்றங்களை ரோஸ்டர் முறையில் செய்ய வேண்டும் என்ற விபரங்களை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கிறது.

அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் அடுத்தடுத்து வர ஏற்பாடுகளை செய்து வருகிறது தமுமுக.

இதை எப்படியோ அறிந்து கொண்ட தறுதலைகள் ஜமாத் தலைவர் வேண்டுமென்றே ஒரு ஸ்டண்ட் அடித்துள்ளார்.

கலக்கல் கேள்விகளுக்கு கலக்கலாக பதில் சொல்லக்கூடியவருக்கு இது கூடவா தெரியாது. தன்னை பின்பற்றக்கூடியவர்களுக்கு ‘அறியாமை’ எனும் ஷாக் ட்ரீட்டெண்ட்டை கொடுத்துப் பார்த்தார். இதில் அவரின் அடிவருடிகள் யாரும் ஒரு இன்ச் கூட பின்வாங்க வில்லை என்பதையும் எவரும் எதிர் கேள்விகள் கேட்க வில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு, அந்த ஆட்டு மந்தை கூட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த ஸ்ட்ண்ட் அடிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முழுமுதற் காரணம், தமுமுக நடத்திய ‘நன்றி அறிவிப்பு மாநாடு’ தான். அது பெரும் எரிச்சலை அவருக்கு உண்டாக்கியுள்ளது. இந்த நன்றி அறிவிப்பு மாநாடு, பிஜே சொல்லி வரும் ‘இடஒதுக்கீடு கும்பமேளா’வால் கிடைத்தது என்ற பொய்க்கு சாவு மணி. தமுமுகவின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் அல்லாஹ்வின் உதவியும் தான் ‘இட ஒதுக்கீடு’ கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும், தமுமுகவின் சமுதாய சேவைகளுக்கு கலைஞர் தந்த அங்கீகாரம் அவர் தனது சொந்தப் பொறுப்பில் தந்த இரண்டு ஆம்புலன்ஸ்களாகும். இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டால் தனது பலம் குன்றியதாக உணர்ந்த பிஜே தனக்குத் தானே தெம்பு ஏற்றிக் கொள்வதற்காக உலகில் உள்ள அறிவாளிகள் மற்றும் இந்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் கண்டு, ‘கொள்’ளென்று சிரித்து ஏளனம் பேசிக்கூடிய அளவுக்கு நடந்த நாடகம் தான் பிஜேயின் 28.12.2007ல் நடத்திய தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து விட்டது என்று பிஜே சொன்னால், ஆமாம்! ஆமாம்!! என்று சொல்வதற்கு ஒரு எருமை மாட்டுக் கூட்டத்தை தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த முறை முஸ்லிம்கள் குறைந்த அளவில் அரசுப்பணிகளில் சேர்க்கப்பட்டிருப்பது போல் தோன்றுவது, பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் ரோஸ்டர் முறையினால் தான் என்பதை விளக்கினாலும் அதை அவர் ஏற்றுக் கொண்டாலும் அவர் எடுத்துள்ள ‘மிஷன்’ முடியும் வரை விட்டுக் கொடுக்க மாட்டார், அதற்காகவே அவர் ‘விருந்துக்கு அழைத்து உணவு பரிமாறப்படுவதை’ உதாரணம் காட்டி நாவு சொட்டச் சொட்ட பேசி, ரோஸ்டர் முறையை மறுக்கிறார்.

யார் யார் இந்த முறை விருந்துக்கு வர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தித்தாளில் விளம்பரம் செய்து அழைத்துவிட்ட பிறகு, அழையா விருந்தாளியாக பிஜே சென்றால் அவர் விருந்தினராக ஆகமாட்டார், விருந்தும் கிடைக்காது. அவர் அடுத்த முறை அழைக்கப்பட்டால் தான் அவர் செல்ல வேண்டும். பொருந்தாத உதாரணத்தை சொல்லி யார் வலியவர்? யார் எளியவர்? என்று பிரித்துப் பார்க்கிறார்.

யார் வலியவர் யார் எளியர் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பிறகு தான் அந்த பட்டியலில் எளியர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். எளியர்கள் பட்டடியலில் பிஜே வலியவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.

தமுமுக மார்ச் 7 ல் வரலாற்று சிறப்பு மிக்க பேரணியயை டில்லியில் நடத்தியது என்றால் இடஒதுக்கீடு தமிழகத்தில் தானே வேண்டும் டில்லிக்கு சென்று ஏன் தமுமுக பேரணி நடத்த வேண்டும்? என்று பிஜே கேட்டால் அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் காட்டுக் கத்து கத்திக் கொண்டு தலையை ஆட்டுகிறது.

மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக வாக்களித்துள்ளது, குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் இப்படிப்பட்ட இடஒதுக்கீடு தருவோம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி தமுமுக டில்லியில், பிஜே சிறிதும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பேரணியை நடத்தியது.

மத்திய அரசு பணி இடங்களில் தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு தேவை என்று தமுமுக நடத்திய 2004 தஞ்சை பேரணியில் தீர்மானம் ஏற்றப்பட்டது. அதனை நினைவு படுத்தி வேகப்படுத்துவதற்காகத் தான் தமுமுக டில்லியில் பேரணி நடத்தியது. 2004ல் போயஸ் தோட்டத்து பெட்டிகளுக்கு அடிமையாகிப் போய் சமுதாயத்தை கூறுபோட்டு ஓடிப்போன இவருக்கு மத்திய அரசுக்கு நினைவூட்ட வேண்டுமென்று எப்படி நினைவிருக்கும்?

தனது அடிவருடிகளை திருப்திப்படுத்துவதற்காக, ‘டில்லிக்குச் சென்று ஏன் பேரணி நடத்த வேண்டும்?’ என்ற முட்டாள்தனமான கேள்வியை கேட்டு வைத்துள்ளார். அவரது முட்டாள் குஞ்சுகளும் இதே கேள்வியை கூவிக் கொண்டு திரிகிறார்கள். இப்படித்தான் தனது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நாளை துக்க நாளாக அனுஷ்டித்த பிஜே, தனது அடிவருடிகளை தேற்றும் விதத்தில் பல நாடகங்களை நடத்தினார். அந்த வெட்கங்கெட்ட ஈனத்தனமான அவரது செயல்களை நாம் மறக்க தயாராக இல்லை. அந்த தருணத்தில் அவரது வெப்சைட்டுகளெல்லாம் முகாரி ராகம் பாடிக் கொண்டிருந்தன. பல நாட்களுக்குப் பிறகு தான் அவரது மௌனம் கலைந்தது. 3.5 சதவிகதம் முஸ்லிம்களுக்கு போதாது, இருந்தாலும் பரவாயில்லை என்று அறிக்கை வெளிவந்தது.

இவரது அறிக்கைகள் வெளிவருதற்கு முன்பே அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் அவரது மௌனத்தை ஒப்புதலாக எடுத்துக் கொண்டு, இடஒதுக்கீடு தந்த தமிழக அரசை திட்டித் தீர்த்தனர். கலைஞர் முஸ்லிம்களை ஏமாற்றி விட்டார் என்று கூவிவரத் துவங்கினார்கள். பிஜேயின் அறிக்கைக்கு பிறகு அடங்கினார்கள். உண்மை என்னவாக இருந்தாலும் பிஜே சொல்வது மட்டும் தான் அவர்களுக்கு வேத வாக்கு. இன்று ஒன்று சொல்வார், அதற்கு நேர்முரணாக நாளை ஒன்று சொல்வார். முதலில் சொல்லியதற்காக கூவிக் கொண்டு கொடி பிடித்த கூட்டம் மறுநாள் அதனை மாற்றிக் கொள்வதற்கு எவ்வித கூச்சமும் படாது. பச்சோந்திகளுக்கு போட்டியாளர்கள் இவர்கள் தான். அறிவாளிகள் விளங்கிக் கொள்வதற்கு ரதிமீனா பஸ் சம்பவம் ஒன்றே போதும்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அம்மையாரின் வீட்டிலிருந்து பிஜேயின் வீட்டுக்கு பெட்டிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதால் ஜெயலலிதாவை ஆதரித்து மண்ணைக் கவ்விய பிஜே, என்னுடைய மீசையில் மண்ஒட்டவில்லை பார்த்தீர்களா? என்று வீர வசனம் பேசிக் கொண்டு, ‘பார்த்தீர்களா! தான் ஜெயலலிதாவிற்கு ஆதரவு அளித்ததால் கருணாநிதி தேர்தலில் முழு பலத்துடன் அரசு அமைக்க இயலவில்லை’ என்று கூறினார். ஆளும் கட்சியாக இருந்த ஜெயலலிதாவை எதிர்கட்சி நிலைக்கு கொண்டு வந்தது தான் உண்மை.

தேர்தல் மேடைகளில் கருணாநிதியை விட மோடி சிறந்தவர் என்றும் கருணாநிதியை அவன் இவன் என்று சிங்கிளில் அழைத்தும் பேசினார்.

இட ஒதுக்கீடு தந்த பின்பு கருணாநிதியை வெட்கமில்லாமல் சந்தித்து நன்றி சொன்னதோடு எதிர்வரும் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை எழுத்து மூலமாகவும் தந்து காலில் விழாத குறையாக திரும்பி வந்தார். இதற்காக வேண்டி அவரது பாலிசியை தளர்த்திக் கொண்டாராம். ஒரு புடலங்காயும் இல்லை, இதுவெல்லாம் இவர் அடிக்கும் ஸ்டண்ட், இறுதியில் பெட்டி விசுவாசத்திற்காக ஜெயலலிதாவே சரணம். விசிலடிச்சான் ததஜ குஞ்சுகளுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக சில பல நேரங்களில் ஜெயலலிதாவை எதிhப்பது போல் நடித்தும் கொள்வார், ஒப்பந்தப்படி இவற்றையெல்லாம் ஜெயலலிதா கண்டு கொள்ள மாட்டார்.

அது சரி, பிறகு ஏன் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும்? ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஏன் பாலிசியை தளர்த்திக் கொள்ள வேண்டும்? நன்றாகவே தெரிகிறது ஜெயலலிதா சுத்த ஃபிராடு, இடஒதுக்கீடு தருவதாகவும் பிஜேபியுடன் கூட்டு வைக்க மாட்டேன் என்றும் கூறி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அந்த இரண்டையுமே மீறியவர். அப்படிப்பட்டவர் எப்படி இடஒதுக்கீடு தருவார்? ஆணையம் போட்டு விட்டார் என்பதற்காக சென்று பார்த்தோம், அதுவும் பாலிசியை தளர்த்திக் கொண்டு சென்று பார்த்தோம் என்று பிஜே சொல்வது சுத்தப் பொய். ஜெயலலிதா ஆணையத்தை புதிதாக ஒன்றும் போட வில்லை, ஏற்கனவே இருந்த ஆணையம் காலாவதியானதால் அதனை புதுப்பித்தார். அது தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிப்பு செய்த பிறகு அதனை புதுப்பித்தார், அது இன்றளவிலும் சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது. விண்டிவியை விட்டுக் கொடுத்ததற்காக சில கோடிகளும், கும்பமேளாவை நடத்துவதற்காக சில கோடிகளும், தேர்தல் பணியாற்றுவதற்காக சில கோடிகளும், தமிழகத்து முஸ்லிம்களை ஜெயலலிதாவிடம் அடகு வைத்ததற்காக சில கோடிகளும் பிஜேயின் பாக்கெட்டுக்கு வந்து விட்டதால், திருடனைக் கொட்டிய தேள் போல படு உஷாராக நடந்து கொண்டார். பணப்பட்டுவாடா நடந்த விபரங்களை அரசு அதிகாரிகளே ஒத்துக் கொள்கிறார்கள்.

எதிர்வரும் காலங்களில் அவரது பாலிசியை தளர்த்திக் கொண்டு தேர்தலில் நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கு, ‘தமுமுக சரியில்லை, அதனால் தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்’ என்று காரணம் கூறினால் போதும், அவரது குஞ்சுகள் வேகமாக தலையை ஆட்டுவார்கள்.

இதில் தமாசு என்னவென்றால் கருணாநிதியின் மகள் கனிமொழி மூலமாக கலைஞருக்கு எழுதிய கடித்தினால் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்ற புரூடாவை சேர்த்தே கட்டவிழ்த்து விட்டது தான்.

இதன் பிறகு தான் ததஜவினரின் கவிழ்ந்த தலை நிமிரத் துவங்கியது.

இப்பொழுதெல்லாம் ஜெயலலிதாவின் வீட்டுத் தோட்டத்திலிருந்து பிஜேயின் வீடு வரை ஒரு நிரந்தர பணப் பைப் போடப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் 28.12.2007 ல் நடைபெற்ற கண்டனப் பேரணியும் அதில் கருணாநிதிக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தை மறு பரிசீனை செய்யப் போவதாக அறிவித்த அறிவிப்பும் என்று மக்கள் பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.

முஸ்லிம்களை அடகு வைத்து கோடி கோடியாக பெட்டி வாங்கிய ஒரே அயோக்கியர் முஸ்லிம் சமுதாயத்தில் பிஜே ஒருவராகத் தான் இருக்க முடியும். ‘எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது’ என்ற இவரது தத்துவத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தவர் இவர் ஒருவர் தான்.

அரசியல் அயோக்கியர்கள் எல்லாம் இவரிடத்தில் அரசியல் பாடம் படித்துக் கொள்ள வேண்டும், இந்த லட்சணத்தில் ‘நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல’ என்ற அடைமொழி வேறு. அவர் எந்த நிலையில் இருகிறார் என்பதை இது போன்ற வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதுண்டு இவர். ‘எங்கப்பன் குதுருக்குள் இல்லை’ என்ற பழமொழி இவர் விஷயத்தில் நன்றாகவே பொருந்துகிறது பாருங்கள்.

இவரது கண்டனப் பேருரையின் ஆரம்பத்தில் கருணாநிதி முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் அதற்கு ஆதாரமாக இருப்பது தனது கைகளில் உள்ள பேப்பர் கட்டிங்குகள் என்றும் கூறியவர், இறுதியில் ரோஸ்டர் முறையை பற்றி பேசுகிறார். கருணாநிதியின் துரோகத்தைப் பற்றி பேசினால் ரோஸ்டர் முறையை பற்றி பேசியிருக்கக் கூடாது. ரோஸ்டர் முறையை பற்றி பேசினால் கருணாநிதியின் துரோகத்தை பற்றி பேசியிருக்கக் கூடாது ஏனென்றால் இரண்டும் அவரது பார்வையில் எதிர்மறையான விஷயங்கள். எதிரெதிரான இரண்டையும் பற்றி பேசிவிட்டு திணாவட்டில் திரிகிறவர் தான் இவர். நம்மைப் பொருத்த வரை முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமைகளை எந்த விதத்திலும் பறிக்காத தமிழக அரசை கண்டித்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தால் எந்த பாதிப்பும் அரசுக்கு ஏற்படப் போவதில்லை, வரும் காலங்களில் இது போன்ற அர்த்தமற்ற போராட்டங்களால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட இவர் காரணமாக அமைந்து விடுவாரோ என்ற அச்சமும் எம்முள் இருக்கிறது. போராட்டம் என்பது விளையாட்டுக் காரியமா?

நாம் அறிந்த வரை தமிழகத்தில் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் இதே ரோஸ்டர் முறைதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கையை பொருத்து இப்பொழுது கிடைத்தவர்களுக்கு அடுத்த முறை கிடைக்காது, அடுத்த முறை கிடைத்தவர்களுக்கு அதற்கு அடுத்த முறை கிடைக்காது.

தமுமுக கொண்டுவர நினைக்கும் ரோஸ்டர் மாற்றத்தால் இரண்டு சமூகங்களுக்கு கிடைத்த பணியாளர் நியமனங்களை ஒத்துப் பார்ப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர, அந்த மாற்றத்திற்கு பிறகும் இரு சமூகங்களுக்கும் கூடுதல் குறைவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

பிஜேயின் கண்டனப் பேருரையில் கர்ப்பிணிப் பெண்கள் கூட கால் கடுக்க கும்பமேளாவி;ல் நடந்து வந்ததை குறிப்பிட்டார். அடப்பாவிகளா! முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு அளவே இல்லையா? ஒரு காலத்தில் இஸ்லாத்தை தூய முறையில் மக்களுக்கு எடுத்து வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நம்பி அவர் சொல்வது எல்லாம் சத்தியம் என்று நம்பிக் கொண்டு அவர் பின்னால் செல்லக்கூடியவர்களை வைத்து அரசியல் வியாபாரமே நடத்துகிறார். அவரின் பின்ணணியை இதற்குப் பிறகுமா விளங்கிக் கொள்ள முடியவில்லை.

பிஜேக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் சேர்த்து விலை பேசப்பட்டு ஜெயலலிதாவிடம் என்றைக்கோ விற்றுவிட்டார். அதற்காகத்தான் பத்து லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று காதில் பூ வைத்த மக்களிடமும் காதில் பூ வைக்க முடியாத ஜெயலலிதாவிடம் ஒரு லட்சம் என்றும் கூறினார்.

மொதத்தில் பிஜேயின் ஒவ்வொரு அசைவையும் அளந்து சரியாக புரிந்து கொள்ளும் மக்களின் உதவியை ஒவ்வொருவரும் நாடுவது எல்லோருக்கும் பயன் தரும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையையும் பொய்யையும் பிரித்து அறியும் சக்தியை தருவானாக.

வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 31.12.2007

திசெம்பர் 26, 2007

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய அதிகாரம்!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:11 பிப

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய அதிகாரம்!
வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

தமிழ்நாட்டில் ஏராளமான அளவில் வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்களிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிட பல தடைக்கற்கள் இருந்தன. குறிப்பாக இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வக்ஃபு வாரியம் புகார் அளிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை வலியுறுத்த வேண்டும் என எண்ணற்ற தடைகளைத் தாண்டிய பிறகே வக்ஃபு சொத்துக்களை மீட்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் தேவையற்ற கால தாமதம் நிலவி வந்தது. பல நேரங்களில் அதிகாரிகளும் ஒத்துழைக்க மறுத்த சூழ்நிலைகளும் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள வக்ஃபு நிலங்களை மீட்க பதவியேற்ற நாள்முதல் அயராது செயலாற்றி வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் ‘மேற்கண்ட பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ்நாடு வக்ஃபு வாரியச் செயலாளருக்கு அதிகாரம் பெறுவதே’ என்ற முடிவுக்கு வந்தார். இதைத் தொடர்ந்து வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலரை உடைமை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என 2.4.7.2007 அன்று நடைபெற்ற வக்ஃபு வாரியக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்த நிகழ்வுகளின்போது வலியுறுத்தியும் வந்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வர், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட ஆவன செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:

”தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சட்டம்
1975 பிரிவு
2 (ங்)ன்படி ‘பொதுச் சொத்து’ என்பது அரசுக்குச் சொந்தமான அல்லது (அரசால்) குத்தகைக்கு எடுக்கப்பட்ட அல்லது (அரசால்) உடைமை கைப்பற்றப்பட்ட அல்லது அரசின் சார்பான சொத்து ஆகும். இச்சட்டத்தின் உட்பிரிவு (2)ன்படி எந்தவொரு சட்டத்தின்படியும் உருவாக் கப்பட்ட வாரியம் அல்லது உள்ளாட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அல்லது உரிமை அளிக்கப்பட்ட சொத்துக்களும் பொதுச் சொத்து என்பதில் உள்ளடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் ஏராளமானோர் முறைகேடான வகையில் வக்ஃபு நிறுவனங்களுக்கு எவ்வித வாடகையும் செலுத்தாமல் குடியிருந்து வருவதைக் கண்டறிந்த தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் ஜனாப் செ. ஹைதர் அலி, வக்ஃபுச் சொத்துக்களில் உள்ள முறைகேடான குடியிருப்புக்களை அகற்றிட தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலருக்கும் இச்சட்டத்தின்படியான அதிகாரத்தை வழங்கி தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சட்டம்
1975 பிரிவு
3ன்படி தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரை உடைமை அதிகாரி
(Estate Officer) ஆக நியமனம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என தனது
12.6.2007 நாளிட்ட கடிதத்தில் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார். வாரியத் தலைவரின் கோரிக்கையைத் தமிழ்நாடு வக்ஃபு வாரியமும் தனது
24.7.2007 நாளிட்ட தீர்மானத்தில் வலியுறுத்தியது.

வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, அரசாணை (நிலை) எண்.
107 பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள்
20.12.2007ன்படி தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலரை தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் அதிகாரி ஆக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் முறைகேடாக குடியிருப்போரைச் சட்டத்தின் பிரிவு 4ன்படி நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்யவும், பிரிவு
5ன்படி சொத்திலிருந்து வெளியேற்றவும் உடைமை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு
8 ன்படி எந்தவொரு நபருக்கும் அழைப்பாணை அனுப்பவும், விசாரணையில் ஆஜராவதை உறுதி செய்யவும், ஆவணங்களைக் கண்டு பிடித்துத் தாக்கல் செய்யவும் குறிப்பிட்ட இதர விஷயங்களில் இச்சட்டத்தின் நோக்கத்திற்காக உடைமை அதிகாரிக்கு
1908ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் வழக்கை விசாரிக்கும்போது உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபுச் சொத்துக்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல், வாடகை எதுவும் கொடுக்காமல் அனுபவித்து வரும் முறைகேடான குடியிருப்பாளர்களை அகற்றும் வகையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது”.

திசெம்பர் 24, 2007

எச்சரிக்கை!

Filed under: அஹ்லே சைத்தான், எச்சரிக்கை — முஸ்லிம் @ 8:15 முப
எச்சரிக்கை!

“அஹ்லே சைத்தான்” என்ற விசகிருமி ஊருக்குள் ஊடுருவி உள்ளது!நமது உயிருனும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இஜிவு படுத்தும் விதமாக, பாங்கு மற்றும் இகாமத் கூறும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் கூறக்கூடாது என்றும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் அத்தகியாதில் இருப்பதால் அந்த அத்தகியாதே ஓத கூடாது என்றும், தொழுகையில் அல்ஹம்து சூராவை தவிர வேறு எதையும் ஓதக்கூடாது என்றும், ஹதிஸ் எதனையும் பின்பற்றவேண்டியதில்லை, எல்லா ஹதிசும் கட்டுகதைகள் என்றும் கூறிவருகிறார்கள். கடைசியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபியே அல்ல என்றும் கூறுகிறார்கள் .மேலும், வட்டி வாங்கலாம், தாடி வைக்கவேண்டியதில்லை, வரதட்சனை வாங்கலாம், ஆண்களுக்கு பவுன் ஹராம் இல்லை, என்று பைத்தியம் பிடித்து பிதற்றுகிறார்கள். அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த விசகிருமிகளை இனம்கண்டு, இறைவனிடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு, ஜாக் மர்கஸ்,

தோப்புத்துறை

திசெம்பர் 13, 2007

என்னதான் நடக்கிறது மலேசியாவில்…?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:21 பிப

என்னதான் நடக்கிறது மலேசியாவில்…?
திரு. வீரபாண்டியன் (சன் டி.வி அரசியல் விமர்சகர்)
சிங்கப்பூர் வானொலி முன்னாள் தயாரிப்பாளர்)

இந்தியாவைப் போலவே மலேஷியாவும் பிரிட்டிஷ் காலனி நாடாயிருந்தது. பின்னர் 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலாயாவுக்கு (மலேஷியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, ஆங்கிலேயர்கள் ஒரு முக்கிய மான நிபந்தனையை விதித்தனர். ‘உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி மக்களுக்கும் பூர்வீக மலாய் மக்களைப் போல குடியுரிமை வழங்க வேண்டும்’ என்பது தான் அந்த நிபந்தனை. மலாயாவின் அன்றைய தேசியத் தலைவர்கள் இதனை மனமுவந்து ஒப்புக் கொண்டனர். அதன்படி சுதந்திரத்துக்கு முன்னர் யார், யாரெல்லாம் மலாயாவில் வாழ்ந்து வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் இனப் பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரிட்டீஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் தொழிலா ளர்கள் ஏராளமான உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும், மேம்பாடு களையும் அடைந்து மேன்மையோடு வாழத் தலைப்பட்டனர். அந்த நாட்டின் பூர்வீகத் தாய்மொழியான மலாய் மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறவியிலேயே மொழி வல்லமை மிக்குடையவர்களான தமிழர்கள் மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்து பூர்வீகக் குடிகளோடு இரண்டறக் கலந்தனர். பள்ளிகளில் சீனமொழியும், தமிழும் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப் பட்டது. சிறுபான்மைச் சமுதாயமான மலாய் அல்லாதார் தங்கள் மொழியை ஒரு பாடமாகப் பயில அனுமதிக்கப் பட்டனர். தமிழ் வானொலியும், தொலைக் காட்சியும் இருபத்து நான்கு மணிநேரமும் இன்னிசை முழங்கி இன்பத்தில் ஆழ்த்துகின்றன. திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் கொடிகட்டிப் பறக் கின்றன. தமிழ்நாட்டுக் கலைஞர்களும், பேச்சாளர்களும் அடிக்கடி அங்கே சென்று பைந்தமிழ் முழங்கிப் பரவசப் படுத்தி விருந்துண்டு வெற்றியோடு திரும்புகின்றனர்.

இந்தியத் தமிழர்கள் ஏராளமானோர் இப்போது மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாவும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அந்த நாட்டின் மிகச் சிறந்த கல்விமான்களில் பலர் தமிழர்கள் என்பது உலகறிந்து உண்மை. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வார்த்தையில் சொல்வதாயிருந்தால் ‘தாய் நாட்டுத் தமிழனை விட மலேஷியத் தமிழன் மகிழ்ச்சியாயிருக்கிறான்’. அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 3. தமிழ் வார இதழ்கள் ஆறும், மாத இதழ்கள் ஏழும் வெளிவருகின்றன. மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 14க்கும் மேற்பட்ட திரையரங்கு களில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படு கின்றன. நாடு முழுவதும் ஏறத்தாழ 30 அரங்குகளில் தமிழ்ப்படங்கள் வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மலேஷியத் தமிழர்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் மலேஷிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா) இதன் புகழ் பூத்த தலைவராயிருக்கும் டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அந்த நாட்டின் கேபினட் மந்திரியாயிருக்கிறார். இவரோடு திரு. பழனிவேலு போன்ற மேலும் மூன்று பேர் துணை அமைச்சர்களாயிருக்கின்றனர். இவர்களை அல்லாமல் 3 பேர் நாடாளு மன்ற உறுப்பினர்களாகயிருக்கின்றனர். சிற்றூர்களிலும், நகராட்சிகளிலும் பல முக்கியமான பொறுப்புகளைத் தமிழர்கள் வகிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த நாட்டின் தலைமை நீதிபதியாகவே ‘அஜித் சிங்’ என்னும் இந்தியர் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் பலர் நீதிபதிகளாக இப்போதும் பணியாற்றுகின்றனர். நாடாளுமன்ற செயலர்களாக (parliment secreatary) நம்மவர்கள் பலர் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்.

1965ஆம் ஆண்டு வரை ஒரு மாநில மாயிருந்த சிங்கப்பூர், தனி நாடாகப் பிரிந்து சென்றது. அது முதல் உலக வரைபடத்தில் சிங்கப்பூர் குபேரபுரியாகக் கோலோச்சத் தொடங்கியதைக் கூறத் தேவையில்லை. சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகார மொழியாக அங்கீகரிக்கப் பட்டது. நாணயத்தில் தமிழ் பொறிக்கப் பட்டது. சீனர்களுக்கு மட்டுமல்ல: எல்லா இன மக்களுக்கும் பொதுவான நாடு’ என்று சிங்கப்பூர் பிரதமர் சொல்லி மகிழ்ந்தார். ஆனால், மலேசியா தனது மலாய் மொழியையே ஆட்சி மொழி யாக்கி அழகு பார்த்தது. அந்த மொழியைக் கற்றவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கும், அரசுப் பதவிகளுக்கும் வர முடியும் என்ற நிலை வந்தது.

மலேஷியாவின், மண்ணின் மைந்தர் கள் (பூமி புத்ரா) எனப் பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்கள்,
1. பரம்பரை, பரம்பரையாக மலேஷியா வில் வாழ்வோராயிருக்க வேண்டும்.
2. மலாய் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களா யிருக்க வேண்டும்.
இந்த விதிகளுக்குள் வருவோர் மட்டுமே, ‘பூமி புத்ரா’ என அழைக்கப் படுவர். இந்த விதிகளை வகுத்ததோடு மட்டுமின்றி, மலேஷிய அரசாங்கம், தங்களுடைய நாட்டை ஓர் இஸ்லாமிய நாடு எனப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்ட பூர்வமான மத வழிப்பட்ட இஸ்லாமிய நாட்டில் அரசாங்கத்தின் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளதுதான்.

நிலைமை இவ்வாறிருந்தும், பூர்வீகக் குடிமக்களான மலாய் மக்கள் மத்தியில் மன நிறைவு இல்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமூக மக்கள் பெரும் பாலும் கடற்கரை ஓரங்களில் மீன்பிடித் தொழிலைச் செய்து படிப்பும், முன்னேற்ற முமில்லாமல் வாழ்ந்ததுதான். இயற்கையி லேயே ஊக்கம் மிகுந்த சமூகமான சீனர்களும் இந்தியர்களும் வர்த்தகத் திலும், வேலை வாய்ப்பிலும் மிக முன்னணிக்கு வரத் தொடங்கினர். பொதுத் தேர்தல்களில் நகர்ப் புறங்களில் சீனர்களே வெற்றி பெற்றனர். இவற்றைக் கண்ட மலாய் சமூகத்தினரை தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட் கொண்டது. கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வேண்டுமெனப் போராடினர்.

1969 ஆம் ஆண்டு மே 13 அன்று மலேசியாவில் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மை மலாய் மக்களுக்கும், சீனர்களுக்கும் ரத்தவெறி கொண்ட யுத்தம் நடந்தது. தெரு வெல்லாம் பிணங்கள் விழுந்தன. இறுதியில் அரசாங்கம் மலாய் மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 30 விழுக்காடு இட ஒதுக் கீட்டைச் செய்தது. 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் எட்டு விழுக்காட்டினராயிருக்கும் இந்தியர் களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் ஒதுக்கியது மலேசிய அரசு. கலவரம் நடந்த அந்த நாளை இன்று வரை மலேசிய வரலாற்றில் ‘கறுப்பு நாள்’ என்று அழைக்கின்றனர்.

போராட்ட உணர்ச்சியோடு போர்க் கோலம் பூண்ட பூர்வீகக் குடிமக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்த மலேசிய அரசு, இந்திய சீன சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் வழங்கித்தானிருக்கிறது. இலங்கையைப் போலவோ, ஏனைய உலக நாடுகளில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவோ ‘இன ஒதுக்கல்’ எதுவும் அங்கே நடைபெறவில்லை. திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற நமது தமிழர்கள் இன்று வரை இங்கே வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். சம்பாதிக்கிற செல்வத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் தான் சொத்துகளை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர், கடைய நல்லூர், தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமிழ் மண்ணுக்கு ஏராளமான வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றனர். அந்த நாட்டில் சம்பாதிப்பதை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்கிற எந்த நிபந்தனையும் மலேசிய அரசு விதிப்பதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதுதான் மலேஷியாவின் பூர்வ கதை. இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனி நாம் சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

மலேஷியாவின் பிரதானமான தொழிலாய் இருந்த ரப்பர் தோட்டங்கள் லாபகரமாய் இல்லாததால், அவை இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. பல தனியார் தோட்டங்கள் அரசுடைமையாக்கப் படுகின்றன. அவ்வாறு அரசுடைமையாக் கப்படும்போது அங்கே குடியிருப்பு வசதிகளை அரசே செய்து கொடுக்கிறது. அந்த இடத்தில் இருந்த கோவில்களோ, பள்ளிவாசல்களோ அகற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. புதிய குடியிருப்புகளில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியது. பத்து கோவில்கள் இருந்த இடத்தில் ஒரே ஒரு கோவிலுக்கு இடம் கொடுப்பதாக அரசு சொல்கிறது.

உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. ‘செந்தூர் முருகன்’ கோவிலும், ‘பத்துமலை முருகன் கோவிலு’ம் தைப்பூசவிழா கொண்டாடி மகிழ்கின்றன. நாடெங்கும் ஏராளமான சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களும் பரந்து காணப்படுகின்றன. 59 சதவீத மலாய் முஸ்லிம்கள் இருக்கும் நாட்டில் 4,000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் 8 சதவீத இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோவில்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்பது உன்னதமான வரலாறு அல்லவா? (அரசாங்கமே நிதியுதவி கொடுத்துக் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்தி பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை நாமே பார்த்து ரசித்திருக்கிறோம். இதற்கிடையில் அரசாங்கத்தின் பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டப்படும் கோவில்களை அரசு அப்புறப்படுத்தத் தானே செய்யும்? அவ்வாறு அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களும் பள்ளிவாசல் களும் ஆயிரக்கணக்கில் அப்புறப் படுத்தப்பட்டதைக் கடந்த காலம் கண்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அங்கே வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள், இதுநாள் வரை இதைப் பிரச்சினை ஆக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் கணினி விற்பன்னர் களாகவும், உயர் தொழில் நுட்பக்காரர் களாகவும் அங்கே சென்ற இந்தியர் சிலர் ‘இந்துக் கோவில்களுக்கு ஆபத்து’ என்கிற விஷ விதையை ஊன்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது இந்தக் கருத்தின் உள்நோக்கம் புரியாத பூர்வீகத் தமிழர்களும் இதற்குப் பலிகடா ஆகியிருப்பதுதான் பரிதாபமான செய்தி. மலேஷிய பல்கலைக் கழகத்தில் இந்தியப் பிரிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே ‘தமிழ் கலை, இலக்கியத்திற்கே இதுகாறும் முக்கியத்துவம் தரப்பட்டு மேம்பாடு காணப்பட்டது. அங்கே அண்மைக் காலத்தில் ‘பாரதீயப் பண்பாட்டு விழா’ என்கிற விழாவை ஏற்படுத்தி அதில் இந்துத்துவச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தத் தொடங்கினர். ‘பாரதீயம்’ என்கிற வார்த்தை எத்தகைய பூர்வீகம் கொண்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டில் இப்படிப் பட்ட ஓர் விழாவை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டிலிருந்து இந்துத்துவச் சிந்தனையாளர்கள் சிலரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் போயிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து போனவர்கள் ‘சமஸ்கிருத ஸ்லோகம்’ பஜனைஆன்மீகப் பயிற்சி என்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ்.பாணியில் விழாவை நடத்தியிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியா விலிருந்து தமிழர்கள் சிலரைக் கலாச்சாரப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லித் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கே அவர்கள் நடத்திய வகுப்புகளில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டுக்கெதிரான ஆரியத்தின் கூரிய ஆயுதங்கள் என்பதைக் கண்டு கொண்ட மலேஷியத் தமிழர்கள் வகுப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மலேஷியா திரும்பி விட்டனர். (பெயர்களைச் சொல்வது நல்லதல்ல என்பதால் விடுகிறோம்)

இந்தியர்கள் நலனுக்காகப் போராடுவதாகக் கிளம்பியிருக்கும் இவர்கள் தங்கள் அமைப்புக்கு வைத்திருக்கும் பேர் என்ன தெரியுமா? ‘ஹிண்ட்ராஃப்’ என்பதுதான். (இந்து மக்கள் உரிமை படை) அதாவது, ‘மொழிவழி மக்களான தமிழர்களுக்கான போராட்டமெனில் ‘தமிழர் கோரிக்கைக் குழு’ எனப் பெயர் சூட்டியிருக்கலாம் அல்லது ‘இந்தியர் நலம் நாடும் சங்கம்’ எனச் சொல்லியிருக்கலாம். இடையில் ‘ஹிந்து உரிமை’, எங்கிருந்து வந்தது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இந்து மதத்தின் பெயரால் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால் ஓர் தேசிய அரசு அதை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்? துபாய் போன்ற அரபு நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்பு ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா என்பதை எண்ணிப்பாருங்கள், தென் கிழக்கு ஆசியாவிலேயே மதத்தின் பேரால் ஆளும், மிகச் சிறந்த ஜனநாயக நாடு என மலேஷியா பேர் பெற்றிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது பிரிட்டிஷ் தூதரகத்திடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துப் போராடு கின்றனர். தங்கள் மூதாதையர்களைத் தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் உழைப்புக் கூலிகளாக அழைத்து வந்து பிரிட்ஷ் அரசு ஏமாற்றிவிட்டது என்றும், அதற்காக ஒரு தமிழருக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மலேஷியாவை விட்டுப்போய் அரை நூற்றாண்டாகிவிட்டது. இப்போது இப்படியொரு வினோதமான கோரிக்கை: உலக நாடுகள் இதைப் பார்த்து எள்ளி நகையாடாதா? இந்தக் கோரிக்கையோடு இங்கிலாந்து தூதரகத்திற்கு ஊர்வலம் புறப்பட்ட போதுதான் மலேஷியக் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. கலவரம் வெடித்தது. முன் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஓர் அரசு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்? கடந்த தீபாவளிக்கு முதல் நாள் (2007 அக்டோபர்), அத்துமீறிக் கட்டப்பட்ட ஒரு கோவில் ஒரு பள்ளிவாசல் முப்பத்திரண்டு வீடுகளை அரசு அப்புறப்படுத்தியது. இதுகுறித்தும் ‘ஹின்ட்ராஃப்’ அமைப்பு ஆத்திரப்படுகிறது.

அன்னிய மண்ணில் வாழப் போன வர்கள் அந்த அரசின் சட்ட திட்டங்க ளுக்கு உட்பட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். அத்துமீறினால் அல்லல்தான். இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்யும் கொடுமையைப் போன்றதல்ல மலேஷிய நிலை. இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டமும், போர்ப்பாட்டும் தொடரு மானால் எதிர்காலத்தில் இந்தியர்கள் யாருக்கும் அங்கே விசாவோ குடியுரிமையோ கிடைக்காமல் போகலாம். இது கொள்ளிக்கட்டையால் தலையில் எடுத்துச் சொறிந்து கொள்ளும் முயற்சி.

நன்றி: ஜனசக்தி நாளிதழ்

திசெம்பர் 6, 2007

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்

Filed under: தமுமுக, பாபரி மஸ்ஜித், முகவை — முஸ்லிம் @ 10:40 முப

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

இன்று தமிழகமெங்கும் முஸ்லிம்களால் பர்பரி மஸ்ஜித் மீட்பு நாள் அனுசரிக்கப்பட்டது. சங்பரிவார தீவஜரவாதிகளால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டுமு் கட்டித்தர கோரியும் முஸ்லிம்களின் உரிமைகளை கோரியும் தமிழகமெங்கும் முஸ்லிம்கள் த.மு.மு.க வினரோடு போரட்டங்களில் ஈடுபட்டார்கள்.

மாவட்ட தலைவர் சலிமுல்லா கான்

முகவையிலும் பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட தலைவர் திரு. சலிமுல்லா கான் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டடெங்கும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் கோசமிட்டனர்.

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

முகவை மூன்றாக பிரிக்கப்பட்டு அம்மாவட்டத்தில் மூன்று இடங்களில் த.மு.மு.க வினர் போராட்டங்களை இதே தினத்தில் நடத்தினாலும் மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

பதாகை தாங்கி கோசமிடும் முஸ்லிம் ஒருவர்

நூற்றுக் கணக்கான வாகனங்களில் வந்திருந்த முஸ்லிம்கள் த.மு.மு.க வினர் முகவை மாவட்ட நீதிமன்றமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஒரு பகுதி

சித்தார்கோட்டையில் நடைபெற்ற கொலையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டுமெனவும் பாபரி மஸ்ஜிதை மீளக் கட்டித்தர வேண்டும் எனவும், குஜராததில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு காரனமான மோடி அரசை கலைத்து அவனை கைது செய்ய வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் மற்றொரு பகுதி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.