தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 8, 2008

ஒகேனேக்கல் விவகாரம் – அரசிற்கு துனை நிற்போம் MNP தலைவர் அறிவிப்பு

Filed under: madurai, MNP — முஸ்லிம் @ 1:19 பிப

மதுரை ஏப்ரல் 08, மனித நீதிப் பாசறையின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று 07-04-2008 அன்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மனித நீதிப் பாசறையின் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது..

1. நேற்று சேதுக்கால்வாய் திட்டத்தை தடுத்து நிறுத்தியதன் மூலம் தமிழக முன்னேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டை. இன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுத்தி நிறுத்தி தமிழக மக்களின் தாகம் தீர்ப்பதற்கும் ஒரு முட்டுக்கட்டை என தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவித்து வரும் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் விஷயத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் மனித நீதிப் பாசறை உறுதுணையாக நிற்கும்
என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2. கடந்த 2000வது ஆண்டில் பாளை கிரசண்ட் நகர் பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட புளியங்குடி அப்துல் ரசீத் வழக்கில் நீதி விசாரனை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும். அவரது மகன் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய கருணைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. எனவே 2 லட்சம் கருணைத் தொகை, அவரது குடும்பத்திற்கு அரசு வேலை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. கடையநல்லூர் சமீபத்தில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த மனித நீதிப் பாசறை,மற்றும் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் தடியடி நடத்திய புளியங்குடி சμக டி.எஸ்.பி. அசோக்குமார், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீது தமிழக அμசு துறை சார்ந்த நடவடிக்கையும் இடமாற்றமும் செய்யுமாறு மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.

4. தமிழக முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையான உலமாக்கள் நலவாரியத்தை தமிழக அரசு உடனே ஏற்படுத்த வேண்டும் என இச் செயற்குழு தமிழக அμசைக் கேட்டுக் கொள்கிறது.

Advertisements

1 பின்னூட்டம் »

  1. இந்தியாவை துண்டாட நினைக்கும் பாசிஸ்டுகளை எதிர்க்க இந்த அரசு தயங்கும் இந்த சூழலில் மனித நீதி பாசறை போன்ற மனித நேயமும் சமுதாய அக்கறையும் கொண்ட வீரம் மிக்க இயக்கம் அரசுக்கு உதவ முன்வந்து இருப்பது முஸ்லிம்கள் பிற மகளை விட அதிகமான நாட்டுப் பற்று உடையவர்கள் என்பதனை இந்த உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. இத்தகைய மக்களை தான் இறைவன் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் சிறந்த உம்மத் என்று திருமறையில் கூறுகிறான். இவர்களின் பணி என்றும் சிறக்க வல்ல அல்லா அருள் புரிவானாக.இவர்களைப் போன்ற வீரமிக்கவர்களின் கூட்டமைப்பில் சேர்ந்து இந்த சமுதாயத்தை இன்னும் பலம் பொருந்தியதாக மாற்றுவோம்.இந்தியாவை பாசிஸ்டுகளின் கைகளில் இருந்து காப்போம்.

    பின்னூட்டம் by Irai Adimai — ஏப்ரல் 8, 2008 @ 2:12 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: