தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 3, 2008

வேலுர் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதிக்காவிட்டால் போராட்டம் TMMK எச்சரிக்கை!!

Filed under: கோட்டை பள்ளி, வேலூர், TMMK kovai — முஸ்லிம் @ 9:29 பிப
வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாச­ல் தொழுகை நடத்த அனுமதிக்காவிட்டால் போராட்டம்! தமுமுக எச்சரிக்கை!!

வேலூர் கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாசல்

தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகதத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் இன்று வேலுரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

சமீபத்தில் செங்கல்பட்டில் தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாச­ல் தொழுகை நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

வேலூரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கோட்டைக்குள் அமைந்துள்ள பள்ளிவாசல் 1750ல் நிர்மாணிக்கப்பட்டதாகும். பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் தற்போது இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது. தற்போது இந்தப் பள்ளிவாச­ல் தொழுகைக்கு அனுமதிப்பதில்லை. பள்ளிவாச­ன் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை பள்ளிவாச­ல் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக முஸ்­ம்கள் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மற்றும் தொல்பொருள் துறைக்கு, தொழுகை நடத்த அனுமதிக்குமாறு முஸ்­ம்கள் கோரி வந்துள்ளனர். தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் இந்தக் கோரிக்கை பலமுறை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன, கடந்த செப்டம்பர் 12, 2005 அன்று இந்திய தொல்பொருள் துறையின் (நினைவிட) இயக்குனர் அனுப்பியுள்ள கடிதத்தில் தொல்பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ் வேலூர் கோட்டை பள்ளிவாசல் வந்த போது அங்கு வழிபாடு நடைபெறவில்லை என்றும் எனவே தற்போது அப்பள்ளிவாச­ல் வழிப்பாட்டை அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். தொல்பொருள் துறையின் இந்த நிலைப்பாடு அதன் அப்பட்டமான பாரபட்சப் போக்கை வெளிகாட்டுகின்றது.

வேலூர் கோட்டையில் அமைந்துள்ள தபால் அலுவலகம்

1921ல் இந்திய தொல்பொருள் துறை வேலூர் கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மட்டுமின்றி, வேலூர் கோட்டை, அதனைச் சுற்றியுள்ள நீர்நிலை, கோட்டை மைதானம், ஜலகண்டேஸ்வரர் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட வேலூர் கோட்டையின் 138 ஏக்கர்களை தனது பாதுகாப்பின் கீழ் எடுத்துக் கொண்டது. பழங்கால நினைவிடங்கள் பராமரிப்பு சட்டம் 1904, 1952, மற்றும் 1958 சட்டத்தின்படி வேலுர் கோட்டை முழுவதையும் தொல்பொருள் துறை தனது பராமரிப்பின் கீழ் கொண்டு வந்தது.

வேலூர் கோட்டை பள்ளிவாசலை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நேரத்தில் அங்கு வழிபாடு நடைபெறவில்லை. எனவே இப்போது அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க இயலாது என்று தொல்பொருள் துறை தற்போது கூறிக்கொள்கிறது. பள்ளிவாசலைப் போல் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வர் கோயி­லும் தொல்பொருள் துறை பொறுப்பில் எடுக்கும் போது வழிபாடு நடைபெறவில்லை. ஆனால் தற்போது கோயி­லும்,, கிறிஸ்தவ தேவாலயத்திலும் வழிபாடு நடைபெற்று வருகின்றது. இதே போல் வேலூர் கோட்டையை தொல்பொருள் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கும் போது அங்கு அரசு அலுவலகங்கள் செயற்படவில்லை. ஆனால் தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காவலர் பயிற்சி கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், வன அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம்,, சுற்றுலா தகவல் மையம், சார்நிலை கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், காவலர் மருத்துவமனை என 48 அரசு அலுவலகங்கள் தொன்மையான வேலூர் கோட்டைக்குள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர இரண்டு சிறு கோயில்களும் கோட்டைக்குள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

நீண்ட நெடிய காலமாக வேலூர் மக்கள் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அப்போதெல்லாம் தொல்பொருள் துறை சார்பாக கோயில் தங்கள் துறையின் பாதுகாப்பின் கீழ் வந்த போது அங்கு வழிபாடு நடைபெறவில்லை என்றும், எனவே வழிபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் பதில் அளிக்கப்பட்டு வந்தது. மார்ச் 16, 1981 அன்று சத்துவாச்சாரியில் உள்ள ஒரு கோயிலி­ருந்து ­ங்கத்தை எடுத்து வந்து வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பொதுமக்கள் தாங்களாகவே வழிப்பாட்டை தொடங்கினர். அப்போது பொது மக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டி கொண்டதை அரசு நிர்வாகம் தடுக்கவில்லை. இது குறித்து, வரலாற்று பார்வையில் வேலூர் கோட்டை மற்றும் கோயில் என்ற நூ­ல் திரு.ஏ.கே. சேஷாத்ரி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ”மக்கள் கூட்டம் வலுவாக இறங்கிய நடவடிக்கையை தடுக்க தொல்பொருள் துறையின் ஊழியர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்கள் காவல்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மட்டும் செய்தனர். மாவட்ட நிர்வாகம் இது ஒரு நுட்பமான மத விவகாரம் என்றும் இதில் தடுப்பு நடவடிக்கை எடுத்தால் அது சட்டம் ஒழுங்கை பாதித்து விடும் என்றும், கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வழிபாடு தொடர்ந்தது” (ஸ்ரீஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபனம் வெளியிட்டுள்ள ஆங்கில நூல் பக் 98,99)


எதார்த்த நிலை இப்படி இருக்கும் போது பள்ளிவாசலை தாங்கள் எடுத்த போது அங்கு வழிபாடு நடக்கவில்லை, எனவே இப்போது அங்கு வழிபாட்டை அனுமதிக்க முடியாது என்று தொல்பொருள் துறை கூறுவது வினோதமானதாக உள்ளது. 1921ல் தொல்பொருள் துறை கையகப்படுத்திய போது ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திலும் வழிபாடு நடைபெறவில்லை.. இருப்பினும் வேலூர் மக்கள் அக்கோயி­ல் வழிபாடு நடத்தும் தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொண்டார்கள். இதை இன்றைய தினம் வரை தொல்பொருள் துறையினரால் தடுத்து நிறுத்த இயலவில்லை. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான வேலூர் கோட்டையில் 48 அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய அலுவலகங்களும் அங்கு தொடங்கப்படுகின்றன. ஆனால் தொல்பொருள் துறை அதனை மவுனமாக வேடிக்கை பார்க்கின்றது. பள்ளிவாசலை தபால் அலுவலகமாக மாற்றுவதற்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதனையும் தொல்பொருள் துறை கண்டுகொள்ளவே இல்லை,


வேலூர் கோட்டை பள்ளிவாச­ல் தொழுகை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தொல்பொருள் துறையின் நிலைப்பாடு அதன் பாரபட்சப் போக்கை வெளிக்காட்டுகின்றது. வேலூர் கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில், புதிதாக கட்டப்பட்டுள்ள இரு சிறு கோயில்களில் வழிபாடு நடப்பதற்கும், 48 அரசு அலுவலகங்கள் முழு வீச்சில் இயங்குவதற்கும் தொல்பொருள் துறை அனுமதித்திருக்கும் போது, பள்ளிவாச­ல் தொழுகை நடத்துவது மட்டும் பழம்பெரும் நினைவுச் சின்னத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

இந்த பின்னணியில் தொடர்புடைய அதிகார பீடங்களுக்கு வரும் ஏப்ரல் 30 வரை தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் அவகாசம் அளிக்கின்றது. இந்த காலக்கட்டத்திற்குள் வேலூர் கோட்டை பள்ளிவாச­ல் ஐவேளை தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வேலூர் கோட்டைக்குள் உள்ள பள்ளிவாச­ல் ஜும்ஆ (வெள்ளிக்கிழமை) தொழுகை நடத்தும் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் நடத்தும். இந்த போராட்டத்தில் எனது தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொள்வார்கள்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

தொடர்புடைய பதிவுகள் :

இது குறித்து கோவை தமுமுக வினர் கடந்த 15.08.2006 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த விசயம் குறித்து தொழகை நடத்த அனுமதி கோறி அரசை வலியுருத்தி அறிக்கை வெளியிட்டனர். அது நமது தளத்திலும் வெளியாகியிருந்தது என்பதை நினைவு கூர்கின்றோம்.

பள்ளியை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க தமுமுக கோரிக்கை

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: