தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 13, 2008

இவர் யார்………?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:49 முப

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

இவர் யார் எனத் தலைப்பிடப்பட்ட ஒரு மெயில் எங்தகெங்கோ சுற்றி எமது பார்வைக்கும் வந்தது. இதனை எழுதி உலவ விட்டவர், எந்த உலவிக்கு வால் பிடித்து கொண்டுள்ளாரோ, அந்த உலவி 1980 களுக்கு முன்னால் என்னவாக இருந்தார் என இவருக்குத் தெரியவில்லை போலும்,

அவருக்காக சில நினைவூட்டல்கள்:

– மார்க்க கல்விக்காக மதரஸாவில் சேர்ந்தும், மார்க்கத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் மளிகை கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தவர்.
– வாழ்வியல் தேவைக்காக அரசியல் கட்சி மேடைகளில் மேடைப் பேச்சாளராக அறிமுகம் ஆனவர்.
– திராவிடர் கழக கொள்கையை ஏற்று இறை மறுப்பாளராக வலம் வந்தவர்.

இவ்வாறெல்லாம் இருந்தவர் தான் அல்லாஹ்வின் பேரருளால் 1980 களில் மதீனா சென்று கற்றுத் தேர்ந்த அறிஞர்களின் போதனையை ஏற்று இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் மீண்டு வந்தார்.

இங்கே, அன்னாரின் அடிப்பொடிகளால் ஒரு வினா தொடுக்கப்படலாம்.

அதாவது, 1980 களுக்கு முன் என்ன விதமான கொள்கையில் இருந்தாலும், 1980 களில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்குப் பிறகு ஏகத்துவத்தை முன்னெடுத்து சென்றவர் இவர் இல்லையா – என்று வினா எழுப்பலாம்.

அவர்கள் எடுத்து வைக்கும் தர்க்கமே அவர்களுக்கு போதுமான பதில் என்பதனைக்கூட உணர முடியாத அளவிற்கு தக்லீத் முற்றியவர்கள் என்பதால், நாமே விளக்க கடமைப்பட்டுள்ளோம். விளங்கிக் கொள்வதும், விளங்கிக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

அதாவது, இவர்களின் கூற்றுப்படி எந்த ஒரு மனிதனும், ஒரே நிலையில் இருக்க வேண்டியதில்லை. சமய சந்தர்ப்பம், அறிவு பொருளாதாரத்திற்கு ஏற்ப அவனுடைய நிலை மாறுபாடு அடையலாம். இதற்கு இவர்களது கதாநாயகனே மகச்சிறந்த எடுத்துக்காட்டு. 1980 களுக்கு முன்னால் இறை நிராகரிப்பு கொள்கையிலிருந்து 1980 களில் ஏகத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தனது நிலையை மாற்றிக் கொண்டதோடு, பலர் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்ள காரணமாக இருந்தார் என இவரால் புகழாரம் சூட்டப்படுபவர்.

இதே அடிப்படையில் அமைந்த நமது கேள்வி என்னவெனில், 1980 களில் மாற்றங்களுக்கு வித்திட்டவர் அதற்கு பிறகு மாறவில்லை என்று எந்த தவ்ஹீதுவாதியாவது நெஞ்சில் கை வைத்து ???! செல்ல முடியுமா.

நிச்சயமாக ஒருவரும் சொல்ல முடியாது. அவ்வாறு சொல்பவர் எவரும் தவ்ஹீதுவாதியாக கூட இல்லை, சராசரி முஸ்லீமாகக் கூட இருக்க முடியாது.

ஏனெனில், 1980 களில் பலரின் தியாகத்தால் வளர்ந்த தவ்ஹீதை இன்று தனது லிமிடெட் கம்பெனியின் மூலதனமாக்கிக் கொண்டவர் தான் இவர்கள் ஏற்றிப் போற்றி புகழ்பாடும் ஆலிம் என்ற பெயரில் உலவி வரும் அபூஜெஹ்லின் வாரிசு.

மார்க்கத்திற்காக பல தியாகங்கள் செய்து, உலகமெங்கும் ஏகத்துவ ஒளி பரப்பிய அறிஞர்களை, லூசு என்றும், குருடன் என்றும் தரம் தாழ்ந்து விமர்சித்த மனநோயாளி.

இன்னும் ஒருபடி மேலே போய், உத்தம சத்திய ஸஹாபாக்களை கிரிமினல் என்றும், திருடன் என்றும் கொலைகாரன் என்றும் நா கூசாமல் விமர்சித்த சுயநலவாதி.

இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றான ஜகாத்தை மறுத்த சந்தர்ப்பவாதி.

இஸ்லாமிய நம்பிக்கைகளில் ஒன்றான சுவர்க்கம் நரகத்தைப் பற்றி – அவைகள் படைக்கப்பட வில்லை என்று தர்க்கம் புரியும் குழப்பவாதி.

குர்ஆன் தர்ஜமா என்ற பெயரில் அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்புறப்படுத்த முயன்ற குழப்பவாதி.

சுயநலத்திற்காக பல அமைப்புகளை உடைத்து வெளியேறி இன்று தவ்ஹீதின் பெயரை பிராண்ட் நேம் ஆக வைத்து தொழில் நடத்தி வரும் தவ்ஹீத் வியாபாரி.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களைக் கொண்டே மார்க்கப் பிரச்சாரம் ???! நடத்தி வரும் ஒரிஜினல் அரசியல்வாதி.

பல பொய்களையும், அவதூறுகளையும் மறுமை பற்றிய அச்சமில்லாமல் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கும் இவர் யார் – என்று,

தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடத்தில் கேட்டால்,

நெஞ்சிலோ, தலையிலோ, வயிற்றிலோ கைவைக்காமல் தாமதமின்றி சொல்லி விடுவார்கள்

மேற்குறிப்பிட்ட அனைத்து தகுதிகளை (??!!) யும் ஒருங்கே பெற்று,
ஆன்மீகத்தின் பெயரால் அரசியல் நடத்தி வரும் திருவாளர் பிஜே தான் என்று தயங்காமல் சொல்லி விடுவார்கள்.

வல்ல அல்லாஹ் இந்த சமுதாயத்தை ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 12.05.2008

Advertisements

1 பின்னூட்டம் »

 1. “ஒருவர் மீது கொண்ட வெறுப்பு உங்களை நடுநிலைமையை விட்டு விலகி விட வைத்து விட வேண்டாம்”.

  தம்பி முகவை,

  மீண்டும் சொல்கிறேன், நீ கூற வரும் கருத்து இடையில் புகுத்தப்படும் மிகைபடுத்தப்பட்ட வசை சொற்களால் என் போன்ற பாமரர்களுக்கு உன் தளத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்க்கும். அது நீ கூற வரும் உண்மையான கருத்தையும் மனதிலிருந்து மழுங்கடிக்கும்.

  “எழுதியது நான் இல்லையே” என நீ நழுவினாலும் எழுதப்படும் குப்பைகள் உன் தளத்தில் வெளியிடப்படுகிறது என்பதும் அதற்கு உன் ஒப்புதலும் உள்ளது என்பதையும் நீ மறந்து விட வேண்டாம்.

  உலக அறிஞர்களை “லூசு” என கூறிய அயோக்கியத்தனத்தை அதற்குத் தகுந்த வார்த்தைகளைக் கொண்டு மட்டும் சுட்டிக் காட்டுவதே நமது நடுநிலைமையை பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பதோடு அதில் நாம் கூற வரும் கருத்தும் மக்களின் மனதில் தங்கும்.

  இல்லாமல் இங்கு எழுதப்பட்டுள்ள எதிர் வசை வார்த்தைகளுடன் எழுதினால் அந்த எதிர்வசை வார்த்தை மட்டுமே மக்கள் மனதில் தங்கி, நாம் சுட்டிக்காட்ட வரும் சம்பந்தப்பட்ட நபர் செய்த அயோக்கியத்தனம் மக்கள் மனதில் மழுங்கடிக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் வை.

  என்னைத் தலை என்றெல்லாம் அழைக்கிறாய். எனில், தலை சொல்வதில் சொல்லவரும் விஷயத்தையும் நீ எளிதில் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்.

  அன்புடன்
  அண்ணன் ஹாஜியார்.

  பின்னூட்டம் by Anonymous — மே 13, 2008 @ 7:50 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: