தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 19, 2008

NCHRO வின் தமிழ்நாட்டிற்கான நிர்வாகிகள் தேர்வு

Filed under: MNP, nchro — முஸ்லிம் @ 9:16 முப


NCHRO வின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் தேர்வு

மனித உரிமை இயக்ககங்களின் தேசிய கூட்டமைப்பிபின் (NCHRO) தமிழ்நாடு மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று (18.04.2008) சென்னையில் நடைபெற்றது. இதில்NCHRO வின் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஓ.க. முஹம்மது ஷரீஃப் சிறப்புரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் குறித்தும், காவல்துறையின் போலி என்கவுன்டர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, NCHRO வின் தமிழ்நாடு மாநில கிளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் NCHRO வின் தமிழ்நாடு மாநில பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

1. வழக்கறிஞர் தி. லஜபதிராய் மதுரை தலைவர்2. நிஜாமுதீன், Ex.M.L.A நாகப்பட்டிணம் துணைத் தலைவர்

3. வழக்கறிஞர், ஜஹாங்கீர் பாதுஷா, மதுரை துணைத் தலைவர்

4. முஹம்மது முபாμக், நெல்லை பொதுச் செயலாளர்

5. பேராசி. அ. மார்க்ஸ், சென்னை செயலாளர்

6. வழக்கறிஞர், ரஹமத்துல்லாஹ், மேட்டுப்பாளையம் செயலாளர்

7. வழக்கறிஞர், விவேகானந்தன், கும்பகோணம் செயலாளர்

8. வழக்கறிஞர் முஹம்மது அலீ ஜின்னா, மதுரை பொருளாளர்

9. ஷக்கூர், சென்னை மக்கள் தொடர்பு அதிகாரி (PRO)

செயற்குழு உறுப்பினர்கள்

1. வழக்கறிஞர், N.M. ஷாஜஹான், மதுரை

2. வழக்கறிஞர், நவ்ஃபல், கோயம்பத்தூர்

3. வழக்கறிஞர், முஹம்மது அப்பாஸ், மதுரை

4. வழக்கறிஞர், R. முருகன் குமார், திருநெல்வேலி

5. வழக்கறிஞர், எம்.எஸ். சுல்தான், மதுரை

6. சையது அலீ, நாகர்கோவில்

7. வழக்கறிஞர், A. சையது அப்துல் காதர், மதுரை

8. வழக்கறிஞர், ஹரிபாபு, சேலம்.

9. அ. முஹம்மது யூஸுஃப் மதுரைகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அμசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போμணிட்டக் களத்தில் ஒரு மைல் கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனை வைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகத்தில் போலி என்கவுண்டர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதையே காட்டுகின்றது. இந்தப் போக்கை NCHRO வன்மையாகக் கண்டிக்கிறது. போலி என்கவுன்டர்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று தமிழக அμசை NCHRO கேட்டுக் கொள்கின்றது.

3. போலி என்கவுன்டரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

4. கோவையில் கடந்த 2006ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்கு, உளவுத்துறை ஏசி. ரத்தினசபாபதியின் நாடகம் என்பதும், அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ள ஆவணங்கள் காவல்துறையினμணிலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் SIT யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கோவையில் இவ்வாறு வெடிகுண்டு பீதியைக் கிளப்பி பொது அமைதியையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கும் முகமாக சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெடிகுண்டு பழி சுமத்திய ஏ.சி ரத்தின சபாபதி, மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவர்களுடைய வைப்பு நிதியிலிருந்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக்கொள்கிறது.

5. இந்திய அμசியல் அமைப்புச் சட்டம் ச்μத்து 14 வழங்கியுள்ள சமத்துவத்திற் கான உரிமை குடிமக்கள் அனைவருக்கும் ஒன்றுபோல வழங்கப்பட வேண்டும். பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தண்டனை கைதிகளை தமிழக அரசு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யும்போது சிறுபான்மைமுஸ்லிம் சமூகம், பெரும்பான்மை சமூகம் என்ற பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் அதன் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

6. இதனை வலியுறுத்தும் விதமாகவும், சமத்துவத்திற்கான உரிமை (Article 14) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் எதிர்வரும் மே மாதம் NCHRO சார்பாக தமிழகத்தில் கருத்தμங்கம் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு

தி. லஜபதிராய்,

தலைவர், NCHRO தமிழ்நாடு,

Mb: 98432 51788, Email: nchrotn@gmail.com

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: