தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 13, 2008

சொந்தமாக எதையும் செய்ய இயலாத ததஜ

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:14 முப

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
..

நர மாமிச வேட்டைக்காரன் நரேந்திர மோடி, தமிழகத்தின் நச்சுப்பாம்பு, பத்திரிக்கை பயங்கரவாதி சோ.ராமசாமியால் அழைப்பு விடுக்கப்பட்டு ஜன-14 இல் சென்னை வர இருக்கிறான்.

முஸ்லிம் இன படுகொலை நாயகன் மோடியை தனது உற்ற தோழனாக எடுத்துக் கொண்டு, 2002 இல் குஜராத் வரை தனி விமானத்தில் சென்று பாசிசவாதி மோடிக்கு மகுடம் சூட்டிய பாசத்திற்குரிய பாப்பாத்தி ஜெயலலிதா, இந்த மோடியை அதே ஜன-14 இல் விருந்துண்ண அழைத்திருக்கிறார்.

இந்த செய்திகள் வெளியானவுடன் தமிழக முஸ்லிம்கள் தங்களின் மாநில இஸ்லாமிய தலைவர்களின் நிலைபாடு என்னவென எதிர்பார்த்தபடி நின்றனர்.

தமிழக முஸ்லிம்களின் நாடித்துடிப்பை தனது இருதய துடிப்பாக கொண்டுள்ள தமிழக முஸ்லிம்களின் பேராதரவு பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம், உடனடியாக நவீன நீரோ மோடி எதிர்ப்புக்கான வழிவகைகளை கட்டமைக்கத் தொடங்கியது.

உண்மையில் மோடி ஒரு முஸ்லிம் விரோதி மட்டுமல்ல, மாறாக ஒட்டு மொத்த மனித குலத்தின் எதிரி என்பதனை பறைசாற்றும் முகமாக, தலித், கிருத்துவ, இஸ்லாமிய மற்றும் திராவிட இயக்கத்தின் தலைவர்களை அழைத்து, அனைவரையும் ஒரே மேடையில், ஒரே குடையின் (பாசிச எதிர்ப்பு முன்னணி) கீழ் திரள வைத்து, இந்த A.F.F இன் மூலமாக மோடிக்கு எதிர்ப்பு காட்டும் முகமாக, நிகழ்ச்சி நடைபெற உள்ள காமராஜர் அரங்கை ஜன-14 அன்று முற்றுகை இடுவோம் என முழக்கமிட வைத்தது.

இந்த முற்றுகை முழக்கம், பாசிச மோடி, பார்ப்பன சோ மற்றும் ஜெயலலிதாவை மட்டுமல்ல மாறாக இஸ்லாமிய சமூகத்தின் கோடாரி காம்பு, தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவையும் கூட மிரள வைத்து விட்டது.

பத்திரிக்கை பயங்கரவாதி சோ, மனித குல விரோதி மோடியை அழைத்த போதும், அதே மோடியை பாப்பாத்தி ஜெயலலிதா விருந்துக்கு அழைத்த போதும் அமைதியாக கிடந்த தறுதலை குரூப், தமுமுகவின் மின்னல் வேக செயல்பாடுகளைக் கண்டு மிரண்டு போனது.

இனியும் சும்மா இருந்தால், தான் அம்மாவிடம் பெற்ற கையூட்டு அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதாலும், இருக்கும் கொஞ்ச நெஞ்ச ரசிகர்களை தக்க வைக்க வேண்டுமென்ற நிர்பந்தத்தாலும், எதாவது செய்யவில்லையானால் நிச்சயமாக தான் சமூகத்தவரால் ஓரம்கட்டப்பட்டு விடுவோம் என்ற அச்ச உணர்வின் காரணமாக சாவகாசமாக ஜனவரி 9 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

ஜன 14 அன்று தமுமுக, மற்றும் பல சமூக நீதி ஆர்வலர்களுடன் இணைந்து மோடி கலந்து கொள்ள உள்ள அரங்கையே முற்றுகையிட அழைப்பு விடுத்துள்ளதால், தான் ஏதாவது செய்ய வேண்டும், அதுவும் உடனே செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் மோடி வருகையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

நமது கேள்வியெல்லாம், மோடியை எதிர்க்க வேண்டுமென்றாலும் கூட தமுமுக முன்முயற்சி எடுத்தால் தான் செய்ய வேண்டுமா? மோடி எதிர்ப்பு, நாடகமாக நடத்தப்பட்டதா அல்லது உண்மையாகவே நடத்தப்பட்டதா?

உண்மையான உணர்வுள்ள போராட்டம் எனில், ஆர்ப்பாட்டத்திற்கு தறுதலை ஜமாஅத் தலைவன் பிஜே தலைமை தாங்காதது ஏன்? தங்க தலைவியிடம் பெற்ற பெட்டி இடை மறித்ததோ? நவரச நடிகன் நந்தினி நாயகன் பாக்கர் தலைமையில் நிகழ்த்தப்பட்ட உரையில், தாங்கள் ஜெயலலிதா ஆட்சியின் போது கூட ஜெயாவை எதிர்த்தே கூட போராட்டம் நடத்தியதாக சொன்னாரே. அப்படியானால் ஜெயலலிதாவின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி தலைவன் பிஜே தலை கவிழ்ந்து நின்ற சமயத்தில், ‘அம்மா! உங்களின் ஆட்சியில் தான் நாங்கள் நிம்மதியாக சுவாசித்தோம்’ என்று புளகாங்கிதமடைந்து சொன்னது புளுகுமூட்டையிலுள்ள சரக்கா.

நந்தினிக்காக பிரிந்து நந்தினிக்காக சேர்ந்த இந்த நவரச நடிகர்கள் இன்னும் எத்தனை நாள் தான் இந்த சமுதாயத்தை ஏமாற்ற காத்திருக்கிறார்களோ.. .. ..
அதற்கு முன்பாக இறைவன், இந்த அபூஷைத்தான்களிடமிருந்து முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர்

உள்குத்து:

நமது இந்த பதிவை பார்த்துவிட்டு ததஜ தற்சமயம் அதிமுக கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்ற நியாயமான கேள்வியை நண்பர் ஒருவர் எம்மிடம் கேட்டார்.

இதே சந்தேகம் எமக்கும் உண்டு என்றாலும் இதனைக்குறித்து பேசப்போனால் நாங்கள் தேர்தல் உடன்பாடு மட்டும் தான் வைத்துக்
கொண்டோம் என்று பிஜே சப்பைக்கட்டு கட்டுவார் என்று எண்ணியதால் தான் இந்த கேள்வியை நாம் எழுப்பவில்லை என்றாலும் கருணாநிதியை எதிர்ப்பதற்கு களத்திற்கு நேரடியாக வரும் பிஜே ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு மட்டும் தனது பினாமிகளை ஏவுவது ஏன்? என்ற கேள்வியை குறித்து சிந்திக்கும் போது நண்பர் குறிப்பிட்டது போல் இன்னமும் அதிமுக கூட்டணியில் தான் ததஜ நீடிக்கிறதா அல்லது ஜெயலலிதாவை கைகழுவி விட்டாரா என்று விளக்கம் அளிக்க வேண்டியது ததஜவினரின் பொறுப்பு.

கோனிக்கா பஷீரைப் போல வாங்கிய காசுக்கு விசுவாசமாக இன்னமும் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்லப் போகிறாரா? அல்லது சமுதாய நிர்பந்தத்திற்காக பணம் பட்டுவாடா நடக்கும் போயஸ் கார்டனை பகைத்துக் கொள்ளப் போகிறாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: