தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 31, 2008

இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும் (வீடியோ)

Filed under: ஜமால், முகம்மது, video — முஸ்லிம் @ 8:47 பிப

“இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்”

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

மு‌ஸ்‌லி‌ம்களை‌க் க‌ண்கா‌ணி‌க்க‌வி‌ல்லை: அமெ‌ரி‌க்கா!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 2:17 பிப

‌நியூயா‌ர்‌க்: மு‌ஸ்‌லி‌ம் சமுதாய‌த்தை‌க் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்காக மசூ‌திக‌ள் கூ‌ர்‌ந்து கவ‌னி‌‌க்க‌ப்படுவதாக எழு‌ந்து‌ள்ள கு‌ற்ற‌ச்சா‌ற்றை அமெ‌ரி‌க்க‌‌ப் புலனா‌ய்வு‌த் துறையான எஃ‌ப்.‌பி.ஐ. மறு‌த்து‌ள்ளது.

த‌னிம‌னித‌ர்க‌‌‌ளி‌ன் ச‌ட்டபூ‌ர்வமான நடவடி‌க்கைகளை‌க் க‌ண்கா‌ணி‌ப்பது த‌ங்க‌ள் நோ‌க்கம‌ல்ல எ‌ன்று‌ம் அ‌த்துறை கூ‌றியு‌‌ள்ளது.

இதுகு‌றி‌த்து எஃ‌ப்.‌பி.ஐ. இணை இய‌க்குந‌ர் ஜா‌ன் ‌மி‌ல்ல‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், “ச‌ட்டபூ‌ர்வமாக இய‌ங்கு‌ம் மு‌ஸ்‌லி‌ம் அமை‌ப்புக‌ள் எ‌ங்‌கிரு‌‌ந்தாலு‌ம், அவ‌ற்றை‌க் ‌க‌ண்கா‌ணி‌க்கவோ கு‌றிவை‌க்கவோ மா‌ட்டோ‌‌ம்” எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வட‌க்கு க‌லிஃபோ‌ர்‌னியா‌வி‌ல் உ‌ள்ள மசூ‌திகளை எஃ‌ப்.‌பி.ஐ. க‌ண்கா‌ணி‌த்து வருவது மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌ன் உ‌ரிமைகளை ‌மீறுவதாகு‌ம்; இ‌வ்‌விவகார‌த்தை அமெ‌ரி‌க்க‌க் கா‌ங்‌கிர‌சி‌ல் எழு‌ப்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று மு‌ஸ்‌லி‌ம் சமுதாய‌‌த் தலைவ‌ர் ஒருவ‌ர் கூ‌றியதாக சா‌ண் டியாகோ யூ‌னிய‌ன் டி‌ரி‌ப்யூ‌ன் இத‌ழி‌ல் செ‌ய்‌தி வெ‌ளியானது.

இதுகு‌றி‌த்து ஜா‌ன் ‌மி‌ல்ல‌ர் கூறுகை‌யி‌ல், வ‌ழிபா‌ட்டு‌த் தல‌ங்க‌ளி‌ன் நடவடி‌க்கைகளை‌‌க் கூ‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌ப்பது த‌ங்க‌ளி‌ன் நோ‌க்கம‌ல்ல எ‌ன்று‌ம், எஃ‌ப்.‌பி.ஐ.‌யி‌ன் தலைமை வழ‌க்க‌றிஞ‌ர் ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் த‌னிநப‌ர் அ‌ல்லது குழு‌வி‌ன் நடவடி‌‌க்கைக‌ள் கூ‌ர்‌ந்து கவ‌னி‌க்க‌ப்படவோ அ‌ல்லது புலனா‌ய்வோ செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.
www.lalpet.com
Thank Webdunia

மே 30, 2008

மனித நீதிப் பாசறை அணிவகுப்பு – தினமலர் மறுப்பு செய்தி

Filed under: தினமலர், MNP — முஸ்லிம் @ 7:58 பிப
கடந்த 25.05.2008 அன்று தினமலரில் “”தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி பின்னனி குறித்து போலிஸார் விசாரனை” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது அதில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தறித்து எழுதியிருந்த அந்த செய்திக்கு மனித நீதிப் பாசறை தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தது அது குறித்து 27.05.2008 அன்றைய தினமலர் கீழக்கண்டவாறு மறுப்பு வெளியிட்டுள்ளது.

மனித நீதிப் பாசறை எதிர்ப்பு

சென்னை, மே 27- மனித நீதிப் பாசறை சார்பில் சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நிகழச்சி நடக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெறிவித்துள்ளது.

மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் முகமது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கை :

மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான “பாப்புலர் பிண்ட் ஆப் இந்தியா” சார்பாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்மிட்டுள்ளோம். தமிழகம் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் இந்த அணிவகுப்பு நடக்கிறது. அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடததி வருகின்றோம்.

இது குறித்து மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரமும் செய்துள்ளோம். காவல் துறை அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெறிவித்துள்ளோம். இந்துக்களுடன் இணைந்து போராடிப்பெற்ற சுதந்திரத்தில் ஒற்றுமையை நிலை நிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்போதும் வெளிப்படையான அமைப்பாகத்தான் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை. இவ்வாறு முகம்மது அலி ஜின்னா தெறிவித்துள்ளார்.

தினமலர், சென்னை பதிப்பு
செவ்வாய்கிழமை, 27.05.2008
பக்கம் 14

ஆப்கானிலிருந்து ஒரு மழலையின் கேள்வி?……

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 1:40 பிப

என்ன பாவம் செய்தேன் என்று
என் முகத்தை இப்படி சிதைத்தீர்கள்?
உங்கள் ஆயூதங்களை உரசிப்பார்ப்பதற்கு
என் உடல் தானா கிடைத்தது?
அமெரிக்கா முதல் ஆப்கான் வரை
அரும்புகள் தானா உங்களின்
அகோசப் பசிக்கு ஆகாரம்?
குண்டுகள் துளைத்த என் குறுதிச் சிதறளில்
உங்கள் குழைந்தைகளின் உயிர் துடிப்பை
உணர முடியிவில்லையா உங்களால்?
ஒரே ஒரு கனமேனும் உங்கள் மனசாட்சி
உங்களை உழுக்கியதில்லையா?
என்ன பாவம் செய்தார்கள் என்று
என் பெற்றோர்களை கொன்று குவித்தீர்கள்
என் அண்ணன்களையும்,அக்காள்களையும்
இறை எடுத்துக் கொண்டீர்கள்.
நேற்று வரை!
அம்மாக்களின் மடியிலும் அப்பாக்களின் தோள்களிலும்
ஆடி பாடி(த்) திரிந்த பிஞ்சுகளை
அனாதைகளாகவும்,அகதிகளாகவும்
ஆக்கிய நீங்கள் பிணந்தின்னிகளா?
சின்னஞ்சிறு பிஞ்சுகளையெள்ளாம் நீங்கள்
சின்னா பின்னா படுத்தி விட்டு
சாதிக்கப்போவது தான் என்ன?
உங்களது பேராசைப் பேய்களுக்கு
இன்னும் எத்தனையெத்தனை பிஞ்சுகளை
கொன்று குவித்து கூத்தாடப் போகிறீர்கள்
புனிதப் போர் சிலுவை யுத்தம் என்ற பெயரால்
பூமியை இன்னும் எத்தனை காலத்துக்கு
போர் னெருப்பில் போட்டு வதைக்கப் போகிறீர்கள்?
நிழல் தரும் மரங்களுக்கெல்லாம் நெருப்பிட்ட பின்னர்
நீரெந்த நிழல்களில் ஓய்வெடுக்கப் போகிறீர்கள்?
www.lalpet.com
Thanks USF

இ.தேசிய லீக் தலைவர் இ.யூ.மு.லீக் இனைந்தார்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:45 முப

இ.தேசிய லீக் முண்னால் தமிழ் மாநில தலைவர் அப்துல் காதிர் இன்று இ.யூ.மு.லீக் இனைந்தார்…

www.lalpet.com
தகவள்: அபூபக்கர்
இ யூ மு லீக் தலைமைநில்செயலாளர்

அமெ‌ரி‌க்க‌ப் படை‌யின‌ரிடை‌யி‌ல் த‌ற்கொலைக‌ள் அ‌திக‌ரி‌ப்பு! ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன், ஈரா‌க் போ‌ர்க‌‌ளினா‌ல் ஏ‌ற்படட்ட மன அழு‌த்த‌ம்தா‌ன் த‌ற்கொலைகளு‌க்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:02 முப

அமெ‌ரி‌க்க‌ப் படை‌யின‌ரிடை‌யி‌ல் கட‌ந்த 20 ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌ல்லாத அள‌வி‌ற்கு‌த் த‌ற்கொலைக‌ள் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதாக பு‌ள்‌ளி‌விவர‌‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

கட‌ந்த 2007 ஆ‌ம் ஆ‌ண்டு 115 படை‌யின‌ர் த‌ற்கொலை செ‌ய்துகொ‌ண்டு உ‌ள்ளன‌ர். ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன், ஈரா‌க் போ‌ர்க‌‌ளினா‌ல் படை‌யின‌ரிடை‌யி‌ல் அ‌திக‌ரி‌த்து‌ள்ள மன அழு‌த்தமே இ‌த்த‌ற்கொலைகளு‌க்கு மு‌க்‌கிய‌க் காரணமாக இரு‌ந்து‌ள்ளது.

மேலு‌ம், போ‌ரி‌ல் ஈடுபடு‌த்த‌ப்படாத ‌ரிச‌ர்‌வ் படை‌யின‌ர் ம‌ற்று‌ம் தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ரி‌ல் 53 பே‌ர் த‌ற்கொலை செ‌ய்து‌ள்ளன‌ர். இதுத‌விர ஒ‌ட்டுமொ‌த்தமாக 935 படை‌‌‌யின‌ர் த‌ற்கொலை‌க்கு முய‌ன்று‌ள்ளன‌ர்.
2006 ஆ‌ம் ஆ‌ண்டு ராணுவ‌ப் பு‌ள்‌ளி ‌விவர‌ப்படி த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்ட படை‌யின‌ரி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 102. அ‌ப்போதே, வரு‌ம் ஆ‌ண்டி‌ல் த‌ற்கொலைக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 12 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ஆ‌ண்டு (200 இதுவரை 38 படை‌யின‌ர் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டு‌‌ள்ளது உறு‌தி‌ செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதேபோல 2003 இ‌ல் 79 பேரு‌ம், 2004 இ‌ல் 67 பேரு‌ம், 2005 இ‌ல் 85 பேரு‌ம் த‌ற்கொலை செ‌ய்துகொ‌ண்டு உ‌ள்ளன‌ர்.

கட‌ந்த 1980 முத‌ல் அமெ‌ரி‌க்க‌ப் பாதுகா‌ப்பு‌‌த் துறை, த‌ற்கொலை செ‌ய்து கொ‌ள்ளு‌ம் படை‌யின‌ரி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை‌க் கண‌க்‌கி‌ட்டு வரு‌கிறது. போ‌ரினா‌ல் ஏ‌ற்படு‌ம் மன அழு‌த்த‌ம்தா‌ன் த‌ற்கொலைகளு‌க்கு முத‌ல் காரணமாக‌க் க‌ண்ட‌‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.
http://www.lalpet.com/
Thanks webdunia

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத இலவச பயிற்சி

Filed under: இலவசப் பயிற்சி, ஐஏஸ், ஐபிஎஸ் தேர்வு — முஸ்லிம் @ 12:58 முப

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.

2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும். நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.

நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2-வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4-ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

source: http://tamil.webdunia.com/newsworld/career/opportunities/0805/29/1080529023_1.htm

மே 29, 2008

தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை: சவூதி அரசு முடிவு

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:53 பிப

வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சவூதி அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சவூதிக்குச் செல்லும் தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகளின் பட்டியல் அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்று தேசிய தொழிலாளர் வேலைவாய்ப்பகக் கமிட்டி தலைவர் சாத் அல் பதா கூறினார்.

மே 27, 2008

இந்து முண்ணனி அலுவலக குண்டு வெடிப்பு : முஸ்தபா ரஷாதி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது1

Filed under: முஸ்தபா, ரஷாதி — முஸ்லிம் @ 9:30 பிப
முஸ்தபா ரஷாதியை குண்டு கட்டி அனுப்பியது யார் என்று அறிவதற்கு இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
.
இந்து முன்னனி அலுவலக் குண்டு வெடிப்பு வழக்கு
தற்கொலைப்படை தீவிரவாதி அடையாளம் தெரிந்தது
உடல் அரசு சார்பில் புதைப்பு

சென்னை மே 27,

இந்து முன்னனி அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்த வழக்கில் தற்கொலைப்படை தீவிரவாதியின் உடல் 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசு சார்பில் புதைக்கப்பட்டது.

சென்னை சிந்தாகிரிபுட்டையில் இந்து முன்னனி அலுவலக்ம் உள்ளது அந்த அலுவலகத்தி்ல் 1995ம் ஆன்டு ஏப்ரல் 14ம் தேதி தற்கொலைப்படையாக வந்த ஒருவர் குண்டு வைத்து தகர்த்தார். அதில் இந்து முண்ணி பிரமுகர் பைபிள் சன்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தற்கொலைப்படையாக வந்தவர் உடல் சிதறி இறந்தார்.

தற்கொலைப் படையாக வந்தவரின் கை, கால், மற்றும் முகத்தின் ஒரு பகுதி மட்டுமே அடையாளம் தெரியுமு் வகையில் இருந்தது. உடல் முழுவதும் கருகி விட்டது. அதை வைத்து இறந்தவர் யார் என்று விசாரித்தனர்.

அப்போது மேலப்பாளையத்தை சோந்த குட்டியப்பா (எ) காஜா நிஜாமுத்தீன் என்பவர்தான் தற்கொலைப்படையாக வந்தவர் என்று முடிவு செய்து அவரின் பெற்றோரிடம் விசாரித்தனர் ஆனால் அவாக்ளோ இது என் மகன் இல்லை என்று கூறி விட்டனர். ஆனால் போலிசார் இறந்தவரின் ரத்தம், சதை ஆகியவற்றை ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க அனுப்பினர். அவரது பெற்றோரின் உடலிலும் இருந்து ரத்தத்தை எடுத்து அனுப்பினர் பின் பரிசோதனையில் இறந்தது காஜா நிஜாமுத்தீன்தான் என்று அறிக்கை அளிக்கப்பட்டது ஆனால் அந்த உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். அதனால் அந்த உடல் அரசு பொது மருத்துவமனையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இறந்ததாக கூறப்பட்ட நிஜாமுத்தீன் சேத்துப்பட்டு ஆர்.எஸ்எஸ் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரபபை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்தது கன்னியாகுமரியை சோந்த முஸ்தபா ரஷாதி என்று தெரியவந்தது. மீண்டும் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஐதராபாத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இறந்தது முஸ்தபா ரஷாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவரது உடலை பெற்றோர் வாங்கவில்லை அதனால் அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி : தமிழ் முரசு 27-05-2008

இந்து முன்னணி குண்டு வெடிப்பு :பலியான நபரின் உடல் அடக்கம்

சென்னை :பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான நபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 95ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் அலுவலகத்தில் இல்லாததால் தப்பினார்.

கிறிஸ்தவ மதத்தில் இருந்து, இந்து மதத்திற்கு மாறியவர் “பைபிள்’ பாண்டியன். இந்து முன்னணி அமைப்பின் பேச்சாளராக இருந்து வந்தார். அலுவலகத்தில் இருந்த பாண்டியன் பலியானார். அவருடன் பலியான மற்றொருவர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது. அந்த நபர் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தவர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.சென்னை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். புலன் விசாரணைக்காக அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,யில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு(எஸ்.ஐ.டி.,) மாற்றப்பட்டது. உருக்குலைந்த நபர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அந்த உடல் அரசு பொது மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.குண்டு வெடிப்பு வழக்கை எஸ்.பி., மகேஸ்வரி, கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன் விசாரித்து வருகின்றனர். அழுகிய நிலையில் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த உடலை நேற்று முன்தினம் இரவு வழக்கின் விசாரணை அதிகாரிகள், முறைப்படி கடிதம் கொடுத்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்றனர்.கேட்பாரற்ற நிலையில் 13 ஆண்டுகளாக சவக் கிடங்கில் இருந்த உடல், வழக்கு விசாரணைக்கு தேவையில்லை என்ற நிலையில் அதனை போலீசார் நேற்று முன்தினம் அடக்கம் செய்தனர்.

நன்றி : தினமலர்

வேடாதாரிகளை இனம் காண்போம்

Filed under: Ikhwanism, MNP — முஸ்லிம் @ 9:40 முப
வேடாதாரிகளை இனம் காண்போம்

நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம், வாருங்கள் என்று கூறி சமுதாயத்தை ஏமாற்றும் ஒரு கூட்டம் நம்மிடைய உளா வருவதை நாம் அறிந்ததே! இவர்கள் வோடதாரிகள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆக்கம். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த இடங்களில் இஸ்லாத்தை எப்படி புரிந்து நடக்கிறார்களோ, அவ்வாறு இவர்கள் வோடமிட்டு மக்களை தங்களின் கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ப்பார்கள். இவர்களின் வோடத்தை அறிய இவர்கள் தற்போது செயல்படும் இடங்களை ஆராய்ந்தால் நன்றாக தெரிய வரும். இவர்களின் வோடத்தை பாருங்கள்,

  • சவூதியில் முழு தவ்ஹீத் வேடம்
  • துபாயில் முக்கா தவ்ஹீத் வேடம்
  • தமிழகத்தில் அரை தவ்ஹீத் வேடம்
  • கேரளவில் கால் தவ்ஹீத் வேடம்
  • கர்நாடகாவில் முழு தர்ஹா வேடம்

தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களிடம் தவ்ஹீத் வோடத்தில் சென்று அவர்களிடம் வசுல் வோட்டை நடத்துவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்று கூறி கொள்பவர்களை அவர்களின் வோடத்தில் சென்று வசுல் வோட்டை நடத்துவார்கள். இவர்களின் வோடத்தால் அதிகமான மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் இணைகிறார்கள். இந்த இயக்கத்தில் இணைந்த பின்னர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறவும் முடியாமல், உள்ளே இருக்கவும் முடியாமல் திணறுகிறார்கள். இந்த கொள்கையற்ற கோமான்கள், சவுதியில் இடும் முழு தவ்ஹீத் வோடத்தாலும், தமிழகத்தில் இடும் அரை தவ்ஹீத் வோடத்தாலும், தவ்ஹீத் கொள்கையில் உள்ள மக்களும் மற்றும் பல தவ்ஹீத் மார்க்க அறிஞர்களும் கூட இவர்களின் சதி வலையில் விழ்ந்து இவர்களை தூக்கி பிடிக்கிறார்கள். இஷ்வான்களின் கொள்கையை (இவர்களுக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது) ஆரம்பம் முதலே அதன் குறைகளை சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ஸலபிகளின் கல்விக் கூடங்களில் படித்து வரும் பல ஆலிம்களும் கூட இவர்களின் சதி வளையில் சிக்கியுள்ளார்கள்.

நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று ஏமாற்றும் இவர்கள், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். தியாகிகளை போல உலா வரும் இவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. தமிழகத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் முன்னால் தலைவர் பொருந்தகை மு. குலாம் முஹம்மது க்கு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் மாத சம்பளம் ரூபாய் 22 ஆயிரம் ஆகும். நாங்கள் தஃவா செய்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தங்களது தரிக்கா தலைவருக்கு சம்பளமாக கொடுத்து கொலுக்க வைத்தவர்கள், இவர்கள். இன்று அதை குறை கூறுகிறார்கள். அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாகவும், பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றியும் சாதனை படைத்தார். இதை இயக்கத்தில் உள்ள சிலரும் இயக்கத்தில் வெளியில் உள்ளவர்களும் இந்த மேகா திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், அப்போது இந்த உத்தமா இயக்கம் என்ன செய்தது தெரியுமா? தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது. இன்று அந்த திருமணம் தவறு என்று தம்பட்டம் அடிக்கிறது அதே கும்பல்.

அன்று ஜனநாயகம் ஷிர்க் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்து திரிந்த இந்த கும்பல் இன்று ஜனநாயகத்தை தனது தர்மிக வழியாக தேர்ந்தெடுத்து உண்ணா விரதம் இருக்கிறது. அல்லாஹ் தான் நமக்கு ஆட்சியாளன், அவனிடம் தான் நாம் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று ஏமாற்றிய இவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி கருணாநிதியிடம் பிச்சை கேட்கிறார்கள்.

இன்னும் இவர்களின் அறியாமையையும் ஏமாற்று வித்தையையும் கேளுங்கள். ‘நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)’ என்ற இமாம் (?) கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், ‘கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் (?) பெற்ற அறிஞர் (?) செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை (?) இவர்கள் போற்றி மக்களையும் தனது இயக்கதவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்கள் எளிதாக ஏமாற்ற காரணம், இவர்களின் இயக்கத்தில் உள்ளவர்களில் அதிகமானோர், செய்யத் குதுப் என்று எழுத கூட தெரியதா பள்ளி மாணவர்கள் மற்றவர்கள் தலையாட்டி பொம்மைகள்.

இன்று இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த போகிறார்களாம். நாம் இவர்களிடம் கேட்கிறோம், இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா? அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா? அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா? என்ன? குழம்பிவிட்டிர்களா? பாவம்! இவர்கள் தான் குழப்பத்தின் மறு பெயர். இவர்களின் வோடங்கள் இனி கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.

குறிப்பு: தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இது சுத்த பொய். குலாம் இவர்களுடன் இருக்கும் போது இவர்களும் முடிவெடுக்கும் விசயங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்……
Older Posts »

Create a free website or blog at WordPress.com.