தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 6, 2008

எங்கே நமது சமுதாயம் செல்கிறது?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 1:02 முப
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்…

நாம் அன்றாடம் எழுகிறோம், வேலைக்குச் செல்கிறோம். இதில் நமது பிள்ளைகளுக்கு நாம் என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம்? அவர்களின் நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துகிறோமா? சற்று சிந்திக்க அழைக்கிறோம்.

இன்றைய நூற்றாண்டில் பல தொழில் முன்னேற்றங்கள் வளர்ந்து வருகிறது. எதையும் நன்மைக்கே பயன்படுத்தவேண்டுமே தவிர, தீயவைக்கு அடிமை ஆக்கிவிடக் கூடாது. Mobilephone -கைபேசி உலா வருகிறது எங்கும், பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசாங்கம் தடை செய்தும், பல
பெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு கைபேசியை ஒரு fashion-ஆக வாங்கி கொடுக்கிறார்கள். அதனால் ஏறப்டும் விளைவுகளை நாம் சற்று கருத்தில் கொள்ளும் கட்டாயநிலையில் உள்ளோம் இன்று.

கழிந்த சில மாதங்களாக நாம் செய்திகளில் அறிவது: > நமது இஸ்லாமிய மாணவிகள் அன்னிய மதத்தவருடன் சென்று, பிறமத கலாச்சாரப்பாடி திருமணம் செய்துகொள்வது. எங்கே நமது சமுதாயம் செல்கிறது? மிகவும்
வேதனையாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரது பொறுப்புகள் பற்றி, இறைவனிடம் பதில் கூறியே ஆகவேண்டும்
எனபதை முதலில் நினைவில் கொள்ளவும். பெற்றோர்கள் தான் இதற்கு மூலக்காரணம், தமது பிள்ளைகளின்
விசயத்தில் அஜாக்கிரதையாக உள்ளார்கள். தயவுசெய்து உங்களது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போதும் சரி, பள்ளியிலிருந்து வரும்போதும் சரியே! அவர்களை கண்காணியுங்கள், அவர்களுக்கு நீங்கள் நல்லொழுக்கம்
கற்பியுங்கள், அவர்களுக்கு mobile – கைபேசி கொடுத்து சீரழிக்காதீகள். உங்களது வேலைப் பளுவில் உங்களது பிள்ளைகள், குடும்பத்தையும் சற்று உற்றுப் பாருங்கள் அன்பர்களே! பிழைகளை முளையிலே கிள்ளி எறியவேண்டும். தொழுகையை சரியாகக் கடைபிடிக்க நமது பிள்ளைகளுக்கு ஊக்கமளிப்போம்.
அவர்களது செயல்களில் கவனம் செலுத்துங்கள். இஸ்லாமிய நற்சிந்தனையூட்டும் பாடங்களை அறிவுபூர்வமாக போதிக்கவும், இஸ்லாமிய வகுப்புகளுக்கு அனுப்புங்கள். ஜமாஅத்தார்களும் தமது சமுதாய மக்களை அவ்வப்போது மாநாடுகள் வைத்து, நற்சிந்தனையூட்டவும், வழிதவறாமல் கண்காணிப்பது ஜமாஅத்தார்களது கடமையும்கூட. அப்போது இதுபோன்ற அநாகரீகம் ஏற்பட வாய்ப்புகள் வராது. எனக்குத் தெரிந்த கருத்தை பதிவு செய்துள்ளேன், கூடி சிந்தித்து மேலும் நல்ல வழிகளை கடைபிடிக்கலாம் நமது சமுதாயம். எல்லோரும் ஒற்றுமையாக அணிவகுத்து செயல்படுவோம். இதுபோன்ற தவறுகளிலிருந்து நம்மையும், நமது சமுதாயத்தையும் நாம் பாதுகாப்போம். எல்லாம்வல்ல ரஹ்மான் நமக்கு நேர்வழி காட்டுவானாக! ஆமீன்.

அனைவர்களுக்கும் இம்மடலை அனுப்பி, நல்லொரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுப்போம்.

அன்புடன் பதிவுசெய்தது,
தாருல்ஸஃபாவிலிருந்து மு.சாதிக்.
Darulsafa.
Advertisements

1 பின்னூட்டம் »

  1. Very good article

    பின்னூட்டம் by Anonymous — ஏப்ரல் 8, 2008 @ 8:55 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: