தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 31, 2008

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி

Filed under: கீழக்கரை, தினகரன், மாணவி, முதல் — முஸ்லிம் @ 7:52 பிப


கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் யு.கே.ஜியில் முதலிடம் பெற்ற பாத்திமா ரீஸ்மாவுக்கு ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இவரது தந்தை ஹமீது யாசின் துபாய் ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் இவர் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

ஹமீது யாசின் தந்தை கீழக்கரை தினகரன் செய்தியாளராவார்.

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா


Dear Brother
Assallamu Allaikum Wa Rahmathullahi wa Barakathuhu

Please find in the attachment the scanned copy of the
Invitation for the AIMAN WOMEN COLLEGE’S
5th Annual Convocation to be held on 3rd April 2008.

Kindly forward this message to all.

Kindly include in your Duaas for the successful
completion of all the events scheduled between
3 rd and 5th April 2008.

In case if you are unable to attend, please make Duaas for its success.

Regards
Seyed JAAFAR
Secretary
AIMAN EDUCATION AND WELFARE SOCIETY

My contact number in India: (91) 94860 14192
In UAE : (971 50) 49 29 184

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

Filed under: இலக்கியம், இஸ்லாம், திருச்சி, மாநாடு — முஸ்லிம் @ 4:26 பிப

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.

சிறப்பு நிகழ்வுகள்

கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு

தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Theme
of the Conference ) இருக்கும்.

1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட
முஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்
பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,
விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்

பேராளர் :

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமே
பேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,
வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து
தரப்படும்.

பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை

கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்து
அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

மாநாட்டுச் சிறப்பு மலர் :

சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.

விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்

மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ

ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000

மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரக் குழு

அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்

வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )

செயல்திட்டங்கள்

1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ‘இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை’யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக ‘இஸ்லாமிய ஆய்வு இருக்கை’யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.

3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி ‘மாயின்
அபூபக்கர்’ பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.

5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.

8. இவ்வாண்டும் ‘அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை’ சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.

9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

நூல் வெளியீடு

மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் அன்பளிப்பு

பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அரிய நூல் பதிப்பு

இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

சிறப்பு நெறியாளர்கள்

பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்

நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா – 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்

அமீரக ஒருங்கிணைப்பாளர்

முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433

விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :

எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067

மாநாட்டுப் புரவலர்கள்

1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )

Islamic Summer Classes for Boys and Girls

Filed under: www.darulsafa.com — முஸ்லிம் @ 7:36 முப

இது பெண்களுக்கான கோடைக்கால வகுப்பின் தகவல் – நாகர்கோவில்
இது ஆண்களுக்கான கோடைக்கால வகுப்பின் தகவல் – குளச்சல்.

உங்களது பிள்ளைகளை இந்த கோடைக்காலத்தில் பயனுள்ள மார்க்க
கல்வியை பயில இந்த அரிய குறுகிய கால வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
www.darulsafa.com

மார்ச் 30, 2008

துபாய் ஈமான் அமைப்பு நிகழ்ச்சியில் மௌலவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத்


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.

சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி

தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888

http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
http://www.muduvaihidayath.blogspot.com
http://www.indianmuslimassociation.blogspot.com

மார்ச் 29, 2008

இந்து பாசிசத்தின் உளவியல் – டாக்டர்.ருத்ரன்

Filed under: ஃபாசிசம், இந்து, பாசிசம் — முஸ்லிம் @ 2:53 பிப
தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

“”உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்”, என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

“எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி’ என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. “தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்’ என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் “இதுவே நியாயம்’ என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். “வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்’ என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், “அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை’ என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை “வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்’ அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு “கோணலான கல்வி’ தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

“திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி’யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. “மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை’ என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், “தர்மம்’ என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் “தான் உயர்ந்தவன்’ எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு “தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்’ என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், “பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு’ என்பதற்குப் பதிலாக, “யுத்த தர்மம்’ என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

“எதிரிகள் மனிதர்களேயல்ல’ என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. “தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்’, என்பதை மறந்து, “தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் “ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே’ என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் “கொலைவெறி’யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு “தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி’ எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் “கூட்டத்துக்குத் தலைவன்’ கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது “ராஜநீதி’ என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; “ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே’ எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான “குயுக்தி’. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். “தன்னலக் குறிக்கோள்’ மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், “வெறியாடும் வாய்ப்பி’லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு “தன் வீடு, தன் இடம்’ எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் “தன் இடம்’ என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, “யுத்தம்’ எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் “கொல்லப்படுமுன் கொல்’ எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, “கூட்டம்’ ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். “தண்டனையைத் தவிர்ப்பதே!’ அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் “வீரர்களின் சேனை’யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் “போர்’ என்றும், அரசு பலத்தை “வீரமெ’ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் “தொற்று நோய்’ போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

· ருத்ரன்,

மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

மார்ச் 28, 2008

நபிகள் நாயகமும் அன்புத்தோழர்களும் (VIDEO)

Filed under: alavudeen bakavi, அலாவுதீன் பாக்கவி, வீடியோ, video — முஸ்லிம் @ 9:07 பிப

“நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும்”

அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள..

Al-Sheikh. Alavudeen Bakavi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

மார்ச் 27, 2008

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

Filed under: இஸ்லாம், தமிழ், துபாய், பஹ்ரைன் — முஸ்லிம் @ 9:30 பிப

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

பஹ்ரைன் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் சார்பில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி 29.03.2008 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை முஹர்ரக் அல் இஸ்லாஹ் சொசைட்டியில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறார்.

மேலதிக விபரங்களுக்கு 3 9 0 3 2 2 2 3 மற்றும் 3 9 0 7 3 4 6 4
ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பொய்ச்செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு 3 மாத சிறை

Filed under: தினமலர், பொய்ச்செய்தி — முஸ்லிம் @ 7:22 பிப
தமிழ் முஸ்லிம் பதிவுகள் – புதிய திரட்டி

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி

செய்தி : முதுவை ஹிதாயத்

மார்ச் 26, 2008

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!

Filed under: மனநோயாளி — முஸ்லிம் @ 9:23 பிப
மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!

மூஸா முபாரக் அலி, சென்னை-1

கேள்வி: களவாடப்பட்ட பத்திரி கையில் கேட்கப்பட்ட கேள்விகளுக் கெல்லாம் தமுமுகவினர் பதில் அüக்க இயலவில்லை என்று ஒருவர் சொன்னதுடன், தனிப்பட்ட முறையில் தமுமுக தலைமையைப் பொதுக்கூட்டத்திலும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனை அவர்கள் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒüபரப்பியுள்ளார்கள். தமுமுக ஏன் இன்னும் இதற்கு பதில் அüக்காமல் மவுனம் சாதிக்கிறது.?

பதில்: பொதுக்கூட்டத்தில் மட்டும் அல்ல, தொலைக்காட்சியிலும் பகற் கொள்ளை அடிக்கப்பட்ட பத்திரிகை யிலும் தாதா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவர் தமுமுக மீது அவதூறுகளை சுமத்தித் தமுமுகவிற்கு நன்மை சேர்த்து வருகிறார். அவரது பேச்சையும் எழுத்தை யும் இப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மன நோயாüயின் முனகலாகவே அதனைப் பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள்.

3 மாதத்தில் தமுமுகவை அழித்துக் காட்டுவேன் என்று சபதம் செய்தவருக்கு இன்று தமுமுக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கüலும், அனைத்து ஊர்க üலும், அனைத்து தரப்பினர் நெஞ்சங் கüலும் நீக்கமற நிறைந்து விட்டதைப் பார்த்துப் பொறுக்க இயலாமல் ஒரு மனநோயாளி போல் உளறிக் கொட்டு கிறார். பொதுமக்கüடம் வசூல் செய்யப் பட்ட பணம், தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் திரட்டப் பட்ட பணம் இறைவன் கூறுவது போல் (திருக்குர்ஆன் 49:12) சொந்த சகோதரர் கüன் மாமிசத்தை உண்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனிடம் வெகுமதி பெறும் நோக்கில் இந்தப் பேச்சு வியாபாரிக்கு நன்கொடை அüக்கும் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், நன்மைக்குப் பதில் பாவச் சுமையை துôக்குவதற்கு உங்கள் பணம் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தமுமுக நாம் குறிப்பிட்டது போல் அனைத்துத் தரப்பு மக்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டது. மக்கள் பல வகையில் தங்கள் பாதுகாப்பு பேரியக்கமான தமுமுகவிற்கு தங்கள் அன்பைக் காட்டி வருகின்றார்கள். பெரும் தொழில் அதிபர்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை தமுமுகவிற்குத் தங்கள் அன்பை, ஆதரவை நல்கி வருகின்றார்கள்.

நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்து உரைத்து அதனை நாம் எவ்வித பிரதி உபகாரமுமின்றி நிறை வேற்றி வருகிறோம். நமது சமுதாயத் தைச் சேர்ந்த பல அரசு ஊழியர்கüன் நியாயமான பிரச்சனையையும் எவ்வித பிரதி உபகாரமுமின்றி தீர்த்துவைத்து வருகிறோம். இவற்றில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. மனநோயாளி குறிப்பிட்டதுபோல் பரங்கிப்பேட்டையிலும் எந்தவொரு ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு தலைசிறந்த மருத்துவர் இந்தச் சமுதாயம் பயன்பெறுவதற்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தனது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிறார்.

தமுமுக தலைவர் 22 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற ஒரு கல்வியாளர். அதாவது அந்த மனநோயாü பேச்சாளரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாத்தியார். ஆம் கண்ணியமான தொழில் என்று போற்றப் படுகின்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் வாத்தியார் தொழில் செய்து வருபவர். ஏன் இந்த மனநோயாü கூட ஒருகாலத்தில் வாத்தியாராக இருந்தவர் தான்.. தமுமுக தலைவர் கடலுôர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகüல் பங்குகொள்ளச் சென்றபோது தனது பள்üக்கூடம், ஆசிரியர் பயிற்சிப் பள்ü, செவிலியர் பள்ü போன்றவற்றைப் பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய டாக்டர் அழைப்பு விடுத்தார். ஒரு கல்வியாளர் என்ற முறையில் தனது கல்வி நிலையங் களைப் பார்வையிடவும், ஆலோசனை களைப் பெறவும் ஆஸ்திரேலிய டாக்டர் தமுமுக தலைவரை அழைத்திருந்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா விடம் இந்த அழைப்பை ஏற்கலாமா என்று ஆலோசனைக் கேட்டு அவர் ஒப்புதல் அüத்த பிறகுதான் தமுமுக தலைவர் அங்கு சென்றார். தமுமுக தலைவர் ரகசியமாக அங்கு செல்ல வில்லை. அவருடன் கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். பூட்டிய அறையில் மன நோயாü பிரமுகர் உளறி வருவதுபோல் எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் தலைவர் யூனுஸ் உட்பட தமுமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பேசினார்கள் விருந்து சாப்பிட்டார்கள். இதனைக் குற்றம் என்று சொல்பவரை மனநோயாü என்றுதானே சொல்ல வேண்டும்.

வக்ஃப் நிலம் எதுவும் தாரை வார்க்கப் படவில்லை என்பதை வக்ஃப் ஆவணங் களே பதில் சொல்லும். பரங்கிப்பேட்டை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் தமுமுக தலைவர் அழைக்கப்பட்டுச் சென்று வருகிறார். மனநோயாü பிரமுகர் வசதிக்காக அதனை இங்கே பட்டியலிடுகிறோம்.

கடந்த இரண்டு மாத இடைவெüயில் சென்னை புதுக்கல்லுôரி நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமுமுக தலைவரை அழைத்தார்கள். தமுமுக தலைவர் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஆசிரியர் சங்கம் தனியாகத் தங்கள் சங்க மாடத்திற்கு அழைத்து தமுமுக தலைவருடன் நமது கல்லுôரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினார்கள். அவருக்கு விருந்தும் அüத்தார்கள். குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1981 முதல் இயங்கி வரும் முஸ்லிம் கலைக் கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரை அழைத்து, கல்லுôரி வளாகத்தில் அமைந்துள்ள பள்üவாசலில் ஜும்ஆ உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் பிறகு தமுமுக தலைவருக்கும் குமரி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் விருந்தும் அüத்தார்கள். இதன் பிறகு இக்கல்லுôரி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ள பி.எட். கல்லுôரியை தமுமுக தலைவர் தொடங்கி வைத்தார். திருவிதாங் கோடு இஸ்லாமிய மாதிரிப் பள்ü நிர்வாகிகள் தங்கள் பள்üக்கு தமுமுக தலைவரை அழைத்துச் சென்று தங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வைத்து ஆலோசனைகளைப் பெற்றனர். பிறகு அப்பள்üக்கூடத்தின் ஆண்டு விழா வில் தமுமுக தலைவர் உரையாற்றினார்.

சேலத்திற்கு சமீபத்தில் தமுமுக தலைவர் சென்றிருந்த போது கே.வி. ஹாஜியார், தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார், சேலத்தில் இயங்கும் தாருல்சலாம் பள்ü நிர்வாகி கள் தமுமுக தலைவரைத் தங்கள் பள்üக்கூடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளைப் பெற்றார்கள். மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லுôரி நிர்வாகமும் தமுமுக தலைவரை சீரத்துன் நபி சிறப்புரை ஆற்ற அழைத்தது. அப்போது அந்த கல்லுôரி நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான பொறி யியல் கல்லுôரி நிர்வாகிகள் தமுமுக தலைவரிடம் கல்வி தொடர்பான பல ஆலோசனைகளைச் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லுôரி தமுமுக தலைவரை அழைத்து வட்டியில்லா வங்கி குறித்து வணிகவியல் துறை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் கல்லுôரியை சுற்றிக்காட்டிப் பல ஆலோசனைகளை அக்கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டது. தேநீர் விருந்து அüத்தார்கள். இதுமட்டுமின்றி அதே டிசம்பர் மாதம் வேலுôரில் உள்ள புகழ்பெற்ற ஆக்சிலியம் கல்லுôரியில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற நாடு தழுவிய கருத்தரங்கத்தில் இஸ்லாமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர் உரையாற்றினார். வேலுôர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர். அக்கல்லுôரியிலும் தேநீர் விருந்து தமுமுக நிர்வாகிகளுக்கு அüக்கப் பட்டது. விரைவில் இன்ஷாஅல்லாஹ் சென்னை பல்கலைக்கழகத்தில் வட்டி யில்லா வங்கிகள் குறித்த தனது ஆய்விற் காக டாக்டர் பட்டம் பெறவுள்ள தமுமுக தலைவர் தன்னை வாத்தியார் என்று அழைத்துக் கொள்வதைச் சிறப்புக்குரிய தகுதியாகவே கருதுகிறார். எம்.பி.ஏ. படித்தவர்கள் வணிக நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது இயல்பாக இருந்த காலக்கட்டத்தில் தானே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில் இந்த வாத்தியார் தொழில் என்பதை அறிந்தவர் கள் புரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார் கள். அந்தத் தொழிலை இளக்காரமாக விமர்சிப்பது அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் பொறாமையையும் வஞ்சக உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

விருந்துக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்பது தான் நபிவழி. யூதர்கள் அழைத்த விருந்திலும் நபிகள் நாயகம் (ஸல்) பங்குகொண்டார்கள். இதனைக் கொச்சைப்படுத்திப் பேசும் இவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளா?

ஈரோட்டில் நமது சமுதாயத்தவர்கள் நடத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகார வர்க்கம் தேவையில்லாத தொல்லைகளை அüத்து வந்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரும் ஒரு உயர் அதிகாரியின் தலைமையில் இப்பிரச்ச னையை ஆய்வுசெய்து நமது மக்கüன் நலன் பாதுகாக்கப்பட வழிவகைச் செய்தார். எவ்வித பிரதி உபகாரமுமின்றி நாம் செய்த இந்த உதவியைக் குற்றம் என்று பேசுபவர் மனநோயாüயாகத் தானே இருக்க இயலும்.

இன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயற்பாடுகள் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஈலிகவர்னன்ஸ் என்று சொல்லப்படும் மின் நிர்வாக முறை தமுமுக பொதுச் செயலாளர் தலைமை யில் வக்ஃப் வாரியத்தில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் நிலத்தின் ஒரு அடி கூட சட்டத்திற்கு புறம்பாகப் பயன்பட அனுமதிக்கப்படவில்லை. முந்தைய காலங்களைவிட தற்போது வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஜமாஅத் நிர்வாகிகளே சான்று வழங்குவார்கள். கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளை யெல்லாம் சரிப்படுத்த ஓர் ஆண்டு காலம் பிடித்துள்ளது. இனி மேலும் சிறப்பாக வக்ப் வாரியம் இயங்க உள்ளது. இவ்வாறு வக்ப் நிர்வாகத்தில் சிறந்த முறையில் செல்வதைப் பார்த்து மனம்போன போக்கில் பேசினால் அதனைப் பைத்தியக் காரனின் முனகல் என்று தான் குறிப்பிட முடியும்.

தமுமுகவின் சமுதாயப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளை அüத்தது போல் நமது சமுதாயப் பிரமுகர்களும் கார்களையும், ஏன் விமானங்களையும் கூடத் தமுமுகவிற்கு இன்ஷாஅல்லாஹ் வழங்குவார்கள். இதனைக் குற்றம் என்று பேசுபவரை மனநோயாளி என்றுதானே குறிப்பிட வேண்டும். தமுமுக பொதுச் செயலாளர் செய்துவரும் தொழிலையும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த மன நோயாளி. ஆனால் தமுமுக பொதுச் செயலாளர் ஹலாலான வியாபாரத்தை செய்துவருகிறார். ஆனால் மனநோயாளி யோ, தான் மார்க்கத்தைக் காட்டி பிழைப்பு நடத்தவில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியுமா?

ஊர்தோறும் இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறோம் என்ற சாக்கில், தான் எழுதிய புத்தகங்களை குர்ஆன் தமிழாக்கத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் இலவசமாகத் தருகிறேன் என நிகழ்ச்சி நடத்துபவர் களிடமும் வெளிநாட்டில் உள்ளவர் களிடமும் கட்டாய வசூல் செய்து பணம் சம்பாதிப்பது இதில் வேதனையானது என்னவெனில் பாதி புத்தகங்களை வினியோகித்துவிட்டு, மீதியை மீண்டும் கடைசரக்கு ஆக்குவது, தான் நடத்தும் அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல் எல்லாவகை யான அச்சு வேலைகளையும் தனது மனைவியின் தம்பியிடம் மட்டுமே தந்து மைத்துனர்களுக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தொலைக்காட்சியில் முதலீடு செய் வதற்காக மக்கள் பணத்தைத் திரட்டி, போட்ட முதலை விட மும்மடங்கு அதிகத் தொகையை வெற்றி தொலைக் காட்சியின் அதிபர் தெய்வ முதல்வனை மிரட்டி உருட்டி வாங்கிக்கொண்டு முதலீடு செய்த ரசிகர் கூட்டத்திற்கு அற்பசொற்பத்தைக் கொடுத்து ஏமாற்றிய நூதன ஏமாற்றுக் காரர்களின் சிதம்பர ரகசியம் இன்னும் பல உண்டு.

இந்த அளவிற்கு அந்த அப்நார்மல் மனிதனின் உளறல்களுக்கு பதிலலிக்க பக்கத்தை வீணாக்கியதற்காக வருந்து கிறோம். எனவே அந்த அப்நார்மல் மனிதர் நம்மை ஏசினால், நாம் மக்கள் உள்ளத்தில் அதிகமாக இடம்பிடித்து விட்டோம் என்று பொருள். அதேசமயம் அவர் மவுனமாக இருந்துவிட்டாலோ நாம் பலவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தம்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.